Saturday 8 September 2018

அன்பு கனிவு பரிவு = 'உ' என முடியும் இவைகளால் தான் உலகம் இயங்குகிறது.
------------------------------------------------------------------------------
ஓரறிவு முதல் ஆறறிவு வரை இவையுண்டே.
ஐந்தறிவு ஆறறிவு இவைகளுக்கு எளிதில் அதைப் 
புறம் காட்டுதல் இயலும் .
கண்ணீரில் சிரிப்பில் இவை பரிணமிக்கும் .
சிரித்தாலும் அழுதாலும் கண்ணீர் வருமே .
அன்புடைமை என திருக்குறளில் ஒரு அதிகாரமே திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.
எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள் ஆனால் அன்போடு பரிமாறுங்கள்.- இது ஒரு பழமொழி
அன்புக்கு விலை அன்பே தவிர வேறில்லை என்பது ஆங்கிலக் கவி ஜான் கீட்ஸ் கூற்று.
அன்பை வெளிக்காட்டுங்கள் ...அது புரியும் ரசவாதம் மனங்களை பொன்னாக்கும் என கீதாஞ்சலியில் தாகூர் அறிவுரை சொல்கிறார்.
மனிதன் அன்பாக இருக்க எப்படி கற்றுக்கொள்கிறான்?
மனோதத்துவம் படிப்பதனாலா?
காதல் சமாச்சாரங்கள் நிறைந்த படங்களை பார்ப்பதன் மூலமா?
இல்லை, இல்லவே இல்லை .
இவை எதன் மூலமும் இல்லை.
மனிதர்கள் முதலாவதாக அன்பு காண்பிக்க கற்றுக்கொள்வது, அவர்களுடைய பெற்றோரின் முன்மாதிரியிலிருந்தும் அவர்கள் கொடுக்கும் பயிற்சியிலிருந்தும்தான்.
விலங்குகளும் தம் குட்டிகளை அன்புடன் வளர்ப்பதை பார்க்கிறோம்.
அன்பும் பாசமும் பொங்கி வழியும் ஒரு சூழ்நிலையில், பெற்றோர்கள் தங்களை ஊட்டி வளர்ப்பதையும், பேணிப் பாதுகாப்பதையும், பேச்சுத்தொடர்பை வைத்துக்கொள்வதையும், ஆழ்ந்த அக்கறை காண்பிப்பதையும் பார்த்துத்தான் அன்பு என்றால் என்ன என்பதை பிள்ளைகள் கற்றுக்கொள்வார்கள்.
அதுமட்டுமின்றி, பெற்றோர்கள் குடும்பத்திற்காக பொழுதுபோக்கு, ஒழுக்கநெறிகள், இலக்குகள், முன்னுரிமைகள் ஆகிய காரியங்களில் உயர்ந்த தராதரங்களை நிர்ணயித்து அவற்றை கடைப்பிடிக்கும்போதும் அன்பை வளர்க்கிறார்கள்.

No comments:

Post a Comment