Monday 22 January 2018

புலிப்பாணி சித்தர்போகரது தலையாய சீடராவார். இவர் பூர்வீகம் சீன தேசம். போகர் பழனியில் மூலிகை முருகனை உருவாக்கிய படலத்தில் இவரது பங்கு முக்கியமானது. குருவுக்கு தேவையான மூலிகைகளை சேகரித்தலும் மற்றைய பணிவிடைகளையும் செய்த நம்பிக்கைக்குரிய சீடர் என்று போகரது காயகல்ப பரிசோதனையில் நாம் கண்டோம் அங்ஙணம்,குருவுக்கு பணிவிடை செய்யும்போது அவர் குளிர்ந்த நீரைக் கொண்டு புலிகளை வசியம் செய்து அதன் மேல் ஏறி மலை ஏறி இறங்கியுள்ளார்.இதுவே அவர் “புலிப்பாணி” பெயர்க் காரணம். இவர் ஒரு அதீத சிவ பக்தர். போகரின் நிர்விகல்ப சமாதி ஏற்பாட்டின் போது,மூலிகை முருகனுக்கு அடியில் குகை போன்ற சமாதி அமைப்பை உருவாக்கியும்,போகர் சமாதி நிலையை எய்தவுடன் குருவின் ஆணைப்படி அந்த குகையை பெரிய பாறை கொண்டு மூடியவரும்,குரு போகரை இறுதியாக தரிசித்தவரும் இவரே! போகரது (LAO TZU) சீன படைப்பான “டாவோ”(TAOISM) மதத்தின் முக்கிய நூல்களான ” டாவோ சிங் மற்றும் டெ சிங்” (TAO CHING & TE CHING) ஆகியவற்றில்  இவரது (Yu)பங்கு குறிப்பிடத்தக்கது.இவர் சோதிடம்,வான சாத்திரம்,கணிதம்,சித்த மருத்துவம் போன்றவற்றில் சிறந்து விளங்கினார் சீன வேதிப் பொருள்கள்,சீனக் களிமண் பாண்டங்கள்,சீன மருத்துவம் ஆகியன இவர்கள் மூலமே இந்தியாவில் அறிமுகப் படுத்தப்பட்டது என செய்திகள் கூறுகிறது. இவரது படைப்புகளான புலிப்பாணி ஜாலம்325 , புலிப்பாணி வைத்தியம் 500 ஆகியன இன்றும் நமது சித்த மருந்து தயாரிப்பாளர்களுக்கு ஒரு வரப் பிரசாதம் என்பதில் ஐயமில்லை! அதற்கு பிரதிஉபகாரமாய் தங்களுடைய மருந்துகளுக்கு புலிப்பாணியின் பெயர் சூட்டி அவரைப் பெருமைப் படுத்துவது வரவேற்க்கத்தக்கது! புலிப்பாணியின் பொறுப்பில் மூலிகை முருகனுக்கு அபிசேகங்களும், ஆராதனைகளும் கடைப்பிடிக்கப்பட்டது. புலிப்பாணியார் மறைவுக்குப் பின்,அவரது சந்ததியினரின் குடும்பக் கோவிலாகவே பராமரிக்கப்பட்ட மலைக் கோவில், மதுரை திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் வலுக்கட்டாயமாக பிராமணர்களிடம் ஒப்படைக்கப்பட்டாதாகவும்,அதற்க்கு இழப்பீடாக சில நியாயமற்ற உரிமைகள் வழங்கப்பட்டதாகவும் சில சர்ச்சைகள் இருந்து வந்தன. புனிதரது சமாதி இன்றும் பழனி மலையின் வட கிழக்கு திசையில் அவரது சந்தததியினரால் (பழனி ஆதீனம் திருமிகு புலிப்பாணி பத்திர சுவாமிகள்)பராமரிக்கப்பட்டு வருகிறது. இன்றும் பழனியில் அருவமாய் புலிப்பாணி சித்தர் உலவுவதாகவும்,வேண்டுவோர்க்கு வேண்டியதை அருளுவதாகவும் நம்பிக்கை இருந்து கொண்டு தான் இருக்கிறது. இவர் செவ்வாய் கிரகத்தை பிரதிபலிப்பவர்.ஆதலால் செவ்வாய் தோசத்தைப் போக்கி, நிலத் தகராறு,சொத்துத் தகராறு,திருமணச் சிக்கல்களைத் தீர்த்து வைப்பதில் இவருக்கு நிகர் இவரே! இவரை வில்வம் மற்றும் சாமந்தி கொண்டு அர்ச்சிக்க வேண்டிய உகந்த நாள் செவ்வாய்க் கிழமை! ஓம் புலிப்பாணி சித்தரே போற்றி! 
                                நான் எம்பெருமான் முருகனுக்கு சிலை செய்ய ஆசைப்படுகிறேன்.உலோகங்களால் அவருக்கு பல இடங்களில் சிலைகள் உள்ளன. ஆனால், நான் ஆசைப்படுவது வேறு. இந்த முருகனைத் தரிசித்த மாத்திரத்திலேயே உடலிலுள்ள நோய்கள் அனைத்தும் விலகியோட வேண்டும். மன நோயும் விலக வேண்டும். எனவே, நான் மூலிகைகளைக் கொண்டு அவருக்கு சிலை செய்ய வேண்டும். நீ நோய் தீர்க்கும் மூலிகைகளைப் பறித்து வா, என்றார் குருவான போகர் சித்தர்.குருவின் கட்டளையை ஏற்ற புலிப்பாணி, ஏ புலியே கிளம்பு, என்றார்.புலி மீது சவாரி செய்பவர் யார் எனக் கேட்டால், நீங்கள் ஐயப்பன் என்று பதில் சொல்வீர்கள். அவர் தெய்வம். தர்ம சாஸ்தாவான அவர், புலியின்மீது பயணம் செய்வதில் ஆச்சரியமாக இல்லை. ஆனால், ஒரு சித்தர் புலியின் மீது பயணம் செய்கிறார் என்றால், அவர் எப்பேர்ப்பட்ட சக்தி மிக்கவராக இருக்க வேண்டும். விலங்குகளை வசியப்படுத்தி, தன் கட்டுக்குள் வைத்திருப்பவர் அவர். அந்தளவுக்கு அவருக்கு தவசக்தி அமைந்திருந்தது.புலிப்பாணி சித்தர் சீனாவில் பிறந்ததாக ஒரு தகவல் இருக்கிறது. பழநியில் வசித்த போகர் சித்தர் சீனாவுக்கு வான்வழியே யோக சாதனையைப் பயன்படுத்தி சென்றார். அவரது அருமை பெருமைகளைத் தெரிந்து கொண்ட புலிப்பாணி அவரது சீடரானார். அவரிடம் சகல யோக வித்தைகளையும், சித்து வேலைகளையும் கற்றுக் கொண்டார். பின்னர் இருவரும் பாரதத்துக்கு வந்து சேர்ந்தனர்.போகர் பழநியில் தங்கிய போது புலிப்பாணியும் உடன் தங்கினார். ஒருமுறை போகர் சித்தர் தாகத்துடன் ஒரு காட்டில் தவித்த போது, புலிப்பாணி தன் புலியின்மீது ஏறிச் சென்றார். தண்ணீரை பாணி என்றும் வேற்றுமொழியில் சொல்வதுண்டு. புலியில் ஏறிச்சென்று பாணி கொண்டு வந்ததால் புலிப்பாணி என்று இருமொ ழிகளையும் இணைத்து அவருக்கு பெயர் வந்ததாகவும், அவர் சீனாவில் பிறந்தவர் என்பதால் அவரது நிஜப்பெயர் தெரியவில்லை என்றும் சொல்லப்படுகிறது.புலிப்பாணி புலியில் ஏறி தண்ணீர் கொண்டு வந்ததை நிரூபிக்கும் பாடல் ஒன்றை போகரே எழுதியிருக்கிறார். அந்தப் பாடல் இதுதான்! ஆழ்ந்தவே காலங்கி கடாட்சத்தாலே அப்பனே வேங்கை தனில்  ஏறிக்கொண்டு தாழ்ந்திடவே ஜலம் திரவ்விப்புனிதவானும் சாங்கமுடன் தாரணியில் சுற்றி வந்தோன் என்ற பாடல் புலிப்பாணியையே குறிப்பதாகச் சொல்கிறார்கள். 
                             முருகன் சிலை செய்ய மூலிகைகளைக் கொண்டு வரச்சொல்வதின் நோக்கத்தை புலிப்பாணி புரிந்து கொண்டார். எவ்வளவு அருமையான யோசனை! என் குருநாதருக்கு தான் இந்த மக்கள் மீது எவ்வளவு கரிசனம் இருக்கிறது! ஆனால், குருநாதர் குறிப்பிடும் ஒன்பது வகை மூலிகைகளும் விஷத்தன்மை கொண்டவை ஆயிற்றே! விஷ மூலிகைகள் எப்படி மனிதனைக் குணப்படுத்தும்! மாறாக, அவை ஆளையல்லவா கொன்று விடும், என்ற சந்தேகமும் இருந்தது.தன் சந்தேகத்தை மிகுந்த பணிவுடன் கேட்டார் புலிப்பாணி. மக்கள் மீது புலிப்பாணிக்கு இருக்கும் அபிமானத்தை மனதுக்குள் பாராட்டிய போக சித்தர், புலிப்பாணி! கவலை கொள்ளாதே. நீ கொண்டு வரும் ஒன்பது மூலிகைகளையும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் கலந்தால் பவ பாஷாணம் என்னும் மருந்து கிடைக்கும். இந்த மருந்தை நேரடியாகச் சாப்பிட்டால் மரணம் சம்பவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நவபாஷாணத்தை சிலையாக வடித்து, அதற்கு அபிஷேகம் செய்யும் பொருட்களைச் சாப்பிட்டால் அது விஷத்தன்மைக்கு பதிலாக மருத்துவத்தன்மை பெறும், மேலும், நவபாஷாணத்தின் வாசம் பட்டாலே போதும், மனிதன் புத்துணர்வு பெறுவான். இதோ! இந்த பழநி மலையின் உச்சியில் நவபாஷாண முருகன் சிலையை, கலியுகம் முடியும் வரையில்  மக்கள் வணங்கும் வகையில் பிரதிஷ்டை செய்வேன். அவன் அருளால் உலகம் செழிக்கும். எக்காலமும் வற்றாத மக்கள் வெள்ளம் இந்தக் கோயிலுக்கு வரும். பழநி முருகனின் ஆணையோடு தான் இந்தச் சிலையைச் செய்கிறேன். எனவே மக்களுக்கு எந்த ஆபத்தும் வராது, என்றார். புலிப்பாணி சித்தர் மகிழ்ச்சியடைந்தார். குருநாதர் சொன்னது போலவே புலியில் ஏறிச்சென்று ஒன்பது வகை மூலிகைகளையும் கொண்டு வந்து கொடுத்தார். பழநிக்குச் செல்பவர்கள், போகரை மட்டுமின்றி புலிப்பாணி சித்தரையும் நிச்சயமாக மனதில் நினைக்க வேண்டும். போகர், இவ்வூர் முருகன் சிலையைச் செய்யக் காரணமாக இருந்தவர் இவரே! போகர் நினைத்தபடி நவபாஷாண சிலை உருவாயிற்று. ஒருநாள் புலிப்பாணியை அழைத்த போகர், புலிப்பாணி! நான் சீனதேசம் செல்கிறேன். இனி இங்கு எப்போது வருவேன் எனத்தெரியாது. நீயே இந்த முருகன் சிலைக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும், என சொன்னார். புலிப்பாணியும் அவரது கட்டளையை ஏற்று, சிலையின் காவலர் ஆனார்.
                               ஒருமுறை. சீனதேசத்தில் இருந்து வந்த சிலர், உன் குருநாதர் போகர், பெண்ணின்பத்தில் சிக்கி, தவ வலிமையை இழந்து விட்டார், என்றனர். அதிர்ச்சிய டைந்த புலிப்பாணி தவ சிரேஷ்டராகிய தன் குருவைக் காப் பாற்ற சீனா சென்றார். அவரை அங்கிருந்து பழநிக்கு அழைத்து வந்து, மீண்டும் தவ வலிமை பெறுவதற்குரிய வழிகளைச் செய்தார். போகருக்கே ஞானம் வழங்கிய பெருமை புலிப்பாணிக்கு உண்டு. சில நாட்களில் போகர் இறந்து விடவே, அவரது சமாதிக்கு பூஜை செய்யும் பணியை அவர் கவனித்தார். சமாதிக்கு பூஜை செய்பவர், முருகனின் பாதுகாவலராக இருக்கக் கூடாது என சிலர் எதிர்ப்பு தெரிவிக்கவே, எங்கள் குருவுக்கு குரு முருகப்பெருமான், எனக்கு குரு போகர் சித்தர். நான் அவரது சமாதியையே பூஜிப்பதையே பெருமையாகக் கருதுகிறேன், என அவர்களிடம் தன் நன்றி உணர்ச்சியை வெளிப்படுத்தினார். தன் வாழ்நாளில் பலரை மூலிகை வைத்தியம் மூலம் காப்பாற்றிய பெருமை உண்டு. நோயுற்றவர்கள் புலிப்பாணி சித்தரை மனதார நினைத்தால், அவரே நேரில் வந்து மருந்து தருவதாக ஐதீகம். புலிப்பாணி சித்தரும் தன் குரு போகரைப் போலவே பழநியிலேயே சமாதியாகி விட்டதாக தகவல் உள்ளது.
"ஆள்தவே காலங்கி கடாட்சத்தாலே  
அப்பனே வேங்கை தனில் ஏறிக்கொண்டு  
தாழ்ந்திடவே ஜலம் திரட்டி புனிதவானும்  
சாங்கமுடன் தரணியிலே சுற்றிவந்தான்". 
- போகர் -
 போகருடைய சீடார்களில் ஒருவர், தமிழகத்தி பொன் வணிகர் குலத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறார். போகர் நவபாஷாணதைக் கொண்டு பழனி முருகன் சிலையை வடிக்கும் போது இவர் அவருக்கு உதவியாக இருந்ததாக சொல்லப் படுகிறது. போகர் சமாதியடைய முன்னர் இவரை அழைத்து தமக்குப் பின் தண்டாயுதபாணி கோவில்ப் பூசை , புனஸ்காரங்களை இவரே செய்யவேண்டும் என்று பணித்ததாகவும் சொல்லப் படுகிறது.
                                போகரும் புலிப்பாணி பரம்பரையும்! போகர் சித்தர் ஆகாய மார்கமாக பயணம் செய்யும் போது பழனியை கண்டு, இந்த இடம் தான் நம்  பூஜைக்கு ஏற்ற இடம் என தீர்மானித்து தரை இறங்கினார். அங்கே அவர் கண்ட காட்சி அவரது  எண்ணத்தை உறுதி செய்தது. அவர் கண்டது, ஒரு வெள்ளை காகம், சிவப்பு நிற கொக்கு,  வெள்ளை, சிவப்பு நிறத்தில் இரண்டு குன்றுகள். வெள்ளை குன்று சிவகிரி என்றும்,  சிவப்பு குன்று சக்திகிரி என்றும் அவர் உணர்ந்தார். அவர் பழனியை வந்தடைந்த காலம் என்பது த்வாபர யுகத்தின் முடிவும், கலி யுகத்தின்  தொடக்கமும். அங்கு வந்து சேர்ந்த உடனேயே ஒரு குன்றின் மேல் தன் கமண்டலத்தையும்,  கைத்தடியையும் வைத்து, இறைவனாக பாவித்து தினமும் பூசை செய்து வரலானார். பின்னர்  பலரிடமிருந்தும் வந்த உத்தரவால், ஒரு நவபாஷாண சிலை செய்து அதற்கு தண்டாயுத (முன்  சொன்ன கைத்தடியின் பெயர்) பாணி (கமண்டலத்துக்குள் இருக்கும் நீர்) என்று பெயர்  வைத்து நித்ய பூஜை செய்து வரலானார். அந்த நவபாஷாண சிலைக்காக ஒன்பது வித விஷங்களை  உருவாக்கினார். அவை , வீரம், பூரம், ரசம், கந்தகம், மோமசலை, கௌரி, PHOSPHORUS,  துருசு, வெள்ளை பாஷாணம் என்பவை. கலியுகம் பிறந்த பின் 205 ஆண்டுகள் அந்த சிலைக்கு போகர் பூசை செய்து வந்தார்.  அதற்கு பின் சிவலிங்க தேவ உடையார் உடையார் என்பவர் போகரிடம் சிஷ்யராக வந்து  சேர்ந்தார். இவர் கர்நாடக மாநிலத்தில் மைசூரை சேர்ந்தவர். உடையார் அவர்களை நித்ய  பூஜைக்கு நன்றாக தயார் படுத்திய பின், பூஜை செய்யும் பணியை அவரிடம்  சேர்பித்துவிட்டு, போகர் நிர்விகல்ப சமாதியில் அமர்ந்தார். போகர் சமாதி ஆனா  பின்னரும், உடையார் பலமுறை போகரை சந்தித்து பூசை சம்பந்தமான விஷயங்களில்  கலந்தாலோசித்து வரலானார். 
                                  நைனாதி முதலியார் என்பவர் சிறிது காலத்திற்குப்பின் உடையாரிடம் சிஷ்யராக வந்து  சேர்ந்தார். முதலியாரின் பக்தியில் மனம் மகிழ்ந்த உடையார், அவரை அழைத்து கொண்டு  போகரிடம் சென்று "முதலியார் நல்ல திறைமை உடையவர். அவருக்கே இனி பூஜை செய்யும் பணியை  கொடுத்துவிடலாம் என்று" பரிந்துரை செய்தார். போகர் சற்று நேர அமைதிக்கு பின் "முதலில், இவர் உலகை ஒரு முறை சுற்றி வரட்டும்.  அதற்கு பின் பூஜை செய்யும் உரிமையை கொடுக்கும் தீர்மானத்தை எடுக்கலாம்" என்றார். இதை கேட்ட உடையார் அதிர்ந்து போனார். போகரிடமிருந்து நித்ய பூஜை முறைகளை ஏற்று வாங்கி நிறைய வருடங்கள் ஓடிவிட்டது.  போதும். நாமும் போகரிடம் உத்தரவு கேட்டு சமாதி ஆகிவிடலாம் என்று ஆசை பட்ட  உடையாருக்கு, "அவரை நான் ஏற்று கொள்கிறேன். ஆனால், அதற்கு முன் அவர் இந்த உலகை  ஒருமுறை சுற்றி வந்து என் முன் வெற்றிகரமாக நிற்க வேண்டும். அப்படி ஆனால் அவருக்கு  பூஜை செய்யும் உரிமையை கொடுக்கிறேன்" என்று போகர் சொன்னபோது உண்மையிலேயே உடையார்  ஆடி போய் விட்டார். "இவரால் முடியுமா? அப்படியும் எத்தனையோ பிரச்சினைகளை சந்தித்து  இவர் முடிப்பதற்குள் எத்தனை வருடங்கள் ஆகிவிடும். அதுவரை காத்திருக்க வேண்டுமே",  என்றெல்லாம் அவர் மனதில் எண்ணங்கள் ஓடியது. முதலியார் பேச தொடங்கினார். இந்த உலகை கால் நடையாக சென்று சுற்றி வர என்னால் முடியாது. வேண்டுமானால் ஒருபுலியின் மீதமர்ந்து முடிக்க முயற்சி செய்கிறேன் என்றார். போகரும் அதற்கு சம்மதிக்கவே, முதலியாரும் காட்டுக்குள் சென்று ஒரு புலியை  வசப்படுத்தி அதன் மீது ஏறி அமர்ந்து, விடை பெற்றார். காலங்கள் ஓடியது. சென்றவரை  காணவில்லை. உடையாருக்கு மனதில் கவலை ஏறியது. எதிர்பார்க்காமல் ஒரு நாள், உடையார்  ஒரு வேளை பூசை முடித்து தீபாராதனை காண்பிக்கவே, அங்கு புலிமேல் அமர்ந்தபடி,  முதலியார் வந்து சேர்ந்தார். இதை கண்ட உடையாரின் மனம் சொல்லொண்ணா இன்பத்தில்  ஆழ்ந்தது. பூசை முடித்த கையுடன், அவரை அழைத்து சென்று போகர் முன் நிறுத்தினார். அவரை கண்ட  போகர், "சரி, வெற்றிகரமாக உலகை சுற்றி வந்து விட்டாய். இருப்பினும், ஒரு சில  நாட்கள் வரை உடையாரே பூசை செய்யட்டும். அதுவரை, பூசையில் உடையாருக்கு உதவி செய்து  இரு" என்று கட்டளை இட்டார். மேலும் "புலியில் சென்று இந்த உலகை சுற்றி வந்ததால் நீ  இன்று முதல் "புலிப்பாணி" என்று அழைக்க படுவாய்" என்று கட்டளை இட்டார். பூஜை நன்றாக நடப்பதை கண்ட போகர், புலிப்பாணியின் பெருமையை உடையாருக்கு உணர்த்த பல  வித சோதனைகள் நடத்தினார். அதில் ஒன்று "ஷண்முக நதி வரை சென்று அபிஷேகத்துக்கு நீர்  கொண்டு வா" என்று உத்தரவிட்டார். 
                                   நதி கரை வரை சென்ற புலிப்பாணி, கையில் ஒரு  பாத்திரமும் இல்லாததால், தன் தபோபலத்தால், அந்த நதியின் நீரை எடுத்து ஒரு  பாத்திரமாக மாற்றி, அதனுள் நீரை ஊற்றி, அபிஷேகத்துக்கு கொண்டு வரலானார்.  அதிலிருந்து அவர் "புலிப்பாணி பாத்திர சுவாமிகள்" என்று அனைவராலும் அழைக்க பட்டார்.  தினமும் ஆறு முறை ஷண்முக நதிக்கு சென்று நீரை பாத்திரமாக்கி, அதில் நீரை ஊற்றி, மலை  மேல் இருக்கும் முருகனுக்கு அபிஷேகத்துக்கு கொண்டு வரலானார். எல்லாம் நல்ல படியாக நடப்பதை கண்ட போகர், உடையாருக்கு சமாதியாகும் பாக்கியத்தை  கொடுத்தார். பின்னர் புலிப்பாணியை அழைத்து, "பூஜை முறைகள் தொடர்ந்தது தலை முறை தலை  முறையாக நடக்கவேண்டும். அதற்கு நீ தான் வழி அமைக்க வேண்டும்" என்றார். 205 வருடங்கள் புலிப்பாணி பூஜைகளை தொடர்ந்து செய்து வந்தாயிற்று. போகரின் இந்த  உத்தரவுக்கு, புலிப்பாணி கீழ் வருமாறு பதிலளித்தார். இன்றுவரை 205 வருடங்கள் ஆகிவிட்டது. அடியேனுக்கு, குடும்ப வாழ்க்கையில் சற்றும் விருப்பம் இல்லை என்றார். தலை முறையாக பூஜை நடக்க வேண்டும் என்றால், ஒரு ஆண் மகவு வேண்டும். குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டு சன்யாச வாழ்க்கையும் வாழலாம். ஆண் மகன் பிறந்த 16 வது வருடம், பூஜை விஷயங்களை அவனிடம் சேர்பித்துவிட்டு, நீ சமாதி ஆகலாம் என்றார். குருவின் வார்த்தைக்கு கட்டு பட்டு புலிப்பாணியும் குடும்ப வாழ்க்கை தொடங்கினார். ஒரு வருடத்தில் அவருக்கு ஆண் மகன் உருவானான். 
                               அவனுக்கு "காரண புலிப்பாணி" என்று  பெயர் இட்டு வளர்த்து வரலானார்! காரண புலிப்பாணி தனது பதினாறாவது வயதில் பூஜை செய்யும் உரிமையை ஏற்றுகொள்ள,  புலிப்பாணி பரம்பரை பூசை செய்யும் உரிமை உருவாயிற்று. புலிப்பாணியும் சமாதியில்  அமர்ந்தார். காரண புலிப்பாணி 1100 ஆண்டுகள் பூசை செய்து வந்தார். அவருக்கு ஒரு மகன்  பிறக்க,, அந்த மகனுக்கு குமார சுவாமி புலிப்பாணி என்று பெயரிட்டனர். குமார சுவாமி  புலிப்பாணி, காரண புலிப்பாணி இடமிருந்து பூசை செய்யும் உரிமையை வாங்கிக் கொள்ள, புலிப்பாணி தலைமுறை வளர்ந்தது. இவர் 1000 ஆண்டுகள் இருந்து பூசை செய்து வர,  அவருக்கு அடுத்த வாரிசாக, வேல் ஈஸ்வர புலிப்பாணி என்பவர் வந்தார். பின்னர் இந்த புலிப்பாணி தலைமுறை கீழ்கண்டவாறு வளர்ந்தது.
வேல் ஈச்வர புலிப்பாணி 
ஆறுமுக புலிப்பாணி 
ஹரிக்ருஷ்ண புலிப்பாணி 
பழனியப்ப  புலிப்பாணி. 
பழனியப்ப புலிப்பாணி தலை முறை வந்ததும், இரண்டு மகன்கள் உருவாயினர். 
அவர்களை,  பாலகுருநாதர் புலிப்பாணி, போகநாதர் புலிப்பாணி என்று அழைத்து வந்தனர். விதிப்படி,  பூஜை முறைகள் மூத்த மகனுக்குத்தான். பால குருநாதர் புலிப்பாணி திருமணம் செய்து  கொள்ளததினாலும், 22 வயதில் மரண மடைந்ததினாலும் , பூஜை செய்யும் உரிமை இரண்டாவது மகன்,  போகநாதர் புலிப்பாணி இடம் சேர்ந்தது. போகநாதர் புலிப்பாணி தன் மகன் பழனியப்ப  புலிப்பாணி இடம் பூஜை விஷயங்களை சேர்க்க, அது அடுத்த தலைமுறையில் சிவானந்த  புலிப்பாணி இடம் சேர்ந்தது. இவர் தான் இன்று அந்த ஆஸ்ரமத்தில் தலைவராக இருந்து  கொண்டு பூஜை முறைகளை நடத்தி வருகிறார். பழனியப்ப புலிப்பாணி ஒரு நாள் ஆஸ்ரமத்தின் பின் பக்கம் கட்டிட வேலைக்காக குழித்த  போது அங்கே ஒரு குகையில் ஒரு சித்தர் தவம் செய்வதை கண்டார். 
                                    சித்தரின்  தலையிலிருந்து நீண்டு வளர்ந்த முடியானது மரத்தின் வேர் போல மண்ணுக்குள் மிகுந்த  ஆழத்தில் ஊடுருவி செல்வதை கண்டார். அந்த சித்தர் பத்மாசனத்தில், கைகளை மார்புக்கு  குறுகலாக வைத்த படி இருக்க, அவர் கை, கால் விரல்களில் நகம் இதுவரை அவர் கண்டிராத  அளவுக்கு நீளமாக அவர் தோள்களை சுற்றி வளர்ந்திருந்தது. அவரது தவத்தை கலைத்துவிடுகிற  அளவுக்கு நாம் ஏதேனும் செய்து விட்டோமோ என்று நினைத்த அவர், அப்படியே தொடங்கிய  வேலையை விட்டுவிட்டு, உடனேயே அந்த இடத்தில் சமாதி கட்டினார். அது தான் இன்றும் நாம்  சென்றால் பார்க்கும் மிக பெரிய லிங்கம் உள்ள, சமாதி. பழனி அந்த காலத்தில் மதுரை நாயக்க மன்னரின் ஆட்ச்சியில் இருந்ததால், மன்னரே,  ஆஸ்ரமம், பழனி முருகருக்கு பூசை செய்யும் முறை இவைகளின் பேரில் உள்ள உரிமையை  புலிப்பாணி தலைமுறைக்கு மட்டும் தான் என்று பிரகடனம் செய்து, செப்பு தகட்டில்  பதித்து கொடுத்தார். மேலும், பூசை முறைகளுக்கு யார் எந்த விதத்தில் உதவினாலும் அவர்கள் காசியில்/கங்கை  கரையில் ஒரு கோடி லிங்கம் பிரதிஷ்டை செய்த பலனை அடைவர் என்றும், இதற்கு (பூஜைக்கு)  ஏதேனும் விதத்தில் தடங்கல் செய்பவர்கள், கங்கை கரையில் "காராம் பசுவை" கொன்ற  குற்றத்திற்கு உள்ளாவார்கள் என்று பிரகடனம் செய்தார். பழனி என்பது யோகிகளால், நவக்ரகங்களில், செவ்வாய்க்கு பரிஹார ஸ்தலமாக  கருதப்படுகிறது. தங்கள் தவத்தை/அதன் நிலையை உயர்த்திக்கொள்ள பழனியை யோகிகள் சிறந்த  இடமாக கருந்துகின்றனர்.

No comments:

Post a Comment