Wednesday 19 September 2018

உறங்காமல் ஓர் இரவில்

1978 ஜூன் மாதத் தொடக்கத்தில் ஓர் நாள். நண்பன் ஜோசப் இளங்கோ தூய சூசையப்பர் கல்லூரியில் P.U.C. எனும் புகுமுக வகுப்பில் அட்மிஷன் வாங்கிய செய்தியை மகிழ்வோடு பகிர்ந்துகொண்டான். அன்றைய தினத்தில் எனக்கும் மகிழ்ச்சி ...
எட்டாம் வகுப்பு முதல் எனது நெருக்கமான வகுப்புத்தோழன்.பத்தாம் மற்றும் பதினொன்றாம் வகுப்பில் மிகுந்த நெருக்கம் நேசம் ...
அடித்த லூட்டி கொஞ்சம் அல்ல ...தனிப்பதிவுகளாய் எழுதலாம் ...எழுதுவேன் !!!!
இரவுகளில் இரண்டாம் காட்சி சினிமாக்களுக்கு போவதும் நல்ல ஓட்டல்களில் சிற்றுண்டி வகைகள் அருந்தி மகிழ்வதும் வழமை ஆக இருந்த பொற்காலம்.
ஆனால் இரவில் ஒன்பது மணிக்கு வழக்கம் போல படுத்தாலும் நித்ரா தேவி அணைக்காமல் விலகி விலகி ....பனைநார் கட்டிலில் புரண்டு புரண்டு படுத்தேன்....
இரவில் சுமார் பனிரெண்டு மணி அளவில் குப்புறப்படுத்து தூங்கும் வழக்கம் கொண்ட எனது முதுகில் ஒரு கை ஆதரவாய் நீவி விட்டது. வேறே யார் ?
அம்மா ...அன்புள்ள அம்மா தான் ...
என்னப்பா தூக்கம் வரலியா ?..எழுந்து அம்மாவின் மடியில் தலை வைத்தேன் ...'குபுக்'கென சூடான கண்ணீர் கட்டுப்படுத்த இயலாமல் வழிந்தோடி அம்மாவின் புடவை நனைத்து ...
அம்மா பதறிப்போனார்கள்.
என்னடா ...என்னடா .....
அம்மா ஜோசப் தூய சூசையப்பர் கல்லூரியில் P.U.C. எனும் புகுமுக வகுப்பில் அட்மிஷன் வாங்கிய செய்திதெரியுமா ?...
அம்மா ஆதுரமாக என் தலைகோதி ..அதுக்கென்ன இப்போ நாளைக்கு உனக்கும் கிடைக்கும் ..ஏற்பாடு பண்ணிரலாம் ..இப்போ தூங்குடா ...
ஆனாலும் முழு இரவும் தூங்காமல் கழித்த என் வாழ்விலேயே முதல் தூக்கமிலா இராத்திரி அன்றைக்கு ...தான்
மறுநாள் திருச்சிக்கு உறவினரோடு போய் அட்மிஷன் வாங்கி ...
இந்த " Quotation" படித்ததும் குபுக்கென எனது நினைவுக்குமிழில் மேலே எழும்பிய ஓர் உணர்வு பூர்வமான நெகிழ்வான நிகழ்வை எனது முகநூல் நண்பர்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்வு...
மயில் இறகால் வருடும் இதம் ...அம்மாவின் மடியில் முதலும் கடைசியுமாய் அழுது சூடான கண்ணீர் வழிந்த அந்த மறக்க முடியாத இரவு ஓர் உன்னத அனுபவம் ...
ம் ...இதுவும் வாழ்க்கையே ...!!!!!

No comments:

Post a Comment