Thursday 5 January 2017

கருப்பட்டி ராசா வெல்லக்கட்டி மந்திரி

கருப்பட்டி ராசாவும் வெல்லக்கட்டி மந்திரியும்
1
         பனையூர் தேசத்தை பராக்கிரமசாலியான கருப்பட்டி ராசா என்னும் வேடிக்கையான பெயர் கொண்ட மன்னர் ஆண்ட பண்டைய  காலம். அவருக்கு மதி மந்திரி வெல்லக்கட்டி என்பவர். இவர் மன்னரின் ஒன்று விட்ட சகோதரரே. மன்னரின் அளவிலாத பிரியத்துக்கும் நட்புக்கும் ஏக போக மொத்த உரிமையுள்ள ஒரே  சொந்தக்காரர். பட்டி விக்ரமாதித்தன் போல என்றே சொல்லலாம்.   .

         பனையூர் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்த நல்ல வளமான பசுஞ்சோலையை உடுத்திய தேசம். அங்கு ஓடிய ஏராளம் சிற்றாறுகள் மற்றும் செழிப்பான செம்மண் பூமி அயராது உழைக்கும் அருமையான மக்கள் எல்லாம் சேர்ந்து அதை பொன்  கொழிக்கும் வளங்கள் நிறைந்த வலிமை மிக்க  நாடாக ஆக்கி இருந்தது.

         மன்னர் கருப்பட்டி ராசா அக்கால எல்லா மன்னர்களையும் போலவே வேட்டைப் பிரியர். பனையூரின் தென் மேற்கு மலையில் முல்லை வனத்தில் அடர்ந்த காடுகள் அதிகம் உண்டு . அவை மன்னரின் வேட்டைப்பிரியத்திற்கு நல்ல  வாய்ப்பாக இருந்தன. 

        ஒருமுறை மந்திரி வெல்லக்கட்டியை கூட அழைத்து வேட்டைக்கு கிளம்பிய மன்னர் வேட்டையின் விறுவிறுப்பில் அடர்ந்த காட்டுக்குள் வழி தொலைந்து போனார்.  
        
        சூரியன் மறைந்து எங்கும் இருள். கூட வந்த துணை வேட்டைக்காரர்கள் எங்கு சென்றார்கள் என்றே தெரியாத நிலையில் காட்டில் ஒரு பெரிய மரத்தடியில் அயர்ந்து படுத்து கொண்டார்கள். அப்படியே அசந்த களைப்பில் தூங்கி விட்டார்கள்.

         நள்ளிரவில் திடுமென விழித்த மந்திரி வெல்லக்கட்டி ஏதோ சலசலப்பு கேட்டு அத்திசையில் பார்க்க பாதி  நிலவொளியில் தன் கண்களையே நம்ப முடியாமல் கண்களை கசக்கி மீண்டும் பார்த்தார். அங்கு ஒரு விசித்திரமான மான் போன்ற மிருகம் பொன் வண்ணமாக அதிசயமான உடல் அமைப்புடன் அழகாக  நின்றுகொண்டு இருந்தது.
       
         அவர் பார்த்ததை உணர்ந்துகொண்ட அம்மிருகம் ஓடத் தொடங்கியது சட்டென மன்னரை எழுப்பிய மந்திரி மிருகத்தை தொடர்ந்து ஓட எத்தனித்தார்.                                    


        அப்போது தான் கவனித்தார் அம்மிருகம் ஓடிய வழி எல்லாம் பொன், முத்து,நவமணிகள் உருண்டு புரண்டு சிதறிக் கிடந்தன ........அதிசயித்து போன மந்திரி ஆவல் அதிகமாகி அதன் பின்னால் ஒரே ஓட்டமாய் ஓடினார்.

No comments:

Post a Comment