பண்டைய தமிழ் நிலத்தில் முல்லைத்திணை மாந்தர்களாகிய ஆயர்கள் கொல்லேறு
என்றும் மாக்காளை என்றும் சொல்லப்படும் வீறுகொண்ட ஏறுகளின் கொம்பைப்
பிடித்து அடக்கி, ஏறு தழுவினார்கள் என்று சங்க இலக்கியங்கள்
குறிப்பிடுகிறது. (கலித்தொகை, மலைபடுகடாம், சிலம்பு)
கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள் (கலி.,)
ஆயர் குலத்து ஆடவர்களின் வீர விளையாட்டை ‘ஏறுகோள்’ என்கிறது தொல்காப்பியம். தொல்காப்பியம் குறிப்பிடும் ஏறுகோள் தான் இன்றைக்குச் சல்லிக்கட்டு என்று அழைக்கப் பட்டிருக்கக் கூடும். இவ்விளையாட்டில் உயிர் நீத்த பலருக்கும் நடுகற்கள், கல்வெட்டுக் குறிப்புகள் காணக் கிடைப்பதன் மூலம் மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள, பெருமைக்குரிய காரியமாகவே சல்லிக்கட்டு காலங்காலமாக நடைபெற்று வந்திருப்பதை அறிய முடிகிறது.

சேலம்
மாவட்டத்தில் பெத்த நாயக்கன் பாளையத்தில் கிடைத்த கல்வெட்டில் (நடுகல்)
கருவந்துறை எருது விளையாட்டில் உயிர்நீத்த கொவுரிச் சங்கனின் நினைவாக அவன்
மகன் பெரிய பயலு நடுகல் எழுப்பின செய்தியைக் குறிப்பிடுகிறது.
“கொவுரிச் சங்கன் கருவந்துறையிலே எருது விளையாடிப் பட்டான்
சங்கன் மகன் பெரிய பயலு நட்டகல்லு”
ஆயிரமாயிரம் காலங்களுக்கு முந்தைய, கொல்லேறு அடக்கும் காளை உருவம் பொறித்த அர்த்த சித்திரங்கள் பல இப்படி தொல்பொருள் ஆய்வில் கிடைத்திருக்கின்றன.
அரசுகளுக்கு இவை எல்லாமும் தெரியும். எல்லாமும் என்றால் எல்லாமும் தான்.
இந்த நிலத்தின் அதிர்வுகள், இந்த மக்களின் கலாச்சாரம், இவர்களின் வாழ்வும் வீரமும், இலக்கியமும் பண்பாடும். அத்தனையும் தெரிந்தும் சட்டத்தின் பெயரால் அடக்குமுறைகளை ஏவிக் கொண்டே போகிறார்கள்.
‘வெள்ளக் காரன் ஆண்டப்பக் கூட இதுக்கெல்லாம் அவன் ஒண்ணுஞ் சொல்லலியேப்பா’ என்று மாடுபிடித்துப் பெண்கட்டிக் கொண்டு வந்த கொம்பேரித் தாத்தன் முணங்கிக் கொண்டே போகிறார். அவருக்கென்ன தெரியும் விலங்கு நல ???!!! ஆர்வலர்கள் பத்தி..

No comments:
Post a Comment