Monday 12 December 2016

மாவீரன் சிவாஜியின் குரு சமர்த்த இராமதாசர்.
அவர் ஒரு துறவி எனபதால், அக்கால வழக்கப்படி, தினந்தோறும் வீடு வீடாகச் சென்று பிச்சை எடுத்து உண்பது வழக்கம்.
ஒரு நாள் சமர்த்த இராமதாசர் ஒரு வீட்டின் முனபு நின்று பிச்சை கேட்டபோது, அந்த வீட்டுப்பெண், கோபமடைந்து தான் மெழுகிக்கொண்டிருந்த சாணச் சுருணையை அவர்மீது வீசி எறிந்தாள்.
இராமதாசர், அந்த சுருணைத் துணியை குளத்தில் அலசி, காயவைத்து, அத்துணியிலிருந்த நூலைத் திரிகளாக்கினார்.
அருகிலுள்ள கோயில் விளக்கில், அந்த திரிகளை இட்டுத் தீபம் ஏற்றினாஈர்.அப்போது இறைவனிடம் அவர் இவ்வாறு வேண்டினார்:
‘’இறைவா! அப்பெண்ணிற்கு யாரிடம் என்ன கோபமோ
தெரியவில்லை? ஆனால், அவளின் உடமையான சாணித்துணி உனக்குப் பயன்படுமாறு, நான் அவளுக்குப் பயன்பட்டிருக்கிறேன்.
கோபத்தினால் தனக்கோ, பிறருக்கோ, பயன் தரும் என்றால் கோபம் கொள்வது நல்லதுதானே?’’ என்றார்.
அதைத் தற்செயலாக பின்னாலிருந்து கேட்க நேர்ந்த அப்பெண்மணி, ‘ஐயா, நான் எறிந்ததோ சாணச்சுருணை! அதனால் வருந்தியதால் மாறியது என் மனம்! அழிந்தது என் சினம்’’ என்றாள்!!

No comments:

Post a Comment