Sunday, 8 January 2017

கழுகும் கிளியும்

ஒரு காட்டில் இருந்த வயதான கழுகிற்கு ஒரே பசி.

காட்டில் ஏதும் கிடைக்கவில்லை, ஏனென்றால் அங்கு காடே இல்லை. 

மனம் போன போக்கில் பறந்த கழுகு கடைசியில் ஒரு மலையுச்சியை அடைந்தது.

மலையுச்சியில் ஒரு சிறிய குகை. 

குகை வாசலில் பசியோடு சென்று விழுந்த கழுகு, நிமிர்ந்து பார்த்தது.

ஐந்து கிளிகள் வரிசையாக நின்றன

முதல் கிளி சொன்னது இங்கிருந்து போய்விடு என்றது

இரண்டாம் கிளி சொன்னது இரு கொஞ்சம் உணவு தருகின்றேன், தின்று விட்டு போய் விடு என்றது

மூன்றாம் கிளி சொன்னது உணவை உண்டுவிட்டு, இரவு தங்கிவிட்டு போய் விடு என்றது

நான்காம் கிள் சொன்னது நீ இங்கேயே தங்கலாம், தினமும் கிடைக்கும் எங்கள் உணவில் பாதியை உனக்கு தருகின்றோம் என்றது

ஐந்தாம் கிளி அமைதியாக இருந்தது

அடுத்த நாள் காலையில் எழுந்தவுடனே கழுகு, கிளிகளை ஒவ்வொன்றாக கொன்று தின்றது. ஐந்தாம் கிளியை கொல்ல போகும் போது, ஐந்தாம் கிளி சிரித்தது. 

கழுகு வெளியே பறந்து போனது.

No comments:

Post a Comment