Friday 2 March 2018

முகநூல்

இந்த முகநூல்….
நட்பு வளர்க்கும் பண்ணை !
அரும்பும் திறனை அழகாக காட்டும்
உருப்பெருக்கி வில்லை !
எழுத்துக்கள் பயிலும் குருகுலம் !
முகமறியா நட்புக்களின் நூலகம் !
பகிர்தலில் மகிழும் தண்ணீர்பந்தல் !
படைப்புகளின் நடைமேடை !
அபயக்குரலுக்கு உதவிக்கரம் நீட்டும் பீடம் !
காணமல் போன நண்பர்களை தேடித்தரும்
திருவிழா ஒலிபெருக்கி !
அரசியல் ஆசான்களின் விளம்பர பதாகை !
போற்றித் துதிக்கும் பன்னீர் செம்பு !
தூற்றி இறைக்கும் சேற்றுக் குட்டை !
ஒளிந்திருக்கும் திறமைகளின் கனிமக் குவாரி !
உள்ளக்கிடக்கைகள் ஒளிவுமறைவின்றி காட்டும்.....
கண்ணாடி பளிங்கு ?!!!!!

No comments:

Post a Comment