புரட்டாசி மாசம் = வெங்கடாசலபதி ஸ்ரீமகள்
======================================== தமிழ் மாதங்களில் புரட்டாசி எனக்குப் பிடிக்கும். சனிக்கிழமைகள் இன்னும் அதிகமாய் பிடிக்கும். அது பகவான் விஷ்ணு சம்பந்தம் உள்ளது என தெரியாத அறியாப்பருவத்தில் இருந்தே புரட்டாசி ஒரு obsession. ஒரு காரணம் பள்ளிப் பருவத்தில் காலாண்டு விடுமுறை காலம். கொண்டாட்டங்களின் ஆரம்பம் புரட்டாசி தானே ...... ....பம்பரம் , கோலிகுண்டு ஆட்டம் அதகளப்படும்...சனிக்கிழமைகள் என்றாலே விளையாட்டுக்களில் ஒரு வேகம் இருந்த பொற்காலம் ... மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஆச்சே ...அது என்னமோ சனிக்கிழமை மாலைகள் ஒரு இன்பத்தின் உச்சம் ஆக இருக்கும் ...கள்ளன் போலீஸ் ஆட்டம் ...அனுமன் நதிக்கரையில் நிலாவொளியில் கபடி / சடுகுடு / பாண்டி ...மற்றும் பல ...அப்போ எல்லாம் ஒரே ஆற்றுமணல் வெளி ...இந்த சீமைக்கருவேல மரமே இல்லையே ..என்ன ஒரு பரந்த திறந்த வெளி ...அழகுன்னா அது ..ம் ...ஹூம் !!!!இப்போ பெருமூச்சு தான் விட முடியுது ... புரட்டாசி மகாளய அமாவாசை என் முன்னோர்களின் சமாதிக்கு போய் வணங்குவது இன்றும் எனக்கு மிக மிகப் பிடித்த சமாச்சாரம். தொடர்ந்து ஒன்பது நாட்கள் நவராத்திரி , ஐப்பசி மாத சதுர்த்தசி - தீபாவளி , கார்த்திகை மாசம் திருக்கார்த்திகை , மார்கழி ஸ்ரீ ஹனுமன் ஜெயந்தி , மார்கழி மாச அதிகாலை ஸ்பெஷல் கொண்டாட்டங்கள்.....(மாதங்களில் நான் மார்கழி -கிருஷ்ணன் பகவத்கீதை) இன்னொரு விஷேசம் ...பன்னீர் பூக்கள் பூக்கும் பரவச காலம் ...இதுபற்றி நிறைய என் முகநூலில் எழுதி உள்ளேன். அதிகாலையில் மரத்தடியில் போய் நின்று பன்னீர் பூக்களின் வாசனைப் போர்வைக்குள் புகுந்து அனுபவிக்கும் ஆனந்த உணர்வில் ...அந்த சுகமோ !!!! .....அதை என்னால் விவரிக்கவும் இயலாது .... அது ஒரு இந்திரலோக சுந்தர அனுபவம் ...அனுபவித்து பாருங்கள் .... ..... ( என் குடும்ப இந்து உறவினர்கள் / நண்பர்களோடு கோயிலுக்கு போய் {{{என்னோட அப்பா இந்து தானுங்கோ-அம்மா கத்தோலிக்கர் }}}பாவை நோன்பு கொண்டாடும் பெண்களை கடைக்கண் பார்வையிட்டு சேர்ந்து கொண்டாடி , கிடைக்கும் சூடான சித்திரானங்களை ஒரு கை பார்த்து - சுண்டல் ,வெண்பொங்கல் , சர்க்கரைப்பொங்கல்....ஆஹான்ன்னானாம். சென்னையில் லயோலா கல்லூரி காலம் ஏராளம் தெலுங்கு நட்புக்கள் ...அப்போ தான் புரட்டாசிக்கும் ஸ்ரீபாலாஜிக்கும் உள்ள கனெக்ஷன் பற்றி எனக்குத் தெரியும் ... இப்போ இன்னும் வெரி வெரி ஸ்பெஷல் என் சீமந்த புத்திரன் பிறந்ததும் 1991 மகாளய அமாவாசை நாள் ...அன்று ...அக்டோபர் 8...செவ்வாய்க்கிழமை ..... இந்த ஆண்டும் 2018 அக்டோபர் 8 மகாளய அமாவாசை நாள் தான் ...காண்க படம் இந்த 2018 மகாளய அமாவாசை நாளுக்குப் பின்னர் ஏதோ பிரமாத யோகம் என பட்சி சொல்லுதுங்கோ ...நம்புறேன் ...யோகமே இனிதான் ...வாழ்க்கை ஓடம் செல்ல நல்ல பாதை வழி ஒளி ....கிடைக்கும் !!!!பாருங்கோன்னா ..... எதிர்பார்த்த எல்லாமும் / நல்லதே நடக்கும் ...எல்லா இடங்களிலும் ....கையிட்டு செய்யும் அத்தனை பணிகளும் ஜெயிக்கும் .... நெஞ்சுக்கினிய நெருங்கிய உறவுகள் - நம் மத்யமர்கள் நட்பே ஒரு அட்வான்ஸ் வரம் ...சோம ரசம் குடித்து பரவசத்தில் ஆழ்ந்த புளகாங்கித உணர்வு ... மத்யமர்களே நீவிர் எல்லோருமே வாழி நீடூழி !!!! புரட்டாசி மாத புண்யா பலன்கள் மத்யமர் அனைவருக்குமே ஏராளமாய்க் கிடைத்து எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுகிறேன் ... |
Tuesday, 11 September 2018
புரட்டாசி மாசம் = வெங்கடாசலபதி ஸ்ரீமகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment