Monday 5 February 2018

அடிமை பூதம்

பில்கேட்ஸ் அமெரிக்காவில் ஓர் உயர்தர ஓட்டலில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார். சாப்பிட்டு முடித்தவுடன் பில் தொகையுடன் ஐந்து டாலர்கள் அந்த சர்வருக்கு டிப்ஸ் தந்தார்.
சர்வரின் நெற்றி சுருங்கியது.
""பில் தொகையில் வித்தியாசமா?'' பில்கேட்ஸ் கேட்டார்.
""இல்லை சார்... நேற்று இதே ஓட்டலில் உங்கள் பையன் உணவருந்திவிட்டுச் சென்றார். அவர் அந்த சர்வருக்கு 50 டாலர்கள் டிப்ஸ் தந்தார். நீங்கள் அவருடைய தந்தை. பலகோடி டாலர்களுக்குச் சொந்தக்காரர். ஐந்து டாலர்கள்தான் தருகிறீர்கள். ஆச்சரியமாக இருந்தது''
பில்கேட்ஸ் சிரித்துக் கொண்டே சொன்னார்:
""அவனுடைய தந்தை ஒரு கோடீஸ்வரர். ஆனால் என்னைப் பெற்றவர் ஒரு மரத் தொழிலாளிதான். அதை நான் எப்போதும் மறக்கமாட்டேன். கடந்த காலம் நினைவில் எப்போதும் இருக்க வேண்டும்'' 

==========================================================================
குரு இறக்கும் தருவாயில் இருப்பதை அறிந்த சீடன், அவரைப் பார்க்க அவருடைய இருப்பிடத்துக்குச் செல்லாமல், கடைவீதிக்கு ஓடினான். குருவுக்குப் பிடித்த கொய்யாப் பழத்தை வாங்கிக் கொண்டு வந்து குருவிடம் கொடுத்தான்.
குரு அதைச் சுவைத்து உண்ணத் தொடங்கினார்.
சீடன் கேட்டான்:
""குருவே, எங்களை விட்டுப் போகப் போகிறீர்கள். நாங்கள் எப்போதும் நினைவில் கொள்ள உங்கள் கடைசி அறிவுரை என்ன?''
""இந்தக் கொய்யாப் பழம் ரொம்பவும் சுவையாக இருந்தது'' புன்னகையுடன் சொல்லிவிட்டு குரு இறந்து போனார்.
சாவைத் தடுக்க முடியாது. அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. இந்தக் கணத்தில் என்ன செய்கிறோமோ அதுதான் வாழ்க்கை. அதை மகிழ்ச்சிகரமாக அனுபவி என்று குரு சொன்னதை சீடர்கள் புரிந்து கொண்டனர்.  

====================================================================
அழகான ஒரு பெண்மணிக்கு அலாவுதீனின் அற்புத விளக்குக் கிடைத்தது. அவசரமாக அதைத் தேய்த்தாள்.

பூதம் வெளியே வந்தது.

""நான் உங்கள் அடிமை. உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்''

பெண் கேட்டாள்: ""என் கணவர் என்னைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அவர் அன்றாட வாழ்வில் எனக்கு மட்டும்தான் முக்கியப் பங்கு இருக்க வேண்டும். அவர் எங்கு சென்றாலும் நான் அவருடன் இருக்க வேண்டும். காலையில் கண் விழித்ததும் என்னிடம்தான் அவர் வர வேண்டும்''

பூதம் அந்தப் பெண்ணை செல்போனாக மாற்றியது.

No comments:

Post a Comment