வெள்ளிவிழா நாயகன் என்று அழைக்கப்பட்ட நடிகர் ரவிச்சந்திரன்:::::::::::
டைரக்டர் ஸ்ரீதரால் காதலிக்கநேரமில்லை என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் ...
நான்,
குமரிப்பெண்,
அதே கண்கள்,
மூன்றெழுத்து,
பாக்தாத்பேரழகி,
அன்றுகண்ட முகம்
உள்பட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருந்தார்.
இவர் கடைசியாக நடித்த படம் ஆடுபுலி.
அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கே.ஆர்.விஜயா நடித்திருந்தார். வெள்ளிவிழா கதாநாயகன் என்று அழைக்கப்பட்ட ரவிச்சந்திரன் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தார். ஊமை விழிகள் படத்தில் இவருடைய வில்லன் கதாபாத்திரம் பரபரப்பாக பேசப்பட்டது.
மறைந்த நடிகர் ரவிச்சந்திரனின் இயற்பெயர் ராமன்.
திருச்சியை சேர்ந்த அவர், சினிமா மீதான ஆர்வத்தால் சென்னைக்கு வந்தார். ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம் மூலம் டைரக்டர் ஸ்ரீதருக்கு அறிமுகமானார்.
1965ம் ஆண்டு காதலிக்கநேரமில்லை என்ற படத்தில் இவரை கதாநாயகனாக அறிமுகம் செய்தார் டைரக்டர் ஸ்ரீதர். அத்துடன் தனது சொந்த படநிறுவனமான சித்ராலாயாவுக்காக 2 வருடத்திற்கு ரவிச்சந்திரனை மாதம் ரூ.500 சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்தார். முதல் படத்திலேயே நட்சத்திர அந்தஸ்து பெற்றாலும், வாய்ப்பு கொடுத்த ஸ்ரீதருக்காக தொடர்ந்து 2 ஆண்டுகள் சித்ராலயா நிறுவனத்துக்காக நடித்துக் கொடுத்தார்.
அதன் பின்னர் சித்ராலாயா நிறுவனத்தில் இருந்து விலகி மற்ற கம்பெனி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். படிப்படியாக உயர்ந்து வெள்ளிவிழா கதாநாயகனானார். நடிப்பு, நடனம், சண்டைக் காட்சி ஆகியவற்றில் படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டி ரசிகர்களைக் கவர்ந்தார். 1960களில் தமிழ் சினிமாவின் ரொமான்டிக் ஹீரோவாக வலம் வந்த ரவிச்சந்திரனுக்கு ரசிகர்களை விட ரசிகைகளின் எண்ணிக்கைதான் அதிகம்.
ஒரு காலகட்டத்தில் ஆண்டுக்கு பத்து படங்கள் வரை நடித்த ரவிச்சந்திரனுக்கு, அனைத்தும் வெற்றிப்படமாக அமைந்ததால் தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் இருந்தார். தமிழைத் தவிர மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். ரவிச்சந்திரனின் படங்களில் இடம்பெறும் அனைத்தும் ஹிட் ஆகிவிடுவதால் ரசிகர்களிடையே பிரபலமாக காணப்பட்டார்.
ஹீரோ வாய்ப்புகள் குறைந்த பிறகு, சிறிது காலம் நடிப்பு துறையிலிருந்து விலகியிருந்த ரவிச்சந்திரன் ஆபாவாணனின், ஊமை விழிகள் மூலம் மீண்டும் நடிகரானார். அதன் பிறகு ஏராளமான படங்களில் வில்லன், குணச்சித்திர நடிகர் என பல்வேறு தளங்களில் முத்திரை பதித்தார்.
ரவிச்சந்திரன், மானசீக காதல், மந்திரன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். கன்னடத்திலும் இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். தங்கம் விலை பவுன் ரூ.75 ஆக இருந்த காலத்திலேயே மாதச்சம்பளமாக ரூ.1000 பெற்றவர் ரவிச்சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் அதிக படங்களில் நடித்திருக்கும் அவர், எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு இணையாக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னணி நாயகனாக வலம்வந்த நடிகர் ரவிச்சந்திரன் வாய்ப்புகள் இல்லாத காலத்தில், வாய்ப்புக்காக யாரிடமும் போய் நின்றதில்லை. விவசாயத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்த அவர், சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் அருகில் இருக்கும் அவருடைய நிலத்தில் அமைதியாக விவசாயம் செய்து கொண்டிருந்தார்.....

No comments:
Post a Comment