Saturday 8 September 2018

மரஞ்செடிகொடிகள்

எனக்கு மரஞ்செடிகொடிகள் மிகப்பிடிக்கும் .
**********************************************************
எங்கள் கிராமத்து வீட்டின் பின்னால் சுமார் மூன்று கிரவுண்ட் இடத்தில் ஏராளம் தாவரங்கள் இருக்கு.
துளசி , தூதுளை, முருங்கை ,அகத்தி, நெல்லி , தேக்கு , குமிழ் வெண் தேக்கு , வேம்பு, பூவரசு , கொய்யா ,மா, சப்போட்டா , அத்தி , மாதுளை ...இன்னும் பல ....
என் பிள்ளைகள் நால்வருக்குமே .... (மகன் +மூன்று
மகள்கள் )..... அங்கு தான் நெல் , மக்காச் சோளம் கரும்பு , தென்னை , வாழை , தக்காளி , மிளகாய் , வேர்க்கடலை , மற்றும் ஏராளமான பலரக காய்கனிகள்,கிழங்கு வகைகள் உண்டாக்கி அவர்களை அவற்றை அதிசயமாக பார்த்து....பறித்து தின்று ... அனுபவிக்க செய்தோம்.
போர் கிணறு தண்ணீர் உப்பு / சவக்களிப்பு ருசிதான் ... ஆனாலும் கடவுள் அருளால் வற்றாது. என் மனையாளும் நல்ல உழைப்பாளி. பிள்ளைகளும் கொஞ்சம் உதவுவார்கள்.
உலகின் சில நாடுகளில் கட்டாய ராணுவ பயிற்சி போல கட்டாய விவசாய பயிற்சியும் கொடுத்தால் எத்தனை நல்லதாக இருக்கும்.
மண்ணில் வேர்வை சிந்தி உழைப்பது எத்தனை அருமையானஉயர்ந்த அனுபவம்.
என் கணினி சேவை நிலையம் மூடிய பின்னர் அக்டோபர் முதல் முழு நேரமும் வீட்டுத் தோட்டத்தில் செலவழிக்க முடியும் என்றால் அதுவே நல்ல சிறந்த முடிவாக இருக்கும். எல்லாம் அவன் செயல். பார்க்கலாம் ....
படத்தில் காணும் மரம் எனக்கு மிகப் பிடிக்கும். எங்கள் ஊர்ப்பக்கம் இதே வடிவத்தில் சில மரங்கள் உண்டு. இந்த வடிவத்தில் எனக்கு ஒரு மோகம் உண்டு.

No comments:

Post a Comment