Thursday, 1 February 2018

பாட்டி வைத்தியம்

குழந்தைகள் அதிக இனிப்பு  உண்பதால் வயிற்றில் பூச்சி வருவது சகஜம். இதைத் தவிர்க்க மதியம் சாப்பிடுவதற்கு முதலில் ஒரு ஸ்பூன் சுத்தமான வேப்பம்பூவை   நெய்யில் வறுத்து சூடான சாதத்தில் ஒரு சிட்டிகை உப்பு கலந்து சாப்பிட்டால் பூச்சிகள் வராது. வாரம் ஒரு முறை இப்படிச் செய்யலாம்.download (1)
இதய நோய்க்கு ஏற்ற மருந்து பூண்டு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதிலும் பூண்டுக்கு நிகர் ஏதுமில்லை. நார்ச்சத்தும் இதில் அதிகம். குழந்தை பெற்ற பெண்களுக்கு தினமும் பாலில் பூண்டைப் போட்டு வேகவைத்து கொடுத்தால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும். இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெயில் ஆறேழு பூண்டுகளைப் போட்து வதக்கி  சுடுசோற்றில் சேர்த்து உப்பு போட்டு இரண்டு கவளங்கள் தினமும் சாப்பிட்டாலும் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்   மலச்சிக்கலுக்கும் அருமருந்து பூண்டு.download (2)
இஞ்சியை சிறிது சிறிதாக அரிந்து எலுமிச்சை சாறு உப்பு சிட்டிகை மிளகுதூள் கலந்த கலவையில் பிரட்டி நிழலில் நாலைந்து நாட்கள் காயவைக்கவும். பின்னர் அதை காற்றுப்புகாத டப்பாவில் இட்டு ஃபிரிட்ஜில் வைக்கவும். அஜீரணம் பித்தம் வாய்க்கசப்பு போன்றவற்றுக்கு இதிலிருந்து 4 துண்டுகளை எடுத்து வாயில் போட்டு மென்றால் உடனடி நிவாரணம் கிடைக்கும்bo388
துளசி இலை  கற்பூரவல்லி இலை வெற்றிலை மிளகு 2 சீரகம் கால் ஸ்பூன் சர்க்கரை கால் ஸ்பூன்  ஒன்றரை டம்ளர் நீர்விட்டு அது அரை டம்ளர் ஆகும்வரை கொதிக்கவிட்டு இறக்கி ஆறவிட்டு குடித்தால் மூன்றே நாட்களில் சளித்தொல்லை குணமாகும்.Health-Benefits-Fenugreek-menthulu-Seeds
வெந்தயம் 200 கிராம் கருஞ்சீரகம் ஓமம் சீரகம் தலா 50 கிராம் இவை அனைத்தையும் வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடி செய்யவும். அம்மியிலும் பொடி செய்யலாம். இந்தப்பொடியை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி கட்டுப்படும்.

No comments:

Post a Comment