Saturday, 8 September 2018

மண்பானை Vs முட்டை

HAPPY SREE KRISHNA JEYANTHY
TO ALL MADHYAMARS
*****************************************************************
கொத்தனாரும் என்ஜினியரும் - ஒரு போட்டி 
((( 1960 பிளாஷ்பேக் - உண்மை சம்பவம் )))
------------------------------------------------------------------------
ஒரு கிராமத்துல வீடு ஒண்ணு கட்டிக்கிட்டு இருந்தாங்க .
கொத்தனாரும் சித்தாளும் அவ்வப்போது கதை பேசிக்கிட்டே ஒருமாதிரியா வேலை ஓடும் .
ஒருமுறை கொத்தனார் சொன்னாரு ...ஏ புள்ளே அன்ன லட்சுமி ஒன்னோட பேரு தான் பெருசா அன்ன லட்சுமி ...கால் கடுக்க முதுகு ஒடிய நெதம் இந்த கட்டிட வேலை செஞ்சா தான் உனக்கு கஞ்சி ...இல்லீன்னா சிங்கிள் டீக்கு சிங்கி தாண்டி ன்னு ...
சித்தாளு இடை மறித்து சொல்றா ...ஆமா இவரு பெரிய கலெட்டர் தொரை ...பெருசா சொல்ல வந்துட்டாரு ...
கொத்தனார் சொல்றார் ...அதில்ல புள்ளே நானும் தான் படாத பாடு பட்டு கட்டுமானப்பணி செஞ்சு தான் கஞ்சி குடிக்கிறேன் ...இல்லேங்கலே ....
ஆனா பாரு இந்த இஞ்சினியருன்னு ஒரு பய வர்றான் ....என்னத்த கிழிக்கிறானோ...பெரிய தேவ ரகசியம் போல ....
அவனுக்கு எம்புட்டு சம்பளம் தெரியுமா புள்ளே ?
அன்னம் சொல்றா ...
.... யோவ் அதெல்லாம் நமக்கு எதுக்கு ...சோலியப் பாப்பமா ...
அந்நேரம் என்ஜினியர் அகஸ்மாத்தாய் அங்கே ஆஜார் ...
சிரிச்சுக்கிட்டே கொத்தனார் பக்கம் வந்து ..
இன்னிக்கு மதியம் சாப்பிட்ட பிறகு வாங்க ஒரு சின்ன வேலை சொல்றேன் செஞ்சிடீங்கன்னா நூறு ரூபா தருவேன்னாரு ..
கொத்தனாரும் சம்மதிச்சு மதியம் சாப்பிட்டு அவர் கிட்டே போனாரு ...
என்ஜினியர் ஒரு நாட்டுக்கோழி முட்டை கொடுத்து கூடவே பளபளக்கும் மண் பானையும் கொடுத்து பானையை கவிழ்த்துப் போடச்சொல்லி முட்டையை விழாமல் பானை முகட்டில் நிறுத்தச் சொன்னார்.
கொத்தனாரும் கஜ கர்ணம் கோ கர்ணம்ன்னு பலதும் செஞ்சு பார்த்தும் பாச்சா பலிக்கல...
முட்டை கீழே விழுந்து ஒடைஞ்சி போனதே பலன் ....என்ஜினியரும் அலுக்காம இன்னொரு முட்டை பின்னேயும் இன்னொண்ணு ...இப்பிடியே பத்து முட்டைகள் கொடுத்தும் கண்ட பலன் பூஜ்யமே ..
கண் முழி பிதுங்கிப் போன கொத்தனார் சரணம் சரணம் ...நீங்களே தீர்ப்பு சொல்லுங்கன்னாரு ...
என்ஜினியர் ஒரு கைப்பிடி ஈரமண் எடுத்து மொட்டைப் பானை உச்சியில் வைச்சாரு ...கோழி முட்டையை அதுக்கு மேலே வைத்து அதுவும் ஜம்முன்னு இருந்துச்சு சமர்த்தாக ....
இப்போ என்ஜினியரு சொன்னாரு....
கொத்தனார் அய்யா ..பாத்தீங்களே ..... இதுக்குத்தான் எனக்கு அதிகம் சம்பளம் ..புரிஞ்சுதான்னாரு ....
மத்யமர்களே கத எப்பூடி ?....

No comments:

Post a Comment