Monday, 5 February 2018

எமன் வந்தாலும் பரவாயில்லையே..

முதியவர் ஒருவர் காட்டில் விறகுகளை வெட்டிச் சுமந்து கொண்டு வந்தார். வீடு அதிக தூரத்தில் இருந்தது. அவரால் விறகுக் கட்டைத் தூக்கிக் கொண்டு நடக்க முடியவில்லை.

""ஐயோ... இந்த வயசிலே இப்படிக் கஷ்டமா? எமன் வந்தாலும் பரவாயில்லையே...'' என்று அலுத்துக் கொண்டு விறகுக் கட்டை தரையில் இறக்கி வைத்துவிட்டு, ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தார். அவர் கண்முன் எமன் தோன்றினான். ""நான் எமன். வந்துவிட்டேன். உனக்கு என்ன வேணும்?''

முதியவர் திடுக்கிட்டார். பின்பு சமாளித்துக் கொண்டு சொன்னார்: ""கொஞ்சநேரம் இளைப்பாற இந்த மரத்தடியில் உட்கார்ந்து விட்டேன். இந்த விறகுக் கட்டைத் தூக்கி என் தலையில் வைக்க யாருமில்லை. அதனால்தான் உன்னைக் கூப்பிட்டேன். இந்த விறகுக் கட்டைத் தூக்கி என் தலையில் வைப்பாயா?''

======================================================================= 


பணக்காரர் ஒருவர் தனது மகனைச் செல்லமாக வளர்த்து வந்தார். அவனும் எந்தவிதக் கவலையுமில்லாமல் கண்டவர்களோடு பழகி, ஊர் சுற்றி வந்தான். மகன் கெட்டுப் போய்விடுவானோ என்ற பயம் பணக்காரருக்கு வந்தது. தீய நண்பர்களோடு அவன் பழகாமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று இரவு, பகல் தூங்காமல் யோசித்து வந்தார்.

ஒருநாள் அவர் தனது மகனை அழைத்து ஆரஞ்சுப் பழங்களை வாங்கி வரச் சொன்னார். அவனும் வாங்கி வந்தான். அதில் ஒரு பழம் லேசாக அழுகத் தொடங்கியிருந்தது. மகன் அந்தப் பழத்தைத் தூக்கி எறியப் போனான். பணக்காரர் அவனைத் தடுத்துவிட்டார். ""நல்ல பழங்களுடன் அந்தப் பழத்தையும் சேர்த்து வை'' என்றார். இரண்டு நாட்கள் சென்றன. தனது மகனிடம் பழங்களை எடுத்து வரச் சொன்னார். எல்லாப் பழங்களும் அழுகியிருந்தன.

மகன் கோபத்துடன் கேட்டான்: ""அந்த அழுகின பழத்தை முதலிலேயே தூக்கியெறிந்திருந்தால் எல்லாப் பழங்களும் கெட்டுப் போயிருக்காதே? அப்பா''

""நீ சொல்வது ரொம்ப கரெக்ட். கெட்டவன் ஒருவன் உனக்கு நண்பனாக இருந்தால் போதும், முழுக்க நீ கெட்டுப் போவதற்கு. கெட்ட நண்பர்களை விட்டு உடனே நீ விலகிவிடு''

No comments:

Post a Comment