Sunday 14 October 2018

கொலு

என்னோட வாழ்க்கையில் பார்த்த முதல் கொலு 1970 ல் .... நாலாம் வகுப்பு படித்தபோது ...
அப்பா வழி உறவினர் வீட்டுக்கு அம்மாவோடு போனேன்.அப்போது நவராத்திரி எல்லாம் ஒண்ணுமே தெரியாது. 
அங்கு எனக்கு தங்கை முறை சின்ன பெண். ஐந்து வயதில்(இப்போ 52) புஸு புஸுன்னு / குண்டு குண்டாய் உடம்பும் பெரிய கரிய விழிகள்.....அவங்க வீட்டில் கொலு இருந்தது. அதில் இருந்த ஒரு போலீஸ்காரர் பொம்மை எனக்கு ரொம்பவே பிடிச்சுப் போச்சு. அது கெட்டி பிளாஸ்டிக் பொம்மையே. அவங்க அப்பா பம்பாய் நகரில் இருந்து கொணர்ந்தது. அதை உடனடியாய் திருடும் எண்ணமே என் மனதில் வந்தது . அதுவோ ஓரடி உயரம். எப்படி அய்யா சாமி ?....
ஏதோ யோசித்து ....சாகசம் பண்ணி ....அந்த சின்னப் பொண்ணையே ‘நைஸ்’ பண்ணிட்டேன் . பொம்மையை ....லவட்டி ...’போலீஸ்காரரை’யே திருடிய முதல் அனுபவம்...
அப்புறம் பனையேறும் வம்சத்தில் பிறந்த என்னோட குடும்பத்தில் சாயம் தோய்த்த பனை ஓலைகளிலேயே கை வண்ணம் காட்டும் எங்க அம்மம்மா , பெரிய அக்காள் மற்றும் சிலர் செய்யும் விதவிதமான கண்ணையும் கருத்தையும் கவரும் பொம்மைகள் , கிலுகிலுப்பைகள் இன்னோரென்ன ..அதெல்லாம் கொள்ளையாய் இருக்கும் ...சிலர் கொலுவிலும் அவைகளை வைத்து ..ரசிப்பதே அலாதி சுகம்...இப்போ பனைத் தொழிலும் இல்லவே இல்லீங்க ...பெண்கள் ..ம் ஹூம் ரொம்பவே மாறிப்போய் ...கலிகாலம் ..மெய்யாலுமே ...
--------------------------------------------------------------------------
பள்ளி / பதின்ம வயதில் பார்த்த சில கொலுக்கள் - நண்பர்களின் வீடுகளில்....ஆனா உண்மைய உரக்கச் சொன்னா ...கொலுவை விட கொஞ்சும் குமரிகளையே ரசித்ததே....நிஜம்...பொய் நெஞ்சை சுடு’மாமே’...
------------------------------------------------------------------------------
ஒரிஜினல் நிஜமான சாஸ்திர வடிவ கொலுவை திருச்சி - தில்லை நகரில் தானுங்க முத முதலில் பாத்தேன் ..
தூய வளனார் கல்லூரியில் படித்த காலம் 1978-79 ல் சினிமா விநியோகஸ்தர் ஒருத்தர் அகஸ்மாத்தாய் பழக்கம்...அவரோடு சில வீடுகளுக்கு போவதுண்டு...(அவர் ராமசாமி அய்யர் பற்றி ஒரு தனிப்பதிவு போட்றலாங்க)...
அங்கு ஒரு அய்யங்கார் மாமி என்னா கொள்ளை அழகா ‘கொலு’ ..அம்மாடி வர்ணிப்பிற்கு வார்த்தைகளை தேடுவதே மகா கஷ்டம்ங்க ...கண்ணையும் கருத்தையும் ஒரு சேரக் காந்தம் போல ஈர்க்கும் ...
என்ன 'கொடுமை'..ன்னா அங்கேயிருந்து அசையாம / நகராம ..அதையே கண் கொட்டாம பார்த்துக்கொண்டே இருக்கலாம்ன்னு ஆகிப்போவது ... ...அவங்க செய் நேர்த்தி / கை நேர்த்தி ...ஆண்டவனே அவங்க கையில் 'வாசம்'ன்னு இருந்தா மட்டுமே அப்படி கொலு வைக்க முடியும்ங்க...நான் நம்பறேன் ...
*********************************************************************
நான் சில விஷயங்களை ரொம்பவே நம்பி ஏற்றுக் கொள்ளும் குழந்தை சுபாவம் கொண்ட கிழவன் !!!
*********************************************************************
...அதாவது சிலரோட சமையல் , பாத்திரங்கள் கழுவி அடுக்கும் பாந்தம் , வீட்டை அழகு படுத்தி அம்சமா வைப்பது, துணிகளை தோய்த்தால் அப்படி ஒரு நேர்த்தி, காயப்போட்டு மடித்தால் ...அய்யயோ...என்னத்த சொல்ல ....இதெல்லாம் ஒருத்தருக்கு ...வரம் இருந்தால் மட்டுமே வாய்க்கும்.....
---------------------------------------------------------------------------------
எல்லோருக்கும் ''சொம்மா'' ல்லாம் ...கிடைக்காதுங்க நான் அத முழுசா நம்பும் சாதி .....பலரும் பல பெருமையும் பற்றி ...சொல்வாங்க .....ஆனா செயலில் வாய்ப்பது...கஷ்டம் / மகா இம்சை ... சுலபமா ...நடக்காதுங்க !!!
------------------------------------------------------------------------------
{{{இப்போ என்னோட எழுத்து கூட ...அப்பிடியான வரம் தானே மத்யமர்ஸ்}}}
-------------------------------------------------------------------------------
எங்க ஊட்ல 1997-2003 காலகட்டம் பொம்மைகள் நிறைய வாங்கின நேரம் ...என்னோட சின்னப்பொண்ணு ..ஒரு பையன் ரெண்டு பொண்ணுங்களுக்கு பொறவு ஏழு ஆண்டுகள் கழித்து கிடைத்த பொக்கிஷம் ....
ஒரே டோரா கிறுக்கு அப்போ ...டோரா பொம்மைகள் ஸ்டிக்கர்ஸ் கலெக்ஷன் வைத்தே வேடிக்கையாய் ....கொலு வைத்தாள்...அதையும் ரசித்தேன்..அது ஒரு அல்ட்ரா மாடர்ன் கொலு ... 
-----------------------------------------------------------------------------
படம் :-
நம்ம ''குரு''பகவான் ...எனக்கு ரொம்பவே ....பிடித்தவர்..இப்போ ''புதன்'' திசை நடக்குது ...புகழ் உச்சிக்கு போகுமாம் ..ததாஸ்து !!!!!(அப்படியே ஆகுக!!!!!)
நெட்டில் சுட்ட கொலு
பனையோலை பரவசங்கள் .....
என் கடைக்குட்டி மகள் இரஃபெல் -அ- ஜெஸ்வின் போன வருடம் ஸ்ரீ கார்த்திகை தீப ஒளி திருநாள் அன்று எங்கள் வீட்டில் ...

No comments:

Post a Comment