முதலாம் வகுப்பில் “ஊசி மூஞ்சி மூடா” என்று தூக்கணாங்குருவியைப் பார்த்து குரங்கு திட்டியது சட்டென்று நினைவுக்கு வந்தது.
பெண்பார்க்கும் படலத்தை முடித்துவிட்டு “பொண்ணோட முகம் அழகா இருக்கு”ன்னு சொல்றதுக்கு பதிலாக “பொண்ணோட மூஞ்சி அழகா இருக்கு”ன்னு சொல்லி பாருங்களேன். அம்புடுதேன்.
யாரையாவது திட்ட வேண்டியிருந்தால் “விடியாமூஞ்சி”, “அழுமூஞ்சி”, “தூங்குமூஞ்சி”, “உம்மணாம் மூஞ்சி”, “குரங்கு மூஞ்சி”, “வில்லன்மூஞ்சி” என்றுதானே ஆசைதீர திட்டுகிறோம்?
“அவளுக்கென்ன அழகிய முகம்”
“முகத்தில் முகம் பார்க்கலாம்”
“மஞ்சள் முகமே வருக! மங்கள விளக்கே வருக!”
என்றுதான் கவிஞர்கள் பாடியிருக்கிறார்களேத் தவிர, “மஞ்சள் மூஞ்சியே வருக!” என்று யாரும் பாடி வைக்கவில்லையே..!
பிறர் நம்மிடம் அன்பாக நடக்கவில்லை என்றாலும் “அவரு கொஞ்சம்கூட முகம் கொடுத்து பேசமாட்டேங்கிறார்” என்றுதான் மரியாதையாக நாம் சொல்லுகிறோம். அதுதான் தமிழர் பண்பு.
இந்த FACEBOOK உங்களுக்கு பிடிச்சிருந்தா முகநூல் என்று கெளரவமா சொல்லுங்க. இல்லேன்ன பேசாம “மூஞ்சிபுக்கு”ன்னு திட்டிட்டு போயிடுங்க

No comments:
Post a Comment