Monday 22 October 2018

பதா

பண்டிகைகளின் தாத்பர்யம்
**************************************
மத்யமர்ல்ல பண்டிகை சுகமா சுமையான்னு நெறைய அங்கத்தினர்கள் எழுதி தத்தமது பார்வையின் பல்வேறு கோணங்களை பதிஞ்சு ...அதை எல்லோருமே படிச்சு ரசிச்சு ...சுக துக்கங்களை பகிர்ந்தோம்...
பண்டிகையின் ''தாத்பர்யமே'' அதன் தாக்கம் உணர்ந்து அதை வாழ்வியலின் சூத்திரமாய் புரிந்து கடைபிடித்து நம்மை சார்ந்த மற்றும் சாராதவர்களோடு இணைந்த உறவுகளை பேணவே ...என்பது அடிப்படைகளில் ஒன்று ....
ஒரு குடும்பத்திலேயே பல வேறு சூழல்களில் மன வேறுபாடு கருத்து முரண்கள் காரணத்தால் ஒற்றுமையாக கொண்டாடும் கொடுப்பினை இல்லாமல் போகும்....பண்டிகை தினம் பார்த்து பணி சுமையாக வரலாம் ...தொலைவில் இருக்கும் ஆட்களுக்கு விடுமுறை கிடைக்காமல் / பயணிக்க தோதான வாய்ப்பின்மை / டிக்கெட் கிடைக்காமல் போகும் அவலம் ...இன்னும் என்னென்னமோ காரணிகளால் குதூகலம் இழப்பு ...
என்னோட வீட்டில் அப்பா 1975 வரையிலும் மும்பையிலும் 1975-க்குப்பின்னர்1985 வரையில் குவைத்திலும் ....
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜூலை மாதம் புனித ஆசீர்வாதப்பர் ஆலய ஊர்த்திருவிழாவிற்கு வரும் சமயங்களில் மட்டுமே கொண்டாட்டம்...அதுபோக தீபாவளி -திருக்கார்த்திகை-கிறிஸ்துமஸ் - ஈஸ்டர் ன்னு எதுவுமே எங்களோடு அவர் கொண்டாடியதில்லை... ...1985-2013 வரையிலும் ஊரில் இருக்கும் பொன்னான வாய்ப்பு அவருக்கு அமைந்து அதை ஈடு செய்தது கிடைத்த வரம் ...அப்போது ஒரே கொண்டாட்டம் தான் ...அவரோடு சேர்ந்து இருந்த சில ஆண்டுகள் அருமையானவை ...
அப்பாவின் சமையல் ரொம்பவே சூப்பர் ...அவரது சில ஸ்பெஷாலிட்டிகள் பற்றி தனிப்பதிவு போடுவது சிலாக்கியம் ...
அவரது குலக்கோயில் ஆவணி மாதம் (ஆகஸ்ட் செப்டம்பர்) அவர் மட்டும் அவருடைய உடன்பிறப்புக்கள் உறவினர்களோடு போவார்.....எங்க அம்மா கத்தோலிக்கர் ஆகவே எங்களை அனுமதிப்பதில்லை .....
{இப்போது 2016ல் மனைவியோடு போய் அந்த கோயில் தரிசித்து வந்தேன் ) .....
ஸ்ரீராமர் சீதாபிராட்டியார் இலக்குவனார் மூவரும் இலங்கையில் இருந்து திரும்பி வருகையில் ஓய்வெடுத்த இடமென்பது ஐதீகம் ...அவர்களுக்கு பெரிய கோயில் இருக்கிறது......காவல் தெய்வம் முத்துமாடசாமி....
என்னுடைய உறவுகளில் சகோதர சகோதரிகளுக்கு முத்து துரை,முத்துக்குமார் , முத்துகிருஷ்ணன் , முத்து மலர் , முத்து ரமா , முத்து சுந்தரி , முத்துக்கனி ன்னு பெயர்கள் உண்டு ...முத்து சேர்த்தே பெரும்பாலானவர்கள் பெயர் அமையும்...
எங்க குடும்பத்தில் பேதமின்றி இந்து கிறிஸ்தவ பண்டிகைகள் கொண்டாடுவதே வழக்கம் .....நான் விபூதி சந்தனம் குங்குமம் இட மறுப்பதில்லை ....எங்க கிறிஸ்தவ உறவுகள் சிலர் அதை குறை சொல்வதுண்டு ...எனக்கு அந்த சமயங்களில் காது ......கேக்காது ....படையல்களை உண்ணவும் தயக்கம் லேது ...அவைகள் சுவையே தனி ...!!!
குவைத்தில் ஆடிட்டர் எனும் ஹோதாவில் கிளையன்ட் ஆபீஸ் நண்பர்களின் எல்லா மத இன பண்டிகைகளுக்கும் போய் ஜமாய்ச்ச நிகழ்வுகளை அப்பால தனிப்பதிவா போடுவேன் ...ஓகே !!!!
பண்டிகைகள் உறவுகளோடு இணைந்து கலந்து பழகி குதூகல உணர்வோடு புத்தாடைகள் அணிந்து தெய்வம் / ஆண்டவனை தொழுது நன்றி சொல்லி / வேண்டுதல் பல சமர்ப்பித்து ...அருள் பெற்று ....பல்சுவை விருந்து கொண்டாட்டங்கள் சுகித்து ஆனந்தமாய் வாழத்தானே மத்யமர்களே ....!!!!!
எல்லாவற்றுக்குமே பக்கங்கள் இரண்டு ...ஒளியைப்பார்ப்போம் ..ஒளி மயமான வாழ்வை வேண்டுவோம் ...ஓங்கி உயர்ந்து நல் வாழ்வு வாழ்வோம் ....!!!!!
5

No comments:

Post a Comment