Tuesday 11 September 2018

உத்வேகம்

உத்வேகம் தரும் ஒரு வாசகம் :-
==============================
1988 ம் ஆண்டு ...

KIH ( Kuwait International Hotel ) .....எங்கள் குவைத் ஆடிட்டிங் ஆபீஸ் க்ளையன்ட் ...

ஒரு நாள் வரவேற்பறையில் புகுந்து அக்கவுண்ட்ஸ் பகுதிக்கு விரையும் வேளையில் .....'ணங்' கென...ஒரு முழங்கை என்தலையில் இடிக்க யாரது என அண்ணாந்து பார்த்தால் கூடைப் பந்து விளையாட்டு வீரர் ....மென் முறுவலோடு ஸாரி கேட்டு சென்று விட்டார். நான் நினைத்தேன் என்னா உயரம்டா ...அம்மாடி ன்னு ...அவ்வளவுதான் அப்போதைக்கு ...

காண்க படம்

அவர் தான் ----மைக்கேல் ஜோர்டான் - அப்போது எனக்கு அவரை சரியாய் தெரியாது . அக்கவுண்ட்ஸ் போய் என் பணியில் மூழ்கினேன் ...

மதியம் மானேஜ்மென்ட் கேப்டெரியா போய் உணவருந்தும் வேளை. ஒரு அக்கவுண்ட்ஸ் கிளார்க் சொன்னார் மைக்கேல் ஜோர்டான் அங்கு உணவு அருந்துகிறார் என்று ...

அப்போதுதான் உள்ளே நுழைந்து பார்த்தேன் ...சில அமெரிக்க விளையாட்டு வீரர்கள் உணவு அருந்திகொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு அடுத்து மேஜையில் KIH ஹோட்டலில் பணிபுரியும் பணியாளர் கம் என் நண்பர்கள் / தோழிகளோடு நானும் அமர்ந்தேன். செவி முழுவதுமே கூடைப்பந்து வீரர்களின் அமெரிக்க ஆங்கில உரையாடலில் ...

ஏராளம் அமெரிக்க எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்தவன் என்பதால் அந்த பேச்சு எளிதில் புரிந்தது ...சிரமம் இல்லை ...அருமையாகவே பேசினார்கள் ...

மிக பண்பான / நாகரீக ஹாஸ்ய சுவையுடன் நல்ல உரையாடல் ...

என்னுடன் உணவருந்திய பணிப்பெண் / தோழி ஒருவர் சொன்னார் ...exhibition match ஆட வந்த அமெரிக்க கூடைப்பந்து வீரர்கள் குழு அங்கு தங்கி இருக்கும் விபரம்...

சாப்பிட்டு முடித்து அவர்களிடம் சென்று சுய அறிமுகம் செய்து கொஞ்சம் உரையாடினேன் ...

இந்த மேற்கோள் வாசகம் தரும் உத்வேகம் எனக்குப்பிடிக்கும் ...

மத்யமர்களே உங்களுக்கு ?!!!!

No comments:

Post a Comment