Tuesday 24 January 2017

‘நல்ல சுழி சல்லி மாடு’

‘நல்ல சுழி சல்லி மாடு’ - ஜல்லிக்கட்டு ஒரு கிராமத்தான் கதை
**********************************************************************************
பால்காரக் கோனாரிடம் கதைகேக்கப் போனால் அவர் முதலில் சொல்ல ஆரம்பிக்கிறது மாடுகளின் கதையைத்தான்.
அப்படி மாடுமாடாய் வரிசைக்கு நிறுத்தி அவர் சொன்ன கதைகளில் ஒன்றுதான் அய்யமுத்துத் தாத்தனின் கதை.
எங்கள் வட்டாரமான திருநெல்வேலியில் சல்லிக்கட்டு விளையாட்டுக்கென்று காளை வளர்ப்பவர்கள் ஒன்றிரண்டு பேர் இருந்தார்கள். அய்யமுத்து தாத்தா அதிலொருத்தர்.
நல்ல வளர்த்தியான பாராசாரிக் குதிரையும், வில்வண்டியும் கட்டிக்கொண்டு, கருத்த உடம்பும், கழுத்தில் வெண்சங்கு மாலையும் போட்டுக்கொண்டு ஊருக்குள் நடமாடுவாராம். நான் சொல்லுவது எழுபது எண்பது வருசத்துக்கு முந்தி.
மூக்குக் கருத்து, முதுகெல்லாம் வெளுத்து, நல்ல காட்டெருது கனத்தில் கிண்ணென்று நிற்கும் காளை ஒன்று அவர் வளர்ப்பிலே சிறந்த வித்து என்று வெளியூர் வரைக்கும் பேர் இருந்தது. ஆட்களெல்லாம் வண்டிகட்டிக்கொண்டு வந்து அந்த மாட்டை விலைக்குப் பேசுவார்களாம்.
“காளிப்பட்டிச் சந்தையில் வாங்கிவந்த நேர்விருத்தி இவன். அஞ்சாறு தலைமுறை தொட்டு வந்த கலப்பில்லாத ஆண் வாரிசு. பிள்ளை மாதிரி இருப்பவனை விக்கவா கொடுப்போன். போவே அந்தப் பக்கம்” விரட்டித் தள்ளுவாராம்.
உழுவதற்கோ, வண்டி இழுப்புக்கோ, கலப்பின விருத்திக்கோ, எதுக்குமே ஈடுபடுத்தாமல் தீவனமாய் கொடுத்து, தேய்த்து தேய்த்து வளர்த்த காளை அது. கயத்தாறு சக்கர வண்டிகள் வந்தபோதும் சரி, கோப்புக் காளைகளுக்கு பத்தாமை ஏற்பட்டபோதும் சரி, மாட்டை அதன் நிழலில் இருந்து கழத்தி நகர்த்தியவர் இல்லை அய்யமுத்து தாத்தன். பின்னே எதற்கு அந்த மாடு?
அது முழுக்க முழுக்க சல்லிக்கட்டுக்கு மட்டும் வளர்த்த சல்லிமாடு. மான்கொம்பு, சிராவயல், அரளிப்பாளை, திருமங்கலம், நத்தம், மேலூர், நெய்வாசல், சோழவந்தான், திண்டுக்கல், நார்த்தாமலை, தேனி என்று பல ஊர் சல்லிக்கட்டிலும் கூட்டிக் கொண்டுபோய் துண்டு வேட்டி வாங்கிக் கொண்டு மாடு விடுவதோடு சரி. பிறகு மாசக் கணக்கில் அதற்கு மேனா மினுக்கல் தான்.
குடும்பத்தில் ஒருதடவை தலைச்சன் பிள்ளைக்கு உடம்புக்கு முடியாமல் போனதும், ‘இந்தப் பொங்கலுக்கு மாடு விடுகிறேன்’ என்று வேண்டிக் கொண்டார்களாம் அய்யமுத்து தாத்தனின் மூதாதைகள். அப்படி பலகாலத்துக்கு முந்தி ஆரம்பித்த பழக்கம் தான் ஒவ்வொரு வருசமும் நீண்டுகொண்டே வந்துவிட்டது. இப்படி ஊரில் மழை வறட்சிக்கு, நோய் தொத்துக்களுக்கு மாடுவிடுகிறேன் என்று குறுஞ்சாமிக்கு வேண்டிக் கொள்வது இன்னமும் இருக்கிறது.
சங்கு, கழுத்துமணி, கருங்கச்சை, சோழிப்பட்டை, மூக்கணாங்கயிறு, முதுகுக் கயிறு, வெண்டையம், கொலுசுப்பட்டை, கொப்பி, கொம்புத் தொப்பி என்று தன் மாட்டுக்கான அலங்காரத்தில் ஒரு குறையும் வைக்காதவர் அய்யமுத்து தாத்தன். தன் மாட்டுக்கு மட்டுமில்லை, “சந்தைக்குப் போறேன் ஒரு ‘பொடை மாடு’ வாங்கணும் கூடமாட வந்து கொஞ்சம் சுழி பாத்து வாங்கிக் குடுமையா” என்று யார் கேட்டாலும் தட்டாமல் கூடப் போய்விடுபவர்.
‘ஆறு வயசு மாட்டுக்கு நாலு பல் இருக்கணும், நெத்தியில் சுழி கண்டா இடியோ கொடையோ ரெண்டுல ஒண்ணு தொடர்ந்து ஒண்ணு வந்துக்கிட்டே இருக்கும். கொண்டையில் சுழி கண்டா கொண்டவன் செத்தான்; வாலிலே சுழி கண்டா வீட்டையே வித்தாலும் கட்டாது, அது துடப்பக்கட்டை சுழி; காலில் சுழி இருந்தா கேடு வந்து நிக்கும், அது விலங்கு சுழி; நடுமுதுகில் சுழி கண்டா நல்ல மாடு பாத்துக்கோ; என்று சுழியை வைத்து நூறு விளக்கம் கொடுப்பாராம்.
இது தவிர மாட்டுக்கு நிறம், புள்ளி, கொம்பு வளைச்சம், பழு எல்லாம் பார்த்து மாடு வாங்கிக் கொடுப்பதில் கில்லாடி. மாட்டுக்கு அங்கத்தில் பழு ஒண்ணு இருக்கும். விலா எலும்போட சூட்டிகை அது. ஒருபக்கம் மட்டும் பழு தூக்கி இருந்தாலும் கேடு என்பாராம். சப்பை, நீல நாக்கு, தொண்டை அடைப்பு, கோமாரி, என்று எல்லா நோய்க்கும் கைவசம் மருந்து வைத்திருக்கும் ஆள். இதுபோக மாட்டுக்குச் சூடு போடவும் நல்ல வலுசாலியாய் இருந்திருக்கிறார்.
பல ஊர் சந்தை கண்ட கிழம்.
“சரி மாடு வளர்த்த, வாங்கின பெருமை எல்லாம் கிடக்கட்டும் சல்லிக்கட்டுக்குப் போகிற கதை சொல்லுங்க” என்பேன் கோனாரிடம். அவரும் விடாமல் நீட்டி முழக்கிக் காலை மடித்து, ஒரு வெத்தலையை அதக்கிக்கொண்டு தான் கேட்டு வளர்ந்த கதையை நான் கேட்க எனக்குச் சொல்வார்.
“தீவனம் தீவனமாய் கொடுத்து, நீச்சம் பாய்ச்சம் எல்லாம் பார்த்து வளர்த்த மாட்டை, இங்கிருந்து பகுமானமாய் ஆறேழு நாள் முன்னே பந்தையம் நடக்கும் ஊருக்குக் கூட்டிக்கொண்டு போய் விடுவார் அய்யமுத்து தாத்தன். ஊர்ப்பொதுவிலிருந்து பந்தையம் நடத்துகிறவர்கள், வந்தவர்கள் எல்லாரையும் தங்குவதற்கு என்று கச்சேரிக்குப் பக்கத்திலே இடமும் தந்து, வேளா வேளைக்குச் சோறும் போட்டு, மாட்டுக்கு குடிக்க கொள்ள ஊர் பொதுக் குட்டையை கைகாட்டிவிடுவார்கள். தீவனம் மட்டும் மாட்டுக் காரர்களுடையது.
ஒன்றாம் நாள், ரெண்டாம் நாள் என்று ஆறு நாளும் ஏகப்பட்ட ஆட்டமும் பாட்டமும் நடக்கும். இளசுகள் மாடுகளின் திமிலைப் பார்த்து வியந்து, கிட்டே வந்தால் மாடு எட்டிப்போ என்று மிரட்டும். பந்தையத்தன்று பொழுது விடிந்ததும் ஊர் நாட்டாமையும், சனங்களும் ஒண்ணு திரண்டுபோய், முனியாண்டி கோயிலுக்குப் பொங்கல் சாத்தி, அங்குள்ள கோயில் மாடுகளுக்கு முதல்மரியாதை காட்டி, வெளியூர் வரிசைக்காரர்கள் இருக்கும் கச்சேரிக்கே வந்து தலைக்கு ஒரு துண்டும், வேட்டியும் கொடுப்பார்கள். வேட்டித் துண்டை வாங்கிக்கொண்ட பெருசு மாட்டுக்கு மூக்கணாங் கயித்தை அவிழ்த்து கோட்டைக்குள் பாய விடும்.
கொட்டுப் பறை அடிக்கிற சத்தத்தில் சிவந்த கண்ணோடு, சீறிப் பாய்ந்து வருகிற காளையின் கொம்பையும் திமிலையும் பிடித்து, கழுத்தில் கட்டியிருக்கும் சண்டித் துணியை அவிழ்க்க இளவட்டங்கள் துடிதுடிக்கும். வண்டியில் ஏறி நிக்கும் ஆணும் பொண்ணும் பிடிப்பாளி பேரை சொல்லி கத்திக் கத்தி உசுப்பேத்த, வீறிக்கொண்டு, வரும் காளையை பிடிக்க கடும்போட்டி இருக்கும்.
சல்லிமாட்டைப் பிடிக்க முடியாமல் போனால் வளர்த்தவன் தான் பேரும் பரிசும் வாங்கிக்கொண்டு ஊருக்கு வந்து இறங்குவான். சண்டியை அவிழ்த்து, மாட்டையும் கவிழ்த்தி விட்டால் பிடிக்காரனுக்கு பொன்னும் பொருளும் கொடுத்து கௌரவிப்பார்கள். பலநேரம் பொண்ணையே தூக்கிக் கொடுத்த கதையெல்லாம் உண்டு” என்றார் கோனார்.
‘தாத்தன் மாடு எப்பயாவது பிடிபட்டுருக்கா’ என்றேன். ‘ரெண்டு வாட்டி மட்டும் நெய்வாசலில் பிடிபட்டது. மத்தபடி எங்கயும் வால் மசிரக் கூட எவனும் தொட்டது இல்ல’ என்று பதில் வந்தது.

வானவில்


ஒரு சிறு மழைத்துளியின் மீது பட்ட சூரியனின் ஒற்றை வெள்ளொளியானது,
சிவப்பு, ஆரஞ்சு,
பச்சை, மஞ்சள், நீலம்,
கருநீலம், ஊதா போன்ற ஏழு நிறங்களை உள்ளடக்கிய அழகிய வானவில்லாக பிரசவிக்கிறது...
நிகழ்வையொத்ததே அழகிய
மனித சமுதாயத்தின் தோன்றலும்...
மனித சமுதாயமென்பது,
ஒரு தாயிடம் இருந்து பிரசவிக்கப்பட்ட வெவ்வேறு நிறங்களையும், எண்ணங்களையும் கொண்ட குழந்தைகளை உள்ளடக்கியதே....
இருப்பினும் மனித சமுதாயத்தின் அழகை ஏன் நம்மால் உணர முடியவில்லை???
வானவில்லின் ஏழு நிறங்களின் அலைநீளங்களில் வேற்றுமை இருந்தாலும்,
அவை ஒற்றுமையாய் ஒன்றாக இணக்கமாகப் பயணிக்கின்றன...
ஆனால், மனித சமுதாயமோ, தங்களுடைய வேற்றுமைகளைக் காரணம் காட்டி,
தாங்களே உயர்ந்தவர்களென்று,
ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொள்கின்றனர்...
ஒரு வேளை மனிதர்களைப் போன்று, தானென்ற அகந்தையுடைய பகுத்தறிவாதிகளாக,
வானவில்லிலுள்ள ஏழு நிறங்களும் படைக்கப்பட்டிருந்தால்,
அவைகளும் தங்களுடைய அலைநீளங்களின் வேற்றுமையைக் காரணம் காட்டி ஒன்றுக்கொன்று சண்டை போட்டுக் கொண்டு ஒற்றுமையில்லாமல் இருந்திருக்கும்...
அழகிய வானவில்லை நம்மால் காண முடியாமலே போயிருப்போம்...
சிந்தித்துப் பாருங்கள் எனதன்பு சகோதர,சகோதரிகளே....
நம்முள் ஆயிரம் வேற்றுமைகள் இருக்கட்டுமே...
அவற்றை மறந்து,
ஒற்றுமையோடு,
தூய அன்போடு
நல்லிணக்கம் கொண்டு வாழ்வோமே.....
நம்மால் அழகிய நல்லதொரு மனித சமுதாயம் பிரசவிக்கட்டுமே....

Thursday 19 January 2017

காதலி வர்ணனை
வானம்.....
வறட்சியானது. 

மேகம் அவள் ......
மென்கூந்தலில் குடியேறியதால்.

பூமி......
பொசிங்கியது.
புனித நதியெலாம்.....அவள்
கருணைகடலில் சங்கமித்ததால்.

கானம்.......
கை கூப்பியது.
ஸ்வரங்கள் அவள்....
சொல்லில் சுருண்டதால்.

பூக்கள்....
பொலிவிழந்தன.
புன்னகை போட்டியில்....அவள்
வென்றுவிட்டதால்.

ஈக்கள்.....
இடம் பிடித்தன. அவள்...
இதழ்த் தேன்.....
இனிமை நன்றென.

சந்திரன்.......
சங்கடப்பட்டான். இந்த....
எதிரி முகத்தில் ......
எப்படி விழிப்பதென்று.

இந்திரன்.....
சட்டம்போட்டான்.
இந்த மங்கையே......எனது
சொந்த மங்கையென்று.
அவள்

விழிகள் , 


வெள்ளை மேகத்தில்
கருப்பு நிலவோ ???

நெற்றி ,

சமுத்திரத்தை குளிர்வித்து
சமைக்கப்பட்ட அரைவட்டமோ ???

மூக்கு ,

எனை மூர்ச்சையடையச் செய்த
முக்கோண மூங்கில்காடோ???

இதழ்கள் ,

அருகருகே அமைக்கப்பட்ட
அதிசய அணிகளோ ???

அவள் இதயம்

இறுதிவரை எனைச்சுமக்க
துடிக்கும் என் அன்னையின் கருவறையோ ???

மொத்தத்தில் அவள்

வார்த்தைகளுக்குள்
அடங்கா
வர்ணஜாலமோ ???

Saturday 14 January 2017

கார்டியன் முடிச்சு (Gordian Knot)
***********************************************
கிரேக்க புராணங்களில் கூறப்பட்டுள்ள கார்டியன் முடிச்சு என்பது ப்ரிகியா தேசத்து அரசன் கோர்டியஸ் என்பவர் போட்டுவிட்ட முடிச்சாகும்.
கோர்டியஸ் அரசன் ஆவதற்கு முன், அவன் ஒரு சாதாரண குடியானவனாக இருந்தான்.
ஒருநாள் அவன் தன் எருதுகள் பூட்டிய மாட்டுவண்டியை ஓட்டிக் கொண்டு முதல்முறையாக ப்ரிகியா நகரத்துக்கு வருகிறான். அவ்வாறு நகரத்துக்குள் நுழையும்போது தெய்வ வாய்மொழிப்படி (அசரீரி வாக்குப்படி) அவனை அந்த நகரத்து மக்கள் மன்னனாக ஏற்றுக் கொண்டனர்.
கோர்டியஸ், தன் நன்றிக் கடனாக, அவனின் மாட்டுவண்டியை சீயஸ் (Zeus) என்ற கடவுளுக்கு அர்பணித்து விட்டான்.
அப்போது அந்த வண்டியின் நுகத்தடியைச் சேர்த்து அந்த நுகத்தடிக் கயிறால் ஒரு ‘முடிச்சு’ போட்டுவிட்டான். அந்த முடிச்சானது கடும் சிக்கல்கள் கொண்ட ஒரு நூதன முடிச்சு. ‘அந்த முடிச்சை அவிழ்ப்பவர், ஆசியாவுக்கு மகுடாதிபதி ஆவார்’ என்றும் சொல்லிச் சென்றான்.
எவ்வளவோ பேர் அந்த முடிச்சை அவிழ்க்க முனைந்து தோற்றுப் போயினர். வெகுகாலமாக அந்த வண்டி அந்த இடத்திலேயே இருக்கிறது. இருந்தும் அந்த முடிச்சை அவிழ்க்க யாராலும் முடியவில்லை.
அங்கு வந்த மாவீரன் அலெக்ஸாண்டர் இதனைக் கேள்விப்பட்டு அந்த வண்டியின் முன் வந்து நின்றான். அந்த முடிச்சை நிதானமாகப் பார்த்தான். ஏதோ நினைத்துக் கொண்டவனாக, தன் உடைவாளை உருவி, ஒரே வீச்சில் அந்த முடிச்சை இரண்டாக வெட்டினான். கயிறு சிதறியது.
(குழப்பமான விஷயங்களுக்கு இந்த முடிச்சை உதாரணமாகக் காட்டி ‘கார்டியன் முடிச்சுப் போன்ற குழப்பம்’ என்பர்.)
Gordian Knot:A knot tied by Gordius, king of Phrygia, held to be capable of being untied only by the future ruler of Asia, and cut by Alexander the Great with his sword.
மவுரிய சாம்ராஜ்யத்தின் மன்னர் அசோகர்
வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு
எதிரில் வந்துகொண்டிருந்த ஒரு வயோதிக புத்த
பிக்ஷூ மன்னரும் அவரது ஆட்களும்
செல்ல வழிவிட்டு, ஓர் ஓரமாக
ஒதுங்கி நின்றார்.
அசோகக் சக்கரவர்த்தி அவரைப் பார்த்து விட்டார்.
உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு, இறங்கிச்
சென்று புத்த பிக்ஷூயின் காலில் நெடுஞ்சாண
கிடையாக விழுந்தார். அவரது சிரம் துறவியின்
காலில் பட்டது. துறவி தமது கைகளை உயர்த்தி
மன்னனை ஆசிர்வதித்தார். இதைப் பார்த்துக்
கொண்டிருந்த அமைச்சர் சங்கடப்பட்டார்
.”ஒரு மண்டலாதிபதி ஒரு பரதேசியின் காலில்
விழுவதா? அரச பாரம்பாரியக் கவுரவம் என்னாவது?’
என்ற எண்ணம் அவரை அலைக் கழித்தது.
அரண்மனைக்கு சென்றதும் அரசரிடம் தமது
வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின்
பேச்சைக் கேட்ட அசோக மன்னர் சிரித்தார்.
அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்காமல், ஒரு
விசித்திர கட்டளையைப் பிறப்பித்தார்.””ஒரு ஆட்டுத்
தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை, மூன்றும்
எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்
அமைச்சரே,” என்றார்.

மன்னரின் கட்டளை அமைச்சரைத் திகைக்க வைத்தது.
எனினும் அரச கட்டளையாயிற்றே! அதை நிறைவேற்ற
ஏவலர்கள் நாலாபக்கமும் பறந்தனர்.

ஆட்டுத்தலை கிடைப்பதற்கு அதிகச் சிரமம்
இருக்கவில்லை. ஓர் இறைச்சிக் கடையில் அது
கிடைத்து விட்டது.
புலித் தலைக்கு அலைந்தனர். அது ஒரு
வேட்டைக்காரனிடம் கிடைத்தது. அன்றுதான் அவன்
ஒரு புலியைவேட்டையாடியிருந்தான்.

மனிதத் தலைக்கு எங்கே போவது? கடைசியில்
சுடுகாட்டிற்குச் சென்று ஒரு பிணத்தின் தலையை
எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தனர் மூன்றையும்
பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம்,
“இம்மூன்றையும் சந்தையில் விற்றுப்பொருள் கொண்டு
வாருங்கள்.” என்றார். மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச்
சென்றவன் திணறினான்.

ஆட்டுத்தலை அதிகச் சிரமமின்றி விலை போனது.
புலியின் தலையை வாங்க ஆளில்லை. பலர் அதை
வேடிக்கைத் தான் பார்த்தனர்.

கடைசியில் ஒரு வேட்டைப் பிரியரான பிரபு அதனை
வாங்கித் தன் வீட்டில் அலங்காரமாக மாட்டி வைக்க
எடுத்துப் போனான்.

மீதமிருந்த மனிதத் தலையைப் பார்த்த கூட்டம்
அருவருப்புடன் அரண்டு மிரண்டு பின்வாங்கியது.
ஒரு காசுக்கு கூட அதை வாங்க யாரும் முன்வரவில்லை.

அரண்மனை திரும்பிய அமைச்சர் ஆட்டுத் தலை
உடனே விலை போனதையும், புலித்தலை சற்றுச்
சிரமத்துடன் விலை போனதையும் மனிதத் தலையை
வாங்க ஆளில்லை என்பதையும் தெரிவித்தார்.

“”அப்படியானால் அதை யாருக்காவது
இலவசமாகக் கொடுத்து விடுங்கள்!” என்றார் அசோகர்.

இலவசமாகக் கூட அதனை வாங்கிக் கொள்ள யாருமே
முன்வரவில்லை. இப்போது அசோக மன்னர் கூறினார்…

“”பார்த்தீரா அமைச்சரே! மனிதனின் உயிர் போய்விட்டால்,
இந்த உடம்பு கால் காசு கூடப் பெறாது.இலவசமாகக் கூட
இதனை யாரும் தொடமாட்டார்கள்.
இருந்தும் இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம்
ஆடுகிறது!
செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத்
தெரியும்.
ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது, தம்மிடம் எதுவும்
இல்லை என்று உணர்ந்தவர்கள் தான் ஞானிகள்.

அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதில் என்ன
தவறு? சொல்லப்போனால் அதுதான் ஞான வாயிலின்
முதல் படி!”என்றார். தன் தவறை உணர்ந்தார் அமைச்சர்..
பசி தாங்க முடியாத எலிகள் இரண்டு தாங்கள் ஒளிந்திருந்த வீட்டின் சமயல் அறைக்குள் புகுந்தன. அங்கே ஒரு பெரிய பானை நிறைய பால் இருப்பதைக் கண்டன. ஆனால் அது உயரமான பானை. இதனால் பாலைக் குடிக்க முடியாமல் எலிகள் திண்டாடின.
இதையடுத்து இரு எலிகளும் ஒரு முடிவுக்கு வந்தன. ஓர் எலியின் மீது இன்னோர் எலி ஏறி பாலைக் குடிப்பது. அதன் பிறகு கீழே உள்ள எலி மேல் ஏறி பாலைக் குடிக்கலாம் என திட்டமிட்டு, அதை செயல்படுத்தின.
அதன்படி மேலே உள்ள எலி பாலைக் குடித்த போது, கீழே இருந்த எலி கத்தியது: "போதும்! நான் பால் குடிக்க வேண்டும்..."
கீழே இருந்த எலி போட்ட சத்தத்தை கேட்டு மிரண்டு மேலே இருந்த எலி, பால் பானைக்குள் விழுந்துவிட்டது.
இதைக் கண்ட கீழே இருந்த எலி, "நல்லது, இனி எனக்குத்தான் எல்லா பாலும்" என்று நினைத்தது. பிறகு அந்தப் பானையைச் சுற்றி சுற்றி வந்தது. ஆனால் மேலே ஏற முடியவில்லை. கடைசியில் பசியால் அது செத்துப் போய்விட்டது.
நீதி : துன்பத்தில் இருந்து விடுதலை அடைய மற்றவர்களின் ஒத்துழைப்புத் தேவை.
திறமையான குள்ளன்
ஏழை விறகுவெட்டி ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஏழு மகன்கள் இருந்தனர். அவன் எவ்வளவோ கடுமையாக உழைத்தும் அவர்கள் பல நாட்கள் பட்டினி கிடந்தார்கள்.
ஒரு நாள் இரவு அவனுடைய மகன்கள் தூங்கிக் கொண்டிருந்தனர்.
மனைவி அவனிடம், "நாம் எவ்வளவு காலம் துன்பப்படுவது? வயிறார உண்டு எத்தனை நாட்கள் ஆகிறது? நம் மகன்களைக் காட்டில் விட்டுவிட்டு வந்து விடுங்கள். இருப்பதைக் கொண்டு நாம் மகிழ்ச்சியாக வாழலாம்" என்றாள்.
"நீ சொன்னபடியே செய்கிறேன். நாளை அவர்களுக்கு உணவு சமைத்து வை" என்றான் அவன்.
கடைசி மகனான குள்ளன் அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
விடிகாலையில் எல்லோருக்கும் முன் எழுந்தான் அவன். ஆற்றங்கரைக்குச் சென்று அங்கிருந்த சிறுசிறு கூழாங்கற்களை எடுத்தான். சட்டைப் பை நிறைய அவற்றைப் போட்டுக் கொண்டான். வீடு திரும்பினான் அவன். தாயும் தந்தையும் அண்ணன்களும் அவனுக்காகக் காத்திருந்தனர்.
" ஏன் இவ்வளவு நேரம்? அம்மாவிடம் உன் பங்கு அடையை வாங்கிக் கொள். காட்டில் சாப்பிடலாம். இன்று நாம் எல்லோரும் விறகு வெட்டச் செல்கிறோம்" என்றான் விறகுவெட்டி.
எல்லோரும் மகிழ்ச்சியுடன் புறப்பட்டார்கள். கடைசியாகச் சென்றான் குள்ளன். தன் பையிலிருந்த கூழாங்கல்லை வழி எங்கும் போட்டுக் கொண்டே வந்தான்.
நீண்ட தூரம் நடந்து காட்டின் நடுப்பகுதிக்கு வந்தார்கள்.
"இனி என்ன முயன்றாலும் தன் மகன்களால் வீட்டை அடைய முடியாது. அவர்களை ஏமாற்றி விட்டுப் புறப்பட வேண்டும்" என்று நினைத்தான் அவன்.
" நீங்கள் விளையாடிக் கொண்டிருங்கள். நான் சிறிது தூரம் சென்று நல்ல மரமாகப் பார்த்து வெட்டுகிறேன். இருட்டியதும் வீட்டிற்குப் புறப்படலாம்" என்றான் அவன்.
அவர்களும் மகிழ்ச்சியாக விளையாடத் தொடங்கினார்கள்.
அருகில் இருந்த மரத்தில் ஒரு கட்டையைத் தொங்க விட்டான் அவன். காற்று அடிக்கும் போதெல்லாம் மரத்தில் அது மோதியது. விறகு வெட்டுவது போல ஓசை கேட்டது. மகன்களுக்கத் தெரியாமல் வீடு வந்து சேர்ந்தான் அவன்.
அவர்கள் நீண்ட நேரம் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். இருட்டத் தொடங்கியது.
" தந்தையை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்வோம்" என்றான் மூத்தவன்.
எல்லோரும் விறகு வெட்டும் ஓசை கேட்ட இடத்திற்கு வந்தனர். " ஐயோ! அப்பாவைக் காணோமே! இந்தக் காட்டிலிருந்து எப்படி வீட்டுக்குச் செல்வது? கொடிய விலங்குகள் நம்மைக் கொன்று விடுமே! என்ன செய்வது?" என்று அலறினான் இரண்டாமவன்.
" கவலைப்படாதீர்கள். இன்னும் சிறிது நேரத்தில் நிலவு வெளிச்சம் தெரியும். அதன் பிறகு நான் வழி காட்டுகிறேன். நாம் அனைவரும் வீட்டை அடையலாம்" என்று ஆறுதல் சொன்னான் குள்ளன்.
நிலவு வெளிச்சம் பட்டப் பகல் போலக் காய்ந்தது. வழி எங்கும் போட்டு வந்த கூழாங்கல்லை அடையாளமாகக் கொண்டு நடந்தான் குள்ளன். எல்லோரும் பின்தொடர்ந்தார்கள்.
" வீட்டில் தன் மனைவியிடம், நம் குழந்தைகள் காட்டில் எப்படித் தவிப்பார்களோ?" என்றான் அவன்.
" எனக்கு மட்டும் வருத்தம் இல்லையா? நம் கண் எதிரில் ஏன் அவர்கள் துன்பப்பட வேண்டும்? அதனால் தான் அவர்களைக் காட்டில் விட்டுவிட்டு வரச் சொன்னேன். அவர்கள் எங்காவது நலமாக இருக்கட்டும் நான் உணவு சமைக்கிறேன். இருவரும் சாப்பிடலாம்" என்றாள் அவள்.
நள்ளிரவு நேரம், இருவரும் சாப்பிட அமர்ந்தனர்.
கதவு தட்டும் ஓசை கேட்டது. " இந்த நேரத்தில் யார்? கதவைத் திற" என்றான் அவன். கதவைத் திறந்தாள் அவள். தன் மகன்களைக் கண்ட அவளுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. சமைத்து வைத்திருந்த உணவை அவர்களுக்குப் பரிமாறினாள்.
சாப்பாடு முடிந்தது. நடந்து வந்த களைப்பால் அவர்கள் தூங்கத் தொடங்கினார்கள்.
விறகுவெட்டிக்கும் அவன் மனைவிக்கும் சாப்பிட உணவில்லை.
" நம் மகன்கள் வந்து விட்டார்களே. இப்பொழுது என்ன செய்வது?" என்று கேட்டான் அவன்.
" நிலவு வெளிச்சத்தில் வழி கண்டுபிடித்து வந்து விட்டார்கள். அமாவாசையன்று மீண்டும் அவர்களை அழைத்துச் செல்லுங்கள். இன்னும் அதிக தூரம் சென்று விட்டுவிட்டு வாருங்கள். அவர்களால் திரும்ப முடியாது" என்றாள் அவள்.
அமாவாசை வந்தது. விடிகாலையில் தன் மகன்களை எழுப்பினாள் அவள். " காட்டிற்கு விறகு வெட்டச் செல்லும் அப்பாவுடன் நீங்களும் செல்லுங்கள். மதிய உணவிற்காக ஆளுக்கு இரண்டு அடை சுட்டு வைத்து இருக்கிறேன்" என்றாள் அவள்.
குள்ளனுக்கு என்ன நடக்கப் போகிறது என்பது புரிந்தது. கூழாங்கல்லைப் பொறுக்கி வர நேரமில்லை. என்ன செய்வது" என்று குழம்பினான் அவன்.
"நேரமாகி விட்டது. புறப்படுங்கள்" என்று அவசரப் படுத்தினான் விறகுவெட்டி.
அவர்களுடன் கடைசியாகச் சென்றான் குள்ளன். தன் கையிலிருந்த அடையைச் சிறுசிறு துண்டுகள் ஆக்கினான். வழி எங்கும் அதைப் போட்டுக் கொண்டே வந்தான்.
அவன் போட்டு வந்த அடைகளைக் குருவிகளும் எறும்புகளும் சாப்பிட்டு விட்டன. விறகுவெட்டி அவர்களை வழக்கம் போல விளையாடச் சொன்னான். கட்டையைத் தொங்க விட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தான். இருட்டத் தொடங்கியது. எல்லோரும் தந்தையைக் காணாது திகைத்தனர்.
" நான் வழி காட்டுகிறேன். கவலைப்படாதீர்கள்" என்றான் குள்ளன். வழி தெரியாமல் அவன் அங்கும் இங்கும் அலைந்தான்.
பக்கத்தில் இருந்த பெரிய மரத்தின் மேல் ஏறினான். தொலைவில் விளக்கு வெளிச்சம் தெரிவதைப் பார்த்தான்.
கீழே இறங்கிய அவன், " அண்ணன்களே! சிறிது தொலைவில் வெளிச்சம் தெரிகிறது. கண்டிப்பாக அங்கே வீடு இருக்க வேண்டும். நாம் அங்கே சென்று இன்றிரவு தங்குவோம்" என்றான்.
எல்லோரும் வெளிச்சம் வந்த இடத்தை நோக்கி நடந்தார்கள். அவர்கள் கண்களுக்குப் பெரிய வீடு தெரிந்தது. அது ஒரு அரக்கனின் வீடு. அரக்கனும் அவனுடைய ஏழு மகன்களும் வெளியே சென்றிருந்தார்கள். அரக்கனின் தாய் மட்டும் அப்பொழுது வீட்டில் இருந்தாள்.
குள்ளன் கதவைத் தட்டினான். அரக்கி கதவைத் திறந்தாள். ஏழு சிறுவர்களைப் பார்த்ததும் அவள் நாக்கில் எச்சில் ஊறியது. " பாட்டி ! இந்தக் காட்டில் நாங்கள் வழி தவறி விட்டோம்" இன்றிரவு மட்டும் இங்கே தங்கிச் செல்கிறோம்" என்றான் குள்ளன்.
" இங்கே நீங்கள் மகிழ்ச்சியாகக் தங்கலாம், இன்னும் சிறிது நேரத்தில் என் மகனும் ஏழு பேரனும் வந்து விடுவார்கள். உங்களைப் பார்த்தால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். நீங்கள் களைப்பாக இருக்கிறீர்கள். அந்த அறை என் பேரன்கள் தூங்கும் அறை. அங்கே சென்று நிம்மதியாகத் தூங்குங்கள்" என்று இனிமையாகப் பேசினாள் கிழவி. அவர்களும் அந்த அறையில் சென்று படுத்தார்கள்.
சிறிது நேரத்தில் அரக்கனும் ஏழு மகன்களும் அங்கே வந்தனர், ஏழு பேரன்களின் தலையிலும் கிரீடத்தை அணிவித்தாள் அவள்.
" நீங்கள் சென்று அவர்கள் பக்கத்தில் படுத்துத் தூங்குங்கள்" என்றாள். அவர்களும் சென்று சிறுவர் பக்கத்தில் படுத்தனர்.
தன் மகனைப் பார்த்துக் கிழவி, " இன்று நமக்கு நல்ல வேட்டை ஏழு சிறுவர்கள் வழி தவறி இங்கே வந்திருக்கிறார்கள். அவர்களை ஏமாற்றி நம் பேரன்கள் தங்கும் அறையில் தூங்க வைத்திருக்கிறேன்.
பெரிய அண்டாவில் கறிக் குழம்பு வைக்கிறேன். குழம்பு கொதி வந்ததும் நீ அந்த ஏழு பேரையும் தூக்கி வந்து அதில் போடு. அவர்கள் நன்றாக வெந்ததும் நாம் வயிறார உண்போம். மீதி உள்ளதைப் பொழுது விடிந்ததும் பேரன்கள் சாப்பிடட்டும்" என்றாள்.
" அம்மா! எனக்குப் பசி உயிர் போகிறது. சீக்கிரம் அண்டாவை அடுப்பில் வை. அந்த அறையில் என் மகன்களும் படுத்திருக்கிறார்களே? இருட்டில் எப்படி அந்தச் சிறுவர்களை மட்டும் தூக்கி வருவது? விழித்துக் கொண்டால் தப்பி விடுவார்களே?" என்று கேட்டான் அரக்கன்.
" நீ எளிதாக அடையாளம் கண்டுபிடிக்க வேண்டும் அதற்காகத்தான் என் பேரன்களின் தலையில் மட்டும் கிரீடம் அணிந்து உள்ளேன்" என்றாள் அவள்.
குள்ளனுக்குத் திடீரென்று விழிப்பு வந்தது.
கிழவியின் ஏழு பேரன்களும் தலையில் கிரீடத்துடன் படுத்திருப்பது அவனுக்குத் தெரிந்தது. "ஏன் இவர்கள் கிரீடத்துடன் தூங்க வேண்டும். ஏதோ சூழ்ச்சி நடக்கிறது" என்பதைப் புரிந்து கொண்டான் அவன். அவர்கள் தலையிலிருந்த கிரீடத்தை எடுத்தான், தன் அண்ணன்களின் தலையில் அவற்றை அணிவித்தான். தன் தலையிலும் கிரீடத்தை அணிந்து கொண்டான். என்ன நடக்கிறது என்பதை விழித்திருந்து பார்த்தான்.
சிறிது நேரத்தில் அரக்கன் உள்ளே நுழைந்தான். கிரீடம் அணிந்திராத சிறுவர்களை ஒவ்வொருவராகத் தூக்கிச் சென்றான். கொதிக்கும் குழம்பில் அவர்களைப் போட்டான்.
நடந்ததைப் பார்த்த குள்ளன் திகைத்தான். தன் அண்ணன்களை மெதுவாக எழுப்பிய அவன், " அரக்கனின் வீட்டில் சிக்கிக் கொண்டோம். உடனே தப்பிச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் நம்மைக் கொன்று விடுவார்கள்" என்றான்.
இதைக் கேட்டு எல்லோரும் பயந்தனர். அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். சமைத்த கறியை அரக்கனும் கிழவியும் சுவைத்துச் சாப்பிட்டார்கள். பிறகு இருவரும் குறட்டை விட்டுத் தூங்கத் தொடங்கினார்கள்.
பொழுது விடிந்தது. அரக்கனை எழுப்பினாள் கிழவி. " என் பேரன்களை அழைத்துவா. அவர்களும் மகிழ்ச்சியாகச் சாப்பிடட்டும்" என்றாள்.
அறைக்குள் நுழைந்த அவன், " அம்மா! இங்கு யாருமே இல்லையே" என்று அலறினான்.
அங்கு வந்த அவளுக்கு உண்மை புரிந்தது. " ஐயோ அந்தச் சிறுவர்கள் நம்மை ஏமாற்றி விட்டார்கள். நம் குழந்தைகளைக் கொன்று நாமே தின்று இருக்கிறோம்" என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதாள். " கொதிக்கும் குழும்பில் என் குழந்தைகளையா போட்டேன்? அவர்களையா சாப்பிட்டேன்? என்ன கொடுமை இது? இனி நான் என்ன செய்வேன்?" என்று சுவரில் மோதிக் கொண்டு அழுதான் அவன்.
இருவரும் நீண்ட நேரம் அழுதார்கள்.
ஒருவாறு மனம் தேறிய அரக்கன், " என் குழந்தைகளைக் கொன்றவர்கள் அந்தச் சிறுவர்கள் தான். என்னிடம் இருந்து அவர்கள் தப்ப முடியாது. எங்கு இருந்தாலும் அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பேன். கொன்று தின்று பழி தீர்ப்பேன்" என்று கோபத்தில் பற்களை நறநறவென்று கடித்தான்.
" என் மந்திரச் செருப்பைக் கொண்டு வா" என்று கத்தினான் அவன்.
கிழவியும் செருப்பைக் கொண்டு வந்தாள். அதைப் போட்டுக் கொண்டு புறப்பட்டான் அவன்.
" அரக்கன் தேடி வருவான். நம்மைப் பிடித்தால் கொன்று விடுவான். வேகமாக ஓடுவோம்" என்றான் குள்ளன். எல்லோரும் நீண்ட தூரம் வந்தனர்.
" என்னால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை" என்றான் மூத்தவன்.
" அரக்கன் இனி நம்மைத் துரத்த முடியாது. எதற்கும் பாதுகாப்பாக இங்கிருக்கும் குகைக்குள் பதுங்கிக் கொள்வோம். யாராலும் கண்டுபிடிக்க முடியாது" என்றான் குள்ளன்.
எல்லோரும் பதுங்கிக் கொண்டனர். அரக்கனின் காலடி ஓசை அவர்களுக்கு கேட்டது. எல்லோரும் நடுங்கினார்கள். அங்கு வந்த அரக்கன் எல்லாத் திசைகளிலும் பார்த்தான். அவர்கள் பதுங்கி இருப்பது அவன் கண்களுக்குத் தெரியவில்லை.
" ஏ! மந்திரச் செருப்பே! இங்குதான் அவர்கள் இருப்பார்கள் என்று என்னை அழைத்து வந்தாயே! இங்கு அவர்களைக் காணோமே? நீயும் என்னை ஏமாற்றுகிறாயா?" என்று சொல்லிவிட்டு அங்கேயே படுத்தான். களைப்படைந்த அவன் குறட்டை விட்டுத் தூங்கத் தொடங்கினான்.
இதைப் பார்த்த குள்ளன், " அரக்கன் தூங்குகிறான். அவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்க மாட்டான். நீங்கள் சத்தம் போடாமல் இங்கேயே இருங்கள். மநதிரச் செருப்பை அணிந்து நான் அரக்கன் வீட்டிற்குச் செல்கிறேன். அங்கிருந்து ஏராளமான பொருள் கொண்டு வருகிறேன். பிறகு நாம் அனைவரும் நம் வீட்டிற்குச் செல்வோம்" என்றான்.
எல்லோரும், " எங்களைக் காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு நீ என்ன நினைக்கிறாயோ அப்படியே செய்" என்றார்கள்.
வெளியே வந்தான் குள்ளன். அரக்கனின் காலில் இருந்த செருப்பைக் கழற்றினான். அவற்றைத் தன் காலில் அணிந்து கொண்டான்.
"ஏ! மந்திரச் செருப்பே! நான் அரக்கனின் வீட்டை அடைய வேண்டும்" என்று சொல்லிவிட்டு நடந்தான். மந்திரச் செருப்பு அவனை அரக்கனின் வீட்டின் முன் நிறுத்தியது.
" பாட்டி! கதவைத் திற. உன் மகனுக்கு ஆபத்து" என்று கத்தினான் அவன்.
கதவைத் திறந்த கிழவி, " என் மகனுக்கு என்ன?" என்று கேட்டாள்.
" உன் மகன் கொடிய திருடர்களிடம் சிக்கிக் கொண்டான். அவர்கள் அவனைக் கட்டி வைத்துத் துன்புறுத்துகிறார்கள் நிறைய பொருள் கொடுத்தால் உன் மகன் உயிர் பிழைப்பான். இல்லையேல் அவர்கள் அவனைக் கொன்று விடுவார்கள்.
மந்திரச் செருப்பை அடையாளத்திற்கு என்னிடம் தந்தான். " இதைக் காட்டினால் என் தாய் நிறைய பொருள் தருவார். வாங்கிக் கொண்டு ஓடி வா. அப்பொழுது தான் நான் உயிர் பிழைப்பேன்" என்று என்னை அனுப்பினார்" என்று பரபரப்புடன் சொன்னான் அவன்.
" ஐயோ! மகனே! உனக்கு ஆபத்தா? உன்னைவிட எனக்குப் பொருளா பெரிது?" என்று அலறினாள் அவள். பெரிய சாக்குப் பையில் பொற்காசுகளை நிரப்பி அவனிடம் தந்தாள்.
அந்தப் பையை வாங்கிய அவன், " இனி கவலைப்பட வேண்டாம். உங்கள் மகன் கண்டிப்பாக வந்து சேருவார்" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.
மந்திரச் செருப்பின் உதவியால் அண்ணன்கள் இருந்த இடத்தை அடைந்தான் அவன். அரக்கன் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டு இருந்தான்.
" இனி இந்த அரக்கனால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. மந்திரச் செருப்பை இழந்து விட்டான். அவன் தேடி வைத்த செல்வத்தையும் கொண்டு வந்து விட்டேன்.
எல்லோரும் என்னை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள்" என்றான் குள்ளன். அண்ணன்கள் எல்லோரும் குள்ளனை நன்றாகப் பிடித்துக் கொண்டார்கள்.
" மந்திரச் செருப்பே! நாங்கள் எங்கள் வீட்டை அடைய வேண்டும்" என்றான் அவன். சிறிது நேரத்தில் எல்லோரும் வீட்டை அடைந்தார்கள்.
அவர்கள் தந்தையும் தாயும், " மகன்களே! காட்டில் என்ன பாடுபடுகிறீர்களோ? வறுமையினால் தான் இந்தக் கொடுமையைச் செய்து விட்டோம்" என்று அழுது புலம்பிக் கொண்டிருந்தார்கள்.
கதவு தட்டும் ஓசை கேட்டு அவர்கள் கதவைத் திறந்தார்கள். ஏழு மகன்களும் நிற்பதைக் கண்டு அவர்களைக் கட்டித் தழுவிக் கொண்டார்கள்.
" அம்மா! இனி நமக்கு வறுமையே இல்லை. பல தலைமுறைக்குத் தேவையான பொற்காசுகளுடன் வந்து இருக்கிறோம்" என்றான் குள்ளன்.
சாக்கைப் பிரித்தான் விறகுவெட்டி. அதற்குள் ஏராளமான பொற்காசுகள் மின்னின. எதிர்பாராமல் கிடைத்த இந்த நல்வாழ்வை எண்ணி எல்லோரும் மகிழ்ந்தார்கள்.
தூக்கம் கலைந்து எழுந்தான் அரக்கன். தன் காலில் மந்திரச் செருப்பு இல்லாததைக் கண்டு திடுக்கிட்டான். எப்படியோ துன்பப்பட்டு தன் வீட்டை அடைந்தான் அவன்.
வாசலிலேயே காத்திருந்த அவன் தாய், " மகனே! உன்னை விட்டு விட்டார்களா? நாம் சேர்த்து வைத்த பொற்காசுகளை அப்படியே கொடுத்து அனுப்பினேன்" என்றாள்.
" என்னம்மா சொல்கிறாய்? நாம் சேர்த்து வைத்த பொற்காசுகள் போய்விட்டனவா? என்ன நடந்தது?" என்று அதிர்ச்சியுடன் கேட்டான் அவன்.
நடந்ததை எல்லாம் சொன்னாள் அவள்.
" அம்மா! அந்தச் சிறுவர்கள் நம்மை நன்றாக ஏமாற்றி விட்டார்கள். நாமே நம் அருமைக் குழந்தைகளைக் கொன்று விட்டோம். என் மந்திரச் செருப்பை இழந்து விட்டேன். சேர்த்து வைத்த பொற்காசுகளும் போய்விட்டன. என்ன செய்வது?" என்று அழுதுகொண்டே கேட்டான் அவன்.
"மகனே! ஒரே ஒருநாள் அவர்கள் இங்கே இருந்தார்கள். நமக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டு விட்டது? இனி அவர்கள் வழிக்கே போகாமல் இருப்பது நமக்கு நல்லது" என்று அறிவுரை சொன்னாள் அவள்.
" நீ சொன்னபடியே நடக்கிறேன்" என்றான் அவன்.
பிறகென்ன, விறகுவெட்டி தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான்.
பயம்.. எப்பொழுது வரும்..? (குட்டிப் பேய் கதை)
ஓர் ஊரில் ஒரு குடியானவன் தன் மனைவி மகனுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தான். அவனுக்குத் தன் மனைவியின் மேல் கொள்ளைப் பிரியம். அவளை அதிகமாக நேசித்தான்.
இப்படி சந்தோஷமாக இருக்கும் பொழுது அவன் மனைவியை ஒரு பாம்பு கடிக்க அவள் இறந்துவிட்டாள்.
இந்த நிகழ்ச்சியை அந்த மனிதனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அளவிற்கு அதிகமாக உருண்டு பிரண்டு அழுதான். ஊர் மக்கள், தன் மனைவியைச் சுடுகாட்டிற்கு கொண்டு சென்று எரிக்க வேண்டும் என்று சொன்னதும் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மேலும் அழுதான்.
அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது.
ஆனால் வேறு வழியில்லாமல் அவனைச் சமாதானப்படுத்திச் சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று அந்தப் பிணத்தை எரித்தார்கள். அவனால் தாள முடியாமல் அங்கேயே உருண்டு பிரண்டும் கத்தி அழுதான். சரி இவன் அழுது அழுது தன்னைத் தானே சமாதானமாக்கிக் கொள்ளட்டும் என்று அவனை அங்கேயே விட்டுவிட்டு ஊர் மக்கள் சென்று விட்டார்கள்.
மனிதன் தன்னைத் தானே சமாதானம் செய்துக் கொண்டால் தான் முழு ஆறுதல் அடைந்த திருப்தி பெறுவான்.
அவனும் அன்று இரவெல்லாம் அந்தச் சுடுகாட்டில் கத்தி அழுது கொண்டிருந்தான். அவன் அழுது கொண்டிருந்த இடத்தில் ஒரு மரம் இருந்தது. அதில் ஓர் அம்மா பேயும் ஒரு குட்டிப் பேயும் இருந்தது. இந்த மனிதன் கத்தி அழுதுக்கொண்டே இருந்ததால் அந்தக் குட்டிப் பேயிற்கு தூக்கம் வரவில்லை.
அதனால் அது கோபமாகத் தன் தாயிடம் “அம்மா... அந்த ஆள் அழுவதால் எனக்குத் தூக்கம் வரவில்லை. நீ போய் அவனை பயமுறுத்தி துரத்திவிட்டு வா....“ என்று சொன்னது.
அதற்கு அம்மா பேய்.... “வேண்டாம். அந்த மனிதன் இப்பொழுது அதிக கவலையில் இருக்கிறான். இந்த நேரத்தில் அவன் கவலை மட்டும் தான் அவனுக்குப் பெரியதாகத் தெரியும். இந்த நேரத்தில் நாம் போய் பயமுறுத்தினாலும் அவன் பயப்பட மாட்டான்“ என்றது.
இந்தக் கூற்றை குட்டிப்பேய் ஏற்க வில்லை. “எவ்வளவு பெரிய மனிதனானாலும் நிச்சயம் ஒரு பேயிக்கு பயந்து தான் போவான். நான் போய் அவனைத் துரத்துகிறேன் “ என்று சொல்லிவிட்டு அவன் எதிரில் வந்து நின்று அவனைப் பயமுறுத்தியது. பலவித பயங்கர சத்தங்களைக் கொடுத்தது. அங்கிருந்த மண் மற்றும் மர இலைகளை அவன் மேல் விழுமாறு செய்தது. மரத்தைப் பயங்கரமாக உலுக்கி அவனைப் பயமுறுத்தப் பார்த்தது.
உம்ம்ம்... ஒன்றிர்க்கும் அவன் பயப்படவில்லை. அவன் தன் கவலையை நினைத்தே அழுது கொண்டிருந்தான். குட்டி பேயிக்கே சலிப்பு வந்து அவனை விட்டுவிட்டு திரும்பி வந்து பேசாமல் இருந்து விட்டது.
இப்பொழுது கொஞ்ச காலம் ஓடிவிட்டது. இந்தக் குடியானவன் தன் ஊர் மக்கள் சொன்னார்கள் என்று தன் மகனைக் காரணம் காட்டி இன்னொறு பெண்ணை மணந்து கொண்டு புதுப் பெண்ணுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தான்.
ஒரு நாள் வியாபாரத்திற்காக அந்தச் சுடுகாடு தாண்டிப் போக வேண்டியிருந்ததால் அப்பக்கமாகப் போய் கொண்டு இருந்தான். அவனை அந்தக் குட்டி பேய் பார்த்துவிட்டு தன் அம்மாவிடம்... “தன் வாழ்நாளிலேயே தான் பார்த்தத் தைரியசாளி இவன் தான்“ என்றது.
அதற்கு அம்மா பேய்... “அவன் தைரியசாளி கிடையாது. வேண்டுமானால் இப்பொழுது அவன் எதிரில் நீ போய் சும்மா நின்று பார்“ என்றது.
குட்டிப்பேயும் உடனே அந்தக் குடியானவன் முன் சும்மா வந்து நின்று சிரித்தது. அந்தக் குட்டிப்பேயைப் பார்த்தது தான் தாமதம். அந்தக் குடியானவன் பயந்து வாய் உலறி நடுங்கிப் போய் தலைதெரிக்க ஓடி போனான்.
குட்டிப் பேய் அம்மாவிடம் வந்து... “அன்றைக்கு தான் முழ பலங்கொண்டு பயமுறுத்தியும் பயப்படாதவன் இன்று நான் சாதாரணமாக எதிரில் போய் நின்றதும் பயந்து ஓடியது ஏன்..?“ என்று கேட்டது.
இதற்கு அம்மா பேய், “மனிதன் சந்தோஷமாக இருக்கும் பொழுது தனக்கு ஏதாவது துன்பம் வந்து விடுமோ என்ற பயத்திலேயே வாழ்கிறான். அந்த நேரத்தில் ஒரு சிறிய பயத்தைக் கொடுத்தாலும் அவன் அதிகமாக பயந்து விடுகிறான். இதே கவலையான நேரத்தில் அந்தக் கவலையை விட தனக்கு வேறு துன்பம் இல்லை என்று அரட்டுகிறான்.
அதனால் மனிதன் அதிக சந்தோஷமாக இருக்கும் பொழுது தான் அவனை மிகச் சாதாரணமாக பயங்கொள்ள வைத்துவிட முடியும்“ என்றதாம்.
(உண்மை தானா...?)
கேட்டதும் கடன் கொடுக்கும் கிண்டான கிண்டன்;
வாங்கின கடனைக் கொடுக்காத வல்லாள கண்டன்!
முன்னொரு காலத்தில் கிண்டான கிண்டன், கிண்டான கிண்டன் என்றொரு தனவான் வாழ்ந்து வந்தான். அவன் கேட்டவர்க்கெல்லாம் கடன் வழங்கும் தாராளப் பிரபுவாக இருந்தான். கடன் கொடுப்பது மாத்திரமல்லாமல், கொடுத்த கடனை உரிய காலத்துக்குள் வசூலித்துவிடும் திறமைசாலியாகவுமிருந்தான்.
அவன் வாழ்ந்த பக்கத்தூரில் வல்லாள கண்டன், வல்லாள கண்டன் என்றொரு முரட்டுப் பயல் இருந்தான். அவன் வருவோர் போவோரிடமெல்லாம் கடன் வாங்கிச் செலவழித்துத் திருப்பித் தருவேனா என்றிருந்தான். அவனிடம் போன பணமும் முதலையின் வாய் சென்ற பொருளும் ஒன்றென்றறிக! இதனால் அவனை யாவரும் வாங்கின கடனைக் கொடுக்காத வல்லாள கண்டன் என்றே பிரஸ்தாபித்துக்கொண்டு இருந்தனர்.
தங்களிடம் மட்டும் இவன் இப்படிக் கடன் வாங்கித் திருப்பித் தராமல் ஏய்க்கின்றானே, இவனை என்ன செய்தால் தகும் என்று யோசித்த, அவனிடம் பணம் கொடுத்து ஏமாந்த ஒரு சோணகிரி ஓர் உபாயஞ் செய்தான். நேரே வல்லாள கண்டனிடத்திலே போய், “அடா வல்லாள கண்டா! பக்கத்தூரில் ஒரு பிரபு இருக்கின்றான். கேட்டவருக்குப் பணம் கொடுக்கும் கிண்டான கிண்டன் என்பது அவன் நாமம். ஆனால், கொடுத்த பணத்தை வட்டியுடன் வசூலிப்பதிலும் அவன் கிண்டான கிண்டன். நீ அவனிடம் உன் சாமர்த்தியத்தைக் காட்டினாயானால்தான், நீ வாங்கின கடனைக் கொடுக்காத வல்லாள மகராஜா என நான் ஒப்புக்கொள்வேன்” என்று தூபம் போட்டுவிட்டுப் போனான்.
வல்லாளனுக்கு ரோசம் பொத்துக்கொண்டது. உடனே கிளம்பிப் போய் கிண்டான கிண்டனிடம் தேவையான பணத்தைக் கடனாகக் கேட்டான். கிண்டனும் கொடுக்கும்போது, “நீ வாங்கின கடனைக் கொடுக்காத வல்லாள கண்டனென்று தெரிந்தேதான் கொடுக்கிறேன். உன்னிடமிருந்து இந்தக் கடனைக் குறித்த தேதியில் எப்படி வசூலிப்பதென்று எனக்குத் தெரியும். போய் வா!” என்று வழியனுப்பி வைத்தான்.
தேதி ஒன்றாயிற்று; இரண்டாயிற்று; மூன்றும் ஆயிற்று! பத்து தேதிக்குள் வல்லாளன் பணத்தை வட்டியுடன் திருப்பித் தரவேண்டும் என்பது ஒப்பந்தம். ஆனால், அது பற்றிய பேச்சு மூச்சைக் காணோம். வல்லாள கண்டனிடமிருந்து பணத்தை வசூலிக்கவில்லை என்றால், கிண்டான கிண்டனின் பராக்கிரமம் கேலிக்குரியதாகிவிடுமே என்று கவலைக்கு ஆளானான் கிண்டன். நேரே வல்லாள கண்டனைத் தேடிச் சென்றான். கொடுத்த பணத்தை ஞாபகப்படுத்தினான். வல்லாளனோ பித்தனுக்குப் பித்தன்; எத்தனுக்கு எத்தனாயிற்றே! ஆகட்டும் பார்க்காலாமென்று மழுப்பலாகச் சொன்னான்.
“சரி, அது போகட்டும். என் உல்லாச பங்களா ஒன்றிருக்கிறது. அதை உனக்குக் காண்பிக்கவேண்டும் என்று ஆவலாயிருக்கின்றேன். வருகிறாயா என்னோடு, அல்லது பயத்தில் கை கால்கள் நடுங்குமோ உனக்கு?” என்று கேட்டான் கிண்டன். “ஆகா, எனக்கென்ன பயம்? இப்போதே வருகிறேன் உம்மோடு” என்று கிளம்பிவிட்டான் வல்லாளன்.
கிண்டன் கூட்டிச் சென்ற இடம் பங்களாவன்று; பாழடைந்த ஓர் இடிபாடு! அதனுள் வல்லாள கண்டனை அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தான் கிண்டன். எங்கெங்கும் எலும்புகள், மண்டையோடுகள், பிண நாற்றத்தின் வீச்சம் எட்டு ஊரைத் தூக்கியடிப்பதாகயிருந்தது. “இதோ பார்த்தாயா, இதுதான் என் உல்லாசபுரி. இங்கே விழுந்துகிடக்கும் மண்டையோடுகள் யாவும் என்னிடம் கடன் வாங்கித் திருப்பித் தராத கபோதிகள். இந்த மண்டையோடுகளை வைத்து, நீண்ட தொடை எலும்புகளால் தட்டி விளையாடுவதுதான் எனது கேளிக்கை விளையாட்டு!” என்று வர்ணித்துச் சொன்னான் கிண்டன். “சரி, நீ போகலாம். பத்தாம் நாள் பணம் வரவேண்டும்” என்று அழுத்திச் சொல்லி, வல்லாளனை அனுப்பி வைத்தான்.
நாள்கள் ஓடின. பணம் வந்தபாடில்லை. வருவதற்கான ச்மிக்ஞையும் தெரிவதாயில்லை. பின்னொரு நாளும் மீண்டும் கண்டனின் வீட்டுக்குப் படையெடுத்தான் கிண்டன். “வாங்கின பணமெங்கே? அதற்கான வட்டியெங்கே?” என்று வினவினான்.
“அகோ வாருமய்யா கிண்டரே! நல்ல நேரத்தில்தான் வந்தீர்! என் மகன் இறந்துகிடக்கிற நேரத்தில் வந்து உம்முடைய பணத்தைத் திருப்பிக் கேட்பது உலகுக்கே அடுக்குமா?” என்று கதறியழுதவாறு வல்லாள கண்டன் கிண்டனையும் அழைத்துக்கொண்டு சுடுகாடு சென்றான்.
கிண்டன் சற்றுத் தொலைவில் ஒரு புங்க மரத்தடியில் காத்திருக்க, மகனுக்குக் கொள்ளி வைப்பதற்கெனச் சென்ற வல்லாளன் அங்கே பிணத்தருகில் அமர்ந்து அதை அங்கஹீனம் செய்தவாறு பிய்த்துப் பிய்த்துத் தின்னத் தொடங்கியது கண்ட கிண்டன், “ஏதேது, இவன் நமக்கும் முப்பாட்டனாகவன்றோ இருக்கிறான்” என்றெண்ணியவாறு அங்கிருந்து நடையைக் கட்டலானான். அவன் போவதைப் பார்த்து உள்ளூரப் பொங்கிப் பொங்கிச் சிரித்துக்கொண்ட வல்லாள கண்டன் தனது பார்யாளிடத்திலே போய், சுடுகாட்டில் சோற்றுப் பிண்டத்தைப் பரப்பி வைத்துப் பிணம் என்று பொய்யாகச் சொல்லித் தின்று, கிண்டனைக் கிலி பிடிக்கச் செய்து விரட்டிய தனது பராக்கிரமத்தைச் சொல்லி மகிழ்ந்தான்.
கிண்டன் வாளாவிருப்பானா? விசாரித்து அறிந்தவரையில் கண்டனின் மகன் சாகவில்லையென்றும், சகல சௌபாக்கியங்களுடனும் க்ஷேமமாக ஊருக்குள் உலா வந்துகொண்டிருப்பதாயும் அறிந்தான். உடனே தன் ஆட்களையனுப்பி அவனைப் பிடித்து மூட்டையாய்க் கட்டித் தன்னிடத்திலே கொண்டு வரப் பணித்தான். அதன்பின்பு வல்லாள கண்டனுக்கு ஓர் லிகிதம் அனுப்பினான். ‘அதாவது இப்பவும் நீரெமக்குச் சேரவேண்டிய தொகை இத்தனையாயிரம் உரூபாயை வட்டியும் முதலுமாகக் குறித்த பத்து திகதிக்குள்ளாக என்னைத் தேடி வந்து தரவேண்டியது. அன்னியில், உமது மகனை ஊர் முச்சந்தியில், வீர மாகாளியம்மன் கோவில் எதிரே பலரறிய தகனஞ்செய்வேன்’ என்று அதில் கண்டிருந்தது.
பத்தாம் நாளன்று வீரமாகாளியம்மன் கோவில் எதிரே, ஊர் முச்சந்தியில் ஒரு பீப்பாய் வைக்கப்பட்டது. அதனுள்ளிருந்து ஒரு பாலகன் அழும் சத்தம் கேட்டது. ஊர் முழுக்கக் கிண்டன் கண்டனின் மகனை, சொன்ன தேதியில் பணம் திருப்பித் தராததால், வீரமாகாளியம்மனுக்குப் பலியிடப் போகிறான் என்று தண்டோரா போடப்பட்டது.
வல்லாள கண்டன் ஏய்ப்பன், சூழ்ச்சிக்காரன், ஏமாற்றுக்காரன், பித்தலாட்டக்காரன், பொய்யன், புரட்டன் என்று சகலமான பட்டங்களுக்கும் சொந்தக்காரனாக இருந்தாலும், அவனொரு தகப்பனும்தானே? எந்தத் தகப்பந்தான் தன் மகனைப் பலியிடப் பார்த்துக்கொண்டிருப்பான்? ஆகையினால், வெம்பித் துடித்து பக்கத்தூருக்குப் பதறி ஓடினான் வல்லாள கண்டன்.
அங்கே ஊர்ப் பிரதிநிதிகள், முக்கியஸ்தர்கள், சமயப் பெரியோர்கள் நடுவே பீப்பாய் ஒன்று கிடக்க, தண்டோரா முழக்கமிடுவோன் நாலைந்து முறை தண்டோராவை ஓங்கியடித்துவிட்டுக் கூடியிருந்த அனைவருக்கும் நடக்கப்போவதை விவரித்துச் சொல்லிவிட்டு அப்பால் நகர, பீப்பாய் மீது சீமெண்ணையைக் கொட்டித் தீப்பந்தத்தால் தொட்ட நாழிகையில் அது குபீரென்று பற்றிக்கொண்டு சொக்கப்பனை போல் உயர்ந்தெழுந்து பட் படீரென வெடித்துச் சிதறியது.
“ஐயோ! நான் என் செய்வேன்” என்று கூடியிருந்தோர் நடுவேயிருந்து ஓர் கூக்குரல் எழுந்தது. முன்னே வந்தான் வல்லாள கண்டன். “அடேய் கிண்டா! இதோ இருக்கிறதடா உன் பணம் வட்டியும் அசலுமாய். எடுத்துக்கொள். திருப்பித் தா என் மகனை! தர முடியுமா உன்னால்? இப்போதே தரவேணும். நான் சொன்ன திகதியில் வாக்குத் தவறாமல் உன் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டேன். நீ இப்போதே என் மைந்தனை எனக்குத் தரவில்லையானால், இங்கே கூடியிருப்போர் சாட்சியாக, அந்த மலைகள், மரங்கள், மேலே தகித்துக்கொண்டிருக்கும் சூர்யன் சாட்சியாக, அந்த வீரமாகாளியம்மன் சாட்சியாக உன் உடலை இரண்டு துண்டாகக் கிழித்து, உன் குடலை மாலையாக அணிவேன். இது சத்தியம்! சத்தியம்!” என்று சூளுரை செய்தான்.
பணத்தை எடுத்துக்கொண்ட கிண்டன், “அப்படியே தந்தேன் உன் மகனை” என்று ஓர் ஓரமாக நின்றிருந்த தன் சேவகனுக்குச் சைகை காட்ட, அவன் ஓடிப்போய் மறைவாக இருந்த மைந்தனைக் கொணர்ந்து வல்லாள கண்டனிடம் ஒப்புவித்தான்.
இதனால் அறியப்படுகிற நீதியென்னவென்றால், வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் உண்டென்பதோடு, ஏமாற்றும் சூழ்ச்சியும் எந்நாளும் நிலைக்காது என்பதேயாம்!

Wednesday 11 January 2017

கல்வி

கல்வி

ஒருவர் இந்த உலகில் பெறுகிற அறிவு, அனுபவம், 
ஆற்றல் ஆகியவற்றின் தொகுப்பே கல்வி எனப்படும். 
ஒருவர் பெறுகிற கல்வி அவரது ஆளுமைக்கும், 
ஆற்றலுக்கும் அடித்தளமாக இருந்து அவரின் 
ஒவ்வொரு செயலையும் சிறப்பாகச் செய்ய வழி 
அமைக்கும். 

கல்வியைப் பெற்றவர்கள் மற்றவர்களிடமிருந்து 
மாறுபட்டு, மற்றவர்களுக்கு வழிகாட்டுகிற சிறப்புப் 
பெற்றவர்களாக இருப்பார்கள். நுட்பமாகச் 
செயற்படுகிற கூர்மையான அறிவுடையவராக 
இருந்து வழிநடத்துவார்கள்.பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு கல்வி இப்படித்தான் இருந்தது. கற்றவர்களைத் தேடிச் சென்று, கல்வி கற்று மக்கள் தங்களை உயர்த்திக் கொண்டார்கள். எழுத்தறிவு, எண்ணறிவு, பட்டறிவு, கை வேலைத்திறன், இசை, கூத்து, நுண்கலைகள் எனப் பல்வேறு கூறுகளில் உள் நுழைகிற கருத்துருக்கள் கற்பவருக்குள் மாற்றங்களை ஏற்படுத்தி மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தியது \ உயர்த்தியது. 

ஆளுபவரின் பிள்ளையாக இருந்தால் கூட ஆசிரியருக்கு முன் அவர் ஒரு மாணவர்தான். ஆசிரியருக்குப் பணிவிடை செய்துதான் அவர் கற்றுக் கொண்டார். பொருளை விட மதிப்பும் மரியாதையும் மேலெழுந்து நின்றன. பெற்றோர்களுக்கு அடுத்த படியாக ஆசிரியர் கருதப்பட்டார். மக்களின் வணக்கத்திற்குரியவராக ஆசிரியர் இருந்தார். 

இதற்குப் பின் வந்த காலங்களில்.வேதத்தைக் கேட்டால், கேட்ட காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்று சொன்ன ஆசிரியர்கள் தோன்றினார்கள். 

கட்டைவிரலைக் குரு தட்சணையாகக் கேட்ட ஆசிரியரும், மறுப்பேதும் கூறாமல் வெட்டித் தந்த மாணவரும் இருந்தனர். 

கை கட்டி, வாய் புதைத்து, அடங்கி ஒடுங்கி, பணிவுடன் பிரணவ மந்திரத்திற்கான பொருளை முருகனிடம் சிவன் கேட்டு நிற்பதையும், மாணவர்கள் இப்படித்தான் அடங்கி ஒடுங்கி - கற்க வேண்டும் என்பதையும் சூழல் காட்டியது

சாதி, குலம், வருணம், ஏழை, பணக்காரன் - என்பவை உள்நுழைந்து கற்பவருக்கும், ஆசிரியருக்கும் இடையில் ஒரு பெரிய தடைக் கல்லை உருவாக்கியது. ஒரு பிரிவினர் ஓரங்கட்டப் பட்டனர். கல்வி ஒரு சிலருக்கு எட்டாக் கனி ஆனது. 

இன்றைய சூழலில் அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பச் செறிவு, சுருங்கிப் போன உலகம், பொருளாதார வளர்ச்சி போன்ற காரணிகளால் கல்வி என்பதற்கான கருத்துருக்களை வெகுவாக மாற்றியுள்ளன. 

அறிவு நுட்பத்திற்கான அடித்தளமாக இருந்த கல்வி இன்றைய சூழலில் அந்த நிலையிலிருந்து மாறி, பொருளீட்டுகிற \ வணிகத்திற்கான படிக்கட்டுகளாக மாறியுள்ளது. பெருகி வரும் மக்கட்தொகைக்கு ஏற்றவாறு கல்வியானது வடிவமைக்கப்பட்டு, பொருள்வழிப் பெருகின்ற வணிகப் பொருளாக, கல்வி மாற்றப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் விற்பனையாளராக மாறி விற்பனை செய்கின்றனர். பொருளீட்டுகின்றனர். இடைத் தரகர்களும் ஆசிரியர்களை கூலிக்கு அமர்த்தி விளம்பரம் செய்து விற்பனையைக் கூட்டுகின்றனர். 

சுதந்திரம் அடைந்த பிறகு கல்வி மைய அரசின் நேரடிப் பார்வையில் உள்ளது எனவும், கல்வியில் செய்யும் மாற்றங்கள் அனைத்தும் மைய அரசின் அனுமதி பெற்றே செய்ய வேண்டும் எனவும் விதி முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. 

ஆனால் இன்றைய சூழலில் தொடக்கக் கல்விக்கே பெரும் பொருள் செலவு செய்ய வேண்டியுள்ளது. கல்வி தனியாருக்கான பொருளீட்டும் வழிகளில் ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. 

தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளன. யார் வேண்டுமானாலும் கல்வி நிறுவனங்களை நிறுவி வணிகம் செய்யலாம். 

ஆங்கிலேயன் ஆண்ட பொழுது அவர்களுக்கு உதவுகிற எழுத்தர் வேலைக்காக மெக்காலேயால் அன்றைய கல்வி முறை வடிவமைக்கப்பட்டது. ஆங்கிலேயன் சென்ற பிறகும் கூட ஆங்கிலமும், கல்வி முறையும் இன்னும் இங்கே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. 

உளவியல் அறிஞர்களும், கல்வியாளர்களும் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்திய போதும் இன்றும் இங்குள்ள பெற்றோர்களின் ஆங்கில மோகத்தால், மழலையர்கள் ஆங்கிலக் கல்வியில் மூழ்கி எழுகிறார்கள். தெளிவான புரிதலுக்கும் நுட்பமான செயற்பாடுகளுக்கும் தாய்மொழிக் கல்வியே சிறந்தது, அதுவும் தொடக்க நிலைகளில் அதுவே கட்டாயமானது என்ற கருத்துருக்கள் இங்கே ஏட்டளவில்தான் இருக்கின்றன. இதை உணர்ந்து செயற்படுகிற பெற்றோர்களோ, கல்வியாளர்களோ, அதிகாரிகளோ இங்கு இல்லை. 


இன்றைய சூழலில் கடந்த இருபது ஆண்டுகளாக 
கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு, 
நாளிதழ்களிலும், மேடைகளிலும், அறிவிப்புகளிலும் 
அதிகமாகப் பேசப்படுகின்றன. கல்வியாளர் தவே 
அவர்களால் உருவாக்கிய குறைந்த பட்ச கற்றல் 
இலக்குகளைக்கொண்ட கல்விமுறை, கற்றலில் 
இனிமை, அனைவருக்கும் கல்வி, செயல்வழிக் கல்வி, 
படிப்பும் இனிக்கும் - இப்படிப் பல்வேறு பெயர்களில் 
கல்விக்கான அணுகுமுறைகளும், கற்றல் கற்பித்தல் 
வழி முறைகளும் தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ளன. 
சமச்சீர் கல்வி என்பதும் பரவலாகப் பேசப்பட்டு 
வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக அரசுத் தொடக்கப் 
பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 
வெகுவாகக் குறைந்து வருகின்றன. மறுபுறம் 
ஆங்கிலவழி மழலையர் பள்ளிகள் புற்றீசல்களாய் 
பெருகிக் கொண்டிருக்கின்றன. இதை ஈடுகட்ட 
அரசும் முதல்வகுப்பிலிருந்தே ஆங்கிலத்தை 
அறிமுகம்செய்கிறது. இந்த மாணவர்களின் 
வளர்ச்சி நிலையை இன்னும் பத்து 
ஆண்டுகளுக்குப் பிறகு ஆய்வு செய்து 
பார்த்தால் தான் தெரியும். 

பொதுவாக இன்றைய சூழலில் ஆறாம் 
வகுப்பில் படிக்கும் மாணவர்களில் 
15 வீதத்தினருக்கு  தமிழே படிக்கத் 
தெரியவில்லை.

கல்வி என்பது மாணவர்களுக்கு 
அடிப்படை அறிவை தந்து அவர்களை 
ஆற்றலோடு வளர்த்த வேண்டும் என்பதே 
அறிஞர்களின் உள்ளக்கிடக்கை.இதனையே 
கல்வியாளர்களும்,கல்விக்கூடங்களும்,கல்வி 
அதிகாரிகளும், கல்வித் துறை சார்ந்த 
அனைவரும் நெஞ்சில் நிறுத்தி திட்டமிட்டு 
செயற்படுத்த வேண்டும். 

மனித மூளை

  

மனித மூளையும் அதன் செயல்திறனும் மற்றும் மூளையைப் பாதிக்கும் 10 செயல்கள்:- 

மனித மூளையும் அதன் செயல்திறனும் 

1. மூளையில் 100,000,000,000 (100 பில்லியன்) நியூரான் செல்கள் உள்ளன. நரம்பு மண்டலத்தில் உள்ள நியூரான்கள் உடலின் உணரும் செய்தியை மூளைக்கு கெமிக்கல் சிக்னல் மூலம் கொண்டுசெல்லும். மது (அல்கஹால்) நியூரானின் இணைப்பைத்தான் வலுவிழக்க செய்யும். 
... 
2. நாம் சுவாசம் மூலம் பெறும் ஆச்சிஜனில் 20 சதவிதம் மூளை மட்டுமே பயன்படுத்தும். மீதி தான் மாற்ற உறுப்புகள் பயன்படுத்தும். அதாவது நமது உடலில் 2 சதவீதமே உள்ள மூளை 20 சதவீதம் ஆக்சிஜனை பயன்படுத்துகிறது. 5 முதல் 10 நிமிடங்கள் ஆக்சிஜன் இல்லையெனில் மூளை செல்கள் இறக்க துவங்கிவிடும். 3. நாம் 11 வயதை அடையும் போதுதான் நம் மூளை முழுவளர்ச்சி அடைகிறது. இருந்த போதிலும் நாம் இருபது வயதை அடையும் போதுதான் முழுமையாக சிந்திக்க உதவுகிறது. நாம் 35 வயதை தாண்டும் போது ஒரு நாளைக்கு நம் மூளையில் உள்ள 7000 மூளை செல்கள் அழிந்துவிடுகின்றன மீண்டும் அந்த செல்கள் உருவாவதில்லை. 

4. நம்மை நாமே கிச்சு மூச்சு மூட்ட முடியாது. நம் மூளையின் ஒரு பகுதியான செரிபெல்லம் மூளையின் மாற்ற பகுதிக்கு எச்சரிக்கை செய்யும் நாமே நம்மை கிச்சு மூச்சு ஊட்டுவதாக. அதனால் மூளையின் மாற்ற பகுதிகள் கிச்சு மூச்சு மூட்டுவதை கண்டுகொள்ளாது. 

5. மூளை 80 சதவீதம் நீரால் (water) ஆனது. 

6. மூளை பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் அதிக சுறுசுறுப்பாகவும், சிந்தனை செய்யும் திறன் அதிகமாகவும் இருக்கும். 

7. அதிக stress மூளையின் நியாபக திறனையும் கற்றுகொள்ளும் திறனையும் குறைத்து விடும் 

8. நம் உடலில் உள்ள மொத்த இரத்தத்தில் 20 சதவீதம் மூளைக்கு மட்டுமே தேவையானதாகும். 

9. மூளைக்கு மூளையின் வலியை உணரமுடியாது. மூளையின் வலியை உணர மூளைக்கு அந்த இணைப்பே கிடையாது. எனவே தான் மூளை அறுவை சிகிட்சை செய்யும் போது நோயாளி முழித்து கொண்டே இருப்பார்கள். 

10. மூளை மிகவும் மெதுவானதாகும் (soft). பட்டர் வெட்டும் கத்தியை கொண்டே மூளையை வெட்டலாம். 11. மூளையில் இருந்து வரும் செய்திகள் நியூரான்களுக்கு இடையே செல்லும் வேகம் ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு. 

12. ஒவ்வெரு முறையும் நாம் நியாபக படுத்த நினைக்கும் செய்திகள் அல்லது சிந்தனை செய்யும் நிகழ்வுகளை 2 அல்லது அதற்க்கு மேற்பட்ட மூளை செல்கள் ஒன்றிணைந்து சேமித்து கொள்ளும் 

13. நாம் விழித்துகொண்டிக்கும் பொழுது நமது மூளை உருவாகும் மின்சாரத்தின் அளவு 25 வாட்ஸ், இதன் மூலம் ஒரு பல்ப்பை எரியவைக்கமுடியும். 

14. ரோலர் கோஸ்டர்ஸில் விளையாடும் போது மூளையில் இரத்தம் கட்டிக்கொள்ள (Blood clot) வாய்ப்புகள் அதிகம். 

மூளையைப் பாதிக்கும் 10 செயல்கள்: 

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது.: காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே குளுக்கோஸ் இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும். 

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது: இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். 

3. புகை பிடித்தல்: மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. 

4.நிறைய இனிப்பு சாப்பிடுதல்: நிறைய இனிப்பான பண்டங்களை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

 5. மாசு நிறைந்த காற்று: மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளைபாதிப்படையும். 

6.தூக்கமின்மை. நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும். 

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது: தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது. 

8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது: உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது. 

9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது: மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது. 

10. பேசாமல் இருப்பது: அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

உடல் நலம்

ஆங்கில மருத்துவத்தில் அதிக நாட்டமுடைய ஒருவர் நஞ்சை உட்கொண்டார் அல்லது கெட்டு போன உணவை சாப்பிட்டு விட்டார் என்று வைத்துக் கொள்வோம்...
தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்று விடும்!
அதற்குப் பின் அதை மூளை கவனித்துக் கொள்ளும்.
உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.
இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றத் தள்ளும் போது அவர் உடனே அலோபதி ஆங்கில டாக்டரை நாடி "டொம்பெரிடன்" ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.
இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும். நான் என்ன செய்ய அரசே!. இவன் விட்டான் இல்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.
ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.
உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.
வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார். அவரும் ஒரு "Loperamide" ஐக் கொடுத்து நிறுத்தி விடுவார்.
உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலைதான் குடலும் சொல்லும்.
மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும். அப்போது இருமல் வரவே பழைய படி வைத்தியரை நாடி "எமொக்சிலின்" ஒன்றை சாப்பிடுவார்.
நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.
சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.
வெளியேறும் அனைத்து வழிகளும் அடை பட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும். உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை(கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.
கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.
அது Brain Tumor ஆக மாறும் அபாயம் உண்டு.
எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.
உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.
வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது.
உடலுக்கு சக்தி தேவைப் பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.
குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.
வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.
இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும் போது அதற்கெல்லாம் ஆங்கில அலோபதி டாக்டரை நாடி நாம் போவதில்லை.
பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா?.
அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?.
தாகம் எடுத்தால் நாளைந்து சேலைன் போத்தல் ஏற்றும் வழக்கமா நம்மிடம் உள்ளது?.
இதே போல் சத்தி வரும் உணர்வை மூளை பிறப்பிப்பது சாப்பிட்டதில் உள்ள ஒவ்வாத கழிவை வெளியேற்றவே.
இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?.
வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.
இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?
சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்றுதானே அர்த்தம்.
கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறிய வைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?
*********
மூக்கு ஒழுகுதல்,
சளி பிடித்தல்,
இருமல்,
காய்ச்சல்,
இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!
இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!
இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது!
இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்!.
மருத்துவம்,
உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,
கழிவுகளை உடலிலேயே தங்க வைத்து, மேலும் சேர்த்து,நோய்களை பெரிதாக்கி புற்று நோய் வரை கொண்டு செல்லும்!.
நம் உடலின் மொழியை புரிந்து கொள்ளுங்கள்!.
அலோபதி எனும் ஆங்கில மருத்துவம் தவிருங்கள்!
ஆரோக்யத்தை உணர்ந்து அனுபவியுங்கள்.......!
நாம் சந்தோஷமாக இருந்தால் நம் உடலில் நல்ல ஜெல் சுரக்கும்.
இல்லையேல் அமிலம் போன்ற ஜெல் சுரந்து உடல் கேடாகும்.
நமக்கு என்றும் நாம்தான் டாக்டர்...

தைப்பொங்கல்

தைப்பொங்கல்

தை மாதம் கொண்டாடப்படுவதால்” தைத் திருநாள் ” என்றும் அழைக்கிறோம். உழுது, நாற்று நட்டு, களை எடுத்து, உரமிட்டு, நீர் பாய்ச்சி கண்ணின் கருமணிபோல பாதுகாக்கிற உழவனின் அந்தக் காலங்களில் மடியில் காசு இருக்காது. அறுவடை முடிந்தால் தான் அவன் மடியும் கனக்கும்; மனமும் நிறைந்திருக்கும்; 
அதனால் தான் மகன், மகள் திருமணம் அல்லது சீர் செனத்தியோ புத்தாடைகள் வாங்குவதையோ உழவன் ஒத்திப் போட்டுக் கொள்வது வழக்கம்தைப்பொங்கல்தை மாதம் தமிழ் முதலாம் திகதி உலக நாடுகள் அனைத்திலும் வாழுகின்ற தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் விழாவாகும். உழைக்கும்மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு நாளாகக்  கொண்டாடப்படுகிறது.தைப்பொங்கல் தை மாதம் தமிழ் முதலாம் திகதி உலக நாடுகள் அனைத்திலும் வாழுகின்ற தமிழர்களால்  சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் விழாவாகும். உழைக்கும் மக்கள் 
இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு நாளாகக் 

கொண்டாடப்படுகிறது.நஞ்செய், புஞ்செய் நிலங்களானாலும் சரி, வானம்பார்த்து மழைக்கு கதறும் பூமியானாலும் சரி, இராப்பகலாக உழைத்து உழைப்பின் செல்வம் அறுவடைக்கு வருகிற நாள் ‘ தை ‘ யில்தான். உழைப்பை அறுவடை செய்துசெல்வம் வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் பலன் பெறக் காரணமாக இருந்த நிலம், நீர், காற்று, சூ.ரியன்யன், கால்நடைகளுக்கு நன்றிப் பெருக்கோடு எடுக்கும் விழாதான் பொங்கல் பெருவிழா.தை மாதம் கொண்டாடப்படுவதால்” தைத் திருநாள் ” என்றும் அழைக்கிறோம். உழுது, நாற்று நட்டு, களை எடுத்து, உரமிட்டு, நீர் பாய்ச்சி கண்ணின் கருமணி போல பாதுகாக்கிற உழவனின் அந்தக் காலங்களில் மடியில் காசு இருக்காது. அறுவடை முடிந்தால் தான் அவன் மடியும் கனக்கும்; மனமும் நிறைந்திருக்கும்; அதனால் தான் மகன், மகள் திருமணம் அல்லது சீர் செனத்தியோ புத்தாடைகள் வாங்குவதையோ உழவன் ஒத்திப் போட்டுக் கொள்வது வழக்கம்தை மாதத்தின் முதல் நாளை சூரியக் கடவுளை அதாவது சூரிய பகவானை போற்றி வணங்கி வழிபடும் பொங்கல் திரு நாளாக கொண்டாடுகின்றனர். அதிகாலையில் குளித்து புத்தாடை அணிந்து புது மெருகோடு அவரவர் வேலைகளில் மூழ்கிவிடுவார்கள். பெண்கள் தான் அந்த விடியலின் விளிம்பில் என்ன சுறுசுறுப்பாக இயங்குகிறார்கள் என்று தோன்றும். வீட்டு வாசற்படிகளில், முற்றத்தில் கோலமிட்டு தேடிப்பிடித்து பசுஞ்சாணம் கொண்டுவந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி கோலங்களின் மேனியில் படாது சமர்த்தாக மழைக்கு அதிபதியான வருணன் தனது வெப்பவீச்சுக் கதிர்களால் பூமியிலிருந்து ஒரு பங்கு நீரை எடுத்துக்கொண்டு பதிலாக பத்து மடங்கு மழையாக பொழிகிறான். அதே போல சூரியனைப் பூஜிப்பதால் வாழ்க்கைக்கு தேவையான எல்லாம் பத்து மடங்காக கிடைக்கும் என்பது தொன்று தொட்டு வரும் தகர்க்க இயலாத நம்பிக்கையாகும்.
கதிரவனை முதன்மைப் படுத்தி வணங்குதல் கடைப் பிடிக்கப்படுகிறது. எனவே சூரியக் கடவுள் அந்த வருட விளைச்சலுக்கு துணை புரிந்தமைக்கு நன்றி கூறியும், எதிர்வரும் ஆண்டில் நல்ல விளைச்சளைத் தரவும் வேண்டி பொங்கலன்று முதல் வணக்கம் சூரியனுக்குச் செய்வார்கள்.தை முதல் நாளன்று தைப்பொங்கல் அல்லது பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கலாகும். வீட்டில் சூரியக் கோலமிட்டு, மாவிலை தோரணங்கள் கட்டி வீட்டை அலங்கரிப்பார்கள். பொங்கலுக்கு தமிழர் திருநாள் என்பதைப் போல் உழவர் திருநாள் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்பதற்கேற்ப, உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது. உழவர்கள் இந்தப் பண்டிகையை சிற்பாக கொண்டாடுவார்கள். வருடம் முழுவதும் வயலில் வியர்வை சிந்த உழைத்த உழவர்கள் பகலவனுக்கு நன்றிதெரிவிக்கும் விதமாக இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் இது ஆன்றோர் வாக்கு. தை திருநாளில் இது வரை இருந்து வந்த துன்பங்கள் நீங்கி நல்வழி பிறக்கும் என்றநம்பிக்கையோடு இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் தினத்தன்று அடுப்பில் பொங்கல் பானை வைக்கப்பட்டு (முன் காலத்தில் மண்பானை உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. அதன் பின் வெண்கலத்தால் செய்யப்பட்ட வெண்கலப்பானை உபயோகப்படுத்தப்பட்டது. இப்போது அதுவும் போய் பெரும்பாலான இடங்களில் குக்கரே பயன்படுத்தப்படுகிறது) அதற்கு பொட்டு வைத்து, பானையைச் சுற்றி மஞ்சள் கட்டி அதில் பொங்கல் வைப்பார்கள். பொங்கல், பொங்கி வந்ததும் குடும்பத்தினர் அனைவரும் பொங்கலோ பொங்கல் என கூறி பொங்கலை வரவேற்பர். தை மாதம் பிறக்கும் போது பொங்கல் பானை வைக்கப்படுவது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாகும். சில சமயம் மாதம் அதிகாலைபிறக்கும். சில சமயம் மதியமோ அல்லது மாலையோ மாதம் பிறக்கும். சில சமயம் இரவு நேரத்தில் கூட மாதம் பிறக்கும். மாதம் பிறக்கும் நேரப்படி பொங்கல் பானை வைக்கப்படும். பொங்கலின் சிறப்பம்சம் கரும்பும், மஞ்சள் கொத்தும். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கரும்பும், மஞ்சள் கொத்தும் விற்பனை செய்யப்படுவதை காணலாம். பொங்கலன்று பால் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் ஆகியவை தயாரிக்கப்பட்டு சூரியனுக்கு நிவேதனம் செய்யப்படும். கரும்பும் நிவேதனப் பொருளில் முக்கிய இடம் பெறும். சூரியனுக்கு நிவேதனம் என்பதால் வீட்டின் மாடியிலோ அல்லது திறந்த வெளி பகுதியிலோ தேரில் சூரியன் வருவது போல் கோலமிடட்டு அதற்கு அருகில்நிவேதனப் பொருட்கள் வைக்கப்பட்டு சூரியனுக்கு பூஜையும், நிவேதனமும் நடைபெறும்.

விவேகானந்தர் - 6



நரேந்திரனுடன், பேசிக்கொண்டிருந்த அந்த வேளையிலேயே திடீரென பரவசநிலைக்கு போய் விட்டார் ராமகிருஷ்ணர். அவர் எந்தநேரத்தில் இப்படிப்பட்ட நிலையை அடைவார் என யாராலும் கணிக்க முடியாது. அந்த நாராயணனே கதாதரனாக (ராமகிருஷ்ணரின் முந்தையப் பெயர்) அவதரித்துள்ளார் என்பது ராமகிருஷ்ணருக்கும், அவரது சீடர்களுக்கும் தெரியும். அவர் இப்படிப்பட்ட நிலையை அடையும் போது அவரது சீடர்கள் அவரைத் தெய்வப்பிறவியாக எண்ணுவர். மற்றவர்களின் பார்வையில் அவர் பித்தராகப் படுவார். நரேந்திரன் அவரை அப்படியே உற்றுப்பார்த்தார். இப்போது ராமகிருஷ்ணரின் கை மெதுவாக நரேந்திரரைத் தொட்டது. அவ்வளவு தான்! இதற்கு முன் கால் கட்டைவிரலால் தன்னை அழுத்தியபோது ஏற்பட்ட அந்த உணர்வு மீண்டும் ஆட்கொண்டது. ஆனால், முதல்முறை அலறியது போல இம்முறை அவர் அலறவில்லை. தாங்கமுடியாத ஏதோ ஒரு உணர்வு ஆட்கொண்டாலும் கூட, நரேந்திரர் அப்படியே தன்னை மறந்துவிட்டார். அதன் பிறகு அவரது மனதில் எழுந்த எண்ண அலைகள் எப்படியோ இருந்தன. அவர் சிவபெருமானின் அவதாரமாக தனக்குத்தானே தெரிந்தார். அவரது முற்பிறப்பு அவரது மனக்கண் முன் வந்தது. அப்போது ராமகிருஷ்ணர் அவரிடம் பல கேள்விகளைக் கேட்டார்