Sunday 9 September 2018

ரோஸ் கலர்

பன்னீர் பூக்கள் பூக்கும் மரம் எனக்குமிகப்பிடிக்கும்...
மரத்தடியில்.....
அவனும் அவளும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.
முடிந்து போன பற்பசையிலிருந்து, காலி பாட்டில்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள் என நிறைய சேகரித்து, வீட்டிற்கு வெளியே, முன்பக்க ஜன்னல் ஓரம் சமையலறை ஒன்றை அமைத்திருந்தார்கள். இரண்டு நாளைக்கு முன்னால், கடிகாரத்திலிருந்து தூக்கிப் போட்ட பேட்டரிகள் அங்கு சிலிண்டர்களாகவும், டார்டாயிஸ் வைக்கிற தட்டு அதன் மேல் கேஸ் ஸ்டவ்வாகவும் உருமாறியிருந்தன.
அரிசி முடிந்துவிட்டதென்று சொல்லி சமையல் சாமான்கள் வாங்க அவள் லிஸ்ட் தயாரித்துக் கொண்டிருந்தாள். அவன் சீட்டுக்கட்டு ஒன்றை பையிலிருந்து எடுத்து பணத்தை எண்ணிக் கொண்டிருந்தான். லிஸ்ட் வாங்கியதும், சின்ன சைக்கிளை எடுத்துக் கொண்டு குழாயிலிருந்து செடிக்குத் தண்ணீர் ஊற்றும் டியுபிலிருந்து வண்டிக்கு பெட்ரோல் போட்டுக் கொண்டான்.
கொஞ்சதூரம் போனவன் திரும்பி வந்து அவளிடம், “ஒனக்கு ரோஸ் கலர்ல ஒரு சுடிதாரும் வாங்கி வர்றேன்” என்றான்.

No comments:

Post a Comment