இவரு ஓர் இடையரு.. ஆடு, மாடு மேய்ப்பவரு.. தன்னோட குரு மூலம் எல்லா ஞானமும் அடைஞ்சவரு. தென் தமிழ்நாட்ல கடல்கரை ஓரம் வாழ்ந்ததாச் சொல்றாங்க..
ஒரு நா இவரு ஜோசியப்படி கணக்கு போட்டுப் பாத்தப்ப அடுத்த பத்து, பன்னண்டு வருசத்துக்கு மழையே பெய்யப் போறதில்ல. கடும் பஞ்சம் வரப்போவுதுன்னு தெரிஞ்சிக்கிட்டாரு...
பஞ்ச காலத்துல ஆடு, மாடு சாப்பிட புல்லு, தழ இருக்காது.. எருக்கஞ்செடி ஒண்ணுதான் இருக்கும்..குடிக்கத் தண்ணி இருக்காது..கடல் தண்ணி உப்பா இருக்கறதத்தான் குடிக்கணும்..இத எல்லாம் யோசிச்ச சித்தரு தன்னோட குடிசைய மாத்திக் கட்டிகிட்டாரு.. கம்பு, கேவரகு தானியத்தை களிமண்ணுல கலந்து குடிசையோட சுவரா எழுப்பினாரு..
தெனம் ஆடு, மாடுகளுக்கெல்லாம் எருக்கம் இலைய சாப்பிடக் கொடுத்துப் பழக்குனாரு.. கடல் தண்ணியை குடிக்க வுட்டாரு.. இதனால ஆடு, மாடுகளுக்கெல்லாம் ஒடம்பு அரிக்கும்.. குடிசை சொவத்துல வந்து முதுகத் தேச்சிக்கும்.. அப்ப சொவத்துல இருந்து கொஞ்சம் தானியம் செதறும்.. அத எடுத்து நம்ம சித்தரு கஞ்சி காச்சி குடிச்சிப்பாரு.. இப்படியே நல்லா பழகிட்டாங்க
எதிர்பாத்தபடி கடுமையான பஞ்சம் வந்துச்சி.. ஊர் ஜனங்கல்லாம் வேற இடத்துக்கு போயிட்டாங்க..ஒரு பச்ச இலைய பாக்க முடியல..ஒரே வறட்சி..
வானத்துல இருந்த கெரகமெல்லாம் கீழப் பாத்து " நம்ம சக்திய ஜனங்க நல்லா புரிஞ்சுக்கணும்..நம்ம இப்ப இருக்குற பொசிசன்படி இப்பதிக்கு இங்க மழை கிடையாது " ன்னு சொல்லிக்கிட்டிருக்கப்ப புதன் கீழ ஒரு இடத்தைக் காட்டிச்சு
அங்க நம்ம சித்தரு தன்னோட ஆடு, மாடுகளோட புல்லாங்குழல் வாசிச்சுக்கிட்டு ஜாலியா கடக்கரைக்கு போய்க்கிட்டுருந்தாரு..
கெரகங்களுக்கெல்லாம் ஒரே கொழப்பம்...எப்படிடா இவனும், இந்த ஆடு மாடெல்லாம் நல்லா இருக்காங்கன்னு யோசிச்சுதுங்க..
அவன்கிட்டே நேரே பொய் கேப்போம்ன்னு பூமிக்கு கிளம்புனாங்க...
சனி " நம்ம பொசிசன மாத்தாம அங்கப் போவணும்" ன்னு சொல்லிச்சு..
அதே மாதிரி கெரகங்கல்லாம் சித்தரச் சுத்தி நின்னாங்க..
வந்துருக்கறது யாருன்னு சித்தருக்குப் புரிஞ்சுப் போச்சு..அவங்கள வரவேத்து கம்பு சாதம், பால், தயிர், வெண்ணை எல்லாம் வச்சு விருந்து கொடுத்தாரு..எருக்கம் இல சாப்பிட்டு கடல் தண்ணி குடிச்சு வளர்ந்த ஆட்டு, மாட்டு பால் அல்லவா.. இந்த மாதிரி ருசியோட பால், வெண்ண சாப்பிட்டதே இல்லன்னு சொல்லி எல்லா கெரகங்களும் விருந்த ஒரு கட்டு கட்டுச்சிங்க.. உண்ட மயக்கத்துல எல்லா கெரகங்களும் நல்லா தூங்க ஆரம்பிச்சுடுச்சிங்க..
சித்தரு இப்ப ஒரு கணக்கு போட்டுப் பாத்தாரு..எந்த கெரகம் எந்த எடத்துல இருந்தா மழை நல்லப் பேயும்..பஞ்சம் போவும்ன்னு பாத்து கெரகங்கள இடம் மாத்திப் போட்டாரு..ஒடனே செம மழ புடிச்சுது.. ஏரி, கொளமெல்லாம் நெரம்பி வழிஞ்ச்சுச்சு.. கெரகங்கெல்லாம் கண்ணு முழிச்சப்ப பஞ்சம் பறந்து போயிருந்துச்சி..வேற வழியில்லாம சித்தருக்கு வரங்கெல்லாம் தந்துட்டு வானத்துக்கு போயிடுச்சுங்க
இடைக்காட்டு சித்தரு பாட்டு ஒண்ணு பாக்கலாமா.
மனம் என்றும் மாடு அடங்கின்
தாண்டவக் கோனே! முத்தி
வாய்த்தனென்று எண்ணேடா
தாண்டவக் கோனே!
( மனம் என்பது கட்டுக் கடங்காத ஒரு முரட்டு மாடு, அது நமது கட்டுக்குள் அடங்குமானால் வீடுபேறு அடையலாம் என்று கூறுகிறார்.)
மொத்தம் இவரு 130 பாட்டு பாடியிருக்காரு
இடைக்காட்டு சித்தரு ஒரு நல்ல ஜோசியரு , Cosmologist ன்னு தெரிஞ்சுக்கலாம்.
No comments:
Post a Comment