Monday 12 December 2016

நல்ல வேளை, அதைக் கேக்கல்லை:----
ஒரு மீன்பிடிப் படகு கரைதிரும்பும் போது வழி மாறி பாறையில் மோதி சேதமானது. விபத்துக்குக் காரணம் கலங்கரை விளக்கத்தின் ஆப்பரேட்டரின் பொறுப்பின்மைதான் என்று வழக்குப் பதிவு செய்தார்கள்.
தன் கட்சிக்காரர் எவ்வளவு பொறுப்பானவர் என்று நிரூபிக்க விரும்பிய அவரது வக்கீல் விசாரணையை ஆரம்பித்தார்.
“கலங்கரை விளக்கம் மீன்பிடிப் படகுகளுக்கு எந்த விதத்தில் உதவியாக இருக்கும்?”
“கரை எந்தப்பக்கம் என்பதைக் கண்டறிய உதவியாக இருக்கும்”
“எத்தனையோ விளக்குகள் இருந்தாலும் அதுதான் கலங்கரை விளக்கம் என்று எப்படித் தெரியும்?”
“கலங்கரை விளக்கத்தில் இருப்பது சுழல் விளக்கு”
“சம்பவம் நடந்த அன்று வேலைக்குப் போயிருந்தீர்களா?”
“போயிருந்தேன்”
“எத்தனை மணிக்கு?”
”மாலை ஐந்தரைக்கு”
“எப்போது ட்யூட்டி முடிந்தது?”
“காலை ஏழு மணிக்கு”
“சம்பவம் நடந்த நேரம் என்ன?”
“இரவு பனிரெண்டு மணிக்கு சற்று முன்னதாக இருக்கலாம்”
“எப்படித் தெரியும்?”
“மீட்புப் படகு கரை சேரும் போது மணி பனிரெண்டு”
“கலங்கரை விளக்கில் சுழற்சி வேலை செய்கிறதா?”
“வேலை செய்கிறது”
“அதில் என்ன பிழை வந்தாலும் உடனடியாக சரி செய்யப் போதுமான பயிற்சி உங்களுக்கு இருக்கிறதா?”
“இருக்கிறது”
“தட்ஸ் ஆல் யுவர் ஹானர்”
நீதிபதி அந்த ஆப்பரேட்டரின் திறமையிலும் பொறுப்பிலும் முழு நம்பிக்கை வைத்து அவரை விடுதலை செய்தார். வெளியில் வரும் போது அவனுடைய வக்கீல்,
“நான் எதுவுமே பண்ணல்லை, உன்னுடைய தெளிவான, உண்மையான, அழுத்தமான பதில்கள்தான் உன்னைக் காப்பாற்றியது” என்றார்.
“சரிதாங்க. நல்லகாலம், நீங்க அந்த ஒரு கேள்வியைக் கேட்கல்லை. கேட்டிருந்தா கதை கந்தலாகி இருக்கும்”
“எந்தக் கேள்வி?”
“விளக்கு எரியுதா ஃப்யூஸ் ஆயிடுச்சாங்கிற கேள்வி”

No comments:

Post a Comment