Monday, 5 February 2018

மூன்று நண்பர்கள்

அந்த ஓட்டலுக்கு மூன்று நண்பர்கள் தங்க வந்திருந்தனர். அவர்களுக்கு ஏழாவது மாடியில்தான் தங்க அறை கிடைத்தது. ஓட்டல் முதலாளி அவர்களிடம், ""இரவு பத்து மணிக்கு மேல் வந்தால் லிஃப்ட் வேலை செய்யாது. அப்புறம் நூறு படிகளை ஏறித்தான் உங்கள் ரூமுக்குப் போக முடியும். அதனால் பத்து மணிக்குள் வந்துவிடுங்கள்'' என்றார் கண்டிப்புடன்.

 ஆனால் நண்பர்கள் வெளியே போய்விட்டுத் திரும்பி வரும்போது இரவு 11 மணியாகிவிட்டது. லிஃப்ட் வேலை செய்யவில்லை. மூவரும் மூச்சு வாங்க படியேறி ரூம் வாசலை அடைந்தனர்.

 நண்பர்களில் ஒருவன் சொன்னான்: ""நான் அறைச் சாவியை ரிசப்ஷனில் கொடுத்திருந்தேன். வரும்போது ஞாபக மறதியால் அதை வாங்கி வரவில்லை. யாராவது கீழே போய் எடுத்துட்டு வர முடியுமா?''

 இன்னொருவன் சாவியை வாங்க படிகளில் இறங்கி கீழே போய்விட்டு மூச்சிரைக்க இரைக்க மாடிப்படி ஏறி வந்தான்.

 ""ரிசப்ஷனில் சாவியைக் கொடுக்கலையாமே'' என்றான் சிறிது கோபத்துடன்.

 ""ஆமாம்.. சாவி என் பேண்ட் பாக்கெட்டில்தான் இருக்கு'' என்று சாவியை எடுத்துப் பூட்டைத் திறக்க முயன்றான். பூட்டுத் திறக்கவில்லை.

 ""ஏன் திறக்கமாட்டேங்குது. நாம் ரூம் மாறி வந்துட்டோமா?'' என்று கேட்டான்.

 அதற்கு மூன்றாமவன் சொன்னான்: ""நாம் தங்கியிருந்தது இந்த ஓட்டல் இல்லை. அது பக்கத்துத் தெருவில் இருக்கு''

No comments:

Post a Comment