Saturday 8 September 2018

எங்க ஊர்

பத்திநாதபுரம் - எங்கள் ஊர்
------------------------------------------
எங்கள் ஊரில் புனிதர் ஆசீர்வாதப்பர் ஆலயம்.
பலரும் கேள்விப்படாத புனிதர். ஆங்கிலத்தில் பெனடிக்ட். ஆமாங்க எங்க ஊரில் வீட்டுக்கு ஒருவர் இருவருக்கு இந்த பெயர் இருக்கும். எனக்கு அலங்கார போல ஒவ்வொருவருக்கும் ஏதேனும் பின் முன் இணைப்புக்களோடு இருக்கும்.
பத்திநாதபுரம் சிறிய அழகிய கிராமம். நெல்லைமாவட்டதின் தென் கீழ கடைக்கோடியில் கன்யாகுமரி மாவட்டத்தை தொட்டு அமைந்துள்ள ஊர். திருநெல்வேலி 80கி.மீ. கன்னியாகுமரி 20 + கி.மீ. தொலைவில்.
மக்கள் சுற்றிலும் உள்ள பலப் பல ஊர்களில் இருந்து புலம்பெயர்ந்து வந்து உருவாகிய ஊர். சுமார் 140வருட வரலாறை எங்கள் ஊரின் கதையென எழுதிக் கொண்டிருக்கிறேன் ...புத்தகமாக போடுவேன் ..ஆண்டவன் அருள் பாலிக்கணும்...
என் அம்மா வழியில் அப்பா தாத்தா திசையன்விளை பக்கம் .அம்மா பாட்டி மலையாள தேசம் பக்கமும் அப்பா வழியில் ஆற்றங்கரை பள்ளிவாசல் எனும் புகழ்பெற்ற ஊரின் அருகில் சூடுயர்ந்த விளை.
அப்பா இந்து அம்மா கத்தோலிக்கர் . நாங்கள் வீரிய ஒட்டுரக கலப்பினம்.
எங்கள் ஊரார் 1940களில் கொழும்பு , பினாங்கு, மலேயா .... அப்புறம் பம்பாய் ...1950களில் வளைகுடா நாடுகள் ...இன்றோ அகில உலகமெங்கும் உள்ளனர். வட அமெரிக்க , கனடா, ஐரோப்பிய , மத்திய கிழக்கு , மேற்காசியா , தூரக்கிழக்கு,ஆஸ்திரேலியா,இலத்தீன் அமெரிக்க நாடுகளில் எங்கும் உள்ளனர்.
வீடுகள் நகரங்களுக்கு இணையான தரம் என்றே சொல்லும் விதத்தில்.
படம் காண்க .
புனிதரின் தேர்ப் பவனி
முன்காலத்தில் விவசாயம் மிக அருமையாகசெழித்தோங்கியது. ஆனால் இப்போது விரல் விட்டு எண்ணும் அளவிலேயே விவசாயிகள் ....கொஞ்சம் வானம் பார்த்த பூமி என்பதும் காரணம் ...அனுமன் நதியுண்டு ...தம்பிடிக்கு பலன் நஹி ....
கல்வியறிவில் ஓங்கி உயர்ந்து பல நாடுகளுக்கும் போய் திசை மாறிய பறவைகளாய் ...
என்னைப்போல ஒரு சிலரே ஊரில் வேர்களைத் தேடி வந்தாலும் தொழில் வளம் இல்லாமையால் பிழைப்பே மிகக் கடினமாகி ...எங்களைப் பார்க்கும் பலர் இன்று ஊரில் வந்து 'செட்டில்' ஆக யோசிக்கும் நிலைமையே ...
அவர்களை சொல்லி குற்றமில்லை ...
எனக்கு எங்கள் ஊர் மிகப் பிடிக்கும். ஆனால் அதன் அபரிதமான அசுர வளர்ச்சியில் ஆண்டு தோறும் மாறும் அதன் முகம் பிடிக்காது. பழைய காட்சிகளில் உள்ள சுகம் எங்கள் ஊரில் பழைய புகைப்படங்களிலேயே கிடைக்கும். சில உண்டு ..மீண்டும் ஒரு பதிவில் போடலாம் ...
மத்யமர்கள் தத்தம் ஊரைப்பற்றி எழுதி அறிமுகம் செய்யலாமே ...
அனைவருக்கும் பக்ரீத் வாழ்த்துக்கள் ....
வெள்ளியன்று ஸ்ரீ வரலட்சுமி நோன்பு விழா சிறப்பு வாழ்த்துக்கள் ....
எதிர் வரும் ஓணம் தின திருநாள் நல் வாழ்த்துக்கள் ...
மக்கள் மீளவும் வாழவும் மத்யமர்கள் ஒருங்கே இணைந்து நெஞ்சுருகி நம்பிக்கையோடு பிரார்த்திப்போம்

No comments:

Post a Comment