கையளவு இரத்த மண் :-
*******************************
(மனோ / இதய பலவீனம் கொண்டோர் தவிர்க்க எச்சரிக்கிறேன் - விளைவுக்கு பொறுப்பு துறப்பும் )
+++++++++++++++++++++++++++++++++++++++++++
ஒரு கோடைக்கால பங்குனி மாசத்து அமாவாசை இருட்டு ....

பேய் - பிசாசுகள் - பைசாசங்கள் - முனிகள் / கினிகள்.....இன்னபிற உலா வரும் கண் மயங்கும் கும்மிருட்டு நேரம் ....
காட்டில் மரங்களும் புதர்களும் ஏதோ மாய அரக்கர்கள் ...குட்டி பிசாசுகள் யம கிங்கரர்கள் ...தோற்றத்தில்...........
“கிர்ரக்” “கிரக்” “கிர்ராக்” ...ஊயன்க் ....கொயன்க்...சொயன்க்க்...டர்ர்ர்ர்ர்ர்ர்...கிராக்க்க் ...என்ற பல வித வினோத ஒலி பரப்பு சிறப்பு நேரம் ...நள்ளிரவு ..12 - ஐ நெருங்கும் பொதுவான ஒருவித அமானுஷ்ய வேளை .....
அந்தக் காட்டையே ஊடறுத்துக்கிடந்த இருட்டிலும் பழகிய கண்களுக்கு ‘பளிச்’ சென தெரியும் ஒற்றையடி பாதையில் .....
ஹக்....அது என்ன ....ஒரு போய்க்கொண்டிருந்த கரிய உருவம் சட்டென நின்றது...காதால் எதையோ உற்றுக்கேட்பது போல் ஒரு பாவனை ....’ சட்’ டென நிசப்தம் கலைக்கும் அச்சில் கொண்டு வர முடியாத அவலமான ஒரு ஊளை... உறுமல் !!!!! ..’தடால்’ என ஏதோ பலமாய் விழும் சத்தம்...
காய்ந்த பனையோலை ஒன்று சரேலென ஓசை எழுப்பி தரையில் மோதி விழுந்தது ....
சற்று தயங்கிய கரிய உருவம் நடையை மெதுவாக்கி .... தொடர்ந்தது...சட்டென மீண்டும் நின்றது...எதிரே கன்னங்கரேலென இருட்டு பூசிய .... கனத்த பருத்த பெரிய உருவம் ...
சற்று தயங்கிய கரிய உருவம் நடையை மெதுவாக்கி .... தொடர்ந்தது...சட்டென மீண்டும் நின்றது...எதிரே கன்னங்கரேலென இருட்டு பூசிய .... கனத்த பருத்த பெரிய உருவம் ...
கரிய உருவம் சட்டென பின் வாங்கி பெரிது பெரிதாக அவசர மூச்சு விட்டது
“ம்மாஹ்” எனும் ‘ஹூம்’ காரம் ...குலை நடுங்க வைக்கும் அலறல் சத்தம் ....இப்போது காட்சி இருட்டில் பழகிய கண்களுக்கு கொஞ்சம் தெளிவானது....
“ம்மாஹ்” எனும் ‘ஹூம்’ காரம் ...குலை நடுங்க வைக்கும் அலறல் சத்தம் ....இப்போது காட்சி இருட்டில் பழகிய கண்களுக்கு கொஞ்சம் தெளிவானது....
மேய்ச்சல் முடித்து வழி தப்பிய ஒரு பெரிய கரிய ..... எருமை மாடு ....ஆசுவாசம் பெற்ற உருவம் குனிந்து ஒரு கல் எடுத்து எறிந்து மாட்டை விரட்டித் திரும்பியது ...
சட் .....இதயம் எகிறியது ......அட்ரீனலின் சுரந்து ...ஒரு மாதிரியான கசமுசாவெனும் .... அவஸ்தை ........திரும்பினால் !!!!!!!!!!!
அருகில் இருந்த குத்துச் செடி புதருக்குள் .... இரண்டு தீக்கங்குகள் நெருப்பு பிழம்பென வெட்டி மின்னின !!!!!!...ஏதோ ஒரு மிருகம்....அதன் கண்கள் ....எனப் புரிய சில கணங்கள் ஆன ....
அருகில் இருந்த குத்துச் செடி புதருக்குள் .... இரண்டு தீக்கங்குகள் நெருப்பு பிழம்பென வெட்டி மின்னின !!!!!!...ஏதோ ஒரு மிருகம்....அதன் கண்கள் ....எனப் புரிய சில கணங்கள் ஆன ....
அந்த இடைவெளியில் ...”பட பட” .... வேர்த்துக்கொட்டியது........இதயமோ ‘தடக் தடக்’ என ரயில் எஞ்சின் அலறலோடு துடித்து பயம் காட்டியது....
நடையின் வேகம் அதிகமானது....திடீரென கதிகலங்க வைக்கும் விசித்திர !!!!!! காற்றொலி ...’ ஊ ஊ உய்’ என இரத்தம் உறைந்து விடும் போலான..... அதி வேக இரைச்சல்....கதிகலங்கும் அனுபவம் ....
.......தொலைவில் அந்த நாட்டு உடை மரம் இருந்தது ... இரவின் அந்தகாரத்தில் ஒரு மிகப் பெரிய குடையை மாய அரக்கன் ஒருவன் பூமியின் உள் புதைந்து நின்று கொண்டு .....கீழே இருந்து பிடித்துக்கொண்ட மாதிரி...வினோத மாயத் .தோற்றம் .......................
கரிய உருவம்..... கால்கள் பின்னி தடுமாறினாலும் அடி மேல் அடி வைத்து முன்னேறியது...திடீரென அதன் கால்களுக்கிடையே ஏதோ ஜந்து ..... நுழைந்து வழுக்கி .... புகுந்து ஓடியது ... தடுமாறி நிலை குலைந்த உருவம் தன்னையறியாமல் எழுத்தில் கொண்டு வர இயலா ஒரு வித கோழைச் சத்தம் எழுப்பி குழறியது....
சுதாரித்து எழுந்து மீண்டும் மரத்தை நோக்கி சென்றது .....பளீரென மின்னிய மின்னல் வெளிச்சத்தில் காடு ஒருமாதிரியான பொம்மலாட்டம் காட்டியது ......
திகில் ஊட்டியது ...அதி பயங்கரம் ...மொத்த உடம்பும் குலுங்கி அதிர்ந்தது ....அந்தக்கணத்தில் ஒரு பெரிய இடிச் சத்தம்...பூமியே குலுங்கி ...மரங்கள் பேயாட்டம் ஆடின....
கரிய உருவம் பலம் எல்லாம் கூட்டி மரத்தடி நோக்கி ஓடியது ...ஒரு குறிப்பிட்ட இடம் ....மண்டியிட்டு குனிந்து வலக்கை நீட்டி தரை மண்ணை கூட்டி ஒரு கைப்பிடி மண்ணை அள்ளிய கணத்தில்
...மயிர்க்கூச்செறியும் நூதன அனுபவம்...
ரோமக்கால்கள் விலுக்கென எழுந்து உயர்ந்து குத்திட்டன !!!!! மூச்சு பெரிது பெரிதாய் !!!!!!!! நெஞ்சுக்கூடு தெறித்து விழும் அவஸ்தை ......
“விலுக்”என எழுந்த உருவம் ஓட்டமாய் ஓடி தான் வந்த ஒற்றையடிப்பாதையில் உருண்டு விழுந்தடித்து மீண்டும் ஓடி விழுந்து ...விழுந்து ஓடி....
“விலுக்”என எழுந்த உருவம் ஓட்டமாய் ஓடி தான் வந்த ஒற்றையடிப்பாதையில் உருண்டு விழுந்தடித்து மீண்டும் ஓடி விழுந்து ...விழுந்து ஓடி....
அதோ ஒரு முக்கால் வட்ட வளைவு அதை தாண்டி விட்டால் ஊர் எல்லை ....முக்கால் வட்டம் நெருங்கும் சமயம் மீண்டும் ஒரு மின்னல் ...வெட்டிய வெளிச்சத்தில் வலப்புறம் புதரில்............ ஏதோ புகுந்தது போன்ற அசைவு ...நாய்களின் குரைப்பு ....நிசப்தம் கிழித்து நெஞ்சு கூட்டில் வாத்தியம் லயம் தப்பி அபஸ்வரமாய் .....தாறுமாறாய் .....முழங்கிற்று..... நெஞ்சுக் கூட்டில் ஒரே நேரத்தில் பல பறவைகளை அடைத்து உண்டான திகிலான சப்தங்கள் .......
சட்டென தோன்றியது ....ஒரு பெரிய தீப ஒளி!!!!!!!! முகத்தைக் கருக்கும் அதிக வெப்பம்...கரிய உருவம் தொப்பென குப்புற தரையில் விழுந்து சத்தமாய் பிதற்றியது....
அது சுருண்டு விழும் முன்னர் யாரோ இருவர் தன்னை தாங்கிப் பிடிக்கும் அசைவை உணர முடிந்தது....அதோடு ஒரு அந்தகார இருளுக்குக்குள் அது ஆட்களால் சுமந்து கொண்டு போகப்பட்டது....
-------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment