ஐயப்பா சரணம்
முக்காலங் கடந்தவனே முக்கண்ணன் தன்மகனே
முதலாகத் தனைநிறுத்தி முடிவுகளை ஆள்பவனே
நிலையில்லா நிலைமாறி நெறிநல்ல வாழ்வுபெற
புலியூர்ந்து புவியாளும் பொன்னாபரணன் அருள்வேண்டி
தவழ்ந்துவருங் குழவிநிகர் தமிழினையே தான்கொண்tடு
கிளர்ந்தெழுந்த ஆசையினால் கூச்சத்தைக் கருதாமல்
சீட்டுஎழுதத் துணிந்துவிட்டேன் சீற்றம் சிறிதுமின்றி
சிறியேனைப் பொருத்தருளி சிறப்பைத் தந்திடனும்

ஐயன் பேர்சொன்னால் ஐயங்கள் அகன்றுவிடும்
சாஸ்தாவின் பேர்சொன்னால் சகலபாபம் சாம்பலாகும்
பதினெட்டுப் படியேறிப் பாதம் பணிந்தபின்னர்
விதிமாறி வழிபிறந்து வெற்றித்திரு வீடுவரும்
சாஸ்தாவின் பேர்சொன்னால் சகலபாபம் சாம்பலாகும்
பதினெட்டுப் படியேறிப் பாதம் பணிந்தபின்னர்
விதிமாறி வழிபிறந்து வெற்றித்திரு வீடுவரும்
குறையொன்றும் எனக்கிருக்க இயலாது என்றாலும்
குழவியழும் குரல்கேட்டு அரவணைப்பாள் அன்னையவள்
அவ்வின்பம் பெற்றிடவே அளவற்ற ஆசையினால்
அடியவனும் முயன்றிட்டேன் ஐயனே இக்கவிதை
குழவியழும் குரல்கேட்டு அரவணைப்பாள் அன்னையவள்
அவ்வின்பம் பெற்றிடவே அளவற்ற ஆசையினால்
அடியவனும் முயன்றிட்டேன் ஐயனே இக்கவிதை
காலமும் நிலையில்லை காயமும் நிலையில்லை
வானவில்லாம் வாழ்கை வாடிடும் இமைப்பினிலே
வாழும்நாள்வரை வானவன்புகழ்பாட வலிவான உடல்வேண்டி
வணங்கு மதனை என்சுற்றமும் பெற்றிடணும்
வானவில்லாம் வாழ்கை வாடிடும் இமைப்பினிலே
வாழும்நாள்வரை வானவன்புகழ்பாட வலிவான உடல்வேண்டி
வணங்கு மதனை என்சுற்றமும் பெற்றிடணும்
அள்ளக்குறையா செல்வம் உள்ளம் நிறையுறவு
எல்லாம் நிறைந்தவாழ்வு எனக்கருள வேணுமையா
கொற்றவா நீஎனக்கு உற்றவனாக வேண்டும்
மற்றவை இன்னமுண்டு மாறாமல் தந்திடனும்
எல்லாம் நிறைந்தவாழ்வு எனக்கருள வேணுமையா
கொற்றவா நீஎனக்கு உற்றவனாக வேண்டும்
மற்றவை இன்னமுண்டு மாறாமல் தந்திடனும்
சீரோடு வாழ்ந்துவரும் செல்வந்தர் உலவிவர
தேரேறி சென்றிருந்த நாள்மாறிப் போனதின்றோ
காரேரி செல்கின்றார் களிப்புடனே என்குடும்பம்
ஊறேது மில்லாமல் காரேரி சென்றிடனும்
தேரேறி சென்றிருந்த நாள்மாறிப் போனதின்றோ
காரேரி செல்கின்றார் களிப்புடனே என்குடும்பம்
ஊறேது மில்லாமல் காரேரி சென்றிடனும்
விண்ணிலே பறந்தழகாய் வானவர் சென்றிடுவர்
மண்ணிலும் சிலபேர்கள் மாற்றாகச் செய்திடுவார்
கண்கள்போல் ஈர்குழவி விண்ணாளும் காட்சிதனைக்
களிப்புடனே என்குடும்பம் கண்டு ரசித்த்திடனும்
மண்ணிலும் சிலபேர்கள் மாற்றாகச் செய்திடுவார்
கண்கள்போல் ஈர்குழவி விண்ணாளும் காட்சிதனைக்
களிப்புடனே என்குடும்பம் கண்டு ரசித்த்திடனும்
மனிதனாய் பிறந்திட்டல் பணியொன்று செய்திடணும்
மின்னணுவைப் பேணுவதும் உணவகத்தை வளர்ப்பதுவும்
அலங்கார மாளிகைகள் அணியணியாய் துணிமணிகள்
நலங்காக்கும் வணிகமது நானிலத்தில் உயர்ந்தவையே
மின்னணுவைப் பேணுவதும் உணவகத்தை வளர்ப்பதுவும்
அலங்கார மாளிகைகள் அணியணியாய் துணிமணிகள்
நலங்காக்கும் வணிகமது நானிலத்தில் உயர்ந்தவையே
மாமலையில் ஓர்தோட்டம் மனங்கவரும் எழிற்கூடம்
தேயிலையை புறந்தள்ளி தேக்குமரம் விண்முட்டும்
எங்கள்தொழில் ஏற்றமுடன் கடலெல்லை களைகடந்து
தங்கமென விற்றிடனுமதன் தரமுலகில் உயர்ந்திடணும்
தேயிலையை புறந்தள்ளி தேக்குமரம் விண்முட்டும்
எங்கள்தொழில் ஏற்றமுடன் கடலெல்லை களைகடந்து
தங்கமென விற்றிடனுமதன் தரமுலகில் உயர்ந்திடணும்
அரைக்காசு பெற்றாலும் அரசவையில் பணிவேண்டி
அறியாதார் கேட்டிடுவார் அதிலேதும் பெருமையில்லை
அரிமாவிண் வாலாகா ஆடிவந்த நாள்போதும்
ஆட்சியின் தலையாக அடியவனும் மாறவேண்டும்
அறியாதார் கேட்டிடுவார் அதிலேதும் பெருமையில்லை
அரிமாவிண் வாலாகா ஆடிவந்த நாள்போதும்
ஆட்சியின் தலையாக அடியவனும் மாறவேண்டும்
அச்சமுடன் கைகட்டி அடிமையாய் வாழ்கின்ற
அவலநிலை மாற வேண்டும்
எச்சத்தின் மிச்சத்தை நச்சியே குடிக்கின்ற
ஈனம் மறைய வேண்டும்
இச்சையைக் கூறினேன் இச்ஜெகமீதி லுனக்கு
இயலாத செயலு முண்டோ
நஞ்சுபோல் பாவங்கள் வழியதை மறைப்பினும்
உன்விழியதை நொறுக்கி விடும்
உதவிக்கரம் வேண்டி உறத்தக் குரலோடு
ஓங்காரக் கூச்ச லிட்டேன்
கதவுகளை மூடிக் காலத்தைக் கடத்தாமல்
கணப் போதில் வந்திடனும்
இரப்போர்க்கு இல்லையென்று இயம்பாத உன்நெஞ்சில்
ஏனின்னுங் கருணை இல்லை
அறற்றியே கிடக்குமென் அவலநிலை போக்கநின்
அருள் தன்னைத் தாருமையா

No comments:
Post a Comment