Saturday 8 September 2018

ஆசிரியர் தினம்

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
என் ஆசிரியப் பெருமக்களுக்கு சிரம் தாழ்த்தி பாதம் பணிந்து ஆசி வேண்டி சிறப்பு வணக்கங்கள் ....வாழ்க !!!!
**********************************************************************
நான் கல்வி பயின்ற தூய தெரசாள் பள்ளி வடக்கன்குளம் - திருநெல்வேலி(மா)
காண்க படம்
--------------------------------------------------------------------------------
வட்டத்துக்குள் இருக்கும் அடியவன் அடுத்து தலைமை / வகுப்பு ஆசிரியர்கள் திரு அமலதாஸ்(கணிதம்) & அனந்த கிருஷ்ணன் (சமூக அறிவியல்) இருவரும் ......
===========+++++++++++++++========
இங்கு தான் 6-11 வரை (1972-78) படித்தேன்.
Analytical Mindset, Reading, Memory Power Techniques, Proficiency in Languages....ஏராளம் கற்றுக்கொண்டேன் ...அடித்தளம் வெகு சிறப்பாக அமைந்து திருச்சி தூய வளனார் / சென்னை லயோலா கல்லூரிகளில் கோலோச்சி ..குவைத் & கஸாக்ஸ்தானில் கொடி நாட்டி ...இன்று கிராமத்தில் எளிய அமைதியான ஆனந்த வாழ்வு !!!!... ...
பின்னாளில் நான் கடல் கடந்து ஆடிட்டராய் ஜொலித்து Report Writing King ஆகத் திகழ அஸ்திவாரம் ( Foundation ) போட்டது இங்கு தான் ...
ஒரு எ.கா :- அருட்பணியாளர் அகஸ்டின் சந்தானம் அடிகள் அமெரிக்காவில் 1960களில் பயின்றவர். பள்ளி தலைமை ஆசிரியர் பணியில் இருந்த சமயம் மிக அபூர்வமாய் எங்கள் ஏழாம் வகுப்பில் பாடம் பயிற்றுவிக்கும் வாய்ப்புக்கள் .
அவரது கற்பிக்கும் திறன் மிக வினோதம் . ஒருநாள் சாக்பீஸ் பற்றி தெரிந்ததெல்லாம் எழுதுங்கன்னார் ...
நான் 10க்கு மேல் விபரங்கள் எழுதி அசத்தக் காரணி அந்த சம்பவமே ..மற்றவர்கள் 2/3ஐத் தாண்டவில்லை ...
நீங்கள் எழுதுங்கள் பார்க்கலாம் ...பிறகு நான் எழுதியது பற்றி தகவல் தருவேன் ....என் முகநூலில் ஏற்கனவே உண்டு ...முடிந்தால் என் லட்சக்கணக்கான பதிவுகளில் தேடுங்கள் ...
என்னுடைய முகநூல் பக்கத்தில் ஏராளம் சுயபுகழ் பாடல் துதிகள் எழுதி அலுத்துப்போனேன்...
ஆனாலும் ஒரு துண்டு இங்கும் :-
*********************************************************************
{{{{{எனது முகநூல் தோழமைகள் எனது பதிவுகளின் நீளம் / அகலம் /உயரம் குறித்து பாராட்டி ...சிலர் எங்கே இருந்து தகவல்கள் பெறுகிறேன் ?...என விசாரிப்பு ...
எனது தேடுதல் வேட்டை அபாரமானது ...தேடுபொறியை சுமார் சரியாக இருபது ஆண்டுகளாய் கையாண்டு ...பல்வேறு உத்திகளை நானே சுயமாய் கண்டுபிடித்து ...
இதெல்லாம் கற்றுத்தர இயலாத கதைகள் ....
நடமாடும் நூலகம் ,
என்சைக்ளோபீடியா - பிரிட்டானிக்கா , அறிவுக்களஞ்சியம், மேதை , மேதாவி .....இம்மாதிரி பல ....
பட்டம் சும்மா கிடைக்குமா ?....
உழைப்பு ....அதிக வேட்டை ...ச் சும்மா ...இல்லை ...
அதன் தொடக்கம் நம் தூய தெரசாள் பள்ளியே ....}}}}}
**********************************************************************
6ஆம் வகுப்பிலேயே (1972) ஆயிரம் ஆங்கில சொற்கள் நான் சுயமாக பொருள் அறிந்து தொகுத்து எழுதி அசத்தினேன் ...
இன்று என் ஆங்கிலப்புலமை என் வட்டாரத்தில் பெரும் பிரபலம் ..
அரபி , ரஷியன், ஜெர்மானிய டச்சு மொழிகள் பேச எழுத வாசிக்க அறிவேன் ...
தமிழிலும் சிறந்த பண்டிதரே. என் எழுத்துப் புலமையே அதற்கு வெள்ளிடைமலை சான்று ....
எட்டு வயதில் வாசிப்புத்திறன் தொடங்கி இன்று ஐம்பத்தேழில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட எழுத்தாளர்களின் பல்லாயிரம் நூல்களும் / படைப்புக்களும் வாசித்து (சுவாசித்து) ...இன்றும் வேட்கையுடன் வேட்டையாடும் ஆர்வத்தோடு வாசிக்கும் ஒரு சாதாரண மாணவன் ...
கற்றது கை அளவு ...என் கை கொஞ்சம் பெரிய அளவு !!!!
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
என் ஆசிரியப் பெருமக்களுக்கு சிரம் தாழ்த்தி பாதம் பணிந்து ஆசி வேண்டி சிறப்பு வணக்கங்கள் ....வாழ்க !!!!
---------------------------------------------------------------------------------
மைக் பிடித்து பேசும் என் FB Profile படம் எங்கள் பள்ளியின் 80ம் ஆண்டு விழாவில் நான் மேடையில் பேசும் காட்சியே ....

No comments:

Post a Comment