சிறந்த பஞ்சாங்கம் எது?
ஹோமம், யாகம், வேள்வி மூன்றுக்குமான வித்தியாசம் என்ன?
ஒரு தெய்வத்தை மகிழ்விக்க சிறந்த பூஜை, அர்ச்சனை, அபிஷேகம், நிவேதனம், ஸ்தோத்திர பாராயணம் போன்ற பல்வேறு வழிமுறைகளில் ஹோமம் மற்றும் யாகம் என்னும் வழிமுறையும் ஒன்று.

தேவதோத்தேசேந திரவிய த்யாகோ யாக: அதாவது, ஒரு தெய்வத்தைக் குறித்து
நமக்குச் சொந்தமான திரவியத்தை(பொருளை) தியாகம் செய்தல் யாகம் எனப்படும்.
அதாவது, முறையாக அக்னி (நெருப்பு) மூட்டி அதில் அந்த தெய்வத்துக்கான
மந்திரங்களைச் சொல்லி பொருட்களைச் சமர்ப்பித்தல் ஹோமம் அல்லது யாகம்
எனப்படும்.
ஆகவேதான் (ஹோமம் செய்பவர்கள்) ஹோமம் செய்யத் தகுந்த பல பொருட்களையும் மந்திரங்களுடன் ‘ஸ்வாஹா’ என்று சொல்லி அக்னியில் போடும் போது, அந்த ஹோமத்தை, யாகத்தை பொருட்செலவு செய்து நடத்தும் யஜமானர், ஹோம குண்டத்தின் அருகில் அமர்ந்து கொண்டு, ‘விஷ்ணவே இதம் ந மம’ - அக்னியில் போடப்படும் இந்தப் பொருள் மகாவிஷ்ணுவைச் சேர்ந்தது, என்னுடையதல்ல என்று (மந்திரம்) சொல்லுவார். இவ்வாறு சொல்லுவதே யாகம் எனப்படும். இதைச் சொல்லுபவர்களுக்கே யாகப் பலன் கிட்டும்.
வேள்வி என்றால், வேண்டுதல் எனப் பொருள். தெய்வத்திடம் மனமுருகி வேண்டுதலே வேள்வி எனப்படுகிறது. ஹோமம் என்பது சிறிய அளவுகளில் வீடுகளில் செய்வது. இதையே பெரிய அளவில் கோயில் போன்ற இடங்களில் செய்வது வேள்வி/யாகம் என வழக்கில் சொல்கிறோம்.

No comments:
Post a Comment