Saturday 8 September 2018

அல்ட்ராசிட்டி

அரசு அலுவலக அல்ட்ராசிட்டி அனுபவங்கள்
=========================================
எச்சரிக்கை : இது ஒண்ணும் சுவாரஸ்யம்
மிகுந்த பதிவல்ல ...அது அடுத்த பதிவில்
**************************************************************
சென்னையில் ஒரு ஆடிட்டராக பணி புரிந்த 1993-96 கால கட்டத்தில் Sales / Income Tax அலுவலகங்களுக்கு எங்கள் கிளையன்ட்கள் சார்பில் அடிக்கடி போய் பல தகிடு தத்தங்கள் செய்யும் தவிர்க்க முடியாத பணிகள் ஏராளம் உண்டு.....
அதிலும் Returns file செய்யும் தருணங்கள் மற்றும் IT(IncomeTax) கமிஷனர்கள் விசாரிக்கும் கேஸ்கள் எனில் அனல் பறக்கும் அனுபவங்களே ....
எங்களோட ஆடிட்டர் வைத்தீஸ்வரன் அனந்த சுப்பிரமணி அய்யர் {{{V.A.S.MANI&CO }}}(....இவர் இயற்கை எய்தி சில ஆண்டுகள் ஆயிற்று....)
திருநெல்வேலிக்காரர். நானும் நெல்லைசீமை என்பதாலும் மிருகசீர்ஷ நட்சத்திரதில் பிறந்த அஞ்சா நெஞ்சன் (இப்போதெல்லாம் ....மணமான பின்னர் அஞ்சும் நெஞ்சன்) என்பதாலும் என்னை ரொம்பவே அவருக்குப் பிடிக்கும்.
{{{இன்னொன்று என்னோட பங்க்ச்சுவாலிட்டி...ஆபீசில் சேர்ந்த ரெண்டே வாரத்தில் மெய்ன் கதவு சாவியை லேடி செக்ரெட்டரியிடம் பறித்து என்னிடம் தந்தார். பின்னே பத்து மணி ஆபீஸ்க்கு ஒன்பதரைக்கே போறவனாச்சே...காரணம் கொட்டிவாக்கம் டு தேனாம்பேட்டை வர பீக் அவரில் படும்பாடு ...அம்மம்மா !!!!அது ஒரு மகா அவஸ்தை ...}}}
ஒரு கேஸ் தோற்றுப்போகும் அளவு 'Weak' என்றாலும் அவர் சொல்வார் ''பெனடிக்ட் இந்த கேஸ் நாம கிளையன்ட் சார்பா டீல் பண்றோம் ..முடிவு அதை தீர்மானிக்கும் நபர் / IT கமிஷனர் / அல்லது யாரோ XYZன் கையில் ...இடையில் எவ்வளவோ நடக்கலாம்'' ம்பார்.
நடக்கும் .....வியப்பாக சில அட்டகாசமாய் ஜெயிக்கும். எப்படின்னு எல்லாம் தொழில் தர்ம ரகசியத்தை கேக்கப்படாது ....ஓகே
சரி ..கமிங் பேக் டு பாய்ன்ட்...
1993ல் சென்னை அவ்வைசண்முகம் சாலையில் ஒரு கம்பெனி. மூன்று பார்ட்னர்கள். குப்புசாமி, ஹலாஷியநாதன் , நாகோஜி ராவ் ன்னு வைச்சுக்குங்கோளேன்...
திருவாளர் குப்புசாமி ஒரு சார்ட்டட் அக்கவுண்டன்ட் (பட்டயக் கணக்கர் ) திடீரென இறந்த போனதால் அவர் பொறுப்பில் இருந்த
கம்பெனி கணக்கு வழக்குகளில் சிறிது தேக்கம் ....தடுமாற்றம் இருந்தது ...
{{{இங்கு ஒரு கொசுறு தகவல் ..அவரது கையெழுத்து பிரிண்ட் பண்ணிய நேர்த்தியில் அச்சாய் ஒரு அடித்தல் திருத்தல் இல்லாமல் ...என் வாழ்க்கையில் அப்படி ஒரு கை எழுத்து இன்றுவரை பார்க்கவில்லை ..அம்மாடியோவ் ...ஆண்டவன் படைப்பில் ஒரு அதிசயமே !!!!! }}}
ஆறு மாத காலம் Sales Tax பாரம் கொடுக்காமல் ஆண்டிறுதியில் பிரச்னை . நான் அந்த ஆண்டு ஆடிட் இன் சார்ஜ் ...ஆக அங்கு ஆஜார் ஆனேன் ...
அது ஒரு எலெக்ட்ரிகல் panel boards / switchgear etc., பண்ணும் கம்பெனி ...தொழிற்சாலை எண்ணூரில் ...ஆபீஸ் லாயிட்ஸ் / அவ்வைசண்முகம் சாலை ...ஓகே
Sales Tax அலுவலகம் போனேன் ...விவகாரம் பற்றி சொன்னேன் .LDC (Lower Division Clerk) UDC ஐ பார்க்கச் சொல்லி போனேன்.
அவர் ஒரு பெண்மணி...ஆனால் யமகிங்கரி..... ( யமகிங்கரன் - பெண்பால் ) ஆறு மாதமா ?...ஒரு ஆறாயிரம் கொடுங்க ன்னார் ...
என்னம்மா அநியாயம்ன்னேன் ...என்ன சார் கிளையன்ட் கொடுக்கப்போறார் ..உங்களுக்கு ஒரு பத்து பெர்சென்ட் லவட்டிட்டு மிச்சத்தை எனக்கு கொடுங்க ...இங்கேயும் அத ஷேர் பண்ணும்போது எனக்கு ஒரு ரெண்டாயிரம் மட்டும்
தானே கிடைக்கும்ன்னாரே பார்க்கலாம்.....
அப்புறம் கான்டீன் அழைத்துப்போய் பேசினார். நான் என் குவைத் ஆடிட் அனுபவ கதைகளை கொஞ்சம் சென்சார் பண்ணி ஒருவிதமாக அரிச்சந்திரன்
பில்டப் பாணியில் மகா யோக்கியமாய் சொன்னேன். அவர் பொறுமையா கேட்டார். அப்புறம் சொன்னார் .
சார் எங்க அப்பா போய்ட்டார். ஒரு தங்கை தம்பி பள்ளியில் ...அண்ணா நகரில் வீட்டு மனை மட்டும்தான் இருக்கு ....நான்தான் பொறுப்பா சம்பாதித்து ஒரு வீடு கட்டணும்......மன உளைச்சல் ..அப்பப்போ கொஞ்சம் பானம் சாப்பிடும் வழக்கம் ...இன்னும் இன்னும் ...அதெல்லாம் வேணாமே ...ப்ளீஸ்
கேட்டு மனம் கலங்கி கண்ணீர் விடாத குறையாக கனத்துப்போன நெஞ்சுடன் வந்தேன் ...
சொன்னபடியே கிளையன்ட் கிட்டே ஆறாயிரம் வாங்கி என் பத்து பெர்சென்ட் பணத்தை கொஞ்சமும் லவட்டாமல் சுளையாக மொத்தமும் கொடுத்தேன் ..ஆச்சர்யமாய் பார்த்து ஆனால் தயங்காமல் வாங்கிக்கொண்டார் ...
அப்புறம் அடிக்கடி அவரை வேறு வேலையாகப் போகையில் சந்திப்பேன் ...பேசியதில்லை ..ஒரு விசாரிப்பு / புன்சிரிப்போடு போயிருவேன் ...
ஏன்னா பார்ட்டி வில்லங்கம்ன்னு நல்லாவே ....தெரியுமே ....நோ ரவுசு ...
நான் ஒரு வணிகவியல் பட்டதாரியே B.Com...LOYOLA College - Chennai 1979-82 ....Gold Medalist ( மூன்று தியரி பேப்பர்களில் சென்டம் வாங்கிய சூரன் .....பட்டயக் கணக்கர் அல்ல.... ஆனால் அப்பா குவைத்தில் இருந்த புண்ணியத்தில் அங்கு சுலபமாய் போய் .... ஏழாண்டு காலம் (1984-90) அமெரிக்கன் பப்ளிக் அக்கௌன்டன்ட் கம்பெனியில் ஆடிட்டர் பணி. அங்கு இந்த tax ஒண்ணுமே கிடையாது. நான் ஒன்றும் மிக திறமையான ஆடிட்டர் அல்ல. ஆனால் ரிப்போர்ட் எழுதுவதில் புலி ...மொழித்திறன் /ஆளுமை என் பலம் ...டாக்குமென்ட் பண்ணும் சூரன் ...இன்னொன்று கிளையன்ட் ஆதரவாக செயல்படுவேன் ...தப்புக்களைத் திருத்தி செம்மையாக்கிக் கொடுத்து அவர்களின் பிரியத்தை சம்பாதித்த நல்லவன்...அவங்க லஞ்சம் தருவதில்லை ...ஆனாக்கா லஞ்ச்/டின்னர் தருவாங்க ...அதுவும் பிட்ஸா,பர்கர் ,கபாப் ,க்ரில்ட் சிக்கென் ...கேக்ஸ் , ப்ரூட்ஸ் ...என்னென்னமோ கிடைக்கும் ...எண்ணெய் நிறுவனங்கள் போனால் ...குவைத்தில் கேட்கவே வேணாம் ..ராஜ போக அறுசுவை உணவு நூறு வகைகள் ...
ஆனால் எங்கள் அலுவலகத்திலேயே ரெண்டு மெகா Fraud கண்டு பிடித்து பிரமோஷனும் ரெட்டை இன்க்ரிமென்ட்டும் வாங்கிய ஒரே நபர் இந்த வணிகவியல் இளங்கலை மட்டுமே ...சார்ட்டட் அக்கவுண்டன்ட் எல்லோரும்
பொறாமையால் பொசுங்கிப் போய் ....அது இன்னொரு பதிவா போடுறேன் ...ப்ளீஸ்
ஒன்று லீ மெரிடியன் பைவ் ஸ்டார் ஹோட்டல் ஃபிராட் ...மற்றது ஓரியண்டல் இன்டர்நேஷனல் கம்பெனி ...இவற்றை தனிப்பதிவாக அப்புறம் ...போடுவேன்
Auditor is only a Watch Dog NOT Blood Hound என்பதை கல்லூரியிலேயே நன்றாக புரிந்து அதை மிகத் தீவிரமாய் கடைபிடித்த பிழைக்கத் தெரியாத ஒருவன் ...இன்றும் அதனாலேயே இந்தியாவில் ஆடிட் பணி செய்ய லாயக்கில்லாத நபர் நானுங்கோ ....
குவைத்தில் ஆடிட் பணி ரொம்பவே சுளுவு.
ஆனால் சென்னையில் அனுபவங்கள் கொடுமை ...
இது ரொம்ப சுவையான மத்யமர்களின் எதிர்பார்ப்பு
படி உள்ள நல்ல பதிவல்ல ...ஆனால் உண்மையான நிகழ்வு ...
அடுத்து மிக ருசிகரமான ஒன்றை அடுத்த பதிவில் சொல்றேனுங்க ...ஓகே..சுவாரஸ்யம் நூறு பெர்சென்ட் கியாரன்டி...நம்புங்க !!!!ப்ளீஸ்

No comments:

Post a Comment