Tuesday, 6 February 2018

(தஞ்சாவூரில் நடந்த உண்மை காதல் கதையும் , கற்பனை கலந்த சில யுக்தியையும் , ஒருவர் பேசுவது போல கதை சித்தரிக்க பட்டுள்ளது , இரண்டாம் பாதியில் வரும் அனைத்தும் கற்பனையே ) ,
தஞ்சை – 2006
என் பேரு பிரசன்னா. என் அப்பா பேரு சுவாமிநாதன், அம்மா பேரு தெய்வானை. எனக்கு ஒரு அக்கா, கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாங்க. நான் சென்னைல Visual Communication முடிச்சிட்டு தஞ்சாவூர் வந்துட்டேன் .
நான் ஊருக்கு வந்த அன்னைக்கு பச்சகாளி பவளகாளி திருவிழா.
நான், என் நண்பர்கள் எல்லாரும் ஒரு டீம், இன்னும் ஒரு டீம் இருக்கு. எனக்கு எதிர் டீம் . எங்களுக்குள்ள ஒரு போட்டி 4 வருஷமா நடக்குது, ஒவ்வொரு வருஷமும் நாங்கதான் ஜெய்ச்சிட்டு வந்தோம். அது அந்த எதிர் டீம்க்கு பிடிக்காது .
என்ன போட்டி தெரியுமா?. ஒரு சொம்புக்குள்ள ஒரு தங்க மோதிரத்தை போட்டு கட்டி வச்சிடுவாங்க. அத யார் முதல்ல எடுக்குறாங்களோ, அவங்கதான் இந்த வருஷம் முழுக்க அம்மனுக்கு பணிவிடை எல்லாம் செய்யணும்னு ஒரு ஐதிகம்.
கூட்டத்துக்குள்ள என் நண்பர்கள் எல்லாரும் கலந்து இருகாங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல வானவேடிக்கை போடுவாங்க. அதுதான் பசங்களுக்கு நான் தரும் சிக்னல்.
அந்த சிக்னல் கெடைச்சிடுச்சி அவ்ளோதான் பசங்க சும்மா குதுர மாதிரி கேளம்பிடுவங்க .
அத என் எதிர் டீம் பாத்துட்டு தொரத ஆரம்பிச்சிடுவாங்க
அவங்க தொரத நாங்க மோதிரத எடுத்துட்டு ஓட நைட் முழுக்க தஞ்சாவூர் சந்து முழுக்க ஓடுவோம் விடியும் போது யார் கைல அந்த
மோதிரம் இருக்கோ அவங்கத அதிர்ஷ்டகாரன் ஆனா சொம்ப குடுத்துடணும் .
ஆனா நா என்ன பண்ணேன் சொம்பையும் சேத்து கொண்டு வந்துட்டேன் .
மறுநாள் காலைல கோவில் அய்யர் கோவில் கமிடிகரங்க எல்லாம் வீடு வாசல்க்கு வந்துட்டாங்க .
வந்தவங்க என் அப்பாவ பாத்து ” சாமி உங்க பையன் இந்த வருஷம் ஜெய்ச்சிட்டன்
அதுக்காக கோவில் சொத்தையும் சேத்து எடுத்துட்டு வந்துடன் பா ” அப்படின்னு அவர் சொல்ல
என் அப்பா நக்கலா என்ன ஒரு லுக்கு விட்டாரு பாருங்க இன்னைக்கு கூட மறக்க முடியல
அப்றோம் என் அப்பா சொன்னங்க ” என் பையன் கைக்கு அந்த சோம்பே மோதிரம் மாதிரி இருந்துஇருக்கு
போல ( சிரிச்சிட்டு ) டேய் அத எடுத்துட்டு வந்து குருகள்கிட்ட குடு ” என்று சொல்லிட்டு அப்பா வீட்டுக்குள்ள வந்துட்டாரு .
நா சொம்ப குருகள்கிட்ட குடுக்கும் போது ” உற்ர்ர்ரர்ர்ர்ர் “னு நாய் மாதிரி செஞ்சதும்
ஐயரோ “யோ சாமி உன்புள்ளயண்டன் கடிக்கவரான் பா னு ” சொல்லிட்டு ஓடிட்டாங்க .
வீட்டுக்குள்ள வந்ததும் அப்பா கண்டிச்சாரு ” சும்மா படிச்சோம் புக்க கிளிசொம்னு இல்லாம
எதாவது ஒரு வேலைய பாரு எனக்கு வேர சுகர் வந்துடுச்சி இனிமே உன்ன நீதான் பாத்துக்கணும்
சும்மா பெரியகோவில் ,பூங்கான்னு சுத்தமா பொறுப்ப இருக்குனு ”
சொல்லிட்டு போய்ட்டாரு.
அப்பாக்கு வேலை சுமை ஜாஸ்தியா இருந்துச்சி அப்போ நான் மிடில் கிளாஸ்
அதனால நாம் சேந்து சம்பாதிக்கணும்னு தோனுச்சி சினிமால இப்போ போன சம்பாதிக்க முடியாது
முதல்ல தஞ்சவுர்ல எதாவது ஒரு வேலை தேடிக்கலாம்னு முடிவு எடுதுதேன் .
]]
ஆனா அப்போ ஏதும் சரியாய் அமையல .
நண்பர்களோட ஊர சுத்திகிட்டே பெரிய கோவில் ,சிவங்கை பூங்கா , சாந்தி theatre இதுவே கதின்னு கெடந்தேன்.
நாளும் வேகமா ஓடிகிட்டே இருந்துச்சி. ஒரு நாள் அப்பா அம்மா மதுரைக்கு அக்காவ பாக்க போய்ட்டாங்க நா அப்பாவோட பைக்க
எடுத்துகிட்டு கேளம்பிட்டேன்.
அப்பா ஊருக்கு போரதுக்கு முன்னாடி எதிர் வீட்டுகாரங்க வீட்ட காலி பண்ணிக்கிட்டு இருந்தாங்க அப்போ எனக்கு தெரியாது இந்த
வீட்டுக்கும் எனக்கும் ஒரு உறவு இருக்கும்னு . நா பைக்க எடுத்துகிட்டு தஞ்சாவூர் ” ஓல்ட் ஹௌசிங் யூனிட் “னு ஒரு ஏரியா அங்க
என் நண்பர்களோட சேந்து டீ குடிச்சிட்டு இருந்தோம் அப்போ என்ன தாண்டி ஒரு மினி பஸ் போச்சி டீய குடிசிகிட்டே பாத்துகிட்டே
இருந்தேன் .வயசான ரெண்டு பாட்டி இறங்குனதுக்கு அப்றோம் ப்ளூ கலர் சுடிதார்ல ஒரு பொண்ணு எறங்கி போறாங்க . அத நானும் என்
நண்பர்களும் பாத்துகிட்டே இருந்தோம் டீயும் ஆரிபொச்சி . அன்றைக்கு முழுக்க அந்த பொண்ணோட நினைவுதான் . தண்ணி
போட்டுட்டாங்க என் மேல பாசம் பொங்கும் என் நண்பர்களுக்கு .
அந்த சமயம் பாத்து நா பாத்த பொண்ணு ரொம்ப அழகா இருந்துச்சி டா கல்யாணம் பண்ண அது மாதிரி ஒரு பொண்ண பாத்துதான்
கல்யாணம் பண்ணனும்னுதான் சொன்னேன் .
அதுக்கு பசங்க சொன்னங்க ” அந்த பொண்ணு மாதிரி என்ன மச்சான் அந்த பொன்னையே கட்ற அவ்ளோதான் ” அப்படி சொல்லிட்டு
போய்ட்டாங்க நானும் பெருசா எடுத்துகல .
ஆனா அன்னைக்கு நைட் பசங்க போதைய போட்டுட்டு ” ஓல்ட் ஹௌசிங் யூனிட் ” போய்ட்டாங்க அந்த பொண்ணு வீட்டுக்கு முன்னாடி
போய்ட்டு பிரச்சன பண்ணிட்டாங்க அதுவும் எப்படி “(குடி போதையில் ) அடியேய் என் மச்சான் கல்யாணம் பண்ண உன்ன மாதிரி ஒரு
பையன்தான்டி கல்யாணம் பண்ணுவான் ”
அது விவேக்கோ ” மாப்ள அது பொண்ணுடா ”
சரியான போதைல இருந்த குமாரோ
” அது எனக்கு தெரியும் நீ மூடு ” அப்படின்னு சொல்லி பிரச்சன பண்ணிட்டு வந்துட்டாங்க ”
இவங்க வந்ததுக்கு அப்றோம் சரஸ்வதியோட மாமா ஷண்முகவடிவேலன் வர்றாரு .
சரஸ்வதிய அவ அம்மா அப்பாவ விட கண்டிப்பா பாத்துகிட்டு இருகார் ,அதுனால சரஸ்வதிக்கு மாமானா ஒரு பயம் . வீட்டு முன்னாடி
காலனியே குவிஞ்சி இருக்குரத பாத்து .
மாமா கேக்குறாரு ” (கோவமாக என் எல்லாரும் வெளில நின்னுடு இருக்கீங்க என்ன ஆச்சி ”
காலனி காரங்க சொல்றாங்க “இனிமே நீங்க இங்க இருக்குறது சரி வராதுங்க எப்போ பாரு சத்தம் . அக்கம் பக்கத்துல இருக்குரத
இல்லையா ”
அதற்கு மாமா ” தயவு செஞ்சி என்ன நடந்ததுன்னு சொல்றிங்கள பிளிஸ் ”
காலனி காரங்க சொல்றாங்க “யாரோ ரெண்டு பசங்க வந்தானுங்க வந்து உங்க வீட்டு பொண்ணு … அப்றோம் இவங்கள உங்க
குடும்பத்தையே தப்ப பேசிட்டு போய்ட்டானுங்க . உங்கள மட்டும் பேசி இருந்த பரவால்லையே எங்க எல்லாரையும் சேத்துல பேசிட்டு
போய்ட்டான் ,
சரஸ்வதியின் மாமாவோ கோவத்தில் தலை குனிந்தவாறு ” எப்போ காலி பண்ணும்னு கேட்க ,
காலனி காரங்க சொல்றாங்க ” இந்த வாரதுக்குள்ள காலி பண்ணிடுங்கனு சொல்லிட்டு போய்ட்டாங்க .
என்ன செய்றதுன்னு தெரியாம சரஸ்வதியோ யோசிசிகிட்டே நிற்க ,
கல்லூரில சரஸ்வதி கூட படிக்கிற பொண்ணோட அண்ணன் ஒரு வீட்டு புரோக்கர் .அந்த பொன்னுக்கு ஒரு ரூபாய் தொலைபேசிலருந்து
பேசுகிறாள் ” ஹாய் டி நான்தான் சரஸ்வதி பேசுறேன்டி ,
( தொலை பேசியில் தோழியின் குரல் ” ஹ்ம்ம் சொலுடி )
” இல்லா ஒரு சின்ன ஹெல்ப்டி ”
தோழி ” என்னடி ஹெல்ப்லாம் சொல்ற என்கிடதன சொல்ற கேளு ”
சரஸ்வதி ” இல்லடி இங்க கொஞ்சம் பிரச்சனா அதன் வேர வீடு பாத்துகிட்டு இருக்கேன் டி உன் அண்ணன் கிட்ட சொல்லி எது வீடு
இருந்த பாக்க சொல்றிய ” ( இன்னும் ஒருரூபாய் போடுகிறாள் )
தோழி “ஹ்ம்ம் கண்டிப்பாடி உனக்கு செய்யாம யாருக்கு செய்ய போறேன் சொல்லு நாளைக்கே அண்ணவா உன் வீட்டுக்கு வந்து பாக்க
சொல்றேன் ஓகே வா டி”
சரஸ்வதி ” ஹே தேங்க்ஸ் டி நாளைக்கு வர சொலுடி பாய் டி ”
என்று சொல்லிவிட்டு வேகமாக வீட்டுக்கு சென்று விடுகிறாள்.
மறுநாள் காலைல
நான் பைக்க எடுத்துகிட்டு ” ஓல்ட் ஹௌசிங் யூனிட் ” போனேன் .
அங்க ஒரு டீ கடை இருக்கு அங்க போய்ட்டு டீ சாப்டுகிட்டே ,
அந்த பொண்ணு வரலான்னு பாத்தேன் அவளுக்காக வெயிட் பண்ணேன்,
ஒரு அரைமணி நேரம் கழிச்சி என்கூட படிச்சா என் பழைய நண்பன் சுரேஷ பாத்தேன் ,
அவனும் என்ன பாத்துட்டு ஷாக் ஆகிட்டான் , ரெண்டு பெரும் ” டேய் மச்சா ” என்று சந்தோஷமாக
எங்கள் நட்பை மீண்டும் புதிதாக ஆரம்பித்தோம் .
சுரேஷ பாத்து நலம் விசாரிக்கிறேன் ,
” என்ன மச்சி ரொம்ப நாள் ஆச்சி உன் தங்கச்சி அம்மா அப்பாலாம் எப்படி டா இருகாங்க ரொம்ப
நாள் ஆச்சில டா மச்சி …. ஹ்ம்ம் பாக்கணும் டா ”
சுரேஷ் பதிலளிக்கிறான் ” (சோகமாக ) உனக்கு தெரியாத மச்சி அப்பா இறந்துடாரு டா ,
நான் “என்னடா சொல்ற எப்போடா சரி இப்போ என்ன பண்ணிட்டு இருக்க ?,
சுரேஷ் ” +2 வோட படிப்ப நிப்பாட்டிட்டேன் டா ….. ( டீயை குடித்துகொண்டே ) அப்பாவேற போய்டர குடும்பத்த நந்தன் பாத்துக்கணும்.
நான் “உன் நல்லா மனசுக்கு எல்லாமே நல்லதாவே அமையும் டா மச்சி கவலை படாத , ஆமா இங்க என்னடா வேலை .சரி என்
வீட்டுக்கு எதிர்ல ஒரு வீடு இருக்குடா யாரும் கேட்ட சொல்லு ராசியான வீடு .
சுரேஷ் ” hoo சூப்பர் டா இங்க ஒரு பார்டிக்கு வீடு புடிக்கனுமாம் அந்த விஷயமா வந்தேன் வீடு நல்லா இருக்கும்ல … நல்லா
இருக்கும்ன சொல்லுவோம் டா ( செல் பொன் ஒலிக்கிறது – யுவன் ஷங்கர் ராஜா இசையை ) அவங்கதான்னு நெனைக்கிறேன்
(செல்போனை காதில் வைத்து சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டே பேச தொடங்குகிறான் ) ஹலோ ஹம்.. சொல்லுங்க எங்க இருக்கீங்க நா
வந்துட்டேன்மா … எங்க இருக்கீங்க … பஸ் ஸ்டாப் கிட்டயா ஆ பாத்துட்டேன் பாத்துட்டேன் டேய் மச்சி அவங்களுக்குதான் டா .
நான் திரும்பி பார்கையில் அதிர்ந்து போய்விட்டேன் வந்தது சரஸ்வதி ,
அவளை பார்த்ததும் முகத்தில் ஒரே புன்னகை சிரிப்பா அடக்க முடியல பயங்கரமான சந்தோசம்.
சிரித்துக்கொண்டே அவர்கள் அருகில் சென்றேன் .
சுரேஷ் என்ன சரஸ்வதியிடம் அறிமுகம் செய்து வைத்தான் ” இவர் என் friend ” என் தங்கச்சியோட classmate டா இவங்களுக்கு தான் வீடு
” என்று முடிக்க மேலும் சந்தோசம் அடைந்தேன் .
பிறகு நான் பெச்சுகொடுத்தேன் ” ஆமா என்ன வாடகைல வீடு பாக்குறிங்க ”
சரஸ்வதியோ “ஒரு 2500 குள்ள கேட்ச நல்லா இருக்கும் .”
அதற்கு முகம் முழுக்க புன்னகையுடன் ” அட 2000 ரூபாய்ல சூப்பர் வீடு இருக்குங்க ராசியான வீடு ,24 மணிநேரமும் நல்லா தண்ணி
ஓல்ட் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துலையே இருக்கு அழகான குட்டி சந்து நீங்க அமைதியா படிக்கலாம் .எல்லாரும் ரொம்ப ஹெல்பா
இருபங்க சரஸ்வதி என்று (அவளின் பெயரை உச்சரித்த படியே முடித்தேன் )
நான் பேசுவதை பார்த்து சுரேஷ் அதிர்ந்து போனான்.
சரஸ்வதி , அவளின் மாமா ,நான் ,சுரேஷ் எல்லாரும் வீட்டை பார்க்க போனோம் அவருக்கு வீடு பிடித்துவிட்டது.
சரஸ்வதி யோ புரோக்கர் கமிஷனை என்கிட்ட கொடுத்தாள்
சிரித்துக்கொண்டே “ஐயோ நான் இல்ல புரோக்கர் அவர்தான்” என்று சுரேஷை கைகாட்ட ( சுரேஷோ கன்னத்தில்கை வைத்துகொண்டு
என்னையே குறுகுறுவென்று பார்த்தான்”
அவனது பார்வைக்கு நான் பதில் அளிக்கிறேன் ” மச்சி வங்கிகோடா ” என்று நான் கூறிய பின்புதான் அந்த பணத்தையே
வங்கிகொண்டன் .
சந்தோஷமாக புது வீட்டில் “பால் காய்ச்சி முதலில் எனக்குதான் சரஸ்வதி கொடுத்தாள் என்னால மறக்க முடியாத நாள் அதுதான் .
அந்த வீட்டிற்கு வந்து ரெண்டு நாளிலேயே சரஸ்வதிக்கு வேலை கிடைத்து விட்டது .
தனக்கு வேலைகிடைத்துவிட்டதை என்னிடம் சொல்ல காத்திருந்தாள்.
மாலை வேலையில் நான் வந்ததும் என் வீட்டிற்கு வந்து தனக்கு வேலை கிடைத்ததை மகிழ்ச்சியுடன் கூறினாள் ..அதுவும் என்
அப்பாக்கு முன்னாடி உடனே சொல்லி காட்ட ஆரம்பிச்சிடுவாரு ” பாரு அந்த பொன்னுலாம் வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டாங்க நீயும்
தேடிகிட்டே இருக்க இன்னும் எவ்ளோ நாள்தான் தேட்றேன்னு பாக்குறேன்னு சொல்லிட்டு போய்ட்டாரு .
என்ன சரஸ்வதி முன்னாடி அப்பா சொல்லிட்டாருன்னு சரஸ்வதிக்கு ஒரே சங்கட்டம இருந்துச்சி அதனால என்ன மீட் பண்ணி வேலை
விஷயமா பேசணும்னு வெயிட் பண்ண சொன்னா , நானும் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். நைட் 8 மணி…
( சிவகங்கை பூங்கா கவிதா ஸ்நாக்ஸ் சென்ட் ஸ்டாப் )
பேருந்து நடத்துனரின் குரல் ” கவிதா ஸ்நாக்ஸ்லாம் எறங்குங்க ” என்று .
அனைவரும் பேருந்தை விட்டு கிழே இறங்கிகொண்டு இருந்தனர் .நானோ சரஸ்வதின் வருகையை எதிர்நோக்கிக்கி கொண்டி இருந்தேன் .
பேருந்து நெரிசல்ல ஒரு கண் மட்டும் என்ன பாத்துச்சி. கில இறங்குனதும் .என்னையே அறியாம ஒரு மரியாதைல எழுந்து நின்னேன்.
கையில் இருந்த என் சிகரெட்டை தூங்கி போட்டேன் , ஆனா அவ அத பாத்துட்டு
” நீ இந்த வேலைலாம் பண்ணுவிய …… ம்ம் நாலாம்
பண்ண மாட்டேன் பா ” என்று சரஸ்வதி சொன்னதும் நா அப்படியே ஒரு பார்வை பாத்தேன் லேசா …. அதுக்கு
” என்ன பாக்குற சும்மா சொன்னேன் உன் அப்பா எவ்ளோ கஷ்ட பட்டு உன்ன ஒரு நிலைமைக்கு கொண்டு நினைகிரங்கனு தெரியுமா நீ என்னடான வட்ட வட்டமா வானத்த பாத்து புகை விட்டுட்டு இருக்க நீ தம் அடிக்கிற விஷயம் குட அவங்களுக்கு தெரியும் ஆனா உங்கிட்ட அவர் சொன்னது இல்ல ஏன் தெரியுமா என்னைகாவது நம்ப புள்ள முன்னுக்கு வந்துடுவான்னு இருகாங்க ஆனா நீ யோசிக்கவே செய்ய மாற்ற அதுதான் இப்போ பிரச்சன
” நா அவ சொல்றத கேட்டுகிட்டே நடந்து வந்துகிட்டு இருக்கேன் .அப்போகுட அவ புருவத்த சுருக்கி சுருக்கி பேசுறது
எனக்கு ரொம்ப பிடிக்கும் அத கவனிச்சிட்டு இன்னும் ஒன்னு சொன்ன.
” நீ என்ன தினமும் பாத்துட்டு இருக்குர நீரதுல வேலை தேடி இருந்து இருக்கலாம்ல ” இது எப்படி தெரியும்னு முளிசிக்கிடே நானும்
அவகுடையே நடந்து வந்துடு இருக்கேன் .
அப்றோம் அவ சொன்ன ” உனக்கு என்ன பிடிச்சி இருக்கோ அத செய் வாழ்க்கை ரொம்ப
நல்ல இருக்கும் சரியா அப்றோம் நாளைக்கு தஞ்சாவூர் மெயின்ல ஒரு டிவி ஓபன் பண்றாங்க நீயும் போ என் ப்ரண்டோட அண்ணாதான்
அங்க மேனேஜர் நா சொல்லி இருக்கேன் நீ போயிடு இண்டர்வியு போ கண்டிப்பா 8000 கெடைக்கும் மறக்காம போங்க ” என்று புன்னகை
பூத்த முகத்துடன் அவ சொன்னதும் நா எந்த மறுப்பும் சொல்லாம நா மறுநாள் டிவி ஸ்டேஷனுக்கு போனேன் அங்க போனா பக்க
ஊருக்கு இருக்கு லைன். எல்லாரும் அங்க்கர் இண்டர்வியுக்கு வந்து இருகங்கனு தெரிஞ்சதும் லைன்ன விட்டு சிங்கம் மாதிரி
நடந்தேன் கேட் கிட்ட போனதும் சரஸ்வதி சொன்ன அந்த அண்ணன் வந்து ராஜா மரியாதையுடன் உள்ள அழைச்சிட்டு போயி
இண்டர்வியு பண்ணாரு நா பேச ஆரம்பிச்சதும் அவருக்கு ரொம்ப பிடிச்சி போச்சி எனக்கு 8000 ரூபா சம்பளம் தராத சொல்லி
வேலைக்கு சேத்துக்கிட்டார் .மனசு முழுக்க சந்தோசம் என்ன பண்றதுன்னு தெரியாம வாயடைச்சி நின்னேன் ரோட்ல , எதனை தடவ
அப்பா வேலைக்கு போ போனு சொல்லி இருபங்க நான் ஒருதடவ குட கேட்டது இல்ல ஆனா சரஸ்வதி சொன்ன உடனே எப்படி
ஒரைச்சிது ம்ம்ம் எது எப்படியோ அவங்க சொன்னத நா செஞ்சிட்டேன் .அப்படின்னு ஸ்வீட்லாம் வாங்கிட்டு சரஸ்வதி கிட்ட போனேன்
ஆனா அவ என்ன சொன்ன தெரியுமா ,” அம்மாகிட்ட சொன்னிங்களா “என்று கேட்க நானோ ” இல்லங்க நீங்க வாங்கிக்குடுத்த வேலை
அதன் உங்ககிட்ட முதல்ல சொல்லாம்னுதான் வந்தேன் அப்படின்னு சொன்னதும் அவளோட முகம் ஒரு நொடி அப்படியே மாறிடுச்சி
“நீங்க இவ்ளோ நாள் நல்ல வரணும்னு நெனச்சது என்னைவிட உங்க அம்மாதான் தினமும் அவங்கதான் முருகன் கோவிலுக்கும்
பிள்ளையார் கோவிலுக்கும் செருப்புகூட போடாம போனாங்க நியாயமா அங்கதன் போகணும் நா ஜஸ்ட வேலை இருக்குனு சொன்னேன்
அவ்ளோதான் உங்களுக்கு வேலை கெடைச்சது ரொம்ப சந்தோசம் உங்க அம்மகிடையும் அப்பாகிடையும் சொல்லிடு என்கிட்ட வாங்க
அப்போ விஷ் பண்றேன் ” எனக்கும் முகம் வாடிடுச்சி அத அவ பாத்துட்டு அவளுக்கும் ரொம்ப பீல் பண்ணிட்டா பாவம் ஆனா நா ஏதும்
நினைச்சிகல உடனே ” சரி சரஸ்வதி நீங்க சொன்னமாதிரியே அவங்ககிட ஆசிர்வாதம் வாங்கிட்டு வரேன்னு சொல்லிடு அங்க இருந்து
வந்துட்டேன் . எங்க சந்துக்குள்ள நா நுழைஞ்சதும் எங்க அம்மா என்ன வாசல்ல நிக்க வச்சி நா இண்டர்வியுக்கு போயிடு வந்த அழகா
பாத்து “உனக்கு வேலை கிடைக்கலனாலும் பரவல்லடா இப்படியே போய்ட்டு ஒரு போட்டா எடுத்துட்டு வந்துடு அப்படியே ஆபிசர் மாதிரி
இருக்குடா தங்கம் “என்று வெகுளியாக சொல்ல அதற்கு நான் ஒன்னு சொன்னே ” அம்மா எனக்கு வேலை கிடைச்சிடுச்சி மா ” என்று
நா சொன்னதும் அம்மாக்கு கண்ணுலருந்து கண்ணிரே வந்துடுச்சி அத என்னும் என்னால மாறாக முடியாது . அம்மா சொன்னங்க “நான்
கும்பிட்ட முருகன் என்ன கைவிடல பா ” அதுக்கு நா சொன்னேன் ” முருகன் செஞ்சி குடுதரோ இல்லையோ எதிர் வீட்டு சரஸ்வதி
தன வேலை வாங்கி குடுத்தாங்க ” அம்மாவோ சரஸ்வதியை காண அவள் வரும்படி காத்திருந்தாங்க .ஆனா சரஸ்வதியோ பெரிய
கோவிலுக்கு பிரதொஷதை பார்க்க போய்விட்டாள் .ரொம்ப நீரம் ஏன் அம்மா காத்திருந்தாங்க பிறகு ஏன் அம்மாவும் கோவிலுக்கு
போய்ட்டாங்க .அப்றோம் பார்த்த ரெண்டு பெரும் கோவில்ல சந்திச்சி என் அம்மா நன்றி சொல்லி இருகாங்க . நைட் வீட்டுக்கு வந்ததும்
அப்பாகிட சொன்னேன் அவருக்கும் ரொம்ப சந்தோஷமா நல்ல வேலை பாக்கணும்னு சொல்லிடு வெளில போன என் அப்பா
கடைதெருவுல சரஸ்வதி பாத்து சந்து முன்னாடி நின்னு ரொம்ப நீரம் பேசுனாங்க என்னனு தெரியல கண்டிப்பா என்ன பத்திதான் பேசி
இருபங்கனு எனக்கு தெரியும் ஆனா இது எனக்கு முக்கியம் இல்ல அவகிட்ட ஏன் காதலை வெளிபடுதணும் என்ன பண்றதுனு தெரியாம
நைட் முழுக்க யோசிச்சி ஒன்னும் வேலைக்கு ஆகல, மறுநாள் வேளைக்கு போனதும் ஆபீஸ்ல தூங்கி தூங்கி விழுந்தேன் அப்றோம்
யோசிச்சிகிட்டே இருக்குறத பார்த்த டிவி மேனேஜர் என்ன வெளில அழைச்சிட்டு பொய் என்னனு கேட்டாங்க நானோ விஷயத்தை
சொன்னேன் , அதற்கு மேனேஜர் அண்ணா சூப்பர் ஐடியா குடுத்தாரு என்ன தெரியுமா
” டேய் தம்பி பொண்ணுங்களுக்கு பொதுவா மியூசிக் ரொம்ப பிடிக்கும் அதுக்கு நீ என்ன பண்ற ஒரு வாரம் வெயிட் பண்ணு திருவையாறு தியாகராஜர் ஆரதனை நடக்கும்ல
அப்போ சொல்லு backroundல கர்நாடக சங்கீதத்தோட இருக்கும் பொது சொல்லிடுடா தம்பின்னு ” சொன்னதும் தியாகராஜர் ஆரதனைகாக
வெயிட் பண்ணிட்டு இருந்தேன் மனசு குள்ள ஒரு தயக்கமும் இருந்துச்சி நம்ப மேல எவ்ளோ மரியாதை வச்சி இருகாங்க இப்படி
சொன்ன என்ன சொல்லுவங்கனு யோசனையவே இருந்துச்சி ,மறுநாள் வாசலில் உட்கார்ந்து காபி குடிச்சிட்டு இருந்தேன்
வாசல்ல கோலம் போட சரஸ்வதி வந்தாள், அப்போது தீவிர யோசனையில் இருந்த என்னை பார்த்து
” என்ன சார் காலைலேயே இவ்ளோ யோசனை ”
ஏன் மனசுக்குள்ள “கேற்றுவோமா வேணாம் தியாகராஜர் ஆரதனைல சொல்லிக்குவோம் ”
” என்ன சொல்லுங்க ”
இல்ல மனசுக்குள்ள ஒரு விஷயம் ஓடிட்டே இருக்கு அத எப்படி சொல்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கேன் ”
“ம்ம்ம்ம் .. இவ்ளோதான உங்க மனசுக்கு பிடிச்சவங்க கிட்ட சொல்லுங்க அவ்ளோதான் ”
” அவ்ளோதானா சொல்லிட போகுது தேங்க்ஸ் சரஸ்வதி ” என்று சொலிவிட்டு ,
சரஸ்வதி இங்க வர காரணமா இருந்த ஏன் ரெண்டு நண்பர்களையும் பாக்க போனேன் ,
அங்க போய்ட்டு இவ்ளோனால் என்ன நடந்தது என்று முழுக்க சொன்னேன் கடைசியா அவங்க என்கிட்ட என்ன சொன்னங்க தெரியுமா ”
உனக்கு சொந்தமா யோசிக்க தெரியாதடா மச்சி “.
பிறகு அவர்களுடன் வெளியே போய்விட்டு வந்தேன் .
தியாகராஜர் ஆரதனைக்கு என்னும் ஒரு நாள்தான் இருக்கு தைரியமா இருக்கனும் அவ கண்ணா பாக்க கூடாதுன்னு
இருந்தேன் . ஆனா முடியாதுன்னு எனக்கு தெரியும் , தியாகராஜர் திருவிழாவும் வந்துச்சி எல்லாரும் முதல் நாளே பக்கத்துக்கு வீடு
காரங்களும் சரஸ்வதி வீட்ல உள்ளவங்களும் போகலாம்னு முடிவு பண்ணிட்டோம் ,மறுநாள்
எல்லாரும் ரொம்ப சந்தோஷமாக இருந்தாங்க ஆனா நானோ செம பீதில இருக்கேன் முழிச்சிட்டு இருக்கேன் அத பார்த்த என் அப்பா ”
டேய் என்னடா பெண்ட்ல கக்கா பொய்டியோ ”
நான் “அடச்ச ஏன் பா ,அதுலாம் ஒன்னும் இல்ல வாழ்க்கைய பத்தி யோசிச்சேன் பா ”
அதுக்கு என் அப்பா திருவிழா முடிஞ்சதும் யோசி இப்போ புறப்படலாம் ” என்று என் அப்பா சொல்லிட்டு போய்ட்டாங்க , அப்போ
பின்னால ஒரு குரல் ” என்னங்க போலாமா” ன்னு . திரும்பி பார்த்த சரஸ்வதி புடவை கட்டி இருந்த பாக்கணுமே அப்பா……… சான்சே
இல்ல அவ்ளோ ஒரு அழகு அத நான் மட்டுமே ரசிக்கணும்னு அவல முன்னாடி போக விட்டுட்டு பின்னால நான் நடந்துவந்தேன் யாரும்
அவள பாக்குராங்கலானு , அப்படியாராவது பாத்த அவங்கல பாத்து ஒரு முறைப்பு முறைச்சிட்டு வந்துடுவேன் அவங்களும் திரும்பி
வேற எங்கயாவது பாத்துகிட்டு போய்டுவாங்க , அப்போ பாத்துகோங்க அவ எவ்ளோ அழகா இருந்து இருப்பான்னு ,இன்னும் அந்த
வயிலட் கலர் பட்டு புடவை எங்கயாவது இருந்த இவளோட நியாபகம் வந்துடும் .
எல்லாரும் திருவையாறு பத்தி பேசிக்கிட்டே நடக்க ஆரம்பிச்சிட்டோம் ,
நடக்கும் போது என்ன பாத்து பாத்து நடந்தா ,
அப்போ ஜாடைல புடவை நல்ல இருக்கானு கேட்டா , அதே ஜாடைல செம னு சொன்னேன் ,
எனக்கே அன்னைக்கு வெக்கம் வந்துடுச்சி , போடி நடையா பழைய பஸ் ஸ்டாண்ட் வந்து திருவையாறு பஸ் காக காத்திக்கிட்டு இருந்தோம் , செம கூட்டம் வேற எப்படிட பஸ்ல சீட் போடா போறோம்னு யோசிக்கிட்டே இருந்தேன் , பஸ்சும் வந்துடிச்சி , ஒரே பாய்ச்சலா உள்ள போய்ட்டு சீட் போட்டேன் அதுல நாஸ்தி ஆகிட்டேன் , நானும் அப்பாவும் ஒரு சீட் என் அம்மாவும் சரஸ்வதியும் முன் சீட்ல உக்கார சொன்னேன் அவங்க அப்பா மாமாவும் அவங்களுக்கு முன்னாடி உக்காந்தாங்க , அப்போ நா எனக்கு முன் சீட்டு கம்பியை பிடிச்சிட்டு இருந்தேன் , சரஸ்வதி உக்காரும் போது நடந்து வந்த களைப்பில் அவள் முதுகில் வியர்வை இருந்துச்சி , அப்போ என்னோட கைல எதிர்ச்சியோ அவ முதுகுல பட , ஒரு நொடி , அவளும் பதறிட்டா நானும் பதறிட்டேன் , உடனே கைய எடுத்துட்டேன் , லவ்வ சொல்றதுக்கு முன்னாடி நல்ல சகுனம் ,
அப்போது பஸ்சில் சைட்ல ஜன்னல் இருக்கும்ல அதுல இருக்குற கண்ணாடில அவ முகம் தெரிற மாதிரி இருந்துச்சின்னு பாத்தேன் , முட்ட கண்ணா வச்சிக்கிட்டு நா பதட்டத்துல முழிச்சிகிட்டு இருக்குறத அவ பாத்துகிட்டு சிரிச்சிகிட்டு இருந்தா , அத பாத்துட்டு எனக்கோ , வெக்கத்துல வழிய ஆரம்பிச்சேன் ,அவள பாத்தாலே சிரிப்பு வந்துடுச்சி , சரி என்மேல கோவம்லாம் இல்லனு புரிஞ்சிகிட்டே , அப்போ சரியா கண்டக்டர் ” போலாம் ரைட் ” னு சொன்னதும் திருவையாருக்கு பஸ் கெளம்பிடுச்சி , அவளும் என்ன பாத்து சிரிச்ச நானும் அவளை பாத்து சிரிகிட்டே , திருவையாறு வரைக்கும் போனோம் ,( அதுலயே அவளும் புரிஞ்சிகிட்டா )
அப்போ என் மனசு குள்ள ” சர்தான் லைப் பிரைட் ஆகிடுச்சு ,போலாம் ரைட் ”
திருவையாறை நோக்கி பஸ் சென்று கொண்டு இருக்க ,
நானோ வாயை பிளந்த மாதிரி இருக்க முகத்துக்கு நேர ” சிரிச்சது போதும் தம்பி டிக்கெட் எடுங்க “னு சொன்னதும் ,
ஏதோ நானும் சரஸ்வதியும் மட்டும் பயணம் செய்ற மாதிரி , ரெண்டு டிக்கெட் குடுங்கன்னு கேட்க , என்கூட வந்தவங்க எல்லாரும் ஷாக் ஆகிட்டாங்க ,
அப்பாவோ ” டேய் என்ன ” என்று கேட்க ,
நா சமாளிச்சிட்டேன் , சாரி பா மறந்துட்டேன் என்று சமாளிச்சிட்டேன் ,
சரஸ்வதியோ கேலியாக சிரிச்சிட்டு திரும்பிட்டா , ஒரு வழியா திருவையாறு வந்துடுச்சி ,
பஸ்ச விட்டு கிளை எறங்கினதும் எனக்கு ஒரு கால் வந்துச்சி பசங்க
தான் கால் பண்ணாங்க ” மச்சி எங்க டா இருக்க ” திருவையாறு
வரைக்கும் வந்து இருக்கேனு சொன்னனதும் “ஓகே மச்சி னு சொல்லிட்டு அப்பா எங்க இருக்கானு கேட்டாங்க ஏன்டா கேக்குறானு கேட்டேன் அதுக்கு பசங்க இல்ல ஒரு தஞ்சாவூர் பைண்டிங் ஆர்டர் வந்து இருக்கு அப்பா செய்யணும் அதன் மச்சி ,
ஓகே ட அப்பட சொல்றேன் நாளைக்கு வீட்டுக்கு வானு சொன்னதும் பசங்க ” இல்லடா வீட்டுக்குலாம் இப்போ வர முடியாது நீ அப்பாடா சொல்லு டா நாளைக்கு பேசுறேன்னு கால் கட் பன்னிட்டாங்க, இவங்க கால் கட் பண்ணதும் எனக்கு ஏதோ தப்ப இருக்குற மாதிரி இருந்துச்சி ,
திருப்பி கால் பண்ணனும் நினைக்கும் போது ,
சரஸ்வதி யோ “வாங்க ” னு சொன்ன ஒரு வார்த்தைல அவங்க கால் பண்ணாத மறந்துட்டேன் ,
அப்பறோம் அப்பாக்கு கால் வந்துச்சின்னு அப்பா சத்தத்துல பேச முடியாதுனு கெளம்பி வெளில போய்ட்டாங்க ,
நானும் சரஸ்வதி பக்கத்துல உக்காந்துகிட்டு ,
அந்த தியாகராஜர் சன்னதில வர்ற இசைல மனசு லேசாக ஆரம்பிச்சது ,
அப்படியே சரஸ்வதி கிட்ட சோல்லா பொறுமையா திரும்புறேன் அப்போ கரெக்ட் ஆ அப்பாகிட்ட இருந்து கால் வருது ,
நானோ சுத்தி சுத்தி பாத்துட்டு கால் ஆஹ் அன்டன் பண்ணேன் ” என்ன பா தியாகராஜ ஆராதனைக்கு அசைய வந்திங்க இப்போ ஆளே காணோம் ”
அதற்கு அப்பாவோ ” இல்லடா பெரிய ஆர்டர் ஒன்னு அதன் நா தஞ்சாவூர் போயிட்டு இருக்கேன் (நா யோசிகிறேன் பசங்க அப்பாட்ட ஒரு ஆர்டர் சொல்லணும்னு சொன்னது அப்படியே அப்பா கிட்ட கேட்டேன் ) அப்பா பசங்க தான சொன்னாங்க ”
அதற்கு அப்பாவோ “இல்ல பா அக்சி டைமண்ட்ஸ் ஓனர் பா ” நானும் இணைப்பை துண்டித்து விட்டு திருவிழாக்கு திரும்பினேன் ,
அதற்குள் அம்மா , சரஸ்வதிய, சரஸ்வதி அப்பா ,மாமா , பக்கத்துக்கு வீட்டு அக்கா எல்லாரும் சாமி கும்பிட்டுட்டு வந்துட்டாங்க , அப்பா எங்கன்னு கேட்டாங்க அதற்கு நானோ ” ஒரு முக்கியமான வேலையா தஞ்சாவூர் வரைக்கும் போயிட்டு இருகாங்க அம்மா , என்று சொன்னதும் அம்மாவோ நல்ல நாள்ல கூட வேலை வேலை னு போய்டுறாரு பாருடா னு சொல்லி சலிச்சிக்கிட்டாங்க ,
அப்பறோம் எல்லாரையும் ஹோட்டல் கூட்டிட்டு போயிடு சாப்பிட வச்சி வீட்டுக்கு கெளம்பியாச்சு ,பஸ்ல திருப்பி வரும்போது சரஸ்வதிய பாத்து கொஞ்சமா சிரிச்சிட்டு வந்தேன் , நா ஏதோ யோசிக்கிறேன்னு அவளுக்கும் தெரிஞ்சது ,
பஸ் பழைய ஸ்டாண்ட் வந்துடுச்சி , பஸ் விட்டு கிளை இறங்குனதும் அப்பாக்கு கால் பண்ணேன் , அப்பா கால் எடுக்கல மணி 10 மணி ஆகிடுச்சு வேற ,
அப்போதான் எனக்கு ஒரு விஷயம் நியாபகத்துக்கு வந்துச்சி அப்பா சொன்ன ” அக்சி டைமண்ட்ஸ்சும் ” சரஸ்வதி அக்கவுண்டட் வேலை பாக்குற இடமும் ஒன்னு ,
வீட்டுக்கிட்ட வந்த்ததும் சரஸ்வதிகிட்ட கேட்டேன் ” நீ வேலை பாக்குற ஷாப் பெரு அக்சி யா , அதற்கு சரஸ்வதி வீட்டின் படியில் நின்று கொண்டு ஆமா ஏன் கேக்குறீங்க ” அதற்கு நானோ ” இல்ல அப்பா அங்கத பொய் இருக்குறத சொன்னாங்க ஆபீஸ் கால் பண்ணி கேக்க முடியுமா என்று கேட்டதும் ,
உடனே எந்த மறுப்பும் சொல்லாமல் சரஸ்வதி கால் செய்கிறாள் , மறு பக்கம் கால் ஒலிக்கிறது சரஸ்வதி விசாரிக்கிறாள் ” ஹாய் அக்கா அங்க யாரும் ஆர்ட்டிஸ்ட் வந்து இருக்காங்களா ஓனர் ரூம்க்கு ” என்று கேட்டதும் தோலைபேசி குரல் ” ஆமா மா ஏதோ அளவுளாம் எடுத்துக்கிட்டு இருகாங்க டி ” சரஸ்வதியோ ” ஓகே அக்கா தேங்க்ஸ் “னு சொல்லிட்டு வச்சிட்டா ,
உங்க அப்பா அங்கதான் ஏதோ பெயின்டிங் வைக்க ஏதோ சைஸ் எடுத்துட்டு இருகாங்க போதுமா அதுக்குள்ள ஏதோ மாதிரி யோசிக்கிறீங்க என்று சரஸ்வதி சொல்ல நானோ “இல்ல சரஸ்வதி அப்பா எவ்ளோ பெரிய ஆர்டர் வந்தாலும் சாமி கும்பிட்டுட்டு தான் போவாங்க ஆனா இப்படி ஓட மாட்டாங்க அதன் சந்தேகமா இருக்கு ,
சரஸ்வதியோ ” அதுலாம் ஒன்னும் இல்ல மாமாக்கு ஏதாவது ரொம்ப முக்கியமானதா இருக்கும் போல னு சொல்லி முடிச்சதும் ,நானோ ” என்ன சரஸ்வதி ஏன் அப்பாவ மாமான்னு சொல்ற புதுசா இருக்கு என்று வலிந்து கொண்டே சொல்ல , அதற்கு சரஸ்வதியோ ” ஆமா ஆமா இனிமே எல்லாம் அப்படித்தான் நெறய பேசணும் தடவை இல்ல நாளைக்கு அரண்மனைக்கு வரேன் நீங்க வாங்க பேசணும் , இப்போ தூங்கணும் ( மெல்ல சிரித்துக்கொண்டு அவளை ரசிக்கிறேன் ) தூங்க போட்டா என்று கேட்க வேண்டாம் என்று தலை அசைக்க ,சரஸ்வதியோ ஏன் தூங்க போக கூடாது என்று கேட்க நானோ நெறய பேசணும் னு சொன்னே , வீட்டின் உள்ளிருந்து சரஸ்வதி அப்பா குரல் ” மா கேட்ட பூட்டிட்டு வாடா அம்மு ” என்று சொன்னதும் பதறிக்கிட்டு சரரஸ்வதி உள்ளே செல்ல ,
நானோ அப்பா வரும் வரை வாசலிலேயே காத்திருந்தேன் , அம்மா அலைச்சலில் தூங்கிடாங்க , அப்பாவை ஒரு கார் வந்து இறக்கி விட்டு சென்றது , அப்பாவை சந்தில் நடந்து வருவதை பார்த்ததும் எழுந்து நின்றேன் அப்பாவை நான் அப்படி பார்த்தது இல்லை , ஏதோ ஒரு பதற்றம் அவர் முகத்தில் , நன் இருப்பதாய் கூட பார்த்தாமல் வீட்டிற்குள் நுழைந்தார் , அப்போது நான் அப்பா என்று கூப்பிட்டதும் பதட்டத்தில் ” என்ன பா என்று கேட்டாரு ” நானோ என்ன ப ஏதோ மாதிரி போறீங்க , சாப்பிடீங்களா ,என்று கேட்டதும் , அப்பா வோ ” நீங்க எல்லாம் ஜாக்கிரதையா போனீங்களா” னு சம்மந்தம் இல்லாம பேசுவதும் நா யோசிக்க அரம்பிச்சிட்டேன் ,
ஏதோ நடந்து இருக்குனு , நாளைக்கு சரஸ்வதி அரண்மனைக்கு வர சொல்லி இருக்கா அவகிட்ட கேப்போம் அப்பறோம் அப்பாவ விசாரிப்போம் , என்று மனத்திற்குள் சொல்லிக்கொண்டே கதவை அடைத்தேன் .
மறுநாள் காலைல :
அப்பாவோட நடவைக்கைலாம் பாக்க ஆரம்பிச்சேன் , பல் வேலகிட்டே நோட் பண்ணேன் , அவர்கிட்ட வழக்கமா 6 வித்யாசத்தை கவனிச்சேன், என்னனா குளிச்சிட்டு சூரிய நமஸ்காரம் பண்ணுவாரு , நெத்தில போட்டு வைக்கல , தஞ்சாவூர் படம் வரையும் இடத்துல சாமி கும்பிடல , பட்டறைல அகர்வார்த்தி காட்டல , சுகர் மாத்திரை போடல , சட்டையை கைல மடிச்சு விடல இதுலாம் அவர் பண்ணவே இல்ல , சந்தேகம்பலமா ஆகிடுச்சு , உடனே குளிச்சிட்டு முதல்ல பசங்களுக்கு கால் பண்ணேன் ” டேய் எங்கடா இருக்கீங்க , பசங்க ” நாங்க தஞ்சாவூர்ல இல்ல மப்புல திருச்சி வரைக்கும் வந்து இருக்கோம் டா , நானோ அதற்கு ரெண்டு பேரும் பெரும் எங்க இருந்தாலும் கிளம்பி வாங்க பேசணும் னு சொல்லிட்டு கால் கட் செய்யபடுகிறது ,
பசங்க ரெண்டு பேருக்கும் ஒரே குழப்பம் , சரி சாயந்தரம் போயிடு பாத்துட்டு வரலாம்னு முடிவு பன்றாங்க ,
அப்பா கிட்ட பட்டறைல மெல்ல பேச்சு கொடுக்க ஆரம்பிச்சேன் , அப்பா என்னாச்சி பா உங்களுக்குனு , என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியும் பா ” என்று அப்பாவிடம் போட்டு வாங்குகிறான் ,
அதற்கு அப்பாவோ பதற்றமாக “அதுலாம் ஒன்னும் இல்ல பா நீ போ ” என்று சொல்ல அதற்கு நானோ மறுக்கிறேன் , இல்ல பா நீங்க ரொம்ப பயந்து பொய் இருக்கீங்க நா நம்ப மாட்டேன் சொல்லுங்க பா என்று அழுத்தி கேட்க ,
அப்பாவின் கண்கள் உடைந்து கண்ணீர் கொட்ட ” செய்ற தொழிலுக்கே துரோகம் பண்ண வைக்கிறாங்க டா ,மிரட்ட செய்றங்க சொன்னதை செய்யலைன்னா குடும்பத்தையே கொன்னுடுவேன்னு சொல்றாங்க டா , என்று கதறுகிறார் ,
“நெனச்சேன் அங்க ஏதோ பிரச்சனைன்னு என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல பா. சரி என்னத்த செய்ய சொன்னாங்க சொல்லுங்க ”
அதற்கு ” அப்பாவோ முருகன் படம் ஒன்னு எம்போஸ் பெயின்டிங் செய்யணும்னு சொன்னாங்க அதுல கோடிக்கணக்கான வைத்த பதுக்கி வெளிநாட்டுக்கு அனுப்ப போறாங்களாம் ” என்று அப்பா சொல்ல ,
உடனே சரஸ்வதிக்கு கால் செய்கிறான் .
மாரு முனையில் செல்போன் ஒலிக்கிறது , சரஸ்வதி காலை அட்டன் செய்கிறாள் ” ஹே சொல்லுங்க என்ன திடிர்னு இப்போவே கால் பண்ணிட்டீங்க நா பாக்கணும்னு சொன்னது சாயந்தரம் அதுக்குள்ள என்ன அவசரம் ” என்று கேட்க , நானோ ” சரஸ்வதி உங்க டைமண்ட் ஷாப்க்கு ஏதும் பெரிய டைமண்ட் பர்சேஸ் பன்னங்களா ” என்று கேட்க , சரஸ்வதியோ ” அதுலாம் இல்லங்க ஏன் ” , நானோ இல்ல சும்மாத்தா சாயந்தரம் அரண்மனைல பாப்போம்னு” சொல்லிட்டு கால் கட் பண்ணிட்டேன் . மறு புறம் சரஸ்வதிகோ பெரும் குழப்பம் அவள் மனதிற்குள் ” நேர்ல பாத்து கெட்டுப்போம் ” கம்ப்யூட்டர் முன்னாடி பில் போட்டுகொண்டு இருந்த சரஸ்வதிக்கு எதிரே பார்த்த காட்சி அதிர்ச்சியை கொடுத்தது , ஓல்ட் ஹவுசிங் யூனிட்டில் தன் வீட்டு முன்பு பிரச்னை பண்ண அந்த பசங்கள (பிரசன்னாவின் நண்பர்கள் ) ஓனர் ரூம்க்கு செல்ல , உடனே சரஸ்வதி ரெஸ்ட் ரூம்க்கு போயிட்டு , பிரசன்னாவுக்கு கால் செய்கிறாள் ,
நானோ அப்பாவை நல்லா சமாதான படுத்தி படுக்கவைக்க , எனக்கு கால் ஒலிக்கிறது சரஸ்வதியிடம் இருந்து ” சொல்லு சரஸ்வதி ”
சரஸ்வதியோ மெல்ல பேசுகிறாள் ” ஹே அன்னைக்கு எங்க வீட்ல வந்து பிரச்னை பண்ண பசங்க இப்போ எங்க ஓனர் ரூம்ல இருகாங்க நீ வெளில வந்து நிக்கிரியா அவங்கள பாத்து வச்சிக்கோ ” எனக்கோ யாருடா சரஸ்வதியிடம் தப்ப நடந்து இப்பாங்க அவங்க எதுக்கு அங்க வரணும் னு யோசித்துக்கொண்டே சரஸ்வதி வேலை செய்யும் அக்சி டைமண்ட்ஸ் க்கு வந்து எதிரே இருக்கும் கடையில் நின்று டீயை குடித்தது கொண்டே சரஸ்வதிக்கு கால் செய்கிறேன் ” சரஸ் ந வந்துட்டேன் அவங்க வந்த சொல்லு ” னு சொன்னதும் , சரஸ்வதியோ ” அவங்க இப்போதான் டா போனாங்க ” என்று அலுப்புடன் கூற , நானும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சென்று விட்டேன் ,
பொங்ககிட்ட வந்துட்டு இருக்கும் பொது பசங்க கால் பன்றாங்க ” எங்க இருக்கீங்கன்னு கேட்டேன் ” பூங்கால இருக்கோம் மப்புல வரியா ” என்று பசங்க சொல்ல எந்த மறுப்பும் இல்லாம பூங்கா வந்துட்டேன் ,
பசங்க ரெண்டு பேர்கிட்டயும் நா முகம் குடுத்துக்கூட பேசல ,
பசங்க “ஏன்டா எங்க மேல கோவமா இருக்க, நாங்க என்ன டா பண்ணோம் , ( நான் முறைத்து பாத்துக்கொண்டு இருந்தேன் ) மொறைக்கத மப்புல அன்னைக்கு கொஞ்சம் ஓவர் ஆகிடுச்சு டா அதன் டா அந்த பொண்ணு வீட்ல போயிட்டு பேசலாம்னு போனோம் போன இடத்துல பிரச்சனை பண்ணிட்டோம் , என்ன மன்னிச்சிடுற மச்சி ” என்று சொன்னதும் ,
நா அதிர்ந்து பொய் விட்டேன் ” என்னடா சொல்றிங்க நீங்காத பிரச்னை பண்ணாத ” என்று சட்டையை பிடிக்க பசங்க சுத்தி சுத்தி பாத்து,
பசங்க ” ரோடு மச்சி கைய எடுடா , அது மட்டும் இல்ல நாங்க பெரியா பிரச்சனைல இருக்கோம் டா மப்புல , நாங்க மட்டும் இல்ல உன் அப்பாவும் தான் ”
நானோ ” டேய் புரிய மாதிரி சொல்லுங்க டா பயமா இருக்கு டா அப்பாக்கு என்னடா பிரச்சனை , நேத்துல இருந்து மனுஷன் பயந்து பொய் இருக்காரு டா , நேத்து என்ன நடந்துச்சு , நீங்க எப்படி இதுல , உங்கள வேற அக்சி டைமண்டல சரஸ்வதி பாத்து இருக்க , அங்க ஏன்டா போனீங்க , என்று கேட்க ,
பசங்க சொன்ன ஒவ்வொரு விஷயமும் என்னை மேலும் மேலும் அதிர்ச்சி அடைய வைத்தது ,
பாசங்களோ ” மச்சி ஒரு நாள் அப்பா ஒரு நாள் தொல்லியல் துறைக்காக ஒர்க் பண்ணி குடுக்கும் பொது ஏதோ ஒரு இரும்பு பாக்ஸ் கெடைச்சி இருக்கு , உன் அப்பாவும் இது அரசாங்கத்துக்கும் , நம்ப அரண்மனை காளி கோவிலுக்கும் சொந்தமானதுன்னு , அப்பா தொல்லியல் ஆய்வளர்கிட்ட ஒப்படைச்சிட்டாங்க டா ( பிரசன்னா அவர்கள் பேசுவதை காட்சியகம் செய்து பார்க்கிறான் ) ஆனா ஒருநாள் அத , ஒரு ஆபிசர் ஓபன் பண்ணி பாக்குறார் , உள்ளே அளவுக்கு அடங்க வைரம் இருப்பதா பார்த்து அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் மூழ்கி போக , அதை தனக்கு தெரிந்த ஒருவரிடம் காய் மற்ற திட்டமிடுகிறார் , பிறகு அந்த ஆபிசர் அக்சி டைமண்ட் ஓனர் செபாஸ்டின் க்கு பல ஆயிரம் கோடி டைமண்ட் கிடைக்க வழி செய்கிறார் , டைமண்டும் கிடைத்தது ,
” அப்பறோம் மப்புல கிடைச்ச வைரத்த வெளிநாட்டுக்கு அனுப்ப திட்டம் போட்டான் மப்புல அவன் , அதுலயும் அவனுக்கு வெற்றிதான் ,ஆர்டர் கிடைச்சதும் கைமாதலாம்னு இருக்கும் போதுதான் , ”
(செபாஸ்டின் அலுவலகம் ) அவனுக்கு ஒரு கால் வருகிறது ” ஹேலோ என்னாச்சி எப்போ நம்ப இத வெளிநாட்டுக்கு அனுப்புறது ,நா டீல் பேசிட்டேன் ” என்று செபாஸ்டின் சொல்ல ,மறுமுனை காலில் ” ஸாரி நண்பா இப்போ இத பண்றது டோடல் ரிஸ்க் ஏன்னா நேர்மையா நெறய பேர் வந்துட்டாங்க இப்போ ஏதும் நடக்காது , அதையும் மீறி பண்ணா , ஒன்னும் வேளைக்கு ஆகாது…. நாம எல்லாரும் களி தான் சாப்பிடணும் ” என்று சொல்லி போன் ஐ கட் பண்ணதும் , சிறிது நேரம் யோசிக்கிறான் , சொன்னவேலையை சரி முடிச்சே ஆகணுமே , என்று சிந்திக்க ,
பசங்களோ ப்ரசன்னாவிடம் ” அந்த நேரம் பாத்து அந்த வைரத்த கொடுத்த மூதேவி வைரத்துல ஏதோ பிரச்சனைனு வந்துட்டான் மப்புல செபாஸ்டின் க்கு ”
(செபாஸ்டின் அலுவலகம் ) தொல்லியல் ஆபிசர் ” ஸாரி சார் உங்களுக்கு குடுத்த ஏதாவது பணம் குடுப்பிங்கனு பாத்தா நீங்க இப்படி இழுக்கடிக்கிறிங்க , அத வேற கேட்டு கேட்டு ஒவ்வொரு நாலும் உயிரை எடுக்குறாங்க சார் , என்ன கேட்டாங்க நா இரும்பு போட்டியே இல்லனு மறைச்சிட்டேன் , இப்போ அந்த ஆர்ட்டிஸ்ட் கிட்ட கேட்டுடா முடிஞ்சிடும் நம்ப பொழப்பு ”
செபாஸ்டினோ யோசிக்கிறான் ” ஆமா ஆர்ட்டிஸ்ட் ஆ ஒரு பெயின்டிங் ஆர்டிஸ்ட்க்கு அங்க என்ன வேல ” என்று கேட்டதுக்கு
அவரோ ” சுதை வேலை செய்றதுக்கு அவரத கூப்பிடுவாங்க ”
செபாஸ்டின் யோசிது ஒரு முடிவை எடுக்கிறான் , அந்த அபிசரை நம்பிக்கை கொடுத்து அனுப்பி விட்டு தனக்கு தெரிந்த ஒருவரை வைத்து சாமிநாதன் ஆர்ட்டிஸ்ட் வீட்டை நோட்டம் விடுகிறான் , அவன் குடும்பத்தை பற்றியும் ,இந்த வீட்டுக்கு தெரிந்த வந்து போற ஆட்கள் யார் யார் என முழுக்க விசாரித்துவிட்டு களத்தில் இறங்குகிறான் ,
நானோ ” ஆமா விசாரிச்சான் சரி நீங்க எப்படி டா அவன்கிட்ட மாட்னிங்க ”
அதற்கு பாசங்களோ ” உனக்கு நாங்க தான friends அத பிரஸ்ட் எங்கல தூக்கிட்டான் , இப்போ வரைக்கும் பயந்து பயந்து வாழ்த்துகிட்டு இருக்கோம் , அதன் அன்னைக்கு நீ குப்ட போதுகூட உன் வீட்டுக்கு நாங்க வரல ,
நானோ “சரி டா அன்னைக்கு உங்க கூட்டிட்டு போயிடு என்ன சொன்னாங்க ”
பசங்களோ தயங்கி தயங்கி நிற்க , நான் கோபமாக ” சொல்லுங்கடா ”
பசங்க ” அப்பாகிட்ட ஒரு ஆர்டர் தரமாதிரி அவரை ஏன் இடத்துக்கு கூட்டிடுவாங்கனு செபாஸ்டின் சொன்னாங்க டா ( நன் பார்க்கிறேன் ) கூட்டிட்டு வரலைனா உன்ன ஒன்னும் பண்ண மாட்டேன் உன் குடும்பத்தை தூக்கிடுவேன்னு மிரட்னாண்டா மப்புல ”
சரி அப்பாகிட்ட என்ன சொன்னான் அவன் இதுல சரஸ்வதிக்கு ஏதும் சம்மந்தம் இருக்க என்று நான் கேட்க ,
அதற்கு பசங்களோ ” டேய் சரஸ்வதி தங்கம் மாதிரி டா ,பாவம் அவளுக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல , ஆனா இப்போ அவ அங்க வேல பாக்குறது நல்லதுக்கு இல்ல மப்புல ”
நானும் சிறிது யோசித்து ” நீ சொல்றதும் நல்லதுதான் சரி நா அத அவகிட்ட வேற மாதிரி சொல்லிக்கிறேன் , அப்பாகிட்ட என்ன சொன்னாங்க ” என்று அழுத்தமாக கேட்க ,
பாசங்களோ ” அப்பாவை 3டி எம்போஸ் ல ஒரு முருகன் படம் வேணும்னு சொன்னான் டா , அப்பறோம் எம்போஸ் பண்ற மாவுக்குள்ள வைத்த கலந்து படத்தோட செத்து வெளிநாட்டுக்கு அந்த தஞ்சாவூர் படம் மூலமா கடத்துறதுதான் அவனோட திட்டம்னு சொன்னான் டா , ( நானோ அட பாவிங்கள இதைத்தான் கடத்தலானு நெனச்சேன் இதுலயும் பண்ணிட்டிங்களானு சொன்னேன் ) அப்பறோம் அப்பா அதுக்கு ஒதுக்களை அதுக்கு அப்பாவை ” என்று இழுக்க …
கோவமாகி ” அப்பாவை சொல்லுங்க டா ”
” அப்பாவை அடிச்சி மெரட்டிட்டான் டா அவன் , பாவம் அப்பா பயந்து பொய் எல்லாத்துக்கும் ஓத்துக்கிட்டு திருப்பி வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டான் , இப்போ கூட உன் வீட்டுக்கிட்ட எப்பவும் அவனோட ஆளுங்க சுத்திக்கிட்டே இருப்பாங்க , அப்படி வேவு பாத்துதான் நீயும் சரஸ்வதியும் லவ் பன்றிங்கனு எனக்கும் தெரிஞ்சது , உன் அப்பாகும் தெரிஞ்சது ” என்று பசங்க சொல்ல ,
ஆச்சார்ய அதிர்ச்சியில் “என்னது அப்பாக்கு விஷயம் தெரியுமா ”
“ஆமா மச்சி அப்பாக்கு விஷயம் தெரியும் , இப்போ அது முக்கியம் இல்ல அப்பாவை இதுல இருந்து காப்பாத்தணும் டா ”
யோசித்தவர் நிற்க சரஸ்வதியிடம் இருந்துது கால் வருகிறது , அதை அட்டன் செய்கிறேன் ” என்னங்க வரிங்கால அரண்மனைக்கு ,நா வந்துட்டு இருக்கேன் ”
” ஹ்ம்ம் வந்துட்டே இருக்கேன் சரஸ்வதி “என்று சொல்லி விட்டு நண்பர்களை ஜாக்கிரதையா இருக்க சொல்லி விட்டு அரண்மனைக்கு செல்கிறான் ,
மாலை 4.30 மணி
அரண்மனை ஸ்டோன் பெஞ்சில் சரஸ்வதி அமர்ந்து இருந்த , என்னுடைய வருகைக்காக ,

நானும் வந்தடைந்தேன் , என்னை பார்த்ததும் எழுந்து “வாங்க வாங்க என்ன சார் இவ்ளோ லேட் ரொம்ப பிஸியோ ”
அதற்கு நான் கூறினேன் ” இல்ல சரஸ்வதி கொஞ்சம்தலைவலி அதன் ”
சரஸ்வதி ” என்னாலேயே தலைவலி ”
நான் “சே அப்படிலாம் இல்ல சாப்டியா என்ன திடிர்னு ”
சரஸ்வதி ” ஒன்னும் இல்ல பாக்கணும்னு போல தோணுச்சு அதன் ”
( நானோ தலையை கொதி விட்டுக்கொண்டே சிரித்தேன்) அம்மா நேத்து எதுக்கு பதட்டம் இருந்திங்க ஏதும் ப்ரோப்லேம் ஆ ”
நானோ : இல்ல சரஸ் டைம் ஜாஸ்தி ஆகிடுச்சில அத பயந்துட்டேன் ,
சரஸ்வதி : ‘ அப்பாநா ரொம்ப புடிக்குமா ”
நான் ” அப்பாவை புடிக்கலைனா எப்படி , அப்பறோம் நா ஒன்னும் சொல்லணும்னு நெனச்சேன் ஆனா சொல்ல பயமா இருந்துச்சி ”
சரஸ்வதியோ ” எனக்கும் தா ,( அப்போது கை கோர்த்த மாதிரிபோறத ரெண்டு பேரும் பாக்குறாங்க , அப்போ சரஸ்வதி கேக்குற ) எனக்கு ஒரு ஆசை இருக்கு செய்விங்க la ”
நானோ அதற்கு ” என்ன சரஸ் சொல்லு செய்றேன் ”
சரஸ்வதி : எனக்கு அது மாதிரி கை கொடுக்கணும்னு அசையா இருக்குங்க ”
என்று சரஸ்வதி சொன்னதும் எனக்கு ஒன்னுமே புரியல ,
வெக்கத்துல ரெண்டுபேருமே நாக்க கடிச்சிகிட்டு சிரிச்சோம் ,
காப்போம் மெல்ல அவ கையோட கை கோர்த்து அரண்மனை வளாகம் வரைக்கும் போயிடு வந்தேன் ,
அது வரைக்கும் வார்த்தையே வரல , சரஸ்வதி வீட்டுக்கு அனுப்பும் போது ஒன்னு சொன்னேன் ” இனிமே நீயே கை விட்டாலும் நா விடமாட்டேன் டி உன்ன ….அது சரி….. எப்படி ஏன் மேல லவ் வந்துச்சி ”
சரஸ்வதி ” ச்சி போடா பொறுக்கி ”
நானோ ” எனது பொறுக்கிய , புருஷன அப்படிலாம் சொல்ல கூடாது ”
சரஸ்வதி : போடா மூஞ்சி .
அப்படியே கோவிலுக்கு போயிடு வீட்டுக்கு வந்து பார்த்தால் வாசலில் இருவர் நின்று கொண்டு இருந்தனர் , அவர்களிடம் யார் நீங்க என்று கேட்டதும் “நீ யாரு னு மரியாதை இல்லாம கேட்டாங்க ” நானும் ” ஏன் வீட்டுக்குங்க என்று சொன்னதும் ” அப்படியா தம்பி உள்ள போங்க அப்பா கிட்ட படம் வரைய குடுத்து இருந்தோம் அதன் ”
நானோ ” 3டி எம்போஸ் பெயின்டிங் ஆ என்று கேட்டதும் ”
உடனே அவர்கள் முகத்தில் மிரட்டல் தோரணையில் ” ஆமாண்டா போடா உள்ள கேள்வி கேட்ட சங்க அறுத்துடுவேன் ” என்று வயிற்றில் கத்தியை வைத்து மிரட்டி பேச ,
நான் சற்றும் பயப்படல ” ஹே குத்ரா டேய் குத்தி பாரு ,கொய்யால அத்தனை பேருக்கும் உடுக்க அடிச்சிடுவேன் ஒடுங்கடா ”
அதற்க்கு அவர்கள் ” டேய் நாங்க யாருனு தெரியுமா ”
நான் ” டேய் தெரியும் டா கோவிலுக்கும் அரசாங்கத்துக்கும் சொந்தமான வைரத்த அதே சாமி மூலம் விக்க நினைக்கிற திருட்டு தே …பசங்க டா …..( அவர்கள் டேய் டேய் ) டேய் மூடுங்கடா ,நீங்க எங்க அப்பாவ அடிக்காம இத செய்ய சொல்லி இருந்த நானும் கூட இருந்து இத பண்ணி குடுத்து இருப்பேன் ,ஏன் அப்பமேலயே கைய வச்சிட்டீங்கல்ல ,வீட்டுக்குள்ள வந்த வைரத்தை எப்படி திருப்பி எடுப்பிங்கனு பாக்குறேன் ,
(உள்ளே எங்க அப்பா உள்ள வேலை பாத்துகிட்டு இருக்காரு ),
அதற்கு அவர்கள் ” டேய் வைரதுக்கு ஏதாச்சும் ஒன்னு ஆச்சி , எங்க அண்ணா உன்ன உன் குடும்பத்தை கொளுத்திடுவாங்க டா ”
நானோ ” ஹே ஹே சத்தம் சத்தம் நா எவ்ளோ பொறுமையா பேசுறேன் , அதுமாதிரிதான் நீயும் பேசணும் , உன் அண்ணனை இங்க வார சொல்லு ”
ஆட்கள் கேட்கிறார்கள் ” எதுக்கு ம்….. ”
நான் ” ஹ்ம்ம் டீல் பேசணும் , போயிட்டு கூட்டிட்டு வாங்க போங்க ……. போங்க கூட்டிட்டு வாங்க ”
சந்தை விட்டு வெளியே வந்ததும் ஆட்கள் செபாஸ்டினுக்கு கால் செய்கின்றனர்
” அண்ணே கொஞ்சம் சாமி வீட்டுக்கு வாங்க அண்ணா ,
( மறு பக்கம் செபாஸ்டின் குரல் ” எதுக்குடா என்ன பண்றிங்க ஏதும் பிரச்சனையா ” )
ஆமா அண்ணா சாமி பய்யன் வைரத்த வச்சிக்கிட்டு தர மாட்டேன்னு சொல்றான் அண்ணா
” ( சாமி என்ன பன்றான் ) அவர் உள்ள வேல பாத்துகிட்டு இருகாங்க அண்ணா ஆனா அவன் பையன் தன் அண்ணா பிரச்சனை பண்றான் டீல்பேசணுமாம்
( முட்டா பயலுகளா என்ன ட டீல் வெங்காயம்னு நாலுதட்டு தட்டி உள்ள பொய் உக்காருங்கடா ) ஓகே அண்ணா” என்று சொல்லி இணைப்பை துண்டித்து விட்டு பிரசன்னாவை அடிக்க செல்கிறான் ,
பிரசன்னா அவர்களை அடித்தது விடுகிறான் ” டேய் போயிட்டு சொல்லு செபாஸ்டின் கிட்ட …… நேரா வந்த வைரம் கிடைக்கும் இல்ல அக்சி டைமண்ட் கு பூட்டுதான் பொய் சொல்லு , எங்க அப்பா தான் நல்லவரு நா பொறுக்கி ”
அடியை வாங்கிட்டு அந்த இருவரும் செபாஸ்டின் அலுவலகத்துக்கு ஓடுகின்றனர் ,
நானோ ” என்னடா வாழ்க மொக்கையா போகுதேன்னு பாத்தேன் ,ம்ம்ம் பரவால்ல சூடு புடிக்கித்து ”
அவர்கள் செபாஸ்டினிடம் நடந்ததை கூறியதும் செபாஸ்டினுக்கு கோவம் பெருக்கெடுத்தது ஆட்களை அழைத்துக்கொண்டு சாமி வீட்டிற்கு வருகின்றனர் ,
வாசலிலே பிரசன்ன அமர்ந்து கொண்டு இருக்கிறான் , அவன் மனதிற்குள் ஒரே சிந்தனை ” நம்பபாட்டுக்கு பெரிய இடத்துல கை வச்சிட்டோம் , ஒருவேளை அவன் நம்பளயோ நம்ப வீட்ல உள்ளவங்களையோ கூடாது முருகா நீதா காப்பாத்தணும் ”
மனதிருக்குள்ள வேண்டி முடித்த கையோடு திரும்பி பார்த்தால் செபாஸ்டின் ஆட்களுடன் வந்து கொண்டு இருந்தான் , அப்போது ப்ரசன்னாவுக்கு ஒரு யோசனை உடனே சமாளிக்க ஆரம்பிக்கிறான் ,
செபாஸ்டின் அண்ணனை பார்த்து ஆச்சார்யா புன்னகை செய்கிறான் ” அண்ணா என்ன அண்ணா நீங்க பொய் ஏன் வீட்டுக்குலாம் வந்து இருக்கீங்க அண்ணா ( செபஸ்டின்க்கு ஒன்றும் புரியவே இல்ல ) சொல்லி இருந்த நாங்களே வந்து இருப்போம்ல அண்ணா ”
செபாஸ்டினோ ” ஏதோ டீல் பேசனும்னு சொல்லி ஏன் ஆலா அடிச்சி விட்ருக்க என்ன திமிரா …….”
நானோ ” அண்ணா ஏன் வீடு வாசல்ல என்ன அடிக்க இவன் யாரு , இவன் எதுக்கு ஏன் வீடு வாசல்ல நிக்கணும் , என்ன அடிக்க வந்தான் நா அடிச்சேன் ”
செபாஸ்டினோ ” உன்ன அடிக்க சொன்னதே நான்தான் அப்போ என்ன அடிப்பியா ”
தில்லாக ” ஏன் மேல கைய யாரு வச்சாலும் அடிப்பேன் அண்ணா, அது நீங்களா இருந்தாலும் வைபேன் ,
செபாஸ்டின் ” யார் கிட்ட பேசிட்டு இருக்கானு தெரியுமா ”
நானோ ” எங்க அப்பாகிட்ட மன்னிப்பு கேக்கணும் இல்ல வைரத்த பொடியா நுனிக்கி சாக்கடைல போடுவேன் ,அப்பறோம் உன் 100 கோடி கனவும் கோவிந்தா தான் .
செபாஸ்டின் முறைத்து கொண்டு மிரட்ட ஆரம்பிக்கிறார்
” டேய் லோ கிளாஸ் என்னோட மொத நெனைக்கிறிய , என்னோட தகுதிக்கு இங்க வச்சதுக்கே நீ பீல் பண்ணுவ இதுல என்னோட டைமண்ட்ஸ் ஆ வச்சிக்கிட்டு என்னையே மிரட்ட ம்ம்ம் , இத வேலைய பண்ணி முடிச்ச உனக்கு உன் அப்பனுக்கு ஒரு பெர்ஸன்ட் தரேன் ஒரு பெர்ஸன்ட் நா எவ்ளோன்னு தெரியுமா ஒரு கோடி ”
நானோ பார்த்து நக்கலா சிரிக்க ஆரம்பிட்டேன்
” டேய் கேடி கோடி தைரிய நீ பண்ற வேலையே கேவலமான வேல , இதுக்கு புனிதமான வேலைலாம் அசிங்க படுத்திகிட்டு இருக்கீங்க cha தஞ்சாவூர் ஓவியத்துல கடவுள் வாழ்ந்துகிட்டு இருக்கு அதுல நீ பண்ற அயோக்யத்தனத்துக்கு தோன போகுமா , அப்பாகிட்ட மன்னிப்பு கேளு “னு சொல்லிட்டு இருக்கும் பொது ,
சரியா சரஸ்வதி சந்து உள்ள நடந்து வர , அத செபாஸ்டின் பார்க்கிறான் யோசிக்கிறான் , பிரசன்னாவும் என்ன சொல்ல போறோம்னு தெரியாம நிற்க ,
சரஸ்வதியோ “சார் ……. என்ன சார் இங்க .. சார் வாங்க சார் வீட்டுக்கு .. என்ன சார் இங்க ”
செபாஸ்டின் ” நோ நோ இங்க ஆர்ட்டிஸ்ட் சாமிய ”
நானோ அப்பாவை மரியாதை இல்லாம பேரா சொன்னதும் ” ம்ம்ம்ம் என்ன சார் சொன்னிங்க ”
செபாஸ்டின் ” ஹோ சாரி தஞ்சாவூர் பெயின்டிங் ஆர்ட்டிஸ்ட் சாமிநாதன் சார் ah பக்க வந்து இருக்கேன் ‘”
சரஸ்வதியோ ” ஹே சார் அ உள்ள கூட்டிட்டு போடா ”
செபாஸ்டின் ” thank you ”
சரஸ்வதியோ ஓனரை பார்த்த மகிழ்ச்சியில் ” சார் காபி சாப்பிடுறீங்களா ”
செபாஸ்டின் ” ஸ்ட்ரோங் அ வேணும் … தென் பாக்கெட் பால் இல்லையே ”
அதற்கு நான் பதில் சொல்கிறேன் ” இங்க எல்லாம் கறவை மாட்டு பால் தான் ”
செபாஸ்டின் ” பாக்கெட் பால் சாப்பிட கூடாது ,பிலால் கலப்படம் ”
நானோ “ஆனா நீங்க கலப்படம் தான செய்ய சொல்றிங்க ”
செபாஸ்டின் ஒரு நொடி நின்னு மொறைக்கிறார் .
அதற்கு நானோ ” வா வா ” னு சொல்லிட்டே அப்பாவின் பட்டறைக்கு
உள்ள கூட்டிட்டு போனேன் அப்பா உள்ள எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு இருந்தாரு அப்போ செபாஸ்டின்
” ஹோ இதுதானா உன் அப்பா பெயிண்ட் பண்ற இடமா ஒரே கலர் full அ இருக்கு ”
“என்ன கிண்டலா” என்ன கேட்க .,
அதற்கு செபாஸ்டின் ” இல்ல இல்ல சும்மா சொன்னே ”
நானோ செபாஸ்டினிடம் ” எதுக்காக என் அப்பாவை இதுல மாட்டிவிட்ட .. வேற யார்ட்டயாச்சும் போய்ட்டு இருக்கலாமே ”
செபாஸ்டின் ” ஹ்ம்ம்ம் குட் கொஸ்டின் முதல்ல உங்க அப்பா நல்லவர் , நேர்மையானவர் ”
கடுப்பில் ” ஹே அது எங்க எல்லாருக்கும் தெரியும் நீ சொல்ல தேவ இல்ல ”
அதற்கு ” ஓகே ஓகே கூல் தொல்லியல் துறை நடத்துன ஆய்வுக்காக ( காட்சியக்கம் )ஒரு பத்து முக்கியமானவங்க மட்டும் தேர்ந்தெடுத்து ஒரு இடத்துக்கு ஆய்வுக்காக அனுப்பி வச்சி இருகாங்க அங்க உன் அப்பா பலவிஷயத்தை சுதை வேலை மூல எடுத்து குடுத்து இருகாங்க , 3 வது நாள் நடத்துன ஆய்வுல உன் அப்பா சாமிநாதன் ஒரு பெரிய இரும்பு போட்டியா கண்டு பிடிக்கிறார் , அந்த இரும்பு பெட்டிமேல எங்க ஆளுக்கு ஒரு சந்தேகம் வர , நா அத ஓபன் பண்ண சொன்னேன் , அவனும் பண்ணிட்டான் , பாத்தா அக்சி டைமண்ட்ஸ் க்கு சொந்தமான வைரம் அதுல இருந்துச்சி , விடுவன நான் . மொத்தத்தையும் அள்ளிட்டு வந்துட்டேன் .
நானோ ” டேய் கோவில் சொத்துக்கு போகவேண்டிய வைரம் அத எடுக்க பாக்குற , நீ செய்ற பாவத்துக்கு எங்க ஏன் அப்பாவை உள்ள இழுக்குற உன்ன சும்மா விசா மாட்டேன் டா ” என்று செபாஸ்டியனை அடிக்க முன் செல்லும் பொது சரஸ்வதி காப்பியை எடுத்துக்கொண்டு வர சாந்தமாகி இருந்து விடுகிறான் ,
சரஸ்வதி ” சார் எங்க அங்கிள் நல்ல படம் வரைவாங்க ”
செபாஸ்டின் “அதனாலதான் மா இங்க வந்து இருக்கேன் , சூப்பர் ( நான் அவனை பார்க்கிறேன் ) காபி சூப்பர்னு சொன்னேன் , ஓகே ம கொஞ்சம் பேசிடுட்டு இருக்கோம் ”
சரஸ்வதி ” ஓகே சார் வாரேன் , (பிரசன்னாவை பார்த்து) சார் அ பாத்துக்கோ ,”
செபாஸ்டின் ” அதுலாம் குடுத்துவரு குடுத்துதானே ஆகணும் ” என்று ஜாடையாக சொல்ல , உடனே பிரசன்னாவின் அப்பாவை பார்க்க என்ன சாமி வேல ஸ்டார்ட் பண்ணிட்டீங்க போல டைமண்ட் ஏதும் மிஸ் ஆகக்கூடாது ஓகே ”
அப்பாவோ என்னை பார்த்துவிட்டு செபாஸ்டினை பார்க்கிறார் ” சரி சார் ”
செபாஸ்டின் ” எப்போ முடியும் சாமி ”
அப்பா ” ஒரு நாள் நாள் ஆகும் ”
செபாஸ்டின் “நோ நோ நாளைக்கு காலைலயே வேணும் ”
அப்பா ” எம்போஸ் மாவு காயணும் அதுலதா வைரத்த பாதுகா முடியும் இல்லனா முடியாது”
செபாஸ்டின் ” ஓஓ god என்ன சாமி ஏதாச்சும் பண்ணி காயா வை ”
நானோ ” பண்ணவே போறது இல்ல அப்பறோம் எங்க காயவைக்கிறது ”
செபாஸ்டின் ” டேய் லூசு மாதிரி பேசாத இத நாளைக்குள்ள வெளிநாட்டுக்கு அனுப்பனும் , நந்த முடிச்சி குடுத்த 1 பெர்ஸன்ட் தரேன்னு சொல்றேன் இல்லையா வேணாமா 3 பெர்ஸன்ட் தரேன் 3 கொடியாட்சி டா டேய் , உன் லைப் ல அவ்ளோ பணத்தை பாத்து இருப்பியா இங்க இருந்து வெளில கொண்டு போக முடியாது டா ”
நானோ ” எல்லாத்துலயும் கலப்படம் வந்துடுச்சி , முதுகு வலிக்க இந்த மாதிரி கைவினை பொருளை செஞ்சி , செஞ்சதுக்கு கூலி வாங்கு வலி எங்களுக்குத்தான் டா தெரியும் , இப்போ அதுலயும் பிராடு பண்ண ட்ரை பன்றிங்களாடா , நல்ல வேல முத்த தடவையா எங்ககிட்ட வந்த வேற யார்கிட்டயும் நீ போய்ட்டு இருந்த , தஞ்சாவூர் ஓவியத்த கள்ள கடத்தலுக்கு உஸ் பண்ண விட்ருப்பா இப்போவே போலீஸ்க்கு கால் பண்றேன் உன்ன உள்ள தூக்கி வைக்கிறேன் ” என்றதும்
செபாஸ்டிங்கும் பிரசன்னாவுக்கும் அந்த ஓவிய தொழில் குடத்துக்குள்ளேயே சண்டை வருகிறது , இருவருக்கும் மோதல் பெரிதாக ஆரம்பித்தது , அப்போது , செபாஸ்டின் ஆட்களுக்கும் பிரசன்னாவுக்கு பெரிய சண்டை நடக்க ஆரம்பிக்கிறது , வெளியே சரஸ்வதி கொண்டு இருக்கும் பொது செபாஸ்டினுக்கு கொடுத்த டம்ளர் வெளியே வந்து விழுகுறது , உடனே சரஸ்வதி கையில் இருந்த மொபைல் போனில் இருந்த விடியோவை தஞ்சாவூர் எஸ் பி அலுவலகத்துக்கும் , தொல்லியல் துறை தலைமை ஆய்வு பொறுப்பாளருக்கும் பொறுப்பாளருக்கும் அனுப்பி வைத்து விட்டு விடுகிறாள் உடனே அவர்களுக்கு கால் செய்து விஷயத்தை கூறுகிறாள்
” வணக்கம் சார் , பிரசன்ன அனுப்பி வைக்க சொன்ன ஆதாரத்தை அனுப்பி வச்சிட்டேன் சார் , ( தொல்லியல் துறைக்கும் பேசுகிறாள் ) பிரசன்னா சொன்ன ஆதாரம்தான் சார் அது ஆய்வுல எடுத்து 8 பாக்ஸ் அதுல ஒன்னு வைரம் இப்போ அது செபாஸ்டின் கிடந்தான் சார் இருக்கு சிக்கிராம வாங்க சார் ” என்று சொல்லி விட்டு கால் கட் செய்கிறாள் (காட்சியக்கம் ) பிரசன்னா அரண்மனையில் பேசும் போது ” உன் ஓனர் வீட்டுக்கு வரும் பொது நீ எதிர்ச்சியமா வரமாதிரி வா அப்போ அவன் னு காபி குடு குடுத்துட்டு வெளிய போரா மாதிரி போயிடு நம்ப பெயிண்ட் வைக்கிற இடது கொஞ்சம் மறைவை இருக்கும் அங்க நின்னு அவன் வய சொல்ற எல்லாத்தையும் ரெகார்ட் பண்ணி ரெண்டு இந்த ரெண்டு பெருகும் அனுப்பிட்டு அனுப்பிட்டு கால் பண்ணு ” சரஸ்வதி வீட்டுக்குள் சென்று விடுகிறாள் ,
உள்ளே சண்டை பெரிதாக நடக்கிறது ,
உடனே செபாஸ்டின் கையில் இருக்கும் துப்பாக்கியால் சுட்டி இருக்கும் சுவாமி படங்களை சுடுகிறான் , அணைக்கு கண்ணாடிகளும் உடைகிறது , உடனே அப்பா சாமிநாதனை துப்பாக்கி முனையில் புடித்து கொண்டு பிடித்துக்கொண்ட
” டேய்ய்ய் வைத்த குடுத்துட்டு நா பாட்டுக்கு ஏன் வழில போயிட்டே இருப்பேன் , இல்ல உன் அப்பயும் உன்னையும் மேல அனுப்பிடுவேன் ,….குடுடா டேய் போன போகுதுனு பாத தல மேலலாம் ஏறி குத்துற வேணாம் வேணாம் வளர்ற பையன்ல குடுத்துடு டா ”
நானோ “டேய் அப்பாவை விட்று பிரச்னை உனக்கும் எனக்கும் தான் , அவர்மேல் கைய வச்சத்துக்கே உன்மேல செம காண்டுல இருக்கேன் ”
செபாஸ்டினோ ” டேய் ஹே த்து வைரத்த குடுடா ” என்றதும்
கையில் இருந்த மூட்டையை தொக்கி கிழே போடுகிறான் அணைத்து வைரமும் சில்லு சில்லாக தெறிக்க கோவத்தில் கத்திகொண்டே பிரசன்னாவை சுடுகிறான் ரெண்டு கூண்டுகள் தவறி தெறிக்க பிரசன்ன கிழே விழுந்து தப்பிக்கிறான் , அப்பாவை சுட நினைக்கும் பொது செபாஸ்டின் கூண்டுகள் நிறைவடைந்து விடுகிறது , கோவத்தில் பிரசன்னா அப்பாவை அடித்து தள்ளி விடுகிறான் , கிழே சிதறி கிடக்கும் கண்ணாடி பிரேமை எடுத்து பிரசன்னாவை ” 100 கோடிரூபா வைரம் டா தே …… பயலே உன்ன சும்மா விட மாட்டேன் டா ” என்று கத்திகொண்டே பிரசன்னாவை குத்த வரும்போது , ஓவியக்கூடத்தின் பின் கதவு வழியாக பிரசன்னாவின் அம்மா கொதிக்க கொதிக்க ” வடிகஞ்சை பிரசன்னாவை ” நகருடா தம்பி ….. “என்று சொல்லி செபாஸ்டின் முகத்தில் ஊற்றி விடுகிறாள் , செபாஸ்டினோ அலறிய படி சுருண்டு விழுகிறான் . அப்போது அம்மா ” என் புருஷனையும் புள்ளையையும் தப்பு பண்ண வைக்க பாக்குற ” என்று சொல்லு விட்டு வடிக்கஞ்சி எடுத்து வந்த குண்டனிலேயே ரெண்டு அடி அடிக்கிறாள் ,
பிறகு வழக்கம் போல போலீஸ் வந்து ஆட்களையும் செபாஸ்டினையும் கைது செய்கிறார்கள் , ‘சரியான நேரத்துக்கு வீடியோ வந்துச்சிஇல்லனா இந்த மாதிரி ஆளுங்கள புடிக்கவே முடியாது கோவில் சொத்தவே கொள்ள அடிக்கிறாங்களா ” என்று போலீஸ் கூறிய படியே செபாஸ்டினை இழுத்து செல்கின்றனர் , வெளியே பிரசன்னா வேலை செய்யும் லோக்கல் டிவி வந்து போலீசிடம் பேட்டி எடுக்கிறது அப்போது போலீசோ ” டேய் வைரம் எங்கடா “என்று கேட்க அதற்கு செபாஸ்டினோ ” அத தான் அவன் ஒடச்சி சேதர அடிச்சிட்டேனே ” , மறு முனை தொல்லியல் துறையிடம் வைரத்தை ஒப்படைகிறான் பிரசன்னா ( காட்சியக்கம் ” சண்டையின் பொது உடைப்பது வெறும் கண்ணாடி துகள் “) செபாஸ்டின் முறைத்துக்கொண்டே சிரிக்கிறான் ” கெட்டிக்கார பய ” என்று கோவம் நிறைந்த வார்த்தைகளை மனதிற்குள் சொல்லியவாறு போலீஸ் வண்டியில் ஏறுகிறான் .
பிரசன்னாவின் அப்பாவையும் ,ப்ரசன்னாவையும் அவ அம்மாவையும் ஊரே பெருமையை பேச சரஸ்வதி மட்டும் ஓரமாக நிற்க அவளையும் டிவியில் பேட்டி எடுபவர்களிடம் நிறுத்தி “இவ்ளோ பெரிய கொள்ளையை தடுத்த ஒரு பெரிய பங்கு சரஸ்வதிக்கு இருக்கு , அது மட்டும் இல்ல இவங்கள தான் நான் கல்யாணம் பண்ண போறேன் ” என்று ப சொல்ல அனைவரும் பிரசன்னாவை செல்லமாக பிடித்து கிள்ளுகின்றனர் .
அப்போது சரஸ்வதி சற்று பயந்தவாறு ” மாமாகிட்ட கேக்கணும் டா , அவர் பேச்ச நான் தட்ட மாட்டேன் டா ”
அதற்கு ப்ரசன்னாவோ ” சரி ” சொல்ல .
மறுநாள் காலைல ,
சரஸ்வதி வீட்டில் , பிரசன்னாவின் அம்மா அப்பா , சரஸ்வதியின் அப்பா மாமா அனைவரும் பேச ஆரம்பிக்கின்றனர் ,
சரஸ்வதியும் பிரசன்னாவும் எதிர் எதிர் நிலையில் நிற்க , மாமா பேச தொடங்குகிறார் ,
மாமா சண்முகம் கோவமாக ” என்ன நெனச்சிட்டு இருக்கீங்க எல்லாரும் பப்ளிக் அ டிவில சொல்றிங்க , நா கட்டிக்க போற பொண்ணுன்னு ,தைரியமா பேட்டி குடுக்குற , அவ்ளோ சீப்பான ஆள நீ …….. ( நானோ ஐய்யோ இல்ல ) உன்ன நம்பி வேலைக்கு அனுப்புனா லவ் பண்ணிட்டு திறிரிய ஹ்ம்ம் …( இல்ல மாமா என சரஸ்வதி சொல்ல ) என்ன இல்ல சுததலனு சொல்றியா ஏன் உன்ன அங்க பாத்தேன் இங்க பாத்தேன்னு சொல்லுவாங்க … என்ன பாக்குற பொண்ணு உள்ள வீட்ல எல்லாருக்கும் பொண்ண என்ன பண்றனு எல்லாருக்கும் தெரியும் யாரும் ஏதும் கெடுக்குறது இல்ல .. அப்படியே சொன்னாலும் கண்டா பொறம்போக்குகத கைய கழுத்தை அறுத்துக்குறது , பொண்ண பெத்த எல்லாரும் கல்லு மனசு இல்ல எல்லாம் நீங்க நல்ல இருக்கனும் தா அப்படி நடக்குறோம் . ( நானும் அவர் பேசுறதையே பாக்குறேன் ) என்னமோ பண்ணுங்க நா போறேன் ” என்று மாமா சொல்ல உடனே நான் பேச ஆரம்பித்தேன்
” நானும் சரஸ்வதியும் உங்க சம்மதம் இல்லாம கல்யாணம் பண்ண மாட்டோம் சார் , னீங்கனா எனக்கு அவ்ளோ மரியாதையா இருக்கும் அதான் நீங்க பேசும் பொது நா எதும் பேசல , உங்க வீட்கு பொண்ண என் சரஸ்வதியை கட்டி குடுங்க சார் நல்ல பத்துக்குவேன் நீங்க மாட்டிங்கனா நா திரும்பிக்கூட பக்க மாட்டேன் சார் ” என்று சொல்லி முடிக்க உடனே மாமாவோ ” ஏதவாச்சி எங்க பொண்ண உனக்கு கட்டி கொடுக்குறது ” என்று கேட்க .
பளிச்சுனு ஒரு வார்த்தை சொன்னேன் ” எதிர்வீட்டு தன சார் நா , தூங்கி எழுந்ததுல இருந்து மதியம் சரஸ்வதி என்ன குழம்பு வச்சான்னு வசன வர வரைக்கும் நைட் தூங்ம் பொது குட் நைட் சொல்றது சத்தம் வரைக்கும் உங்களுக்கு கேக்கும், அப்படியே கொஞ்ச போனா அடிவாங்கிற சத்தம்லாம் கேக்கும் ( மாமா உடனே எங்க வீடு பொண்ண அப்டிபிய ) ஐய்யோ சார் லவ் பண்ணி கல்யாணம் பண்ண எல்லாருக்கும் தெரியும் சார் பசங்கதான் வீட்ல அடி வாங்குவாங்கனு என்ன சொல்றிங்க சரஸ்வதியை குடுங்க சார் நல்ல பத்துக்குவேன் ப்ளீஸ் ” என்று சொல்லி முடிக்க வழக்கம் போல கெட்டிமேளம் சத்தத்துடன் கல்யாணமும் முடிகிறது ,
அனைவரும் செல்பி எடுத்து கொண்டே ஒவ்வொரு நண்பர்கள் தோழிகள், டிவி நண்பர்கள் , குடும்ப போட்டோக்கள் எடுப்பது என்று குதூகலமாக இருக்க இவர்கள் சேர காரணமா இருந்த ரெண்டு நண்பர்களும் வெளியே நிற்க , பிரசன்ன உள்ளே வர சொல்லி அவர்களிடம் ஒன்னு சொல்கிறான் ” பசங்க தன் friends க்கு பண்ற நல்லதுலாம் முதல்ல கேட்ட மாதிரிதான் படும் அப்பறோம் தான் தெரியும் அது எவ்ளோ நல்லதுன்னு அப்போ நினைக்கும் போது அந்த friends நம்ப கூட இருக்க மாட்டாங்க ஆனா நீங்க இருக்கீங்க தேங்க்ஸ் டா ” என்று சொல்ல நண்பர்கள் இருவரும் கண் கலங்கி கட்டி தழுவுகின்றனர் ,
மண்டபத்தையும் காலி செய்து விட்டு வீடு செல்கின்றார் ,
பிறகு வீட்டின் மடியில் நின்று கொண்டு
பிரசன்ன ” என்ன டி அப்படி பாத்துகிட்டு இருக்க , என்ன புடிச்சி இருக்க ”
சரஸ்வதி ப்ரசன்னாவிடம் கேட்கிறாள் ” புடிக்கம்தான் கல்யாணம் பண்ணுவாங்களா டா , அம்மா என்ன எப்படி ட லவ் பண்ண ஆரம்பிச்ச ”
” அதுலாம் பெரிய கதை அப்பறோம் சொல்றேன் , இப்போ சொன்ன அடுத்த ஷோக்கு டைம் ஆகிடும் டி பொண்டாட்டி “என ப்ரசன்னா சொல்ல
சரஸ்வதியோ ” போடா புருஷ “

No comments:

Post a Comment