Saturday 8 September 2018

இச்சை மொழி

அரசு அலுவலக அனுபவங்கள் # 2
===========================
சில ஆண்டுகள் முன்பு ....
. என் உறவினரும் வகுப்புத் தோழருமான ஒருவரின் அன்னையார் இறந்து போனார்கள் . இவர் அம்மையின் இறப்பிற்கு சவூதி அரேபியாவில் இருந்து எமெர்ஜென்சி லீவில் வந்தார். பின்னர் விடுமுறை நீட்டிப்பு செய்து கொண்டார்.
அவரது தந்தையார் சில ஆண்டுகள் முன்பே காலம் ஆகியதால் இனி அவருக்கு வாரிசு சான்றிதழ் வாங்கவும் வங்கி கணக்கில் பெற்றோர்கள் பெயரில் இருந்த பணத்தை எடுக்கவும் அலைந்த அலைச்சலே சம்பவம்.
இவருக்கு ஒரே அக்கா . இவரது தந்தையார் பல ஆண்டுகள் ஓமன் நாட்டில் மஸ்கட்டில் ஒரு மருத்துவமனையில் வார்ட் பாய் பணி செய்து ஏராளம் பொருள் ஈட்டியவர். இவரே எங்கள் ஊரில் முதல் சர்க்கரை (அப்போதெல்லாம் நீரிழிவு நோய் என்பார்கள் ) நோயாளி .1977லேயே முதன் முதல் பதினாலு இஞ்சளவு டிவி பொட்டி கொண்டு வந்தவர். அந்த அன்டேனா ஒரு இம்சை ..அனுபவித்தோர் அறிவார்கள். ஒருவர் டிவியை காதை திருக மற்றொருவர் அன்டெனா கம்பிகளை முறுக்கி கச்சேரி நடத்த ....ஆஹான்ன்னானாம்....
சரி சம்பவத்துக்கு வந்தோம் ...முதலில் வாரிசு சான்றிதழ் வாங்க என்னை வந்து ஒத்தாசைக்கு அழைத்தார். தாலுகா ஆபீசில் கொஞ்சம் பரிச்சயமுண்டு. சில ஊழியர்களும் தூரத்து உறவுகள் வகையில் உண்டும் ...கெத்தாக அழைத்துப்போய் அரசு அலுவலக விதிமுறைகள் படி கைகட்டி வாய் பொத்தி மெய் ஒடுக்கிப் போக நண்பருக்கும் புத்தி சொல்லி A1 ஆபீசரிடம் போனோம்.
அவரோ விறைப்பாக முதலில் கிராம அதிகாரி ( V.O) வைப் பாருங்கன்னார்.
வில்லேஜ் ஆபீசர் ...அவரோ சில நிலப் பிரச்சினைகளுக்கு எங்கள் ஊர் ஆட்களுக்கு நான் உதவியதில் பரிச்சயமுண்டு. அவரும் ஒன்றும் பெரிய தொல்லை கிடையாது . வெள்ளையப்பன் கொடுத்தால் வேலை சுளுவாய் ஆகும்.
அங்கு போய் ரெண்டு மூன்று நாட்கள் அலைந்தாலும் (கெத்து காட்டுவாங்களே
மக்களே ) ...வேலைகளை முடித்து அடுத்து R.I எனும் வருவாய் அதிகாரியிடம் போனோம். அவர் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவரே . ஆஹா நம்மாளு ன்னு போய் ..மூஞ்சியிலே செமயா வர்ம / மர்ம வகையில் 'நச்' ....அடி வாங்கியதே கண்டபலன் ...
நண்பரின் பெயரிலும் ஒரு குளறுபடி இருந்ததே காரணம். அவரது ஞானஸ்நான சான்றிதழ் / பாஸ்போர்ட் / வாக்காளர் அட்டை / மூன்றிலும் பெயர்கள் வேறுபாடு .....ஹோலி ட்ரினிட்டி வகையில் ...என்டே கர்த்தரே !!!!
வருவாய் அதிகாரி என்னிடம் கேட்டார் ...நீங்கள் ஆடிட்டர் தானே ...என் இருக்கையில் இருந்தால் சான்றிதழ் கொடுப்பீர்களா என மடக்கினார்.
ஒரு நாலைந்து நாட்களில் சில நேரங்களில் அவரைப் பார்க்கமுடியாமல் ...ஒரு திருமண நிகழ்வில் அகஸ்மாத்தாய் நேருக்கு நேர் கண்டு ....நான் சாம தான பேத முறைகளைக் கையாண்டு தோற்று கடைசியில் ரௌத்திரமானேன் ...
தண்டத்தை எடுத்தேன். என்னங்க நாங்களும் கத்தோலிக்கர் ...நீங்களும் தானே ...ஒரு உதவி செய்தால் என்ன ...அவரோ சவூதி அரேபியா போகணும் ...நாட்களோ குறைச்சல் என குரைத்தேன்...பித்தம் தலைக்கேறியதில்...கோபம் கொப்பளித்து பொங்கி பீச்சி அடித்தது ...போங்கோ
பிறகு சூடான வாதத்தின் முடிவில் கடைசியாக் கேட்டேன் இம்மாதிரி சமயங்களில் நடைமுறை என்ன என்று ஒரு வழி காட்டுங்கள் ...கேட்கும் பணத்தை தர சம்மதம் ...
வக்கீல் கிட்டே போய் மூன்று பெயர்களும் குறிப்பிடும் நபர் ஒருவரே என உறுதி சான்று வாங்கி வாருங்கள் என்றார்.
ஒரு வக்கீல் அலுவலகம் போய் அங்கு அவரிடம் பேசி அங்குள்ள டைப்பிஸ்ட் இவரது பெயர்களை அடிக்கத் தடுமாறி ...தள்ளும்மா ன்னு அங்கேயும் கொதிக்கும் பால் போல பொங்கி நானே உட்கார்ந்து மேட்டரை டைப் செய்து வக்கீல் சீல் கையொப்பம் வாங்கி ....அப்பாடி ...ஒருமாதிரியாய் பணியை முடித்து .....
திரும்ப தாலுகா ஆபீஸ் போனப்போ நண்பர் வெகுண்டு போய் ஒரு கிளார்க் பெண்மணியிடம் நான் தற்செயலாய் வெளியில் போன போதில் ஏதோ இரைந்து சொல்லி அந்த பெண்மணி என் மனைவி ஊர்க்காரர் வேறே ...என்னை தனியே அழைத்து எச்சரிக்கை செய்து ...களேபரம் / ரசாபாசம் ஆக இருந்ததை சமாளித்து ...நண்பரைக் கூப்பிட்டு டோஸ் விட்டு ...அவர் அசடு வழிந்து வருத்தம் தெரிவித்து ...என்னத்த சொல்ல
இறுதி சுற்றில் ஆட்டம் கெலிப்பு ...என்னை உனக்கு என்ன வேனும்ன்னார் ...நாலைந்து புத்தகங்கள் வாங்கிக் கொண்டேன்.
கலைமணி கொத்தமங்கலம் சுப்பு - ராவ் பகதூர் சிங்காரம், கரிச்சான் குஞ்சு - பசித்த மானுடம் , நீல பத்மநாபன் - பள்ளிகொண்டபுரம், பி.வி . ராமகிருஷ்ணன் (பிவிஆர்) - கூந்தலிலே ஒரு மலர், எஸ் கே பொற்றேகட் - விஷக்கன்னி , அ .முத்துலிங்கம் - கடவுள் தோன்றிய இடம் .....
{{{மத்யமர்களே !!!!என்னிடம் நல்ல அருமையான நூல்கள் pdf வடிவில் உண்டு ...விருப்பமுள்ளோர் இ மெயில் தந்தால் அனுப்பித் தருவேன். ..நிறைய பேர்களுக்கு
கொடுத்துள்ளேன் ....}}}
இன்னிக்கு மத்யமரில் இந்நிகழ்வு குறித்து எழுத ஆனந்த பரம சுகமே ...ஆனால் அந்த ஒரிஜினல் பத்து நாட்களில் ...பிரஷர் ஏறி இறங்கி / காய்ச்சல் அடித்து ...மருந்து குடித்து மந்தியாய் மாறி ...பட்ட கஷ்டங்கள் ...போதும் ....சாமியோவ் ...
இதே சம்பவத்தை ரசமென கருதி கேவலமான பரிபாஷை வடிவில் அங்கதச் சுவையுடன் எழுதினால் இன்னும் நல்லாவே இருக்கும் ...என் பண்பு அதை தடுக்குதே ...கொச்சை மொழி எனக்கு இச்சை மொழி அல்ல ...

No comments:

Post a Comment