Wednesday 14 December 2016

ஒரு ஊரில் இரண்டு அண்டப்புளுகர்கள் இருந்தனர்
பொய் என்றால் பொய் அப்படி புழுகுவார்கள் ...
இருவரும் ஒரு மலையடிவாரத்தில் இருந்து கதைத்து கொண்டிருந்த போது ஒருவன் சொன்னான் இந்த மலையுச்சியில எறும்பு இரண்டு சண்டைபிடிக்குது உனக்கு தெரியுதா ..? என்று ...!
மற்றவன் சொன்னான் பாருங்க ஒரு விடை ...?
ஒரு எறும்புக்கு மூக்கால இரத்தம் வடியுது தெரியுதா உனக்கு ...என்றான் ..
அப்படி அண்டப்புளுகர்கள் இருவரும்
.....இவர்களின் தொல்லை தாங்க முடியாமல் ..இவர்களுக்கு ஒரு போட்டி வைத்து யார்
மகா புளுகர் என்று தீர்மானிப்போம் ..என்று ஊர் மக்கள் முடிவெடுத்தனர் ...
நாளை எங்கள் கோயில் கும்பாபிசேகம் ..அன்று கோபுர உச்சியில் இந்த கல்லை வைக்கப்போகிறோம்(கல்லை துணியொன்றால் மறைத்து கட்டியுள்ளனர் ) இதில் சில வாசகங்கள்
எழுதியிருக்கிறோம் அதை நீங்கள் யார் சரியாக வாசிக்கிரியலோ..அவர்தான் இந்த ஊரின் மகா புளுகர் என்று படம் பெறுவார் ...
மறுநாள் காலை இருவரும் அழைக்கப்பட்டார்கள்
கோபுர உச்சியை தூரத்திலிருந்து பார்க்கவைத்தனர் ...சரி சொல்லுங்கள்...என்ன
எழுதியுள்ளது ....?
ஒருவன் சொன்னான் -அன்பே சிவம் -என்று எதுதியிருக்கையா ...!
மற்றவன் சொன்னான் : அன்பேசிவம் என்று மட்டுமா எழுதியிருக்கு உபயம் -என்று நம்ம அய்யாவின் பெயரும் சிறிய எழுத்தில் இருக்கு என்றான் ...
ஊர் தலைவர் சொன்னார் மன்னிக்கவும்..
நாங்க அந்த கல்லை வைக்கவே இல்லை ..
அப்புறம் என்ன இருவருக்கும் தர்ம அடிதான் ...

No comments:

Post a Comment