Thursday 5 January 2017

ஏன்  இலக்கியம் படிக்க வேண்டும்?
தாவரம் செழித்து வளர உரம் தேவை. அதைப்போல மனிதன் நல்ல மனிதனாக வளர இலக்கியம் தேவையான ஒன்றாகும்.
*
அறிவியல் நெம்புகோல் தத்துவத்தை கற்றுத்தரலாம் ஆனால், மனிதனின் சுயநலத்தை நெம்பி எடுத்துவிட்டு பொதுநலத்தைக் கற்றுத்தருவது இலக்கியம் மட்டும்தான்.
*
கணிதம் கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல் கணக்குகளை கற்றுத்தரும் ஆனால் ,
நல்ல நண்பர்களோடு கூடவும்
தீயோர் நட்பைக் கழித்துக்கொள்ளவும்
நல்ல எண்ணங்களை பெருக்கிக்கொள்ளவும்
வாழ்க்கை பாதையை வகுத்துக் கொள்ளவும்
இலக்கியங்கள் மட்டுமே கற்றுத்தரும்
*
மனிதனிடம் தவறான செய்தியை பதிவு செய்தால் மறுக்கிறான். கணினி மறுப்பது இல்லை .
இலக்கியமே கணினி படித்த மனிதனுக்கு வாழக்கற்றுத் தருகிறது.
மனிதனை மனிதனாக உருவாக்கும் புத்தகங்கள் வரவேர்க்கப் படுகின்றன. ஆனால் அழிவைத்தரும் இலக்கியங்கள் வரவேற்கப்படுவது இல்லை.
உலகை அழிக்காமல் அவனை மனிதனாக உருவாக்கியது இலக்கியங்கள் மட்டுமே ….
"அறம் செய விரும்பு" என ஆத்திச்சூடி சொல்லித்தரும்
"
ஒருவனுக்கு ஒருத்தி'" என இராமாயணம் சொல்லித்தரும்
"
பொய் சொல்லாதே " என அரிச்சந்திர புராணம் சொல்லித்தரும்
"
கற்போடு வாழ " சிலம்பு சொல்லித்தரும்
அறிவியல் சொல்லித்தருமா ?
உடலுக்கு மருத்துவம் அறிவியல் கொடுக்கும்
மனதுக்கு மருத்துவம் இலக்கியம் மட்டுமே தான் தரும் ....
அறிவியல் தேவையான ஒன்று ஆனால்
இலக்கியம் இன்றியமையாத ஒன்று
இலக்கியம் படித்தவன் அறிவியல் படிக்காமல் வாழலாம்
ஆனால் அறிவியல் படித்தவன் கட்டாயம் இலக்கியம் படிக்க வேண்டும்......

அறிவியல் தேவை!
இலக்கியம் வாழ்க்கை !
வளர்க அறிவியல்!
வாழ்க இலக்கியம் !
+++++++++++++++++++++++


No comments:

Post a Comment