Saturday 30 December 2017

சிறந்த பஞ்சாங்கம் எது?
ஹோமம், யாகம், வேள்வி மூன்றுக்குமான வித்தியாசம் என்ன?
ஒரு தெய்வத்தை மகிழ்விக்க சிறந்த பூஜை, அர்ச்சனை, அபிஷேகம், நிவேதனம், ஸ்தோத்திர பாராயணம் போன்ற பல்வேறு வழிமுறைகளில் ஹோமம் மற்றும் யாகம் என்னும் வழிமுறையும் ஒன்று.
தேவதோத்தேசேந திரவிய த்யாகோ யாக: அதாவது, ஒரு தெய்வத்தைக் குறித்து நமக்குச் சொந்தமான திரவியத்தை(பொருளை) தியாகம் செய்தல் யாகம் எனப்படும். அதாவது, முறையாக அக்னி (நெருப்பு) மூட்டி அதில் அந்த தெய்வத்துக்கான மந்திரங்களைச் சொல்லி பொருட்களைச் சமர்ப்பித்தல் ஹோமம் அல்லது யாகம் எனப்படும்.
ஆகவேதான் (ஹோமம் செய்பவர்கள்) ஹோமம் செய்யத் தகுந்த பல பொருட்களையும் மந்திரங்களுடன் ‘ஸ்வாஹா’ என்று சொல்லி அக்னியில் போடும் போது, அந்த ஹோமத்தை, யாகத்தை பொருட்செலவு செய்து நடத்தும் யஜமானர், ஹோம குண்டத்தின் அருகில் அமர்ந்து கொண்டு, ‘விஷ்ணவே இதம் ந மம’ - அக்னியில் போடப்படும் இந்தப் பொருள் மகாவிஷ்ணுவைச் சேர்ந்தது, என்னுடையதல்ல என்று (மந்திரம்) சொல்லுவார். இவ்வாறு சொல்லுவதே யாகம் எனப்படும். இதைச் சொல்லுபவர்களுக்கே யாகப் பலன் கிட்டும்.
வேள்வி என்றால், வேண்டுதல் எனப் பொருள். தெய்வத்திடம் மனமுருகி வேண்டுதலே வேள்வி எனப்படுகிறது. ஹோமம் என்பது சிறிய அளவுகளில் வீடுகளில் செய்வது. இதையே பெரிய அளவில் கோயில் போன்ற இடங்களில் செய்வது வேள்வி/யாகம் என வழக்கில் சொல்கிறோம்.
தமிழில் நல்ல எழுத்தாளர்கள் மிகக்குறைந்த அளவில் ....மட்டுமே ....
பெரும்பாலானோர் எழுதுவது வணிக நோக்கில் மட்டுமே....தரம் எப்படி இருக்கும்?...
எழுத்தைக் காதலித்து உள்ளம் மகிழ்ந்து இலக்கியத்தரத்தில் எழுதும் நபர்கள் ???...அரிதினும் அரிது ...
வாசகர் இலட்சணமும் அவலட்சணமான கதி ...
இந்த கதி கேட்டில் நல்ல எழுத்து எங்கே கிடைக்கும் ?
கையேந்தி பவன் ரக எழுத்துக்களை விட கேவலமான தரங்கெட்ட எழுத்துக்கள் ....
எவனாவது இடை மறித்து குமுறி பேசினால் கழுத்தை முறிச்சிப்போடுவேன் ....கபர்தார் ..
பொறம்போக்கு எழுத்தை ஊக்குவித்து தரங்கெட்ட எழுத்தை தந்த ஊடகங்களே தண்டிக்கப்பட வேண்டிய .....டேஷ்...டேஷ்....டேஷ்!!!!!
நல்ல எழுத்து என்பதை இனம் காண கொஞ்சம் புத்தி ஞானம் அறிவு வேணும் தம்பி ....இங்கு மெஜாரிட்டி ஆட்களுக்கு அது லேது ....
இன்று பலரும் ஏதோ காரணம் காட்டி உயர்த்திப் பேசும் ?!!! .....எழுத்தாளர்கள் எழுத்து எனக்கு ஜூஜூபி !!!!ரகமே ....
குப்பை எழுத்துக்கள் ...பல ..... எல்லாம் படித்திருக்கிறேன் ...2000-க்குப் பின்னர் நெவர்....அதில் ஒண்ணுமே இல்லை ...
எட்டு வயதில் வாசிக்க ஆரம்பித்தேன் 1970
எடுத்த எடுப்பிலேயே ராணி,குமுதம்,கல்கி,கல்கண்டு,தினமணிக்கதிர் ஆ.வி கொஞ்சம் தாமதம் தான் ...அப்பா பம்பாயில் இருந்து புக் போஸ்டில் அனுப்பித் தந்தார். 1972.-க்குப் பின்னர் கடையில் ...அப்புறம் நேரடியாக ஏஜென்ட் ...அந்தாள் என்னைப் படுத்திய பாடுகள் ....தனிப்பதிவில் ....சொன்னதெல்லாம் செய்வேன் ....
..வாசிப்பு வேகம் மணிக்கு 200 பக்கங்கள் ....ஞாபக திறன் அபாரம் ....சென்னை லயோலாவில் படித்த 1979-82 காலகட்டம் .....அமெரிக்கன் கான்சலேட் நூலகத்தில் நான் காலையில் எடுத்த நூல்களை மதியம் கொடுப்பேன்....நூலகர் கேட்டார் என்ன தம்பி மெய்யாலும் படிக்கீறீங்களா?...இல்லை பந்தா ?...
குமுறி விட்டேன் ...அட்டை டு அட்டை எது வேணுமோ கேளுங்க ...பதிப்பு வருடம்....பிரஸ் ...வெளியீடுகள் விபரம், Bibliography....அரண்டு போனார்.
போதாக்குறைக்கு பக்கம் 47-ல் சில்வர் பிஷ் நசுங்கி இருக்கு பாருங்க ... எந்த பக்கம் மூலை எல்லாம் மடங்கி இருக்கு ....இதெல்லாம் சொல்லி மிரட்டி .......
கடைசியில் க்ளைமாக்ஸ் எனக்கு எக்ஸ்ட்ராவா அவரது பவரில் நூல்கள் கொடுத்தார்....சும்மா இல்லீங்கோ ......
தமிழ் & ஆங்கிலம் .3000 + எழுத்தாளர்கள் பல்லாயிரம் நூல்கள் படித்த படிப்பாளி ...எனக்கு சொல்ல தகுதி /உரிமை ஏராளம் உண்டு ...Commercial/ Original literature வேறுபாடுகள் நல்லாவே தெரியும்.
....தங்க்லீஷ் ...எனக்குப்பிடிக்காது ....சொல் நயம் நேர்த்தி இப்போதுள்ள எழுத்துக்களில் இல்லை...என்னை ரசித்துப்படிக்க வைக்கும் ''சரக்கு'' இல்லாத நூல்களை நான் படிப்பதுமில்லை .
...இவர்கள்!!!!!(வணிக திருட்டு எழுத்தாளர்கள் ) என்னைக்கவர்ந்த எழுத்தாளர்களும் இல்லை .....1993- தாயார் சாஹிப் தெரு கணபதி மேன்சனில் மூன்று மாதம் வாசம் ...
அசோகன் பாக்கெட் நாவல் அப்போது புகழின் உச்சியில் ....சில நண்பர்களோடு திருவல்லிக்கேணியில் அவரது ஆபிஸ் போவேன் ...
என்னைப் பற்றி அறிந்து எழுதச் சொன்னார் ...சம்மதிக்கவில்லை ...
அவர் நல்லவரே ....பழக இனிய மனிதரே ....இன்றும் முகநூலில் நண்பரே ....
ஆனால் !!!!
குப்பைக்கூடையில் சேரும் குப்பைகளை நான் எழுதுவதில்லை என்று தெளிவாய் சொன்னேன் ....
.....
நல்ல நூல்கள் வாசிக்க அறியாத தெரியாத நபர்களுக்கு இலுப்பைப்பூக்களே சர்க்கரை தான் ...
ஆனால் எனக்கல்ல ...
3000 எழுத்தாளர்கள் எழுதிய பல்லாயிரம் வாசித்த மேதை எனும் ஆங்காரம் ஏராளம் உண்டு ...

எனக்கே எனக்குத் தான்யா ...

1970.-2017..வரையிலும் ....நீண்ட  47.....(நாற்பத்தேழு) ஆண்டு  கால வாசிப்பு ...
..============================================
நல்ல கதைகளை எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு படித்திருந்தாலும் கேட்டு இருந்தாலும் மறக்காது. அப்படிப்பட்ட நல்ல கதை ஒன்றைப் பகிர விரும்புகிறேன்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் நாட்டில் மார்ஷல் ஆர்ட்ஸ் (தற்காப்புக் கலை) கற்றுக் கொடுக்கும் பள்ளியில் ஒரு மாணவர் இருந்தார். அவருக்கு இருபத்தைந்து வயதுக்கு மேல் இருக்கும்.
நல்ல மாணவர் தான். இயல்பில் நல்ல குணம் கொண்டவர் தான். இருந்தும் ஒரு நாள் அவர் ஏதோ தவறு செய்துவிட்டார் போல. அவரது குரு அவருக்கு தண்டனை கொடுத்து விட்டார். மறுநாள் கோபத்தில் அந்த மாணவர் தன் குருவைத் தாக்க அவர் ஒரு பாறையின் மீது விழுந்து தலையில் காயப்பட்டு இறந்து போனார்.
அந்த மாணவனை, அந்த குருவின் மகனும், மற்ற சிஷ்யர்களும் துரத்திக்கொண்டு வந்தனர். மாணவன் பயந்து ஓடினான். எப்படியோ அவர்களுக்கு தண்ணி காட்டிவிட்டு ஒரு மலையில் ஒளிந்துகொண்டான்.
அந்த மாணவன், தான் செய்த தவறை உணர்ந்தான். குருவைக் கொன்று எத்தகைய பாவத்தை செய்துவிட்டோம் என்று எண்ணி வருந்தினான். பேசாமல், மீண்டும் தன் பள்ளிக்கே சென்று, அங்கு உள்ளவர்களிடம் மன்னிப்பு கேட்டு, அவர்கள் கொடுக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்ளலாமா என்று எண்ணினான். அனால் மீண்டும் அங்கு சென்றால் தனக்கு சங்கு தான் என்பதால் அவரால் எந்த முடிவும் எடுக்க இயலவில்லை.
இருந்தாலும் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்து ஆக வேண்டும் என்று எண்ணினான். அவனால் என்னதான் செய்ய முடியும் என்று நினைத்தான். அப்போது அவனுக்கு ஒரு யோசனை வந்தது.
அவன் ஒளிந்து கொண்டு இருந்த மலை இரண்டு கிராமங்களைப் பிரித்தது. அந்த மலையில் பாதை எதுவும் இல்லை. நல்ல பாதை எதுவும் இல்லாததால், மழைக் காலங்களில் பலர் பாறைகளிலிருந்து வழுக்கி விழுந்து இறந்து போவது சகஜமாக இருந்தது. அதனால், அந்த மலையை சுற்றிக்கொண்டே எல்லோரும் சென்று கொண்டு இருந்தனர்.
அந்த மாணவன், தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக, அந்த மலையைக் கொடைந்து நல்ல பாதை ஒன்றை அமைக்க முடிவு செய்தான். அந்த மலையில் கிடைத்த கிழங்குகளையே உண்டு, அங்கு கிடைத்த பொருட்களை வைத்தே பாதை ஒன்றை உருவாக்கத் தொடங்கினான்.
தனி ஆளாக கிட்டத்தட்ட பாதி வேலையை முடித்து விட்டன். ஒரு நாள் அந்த மாணவன் தன் பணியைத் தொடங்கச் செல்லும்போது அவன் எதிரில் கத்தியுடன் ஒருவன் நின்றான். உற்று பார்த்தபோது தான் தெரிந்தது, அவன் தான் கொன்ற ஆசிரியரின் மகன் என்று. அவன் பழி வாங்க வந்திருப்பதை புரிந்து கொண்டான்.
ஆனால் அவன் பயந்து ஓடவில்லை. தன குருவின் மகனிடம், தான் செய்த செயலுக்குப் பிராயச்சித்தமாக இப்போது இந்த மலையில் பாதையை அமைத்துக் கொண்டு இருக்கிறேன். இந்த பாதையை முடிக்க எப்படியும் ஆறு மாதங்கள் ஆகும். எனவே அதுவரை, காத்திருந்து அதற்குப்பின் தன்னை, பழி தீர்த்துக் கொள்ளலாம் என்று வேண்டிக் கொண்டான்.
குருவின் மகன், மலையைப் பார்த்தன். அந்த மாணவன் சொல்வதில் இருந்த உண்மை அவனுக்குப் புரிந்தது. பாதிக்கும் மேல் வேலை முடிந்து இருப்பதை பார்த்தன். தன் தந்தையைக் கொன்ற மாணவனிடம் சொன்னான், 'சரி. உனக்கு நான் நான்கு மதங்கள் தான் அவகாசம் தருவேன். நான்கு மாதங்கள் முடிந்தவுடன், உன் தலையை சீவிவிடுவேன். அதற்குள், இந்த பாதை அமைக்கும் வேலையை முடித்து விடு. இங்கிருந்து தப்பிக்கும் எண்ணம் கொல்லாதே. இந்த மலையைவிட்டு வெளியே நீ வந்தால், காவல் படையிடம் சிக்கி கொள்வாய்.'
அந்த மாணவன் ஒத்துக் கொண்டான். ஆறு மாத காலம் மட்டுமே தன்னிடம் உள்ளதை புரிந்துகொண்டு, இன்னும் வேகமாக வேலையை செய்யத் தொடங்கினான்.
முதல் மாதம்:
குருவின் மகன் தினமும் வந்து அவன் அங்கே இருக்கிறானா இல்லை தப்பித்து ஓடி விட்டானா என்று பார்த்தான்.
இரண்டாம் மாதம்:
அவன் வேலையை வேகாம முடிக்க, பட்டணத்தில் இருந்து நல்ல உளி, வாங்கிக் கொடுத்தான்.
மூன்றாம் மாதம்:
குருவின் மகன், அந்த மாணவன், அங்கே தினமும் கடின முயற்சி மேற்கொண்டு வருவதைப் பார்த்து, அவனுக்கு நன்கு சமைத்த உணவை தினமும் கொண்டு சென்றான்.
நான்காம் மாதம்:
கிட்டத்தட்ட வேலை முடிந்து விட்டதை அறிந்து கொண்டான், ஆசிரியரின் மகன். ஆனாலும் எஞ்சியுள்ள வேலையை ஒரு மாதத்தில் முடிக்க முடியுமா என்று அவனுக்கு தெரியவில்லை. குருவின் மகன், தானும் உளி முதலிய தேவையான உபகரணங்களை எடுத்துக்கொண்டு மலைக்கு சென்று தன் தந்தையைக் கொன்றவனுக்கு பாதையை அமைக்க உதவி செய்தான்.
நான்கு மாதங்கள் முடியும்போது, பாதை அமைக்கும் பணியும் நிறைவு பெற்றது. மாணவன், தான் குருவின் மாணவன் முன் மண்டியிட்டு, 'நான் கொடுத்த வாக்கை நிறைவேற்றிவிட்டேன். இனி தாங்கள் விரும்பியது போலவே எனக்கு மரண தண்டனையை அளிக்கலாம்.' என்று பணிவாக சொன்னான்,
குருவின் மகன் தன கையில் இருந்த வாளை ஓங்கிக்கொண்டே அந்த மாணவனிடம் சொன்னான்.
"உன்னிடம் தான் நான் கடின உழைப்பு என்றால் என்ன என்று கற்றுக் கொண்டேன். நான் உன்னைக் கொள்ள வந்தபோது நீ பயந்து ஓடாமல், என்னிடம் அவகாசம் கேட்டாய். உன்னிடம் தான் உண்மையான வீரத்தை அறிந்து கொண்டேன். செய்யும் தவறுக்கு பிராயச்சித்தம் தேடும் பண்பை உன்னிடம் தான் கற்றுக் கொண்டேன். எல்லாவற்றிகும் மேலாக, கொடுத்த வாக்கை, இவ்வளவு கஷ்டப்பட்டு நிறைவேற்றும் பண்பையும் உன்னிடம் தான் கற்றுக்கொண்டேன். நீ எனக்கு குரு ஆகிவிட்டாய். நான் என்ன உன்னைப் போல குருவைக் கொள்பவனா?
என் ஆசிரியரை, எவ்வாறு நான் தண்டிப்பேன்?"
தன் வாளைத் தூக்கிப்போட்டான் அந்த ஆசிரியரின் மகன்.
இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் வாங்கிய நூல்களில் ஸ்ரீமத் பாகவதமும் ஒன்று. அதில் ஒன்பதாவது ஸ்கந்தத்தில் ஒரு கதை வந்தது. அது படித்தவுடன் எனக்கு ஞாபகம் வந்தது இண்டர்ஸ்டெல்லார் (interstellar) திரைப்படம் தான்.
கிறிஸ்டோபர் நோலன் ஒரு ஜீனியஸ். அவரது படத்தைப் புரிந்துகொள்ளவே தனி மூளை வேண்டும். Memento ...Dunkirk படங்கள் பாருங்கள்
சரி. அவர் இயக்கிய இண்டர்ஸ்டெல்லார் படத்துக்கும் பாகவதத்துக்கும் என்ன சம்மந்தம்?
கால நீட்டிப்பு தான் இண்டர்ஸ்டெல்லார் படத்தின் கரு. அதாவது, படத்தில் நாயகன் செல்லும் கார்காஞ்சுவா (Gargantua) என்னும் கிரகத்தில் ஒரு மணி நேரம் நீங்கள் கழித்தால் பூமியில் எழு ஆண்டுகள் போய்விடும். ( சிறப்பு சார்பியல் கொள்கையில் ஐன்ஸ்டீன் சொன்னது.. இந்த கால நீட்டிப்பு).
இதே கால நீட்டிப்பை பாகவதத்தில் உள்ள ஒரு கதையிலும் கண்டேன். அந்த கதை இதோ:
ரேவதன் என்னும் அரசன் கடல் உள்ளே துவாரவதீ என்னும் நகரை நிர்மாணித்து ஆண்டு வந்தான். அவனுக்கு நூறு பிள்ளைகள். மூத்தவன் ககுத்மி.
ககுத்மியின் மகள் ரேவதி. பேரழகியாம். அவளுக்கு ஏற்ற மணாளன் இந்த பூவுலகில் இல்லை என்று எண்ணி, நேராக சத்யலோகம் சென்று பிரம்மரிடம் கேட்டுவிட முடிவு செய்தான்.
ககுத்மி போன்ற ஆன்றோர்களால் சத்யலோகம் செல்ல முடியுமாம். (ஆனால் எப்படி போனார் என்று எல்லாம் குறிப்பிடப் படவில்லை)
தன் மகளுடன் ககுத்மி பிரம்மலோகம் சென்றான். அங்கே இசை-நாட்டியக் கச்சேரி நடந்து கொண்டு இருந்ததால் பிரம்ம தேவரை உடனே சந்திக்க முடியவில்லை. கொஞ்ச நேரம் போன பிறகு பிரம்மாவைக் கண்டு வணங்கி அவரிடம் தன கோரிக்கையை வைத்தார் ககுத்மி.
"பிரம்ம தேவா! என் மகள் ரேவதிக்கு இணையான மணாளன் யார் இந்த பூலோகத்தில் இருக்கிறார்?"
பிரம்மா சிரித்துக்கொண்டே சொன்னார்..
"ககுத்மி! நீ பூலோகத்தை விட்டு கிமபும்போது இருந்த அனைவரும் காலத்தால் கவரப்பட்டுவிட்டனர். அவர்களது மகன்கள், பேரப்பிள்ளைகள், என் அவர்களது வம்சமே இப்போது இல்லை.
நீ இங்கே வந்து சில காலம் தான் ஆனது. அனால் பூமியில் 27 சதுர்யுகங்கள் முடிந்து இருக்கும். "
27 சதுர்யுகங்கள் என்றால் 27 x 4 = 108 யுகங்கள்.
கலி யுகம்: 432000 ஆண்டுகள்.
த்வாபர யுகம்: 2 x 432000 ஆண்டுகள்.
திரேதா யுகம்: 3 x 432000 ஆண்டுகள்.
கிருத யுகம்: 4 * 432000 ஆண்டுகள்.
இந்த நான்கும் சேர்ந்தது தான் ஒரு சதுர்யுகம். எனவே ஒரு சதுர்யுகத்தில் 10 x 432000 = 4320000 ஆண்டுகள் இருக்கும்.
108 சதுர்யுகங்கள் என்றால் 108 x 4320000 = 46,65,60,000 ஆண்டுகள்.
அதாவது 46 கோடியே 65 லட்சத்தி 60 ஆயிரம் ஆண்டுகள்.
எனவே ககுத்மி பிரம்மலோகம் வந்தநேரத்தில் பூமியில் 466560000 ஆண்டுகள் முடிந்துவிட்டது. இப்போது எல்லாம் அங்கே மாறிப்போய் இருக்க வேண்டும்.
பிரம்ம மேலும் சொன்னார், "இப்போது பூமியில் த்வாபர யுகம் நடக்கிறது. அங்கே உள்ள பலராமன், பகவானின் அம்சம். அவரே உன் மகளுக்கு ஏற்ற ஜோடி."
பூமிக்கு திரும்பிய ககுத்மி அங்கே தன வம்சமே இல்லாமல்போனது தெரிய வந்தது. பலராமருக்கு தன மகள் ரேவதியை கல்யாணம் செய்துவிட்டு வனவாசம் சென்றார்.
பாகவதத்திலும் சொல்லப்பட்டு இருக்கிறது ரிலேடிவிட்டி தியரி.
இந்த கதையைப் பலர் அறிந்திருக்கக் கூடும்.
=========================================
ஆனாலும் படியுங்கள்
----------------------------------
லண்டன் மாநகரில் உள்ள ஒரு தேவாலயத்தில் கட்டியர் (verger) ஒருவர் இருந்தார். ஆலயத்தில் மணி அடிப்பது, திருமணம், இறுதி யாத்திரை போன்ற சடங்குகளுக்கும், மற்ற பல வேலைகளையும் தேவாலயத்தில் செய்வதே அவர் வேலை. பரம்பரை பரம்பரையாக அந்த தொழிலை அவரது முன்னோர்கள் செய்து வந்தனர். இப்போது நம்ம ஆளு செய்து வருகிறார்.
அவருக்கு எழுத படிக்க தெரியாது. ஆனால் சர்ச்சில் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக குறை ஏதுமின்றி செய்து வந்தார்.
ஒரு நாள் அந்த தேவாலயத்தின் அருட்தந்தை (father) மாற்றப்பட்டு புதியதாக ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் மக்களுக்கு சேவை செய்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். முதலில் லண்டன் மக்கள் அனைவருக்கும் எழுத்தறிவை போதிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
அதன் முதல் கட்டமாக தேவாலயத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு கட்டாயம் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்.
நம் கட்டியர் இந்த செய்தியைக் கேட்டுத் தன் வேலைக்கு ஆப்பு வைத்து விடுவார்களோ என்று அச்சம் கொண்டார். நேராக அருட்தந்தையைப் பார்த்து கேட்டுவிட தீர்மானித்தார்.
'அய்யா! பரம்பரை பரம்பரையாக எங்கள் வம்சம் தான் இந்த ஆலயத்தில் கட்டியர் பணியை மேற்கொண்டு வருகிறோம். ஆனால் எழுத படிக்க எனக்குத் தெரியாது. நான் என்ன செய்வது' என்று கேட்டார் கட்டியர்.
'உன் பரம்பரையே இந்த தேவாலயதிற்கு உழைத்து இருப்பதால் உனக்கு ஒரு சலுகை மட்டும் தருகிறேன். மூன்று மாதம் உனக்கு அவகாசம் தருகிறேன். அதற்குள் எழுத படிக்கக் கற்றுக்கொள். நம் ஆலயத்தில் உள்ளவர்களை உனக்கு உதவி செய்யச் சொல்கிறேன். கவலைப்படாதே!' என்று சொன்னார் அருட்தந்தை.
கட்டியருக்கு இந்த பதில் திருப்தி தரவில்லை.
'அய்யா! படிக்கும் வயதிலே, எனக்கு கல்வி சுத்தமாக வரவில்லை. என் தந்தை எனக்கு எழுத்தறிவு கொடுக்க எவ்வளவோ முயன்றும் எனக்கு கொஞ்சமும் எழுதப்படிக்கக் கற்று கொடுக்க முடியவில்லை. அப்படி இருக்க நாற்பது வயது கடந்தபிறகு இப்போது என்னால் எப்படி கற்க முடியும்?' என்று கேட்டார்.
'அப்போது எழுத்தறிவு கொண்ட ஒருவரை தான் நான் நியமிக்க வேண்டும்.. சாரி!' என்று கைவிரித்தார் அருட்தந்தை.
ஒருவித விரக்தியில், 'நான் ராஜினாமா செய்கிறேன்' என்றார் கட்டியர். எத்தனையோ ஆண்டுகளாக தான் வேலை பார்த்த தேவாலயத்தை விட்டு வெளியேறினார் அவர்.
இல்லம் செல்ல மனம் வரவில்லை. மனைவியிடம் சொல்லவேண்டுமே, வேலை போய்விட்டது என்று!
எனவே அவர் வீட்டுக்கு செல்லாமல் ஹைவே வழியே நடந்து செல்கிறார். அவருக்கு நடந்ததை நினைக்க நினைக்க ஸ்ட்ரெஸ் அதிகமானது. ஒரு சிகரெட் பிடித்தால் தேவலை என்று நினைத்தார். சிகரெட் கடையை எதிர்நோக்கி அந்த ஹைவேயில் நடந்து சென்றார்.
அதிர்ஷ்டவசமாகவோ இல்லை துரதிஷ்டவசமாகவோ அவர் கண்ணில் ஒரு சிகரெட் கடை கூட தென்படவே இல்லை.
அவருக்குள் ஒரு ஸ்பார்க் வந்தது.
'நான் என் இங்கு ஒரு சிகரெட் கடை வைக்கக் கூடாது? என்னைப்போன்று இந்த நெடுஞ்சாலையில் மற்றவரும் சிகரெட் பிடிக்க நினைக்கக் கூடும். ஆனால் ஒரு கடை கூட இங்கே இல்லை. நான் என் ஒன்றைத் தொடங்கக் கூடாது?' என்று அவருக்குத் தோன்றியது.
ஒரு புதிய தெம்போடு வீடு சென்றார். மனைவியைப் பார்த்து சொன்னார் 'எனக்கு எழுத படிக்கத் தெரியாததால் சர்ச்சில் வேலை பறிபோனது! கவலைப்படாதே நான் இனிமேல் ஒரு புது தொழில் செய்யப்போகிறேன். நெடுஞ்சாலையில் சிகரெட் கடை ஒன்றை விக்க போகிறேன்.'
மனைவிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
அந்த கட்டியர் தான் இத்தனை காலம் சேர்த்து வைத்த பணத்தை முதலாகப் போட்டு ஒரு சிகரெட் கடையை ஹைவேயில் தொடங்குகிறார். கொஞ்ச நாளிலே கல்லா கட்ட ஆரம்பித்து விட்டார். நல்ல லாபம் வந்தது. இன்னும் சில கடைகளைத் திறந்து வேலைக்கு ஆட்களை நியமித்தார்.
எங்கே எல்லாம் சிகரெட் கடை இல்லை என்று பார்த்து பார்த்து அங்கெல்லாம் கடைகளைத் திறந்தார். லட்சாதிபதி ஆனார் நம் கட்டியர்.. இனிமேல் முதாலாளி என்றே அழைக்கலாம்!
அவரிடம் பணம் கூடுவதை கவனித்த பங்குச்சந்தைக்காரர்கள் அவரை அணுகினர்.
'சார்! நீங்கள் உங்கள் பணத்தை பங்குச் சந்தையில் இன்வெஸ்ட் செய்யுங்கள். உங்களுக்கு இன்னும் லாபம் கிடைக்கும்.' என்றனர்.
நம் முதலாளியோ, 'பங்குச் சந்தை பற்றி எல்லாம் எனக்கு எதுவும் தெரியாதே' என்றார்.
'கவலைய விடுங்க. நாங்க இருக்கோம்' என்று வாசன் ஐ கேர் போல சொன்னார்கள் பங்குச்சந்தைக்க்காரர்கள்.
'சரி நீங்களே நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். செய்து விடலாம்' என்றார் முதலாளி.
'நாங்கள் டாகுமெண்ட்களை தயாரித்துவிட்டு வருகிறோம்' என்று சொல்லிட்டு சென்றனர் அவர்கள்.
ஒரு வாரத்தில் அனைத்து டாகுமென்ட்களையும் தயாரித்துவிட்டு வந்தனர் பங்குச்சந்தைக்காரர்கள்.
'அய்யா நீங்கள் இந்த டாகுமென்ட்டைஒருமுறை படித்துவிட்டு ஒரு கையெழுத்து இட்டால் போதும். மற்றவையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.'
முதலாளி தயங்கினார்.
'எனக்கு எழுத படிக்கத் தெரியாதே' என்று சொன்னார்.
அதிர்ச்சி அடைந்தனர் பங்குச்சந்தைக்காரர்கள். சில நொடிகளுக்கு யாரும் எதுவும் பேசவில்லை.
பிறகு ஒருவர் கேட்டார்.
'எழுத படிக்கத் தெரியாமலே நீங்கள் இவ்வளவு பெரிய ஆள் ஆகிவிட்டீர்கள். உங்களுக்கு மட்டும் எழுத படிக்கத் தெரிந்திருந்தால்??????'
முதலாளி சிரித்துக்கொண்டே சொன்னார்!
'கோவிலில் மணி அடித்துக் கொண்டிருதிருப்பேன்! எல்லாம் நன்மைக்கே!'
மகாபாரத்தில் நிறைய கிளைக் கதைகள் உள்ளன. சுவாரசியமான நிகழ்வுகள் உள்ளன. அவற்றுள் இந்த கதையை அதிகம் பேர் அறிந்திருக்க மாட்டார்கள்.
=================================================
அர்ஜுனன், ஒரு நாள் கண்ணனைப் பார்த்து கேள்வி ஒன்றைக் கேட்டான்:
"என் அண்ணன் தர்மன், தர்மம் செய்வதையே தலையாய கடமையாகக் கொண்டுள்ளான். கேட்பவர்களுக்கு இல்லை என்று மறுத்ததே இல்லை. ஆனாலும் எல்லோரும் கர்ணனை தான் வள்ளல் என்று புகழ்கின்றனர். என் அண்ணனை அப்படி புகழ்வதில்லை."
கண்ணனோ, "கர்ணன் தான் யுதிஷ்டிரனைவிட சிறந்த கொடையுள்ளம் கொண்டவன்" என்று பதில் சொல்லிவிட்டார்.
"என்ன நீயும் அப்படியே சொல்கிறாய்?" என்று டிஸ்ஸபாயின்ட் ஆனான் பார்த்தன்,
"நிரூபித்துக் காட்டவா?" என்று சேலஞ்ச் செய்தார் கிருஷ்ணர். 'ஆடாம ஜெயிச்சோமடா' என்று பாரத யுத்தத்தில் தேர் ஓட்டிக்கொண்டே தர்மத்திற்கு வெற்றி தேடித் தந்தவர் பகவான். ஒரு சின்ன விவாதத்தில், தன் பாயிண்டை நிரூபிக்க மட்டாரா என்ன?
உடனே கிருஷ்ணர், அந்தணராக வேடமிட்டுக்கொண்டார். அர்ஜுனனையும் அந்தணர் போல மாறுவேடம் பூண்டு வர சொல்கிறார் கண்ணன்.
கர்ணனிடம், பாரத யுத்தத்தில், அவன் செய்த தர்மத்தின் பலனை தானம் கேட்க மீண்டும் அந்தணர்வேடம் தரிப்பதற்கு இது முன்னோட்டமோ என்னவோ.
ஏற்கனவே அர்ஜுனன் சுயம்வரத்தில் திரௌபதியை வெல்லும்போது அந்தணர் வேடத்தில் தான் இருந்தான். அதனால், 'பிரீவியஸ் எச்பீரியன்ஸ்' அர்ஜுனனுக்குத் துணை நின்றிருக்கும்.
கண்ணன் தன் மனதில் வருண பகவானை நினைக்க உடனே மழை வெளுத்து வாங்கத் தொடங்கியது. கண்ணனும் விஜயனும் அந்தணர் உருவில் யுதிஷ்டிரன் (தர்மன்) உள்ள மாளிகைக்குச் சென்றனர்.
அந்தணர்களைக் கண்டதும் தர்மன் அவர்களை சகல மரியாதைகளோடும் வரவேற்கிறார். (ஆசமனம் எல்லாம் செய்து இருப்பார் போல) பெருமிதத்தோடு அர்ஜுனன் கண்ணனைப் பார்த்து ஒரு லுக் விட்டான்.
கண்ணன் தர்மனைப் பார்த்து கேட்கலானான், "தர்மம் அறிந்த பாண்டுவின் புதல்வரே! மழை பெய்வதால், எங்கள் வீட்டில் உள்ள விறகுக் கட்டைகள் எல்லாம் நினைந்து விட்டன. அடுப்பு பற்றவைக்க இயலவில்லை. எனவே தயை செய்து விறகுக் கட்டைகளை கொடுத்து உதவ வேண்டும்." என்று கேட்டு விட்டு பார்த்தனைப் பார்த்து கண்ணன் ஒரு லுக் விட்டார்.
தர்மர் சொன்னார். "இங்கே உள்ள அணைத்து விறகுகளும் அரண்மனை மாந்தருக்குச் சமையல் செய்ய உபயோகம் செய்து ஆகிவிட்டது. புதிதாக மரங்களை வெட்டினால் தான் உண்டு. அனால் மரங்களும் மழையில் தான் நினைந்து இருக்கும். எனவே என்னால் விறகு கொடுக்க இயலாது. வேண்டுமானால் தாங்கள், தங்கள் குடும்பத்தினரோடு வந்து அரண்மனையில் விருந்துண்டு செல்லலாம்."
விறகுகள் இல்லை என்று தர்மர் சொல்வதை புரிந்துகொண்டு இருவரும் அரண்மனையை விட்டு வெளியேறினர்.
"இல்லாததை எல்லாம் கேட்டல் அண்ணன் எப்படி கொடுப்பன்?" என்று தர்மனின் வக்கீல் போலக் கேட்டான், அந்தணர் உருவில் இருந்த பார்த்தன்,
"வா.. அர்ஜுனா, கர்ணனைக் கேட்போம்." என்றார் ஸ்ரீகிருஷ்ணர்.
கர்ணனின் மாளிகையை அடைந்தனர் அவ்விரு நண்பர்கள். கர்ணனும் சகலவித மரியாதையோடும் அந்த இரு அந்தணர்களை வரவேற்றான்.
"மன்னா! மழையில் அணைத்து விறகுக் கட்டைகளும் நினைந்து விட்டன. எங்கள் வீட்டு அடுப்பு எரிய விறகுக் கட்டைகள் கொடுத்து உதவ வேண்டும்" என்று அர்ஜுனன் கர்ணனைப் பார்த்துக் கேட்டான்.
"எல்லா மரங்களும் மழையில் நினைந்து விட்டனவே. நான் என்ன செய்ய?" என்று கர்ணன் சொல்லவில்லை.
அங்க தான் ட்விஸ்ட்.
கர்ணன் உடனே கோடரி ஒன்றைக் கையில் எடுத்தார். 'என்ன பண்றாரு இவரு?' என்று புரியாமல் பார்த்தான் பார்த்தன்.
... அந்த அரண்மனையில் உள்ள கதவுகளையும் ஜன்னல்களையும் உடைத்து நொறுக்கினான்.எடுத்துக்கொள்ளுங்கள் என வாரி வழங்கினான்.
'ஷாக்' ஆயிடான் அர்ஜுனன்.
வள்ளல்டா...
ஸ்ருதி என்றால் என்ன?
சூப்பர் சிங்கரில் அடிக்கடி கேட்கும் வசனம் என்றால் "ஸ்ருதி கொஞ்சம் வெலகிடுச்சு"
சுருதினா என்னங்க? அது எப்புடிங்க விலகும்?
நான் ஒரு விளக்கம் தரேன்.
இசையில் எழு ஸ்வரங்கள் இருக்கிறது.
ச ரி க ம ப த நி
இன்னும் டெக்னிகலா சொன்னா ரி க ம த நி... இந்த ஐந்து ஸ்வரங்களுக்கும் இரண்டு நிலை உள்ளன. ரி1, ரி2, க1, க2, ம1, ம2, த1, த2, நி1, நி2 என்று சொல்லலாம். ஆங்கிலத்தில் இவற்றை செமிடோன்ஸ் (semitones) என்பர்.
எனவே மொத்தம் பன்னிரண்டு செமி டோன்ஸ் (ச, ரி1, ரி2, க1, க2, ம1, ம2, ப, த1, த2, நி1, நி2 or C, C# D, D#, E, F, F#, G, G#, A, A#, B) இருக்கின்றது என்பதை அறிகிறோம்.
இது என்ன பன்னிரண்டு கணக்கு என்பதை வேறு ஒரு பதிவில் டீடைலாக சொல்கிறேன்.
இப்போது ஒரு கேள்வி உங்களுக்கு...
கீழே உள்ள படத்தை பாருங்கள். ஒரு புள்ளி தான் உள்ளது. அந்த புள்ளி வழியாக செல்லும் எத்தனை நேர் கோடுகளை உங்களால் வரைய முடியும்?
How many lines can you draw which can pass through a single point?
விடை 'முடிவிலி' (infinity) ஆகும்.
இப்போது இந்த படத்தை பாருங்கள். இரண்டு புள்ளிகள் உள்ளன.
இப்போது நீங்கள் மறுபடியும் நேர்கோடு வரையவேண்டும். அந்த கோடு இந்த இரண்டு புள்ளிகளின் வழியாகவும் செல்லவேண்டும். இது போன்ற எத்தனை கோடுகளை உங்களால் வரைய முடியும்?
How many lines can you draw which can pass through two points?
விடை: ஒன்று.
ஒரே ஒரு கோடு மட்டும் தான் உங்களால் வரைய முடியும்!
அந்த கோடு தான் சுருதி.
அந்த இரண்டு புள்ளிகள் தான் 'ச', 'ப' என்னும் இரண்டு ஸ்வரங்கள்.
'ச', 'ப' என்னும் இரண்டு ஸ்வரங்களையும் ஏற்றிச் செல்லும் கோடு தான் சுருதி.
ஒவ்வொரு ஸ்வரத்திற்கும் ஒவ்வொரு அதிர்வெண் (frequency) உள்ளது. பொதுவாக 'ச' என்னும் ஸ்வரத்திற்கு '265.6 Hz' அதிர்வெண் இருக்கும்.
ஒரு பாடல் பாடப்படும்போதோ வாசிக்கப்படும்போதோ ஒரே ஸ்ருதியில் (ஒரே நேர் கோடு) இருக்க வேண்டும். சில நேரம் நாம் நம்மை அறியாமல் 'ச', 'ப' வின் அதிர்வெண்ணை மாற்றி விடுவோம். அதாவது இரண்டு புள்ளிகளின் இடம் பாரி விடும். அப்போது மாறிய இடங்களில் உள்ள புள்ளிகளை இணைக்க வேறு ஒரு கோடு தான் நாம் வரைய வேண்டும். வேறு ஒரு கோடு என்றால் வேறு ஒரு ஸ்ருதி என்று அர்த்தம். இதுவே சுருதி விலகுதல் ஆகும்.
உதாரணம் சொன்னால் இன்னும் நன்றாக புரியும்...
இரண்டு பேர் சேர்ந்து ஒரு பாடலை பாடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இருவரும் முதலில் சரியான ஸ்ருதியில் படுகிறார்கள். நடுவில் ஒருவர், தன்னை அறியாமல், 'ச' வின் அதிர்வெண்ணை சற்று அதிகரித்து பாடி விடுகிறார். இன்னொருவர் மாற்றாமல் அதே நிலையில் பாடுகிறார் என்றால், கேட்பவருக்கு ஒரு பாடகர் ஸ்ருதியை மாற்றி விட்டார் என்பது தெரிந்து விடும்.
சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் ஒருவர் சோலோவாக பாடுகிறார், ஆர்செஸ்ட்ராவுடன் என்றால், இசைக்குழுவும், பாடுபவரும் ஒரே ஸ்ருதியில் பாட வேண்டும். பொதுவாக வாசிப்பில் ஸ்ருதி அதிகம் பிறழாது, அதுவும் கீபோர்ட் போன்ற எலக்ட்ரானிக் வாதியங்களில். எனவே பாடகர், எங்கேயாவது 'ச' அல்லது 'ப'வின் அதிர்வெண்ணை மாற்றினால், அப்போது இசைக்குழுவின் ஸ்ருதிக்கும் பாடகர் ஸ்ருதிக்கும் உள்ள வேறுபாடு தெரிந்துவிடும்.
SYLLOGISM - LOGICAL DEDUCTION MADE EASY!
Hello Everybody!!
Engineering made me a bit busy. I couldn't post new stuff in my blog for a long time. Now I'm back and I have something new.
Syllogism or Logical Deduction is an interesting topic found in many analytical reasoning aptitude question papers. But for beginners, it would be confusing. This post would teach you each and every thing in syllogism. Step by step method to get an answer.Once you go through them, you'll be able to answer any any question in syllogism or logical deduction. In my next post, I'll provide a summary of rules, which helps to find the answer in a fraction of second.
Now let's start with syllogism.
Now Look at this question.
There are two statements below!
All youngsters are students.
All students are brilliant.
You can infer the following from the above statements.
1. There are three terms in totally in the two statements. They are 'youngster', 'student' & 'brilliant'.
2. The term 'student' is common in both the statements.
Did you notice them??
Yes? Then it means you are familiar with the first rule.
RULE 1: There should be three terms in both the statements, with one term common in both of them.
When you find a question, which doesn't follow this rule, simply choose the option, 'No conclusions can be drawn.'
Look at this sample.
All sheets are papers.
All books are notes.
Conclusions: Some sheets are notes. Some books are papers.
There are four terms in the two statements and nothing is common. So just the answer is ' Both the conclusions are false.'
The first rule is the like 'qualifier'. The first rule would tell you whether any conclusions can be drawn are not. That is, it checks if the question has an answer or not. If yes, then rule 2 will help you to find out it.
RULE 2:
The first rule dealt with the distribution of terms. We didn't care about the word 'All' in the question.
Rule 2 deals with it.
Look at the following list of statements.
All boys are men.
Some boys are men.
Some boys are not men.
No boys are men.
Any statement you encounter, will be surely one of those four types.
That is, any statement would either have 'All' ,or 'Some' or 'Some not' or 'No'. I call them 'Keywords'.
Some times synonyms of these words are used.
Synonyms for all = Any, Each, Every.
Synonyms fir some = At least, Few, Many, Most of.
But what you see in questions is not a single statement, but a combination of two statements.
Both the statements in the question will be from those four types in any combination.
Now we shall extend the rule 2 to some sub-rules.
RULE 2A:
The statement Some A is B is same as Some B is A.
Hence, "Some boys are men" can be written as "Some men are boys."
RULE 2B:
The statement No A is B is same as No B is A.
Hence, "No boys are men" can be written as "No men are boys."
RULE 2C:
The statement No A is B can bed inferred as Some A are not B and Some B are not A.
Hence, "No boys are men" can be written as "Some boys are not men" can be written as "Some men are not boys."
RULE 2D:
This rule is very important.
The statement All A are B can be inferred as Some A are B and Some B are A.
Hence, "All boys are men" can be written as "Some boys are men." and "Some men are boys."
Never forget any of the above rules.
Now let's solve different possible types of problems.
TYPE 1:
ALL + ALL COMBINATION DIAGONAL:
Look at this question.
All mobiles are computers.
All computers are laptops.
Step 1: Look for keywords.
Statement 1 has 'All' & statement 2 also has 'All'.
Step 2: Now look at the terms. Find which term is common.
The term 'computer' is common.
Step 3: Now look the term computer's position. Whether they are straight or diagonal.
It is diagonal. (because, in 1st statement, computer is the 2nd term, & in 2nd statement, computer is the 1st term.)
The following observation can be denoted as
All x All
The solution for this type is
All x All = All
So the conclusions that we can derive the following conclusions.
All mobiles are laptops.
And of course by rule 2D, we also get,
Some mobiles are laptops.
Some laptops are mobiles.
TYPE 2:
ALL + ALL COMBINATION LINEAR.
Look at this question.
All computers are laptops.
All computers are mobiles.
Step 1: Look for keywords.
Statement 1 has 'All' & statement 2 also has 'All'.
Step 2: Now look at the terms. Find which term is common.
The term 'computer' is common.
Step 3: Now look the term computer's position. Whether they are straight or diagonal.
It is straight (linear). (because, in 1st statement, computer is the 1st term, & in 2nd statement, computer is the 2nd term.)
The following observation can be denoted as
All + All
The solution for this type is
All + All = Some
So the conclusions that we can derive the following conclusions.
Some laptops are mobiles.
And by rule 2A, we also get,
Some mobiles are laptops.
TYPE 3:
ALL + SOME COMBINATION.
Look at this question.
All computers are laptops.
Some computers are mobiles.
Step 1: Look for keywords.
Statement 1 has 'All' & statement 2 has 'some'.
Step 2: Now look at the terms. Find which term is common.
The term 'computer' is common.
Step 3: No need to check linearity when 'Some' is present in any one of the statement.
This is because of rule 2A. By this rule, Some A is B is same as Some B is A. So, the position doesn't matter when 'some' appears in any of the statements.
The following observation can be denoted as
All + Some
The solution for this type is
All + Some = Some
So the conclusions that we can derive the following conclusions.
Some laptops are mobiles.
And by rule 2A, we also get,
Some mobiles are laptops.
TYPE 4:
ALL + SOME NOT COMBINATION.
Look at this question.
All computers are laptops.
Some computers are not mobiles.
Step 1: Look for keywords.
Statement 1 has 'All' & statement 2 also has 'some not'.
Step 2: Now look at the terms. Find which term is common.
The term 'computer' is common.
Step 3: Not needed because of Rule 2C.
The following observation can be denoted as
All + Some not
The solution for this type is
All + Some not = Some not
So the conclusions that we can derive the following conclusions.
Some laptops are not mobiles.
TYPE 5:
ALL + NO COMBINATION LINEAR.
Look at this question.
All computers are laptops.
No computers are mobiles.
Step 1: Look for keywords.
Statement 1 has 'All' & statement 2 also has 'No'.
Step 2: Now look at the terms. Find which term is common.
The term 'computer' is common.
Step 3: There is no some or some not used in any of the statements. Hence Checking linearity is needed. Now look the term computer's position. Whether they are straight or diagonal.
It is straight (linear). (because, in 1st statement, computer is the 1st term, & in 2nd statement, computer is the 1st term.)
The following observation can be denoted as
All + No
The solution for this type is
All + No = Some Not
So the conclusions that we can derive the following conclusions.
Some laptops are not mobiles.
TYPE 6:
ALL + NO COMBINATION Diagonal.
Look at this question.
All computers are laptops.
No laptops are mobiles.
Step 1: Look for keywords.
Statement 1 has 'All' & statement 2 also has 'No'.
Step 2: Now look at the terms. Find which term is common.
The term 'laptop' is common.
Step 3: There is no some or some not used in any of the statements. Hence Checking linearity is needed. Now look the term laptop's position. Whether they are straight or diagonal.
It is diagonal. (because, in 1st statement, laptop is the 2nd term, & in 2nd statement, laptop is the 1st term.)
The following observation can be denoted as
All x No
The solution for this type is
All x No = No
So the conclusions that we can derive the following conclusions.
No computers are mobiles
And by rule 2B and 2C, we also get,
Some computers are not mobiles.
Some mobiles are not computers.
TYPE 7:
This is the last type.
SOME + NO COMBINATION.
Look at this question.
Some computers are laptops.
No laptops are mobiles.
Step 1: Look for keywords.
Statement 1 has 'Some' & statement 2 also has 'No'.
Step 2: Now look at the terms. Find which term is common.
The term 'laptop' is common.
Step 3: The term some is found. Hence, by rule 2A, we can skip this step.
The following observation can be denoted as
Some + No
The solution for this type is
Some + No = Some not
So the conclusions that we can derive the following conclusions.
Some computers are not mobiles.
Now you may ask what happened for the following combinations.
No + No
Some + Some
Some + Some Not,
Some Not +Some Not,
Some not + No
All these five give no conclusions.
Look at all of them, none of them has 'All' in it. None of them give particular information about the terms present in the statements.
Whenever you find such combinations, go for, ' No conclusions can be drawn.'
That's all guys.
Now you are an expert in Syllogism. My next post will have a summary of the above rules and types with problems for practice along with solution.
Hope it was useful.

Tuesday 26 December 2017

சிவன் எங்கே இருக்கிறார்?

ஆலமரத்தின் மேல் ஒரு குயில் மெல்ல கூவியது...

மரத்தின் அடிப்பகுதியில் குருவின் முன் அமர்ந்திருந்தான் விஸ்வநாத பிரம்மச்சாரி.

அவனது கண்கள் கலங்கி இருந்தன... தனது கைகளால் குருவின் கால்களை பற்றியவாறே பேச துவங்கினான்...”குருவே உங்களிடமிருந்து வேத சாஸ்திரத்தையும் பிரம்ம சூத்திரத்தையும் முழுமையாக கற்றுகொண்டேன். உண்மை பொருளை கூறும் அனைத்து கருத்துக்களையும் நீங்கள் எனக்கு விளக்கியுள்ளீர்கள். உங்களிடம் பணிவிடை செய்வதிலும் , உங்களுடன் இருப்பதிலும் எனக்கு நிகரில்லாத ஆனந்தம் கிடைக்கிறது. இப்படி இருக்க என்னை ஏன் வேறு இடத்தில் இருக்கும் ஒரு ஞானியை குருவாக ஏற்க கட்டளை இடுகிறீர்களே. இது நியாயமா?”..

அவனை மெல்ல தனது கரத்தால் தூக்கி குரு அவனை தீர்க்கமாக பார்த்தார்..”விஸ்வநாதா..! சாஸ்திர ஞானத்தை மட்டும் தான்
என்னால் உனக்கு வழங்க முடியும். உனக்கு பிரம்ம ஞானத்தை வழங்க குரு ஒருவர் காத்திருக்கிர்றார் . காசிக்கு அருகில் இருக்கும் வனத்தில் வசிக்கும் அவரை கண்டு ஞானம் அடைவாயாக...வளர்ச்சி அடையும் வரைதான் புழு கூட்டில் வசிக்க முடியும். அதன் பின் வண்ணத்து பூச்சியாக மாற கூட்டை கடந்து சென்றாக வேண்டும்...சென்று வா”...என்றார் குரு.


பிரிய மனமில்லாமல் தனது குருநாதரிடமிருந்து விடைபெற்றான் விஸ்வநாத பிரம்மச்சாரி..



காசியை அடைந்து அங்கு அவன் பெயரில் வீற்றிருக்கும் விஸ்வநாதரை தரிசித்துவிட்டு , நகரின் வெளியே இருக்கும் வனத்தை நோக்கி நடந்தான்.

வனத்திற்கு உள்ளே இரு நாட்களாக நடந்தும் யாரும் கண்களுக்குதட்டுபடவில்லை. தனது குரு அனுப்பியதன் நோக்கம் புரியாமல் குழப்பம் மேலோங்க பயணத்தை தொடர்ந்தான். பசியும் தாகமும் அவனை சோர்வடைய செய்தது. வழியில் தென்பட்ட தடாகத்தில் நீர் அருந்த குனிந்தான்.

அந்த தடாகத்தின் மேல்பரப்பில் அருகில் இருந்த கோவில் கோபுரம் நிழலாகதெரிந்தது... நடுக்காட்டில் கோவில் இருப்பதை கண்டு ஆச்சரியத்துடன் அதை அடைந்தான்..

கோவில் வாசலை அடையும் முன் உள்ளே இருந்து ஓர் குரல் பேச துவங்கியது.....
”வா விஸ்வநாத உனக்காகத்தான் காத்திருக்கிறேன்...உனது குரு என்னை பார்க்கவே அனுப்பினார்..”

தனது ஞான குருவை காணும் ஆவலில் கோவிலின் உள்ளே சென்றான் விஸ்வநாதன்.

அங்கே கண்ட காட்சி அவனை மாபெரும் அதிர்ச்சி அடைய செய்தது...


பரதேசி போன்ற தோற்றம் கொண்ட ஒருவர்...கருவறையில் இருக்கும் சிவலிங்கத்தின் மேல் தனது கால்களை வைத்து ஆட்டியவாறு தலையில் கைகளை வைத்து கொண்டும் படுத்திருந்தார்.

விஸ்வநாதனுகோ கோபத்தை கட்டுபடுத்த முடியவில்லை. “எனது குருஉங்களை பற்றி உயர்வாக கூறி அனுப்பினார். நீங்கள் அவர் சொன்னதற்கு நேர்மாறாக அல்லவா இருக்க்கிறீர்கள். ஐயா சற்று சிவன் மேல் இருக்கும் காலை எடுத்து கீழே வைக்க கூடாதா?” என்றான்.

அந்த பரதேசி சற்றும் அவனது கருத்துக்களை காதில் போட்டுக்கொள்ளாமல்அவனை பார்த்து கூறினார்..”ஓ நீ அவ்வளவு பக்திமானா? உனக்குவேண்டுமென்றால் எனது கால்களை எடுத்து வேறு இடத்தில் வை. என்னால் கால்களை எடுக்க முடியாது..” என்றார்.

கோபத்தின் உச்சகட்டத்திற்கு சென்ற விஸ்வநாதன் , அவரின் கால்களை பற்றி சிவலிங்கத்தின் மேலிருந்து எடுத்து வேறு இடத்ததிற்கு மாற்ற முயற்சிசெய்தான்.
கால்களை எங்கு வைத்தாலும் அங்கே ஓர் சிவலிங்கம் முளைத்தது...

பல இடங்களில் மாறி மாறி வைத்தான்...அனைத்து இடத்திலும் சிவலிங்கம்தோன்றின...

கடைசியல் முடிவுக்கு வந்தவனாக...

தனது தலையில் அவரின் கால்களை வைத்து கொண்டான்...

தானே சிவமானான்...

ஸ்டார்டிங் ட்ரபிள்

“டிங்...டிங்...டிங்” காலை ஆசிரம மணியின் ஓசை கேட்டது.

நான்கு மணி ஆகிவிட்டது என்ற எண்ணத்துடன் எழுந்தான் விஷ்ணு. விஷ்ணு ஆசிரமத்தின் அனைத்து வேலைகளையும் பார்ப்பவர்களில் ஒருவன்.

காலை ஐந்து மணிக்கு யோக பயிற்சி முடித்ததும், ப்ரார்த்தனை மற்றும் காலை உணவுடன் துவங்கும் அவனது பணி இரவு ஒன்பது வரை நீடிக்கும்.

புத்தகங்கள் பார்சல் அனுப்புவது, தோட்டத்தை சுத்தம் செய்வது மற்றும் குரு வெளியே செல்லுவதற்கு வாகன ஓட்டியாக மாறுவது என ஒரு நாளில் பல அவதாரம் எடுப்பவன் விஷ்ணு.

அன்று காலை வழக்கம் போல யோக பயிற்சிக்காக ஆசிரம யோக சாலைக்கு சென்று பயிற்சி செய்ய துவங்கினான்.

இன்று என்னமோ அவனுக்கு யோக பயிற்சியை சரிவர செய்ய முடியவில்லை.முன்னால் அமர்ந்திருந்த குருவின் மேல் அவனுக்கு கவனம் முழுவதும் சென்றது. விஷ்ணு ஆசிரமத்திற்கு வந்த நாள் முதல் பார்த்திருக்கிறான் குரு யோக பயிற்சியை கற்றுக்கொடுக்கிறாரே தவிர அவர் செய்வதில்லை.

இவனும் சக ஆசிரம வாசிகளும் ப்ராணயாமமும், ஆசனமும் செய்யும் பொழுது அவர் கண்களை மூடி அமர்ந்திருப்பார். அல்லது ஜன்னலுக்கு வெளியே எங்கோ பார்த்துக்கொண்டிருப்பார்.

பிறருக்கு பயிற்சி அளிக்கும் நேரத்தில் குரு செய்து இருப்பதை பார்த்திருக்கிறேன். எங்களை தினமும் செய்ய கூறும் குரு தான் செய்வதில்லையே என்ற எண்ணம் அதிகமாக வந்தது. தவறு என்றாலும் எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை. அவனது யோக பயிற்சியில் கூட அந்த தடுமாற்றம் தெரிந்தது.

ஆனாலும் யாருக்கும் தெரியாத வண்ணம் சரிசெய்து யோக பயிற்சி முடித்துவிட்டு அறையைவிட்டு வெளியேறினேன்.

“விஷ்ணு...”.. குருவின் குரல் கேட்டது.

அவரை நோக்கி புன்னகையுடன் கைக்கூப்பி நின்றேன்.

“ கொஞ்சம் வெளியே போகனும், ஜீப் ரெடி பண்ணுப்பா” என்றார் குரு.

என்றும் இல்லாத அதிசயமாக இன்று காலையிலேயே வெளியே செல்ல அழைக்கிறாரே என்ற தயக்கத்துடன் ஜீப்பை தயார் செய்தேன். குருஜி ஏறியதும் ஜீப்பை ஸ்டார்ட் செய்து ஆசிரமத்திலிருந்து வெளியே கொண்டு வந்தேன். ஆசிரமம் இருப்பது மலைபகுதி என்பதால் ஜீப் பயணிக்கும் பொழுது குளிர்ந்த காற்று ரம்மியமாக இருந்தது.

சில தூரம் பயணித்ததும் குருஜி என்னை பார்த்து திரும்பினார்..

பிறகு கேட்டார்.. “ சாவி போட்டுட்டியா விஷ்ணு?” என்றார்.

வண்டி ஓடிக்கொண்டிருக்கும் பொழுது இது என்ன இப்படி கேட்கிறார் என்ற குழப்பம் வந்தாலும் வேறு வழியில்லாமல் “போட்டாச்சு குருஜீ” என்றேன்.

ஜீப்பினுள் மெளனம் நிலவியது.

வண்டி சில கிலோ மீட்டர் சென்றது
மீண்டும் குருஜீ என்னை பார்த்து திரும்பினார்.

பின்பு கேட்டார்.. “ஜீப்புக்கு சாவி போட்டுட்டியா விஷ்ணு?”

இது என்ன முட்டாள் தனமான கேள்வி என தோன்றினாலும் வேறுவழியில்லாமல்.. “போட்டாச்சு குருஜீ” என்றேன்.

மேலும் சில கிலோமீட்டர் சென்றது. மீண்டும் குருஜீ என்னை பார்த்து...

“விஷ்ணு சாவி... ” என துவங்கும் முன் இடைமறித்தேன். “குருஜீ சாவி போடாமல் எப்படி வண்டி ஸ்டார்ட் ஆகும்? நாம் இவ்வளவு கிலோமீட்டர் வர முடியுமா? ” என்றேன்.

வேறு எங்கோ பார்வையை நிலைபடுத்திய படியே குருஜீ கூறினார்.

“ உள் இருக்கும் தெய்வீகத்தை தூண்டுவதற்காகத்தான் எல்லோரும் யோகப்பயிற்சி செய்கிறார்கள். இது வண்டிக்கு சாவி போடுவது போல. தூண்டிவிடப்பட்டதும் தெய்வீகம் ஆற்றலுடன் செயல் படத்துவங்கும். அப்பொழுது மீண்டும் மீண்டும் தூண்டிவிட தேவையில்லை. வண்டி ஓடும் பொழுது நீ மீண்டும் மீண்டும் சாவி போட்டு துவக்கவில்லை இல்லையா?”

“. க்ரிர்....ச்...” ஜீப்பை பிரேக் போட்டு நிறுத்தினேன்.

ஆன்மீக குருவுடன் முதல் சந்திப்பு

ரிஷிகளின் கருப்பை என அழைக்கப்படும் ரிஷிகேசத்தின் கிழக்கு பகுதி. சூரியன் தன் கதிர்களை தளர்த்தி செம்பாகும் மாலை நேரம். அந்த மலைபகுதியை ஒட்டி இருக்கும் ஆசிரம குடில்கள் நிறைந்த ஏகாந்தமான சூழலுக்குள் நுழைந்தான் விஷ்வ தாஸ்.

நீண்ட காலமாக குருவை தேடி பல இடங்களுக்கு பயணப்பட்டவனுக்கு அந்த இடம் ஒரு ரம்மியமான அமைதியை கொடுத்தது. ஆசிரம குடில்களுக்கு மத்தியில் இருந்த ஆலமரத்தின் அடியில் சிறிது கூட்டம் தென்பட அதை நோக்கி சென்றான் விஷ்வதாஸ்.

கண்கள் மூடி அன்பர்கள் சுற்றி அமர்ந்திருக்க ஒரு தெய்வீகமான உருவத்தில் நடு நாயகமாக அமர்ந்திருந்தார் யோகி யஸ்வந். வெண் பஞ்சு போன்ற நீண்ட தலை முடியும் தாடியும் ஆழ்ந்த அமைதியை பறைசாற்றியது. அவரின் முன் சென்று அமைதியாக அமர்ந்தான் விஷ்வ தாஸ். எங்கும் பேரமைதி நிலவியது.

சில நிமிடங்கள் கரைந்தது. மெல்ல கண்களை திறந்தான் விஷ்வ தாஸ், யோகி அவனை உற்று நோக்கிய வண்ணம் இருந்தார். சைகையால் அவனை அருகில் அழைத்தார்.

முக மலர்ச்சியுடன் அவரின் அருகில் சென்று பணிந்து வணங்கினான் விஷ்வ தாஸ். மீண்டும் சைகையால் கண்களை மூடச்சொன்னார். கண்கள் மூடி ஆழ்ந்த ஆன்மீக எதிர்பார்ப்புடன் இருந்தான் விஷ்வ தாஸ்.

“பளார்...”

அசுரத்தனமான அடி ஒன்று கண்ணத்தில் இறங்கியது. எதிர்பாராத அடியால் நிலை குலைந்து போனான் விஷ்வ தாஸ்.

சுற்றி இருந்தவர்கள் அனைவரும் இவனை பார்த்து பலமாக சிரிக்க, அவமானமும் ஏமாற்றமும் இணைந்து கண்களில் நீர்துளியாக எட்டிபார்த்தது.

வேறு யோசனைகள் இல்லாமல் அந்த இடத்தைவிட்டு வெளியேரினான் விஷ்வதாஸ். ஆசிரமத்தை விட்டு வெளியேறி வெளியே இருக்கும் பாதையில் நடக்கலானான். அவமானம் ஆத்திரமாக மாறியது. பல பேர் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்திய யோகியை பழிதீர்க்க எண்ணினான். வேறு ஆசிரமம் சென்று அங்கே இணைந்து இவருக்கு முன் ஆன்மீகத்தில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.

கங்கை கரையை பாலத்தின் மூலம் கடந்து மறுகரையில் இருக்கும் மற்றொரு ஆசிரமத்திற்குள் நுழைந்தான்.

சிஷ்யர்கள் ஒருவர் முன் அமர்ந்து கொண்டு பஜனை பாடிகொண்டிருந்தார்கள்.

அங்கே மழிக்கப்பட்ட தலையுடன் கருப்பு கம்பளியை மட்டும் உடலில் போர்த்திய கம்பளி யோகி அமர்ந்திருந்தார். யோகி யஸ்வந் உடன் கம்பளி யோகியை ஒப்பிட்டு பார்த்தான். உடை, தலை முடியின் அமைப்பு என பல்வேறு ஒப்பீடுகள் நடத்தினான். யோகி யஸ்வந்க்கு முற்றிலும் எதிரான நிலையை கப்பளி யோகியிடம் கண்டான். தான் சரியான இடம் வந்திருப்பதாக உணர்ந்து கொண்டான்.

விஸ்வ தாஸ் சிஷயர்களுடன் அமர்ந்து கண்களை மூடி தானும் பஜனை பாடியவாறே மெல்ல தலையை அசைத்துக் கொண்டிருந்தான்.

யாரோ அவனை உற்று நோக்குவது போல இருந்தது கண்களை திறந்து பார்த்தான். கம்பளி யோகி இவனை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். கம்பளி யோகி தன்னை ஏற்றுக் கொண்டதாக உணர்ந்தான். இவனுக்கு ஆனந்த அனுபவமாக இருந்தது.

சில வினாடிகளில் சைகையால் தன்னை நோக்கி அழைத்தார் கம்பளி யோகி. மெல்ல அவரிடம் சென்றான். சைகையால் கண்களை மூடு என்றார்.

கண்களை மூடியவனுக்கு மனதுக்குள் மின்னலாய் முன்பு நடந்த அனுபவம் நிழலாடியது. யோகி யஸ்வந் விட்ட அறை ஞாபகம் வர....சற்று பின்னோக்கி நகர்ந்து கண்களை திறந்தான்.

அங்கே நீண்ட திரிசூலத்தை தூக்கி இவனை நோக்கி பாய்ச்சும் தருவாயில் இருந்தார் கம்பளி யோகி. அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றான். சடாரென சுதாரித்துக் கொண்டு திரும்பி ஓட துவங்கினான்.

கம்பளி யோகி அவனை விடாமல் துரத்த துவங்கினார்..

குருவை தேடிவந்தது குற்றமா? ஆன்மீக எண்ணத்தை தவிர தவறான எண்ணம் எதுவும் தனக்கு இல்லையே. அடிப்பதற்கும் கொல்லுவதற்கும் இவர்கள் துணியும் அளவுக்கு நாம் என்ன பாவம் செய்தும் என நினைத்து தன்னை நொந்து கொண்டான். விஸ்வ தாஸ் ஓடுவதை நிறுத்தவும் இல்லை. கம்பளி யோகியும் விடுவதாக இல்லை.

கங்கை கரையில் நீண்ட தூரம் ஓடியவனுக்கு கம்பளி யோகியின் மேல் எரிச்சல் உண்டானது. கம்பளி யோகி தன்னை கொலை செய்ய துரத்துவதை பார்க்கும் பொழுது யஸ்வந் யோகி தன்னை அடிக்க மட்டுமே செய்தார். அவர் எவ்வளவோ நல்லவர் என தோன்றியது.

பல எண்ணங்களுடன் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தவன் எதிலோ மோதி கீழே விழுந்தான். மெல்ல எழுந்து பார்த்தான்.

அங்கே யஸ்வந் யோகி நின்று இருந்தார். அவனை ஆதரவாக தூக்கி கையில் இருந்த இனிப்பை அவனுக்கு புகட்டினார். வாயில் இனிப்புடன் கலவரத்துடன் திரும்பி பார்த்தான் விஸ்வ தாஸ்.

அங்கே கம்பளி யோகி தென்படவில்லை.

மீன் முள்


 இரண்டு பக்கமும் பசுமையான மரங்கள் இருக்க தென்னை மரங்கள் தலை குனிந்து முகம் பார்க்கும் கேரளாவின் நீர் நிறைந்த ஆற்றங்கரை அது. 
ஆற்றின் ஒரு பக்கம் மக்கள் அதிகம் வரும் புகழ் பெற்ற கோவிலும் ஆற்றின் மறு கறையில் அமைதியே உருவான ஆசிரமமும் இருந்தது.
தினமும் ஸ்வாமி விஷ்ணுதேவானந்தர் ஆற்றை கடந்து மறுகரையில் இருக்கும் கோவிலுக்கு செல்லுவார். பிறகு மீண்டும் ஆசிரமத்திற்கு திரும்புவார். இது அவரின் தினசரி கடமைகளில் ஒன்றாக இருந்தது. இக்கடமையை மிகவும் சிறப்பாக அவருக்கு உதவும் பக்தி உள்ளம் ஒன்று இருந்தது. பக்தனின் பெயர் படகோட்டி சங்கரன்.
சங்கு மாஸ்டரே என்றும் பலராலும் அழைக்கப்படும் சங்கரனுக்கு சிறுவயது முதலே படகு செலுத்துவது தான் தொழில். ஆவணி மாதம் நடக்கும் படகு போட்டி தவிர வேறு காலத்தில் அதிகமாக சம்பாதியம் செய்ய முடியாது. சங்குவை போலவே மெலிந்த கரிய நிற படகு அவனின் சொத்து. நீண்ட கழியை கறையில் ஊன்றி தள்ளி படகை செலுத்துவான். லாவகமாக படகின் முனையிலிருந்து நடந்து கழியை ஆற்றுக்குள் செலுத்தி படகை ஓட்டும் சங்கரனை ஆற்றின் கரையில் இருப்பவர்கள் அவ்வளவு எளிதில் பார்க்காமல் போக முடியாது.
தினமும் காலை ஆறு மணிக்கு படகில் காத்திருப்பான் சங்கரன். ஸ்வாமிஜி தனது ஆசிரமத்திலிருந்து வருவதை பார்த்ததும், எழுந்து படகை கறைக்கு சமீபமாக வைத்துக்கொள்வான். 
ஸ்வாமிஜி படகின் அருகே வந்ததும், அவரின் மென்மையான பாதங்களை தன் படகில் வைக்க கை கொடுத்து உதவுவான். வெள்ளம் அதிகம் இருக்கும் காலங்களில் ஸ்வாமிஜியின் கால்களை அவனின் தொடையில் வைத்து ஏறி படகில் அமற துணைபுரிவான் சங்கரன்.
நேற்று வழக்கமாக வரும் ஸ்வாமி வரவில்லை. ஆசிரமத்தில் ஏதோ விழா என பேசிக்கொண்டார்கள்.  ஆசிரமத்திற்கு வந்த பக்தர்களை மறுகரைக்கு கொண்டு செல்லும்  வேலையில் மூழ்கிப்போனான் சங்கரன்.
மறுநாள் ஸ்வாமிஜி வருவாரா என காத்திருந்தான் அன்று ஆற்றில் வெள்ளம் மிகவும் அதிகமாக இருந்தது. ஸ்வாமிஜி ஆசிரமத்திலிருந்து வெளிப்பட்டார். படகை நோக்கி நடந்தார். ஆற்றின் ஓரத்தில் படகை கொண்டு வந்து ஸ்வாமியின் தாமரை போன்ற பாதத்தை தன் தொடையில் வைத்து ஏறி அமற உதவினான் சங்கரன்.
பிறகு தாவி ஏறி கழியை எடுத்து படகின் ஓரத்தில் நின்வாறு படகை செலுத்தி மறுகரையை நோக்கி புறப்பட்டான்.
படகு ஆற்றின் மையத்தில் வரும் பொழுது ஸ்வாமிஜியை பார்த்து சங்கரன் சொன்னான், “ஸ்வாமி நேத்து நிறைய பக்தர்கள் வந்திருந்தாங்கனு நினைக்கிறேன். எனக்கும் அவங்களை போல ஜபம் தியானம் செய்ய ஆசைதான்.” என நிறுத்தினான்.
கோவிலை நோக்கி பார்த்துக்கொண்டிருந்த விஷ்ணுதேவானந்தர் சங்கரனை நோக்கி திரும்பினார். மெல்ல இதழ் பிரித்து கூறினார், “சங்கரா நீயும் வரலாமே, உனக்காக எப்பொழுதும் தனி இடம் உண்டு.”
“வரலாம் சாமி, ஆன என் பொண்டாட்டி விடமாடாள். இல்லைனா நானும் இவங்கள போல ஆசிரமத்திற்கு வருவேன்..”
“ஏன் அவங்க விடமாட்டாங்க?”
“சாமி புதுசா கேக்கிறீங்களே? ஜபம் தியானம்னு செஞ்சு நான் புள்ள குட்டிய விட்டுட்டு ஆசிரமத்திலேயே வந்துட்டேன்னா? அவளும் படிக்காதவ என்ன செய்வா? அந்த பயந்தான் சாமி”
ஸ்வாமி மீண்டும் தலையை கோவிலை நோக்கி திருப்பிக்கொண்டார். கரை அடைந்து மீண்டும் ஆசிரமம் செல்லும் வரை எதுவும் பேசவில்லை.
மறுநாள்...பொழுது புலர்ந்தது.. உடலை சிரசாசனத்தில் வைப்பதை போல பெரிய முள்ளும் சின்ன முள்ளும் கடிகாரத்தில்  ஆறு மணியை காட்டியது.
சங்கரன் ஆற்றின் கரையில் ஸ்வாமிக்காக காத்திருந்தான். ஸ்வாமி அருகில் வந்ததும் வலது காலை மடக்கி அவரின் கால்களை வைக்க ஏதுவாக படகின் அருகே நின்றான். 
ஆனால் வழக்கத்திற்கு சங்கரனை தவிர்த்துவிட்டு மாறாக ஸ்வாமிஜி படகில் அவராகவே ஏறி அமர்ந்தார். ஸ்வாமியின் இந்த நடவடிக்கையால் மிகவும் சங்கடமடைந்தான் சங்கரன். 
இதைவிட அவனுக்கு ஆச்சரியமாகவும் இயல்புக்கு மாறாகவும் கண்டது ஸ்வாமி  கால்களில் அணிந்திருந்த செருப்பு...!
இத்தனை வருடங்களில் அவர் செருப்பு அணிந்து பார்த்ததே இல்லை. தினமும் அவர் கோவிலுக்கு செருப்பு இல்லாமல் இவனின் தொடையை படியாக கொண்டு ஏறி இறங்கி வருவதால் அவர் செருப்பு அணிந்து பார்த்ததே இல்லை. இவ்வளவும் வழக்கத்திற்கு மாறாக இருப்பதால் கலங்கினான் சங்கரன். மெளனமாக படகை செலுத்துபவன் வழக்கத்திற்கு மாறாக நேற்று பேசியதால் வந்த வினையோ என குற்ற உணர்ச்சி பெருகியது.
 கண்ணீர் மல்க, “ஸ்வாமிஜி நான் ஏதாவது தவறாக பேசியிருந்தால் மன்னிச்சிருங்கோ, நீங்க இன்னைக்கு ஏதோ போல இருக்கிறது எனக்கு ஏதோ மாதிரி இருக்கு” என தன் உணர்ச்சிகளை வார்த்தையாக முடியாமல் விவரித்தான்.
“சங்கரா ஏன் ஏதோ போல இருக்கு? எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லையே?” என தெரிந்து கொண்டே சொன்னார் ஸ்வாமிஜி.
“ஸ்வாமிஜி எப்பவும் செருப்பு போட்டுக்கிட்டு படகில வரமாட்டீங்க. இன்னைக்கு செருப்பு போட்டுக்கிட்டு முதன்முதலா வந்திருக்கிறது எனக்கு வித்தியாசமா இருந்துச்சு, எம்மேல தப்பா இருந்தா ஸ்வாமிஜி மன்னிக்கனும்.” என்றான் சங்கடமான சங்கரன்.
“ஓ அதுவா சங்கரா, எப்பவும் நான் செருப்பில்லாமல் தான் போவேன். ஆனா ஆத்து தண்ணீல மீன் இருக்குல்ல. மீன் முள்ளு காலில் குத்திடுச்சுனா வலிக்கும் இல்லையா? அதனாலதான் செருப்பு போட்டிருக்கேன். நீ ஒண்ணும் மனசுல வச்சுகாத”இந்த பதிலை கொஞ்சமும் எதிர்பார்க்காத சங்கரன் குழம்பிப்போனான். 
அவரை திரும்பி திரும்பி பார்த்தவாரே கழியை ஆற்றில் குத்தி படகை செலுத்தினான். உதட்டில் சிறு புன்னகையுடன் ஸ்வாமி இவனையே பார்ப்பது போல இருந்தது.
சில நிமிட மெளனத்திற்கு பிறகு...
“சங்கரா.... நான் மீன் முள் குத்தும் என செருப்பு போட்டுக்கிட்டது உனக்கு முட்டாள்த்தனமா தெரியுதில்லையா? அதேபோலதான் ஜபம் தியானம் செஞ்சா உடனே குடும்பத்தை விட்டு சன்யாசம் போயிடுவாங்கனு நினைக்கிறதும்...!
இந்த மீன் முள் குத்தனும்னா முதல்ல மீனை வலைவீசி பிடிக்கனும், அப்புறமா அதை தூய்மையாக்கி, அடுப்பில் வைத்து சமைக்கனும். அப்புறம் சுவைச்சு பார்க்கனும். இதெல்லாம் செஞ்சா கூடா காலில் மீன் முள் குத்த வாய்ப்பில்லை. இல்லையா? அது போலத்தான்...ஆன்மீகத்தில் ஈடுபடும் எல்லாரும் சன்யாசி ஆயிடனும் இல்லை. 
நீ உன் குடுபத்தில் இருந்துக்கிட்டே உன் உன்மை நிலையையான ஆன்மாவை உணரலாம். அதுக்குதான் இந்த ஜபம், தியானம் எல்லாம். பக்குவம் அடைய பல படிகள் இருக்கு, எடுத்தவுடன் மீன் முள் குத்தாது. அதை வலைவீசி பிடிக்கனும்...அதுபோல உன் அலைபாயும் மனசை வசப்படுத்த இந்த ஜபம் தியானம் செய்யனும். குரு வந்து அதை தூய்மையாக்கி சமைப்பார், அப்புறம் தான் மிச்சமெல்லாம்...” என கூறிவிட்டு செருப்பை ஆற்றங்கரையில் விட்டுவிட்டு சென்றார் ஸ்வாமிஜி. 
அன்று முதல் அந்த செருப்பு சங்கரனுக்கு குருபாதுகையானது.

தவறாகப் புரிந்து கொள்ளப்படும் தமிழ்ப் பழமொழிகள்!





 சில பிரபல தமிழ்ப் பழமொழிகள் பொருள் மாறிப்
புரிந்து கொள்ளப்படுகின்றன. வேறு அர்த்தமும் சரியாகவே பொருந்துவதால் அதைச்
சரிப்படுத்தும் சிரமத்தை அதிகம் யாரும் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் அந்தப்
பழமொழிகளின் உண்மையான வடிவமும், பொருளும் அறிந்து கொள்வதே நல்லது அல்லவா? அப்படித்
தவறாகப் புரிந்து கொள்ளப்படும் சில தமிழ்ப் பழமொழிகளைப் பார்ப்போம்.




1) தவறு: மண் குதிரையை நம்பி ஆற்றில்
இறங்காதே!


 
சரி: மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே!


மண் குதிர் என்பது மண் குவியல்.
ஆற்றின் நடுவில் தெரியும் மண் குதிர் நம்மை திடமாகத் தாங்கும் என்று எண்ணி அதை
நம்பி ஆற்றில் இறங்கக்கூடாது. அதில் கால் வைத்தால் அந்த மண் குதிர் சரிந்து நாம்
விழ நேரிடும்.




2) தவறு: கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு?

 
சரி: கைப்பூணுக்குக் கண்ணாடி எதற்கு?


பூண் என்பது ஆபரணம். கையில் அணியும் பூண்
அழகாக உள்ளதா என்று பார்க்கக் கண்ணாடி எதற்கு என்று கேட்பதாகவே பழமொழி பிறந்தது.




3) தவறு: ஆனைக்கு ஒரு காலம் வந்தால்
பூனைக்கு ஒரு காலம் வரும்.


 
சரி: ஆ நெய்க்கு ஒரு காலம் வந்தால் பூ நெய்க்கு ஒரு காலம் வரும்.


ஆ நெய்  என்பது
பசுவின் நெய். பூ நெய் என்பது பூவின் தேன்.
அதாவது பசுவின் நெய் உண்ண ஒரு காலம் வந்தால், தேன் உண்ண ஒரு காலம் வரும்.  இளம் வயதில் பசுவின் நெய் அதிகம் உண்ணலாம்.
ஆனால் வயதான காலத்தில் தேன் உண்பதே சிறந்தது. நெய் உண்ணும் காலம் வந்தால், பின்
தேன் உண்ணும் ஒரு காலமும் வரும் என்பதே இதன் பொருள்.




4) அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ
மாட்டான்.

இங்கு அடி என்பது இறைவனின் திருவடி என்பதையே
குறிக்கும். இறைவனுடைய திருவடியைப் பற்றிக் கொள். அவன் திருவடி உதவுவது போல்
அண்ணன் தம்பி கூட உனக்கு உதவ மாட்டார்கள் என்பதே உட்கருத்து.




5) தவறு: கழுதைக்குத் தெரியுமா கற்பூர
வாசனை?


 
சரி: கழு தைக்கத் தெரியும் கற்பூர வாசனை!


இங்கு கழு என்பது ஒருவகைக் கோரைப்புல்.
அந்த கழு கோரைப்புல்லில் பாய் நெய்யும் போது கற்பூர வாசனை இயல்பாக வரும். அதையே
ஆரம்ப காலத்தில் பழமொழியாகக் குறிப்பிட்டிருந்தார்கள்.




6) தவறு: கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!



சரி: கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம், நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்!


நாயகனான இறைவனின் சிலையைக் கல்லாகவே
கண்டால் இறைவன் தெரிய மாட்டான். இறைவனாகவே கண்டால் கல் தெரியாது. இதில் நாயகன்
என்பதே மருவி நாயாக மாறி விட்டது.
பெரியப்பாவிற்கு முன்பு நாங்கள் வைத்த பட்டப் பெயர் "பாசிடிவ்". "எதையும் 'பாசிடிவா' பாருடா. எத்தனை மோசமான சூழ்நிலையிலும் ஒரு 'பாசிடிவ்" அம்சம் இருக்கும். அதிலே கவனம் வை. நீ ஜெயிச்சிடலாம்" என்று அடிக்கடி சொல்வார்.



"அரண்மனை மாதிரி வீடு, ஆறு காரு, ஏக்கர் கணக்கில் பூமி, ஏகப்பட்ட காசு, இதெல்லாம் இருக்கும் போது அவர் வேணும்னா இப்படி பேசலாம். நம்மள மாதிரி அடி மட்டத்தில் இருந்துகிட்டு தினசரி வாழ்க்கையில போராடிட்டு இருக்கிறவனுக்கு தான் கஷ்டம்னா என்னான்னு தெரியும். ஜெயிக்க வேண்டாம், சமாளிக்கறதே பெரிய விஷயம்" என்று அண்ணா அவர் போனவுடன் கிண்டலடிப்பான். அவன் சொன்னதிலும் யதார்த்தம் இருந்தது.



எது எப்படியோ எனக்கு சிறு வயதிலிருந்தே பெரியப்பா மீது ஒரு ஹீரோ வர்ஷிப் இருந்தது. தோற்றத்தில் ஒரு கம்பீரம், நடையில் ஒரு வேகம், எப்போதும் எதிலும் நல்லதே பார்க்கும் ஒரு தனிப் பெரும் குணம் என எல்லாமாய் சேர்ந்து அவரை ஒரு ஆதர்ஷ மனிதராக என் மனதில் ஆக்கியிருந்தன.





வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்த பெரியப்பாவிற்கு கடந்த ஐந்து வருடங்களாக இறங்குமுகம். வீடு, கார், பூமி, சேர்த்த பணம் எல்லாம் போய் அண்ணன் சொன்ன அடிமட்டத்திற்கு அவரும் வந்து விட்டார். திருமணமாகி பல வருடங்கள் கழித்து பிறந்ததால் அவரது ஒரே மகனும் தற்போது தான் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டில் படிக்கிறான். அறுபது வயதில் அவர் மும்பையில் இருக்கும் தன் நண்பர் ஒருவர் ஹோட்டலில் மானேஜராக வேலை பார்த்து வருகிறார் என்றும் அவர் மிகச் சிறிய வாடகை வீட்டில் வசித்து வருகிறார் என்றும் கேள்விப்பட்ட போது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. அவர் மும்பை சென்ற பின் அவரை நேரில் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இப்போது ஆபிஸ் வேலை விஷயமாக மும்பை வந்த எனக்கு அவரைப் பார்க்கவும், இப்போதும் அந்த 'பாசிடிவ்' அணுகுமுறை அவரிடம் இருக்குமா என்று தெரிந்து கொள்ளவும் ஆர்வமாக இருந்தது.



அந்தேரியில் அவர் வீட்டைக் கண்டு பிடிக்க சிறிது சிரமப்பட்டேன். கதவைத் திறந்த பெரியம்மா "வாப்பா" என்று ஆச்சரியத்துடன் வரவேற்றாள். பெரியம்மா கறுத்து, இளைத்திருந்தாள். பார்க்கப் பாவமாய் இருந்தது.



"பெரியப்பா இல்லையா"



"உள்ளே பூஜை செய்யறார். இருக்கிற எல்லாத்தையும் கடவுள் பிடுங்கியாச்சு. ஆனா உன் பெரியப்பாவுக்கு பக்தி குறையலை"



அவள் பேசியது உள்ளே பெரியப்பாவிற்குக் கேட்டிருக்க வேண்டும். "வாடா...உட்கார்" என்றபடி உள்ளே இருந்து வந்தார். அன்று போலவே இன்றும் அவர் உற்சாகமாத்தான் தென்பட்டார். "இவளுக்கு சொன்னாப் புரியறதேயில்லை. இப்பப் புடுங்கிட்டாருன்னு ஏன் நினைக்கிறே. இவ்வளவு நாள் கொடுத்திருந்தாரேன்னு சந்தோஷப் படேன்".



பெரியம்மா அப்படி சந்தோஷப்படும் மனநிலையில் இல்லை. பேசாமல் உள்ளே போனாள். அவர்கள் மகன் எங்கோ வெளியே போயிருந்தான். பெரியப்பா வீட்டில் எல்லோரையும் விசாரித்தார். பொதுவாக சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.



அரண்மனை போன்ற வீட்டில் அரசரைப் போல இருந்த பெரியப்பாவை இப்படி ஓரு சூழ்நிலையில் பார்க்க எனக்கு மிகவும் கஷ்டமாகவும், ஜீரணிக்க முடியாமலும் இருந்தது. அதைக் குரல் கம்ம அவரிடம் சொல்லியே விட்டேன்.



பெரியப்பா அமைதியாக சொன்னார். "கையை விட்டுப் போனதைப் பற்றியே நினைச்சுட்டிருந்தா இருக்கிறதோட அருமையை உணராமல் போயிடுவோம்டா. இப்பவும் நல்லாப் படிக்கிற மகன் இருக்கான். எனக்கு உழைக்கிற ஆரோக்கியம் இன்னமும் இருக்கு. அந்தேரியில் குறைஞ்ச வாடகையில் ஒரு வீடு கிடைச்சிருக்கு. சேர்த்து வைக்க காசு இல்லாட்டியும் வாழ்க்கையை ஓட்டற அளவு வருமானம் இருக்கு. இப்படி 'இருக்கிற' விஷயங்கள் இன்னமும் நிறைய இருக்கு"



 பெரியம்மா காபியுடன் வந்தாள். "உங்க தத்துவமெல்லாம் கொஞ்சம் நிறுத்துங்களேன். ஆரம்பத்தில் இருந்தே இல்லாமல் போறது வேறே...அனுபவிச்சு இழந்துட்டு கஷ்டப்படறது வேறே... ஊம்...எதுவும் சாசுவதமில்லை"



"எதுவுமே சாசுவதம் இல்லைன்னா நீ கஷ்டம்னு நினைக்கிற இது மாத்திரம் சாசுவதமா என்ன? இதுவும் ஒரு நாள் மாறும். நீ என்னடா சொல்றே" என்று புன்சிரிப்புடன் என்னைக் கேட்டார்.



பிரமிப்புடன் தலையாட்டினேன். வெற்றியின் உச்சாணிக் கொம்பிலிருந்த போது இருந்த இடத்தை விட பெரியப்பா என் மனதில் இன்னும் பல மடங்கு உயர்ந்து போனார். நிஜமாகவே பெரியப்பா 'பாசிடிவ்' தான்.
வானம் பெரிதான மழைக்கு ஆயத்தமாகி
இருந்தது. நல்ல வேளையாக  வெங்கடேசன்
பெருமழை பெய்ய ஆரம்பிக்கும் முன் அரங்கன் கோயிலை எட்டி விட்டார். அவர் வீட்டை
விட்டுக் கிளம்பும் போதே, கடலில் புயல் மையம் கொண்டிருக்கிறது என்றும் அடுத்த 24
மணி நேரத்தில் கனத்த மழை பெய்யும் என்றும் தொலைக்காட்சியிலும், வானொலியிலும்
அறிவிப்புகள் வர ஆரம்பித்திருந்தன. அதனால் காரில் நூறு கிலோமீட்டர் தூரப் பயணம் செய்து
அரங்கனைத் தரிசிப்பதற்கு வீட்டில் பலத்த எதிர்ப்பு. ’இன்னோரு நாள் போனால் என்ன,
அரங்கன் ஓடியா போய் விடுவார்?’ ஆனால் நவம்பர் இருபதாம் தேதியான இன்று அரங்கனைத்
தரிசிக்காமல் இருக்க மாட்டேன் என்று அவர் பிடிவாதமாகக் கிளம்பி வெற்றிகரமாக
வழக்கமான மதிய நேரத்தில் வந்து சேர்ந்தும் விட்டார்.




கடந்த பத்தாண்டுகளாகத் தொடரும் இந்த சந்திப்பைப்
புயலும், மழையும், எதிர்ப்பும் நிறுத்தி விட முடியுமா என்ன! ஒவ்வொரு வருடமும்
ஒவ்வொரு விதமான தடங்கல் வந்து கொண்டு தானிருந்தது. உடல்நிலை சரியில்லாமை, கார்
பழுது, வியாபார அவசரங்கள், திருமணங்கள், இழவுகள் என்று அந்த சமயங்களில் ஏதாவது ஒரு தடை முன்னே வந்து நிற்க, அதையெல்லாம் பின்னுக்குத்
தள்ளி விட்டு அவர் அந்த நாளில் அரங்கனைத் தரிசித்து வந்திருக்கிறார். இன்றும் வருகையில்
வழியெல்லாம் மழையால் போக்குவரத்து நெருக்கடி தான். சில இடங்களில் நிறைய நின்று,
சில இடங்களில் ஊர்ந்து தான் வரவேண்டி இருந்தது. ஆனால் இதெல்லாம் அரங்கன் வைக்கும் பரிட்சைகளல்லவா?








காரிலிருந்து இறங்கி வெங்கடேசன் அண்ணாந்து கோபுரத்தைப்
பார்த்துக் கும்பிட்டார். அரங்கனுடைய அந்தக்கோயில் மிகப்பழைய கோயில். திருவிழாக்
காலத்தைத் தவிர மற்ற நாட்களில் அதிகம் கூட்டம் காணாத கோயில். கனத்த இரும்புச் சங்கிலிகளும்,
பித்தளைக் குமிழ்களும், மரச்செதுக்கு சிற்பங்களும் கொண்ட உயரமான கோயில் கதவுகள் மதிய
உச்சி பூஜை முடிந்து சாத்தப்பட்டு இருந்தன. ஆனால் வலது கதவின் கீழ்ப்பகுதியில் சிறியதாய்
ஒரு சின்னக்கதவு இழைக்கப்பட்டு இருந்தது. அந்தக் கதவு இரவு வரை எப்போதும் திறந்தே
இருக்கும். அந்தச் சிறிய கதவு வழியாக வெங்கடேசன் கோயிலுக்குள் நுழைந்தார். உள்ளே
யாருமே இல்லை. இனி மாலை நான்கு மணி வரை இப்படித் தான் கோயில் வெறிச்சோடிக்
கிடக்கும். அதன் பின் தான் சில பக்தர்களாவது வருவார்கள். இப்போது மணி இரண்டரை.
ஒன்றரை மணி நேரம் அரங்கனோடு தனியாக இருக்கலாம்.




வெங்கடேசன் எப்போதுமே இந்த நேரத்தைத் தான் தேர்ந்தெடுத்து
வருவார். இறைவனிடம் ஒப்பிக்க இந்த வருடத்திய கணக்கு நிறைய இருந்தது. அது கூட்டம்
இருக்கும் போது சாத்தியப்படுவதில்லை. பூசாரி உட்பட இடைஞ்சல் போலத் தான் அவருக்குத்
தோன்றும். கற்பாளங்களாலான ஈரத்தரையில் சில இடங்களில் பாசி படர்ந்திருந்தது. கவனமாக
அதில் கால் வைத்து மூன்று முறை சுற்றி விட்டு கருவறை முன் இருந்த உள்மண்டபத்திற்கு
அவர் வந்தார்.




அரங்கன் கம்பிக்கதவுகளிற்குப் பின்னால் கருவறையில் பள்ளி
கொண்டிருந்தான். இரண்டு பக்கமும் ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்குகள் கூடுமான வரை
இருளைப் போக்க முயற்சி செய்து கொண்டிருந்தன. அரங்கனை மங்கலான ஒளியில் தரிசித்த
போது வெங்கடேசனுக்கு மெய்சிலிர்த்தது. மனம் லேசானது. “அரங்கனே உன் பக்தன்
வந்திருக்கிறேன்....” மண்டபத்தில் அரங்கனை ஒரு முறை வணங்கி விட்டு அவனைப் பார்த்தபடி அப்படியே
உட்கார்ந்தார். ஓரிரு நிமிடங்களில் காலத்தை மறந்து போனார்.....




பத்து வருடங்களுக்கு முன்னால் இதே நவம்பர் இருபதாம்
தேதி இதே நேரத்தில் இதே இடத்தில் அரங்கன் முன் கனத்த இதயத்துடன் வந்தவர் அவர். இப்போதைய
வானம் போல அன்று அவர் மனம் இருண்டிருந்தது. தற்கொலை செய்து கொள்ள மனம்
தீர்மானித்திருந்தது. அதை நிறைவேற்ற அவர் சட்டைப் பையில் விஷம் இருந்தது. வியாபாரத்தில்
பெருத்த நஷ்டம், பல இடங்களில் பெருங்கடன், பல இடங்களிலிருந்தும் ஒருமித்த
நெருக்கடி, அதிலிருந்து மீள வழியில்லாமை, எல்லாமாகச் சேர்ந்து அவரை இந்த
முடிவுக்கு வரவழைத்திருந்தன. மனைவிக்கு ஒரு மன்னிப்புக் கடிதமும், மனைவியையும்,
மகளையும் பார்த்துக் கொள்ளச் சொல்லி மாமனாருக்கு ஒரு உருக்கமான வேண்டுதல் கடிதமும்
அவரது சட்டைப்பையில் இருந்தன. அதே வேண்டுதலை தன் இஷ்ட தெய்வமான அரங்கனிடம் வேண்டி
விட்டு இறக்கத் தான் இந்தக் கோயிலுக்குள் அன்று வந்திருந்தார்.




அன்று அவர் அரங்கன் முன் அவர் குமுறிக் குமுறி
அழுதிருக்கிறார். ”அரங்கனே நான் நிறைய முட்டாள்தனங்கள் செய்திருக்கிறேன் நிறையவே
அஜாக்கிரதையாக இருந்திருக்கிறேன். அதனால் தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். எல்லாவற்றையும்
உணர்ந்த இப்போதோ எல்லாமே தலைக்கு மேலே போய் விட்டது. சரி செய்ய வழியே இல்லை. அத்தனை
தவறும் என்னுடையது. என் தவறுகளுக்காக என் மனைவியும், மகளும் தண்டிக்கப்பட்டு
விடக்கூடாது. அவர்களைக் காப்பாற்று. அவர்களைக் காப்பாற்ற என் மாமனாருக்கு
தீர்க்காயுளையும், சக்தியையும் கொடு.....”




அழுது ஓய்ந்து கண்களைத் துடைத்துக் கொண்டு அரங்கனிடமும்
மனதார விடைபெற்றுக் கொண்டு அவர் எழுந்து நகர்ந்த போது காலை ஏதோ இடறியது. ஒரு
சிவந்த தோல்பை அது. யாரோ விட்டுச் சென்றிருக்க வேண்டும். தோல் பையின் ஜிப் சற்றே
விலகி உள்ளே கட்டுக் கட்டாய் பணம் தெரிந்தது. ஒரு கணம் அவரது இதயத்துடிப்பு நின்று
போனது. அவர் சுற்றும் முற்றும் பார்த்தார். யாரும் இல்லை. குனிந்து ஜிப்பை
விலக்கிப் பார்த்தார். கட்டுக் கட்டாய் பணத்துடன் தங்க நகைகளும் இருந்தன. இதயம்
சம்மட்டியாக அடிக்க ஆரம்பிக்க, கோயிலை அவசரமாக ஒரு முறை சுற்றிப் பார்த்தார்.
யாருமே இல்லை. அவருக்கு வியர்த்தது. மறுபடி அரங்கன் முன் அமர்ந்து பணத்தைக்
கணக்கிட்டார். இருபது லட்ச ரூபாய் இருந்தது. தங்கநகைகள் சுமார் ஐம்பது பவுனாவது
இருக்கும்.




அரங்கனைப் பார்த்தார். அரங்கன் படுத்தபடியே மந்தஹாசப்
புன்னகை பூத்தான். யாரோ இறைவனுக்கு என்று இதை ஒப்படைத்து விட்டுப்
போயிருக்கிறார்கள் போலத் தோன்றியது. இறைவன் அவர் மீள ஒரு வழியைக்
காண்பித்திருக்கிறான். ‘இதை வைத்துக் கொண்டு மறுபடியும் ஆரம்பி...” என்று அரங்கன் சொல்வதாக ஒரு
தோணல். கலியுகத்தில் இவ்வளவு சீக்கிரம் கடவுள் கருணை காட்டுவது ஆச்சரியத்திலும்
ஆச்சரியம். கண்களில் மீண்டும் கண்ணீர் பெருகியது. மீண்டும் அழுதார். அந்தப் பையை
எடுத்துக் கொண்டு வந்தவர் விஷத்தை குப்பைத் தொட்டியில் கொட்டி விட்டு, சட்டைப்
பையில் வைத்திருந்த கடிதங்களை சுக்கு நூறாகக் கிழித்து விட்டு ஊர் திரும்பினார்.




அவர் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பித்தது.
கடன்களைத் தீர்த்து விட்டு மீதி இருந்த பணத்தைத் தொழிலில் போட்டு கவனமாகவும்,
கஷ்டப்பட்டும் உழைத்தார். இறைவனுடைய முதலும் அவருடைய உழைப்பும் சேர்ந்ததால் நல்ல
பலன் கிடைத்தது. செல்வம் குவியத் தொடங்கியது. வந்த இலாபத்தில் பாதியை மட்டும்
தனக்கு வைத்துக் கொண்டார். மீதியை அரங்கன் கணக்காக நினைத்து தர்ம காரியங்களுக்குச்
செலவு செய்தார். அவரும், அரங்கனும் சேர்ந்த கூட்டணி அவரை மலைக்க வைக்கும்
உயரத்திற்குக் கொண்டு சென்றது. ஆனால் அவர் பழையதை மறக்கவில்லை. ஒவ்வொரு வருடமும்
நவம்பர் இருபதாம் தேதி வந்து இறைவனுக்கு நன்றி செலுத்தி வணங்குவதில் தவறவில்லை.
இலாபத்தில் அரங்கனுடைய பங்கை எப்படி எல்லாம் செலவு செய்திருக்கிறார் என்று
நேரடியாக வந்து கணக்கை ஒப்புவிக்கத் தவறவில்லை....




காலத்தை மறந்து அரங்கனுடன் இருந்த அந்த அமைதியைக்
கலைக்கும் விதமாக வானம் இரைச்சலுடன் பொழிய ஆரம்பித்தது. யாரோ ஓடி வரும் சத்தம்
கேட்டது. ஓடி வந்த மனிதருக்கு அறுபதுக்கும் மேற்பட்ட வயதிருக்கும். சாயம் போன சட்டையும், பழைய வேட்டியும் அணிந்திருந்தார். வந்தவர்
தன் மேலே போட்டிருந்த துண்டால் தலையைத் துவட்டிக் கொண்டார். அவர் மழைக்கு
ஒதுங்குபவர் போல அந்த உள் மண்டபத்தில் ஒதுங்கினாரே ஒழிய அரங்கன் பக்கம் திரும்பவில்லை.
அரங்கனுக்கு முதுகைக் காட்டியபடியே நின்றார்.




வெங்கடேசனுக்கு அரங்கனுடன் இருந்த அந்த இனிமையான தனிமை
பறி போனதால் அந்த மனிதர் வரவை ரசிக்க முடியவில்லை. கோயிலில் யாரும் வரலாம்,
அரங்கனுக்கு அனைவரும் ஒன்று தானே என்று தன்னைத் தானே கடிந்து கொண்டவராக கண்களை
மூடிக் கொண்டு பிரார்த்தனை செய்வது போல பாவனை செய்தார். ஆனாலும் மனம் அந்த
பாவனையில் ஒன்றவில்லை. மழையுடன் இடி மின்னலும் சேர்ந்து கொண்டது. கண்களை
மூடிக்கொண்டு தொடர்ந்து இருக்க முடியாமல் சிறிது நேரம் கழித்து கண்களைத்
திறந்தார்.




அந்த முதியவர் அவரையே கூர்ந்து பார்த்துக்
கொண்டிருந்தார். வெங்கடேசன் கண்களைத் திறப்பதற்காகக் காத்திருந்தவர் போல உடனே கேட்டார்.
“நீங்கள் வெங்கடேசன் தானே?”




வெங்கடேசன் பலவந்தமாய் புன்னகையை வரவழைத்துக் கொண்டு
ஆமாம் என்று தலையாட்டினார்.




முதியவர் முகத்தில் மிகுந்த மரியாதை தெரிந்தது. “உங்களைப்
பற்றி பத்திரிக்கைகளில் நிறைய படித்திருக்கிறேன். அனாதை ஆசிரமங்கள், இலவச முதியோர்
இல்லங்கள், ஏழைகள் படிப்புக்கு உதவித்தொகை என்று எத்தனையோ நல்ல காரியங்கள்
செய்திருக்கிறீர்கள். ரொம்ப பெரிய மனது உங்களுக்கு....”




வெங்கடேசனுக்கு கூச்சமாய் இருந்தது. அடக்கத்துடன் அரங்கனைக்
காண்பித்துச் சொன்னார். “எல்லாம் அவன் போட்ட பிச்சை. நானாகச் செய்தது எதுவுமில்லை”




முதியவர் பார்வை அப்போதும் அரங்கன் பக்கம் போகவில்லை. அந்த
உள் மண்டபத்தில் பதித்திருந்த “உபயம்- வெங்கடேசன்” என்ற வாசகத்தின் மீது அவர்
பார்வை தங்கியது. ”இந்த மண்டபம் கூட நீங்கள் தான் கட்டியது. இல்லையா. ஒரு காலத்தில் இப்படி
இருக்கவில்லை...”




வெங்கடேசன் சங்கோஜத்துடன் தலையசைத்தார். பின்
தயக்கத்துடன் சொன்னார். “எல்லாம் அவன் கொடுத்தது. அவன் கொடுத்ததிலேயே இதைக் கட்டி
விட்டு உபயம் என்று என் பெயரைப் போட்டது சரியல்ல. ஆனால் நான் சொன்னாலும் கேட்காமல்
போட்டு விட்டார்கள்.”




முதியவர் முகத்தில் தெரிந்த மரியாதை கூடியது. “உங்களை
மாதிரி ஒரு நல்ல மனிதரை நேரில் பார்த்தது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது”.  சொல்லி விட்டு அவர் கை கூப்பினார். பின்
சினேகத்துடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். “நான் ராமமூர்த்தி. பக்கத்து
ஊரில் தான் இருக்கிறேன். அங்கே ஒரு தனியார் கம்பெனியில் ஸ்டோர் கீப்பராய்
இருக்கிறேன்.”




வெங்கடேசனும் கை கூப்பினார். “நீங்கள் அதிர்ஷ்டசாலி.
பக்கத்து ஊரிலேயே இருக்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் வந்து அரங்கனை
தரிசிக்கலாம்.”




முதியவர் முகம் சுருங்கியது. மெல்லச் சொன்னார். ”நான் இந்த இடத்திற்கு வந்து
பத்து வருஷமாகி விட்டது”




அரங்கன் சன்னிதியைக் கோயில் என்று சொல்லாமல் இந்த இடம்
என்று அவர் சொன்னதும் சொன்ன விதமும் வெங்கடேசனை நிறையவே பாதித்தது.




அவர் முகபாவனையிலேயே அதைப் புரிந்து கொண்ட ராமமூர்த்தி
குரலை சற்று மென்மையாக்கிக் கொண்டு சொன்னார். ”உங்களுக்கு இவன் இறைவனாய்
இருக்கலாம். நல்லது நிறைய செய்திருக்கலாம். என்னைப் பொறுத்த வரை இவன் திருடன். தண்டிக்க
முடியாத திருடன். முதலில் எல்லாம் நான் இங்கே அடிக்கடி வந்து கொண்டிருந்தவன் தான்.
என் தாத்தா, அப்பா, நான் என்று எல்லாரும் வம்சாவளியாக இங்கே வந்து வணங்கியவர்கள்
தான். ஆனால் பத்து வருஷமாய் தான் நான் வணங்குவதை நிறுத்தி விட்டேன். இப்போது கூட
வந்திருக்க மாட்டேன்.  வேறொரு வேலையாக இந்த
ஊருக்கு வந்தேன். வேலையை முடித்துக் கொண்டு போகிற நேரத்தில் இப்படி மழை பிடித்துக்
கொண்டது. பக்கத்தில் ஒதுங்க எந்த கட்டிடமும் இல்லை. அதனால் தான் என்னை அறியாமல் பழைய
பழக்க தோஷத்தில் இங்கே வந்து விட்டேன்...”




வெங்கடேசன் திகைப்புடன் அவரைப் பார்த்தார். அரங்கன்
சன்னிதியில் நின்று கொண்டு அரங்கனையே பழித்துப் பேசும் அந்த முதியவரின் செயல்
அவருக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. கோபத்தை பேச்சில் காண்பிக்கக் கூடாது என்று எண்ணியவராக
இயல்பான குரலில் கேட்டார். ”அப்படி என்ன தான் அரங்கன் செய்து விட்டான்?”




ராமமூர்த்தி உடனடியாக பதில் சொல்லவில்லை. அரங்கனைப்
பார்க்கவும் பிடிக்காதவராய் பெய்கின்ற மழையையே சிறிது நேரம் வேடிக்கை பார்த்து
விட்டு மெல்ல சொன்னார். “மாளிகையில் இருந்த என்னை ஒரே நாளில் நடுத்தெருவுக்கு
கொண்டு வந்து விட்டான்....”




வெங்கடேசன் திகைப்போடு அவரைப் பார்த்தார்.




மழை குறைகிற மாதிரி தெரியவில்லை. ஆக்ரோஷத்துடன் பெய்து
கொண்டிருந்தது. ராமமூர்த்தி பெய்யும் மழையைப் பார்த்தபடியே தளர்ந்த குரலில் சொல்ல
ஆரம்பித்தார். “ஒரு காலத்தில் பம்பாயில் நல்ல விதமாய் வியாபாரம் செய்து கொண்டு
இருந்தேன். நான், என் மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் எல்லாரும் சந்தோஷமாய்
இருந்தோம். மூத்த மகனுக்கும், மகளுக்கும் கல்யாணம் செய்து முடித்திருந்தேன். கடைசி
மகன், மகள் பிறந்து பத்து வருடம் கழிந்து பிறந்தவன். பள்ளிக்கூடத்தில் படித்துக்
கொண்டிருந்தான். அப்போது பம்பாயில் தொழில் மந்தமாக ஆரம்பித்தது. கலவரங்களும்
அதிகமாக இருந்தன. அந்தத் தொழிலை விட்டு விட்டு தமிழ்நாட்டிற்கே வந்து புதிதாக தொழில்
ஆரம்பித்தால் என்ன என்கிற எண்ணம் வந்தது. தமிழ்நாட்டில் மனை விற்பனை  நன்றாகப் போகிறது, அதில் பணம் போட்டால் நல்ல
இலாபம் வரும் என்று இங்கிருந்த சிலர் ஆலோசனை சொன்னார்கள். எல்லாவற்றையும் விற்று
விட்டு பணத்தோடு தமிழ்நாட்டிற்கே வந்து அப்படி தொழில் ஆரம்பித்து விடலாமா என்று
இங்கே வந்து குல தெய்வமான இந்த அரங்கனிடம் பூப் போட்டு உத்தரவு கேட்ட போது செய்
என்று பதில் வந்தது. மலிவான விலையில் நல்ல இடத்தில் வீடு கட்டி விற்க பன்னிரண்டு
ஏக்கர் நிலம் விற்பனைக்கு இருந்தது. விற்பவன் கணக்கில் குறைவாகத் தான்
காண்பிப்பேன், பெரும்பகுதியை ரொக்கமாகத் தான் தரவேண்டும் என்று சொன்னான். அப்படியே
பணத்தையும், போதாதற்கு இருந்த நகைகளையும் எடுத்துக் கொண்டு, இதே நவம்பர் மாதம் இதே
இருபதாம் தேதி இவனை வணங்கி விட்டு வியாபாரம் முடிப்பதற்காக, முதலில் இதே
இடத்திற்கு வந்தேன்.....”




வெங்கடேசன் இதயத்தை ஏதோ கனமாக அழுத்தியது போல
உணர்ந்தார்.




அதைக் கவனிக்காமல் மழையிலும் கடந்த காலத்திலும்
லயித்தபடி ராமமூர்த்தி தொடர்ந்து சொன்னார். “வந்த நேரம் கூட கிட்டத்தட்ட இதே நேரம்
தான். சாயங்காலம் பூசாரி வந்து தீபாராதனை காட்டுகிற வரை காத்திருக்க நேரம் இல்லை. அதனால்
வணங்கி விட்டுக் கிளம்பினேன். ஒரு பெரிய பையின் உள்ளே துணிமணியோடு பணம் நகை வைத்த
சிறிய சிவப்புப்பை பாதுகாப்பாய் வைத்திருந்தேன். அதை எடுத்து இவன் முன்னால்
வைத்துக் கும்பிட்டேன். பின் அதை எடுத்தவன் உள்ளே வைக்க எப்படி மறந்தேன் என்று
எனக்கே தெரியவில்லை. பெரிய பையில் அதை எடுத்து வைத்து விட்டதாய் நினைத்து கிளம்பி
விட்டேன். நிலம் விற்பவனிடம் போன பிறகு தான் அந்தப் பையை இங்கேயே விட்டு விட்டதைக்
கண்டு பிடித்தேன். உடனடியாகத் திரும்பி இங்கே ஓடோடி வந்தேன். அரங்கன் முன் வைத்த
பணம் அவன் கண்காணிப்பில் பத்திரமாய் தான் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது.
ஆனால்.... ஆனால் .....இங்கே வந்த போது அந்தப் பை மாயமாய் மறைந்திருந்தது.....”







வெங்கடேசன் இதயத்தை அழுத்த ஆரம்பித்த கனம் இமயமாக
மாறியது. சரியாக மூச்சு விடக்கூட அவரால் முடியவில்லை.




ராமமூர்த்தி குரல் கரகரக்க ஆரம்பித்தது. “பணம் எத்தனை
தேடியும் கிடைக்கவில்லை. பணம் போனதோடு எல்லாம் போகும் என்று நான் நினைக்கவில்லை.
ஆனால் அப்படித் தான் ஆனது. மூத்த மகன், மகள் பெயரில் நான் சேர்த்து வைத்திருந்த
சொத்துகளைத் தவிர எல்லாவற்றையும் இந்த வியாபாரத்திற்காக நான் விற்றிருந்தேன். அதனால்
நிலைமையை சரிக்கட்ட அவர்கள் பெயரில் இருந்த சொத்து எனக்கு தேவைப்பட்டது. அவர்கள்
இரண்டு பேரும் கையெழுத்துப் போட மறுத்து விட்டார்கள். பெற்ற பிள்ளைகளே அப்படி
செய்வார்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அதை ஜீரணிக்க முடியவில்லை. மற்ற
உறவுகளும், நட்பும் கூட அப்படியே உதிர்ந்து போய் விட்டது. நானும், என் மனைவியும்,
என் சின்ன மகனும் நடுத்தெருவில் நின்றோம்...... நான் செய்த ஒரே தவறு இவனை வணங்க
இங்கே வந்தது தான். இவன் முன்னால் நான் விட்டுப் போன என் பணத்தை எனக்குக்
காப்பாற்றித் தரத் தெரியாதவன் இந்த உலகத்தையே காப்பாற்றுவானாம்.....” சொல்லி விட்டு ராமமூர்த்தி
ஏளனமாகச் சிரித்தார்.




வெங்கடேசன் உள்ளே நொறுங்கிக் கொண்டிருந்தார். ஒரு
மனிதனை குடும்பத்தோடு நடுத்தெருவிற்குக் கொண்டு வந்து விட்டுத் தான் அவர்
தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றி விட்டிருக்கிறார்... அந்த அப்பாவி
மனிதரின் அழிவில் தான் இன்று பெரியதாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.... அந்த உள்
மண்டபத்தின் சுவரில் இருந்த “உபயம்-வெங்கடேசன்” என்ற வாசகம் அவரைப் பார்த்து
ஏளனமாய் சிரித்தது. இத்தனை காலம் கணக்கு ஒப்பித்தவர் இந்தக் கணக்கை எங்கே சொல்ல
முடியும்? என்ன கணக்கு இது? இது பாவக்கணக்கே அல்லவா?




வெங்கடேசனைப் பார்த்த போது ஏதோ ஒரு விபரீதம் நடப்பது
ராமமூர்த்திக்கு விளங்கியது. அவர் முகத்தில் தெரிந்த பெரும் வலியைக் கண்டு
ராமமூர்த்தி பயந்து போனார். வெங்கடேசனுக்கு மாரடைப்பு வந்து விட்டதா என்ற சந்தேகம்
வலுக்க வேகமாக அவர் அருகே வந்து கேட்டார். “என்ன ஆயிற்று உங்களுக்கு? உடம்பு
சரியில்லையா?”




சொல்லப் போவதை கேட்டு விட்டால் இந்தக் கருணை அந்த
மனிதரிடம் இருந்து பறந்து போகும் என்பதில் வெங்கடேசனுக்கு சிறிதும் சந்தேகமில்லை.
ஆனால் அரங்கன் முன்னால் பத்து வருடங்களுக்கு முன்னால் ஆரம்பித்த அந்த பாவக்கணக்கு
அவன் சன்னிதியில் அவன் முன்னிலையில் இன்று தீர்க்கப் பட வேண்டும் என்பதில் வெங்கடேசன்
உறுதியாக இருந்தார். அந்தப் பணத்தை யாராவது தவறுதலாக விட்டுப் போயிருக்கக் கூடும்
என்ற அறிவுபூர்வமான எண்ணம் தோன்றாததற்குக் காரணம் தன்னுடைய அப்போதைய சுயநலம் என்று
இன்று விளங்கியது. யாரோ வேண்டுமென்றே விட்டுப் போயிருக்க வேண்டும் என்று நினைத்தது
அப்போதைய நிலைமைக்கு வசதியாக இருந்ததாக இப்போது உணர்ந்தார். ஆனால் பிழைக்க வழி
கிடைத்தது என்று அன்று நினைத்தாரே ஒழிய ஒருவர் பிழைப்பில் மண்ணைப் போடுவோம் என்று
நினைத்திருக்கவில்லை.  அப்படியே குனிந்து
அந்த மனிதரின் கால்களை கெட்டியாகத் தன் இரு கைகளாலும் பிடித்துக் கொண்டார்.




ராமமூர்த்தி பதறிப் போனார். “ஐயோ, என்ன இது.” என்று கால்களைப் பின்னுக்கு
இழுக்க முயற்சி செய்தார். ஆனால் வெங்கடேசன் அவர் கால்களை விடுவதாய் இல்லை. ”இந்தப் பாவியை மன்னித்து
விடுங்கள் ஐயா. என்னை மன்னித்து விடுங்கள்....”




ராமமூர்த்தி குழப்பத்துடனும், தர்மசங்கடத்துடனும்
கேட்டார். “எதற்கு?”




ராமமூர்த்தியின் கால்களைப் பிடித்தபடியே வெங்கடேசன்
பத்து வருடத்திற்கு முந்தைய நவம்பர் இருபதில் நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தார்.
வெளியே பெய்த மழையை ஒன்றுமில்லாததாக்கியது வெங்கடேசனின் கண்ணீர். ஒன்றையும்
மறைக்காமல் வெங்கடேசன் சொன்னதைப் பேச்சிழந்து கேட்டுக் கொண்டிருந்தார்
ராமமூர்த்தி.




கடைசியில் வெங்கடேசன் கதறிபடி சொன்னார். “ஐயா
எல்லாத்தையும் திருப்பித் தந்து விடுகிறேன். நீங்கள் தயவு செய்து ஏற்றுக்
கொள்ளுங்கள். இந்தப் பத்து வருஷத்தில் நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு மட்டும் பரிகாரம்
என்னால் செய்ய முடியாது. என்னை மன்னித்து விடுங்கள்....” அதற்கு மேல் அவரால் பேச
முடியவில்லை. கண்ணீரால் ராமமூர்த்தியின் கால்களைக் கழுவியபடியே அவர் கூனிக்
குறுகியிருந்தார்.




ராமமூர்த்தியின் பார்வை முதல் முறையாக அரங்கன் பக்கம்
திரும்பியது. அரங்கனையே வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தார். அவர் மனதில்
ஏராளமான எண்ணங்களும் உணர்வுகளும் அலை மோதின. அவர் நீண்ட நேரம் பேசவில்லை. ஒரு
கனத்த மௌனம் அங்கே நிலவியது.




அவர் ஒன்றும் சொல்லாதது வெங்கடேசனை மேலும் துக்கப்படுத்தியது.
அவர் சொன்னார். “ஐயா எதாவது சொல்லுங்கள். என்னை எப்படி வேண்டுமானாலும் திட்டுங்கள்.
அரங்கனைத் திட்டாதீர்கள்.... எல்லாத் தவறும் என்னுடையது. என்னோட வடிகட்டிய சுயநலம்
தான் இதற்கெல்லாம் காரணம். இப்போதே நீங்கள் என் கூட வந்தால் நான் இது வரை சம்பாதித்ததை
எல்லாம் அப்படியே திருப்பித் தந்து விடுகிறேன். சரி என்று சொல்லி ஏற்றுக் கொண்டு இந்தப்
பாவியைத் தயவு செய்து மன்னியுங்கள் ஐயா....”




அரங்கனைப் பார்த்தபடியே சிலையாக நின்றிருந்த
ராமமூர்த்தி அப்போதும் ஒன்றும் பேசவில்லை. ஆழ்ந்த யோசனையில் அவர் மூழ்கி
இருந்தார்.







வெங்கடேசனுக்கு அவர் ஏதாவது சொல்லா விட்டால் பைத்தியமே
பிடித்து விடும் போல் இருந்தது. ”என்ன ஐயா யோசிக்கிறீர்கள்? இந்தப் பாவி மன்னிப்புக்கும்
ஏற்றவன் இல்லை என்றா?”







ராம்மூர்த்தி மெல்ல வெங்கடேசன் பக்கம் திரும்பினார்.
இரு கைகளாலும் அவரைப் பிடித்து எழுப்பினார். “நீங்கள் ஏன் இந்த மாதிரி பெரிய
வார்த்தைகள் எல்லாம் சொல்கிறீர்கள்? நடந்ததை

இப்போது இன்னொரு தடவை யோசித்துப் பார்த்தால் எனக்கு
உங்களையோ, அரங்கனையோ தப்பு சொல்லத் தோன்றவில்லை”




வெங்கடேசன் திகைத்துப் போனார். “ஐயா என்ன சொல்கிறீர்கள்?”




“அந்தப்பணம் என்னிடமே இருந்திருந்தால் உங்களை மாதிரி
இத்தனை நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்தியிருக்க மாட்டேன். அந்த அளவு பெரிய மனம்
எனக்கு இருந்ததில்லை. உங்களிடம் அந்தப்பணம் வந்ததால் தான் இத்தனை நல்ல காரியம்
நடந்திருக்கிறது. அதனால் தான் அரங்கன் அந்தப் பணத்தை உங்களிடம் ஒப்படைத்திருக்கிறான்.
ஒருவிதத்தில் அந்தப் பணம் என் கையை விட்டுப் போனதும் நல்லது தான் என்று இப்போது
எனக்குத் தோன்றுகிறது வெங்கடேசன். பணத்துக்காக ஒட்டியிருந்த உறவுகளும், நட்புகளும்
அந்தப் பணத்துடனேயே போய் உண்மையான உறவுகளும், நட்புகளும் மட்டுமே என் வாழ்க்கையில்
மிஞ்சினது ஒரு விதத்தில் யோசித்தால் அருமையான நிகழ்வு இல்லையா? இல்லாவிட்டால் நான்
போலிகளை எல்லாம் நிஜம் என்று கடைசி வரை ஏமாந்து போயிருப்பேன். அந்த வகையில் அரங்கன்
எனக்கு உதவி தான் செய்திருக்கான். இது தாண்டா நிஜம். நிஜத்தை மட்டுமே கொண்டாடு
என்று காட்டியிருக்கிறான்....”




“ஐயா...” வெங்கடேசன் திகைத்தார்.




ராமமூர்த்தி கனிவாகச் சொன்னார். “உங்களை சமாதானப்படுத்த
நான் சொல்லவில்லை. இப்போது யோசித்தால் என் வாழ்க்கையில் செல்வம் தான் போனதே ஒழிய மற்றபடி
இவன் அருளில் எல்லாம் நன்றாகத்தான் நடந்திருக்கிறது. குடும்பத்தைக் காப்பாற்றும்
அளவு சம்பாதிக்க எனக்கு ஒரு வேலை கிடைத்தது. பணம் இல்லாததால் படித்தே ஆக வேண்டும்
என்ற கட்டாயத்தில் கடைசி மகன் நன்றாகப் படித்தான். அவனுக்கு பேங்கில் ஒரு வேலை
கிடைத்து இப்போது அவன் என்னையும் என் மனைவியையும் நன்றாகவே பார்த்துக் கொள்கிறான்.
என்னை வேலைக்குப் போக வேண்டாம் என்று தான் சொல்கிறான். நான் தான் சும்மா இருக்க
முடியாமல் வேலைக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். அதனால் ஆரோக்கியமாக இருக்கிறேன். என்னிடம்
இப்போது பணம் அதிகம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் வாழ்க்கையைக் கௌரவமாக
ஓட்டத்தேவையான அளவு பணம் இருக்கிறது. முக்கியமாக நிம்மதி இருக்கிறது.. நிம்மதிக்கு
மேல் என்ன வேண்டும். சொல்லுங்கள்.”




வெங்கடேசன் அந்த வார்த்தைகளில் மேலும் நொறுங்கினார்.
இத்தனை நல்ல மனிதர் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடியது திருட்டுக்கு அல்லவா சமானம்
என்று தோன்றியது. “ஐயா இந்த திருடனுக்கு பரிவாகப் பேசுகிறீர்களே. என் பாவக் கணக்கை
நான் எங்கே போய் சொல்வேன்....” என்று உடைந்த குரலில் கதறினார்.




ராமமூர்த்தி அந்த நல்ல மனிதரை அணைத்துக் கொண்டார்.
“வெங்கடேசன். இது பாவக்கணக்கு அல்ல. இது அரங்கன் கணக்கு. அவன் சரியான கணக்கு தான்
போட்டிருக்கிறான். என்னிடம் இருந்து பணத்தை எடுத்து அரங்கன் எனக்கு நல்லதைச்
செய்திருக்கிறான். அந்தப் பணத்தை உங்களுக்கு கொடுத்து உங்களுக்கும் மற்றவர்களுக்கும்
நல்லதைச் செய்திருக்கிறான். நான் தான் இத்தனை நாள் இது புரியாமல் இவன் மேல்
கோபமாய் இருந்திருக்கிறேன்....”







“நீங்கள் என்னை சபிக்காமல் இந்த அளவு பெருந்தன்மை
காட்டினதை நான் என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். நீங்கள் நிஜமாகவே பெரிய
மனிதர். நீங்கள் இப்போதே என் கூட வந்தால் நான் அத்தனையும் உங்களிடம் ஒப்படைத்து
விடுவேன். என் ஆடிட்டரிடம் பேசி முறைப்படி செய்து விடலாம்...” வெங்கடேசன் ஆத்மார்த்தமாகச்
சொன்னார்.







“நான் தான் கணக்கு சரியாகத் தான் இருக்கிறது என்று
சொல்லி விட்டேனே. பணம் திரும்பி வந்தது தெரிந்தால் உதிர்ந்த உறவுகளும், நட்புகளும்
வெட்கமே இல்லாமல் திரும்பி வந்து ஒட்டிக் கொள்ளும். என் மனைவிக்கு இளகின மனம்.
நான் ஏற்றுக் கொள்ளா விட்டாலும் அவள் ஏற்றுக் கொள்வாள். நானும் வேறு வழியில்லாமல்
சகித்துக் கொள்ள வேண்டி இருக்கும். பணம் இனி எனக்கு நல்லது செய்வதை விட கெட்டது
தான் அதிகம் செய்யும்.... ” ராமமூர்த்தி புன்னகையோடு சொன்னார்.




வெங்கடேசன் திகைப்புடனும், விவரிக்க முடியாத
பிரமிப்போடும் ராமமூர்த்தியைப் பார்த்தார். ராமமூர்த்தி அவரிடம் நிறைந்த மனதுடன் தொடர்ந்து
சொன்னார். “அரங்கன் அருளால் உங்கள் வியாபாரம் இனியும் தொடர்ந்து நன்றாய்
நடக்கட்டும். உங்களிடம் இருக்கும் பணத்தை வைத்து
இதே மாதிரி நல்லதை நிறைய செய்யுங்கள். உங்கள் கணக்கை அரங்கனிடம் எப்போதும்
போல் ஒப்புவியுங்கள். இந்த விஷயம் நம் மூன்று பேருக்குள்ளேயே இருக்கட்டும். வெளியே
யாருக்கும் சொல்ல வேண்டியதில்லை....”







வெங்கடேசனிடம் சொல்லி விட்டுத் தெளிந்த மனத்துடன் பத்து
வருடங்கள் கழித்து அரங்கனை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார் ராமமூர்த்தி.  சொல்ல வார்த்தைகள்
எதுவும் கிடைக்காமல் சிலையாக நின்றிருந்தார் வெங்கடேசன். மௌன சாட்சியாய் அங்கு பெருமழை
பெய்து கொண்டிருக்க, மாறாத புன்னகையுடன் தன் இரு
பக்தர்களையும் பார்த்துக் கொண்டிருந்தான் அரங்கன்.