Saturday 8 September 2018

DMU

MADHYAMAR &
Diminishing Marginal Utility
===============================
''Diminishing Marginal Utility'' பலருக்கும் தெரிந்திருக்கலாம். பொருளாதாரம் (Economics) படித்தவர்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்கும்.
தமிழில் அருமையான பழமொழி ஒன்று உண்டு .
''மோகம் முப்பதுநாள் . ஆசை அறுபது நாள்.''
2018 ஜூன் 18ல் தங்கை திருமதி லதா போஸ்கோ என்னை மத்யமரில் இணைத்து விட்டார்.
-------------------------------------------------------------------------------
ஏராளம் குழுக்கள் உண்டு எனினும் மனது தேர்வு செய்த (மூளை அல்ல) சில குழுக்களில் மட்டுமே இணைந்திருக்கும் எனக்கு இன்றைய தேதியில் நம் ''மத்யமரே'' நம்பர் 1
--------------------------------------------------------------------------------
எனக்கு முகநூல் தவிர வேறு LinkedInல் மட்டுமே ஈடுபாடும் தொடர்பும் உண்டு. வேறு சமூக /ஊடக தளங்கள் நாட்டமே கிடையாது .
--------------------------------------------------------------------------------
மத்யமரில் ஏராளம் பதிவர்களின் எக்கச்சக்கம் பதிவுகளை இந்த 60நாட்களும் நாள்தோறும் (ஏறத்தாழ 90% ) படித்து பின்னூட்டம் இட்டு ஒரு முழுச் சுற்று வந்த இந்த மிகச் சரியான 60 நாட்களில் மத்யமர் கொஞ்சம் சலித்துப்போனது நிஜம்.
இந்த 60நாட்களில் பன்முகத்தன்மையோடு தினமும் ஒரு பதிவை இட்டு எதை எழுதினால் ஏராளம் லைக்ஸ் / கமெண்ட்ஸ் கிடைக்கும் எனும் '' பார்முலா '' வும் மூளைக்கு புரிந்து ஆனால் மனம் உன் விருப்பம் போலவே எழுத்து இருக்கட்டும் என அறிவுரை கூறி மனம் சொல்வதையே பின்பற்றும் கொள்கைவாதி ஆகையால் அப்படியே செய்கிறேன் .
சில பதிவுகளில் 'autobiography' போல சுய அளப்புக்கள் உண்டு. அது நட்புக்களுக்கு ஒரு அறிமுகம் போல எண்ணிப் பதிவு ஆகப் போட்டவையே. தவிர வேறொன்றுமில்லை .
---------------------------------------------------------------------------------
இன்றைய தேதியில் இந்த நேரத்தில் மத்யமரின் உறுப்பினர்கள் 18778. ஆனால் இவர்களில் ஒரு 10% கூட ''active'' ஆக இல்லை என்பது ஒரு குறை எனினும் அதுவே முழு உண்மை.
வழக்கமாக எழுதும் குறிப்பிட்ட நபர்களின் எழுத்தில் வாசிக்க வாசிக்க படிப்படியாக சுவாரஸ்யம் குறைவதும் இயற்கையே .....
ஆனால் பல நல்ல எழுத்துக்கள் மற்றும் ஏற்கனவே அறிந்த படித்த கேட்ட செய்திகளை வேறு கோணத்தில் மத்யமரில் வாசிப்பதும் ஒருவகை சுகமே.
அட்மின்களின் குழாம் குறிப்பாக தலைவர் திரு.ஷங்கர் ராஜரத்தினம் அவர்களின் தலைப்புக்கள் நம் எழுத்துத் திறன் (எழுதுகோல்?)மேம்படஉதவும் ஒரு மிக அருமையானதூண்டுகோல்.
அவரின் படிப்பும் திறமையும் அனுபவமும் ஒன்று சேர்ந்து 'பளிச்'சிடும் கருத்துக் கோர்வைகள் பல எனக்கு மிகப் பிடித்தமானவை. தவறாமல் பின்னூட்டம் இட்டு சிலாகிப்பது வழமையான ஒன்று ....
சில நட்புக்களின் எழுத்தில் சில தகவல்களை மத்யமரில் படிக்கும்போது அவற்றை புத்தம் புதிய பரிணாமத்தில் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் மிக அருமையே.
மிகப்பிடித்த அம்சங்களில் அதுவும் ஒன்று.
நபர்களை குறிப்பிட்டு சொல்ல இப்போதைக்கு விரும்பவில்லை. அது டிசம்பரில் ஒரு ஆறுமாதங்கள் ஆன பின் ஒரு முழு விமர்சனம் எழுதி பகுப்பாய்வு பதிவாகப் போடலாம். மிக நீளமாக இருந்தால் அட்மின் அனுமதியோடு சில பாகங்களாக போடுவேன். அது ஆண்டவன் செயல்.
இப்போதைக்கு நிறைவு செய்கிறேன்.

No comments:

Post a Comment