Thursday 1 February 2018

நவக்கிரக ஸ்தலங்கள்

திங்களூர் [சந்திரன்] download (3)
திருவையாருக்கு அருகில் உள்ளது. சிவனை வழிபட்டு பக்தர்களுக்கு நன்மையைத் தரும் வரத்தை இங்கேதான் பெற்றார் சந்திரன்.
ஆலங்குடி [ குரு ] download
இங்குள்ள மூலவர் பெயர் ஆபத் சகாயேஸ்வரர். பிராகார கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி குரு பகவானாக வழிபடப்படுகிறார். பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது வெளியான விஷத்தை அருந்திய சிவபெருமான் உறையும் தலம் இது.
திரு நாகேஸ்வரம் [ ராகு ]download (4)
நவகிரங்களில் ஒன்றான ராகுவுக்கு உரிய தலம். இங்குள்ள நாக நாத சுவாமி ஆலய பிராகாரத்தில் ராகுவுக்கு தனி சன்னதி. கும்பகோணத்துக்கு மிக அருகில் உள்ளது.
சூரியனார் கோவில் [சூரியன்] download (2)
மயிலாடுதுறை  ஆடுதுறை சாலையில் உள்ளது. சூரியனைத் தவிர மற்ற கிரகங்களுக்கும் சன்னதிகள் உள்ளன.
கஞ்சனூர் [சுக்கிரர்]download (1)
கும்பகோனத்துக்கு அருகில் உள்ள தலம். அசுர குரு சுக்கிராச்சாரியார் பெயரில் அமைந்த கிரகம்தான் சுக்கிரன். சிவபெருமான் கருணையை தனது கடுமையான தவத்தின் மூலம் முழுமையாகப் பெற்றவர் சுக்கிராச்சாரியார்.
வைத்தீஸ்வரன் கோயில் [செவ்வாய்]download (5)
தவத்தில் இருந்த சிவபெருமான் மூன்றாம் கண் நிலத்தில் விழ சிதறிய வேர்வைத் துளியிலிருந்து வெளிப்பட்டவர் அங்காரகன் [செவ்வாய்]  நோயிலிருந்து விடுபடவும் உடல் நலம் வேண்டியும் மக்கள் வழிபடும் தலம் வைதீஸ்வரன் கோயில்.
திருவெண்காடு [புதன்]download (6)
காசிக்கு இணையான தலம். மயிலாடுதுறை சிதம்பரம் சாலையிலிருந்து பிரியும் காரைக்கால் சாலையில் உள்ளது. அறிவையும் புத்தி கூர்மையும் அளிப்பவர்தான் புதன்.
கீழ் பெரும்பள்ளம் [கேது]images
பூம்புகாருக்கு அருகில் உள்ளது. கேதுவும் பாம்பு கிரகம் ஞானத்தைக் கொடுப்பவன் கேது.
திரு நள்ளாறு [சனி]download (7)
சனி கிரகத்தின் பிடியில் இருந்த நளன் அதிலிருந்து சிவபெருமானால் விடுவிக்கப்பட்ட தலம் காரைக்காலுக்கு அருகில் உள்ளது.

No comments:

Post a Comment