Friday 2 March 2018

நாட்டுப்புறக் கதைகள்

நாம் இழந்த மிக பெரிய செல்வம் என்றால் அது நாடோடி அல்லது நாட்டுப்புற கதைகள் என்றுதான் நான் சொல்வேன்....
நீதி நெறிகளையும், நல்வழிகளையும் காட்டும் கதைகள் என்றால் அவை மிகை இல்லை, நாட்டுப்புற கதைகளில் மகிழ்ச்சி, சோகம், அறியாமை, அறிவுடைமை, இலைமறை காயாய் காமம் என்று எல்லாம் உண்டு, ஒரு சிலரே அவற்றை தொகுத்து உள்ளார்கள், அதுவும் கடலில் ஒரு துளியை எடுத்தது போல் தான்,அப்படி நான் படித்த கதைகள் சிலவற்றை இனி நான் பதிவிடுகிறேன் ...
படித்து பாருங்கள்.....
------------------------------------------------------------------------------------
ஒரு ஊரில் ஒரு கிழவி இருந்தாள், அவ ரொம்ப பெரிய கருமியாக இருந்தாள், வேலை செஞ்சு சம்பாதிக்கற காசையெல்லாம் வீட்டிலேயே சேர்த்துவச்சு செலவு செய்யாமல் இருப்பாள், இதை தெரிஞ்சுக்கிட்ட சில திருடன்கள் அவளோட வீட்டில் கன்னக்கோல் வைக்கறதுன்னு முடிவுசெஞ்சு அவளையும் அவ வீட்டையும் நோட்டம் விட்டுக்கிட்டு இருந்தானுக...
அப்போ ஒரு நாள் கிழவி ராத்திரி கம்பு ஓடிக்கறதுக்கு கிளம்பினா, அதை தெரிஞ்சுக்கிட்ட திருடனுக அன்னைக்கு ராத்திரி அவ வீட்டுல கன்னக்கோல் வச்சு திருடரதுன்னு முடிவு செஞ்சாங்ககிழவி வேலைக்கு கிளம்பற நேரத்தில் அவ வீட்டுல பெருச்சாளி அட்டகாசம் அதிகம் இருந்ததுனால சோள மாவுல இனிப்பையும் கூடவே விசத்தையும் கலந்து உருண்டை பிடிச்சு வச்சுட்டு கிளபினா.....
அவ அங்கிட்டு போனதும் திருடனுக இங்கிட்டு நுழைஞ்சு இருக்கறதை எல்லாம் கோணியில் சுத்திக்கிட்டு கிளம்பற நேரத்தில் சோள உருண்டையை பார்த்துட்டு அதை திங்கலாம்னு முடிவு பண்ணி அதை தின்னானுக, உடனே விஷம் தலைக்கேறி செத்துப்போனானுக.....
வேலைக்கு போயிட்டு அர்த்தராத்திரி கிழவி வீட்டுக்கு வந்து பார்த்தா வீட்டுல கன்னம் வச்ச அடையாளம் இருக்குது வீட்டுக்குள்ள போய் பார்த்தா 4 திருடனுக செதுக்கிடக்கரானுக, கிழவிக்கு கையும் ஓடல, காலும் ஓடல, அவளுக்கோ பயம் புடிசுக்கிடுச்சு, இவனுக செத்த சேதி வெளிய தெரிஞ்சா அரசாங்கத்தில இருந்து வந்து கைது செஞ்சுடுவாங்க என்ன பண்றதுன்னு ஒரே ரோசனை கிழவிக்கு......
அப்போ அந்த ஊரு மடத்துல ஒரு சோம்பேறி சாமியார் இருந்தான், கிழவி அவனை போய் பார்த்து அடேய் சாமி எங்க ஊட்டுல இழவு விழுந்துருச்சு தூக்கிபோடுறதுக்கு ஊருக்காரனுக வர மாட்டாங்க நீ வந்து தூக்கிப்போடு 50 ரூபா வாங்கிக்கன்னு சொன்னா, அதுக்கு அந்த சாமியாரும் ஒத்துக்கிட்டு கிழவி ஊட்டுக்கு வந்தான்....
கிழவி உள்ள இருந்த ஒரு திருடனை நல்ல சிங்காரிச்சு வெள்ளை வேட்டி கட்டிவிட்டு பொட்டு வச்சு உரல்ல உக்கார வச்சு இருந்தா, அந்த சாமியாரும் பொணத்தை தூக்கிக்கிட்டு போய் புதைச்சுட்டு கிழவியை பார்க்க வந்தான், அதுக்குள்ளே கிழவி ரெண்டாவது திருடன் பொணத்தையும் முதல் பொணம் போல் சிங்காரிச்சு அதே மாதிரி உரல்ல உக்காரவச்சுட்டு பக்கத்திலே இருந்தாள், அந்த சாமியார் வந்த உடனே கிழவி அட சாமி என்ன நீ புதைச்ச பொணம் எந்திரிச்சு வந்து மறுபடியும் உரல்ல உக்காந்துக்கிச்சு அப்படின்னு சொல்ல, அந்த சாமியும் உரல பார்த்தான், உரல்ல பொணம் இருக்குது, இருட்டு வேலைங்கரதுனால அந்த சாமிக்கு ரெண்டு பொனமும் ஒரே மாதிரி தெரிய உடனே ரெண்டாவது பொணத்தையும் தூக்கிகிட்டு போய் புதைச்சுட்டு அதுமேல எலந்த முள்ளை வெட்டி வச்சுட்டு வந்தான்,அதுக்குள்ளே நம்ப கிழவி மூணாவது பொணத்தையும் அதே போல் சிங்காரிச்சு உரல்ல உக்காரவச்சுட்டா, சாமியார் வரவும் உடனே கிழவி அட மட சாமி என்னடா நீ புதைக்கற மறுக்காவும் அந்த பொணம் வந்து உரல்ல உக்கார்ந்துக்கிசுனு சொல்ல சாமிக்கோ ஒரே ஆச்சிரியமா போச்சு, உரல்ல பார்த்தா பொணம் உக்கார்ந்துக்கிட்டு இருக்குது, இந்த தடவை சரியா புதைக்கனும்னு நினைச்சுக்கிட்டு மூணாவது பொணத்தை பொதச்சு அதுமேல பெரிய பெரிய கல்லை எல்லாம் வச்சுட்டு அந்த சாமி கிழவி வீட்டுக்கு வந்தான்....
அதுக்குள்ளே கிழவி நாலாவது பொணத்தையும் சிங்காரிச்சு உரல்ல உக்காரவச்சுட்டு சாமியார்கிட்ட அட கோட்டிக்கார சாமி என்ன எழவை பொதைக்கற, அந்த பொணம் மறுக்கா, மறுக்கா எந்திருச்சு வந்து உரல்ல உக்கார்துக்கிதுன்னு சொன்னா, நம்ப சாமியாருக்கு வந்ததே கோவம், பக்கத்தில இருந்த ஓலக்கையை எடுத்து பொணத்து மண்டைல நாலு போடு பொட்டு கையை காலை ஒடிச்சு கொண்டுபோய் பொதைசுட்டான், அதுக்குள்ளே கருக்க வெளுக்கற நேரமாக ஆத்துல கைகால் கழுவிக்கிட்டு இருந்தான்.....
அந்த நேரம் பார்த்து பக்கத்து ஊரு வாத்தியார் வெள்ளை வேட்டி கட்டிக்கிட்டு பொட்டு வச்சுக்கிட்டு ஆத்தங்கரை ஓரத்துல வேகு வேகுனு போய்க்கிட்டு இருந்தார், நம்ப சாமியாரோ பொணம் தான் வேகு வேகுனு போகுதுன்னு நினைசுக்கிட்டான், உடனே வந்ததே கோவம் சாமிக்கு கைல இருந்த மம்பட்டியை வச்சு வாத்தி தலைல ஒரே போடு பொட்டு கொண்டுபோய் பொதைசுட்டு கிழவியை பார்த்து காசு வாங்கிட்டு போகலாம்னு ஊட்டுக்கு வந்தான்......
அப்போ கிழவி கேட்டா என்ன சாமி இவ்ளவு நேரம்னு அதுக்கு அந்த சாமியார் சொன்னான், நானும் புதைக்கறது அந்த பொணம் எந்திரிச்சு வந்து உரல்ல உக்கறதும் பொழப்பா போச்சு, கடைசியா இங்க இருந்து கொண்டுபோய் பொதச்சுட்டு ஆத்துல கைகால் கழுவிட்டு இருந்தப்போ அந்த கழுத பய பொணம் வேகு வேகுனு உரல்ல உக்காரதுக்கு நடந்து வந்துக்கிட்டு இருந்தச்சு, எனக்கு வந்ததே கோவம் பொதைக்க பொதைக்க எழுந்து வரியா சவமேனு மண்டைல மம்பட்டியை வச்சு ஒரே போடு பொட்டு கொன்னு போதச்சுட்டேன்னு சொன்னான் அதை கேட்ட கிழவிக்கு புரிச்சு போச்சு வந்தது பக்கத்து ஊரு வாத்தினு உடனே வச்சா சத்தம் அட ஆக்கங்கெட்ட சாமி பொணம் எந்துரிச்சு வருதுன்னு நினைச்சு பக்கத்து ஊரு வாத்தியை கொன்னுட்டைனு உடனே சாமியார்க்கு கை, கால் எல்லாம் வெட வெடனு நடுங்க காசு கூட வாங்காம எடுத்தான் ஓட்டம் ......
திரும்பி பாக்காம, அந்த ஊரை விட்டு பல காதம் போனபிறகுதான் திரும்பியே பார்த்தானாம்...........
எப்பூடி ?!!!!!

No comments:

Post a Comment