Saturday 10 December 2016

மஹாபாரதத்தில் காணப்படும் ‘’ரத, கஜ, துரக, பதாதி’’ என்னும் நால் வகைப் படைகளைக் காளிதாசனும், அர்த்தசாஸ்திரம் எழுதிய பிராமணன் சாணக்கியனும், வியாசரும், கிரேக்க வரலாற்று அறிஞன் ப்ளூடார்ச்சும் எப்படி எழுதினரோ அதே போல சங்க காலக் கவிஞர் பெருமக்களும் போற்றிப் பாடி இருப்பதைக் காணலாம்.
இந்தியர்களை 1)ஆரியர்கள், 2)திராவிடர்கள், 3)முண்டா இன மக்கள், 4)சுருட்டை முடி—கரியவிழி—போண்டா மூக்கு ஆதித் திராவிட மலை ஜாதியினர் எனப் பிரித்து இனவெறிக் கொள்கை புகுத்தி, விஷ விதைகளைத் தூவியவர்களைப் புற நானூற்றுப் புலவர்கள் புரட்டிப் புரட்டி அடிப்பதைக் காணலாம். மஹாபாரதத்தில் உள்ள தேர், யானை, குதிரை, காலாட் படைகளை காளிதாசன் பாராட்டிய மாதிரியில் அப்படியே சங்க காலப் புலவர்களும் போற்றுவதில் இருந்து தெரிவது என்ன?
இது ஏக பாரதம்; இங்கு வடக்கு தெற்கு என்னும் வேறு பாடு கிடையா; அங்கு என்ன இருந்ததோ அதேதான் இங்கும் பின்பற்றப்படும்; தமிழ் கலாசாரம், வடக்கத்திய பண்பாடு என்று வேறு பாடு எதுவும் இல்லை; சிறிய வேறு பாடுகள் உண்டு. மணப்பாறையில் முறுக்கு நன்றாக இருந்தால், திருநெல்வேலியில் பெட்டி வெல்லம் நன்றாக இருக்கும்; பம்பாயில் ஹல்வா ருசியாகக் கிடைத்தால் கல்கத்தாவில் ரஸகுல்லாவும் டில்லியில் பூசனிக்காய் அல்வாவும் ருசியாகக் கிடைக்கும். இவ்வளவுதான்! இதெல்லாம் மேம்போக்கான சிறிய வேறு பாடுகள்! ஏனெனில் எல்லாம் சர்க்கரை-வெல்லம்-மாவின் கலப்புதான்!
அலெக்ஸாண்டரை நடுங்க வைத்த இந்தியப் படை: புளுடார்ச் சொன்னது
அலெக்ஸாண்டரை எதிர்த்து தோல்வி அடைந்த இந்திய மன்னன் புருஷோத்தமன் (போரஸ்) ஒரு சின்ன அரசன். அவனை வெல்வதற்கே அலெக்ஸாண்டர் படாத பாடு பட்டார். மகத சம்ராJயத்தின் மாபெரும் படை பலம் உலகியே நடுநடுங்க வைக்கும் அளவு கடலினும் பெரிது. இதைக் கேட்டவுடன் அலெக்ஸாண்டரின் படைத் தளபதிகள் முனுமுனுக்கத் துவங்கினர். மேலும் அலெக்ஸாண்டர் இந்தியாவுக்கு வந்தது நாடு பிடிப்பதற்கு இல்லை. இந்து மத சாமியார்களைச் சந்தித்துப் பேசி அவர்களை கிரேக்க நாட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே அவன் லட்சியம் ( காண்க எனது பழைய கட்டுரை:– நிர்வாண சாமியார்களுடன் அலெக்ஸாண்டர் ).
மகத சாம்ராஜ்யப் படைகள் எண்ணிக்கை பற்றி முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க வரலாற்று அறிஞன் ப்ளூடார்ச் தரும் தகவல்:
(ரத) தேர் — 7000
(கஜ) யானை — 8000
(துரக) குதிரை – 80,000
(பதாதி) காலாட்படை வீரர்கள்—2,00,000
அந்தக் காலத்தில் இந்தியாவில் 56 தேசங்கள் இருந்தன. இதில் 16 நாடுகள் மஹா சாம்ராஜ்யங்கள். இதில் இரண்டு மூன்று நாடுகள் சேர்ந்தால் போதும். அலெக்ஸாண்டரைக் கதறக் கதற அடித்திருக்கலாம்! கிரேக்கர், சகரர் படைகளை விக்ரமாதித்தனும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் அடித்து விரட்டியதை நாம் அறிவோம்.

No comments:

Post a Comment