Monday 16 April 2018

https://www.facebook.com/pkanniyappan/videos/1826052967439785/


Sunday 15 April 2018

யானையும் சிலந்தியும்

சிவ கணங்களில் புஷ்பதத்தன், மாலியவான் என்று இருவர் இருந்தனர். அவர்களுக்குள் தானே சிவத் தொண்டில் சிறந்தவர் என்ற எண்ணம் இருந்தது. ஒரு நாள் நீண்ட விவாதத்தின் முடிவில் ஒருவருக்கு ஒருவர் சாபம் கொடுத்துக் கொண்டனர். புஷ்பதத்தன் மாலியவானை சிலந்தியாகப் பிறக்க சபிக்கிறான். அதேபோல், மாலியவான், புஷ்பதத்தனை யானையாக சபிக்கிறான். காலக் கிரமத்தில் இவ்விருவரும் சோழ வளநாட்டில், காவிரியாற்றின் கரையில் திருவானைக்காவில் என்னும் இடத்தில் சிலந்தியாகவும், யானையாகவும் பிறக்கின்றனர். திருவானைக்காவில் காவிரிக்கரையில் ஒர் வெள்ளை நாவல் மரத்தின் கீழே ஒரு சிவலிங்கம் இருந்தது.
யானையாகப் பிறந்த புஷ்பதத்தன் தனது முற்பிறவின் பயனாக அந்த சிவலிங்கத்திற்கு தனது துதிக்கையால் நீரும், மலரும் கொணர்ந்து பூஜித்தான். அதே பகுதியில் சிலந்தியாகப் பிறந்த மாலியவான், தனது முற்பிறப்பில் சிவனுக்குத் தொண்டு புரிந்த பூர்வபுண்யத்தால், வெண்மையான நாவல் மரத்தடியில் இருந்த சிவலிங்கத்தின் மீது சருகுகள் விழாமலும், சூரிய வெப்பம் தாக்காமலும் இருக்க தனது உடலில் உருவாகும் பிசினைக் கொண்டு ஒர் வலையினை ஏற்படுத்தியது.
சிவபெருமானை பூஜிக்க வரும் யானை, ஈசன் மேல் இருக்கும் சிலந்தி வலையினைக் கண்டு வருந்தி, அவற்றை நீக்கியபின் தனது வழிபாட்டினைச் செய்துவிட்டுச் செல்வது தினசரி வழக்கமாகக் கொண்டது. இவ்வாறு சிலந்தி வலை பின்னுவதும், மறுநாள் யானை அதனை அகற்றுவதுமாக இருந்ததை உணர்ந்த சிலந்தி, ஒருநாள் மறைந்திருந்து கவனித்து, தான் பின்னும் வலையைச் சிதைப்பது யானையே என்று உணர்ந்து அதனைக் கொல்ல முடிவு செய்கிறது. மறுநாள் சிவனைப் பூஜிக்க வந்த யானையின் துதிக்கையில் புகுந்து கடிக்கிறது சிலந்தி. வலி தாங்க முடியாத யானை துதிக்கையை தரையில் அடித்து சிலந்தியைக் கொல்கிறது. அப்போது சிலந்தி விஷம் உடம்பில் ஏறியதால் யானையும் உயிர் துறக்கிறது. சிவனுக்கு தொண்டு செய்த யானை சிவலோகம் அடைகிறது. யானைக்குத் துன்பம் ஏற்படுத்திய சிலந்தி மீண்டும் பிறவி எடுக்கிறது. மீண்டும் பிறக்க வேண்டிவந்தாலும், ஈசனுக்கு வலை பின்னிய காரணத்தால் அரச வாழ்வு கிடைக்கிறது.
பல வருடங்கள் குழந்தைச் செல்வம் இல்லாதிருந்த சுபதேவர்-கமலவதி என்ற சோழ அரச தம்பதிக்கு மகனாகப் பிறக்கிறார் சிலந்தியாக இருந்த மாலியவான். குழந்தை பிறக்கும் முன்பு ஜோதிஷ விற்பனர்கள் குழந்தை பிறப்பது குறிப்பிட்ட காலமாக இருக்குமாயின் குழந்தை பூவுலகம் முழுவதும் ஆளும் சிறப்பு மட்டுமின்றி, ஈசன் அருள் பெற்றதாகவும் இருக்கும் என்று கூறுகின்றனர். இதனை அறிந்த அரசி, குழந்தைப் பிறப்பை குறிப்பிட்ட நேரத்தில் நடக்க வேண்டித் தன்னைத் தானே தலைகீழாகக் கட்டித் தொங்கவிடச் செய்கிறார். இவ்வாறு செய்து, குறிப்பிட்ட நேரம் வருகையில் கட்டுக்கள் அவிழ்க்கப் பெற்று வந்து குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். தலைகீழாகத் தொங்கிய காரணத்தால் குழந்தையின் கண்கள் சிவந்து இருந்திருக்கிறது. அதைக் கண்ட தாய், 'என் கோவே! செங்கண்ணா' என்று அழைத்து மகிழ்ந்த சிறிது நேரத்திலேயே தன்னுயிரை இழக்கிறாள் அரசி. அறிதாகப் பெற்ற மகனை நன்கு வளர்த்து, போர்க்கலை மற்றும் வேதாகமங்களிலும் மேம்பட்டவனாக்கி, தக்க பருவத்தில் அவனுக்கு முடிசூட்டுகிறார் சுபதேவர்.
கோச்செங்கட் சோழர் என்ற பெயருடன், இறைவனருளால் தனது முற்பிறப்புக்களை அறிந்த அரசன், ஈசன் மீது பக்தியில் திளைத்து திருவானைக்காவில் வெண்ணாவலுடன் கூடிய ஈசனுக்கு கோவில் எழுப்பினாராம். தனது பூர்வ ஜென்மத்தில், யானையான புஷ்பதந்தனால் தான் ஈசனுக்கு ஏற்படுத்திய வலைக்கு ஏற்பட்ட அழிவாலேயே கோச்செங்கணான் தான் கட்டிய கோவில்களை மாடக் கோவில்களாக, அதாவது யானை நுழையமுடியாதபடி பல படிகளுடனும், குறுகிய வாயிலுடனும் அமைத்ததாகக் கூறுகின்றனர். கோச்செங்கணனார் சுமார் 70 மாடக் கோவில்கள் கட்டியதாகச் சொல்கின்றனர் ஆய்வாளர்கள். தில்லையம்பலத்தானுக்குப் பல விசேஷ உற்சவங்கள் செய்வித்ததாகவும், கோவிலில் மறையோவோர்க்கு வீடுகள் கட்டிக் கொடுத்ததாகவும் தெரிகிறது. இது பற்றி சேக்கிழார் பின்வருமாறு சிறப்பித்துக் கூறுகிறார்.
மந்திரிகள் தமை ஏவி வள்ளல் கொடை அனபாயன்
முந்தை வரும் குல முதலோராய முதல் செங்கணார்
அந்தமில் சீர்ச் சோனாட்டில் அகனாடு தொறும் அணியார்
சந்திர சேகரன் அமரும் தானங்கள் பல சமைத்தார்
அக் கோயில் தொறும் சிவனுக்கு அமுதுபடி முதலான
மிக்க பெரும் செல்வங்கள் விருப்பினால் மிக அமைத்துத்
திக்கு அனைத்தும் தனிச் செங்கோல் முறை நிறுத்தித் தேர் வேந்தர்
முக்கண் முதல் நடம் ஆடும் முதல் தில்லை முன்னினார்
திரு ஆர்ந்த செம்பொன்னின் அம்பலத்தே நடம் செய்யும்
பெருமானை அடிவணங்கி பேர் அன்பு தலை சிறப்ப
உருகா நின்று உளம் களிப்பத் தொழுது ஏத்தி உறையும் நாள்
வருவாய்மை மறையவர்க்கு மாளிகைகள் பல சமைத்தார்
தேவர் பிரான் திருத்தொண்டில் கோச் செங்கட் செம்பியர் கோன்
பூவலயம் பொது நீக்கி ஆண்டு அருளிப் புவனியின் மேல்
ஏவிய நல்தொண்டு புரிந்து இமையவர்கள் அடி போற்ற
மேவினார் திருத்தில்லை வேந்தர் திருவடி நிழல் கீழ்
திருஞான சம்பந்தர் தமது திருவானைக்கா பதிகங்களிலும் இந்த கோச்செங்கட் சோழரைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். அவை பின்வருமாறு:
செங்கட் பெயர்கொண் டவன்செம் பியர்கோன்
அங்கட் கருணை பெரிதா யவனே
வெங்கண் விடையா யெம்வெண்நா வலுளாய்
அங்கத் தயர்வா யினள்ஆ யிழையே.
மண்ணது வுண்டரி மலரோன்காணா
வெண்ணாவல் விரும்பும யேந்திரருங்
கண்ணது வோங்கிய கயிலையாரும்
அண்ணல்ஆ ரூராதி யானைக்காவே.

ரைட் சகோதரர்கள்

ரைட் சகோதரர்கள்
வில்பர் ரைட்--- ஏப்ரல் 16, 1867 பிறந்த தினம்
ஓர்வில் ரைட், வில்பர் ரைட் இருவரும் ரைட் சகோதரர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
ஆர்வில் ரைட்---ஆகஸ்ட் 19, 1871 – ஜனவரி 30, 1948
வில்பர் ரைட்--- ஏப்ரல் 16, 1867 – மே 30 1912
** விமானத்தைக் கண்டறிந்த முன்னோடிகள்.
இவ்விரு சகோதரரும் இணைந்தே சாதனை புரிந்ததால் இருவரையும் இணைத்தே சொல்லப்படுகிறது.
வில்பர் ரைட் 1867 ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி இண்டியானவிலுள்ள மெல்வில் பிறந்தார்.ஓர்வில் ரைட் 1871 ஆம் ஆண்டு ஆகஸ்டு 19ஆம் தேதி ஓஹியோவிலுள்ள டேட்டனில் பிறந்தார்.இவர்களது தந்தை மில்டன் ரைட் ஒரு பாதிரியார். குடும்பம் ஏழ்மையான குடும்பம்தான் அதனால் உயர்நிலைப் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்க முடியவில்லை ரைட் சகோதரர்களால் ஆனால் இருவருக்குமே அறிவுத்திறனும், ஆற்றலும் நிறையவே இருந்தது.இருவருக்கும் இவர்களின் தந்தை பறக்கும் விளையாட்டுப் பொம்மை ஒன்றை பரிசாகத் தந்தார்.
ரைட் சகோதரர்கள் இருவருக்குமே பறவைகள் பறக்கும் அழகைப் பார்த்து வியந்தனர். பறவைகள் பறக்கும்போது அதன் உடல் அமைப்பு, வால் மற்றும் றெக்கைகள் எப்படி செயல்படுகின்றன என்றும், காற்றின் போக்கு பறவைகள் தடங்கல் இன்றிப் பறக்க எப்படி உதவுகிறது என்றும் ஆராய்ந்தனர். அதே நேரத்தில் பலவிதமான பட்டங்களை செய்து பறக்க விட்டு மகிழ்தனர் .இவர்கள் இருவரும் அச்சு நிறுவனத்தை தொடங்கி செய்தித்தாள்கள் அச்சிட்டனர் ஆனால் அது நொடித்துப்போனது.பின்னர் இருவரும் சைக்கிள் கடை திறந்தனர்.1896-ல் மிகவும் பாதுகாப்பான சைக்கிள்களை உற்பத்தியும் செய்தனர். அங்கு சைக்கிள் விற்றும், பழுது பார்த்தும், உற்பத்தி செய்தும் வந்தனர். வானப் பயன ஆய்வுக்குத் தேவையான பணம் கிடைத்தது.இவர்கள் ஆட்டோ லிலியந்தால்,அக்டேங் கன்யூட், சாமுவேல் பி. வாங்லி ஆகியோர் வானப் பயணம் பற்றி எழுதிய நூல்களை ஆர்வமுடன் படித்தனர். ஒட்டோ லிலியந்தால் தான் தயாரித்த கிளைடர் என்ற கருவியின் மூலம் இயந்திரம் எதுவுமின்றி காற்றின் சக்தியினால் ஆகாயத்தில் பறந்ததைப்பற்றி ரைட் சகோதரர்கள் கேள்விப்பட்டனர்.
பறக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை இவர்களுக்கு வளர்ந்தது.இதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள முற்பட்டபோது ஆட்டோ லிலியந்தால் சோதனை முயற்சியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். Smithsonian Institution என்ற அமைப்பின் தலைவருக்கு கடிதம் எழுதினர் இருவரும்.ரைட் சகோதரர்களின் ஆர்வத்தை உணர்ந்த கழகத்தின் தலைவர் Samuel P. Langley ஆகாயத்தில் பறக்க அதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைப் பற்றியும், வெற்றி தோல்விகளைப் பற்றியும், முன்னேற்றம் பற்றியும் எல்லாத் தகவல்களையும் இவர்களுக்கு அனுப்பி வைத்தார்.விமானத்தைப் பற்றி பலரின் கண்டுபிடிப்பை அறிந்து கொண்டனர் இருவரும்.தங்களின் புதிய முயற்சிகளில் இறங்கினர்.
ரைட் சகோதரர்கள் தங்கள் முதல் கிளைடரை 1900 ஆம் ஆண்டில் உருவாக்கினர் அதனை எங்கு சோதித்துப் பார்க்கலாம் என்று சிந்தித்தபோது பருவநிலை ஆராய்ட்சி நிலையத்திற்கு கடிதம் எழுதினர். வட கேரனொய்வில் உள்ள கிட்டிகாக் என்ற இடம் உகந்தது என்று பதில் வந்தது. அங்கு சென்று முயன்று பார்த்தனர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அப்போதும் இவர்கள் மனம் தளரவில்லை. நான்கு ஆண்டுகள் தங்கள் வடிவமைப்பில் பல்வேறு மாற்றங்களை செய்வதும் சோதிப்பதுமாக இருந்தனர் ரைட்சகோதரர்கள்.ஒவ்வொரு முறையும் இவர்களால் முன்னேற்றத்தை உணர முடிந்தது. இதுவரை தாங்கள் கண்டுபிடித்தவற்றைக் குறிப்புகளாக எழுதினார். அவற்றில் இருந்து பெர்னோலியின் விதியின்படி காற்றானது விமானத்தை எப்படி பறக்க வைக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. விமானத்தில் மேலும் செய்ய வேண்டிய சில மாறுதல்களும் செய்தனர்.
1903 ஆம் ஆண்டு தாங்கள் தயாரித்த ஒரு கிளைடரில் தாங்களே உருவாக்கிய ஒரு மோட்டார் இயந்திரத்தைப் பொருத்தினர். அதில் விமானி குப்புற படுத்துக்கொண்டே தன் கை, கால்களால் இயக்கி அதனை பறக்கச் செய்ய வேண்டும்.1903 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி முதல் விமானம் பறக்க தயாராக நின்றது.அந்த விமானத்திற்கு ஃப்ளையர் என்று அவர்கள் பெயர் சூட்டினர்.
விமானத்தில் ஏறி குப்புற படுத்துக்கொண்டே விமானத்தைக் கிளப்ப முயன்றார் வில்பர். ஆனால் ஏதோ இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் நகரவே இல்லை.மீண்டும் சில மாற்றங்களைச் செய்தனர்.டிசம்பர் 17ஆம் தேதி மீண்டும் முயன்றனர்.விமானத்தில் வயிறுக் குப்புற படுத்துக்கொண்டு அமெரிக்க நேரப்படி காலை 10:35 க்கு விசையை இழுத்தார் ஆர்வில்.அந்த இயந்திர விமானம் ஆடி குலுங்கி, கனைத்து புகையைக் கக்கியபடியே மெதுவாக மேலே எழத்தொடங்கியது. அந்தரத்தில் அப்படியும் இப்படியுமாக ஆடி சரியாக 12 வினாடிகள் பறந்து 37 மீட்டருக்கு அப்பால் போய் பத்திரமாக தரையிறங்கியது.
அதேதினத்தில் மேலும் மூன்று முறை ரைட் சகோதரர்கள் மாறி மாறி பறந்து சோதனைகள் செய்தனர். நான்காவது முறை வில்பர் 57 வினாடிகள் அந்தரத்தில் பறந்தார். அதற்கு அடுத்த ஆண்டே ரைட் சகோதரர்கள் நூறு அடி உயரம்வரை சென்று பன்னிரெண்டு மைல்கள் பறந்து சாதனை படைத்தனர். தொடர்ந்து பல முன்னேற்றங்களை செய்து 1908 ஆம் ஆண்டு 57 நிமிடங்கள் ஆகாயத்தில் பறந்து சாதனை படைத்தானர்.
இவர்களுக்கு முன்னால் விமானத்தை அமைக்க முயன்றவர்கள் பலர் அவற்றை நிலத்திலிருந்து கிளப்புவது பற்றிய கவனம் செலுத்தி வந்தனர்.ரைட் சகோதரர்களோ வானத்தில் எழுந்த பிறகு விமானத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதே பெரும் பிரச்சினை என்பதை உணர்ந்தனர். ஆகவே இவர்கள், பறக்கும்போது விமானத்தை உறுதிநிலையில் வைத்துக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளை வகுப்பதில் தம் காலத்தையும் ஆற்றலையும் செலவழித்தனர். விமானத்திற்கு ஒரு மூன்று அச்சுக் கட்டுப் பாட்டை வகுப்பதில் இவர்கள் வெற்றி கண்டனர். இதனால் இவர்கள் இதை முற்றிலும் இயக்குவதற்கு வழியேற்பட்டது.
விமானத்தின் சிறகுகளை அமைப்பதிலும் ரைட் சகோதரர்கள் சாதனை புரிந்தனர். விமானத்தின் சிறகுகளைப்பற்றி இவர்கள் விரைவில் உணர்ந்தனர்.இவர்கள் தாமே காற்றுப்புகு வழியை அமைத்தனர். அதில் இரு நூறுக்கு மேற்பட்ட பல்வேறு வடிவமுள்ள சிறகுப் பரப்புகளைப் பரிசோதித்துப் பார்த்தனர். இச்சோதனைகளின் அடிப்படையில், சிறகின் வடிவத்தைக் கொண்டு ஒரு அட்டவணைகளை இவர்கள் தாமே அமைத்தனர்.இதை கொண்டு இவர்கள் தம் விமானத்தின் சிறகுகளை அமைத்தனர்.
ரைட் சகோதரர்கள் முதலில் பறந்ததை ஐவர் நேரில் கண்டனர். ஒருசில செய்தித்தாள்களே குறைவாக இதைப் பற்றி அறிவித்தன. ஓஹியோவிலுள்ள இவர்களுடைய சொந்த ஊரில் உள்ள டேட்டன் செய்தித்தாளும் இதைப் பற்றி ஒன்றுமே அறிவிக்கவில்லை. மனிதன் உண்மையிலேயே விமானத்தில் பறந்து விட்டான் என்பதை உலகம் முழுவதும் அறிவதற்கு ஏறக்குறைய 5 ஆண்டுகளாயின.
ரைட் சகோதரர்கள் கிட்டி ஹாக்கில் பறந்த பிறகு டேட்டனுக்குத் திரும்பி, அங்கு மற்றொரு விமானத்தை அமைத்தனர். அதன் பெயர் ஃப்ளையர்1. அந்த விமானத்தில் அவர்கள் 1904 இல் 105 முறை பறந்தனர். ஆயினும் அம் முயற்சிகள் பலரின் கவனத்தைக் கவரவில்லை. 1905 இல் அவர்கள் மிகச்சிறந்த, நடைமுறைக்குப் பயன்படும் ஃப்ளையர் 11 எனும் விமானத்தைச் செய்தனர். இவர்கள் டேட்டனில் அருகில் பலமுறை பறந்த போதிலும் வானவூர்தி கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாகப் பலர் நம்பவில்லை.
1908 இல் ரைட் சகோதரர்கள் மக்களின் ஐயத்தைத் தீர்த்தனர். வில்பர் ரைட் தமது விமானம் ஒன்றை பாரிசுக்கு கொண்டு போய், அது பறப்பதைப் பொது மக்களுக்கு விளக்கிக் காட்டினார்.,விமானத்தை விற்பதற்கு அங்கு ஒரு நிறுவனத்தையும் நிறுவினார். இதற்கிடையில், ஆர்வில் ரைட் அமெரிக்காவில் இது போன்ற விளக்கக் காட்சிகளை நடத்தினார்.
செப்டம்பர் 17, 1908 இல் ஆர்வில் ரைட் பறந்த விமானம் கீழே விழுந்தது. இருவருக்கும் ஏற்பட்ட ஒரே இடர் நிகழ்ச்சியாகும். அப்போது ஒரு பயணி இறந்தார். ஆர்விலுக்கு ஒரு காலும், ஒரு விலா எலும்பும் முறிந்தன. ஆயினும், ஆர்வில் ரைட் குணமடைந்தார். இவரது வெற்றியைக் கண்ட அமெரிக்க அரசாங்கம், அமெரிக்க போர்த் துறைக்கு விமானங்களை வழங்குமாறு இவருடன் ஒப்பந்தம் செய்தது. 1909இல் கூட்டாட்சி அரசின் வரவு செலவுத் திட்டத்தில் 30,000 டாலர் வானப் படைக்கென ஒதுக்கப் பெற்றது.
இவர்களின் வெற்றி நிலைகள்
**ரைட் சகோதரர்கள் எப்போதும் இணைந்தே ஒற்றுமையுடன் உழைத்தனர்.
**விமானம் ஒன்றை அமைப்பதற்கு முன் எவ்வாறு பறப்பது என்பதைக் கற்றுக் கொள்ள இவர்கள் முனைந்தர்.
**ரைட் சகோதரர்கள் இயந்திரமில்லாத விமானங்களைப் பயன்படுத்திப் பறக்கக் கற்றுக் கொண்டனர் .
** 1899 இல் இவர்கள் காற்றாடிகளையும் இயந்திரமில்லாத விமானங்களையும் பயன் படுத்தத் தொடங்கினர்.
**அடுத்த ஆண்டு இவர்கள் வட கலிஃபோர்னியாவிலுள்ள கிட்டி ஹாக் எனுமிடத்திற்குத் தமது ஓர் ஆள் அமரக் கூடிய இயந்திரமில்லாத விமானத்தைப் பரிசோதனைக்காகக் கொண்டு வந்தனர். அது முழு மன நிறைவளிக்கவில்லை.
**இவர்கள் மூன்றாவது விமானத்தையும் செய்து பரிசோதனை நடத்தினர். மூன்றாவது விமானத்தில் மிக முக்கியமான புதிய மாற்றங்களை செய்யப்பட்டிருந்தன.
இவர்கள் மூன்றாம் விமானத்தில் இவர்கள் ஏறக்குறைய ஆயிரம் முறை பறந்தனர். இயந்திரமுள்ள விமானத்தை அமைக்கத் தொடங்கு முன் இவர்கள் ஏற்கனவே இயந்திரமில்லாத விமானத்தை ஓட்டிய சிறந்த அனுபவமுள்ள விமானிகளாக இருந்தனர்.
****வில்பர் ரைட் 1912 ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் தேதி தமது 45ஆம் அகவையில் மறைந்தார்.
** **ஆர்வில் ரைட் 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி தமது 76ஆம் அகவையில் மறைந்தார்.
ஜெயகாந்தனின் சபை !
-----------------------------------
BY பிரபஞ்சன்
------------------------------------------------------------------------------------------------------------------
எழுத்தாளர் சுப்ரமணிய ராஜு தொலைபேசியில் கூப்பிட்டு, 'இன்னிக்கு சாயங்காலம் சபாவுக்குப் போறோம், வாங்க’ என்றார்.
'சபா?’
'ஜெயகாந்தனின் ஆழ்வார்பேட்டை சபைக்குத்தான்.’ அப்போதெல்லாம் (1979...களில்) ஒவ்வொரு நாள் மாலையிலும் ராஜுவை அவருடைய (டி.டி.கே) கம்பெனியில் சந்திப்பது, பிறகு மாரீஸ் ஹோட்டலில் மது  அருந்துவது மற்றும் உண்பது வழக்கம்.
தமிழ் இலக்கியம் பற்றி உரையாடுவது, படித்ததைப் பகிர்ந்துகொள்வது, எழுதியதைப் படித்து விமர்சிப்பது, விமர்சனத்தை எதிர்கொள்வது என்கிற இலக்கியப் பயிற்சியைக் கடுமையாக நான் மேற்கொண்டிருந்த காலம் அது. ஜெயகாந்தன் எழுதியவற்றில் அநேகமாக அனைத்தையும் நான் படித்திருந்தேன். அவர் மேல் எனக்கு பெரும் மரியாதை இருந்தது. அவரை நேரில் சந்திக்கப்போகிறோம் என்பதில் எனக்குக் கிளர்ச்சி எதுவும் இல்லை; ஆனால் மகிழ்ச்சி ஏற்பட்டது. என் கல்லூரிப் பருவத்திலேயே (1964-1970) தமிழின் பெரிய ஆளுமைகளான
தி.ஜானகிராமன், எம்.வி.வெங்கட்ராமன், கரிச்சான் குஞ்சு, கிருத்திகா எனப் பலரும் எனக்குப் பரிச்சயமாகி இருந்தார்கள். இன்னும் சிலரும்கூட.

எழுதுபவர்களை புத்தகத்தில் மட்டுமே சந்திப்பது நல்லது என்பதை என் அனுபவம் எனக்குக் கற்றுத்தந்திருந்தது.

தேவர்களைச் சந்திக்கப்போகிறோம் என நினைத்துக்ªகாண்டு போனால், அகந்தைப் பேய்களும் ஆணவப் பிசாசுகளும் முன்வந்து வெட்கமற்று ஆடுவதைக் கண்டு நான் சலித்துப்போயிருக்கிறேன்.

ஜெயகாந்தன், அப்படியான உணர்வை எனக்கு ஒருபோதும் ஏற்படுத்தியது இல்லை.

சபை என்பது, ஒரு வீட்டு மாடி. ஒரு பெரிய மேசை. அதைச் சுற்றி ஆறு ஏழு நாற்காலிகள். வாசலைப் பார்த்து, நடுவாந்திரமாக ஒரு நாற்காலி. அது ஜே.கே-யின் ஆசனம். எனக்கும் ராஜுவுக்கும் நாற்காலிகள் தரப்பட்டன. ராஜு, விலை உயர்ந்த விஸ்கி பாட்டில் ஒன்றை ஜே.கே. முன் குரு காணிக்கையாக வைத்தார். அதற்கு முன்பே சபை களைகட்டி இருந்தது. மூன்று நான்கு பேர்களின் முன் இருந்த டம்ளர்கள் காலியாகி இருந்தன.

கஞ்சா நிரம்பிய சிலும்பி வலம்வந்துகொண்டிருந்தது. ஜே.கே. சிலும்பியைச் சுவாசக் கேந்திரம் முற்றும் நிறைக்கப் புகையை இழுத்து 'தம்’ கட்டிக் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவிட்டபடி சிலும்பியை என்னிடம் நீட்டினார். நான் நன்றி கூறி மறுத்துவிட்டேன். என்னவோ... கஞ்சா பழக்கம் என்னைத் தொற்றவில்லை.

'என்னப்பா இது?’ என தனக்கு முன்னால் ராஜுவால் வைக்கப்பட்ட தட்சணையைப் பார்த்துக் கேட்டார். விஸ்கியின் தரம், உலகப் புகழ், அதன் மேன்மை முதலானவற்றை விரிவாக எடுத்து விளம்பினார் ராஜு. எல்லாவற்றையும், கஞ்சாவால் சிவந்த கண்களோடு அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த ஜே.கே., 'இருக்கட்டும். இருந்தாலும் நம்ம கடா மார்க் சாராயத்துக்கு இது இணையாகுமோ?’ எனத் தீர்ப்பு வழங்கினார்.

உடனடியாக ஒருவர், பையை எடுத்துக்கொண்டு சாராயம் வாங்கப் புறப்பட்டார். இதுபோன்ற பணிகளுக்குத் தம்மை ஒப்புக்கொடுத்த சிலர் சபை நிழலில் இருந்தார்கள். கஞ்சாவைத் தேய்த்துத் தேய்த்து உள்ளங்கையில் குழிவிழுந்த மனிதர் ஒருவர் அங்கே இருந்தார்.

இவர்கள் எல்லாம் ஜே.கே-விடம் இருந்து என்ன பெற்றார்கள்?

ஜே.கே. இந்தச் சபைக்கு என சில ஒழுக்கங்களை நிர்மாணம் செய்திருந்தார். சபை மேசையில் வைக்கப்பட்ட எந்தப் பொருளையும் நாற்காலிக்காரர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். சாராயம் முதல் நொறுக்குத் தீனிகள், விலை உயர்ந்த விஸ்கி எதுவானாலும், விரும்புபவர்கள் சிகரெட் புகைக்கலாம். கஞ்சாவையும் பகிர்ந்துகொள்ளலாம்; குடிக்கலாம். அவரவர் பாத்திரத்தில் மதுவை வேண்டிய அளவு நிரப்பிக்கொள்ள அனைவருக்கும் உரிமை உண்டு.
ராஜு கொண்டுவந்திருந்த விஸ்கியை மேசையைச் சுற்றி இருந்த நண்பர்கள் அனைவருக்கும் ஜே.கே-வே டம்ளர்களில் ஊற்றினார். ராஜு மனம் பதைத்தது. குருவுக்கு மட்டுமே என வாங்கி வந்த இத்தனை விலை உயர்ந்த மதுவை மேசைக்குத் தருகிறாரே! இது ஜே.கே. வழக்கம். எந்த அன்பளிப்பையும் தனக்கு என அவர் வீட்டுக்கு எடுத்துச் செல்வது இல்லை.
சபை என்பது கேளிக்கைக்கான இடம் என்றே பலரும் நினைத்தார்கள். போதையை நோக்கமாகக்கொண்டவர்கள் அங்கே யாரும் இல்லை. எல்லோருமே, அவரவர் அளவில் படைப்பாளராகவே இருந்தார்கள். உண்மையில், அந்தக் காலங்களில் ஜெயகாந்தன் நிறைய எழுதிக்கொண்டிருந்தார். அந்தக் கதைகளின் மூலம் அவர் நிர்வாகம் செய்ய விரும்பிய கருத்துக்கள், தத்துவங்கள் ஆகியவற்றைச் சொல்லி, விவாதித்து, தனக்குத்தானே ஒரு தெளிவை ஏற்படுத்திக்கொள்ளவே அவர் சபையை ஓர் இடமாகப் பயன்படுத்தினார். பகல் முழுக்க எழுத்து, மாலையில் எழுதப்போகிறவற்றின் உள்ளீடுகள் பற்றிய சிந்தனை என்பதாக அவர் வாழ்க்கை அன்று இருந்தது.
சிந்தனைகளின் ஊடாக அவர் மது அருந்தினார்... குடித்தார் என நான் சொல்வது இல்லை. அவர் சிந்தனையின் தாக்கம், உரையாடல் இல்லை. பேசுவது, பேசுவதைக் கேட்பது என்பது அவர் வழக்கம் இல்லை. அவர் மட்டுமே பேசுவதுதான் வழக்கம். சபைக்கு வருபவர்களை பார்வையாளர்களாக மாற்றி பிரசங்கம்புரிவது அவர் பாணி. 1975-க்குப் பிறகு அவர் எழுதாமல்போனதற்கு, எதிர்ச் சிந்தனைகளுக்கு இடம்கொடுக்க மறுத்த அவரது போக்கும், ஒரு துரதிர்ஷ்டமான காரணம்.
சபையில் ஒருமுறை அவர் சொன்னார்... 'விமர்சனம் என்பது என்ன தெரியுமா? ஒருவருடைய எழுத்தை விமர்சையாக எடுத்து உரைப்பது. அதைத்தான் நான் விமர்சனம் என ஒப்புக்கொள்வேன்.’
இலக்கியம், சினிமா எனப் பல விஷயங்கள் பற்றியும் கூர்மையான விமர்சனம் செய்த அவர், தன் மேல் வைக்கப்பட்ட விமர்சனங்களை அக்கறையோடு ஏற்றுப் பரிசீலிக்கவில்லை.
ஜெயகாந்தன், ஒரு சுயசிந்தனையாளர். எதையும் படித்து அவர் தன் கருத்துக்களை உருவாக்கிக்கொள்ளவில்லை. மாறாக, மக்கள் என்ற உயிர்த் திரளுக்கு எது நன்மை பயக்கும் என யோசித்து, தொடக்கக் காலத்து கம்யூனிஸ்ட்கள் தந்த வெளிச்சத்தில் தன் எழுத்து உருவங்களை உருவாக்கினார். 'அக்கினிப் பிரவேசம்’ அந்தக் காலத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அதுபற்றி புதிதாக சபைக்கு வந்த ஒருவர், அவர் கதையை உயர்த்தி, அவர் கதைக்கு எதிராக அல்லது மாற்றாக ஒரு பெண் எழுத்தாளர் எழுதிய கதையைக் கடுமையாகப் பேசத் தொடங்கினார். அதுவரைக்கும் அமைதியாக இருந்தவர், அந்தப் பெண் எழுத்தாளர் வாழ்க்கை பற்றி பேசத் தொடங்கியதும் உடனே நிறுத்தச் சொன்னார்; சபையைவிட்டு வெளியேறவும் சொன்னார்.
ஜெயகாந்தன், சாதனை எனச் சொல்லத்தக்க பலவற்றைச் செய்திருக்கிறார். தமிழ் மாதிரி மூடுண்ட சமுதாயத்தில் ஆண் - பெண் குறித்த பல திறப்புகளை அவர் செய்தார். அந்தரங்கம் என்பது அவரவர்க்கு உரியது, அதில் மற்றவரின் தலையீடு வன்முறை என அவர்தான் சொன்னார். தந்தையின் மற்றொரு பெண் உறவை விசாரணை செய்ய மகனுக்கும் உரிமை இல்லை என அவர் கதையால் சொன்னார். ஒரு காமுகன் சேற்றை வாரி வீசினான் என்பதால், அந்தப் பெண் கெட்டுப்போக மாட்டாள் என அவர் எழுதினார். இலக்கியத்துக்குள் அன்று வரை இடம் காணாத விளிம்பு மக்கள் அவர் கதைகளில் பேரிடம் பெற்றார்கள். அங்கீகரிக்கப்பட்ட பழைமைக்கு எதிராக, அங்கீகரிக்கப்படவேண்டிய புதுமைகளை அவர் கதைகள் சொல்லின. 1975-ம் ஆண்டு எழுதுவதை நிறுத்திய ஓர் எழுத்தாளனை, 2015-ம் வருடம் வரை சமூகம் பேசுகிறது என்பதே அவர் எழுத்தின் பெருமைக்கு சான்று. இன்னும் பல ஆண்டுகள் பேசும்!
சபையில் பல சமயங்களில் பழைய தமிழ் இலக்கியம் பற்றிப் பேச்சு திரும்பும். சித்தர்கள் பாடலில் ஜெயகாந்தனுக்குப் பிரேமை அதிகம். பல பாடல்கள் சொல்வார். ஆழ்வார்கள், கம்பன், பாரதி கவிதைகளில் நல்ல புலமை அவருக்கு உண்டு. மார்க்சியமே அவர் முதல் அறிமுகம் என்றாலும், காந்தியத்தில் அவருக்குப் பற்று மிகுந்திருந்தது. இந்திய, குறிப்பாக தமிழ் அருளாளர்கள் வள்ளலார், தாயுமானவர் மற்றும் பாரதி போற்றிய மெய்ஞானத்தோடு மார்க்சியத்தை இணைக்க முடியும் என நம்பினார். இந்த நம்பிக்கைக்குச் சற்றும் குறையாமல், இந்திரா காந்திக்கும் அவரது பிள்ளைகளுக்கும் பிரசாரம் செய்தார். அதைப் பற்றிய குற்றவுணர்வு அவரிடம் ஒருபோதும் இல்லை. தான் நம்பியதை, உணர்ந்ததை எந்தச் சூழலிலும் எவருக்கு முன்னும் வைக்கத் தயங்காதவர் ஜே.கே.!

பசி அக்னி

யிற்றில் நெருப்பை வைத்துக் கட்டினாற்போல இருக்கிறது ராமநாதனுக்கு. பசியில், வயிறு போடும் இரைச்சல்தான் காதில் கேட்கிறதே தவிர, கூடத்தில் ஒலிக்கும் மந்திர சத்தங்களல்ல…
காலையில் ஒரு விழுங்கு காபி குடித்தது… மணி இரண்டாகப் போகிறது. இன்னமும் அவருக்குச் சாப்பாடு வரவில்லை. பெற்ற பிள்ளைகள் நாலு பேரும், தங்கள் தாயின் திதியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
அப்பாவைப் பட்டினிப் போட்டுவிட்டு, எப்பொழுதோ செத்துப்போன அம்மாவுக்கு வடை பாயசத்தோடு பரிந்து பரிந்து சாப்பாடு நடந்து கொண்டிருக்கிறது.
இது என்ன அக்கிரமம்…?
‘இவர்கள் இப்படிப் போடும் சோற்றை அவ சீந்துவாளோ. புருஷன் சாப்பிடாம, கை நினைக்காதவடா அவ… நான் சாப்பிட்டு விட்டுப்போன எச்சில் இலையில்தான் உட்காருவா… இன்னிக்கு என்னைப் பட்டினி போடறேளே… நியாயமா?’ ராமநாதன் தனக்குள் கேட்டுக் கொள்கிறார்.
வயசு திட்டத்தட்ட எழுபத்தைந்து ஆகிறது அவருக்கு… போதாக்குறைக்கு வியாதிகள் வேறு… பட்டினி கிடக்க முடியுமா…?
”கிழத்துக்கு இருப்பே கொடுக்கலை.”
– உள்ளே மூத்த மருமகள் லட்சுமி, அடுத்தவளான சுசீலாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.
”யார்பட்டினி கிடக்கச் சொன்னது? அப்பவே அவருக்கான கோதுமைச் சாதம் ஆயிடுத்து… தயிரைவிட்டுப் பிசைஞ்சு வாயில போட்டுக்க வேண்டியதுதானே? பிடிவாதம்… வடை பாயசத்தோடதான் சாப்பிடுவேன்கிற பிடிவாதம். கழுகுமாதிரி மூக்கு வியர்க்க உட்கார்ந்துண்டிருக்கார்… இவர் என்கிட்ட சொல்லிட்டார் – அப்பா அப்படித்தான் குழந்தை மாதிரி அடம் பிடிப்பார்… நீ எதையும் கொடுத்துடாதே… அப்புறம் அவஸ்தைப் படறது நாமதான்னு…”
இவர்களின் பேச்சு, ராமநாதனின் காதில் விழாது… பசியினால் காதடைக்கவில்லை… ஏற்கெனவே காது மந்தித்து வெகு காலமாகிறது. சர்க்கரை வியாதி முற்றியதில் கண்ணிரண்டும் சுத்தமாய் அம்பேலாகிவிட்டது.
சதை வற்றி, வெறும் எலும்புக் கூடாய்… ஈர்க்குச்சியை ஒடிப்பதுபோல நாலாய் ஒடித்து பொட்டலமாய் கட்டி விடலாம்… அப்படி ஒரு தேகம்…

அறுபது வயசு வரையில் ராமநாதன், கஞ்சி போட்ட சட்டை போல எத்தனை விறைப்பாக இருந்தார்… அப்பொழுது மாத்திரம் இந்தச் சர்க்கரை வியாதியெல்லாம் இல்லையா…? இருந்ததே… ஆனால், அப்பொழுது மனைவி மங்களமும் இருந்தாள். இவருக்குச் சர்க்கரை கூடாது என்றான பின், தானும் இவர் சாப்பிடும் உணவையே சாப்பிட்டுக் கொண்டு…
அவள் இருந்தவரையில் அவருக்குச் சிரமம் தெரியவில்லை. அதே சமயத்தில் நாக்கை அடக்கியாளும் தெம்பும் இருந்தது.
சும்மா சொல்லக் கூடாது…
அந்தக் காலத்து ராமநாதன் மகா ஆசாரசீலராக இருந்தார். அதேபோல சரியான சாப்பாட்டு ராமனாகவும் இருந்தார்.
வீட்டில் கணபதி ஹோமமும், சத்ய நாராயண பூஜையும் அமர்க்களப்படும். ஒரு நாளைப்போல சாப்பிட பகல் ஒரு மணிக்கு மேலாகும்… பத்துப் பதினைந்து பேரோடு நுனி வாழையிலை போட்டு பாயசம் வடையுடன் சாப்பாடு.
ஓடி ஓடிச் செய்வாள் மங்களம். எல்லாவற்றையுமே ஒண்டியாய், தானே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வாள்.
இப்படி ரசித்துச் சாப்பிடும் ராமநாதன், செவ்வாய்க்கிழமை, கிருத்திகை, நாட்களில் பூரண உபவாசமும் இருந்திருக்கிறார். இவர் விரதமிருக்கும் தினங்களில், இவரெதிரில் எத்தனைதான் ருசியான பண்டத்தை வைத்தாலும் ஏறிட்டுப் பார்க்கமாட்டார்… அத்தனை வைராக்கியம்…
அப்படியெல்லாம் இருந்த மனுஷன் – இன்று அதிரசத்துக்கும் வடைக்கும் குழந்தைபோல அடம் பிடிக்கலாமோ…
ராமநாதன் உள்ளிருந்து வரும் வாசனையை நாசி நிறைய நிரப்பிக் கொள்கிறார். நாவில் நீர் ஊறுகிறது.
எத்தனை வேதம் படித்து என்ன… உபநிஷதத்தைக் கரைத்துக் குடித்து என்ன… நாக்குச் சபலத்துக்கு முன் எல்லாமே தூள் தூளாகிறதே…!
ராமநாதன் தூக்கம் பிடிக்காமல் எழுந்து உட்காருகிறார்.
பேசாமல் கோதுமைச் சோற்றை வாங்கித் தின்றுவிட்டு ‘சிவனே’யென்று படுக்கலாமா என்று கூடத் தோன்றுகிறது.
அதே சமயத்தில் பிடிவாதத்தைவிட மனசு வரவில்லை.
இன்று நேற்றில்லை… என்றுமே அவர் வீம்புக்காரர்தான். மங்களம் இருந்தபோது கொஞ்சமாகவா திண்டாடியிருக்கிறாள்?
நினைத்தபோது சிநேகதிர்களைச் சொல்லாமல் கொள்ளாமல் அழைத்து வந்து சமைத்துப்போடச் சொல்லுவார்.
”அடியே… நாளைக்கு வருஷப் பிறப்பாச்சே… போளி உண்டோல்லியோ…”
”உம்… பண்ணிட்டா போச்சு…”
”அப்ப, என் சிநேகிதன் சுப்புணியையும் பத்மனாபனையும் நம்ம வீட்டுல சாப்பிட வரச் சொல்லட்டா…?”
”சொல்லுங்களேன்…”
மங்களம் மறுத்துப் பேசமாட்டாள். இத்தனைக்கும் ராமநாதனுக்கு ஒன்றும் பணம் கொட்டிக்கிடக்கவில்லை. பள்ளிக்கூட வாத்தியார் வேலைதான். ஆனால், இவர் சாப்பிடும்போதும், சிநேகிதர்களுக்குப் பரிந்து பரிந்து உபசரிக்கும்போதும் இவரை ஸ்கூல் வாத்தியார் என்று யாருமே சொல்ல மாட்டார்கள்.
பாவம், மங்களம்! அரிசியும் வெல்லமும் நெய்யும் அவள் எப்படித்தான் அலுக்காமல் வாங்கிப் போட்டுச் சமாளித்தாளோ! ஒருதடவை ரசம் சரியாய் அமையவில்லையென்று நாலு பேர் முன்னிலையில் மானத்தை வாங்கிவிட்டாரே…
”என்ன… வழக்கமான டேஸ்ட் இல்லையே… ரசத்தை ஈயச்சொம்புலதானே வச்சே?”
தலை குனிந்து நின்றாள் மங்களம்.
என்னவென்று சொல்லுவாள்.. ‘ஈயச் சொம்பை விற்றுத்தான் அன்றைய சமையலையே செய்தேன்’ என்று எப்படிச் சொல்லுவாள்…?
அன்றைக்கு அவள் வாங்கிய வசவு கொஞ்ச நஞ்சமில்லையே…
இன்று அதெல்லாம் நினைப்புக்கு வந்து, ஒளியேயில்லாத கண்களில் கசிவை உண்டு பண்ண…
ராமநாதன் மறுபடியும் சுருண்டு படுக்கிறார்.
உள்ளே –
மணக்க மணக்க திரட்டிப்பால் கிளறுவது…
அம்மாடீ…! என்ன வாசனை…!
‘சனியன், உடம்புல எல்லா அங்கங்களும் பழுதுபட்டுப் போயாச்சு… இந்த மூக்குக்கு ஏதாவது ஒரு கேடு வராதோ… வயசாக ஆக, இது மாத்திரம் ஏன் இப்படித் தீர்க்கமா வேலை செய்யறது…’ – ராமநாதன் அலுத்துக் கொள்கிறார்.
வாசனைகளை ருசி பார்த்தே இந்த பத்து பதினைந்து வருஷ வாழ்க்கையைத் தள்ளியாயிற்று அவர்.
”அடுப்புல என்ன முருங்கைக்கா சாம்பாரா…? உப்பு போடல போல இருக்கே… வாசனை சொல்றதே…”- இப்படிச் சொல்வார் ஒரு நாள்.
‘ரசத்துல கொத்துமல்லியைக் கிள்ளிப்போட்டு ரொம்ப நேரம் கொதிக்கவிடக் கூடாது… பொங்கி வர்றச்சேயே பார்த்து இறக்கிடணும்… இல்லைன்னா வாயில வைக்க வழங்காது…’
– இப்படிச் சில நாள் தனக்குள் முனகிக் கொள்வார்.
”எது எப்படியிருந்தா இவருக்கென்ன… இவர் சாப்பிடறது கோதுமைச் சாதம், தயிர், ஒரு கப் கீரை… மத்தவா எப்படிச் சாப்பிட்டா என்ன இப்போ…” – ஓரொரு சமயங்களில் நாட்டுப் பெண்கள் இவர் காதுபட இரைந்து சொல்வதும் உண்டு.
”லோகத்துல எதுக்காகப் பொறந்தோம்… எதுக்காக மாடா உழைக்கறோம்… எல்லாம் இந்தச் சோத்துக்காகத்தானே. அதை வக்கணையா சாப்பிடணும். சமைக்கற பண்டத்தை வீணாக்காம சாப்பிடணும். நாம சாப்பிடறது மட்டுமில்லாம மத்தவாளுக்கும் வயிறு நிரம்ப சாப்பாடு போடணும். உபநிஷத் சொல்றது… சாப்பாட்டை இகழக் கூடாது. அது விரதம். எதை நாம் சாப்பிடறோமோ அது அன்னம்; சாப்பிடற நாம் அன்னாதம்… இதையெல்லாம் உங்களுக்குச் சொன்னா புரியாது…”
கிழவர் சடக்கென தன் பேச்சை நிறுத்திக் கொண்டு தமக்குள் ஆழ்ந்து போவார்…
மருமகள்களின் கையால் விதவிதமாய் சமைத்துப் போட்டுச் சாப்பிடும் பாக்கியம் அவருக்கு இருந்ததேயில்லை. தன் மங்களத்தை விடவும் இவர்கள் உயர்த்தியாய் சமைப்பார்கள் என்று அவர் நினைக்கவும் இல்லை… அதுதான் சமையலின் மணமே சொல்கிறதே… போதாதா?
அப்படிப்பட்ட சாப்பாட்டுக்கு இந்த நாக்கு இன்று, இப்படி விவஸ்தை கெட்டு அலைய வேண்டாம்.
‘என்ன செய்ய… எல்லா உயிர்க்கும் அன்னம்தான் ஆதாரம். அன்னத்தாலே பிறந்த ஜீவராசிகள், அன்னத்தாலேயே உயிர் வாழ்ந்து, கடைசியிலே அன்னத்தாலேயே நாசமாகி, மண்ணோடு மண்ணாய்ப் போறதுகள், செத்துக் கிடக்கிற நாக்கு ஏதாவது கிடைச்சா போதும் போல இருக்கே.”
இன்று எப்படியும் வகை தொகையாய்ச் சாப்பிட்டே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டது போல கொலைப் பட்டினி கிடக்கிறார் கிழவர்.
நல்லவேளை, மங்களம் போய்ச் சேர்ந்தாள். அவள் இப்படி கௌரவமாய் போனதினால்தானே – இன்றைக்கு அவள் பெயரைச் சொல்லி வீட்டில் பாயசமும் பட்சணமும் அமர்க்களப்படுகிறது… இதுவே அவள் உயிரோடு இருந்து, மருமகள்களிடம், ‘எனக்கு மொறு மொறுன்னு வடை பண்ணித் தா’ என்று கேட்டால் இவர்கள் செய்திருப்பார்களோ…
செத்தவளுக்கு வருஷத்தில் ஒரு நாளாவது சோறு போடாவிட்டால், எங்கே ஆவியாய் வந்து, குடும்பத்தை நடுங்க வைக்கப் போகிறாளோ என்கிற பயம்… அந்த பயம்தான் இப்படி சமையலறையில் அதிரசத்தையும் வடையையும் வேர்க்க விறுவிறுக்கச் செய்து கொண்டிருக்கிறது; அந்த பயம்தான், ‘மாமியாருக்கு கறிவேப்பிலைத் துவையல் பிடிக்கும்’ என்று மாங்கு மாங்கென்று அம்மியைக் கட்டி இழுத்துக் கொண்டிருக்கிறது; அந்த பயம்தான் பிள்ளைகளை ஆபீசுக்கு லீவு போட வைத்து, ஈர வேட்டியும் காய்ந்த வயிறுமாய், மந்திரங்களை உச்சரிக்க வைக்கிறது; அந்த பயம்தான் தங்களைவிட செல்வாக்கில் பல படிகள் கீழேயுள்ள புரோகிதரை பவ்யமாய் வணங்கி அவர் சொன்னபடி எல்லாம் ஆட வைக்கிறது…
‘நான் செத்தால், என் திதியின் போதாவது இவனுங்க எனக்குப் பிடிச்ச அயிட்டங்களைச் செய்வானுங்களோ…’
‘போறது… சர்க்கரை வியாதியில் செத்தவனுக்கு பாயசம், பட்சணம் வச்சு திவசம் பண்ணக் கூடாதுன்னோ, பிளட் பிரஷர்லே செத்தவனுக்கு உப்பே சேர்க்காம சமைச்சுப் போடணும்னோ யாரும் எழுதி வச்சுட்டுப் போகலை…’
‘ஆத்மாக்களிலேயும் இது மாதிரி டயபடீஸ் ஆத்மான்னும், கொலஸ்டிரால் ஆத்மான்னும் இல்லாமப் போச்சே… எல்லா எழவும் இந்த தேகத்துக்குத்தானே தவிர, ஆத்மாவுக்கு இல்லே போல இருக்கு…’
ராமநாதனின் வயிற்றில் தீ, ஜுவாலையாய்க் கொழுந்துவிட்டு எரிவது போல…
‘பெரிய இலை போட்டுண்டு சாப்பிடணும். சோத்தைக் கண்டதும் அல்பம் மாதிரி பறக்கக்கூடாது. இது என்ன மாசம்? சித்திரையா… முக்கனியும் கிடைக்குமே… இலையிலே மூணு பழமும் போட்டிருப்பான். அதெல்லாம் பெரியவன் இந்த மாதிரி சமயங்கள்லே நிறக்க செஞ்சு பேரைத் தட்டிண்டு போயிடுவான்…’
‘அது சரி… திங்கணும் திங்கணும்னு பறக்கறியே…பல் எங்கே இருக்கு…? மொத்தம் நாலு பல் இருந்தா அதிசயம். அதுவும் நீ, பலாச்சுளைய மெல்லறப்ப சேர்ந்து வயத்துக்குள்ளே போயிடும்…’
‘ஆ… பலாச்சுளைன்ன உடனே நினைப்புக்கு வர்றது… வீட்டுல தேன் இருக்கோ… பலாச்சுளைக்கும் தேனுக்கும்தான் ஏர்வை…’
இந்த நினைப்பு வந்தவுடன், உடனே எழுந்து போய் ஹாலில் பரிமாறப்பட்டிருந்த இலைகளில் பலாச்சுளைக்குத் தோய்த்துக் கொள்ள தேன் பரிமாறியிருக்கிறதா என்று பார்த்துவிட்டு வரவேண்டும் போல வேகம்…
எங்கே எழுந்திருப்பது… இங்கேதான் பாதத்தைத் தரையில் ஊன்றியிருக்கிறோமா, இல்லையா என்பதுகூடத் தெரியவில்லையே…
”அடேய்… எவன்டா அடேய்…!”
இங்கிருந்தபடியே குரல் கொடுக்கிறார்.
”என்ன?”
நாலு பிள்ளைகளில் எவனோ ஒருவன் மகா எரிச்சலுடன் எட்டிப் பார்க்கிறான்.
”பலாச்சுளைக்குத் தொட்டுக்க தேன் விட்டிருக்கியா…?”
”எல்லாம் விட்டிருக்கு. நீ சித்த சும்மாயிரு…” – அவன் கடுப்பு அவனுக்கு.
விடிகாலையிலிருந்து பகல் இரண்டு மணி வரையில் அவன் எத்தனை விஷயங்களை தியாகம் செய்திருக்கிறான்…!
நாலு கப் காபி… இரண்டு பாக்கெட் சிகரெட்… பத்து மணி சாப்பாடு… இன்னும் எத்தனையெத்தனை… இந்த மனிதருக்குத் தேன் இல்லையென்றுதான் கவலை.
மகனின் காய்ப்பு வருத்தத்தை உண்டு பண்ணினாலும், வீட்டில் தேன் இருக்கிறது என்பதே பரம சந்தோஷமாய்… ராமநாதன் மீண்டும் குருட்டுக் கண்களுக்குள் திருட்டுக் கனவுகளைக் காணத் துவங்குகிறார்…
‘இந்தப் பிள்ளைகள் – அம்மா கையாலே அத்தனை ருசியா சாப்பிட்டு, எப்படித்தான் இப்படி ரசனையில்லாமப் போனதுகளோ? எல்லாம் பெண்டாட்டிகள் செஞ்சு போடற அரை வேக்காட்டைத் தின்னு தின்னு நாக்கு மழுங்கிப் போயிருக்கும்…’
‘உஸ்… சும்மாயிரு. இன்னிக்கு அவனுங்க பெண்டாட்டிகள் சமைச்சிருக்கிற சமையலுக்குத்தான் நீ நாக்கை நொட்டை விட்டுண்டு காத்துண்டிருக்கே…’
‘ஆமா… அவா எனக்குப் போடமாட்டேன்னு கண்டிப்பா சொல்லிட்டா, என்ன பண்றது…?’
‘இன்னிக்கு ஒரு நாள் போட்டுடுங்கோ… தின்னுட்டு… சத்தியமா உங்க பிராணனை எடுக்க மாட்டேன். நானே செத்துடறேன்னு காரண்ட்டி லெட்டர் எழுதிக் கொடுத்துடலாமா?’
‘எழுதிக் கொடுத்துட்டாப்பல ஆச்சா… அப்படி சடார்னு கிளம்ப முடியும்னா இத்தனை நாள் எதுக்காக மண் மாதிரி இந்தக் கோதுமைச் சோத்தை தின்னுண்டு இருக்கணும்.’
‘சேச்சே…! கோதுமையானாலும் அதுவும் அன்னம்தான். ஆகாரம்தான். தூஷிக்கப்படாது. அப்புறம் அடுத்த பிறவியில இது கூட கிடைக்காமப் போயிடும்…’
‘அன்னம்தான் பூலோகத்துலேயே உசத்தி… அன்னத்தால பிராணனையும், பிராணனால பலத்தையும், பலத்தால தவத்தையும், தவத்தால சிரத்தையையும், சிரத்தையால புத்தியையும், புத்தியால மனசையும், மனசால சாந்தியையும், சாந்தியால சித்தத்தையும், சித்தத்தால நினைவையும், நினைவால ஸ்திர பிரக்ஞையையும், ஸ்திர பிரக்ஞையால விஞ்ஞானத்தையும், விஞ்ஞானத்தால ஆன்மாவையும் பெறுவதால… உம்…அம்மாடி, மூச்சு வாங்கறது… அது என்ன வாசனை…? சேப்பங்கிழங்கு வறுவலா…!’
அவர் மீண்டும் பொறுமையிழக்கிறார்… அந்தப்பக்கம் ஓடிய பேரக் குழந்தைகளில் சற்றுப் பெரியவளான ஒருத்தியைத் தன்னருகில் அழைக்கிறார்.
”இந்தாம்மா… சாஸ்திரிகள் சாப்பிட்டாச்சா?”
”இன்னும் இல்லை… இப்பத்தான் இலை முன்னாடி உட்கார்ந்திருக்கா…”
எத்தனை நேரம்… எத்தனை நேரம்…
இவரது தவிப்பு இப்படியென்றால்… வாசற்புற ஹாலிலோ… ஒருத்தர் முகத்திலும் சுரத்தேயில்லை.
சாப்பிட வருகிற பேர்வழிகளுக்கு நன்றாய்ப் பசியெடுத்து, ஆர்வமாய்ச் சாப்பிட வேண்டாமோ…
ஒருத்தராவது ரசித்துச் சாப்பிடவே இல்லை. இந்த லட்சணத்தில் ஒருவர் பாதிச் சாப்பாட்டில் கையை உதறிவிட்டு எழுந்தே விட்டார்.
”ஐயையோ….! என்ன ஆச்சு…?”
மூத்த மருமகள் வாய்விட்டு அலற, மற்றவர்கள் பிரமை பிடித்தாற்போல நிற்க…
”என்னை மன்னிக்கணும். அது என்னவோ திடீர்னு வயித்தை வலிக்கிறது… ஒரு பருக்கை உள்ளே போகாது… உசிர் போயிடும் போல…”
என்ன செய்வது…? சகோதரர்கள் ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க, அத்தனை பேருமே தவித்துப் போய் விட்டார்கள்.
‘இத்தனை வருஷத்தில் இதுபோல நடந்ததில்லையே… இது என்ன விபரீதத்திற்கு அறிகுறியோ…?’
‘அம்மா ஏன் நம்முடைய உபசரிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை?’
‘இது ஏதோ சாமி குத்தம்…’
அவர்கள் தங்களுக்குள் புலம்பியபடி வயிற்று வலிக்காரரை வண்டியிலேற்றிவிட்டு, மற்றவர்களுக்கு சஞ்சலத்துடன் பரிமாற….
”ஏண்டா டேய்… இன்னுமா அவா சாப்பிட்டு முடிக்கல்லே…”
கிழவரின் குரலில் தெறித்த நெருப்பு, அத்தனை பேரையும் சுட்டுப் பொசுக்க…
‘அப்பாவுக்கு வேண்டியதைப் போடலைங்கறதே அம்மாவுக்கு வருத்தமாயிருக்குமோ…’
மூத்தவனின் மனசில் இந்த நினைப்பு ஓடியதும், மனைவியை அவசரமாய் அழைக்கிறான்.
”அப்பாவுக்கும் இலை போடு… அவரும் சாப்பிட்டும்…”
”என்னது… நாளைக்கு அவர்…”
”நாளைய பத்தின கவலை நாளைக்கு… இன்னிக்குப் போடு… நான் அவரை மெதுவா தூக்கிண்டு வந்து இலை முன்னாடி உட்கார்த்தி வைக்கிறேன்…”
அதற்குமேல் எதிர்த்துப் பேச வழியில்லாத பெண்கள், பரபரப்புடன் இலையைப் போட்டுப் பரிமாற…
பெரியவன், அப்பாவின் தோளைத் தொட்டு அழைக்கிறான்.
”அப்பா, சாப்பிட வாங்கோ…”
”கோதுமைச் சாதமா…? நேக்கு வேண்டாம்…”
அப்பா சிறு குழந்தையைப் போல முறுக்கிக் கொள்கிறார். பிள்ளைக்கே என்னவோ போல இருக்கிறது.
”இல்லேப்பா… இலை போட்டு எல்லாம் பரிமாறியிருக்கு…”
”நிஜமாவா?”
”நிஜமாத்தான்…!”
‘‘பாயசம், வடை எல்லாமா?’’
”எல்லாம்தான்.”
”பலாச்சுளை உண்டோல்லியோ.”
”உங்களுக்கில்லாததாப்பா…”
”தேன்…”
”நீங்க சாப்பிட வாங்கோ… வேண்டிய மட்டும்… தேனென்ன, எல்லாம் போடறேன்.”
கிழவர், பொக்கைவாய் மலர, அந்தரத்தில் கைகளை விரித்துக் குழந்தைபோலச் சிரிக்கிறார்.
”நான் எப்படிடா வருவேன்.. என்னைத் தூக்கிண்டு போயேன்.”
இளையவன் கொஞ்சம் ஆகிருதியான தேகமுடையவன். அப்பாவை பத்து வயசு பாலகனைத் தூக்குவது போல தூக்கிக் கொள்கிறான். தந்தை, மகனின் கழுத்தை இரு கைகளாலும் கெட்டியாய்ப் பின்னிக் கொள்கிறார்.
”மெள்ள… மெள்ள… பார்த்து இறக்குடா.”
கூடத்தில் அப்பாவுக்காக மணை போட்டபடி மூத்தவன் சகோதரனிடம் சொல்ல.
இலை முன் உட்கார வைக்கப்பட்ட ராமநாதனின் தலை, ஒரு பக்கமாய்த் தொய்ந்து சாய்கிறது. முகத்தில் நன்றாய்ச் சாப்பிடப் போகும் ஆனந்தமும், மூடிய இமைகளுக்குள் இலையில் பரிமாறப்பட்டுள்ள உணவுகளைப் பற்றிய கனவுகளுமாய்…
”அப்பா… அப்பா…!”
பிள்ளைகளும் மருமகள்களும் அவர் நிரந்தரமாய் கண் மூடிவிட்டதை அறியாமல் அவரைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இலையோரத்தில் பலாச்சுளையை நாலைந்து கறுப்பு எறும்புகள் மௌனமாய் சூழ்ந்து கொள்கின்றன.
‘உணவும் நானே… உண்பவனும் நானே… உணவுக்கும் உண்பவனுக்கும் உள்ள உறவை உண்டாக்கியவனும் நானே; உண்பவனை உண்ணும் உணவும் நானே; உலகனைத்துமாகி அதை அழிப்பவனும் நானே…’
கறுப்பு எறும்புகள் ரகசியமாய் தங்களுக்குள் உபநிஷத்தை முனகிக் கொள்கின்றனவோ.
ராமநாதனின் இதழ்கடையில் லேசான சிரிப்பு நிரந்தரமாக…
***

போணி

மண்ணெண்ணைய் தீர்ந்து போய் நாலு நாட்களாகி விட்டன. காஸ் ‘இப்பபோ அப்பவோ’ என்று பயமுறுத்திக் கொண்டிருந்தது. கெரசினை வாங்காமல் இருந்து, காஸும் தீர்ந்து, விருந்தாளியும் வந்து விட்டால் கேட்க வேண்டாம். நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை வேறு.
வழக்கமாய் தோட்டக்காரனை சைக்கிளில் கடைத் தெருவுக்கு அனுப்பி தேவைப்பட்டதை அவள் வாங்கி வரச் சொல்லுவாள். அவன் யாரோ ‘சகலை’க்கு காய்ச்சல் என்று இரண்டு நாள் லீவு வாங்கிக் கொண்டு போனவன். வாரம் ஒன்றாயிற்று, ஆளையே காணோம்.
டிரைவரைக் கார் எடுக்கச் சொல்லி டின் சகிதம் புறப்பட்டாள். அந்தக் கடைத் தெருவுக்குப் போவது என்பது அவளுக்கு அவ்வளவாகப் பிடிக்காத சமாசாரம். அது என்ன ஜனங்கள்! நூற்றுக்கணக்கில், ஆயிரக் கணக்கில், கும்பல கும்பலாய், சாரிசாரியாய், ஒவ்வொரு கடை முன்னாலும் பிதுங்கி வழியும் மனிதக் கூட்டம்; பாதிப்போர்கள் வேலையாய், மீதி பாதிப்பேர்கள் வெட்டி முறித்துக் கொண்டு, வம்பளந்து கொண்டு.
கார் அந்தத் தெருவில் போக எப்போதுமே ரொம்ப கஷ்டப்படும். காய்கறி, தேங்காய் இறக்கும் லாரிகள்; கட்டை வண்டிகள். சைக்கிள் ரிக்ஷாக்கள், சைக்கிள்கள், பாதசாரிகள், கூலிக்காரர்கள் – எதிரும் புதிருமாய் வந்து தெருவை இரவு இல்லை, பகல் இல்லை என்று சதா நிரப்பிக் கொண்டிருபபார்கள். இத்தனைக்கும் அது ஒருவழிச் சாலை!
அந்தத் தெருவில் மீன் மார்க்கெட்டும், காய்கறி மார்க்கெட்டும், அடுத்தடுத்து இருந்தன. காய்கறி, பழம் வாங்க வேண்டுமானால் சைவர்கள் மூக்கைப் பிடித்துக் கொண்டுதான் மார்க்கெட்டுக்குள் பிரவேசிக்க முடியும்.
பிளாட்பாரம் என்று ஒரு ஒழுங்கு இல்லாத அந்தத் தெருவில், இரண்டு பக்கமும் கடைகள் அடைத்துக் கொண்டு நின்றன. பட்டாணி, கடலைக் கடை, வெற்றிலைக்கடை, அரிசியை அம்பாரமாய் கொட்டிக் கொண்டு விற்கும் கடை, தேங்காய் மண்டி, புகையிலை, களிப்பாக்குக் கடை, வெல்ல மண்டி என்று நானாவிதமான கடைகளுக்கு நடுவில் நாலு கடைகளுக்கு ஒரு காபி கிளப் வேறு.
காய்கறி மார்க்கெட்டைத் தாண்டி கிடைத்த இடத்தில் வண்டியை எப்படியோ நிறுத்தினான் டிரைவர்.
‘டின்னை எடுத்துட்டுப் போயி அந்தக் கடையிலே ஒரு டின் கெரஸின் வாங்கிட்டுவா’ என்று பணித்தாள் அவள்.
அவன் போனான். கெரஸின் கடையில் கூட்டம் நெரிவது அவளுக்கு தெரிந்தது. இன்னும் குறைந்தபட்சம் கால்மணியாவது ஆகும் டிரைவர் திரும்ப.
காலை வெயில் சுள்ளென்று பின்பக்க கண்ணாடி வழியாக முதுகில் உறைத்தது. பலாப்பழ சீசன் ஆரம்பமாகி விட்டதால் ஈக்களின் தொல்லை சகிக்க முடியாமல் இருந்தது.
பின் இருக்கையில் சாய்ந்து கொண்டு கண்களை சுற்றிலும் ஓட்டினாள். அவளுக்கு நேர் எதிரில் வாழைப்பழ மண்டி. பச்சைப் பசேலென்று பூவன் தார்கள் வரிசையாய் கொலுவிருந்தன. பழுத்த பழங்களை ‘குடப்பு’ எடுத்து இன்னொரு பக்கமாய் அடுக்கிக் கொண்டிருந்தார்கள். ரொம்பப் பழுத்துப் போன சில பழங்களை, அழுகிப் போனவற்றை ஒரு கூடைக்காரி மொத்தமாக விலை பேசிக் கொண்டிருந்தாள். அழுகின பழங்கள் மேல் நூற்றுக்கணக்கில் ஈ கூட்டம். இத்தனை அழுகலை எடுத்துப் போய் என்ன வியாபாரம் செய்ய போகிறாள் இந்தக் கிழவி?
அருகில் இருந்தது பட்டாணிக் கடை. மூக்கில் சளி வழிய, அம்மணமாய் நின்றிருந்த குழந்தைகள் இரண்டு கடலை வாங்கிக் கொறிப்பவர்கள் சொத்தை என்று தரையில் விசிறுவதை பொறுக்கித் தின்றன. மாட்டு வண்டி ஒன்று இழுத்து பிடித்துக் கொண்டு எதிர்பக்கம் வந்தது. வரிசையாய் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்ததால் அந்த வண்டி போக இடமில்லை. ‘ஹை-ஹ-ஹ-ஹட்ரு-ட்ரு’ என மாடுகளை இழுத்து நிறுத்தின வண்டிக்காரன், ‘சைக்கிளை கொஞ்சம் அப்பால நகத்து சாமி’ என்று வந்து போகும் ஆண் மகன்களையெல்லாம் கெஞ்சிப் பார்த்தான்.
ம்ஹூம். ஒருத்தரும் காதில் வாங்கவேயில்லை. வண்டிக்காரன் கீழே இறங்கி ஒவ்வொரு சைக்கிளாகப் பாதை ஓரமாய் நகர்த்தத் தொடங்கினான். இந்தப் பக்கத்தில் சரக்கை இறக்கி முடித்துவிட்ட லாரிக்காரனுக்கு அதற்குள் அவசரம். ‘பாம்…பாம்’ என விடாமல் ஹாரனை அடித்து ”வண்டியை நகத்துய்யா” எனக் கத்தியது தலைவேதனையாய் இருந்தது.
”யோவ்… வண்டிக்காரரே! இன்னா ஒரு ரோட்டிலே வண்டியை நிறுத்திட்டு? எடுய்யா” ஜன்னல் வழியாகத் தலையைவிட்டு லாரி டிரைவர் மீண்டும் கத்தி ஆர்ப்பரித்தான்.
”ஒனக்குத்தான் அவசரமாய்யா? எனக்குந்தான். பாதை உடாம சைக்கிளை நிறுத்திடறாங்க…” வண்டிக்காரன் அசிங்கமாய் வைது கொண்டே சீர் செய்த பாதை வழியாய் வண்டியைக் கிளப்பிக் கொண்டு போனான். லாரியும் தாண்டியது. சீ, என்ன கூட்டம்! என்ன கலாட்டா… அவளுக்கு வியர்த்து, கசகசத்து எரிச்சல் மூண்டது. என்ன பண்ணுகிறான் இந்த டிரைவர்? திரும்பிப் பார்த்தாள். கடையில் யாருடனோ அவன் சுவாரசியமாய்ப் பேசிக் கொண்டிருப்பது புரிந்தது.
எட்டி கார் ஹாரனைச் சப்தித்தாள். டிரைவர் வந்தான். ”என்னாப்பா இவ்வளவு நாழி?”
”நேத்து வந்த சரக்கு தீர்ந்து போச்சாம். புதுசு வந்திருக்கு. எடுத்து ஊத்தறாங்க. கும்பல் இருக்கு.”
”சரி, சரி. சுருக்க வா. இங்கே அவியுது.”
அவன் மறுபடி போனான்.
அவள் பார்வையைத் தனக்கு இடது பக்கம் ஓட்டினாள். காபி கிளப்; புகையிலை மண்டி; வெல்ல மண்டி; வெல்ல மண்டி வாசலில் அச்சு அச்சாய் கறுப்பு வெல்லக் குவியல். இந்தப் பக்கம் வெள்ளைப் பூண்டைச் கொட்டி வைத்துக் கூறு கட்டி விற்றுக் கொண்டிருந்தனர் இருவர். ஆண் வியாபாரத்தை கவனித்தால், பெண் பூண்டைப் புடைத்துச் சுத்தம் செய்து கூறு கட்டினாள். காற்றில் பூண்டு தோலி பறந்து வந்து ஜன்னல் வழியாய் அவள் மடிமேல் விழுந்தது. புகையிலை நெடி வேறு. ஜன்னலை மூடினாள்.
அப்போதுதான் அந்தப் பெண்மணி கூடையுடன் அவள் வண்டிக்கருகில் வந்து உட்கார்ந்தாள். கதவைத் திறந்தால் அவள் மேல் இடிக்கும்; அத்தனை நெருக்கத்தில் அமர்ந்தாள். சாணி பூசின கூடையைச் சாக்குப் போட்டு மூடியிருந்தாள். மொண மொணவென்று எதையோ முணுமுணுத்த வண்ணம் சாக்கை எடுத்து தரையில் பரப்பினாள். கூடையில் இருந்த கொய்யாப் பழங்களை அதில் கொட்டி பெரிசு, சிறிசு எனப் பிரிக்க முற்பட்டாள்.
நாட்டுக் கொய்யாப் பழங்கள். சற்றே நீளமாய், பச்சையாய், கிளிப் பச்சையாய் இருந்தன. இன்னும் நன்றாகப் பழுக்கவில்லை.
Image
அந்தப் பெண்மணிக்கு என்ன வயசு இருக்கும? அவளுக்குக் கணிக்கத் தெரியவில்லை. அழுக்கான மெலிந்த உடம்பு, சாயம் போன புடவை, ஜாக்கெட் இல்லாத வெற்று மேனி. அள்ளிச் செருகின செம்பட்டை முடி. மூக்கில் ஒரு சிவப்புக் கல் பித்தளை மூக்குத்தி, கழுத்தில் கறுத்துப் போன மஞ்சள் கயிறு, வாயில் வெற்றிலை.
‘‘காலையிலே கழுத்தை அறுக்கணும்னு இந்தச் சனியன் இருக்குது. எழுந்து பொழுதுதோட வேலைக்குக் கௌம்பினா தாவலை. தானும் கௌம்பாது; என்னையும் உடாது. பளத்தைப் பொளுதோட வாங்கிக் கடை போட்டா விக்கும். வெயிலு கொளுத்தத் தொடங்கிடுச்சு, இன்னா வியாபாரம் ஆவப் போவுதோ..?” இப்போது கொய்யாப் பழக்காரி பேசினது அவளுக்குத் தெளிவாய்க் கேட்டது.
‘‘இன்னா ஆண்டாளு… இன்னிக்குப் கொய்யாப் பளம் பிடிச்சிருக்கியா?.. இளநீ புடிக்கப் போறேன்னே… இன்னா விஸயம்?’’ புகையிலை மண்டிப் பையன் ஒருத்தன் அவளிடம் நெருங்கி வந்து பேச்சுக் கொடுத்தான்.
‘‘ஆங்… இளநீ யாபாரம் பண்ணி நா கீய்ச்சேன்… போவியா… நேத்து அது இருக்கிற பணத்தையெல்லாம் கொண்டு போய்க் குடிச்சிட்டு வந்திடுச்சி. காலையிலே எளுந்து ஒரே சண்டை, என்னாத்தை நான் இளநீ புடிக்கறது. துட்டு வாணாம்?”
”அப்ப இன்னிக்கி எங்காசை திருப்ப மாட்டேன்னு சொல்லு?”
கொய்யாப்பழக்காரி பதில் ஏதும் பேசவில்லை.
இவனிடம் கடன் வாங்கியிருக்கிறாளா?
”சரி… சரி… ரெண்டு பளம் கொடு… நா போகணும்…”
”இன்னும் போணி ஆவலையே. நீ ஒங்கடைக்குப் போ… நான் அப்பால கொணாந்து தாரேன்.”
”அட! இன்னாம்மே… டபாய்க்கிறே… எங்காசு குடு… நா போறேன்…”
தான் வகையாக மாட்டிக் கொண்டிருப்பது பழக்காரிக்குப் புரிய, இரண்டு பழங்களை எடுத்து அவன் கையில் போட்டாள்.
பழத்தை நகத்தால் விண்டு சுவைத்தான் அவன். உள்ளே பழம் சிவப்பாய் இருந்தது. ‘இந்தா பொயிலை’ அவன் எழுந்து போகு முன் ஒரு சின்ன காம்பு புகையிலையை அவள் மடியில் போட்டு விட்டுப் போனான்.
அவன் தலை மறைந்த பிறகு இவள் மொணமொணத்தாள்,  ‘‘பெர்…ய பொவயிலை கொடுத்துட்டாரு… பைசா பெறாத பொவயிலை கொடுத்துட்டு இருவது பைசா பலம் தின்னுட்டுப் போறதைப் பாரு. தூ! இன்னும் போணியே ஆவலை. அதுக்குள்ளவா இவனுக்கு ஆயிப்போச்சி… அவன் பேதிலே போக…” அவள் காரித் துப்பினாள்.
டிரைவர் வந்து விட்டான். டிக்கியில் டின்னை வைத்து விட்டு முன்னால் ஏற வந்தான்.
அவளுக்குத் திடீரென்று இந்த கொய்யாப் பழக்காரி யாரிடம் போணி செய்கிறாள் என்று பார்க்க ஆவலுண்டானது. ”வீட்டிலே முட்டை இல்லே போலிருக்குது. போய் ஆறு வாங்கிட்டு வாயேன்.” பணத்தைக் கொடுத்து டிரைவரை மீண்டும் அனுப்பினாள்.
கொய்யாப் பழக்காரி இப்போது கடையை நன்றாய் பரத்தி விட்டாள்.
ஒரு கிழவன் வருகிறான். கூடவே பேரனா? ‘‘தாத்தா கொய்யா பளம்’’ என்று பையன் சிணுங்க, கிழவன் குந்தி உட்கார்ந்து பழக்காரியிடம் பேரம் பேசினான்.
”ஓலை கட்டின பளம். ரூபாய்க்கு ஆறு. ஒரே விலை’’ அவள் கராறாய்ப் பேசினாள்.
”அங்கங்கே பத்து கொடுக்கறாங்க… இன்ன நீ..?”
”அப்ப அங்கியே போய் வாங்கிக்க… இங்கே ஒரே விலை. ஏளு வரும்…”
கிழவன் ஒன்பது பழம் பொறுக்கி பையில் போட்டு ஒரு ரூபாயை நீட்டினான்.
கொய்யாப் பழக்காரிக்கு கோபம் வந்துவிட்டது. ‘‘ஏழு பளம்தான்னு நான் சொல்றேன். ஒன்பது எடுத்தா எப்படி? போடுய்யா கீளே’’ கையை நீட்டி பழங்கள் கொண்ட பையைப் பிடித்தாள்.
”அட போம்மே. ஒன் பளம் இல்லாட்டா வேற கெடைக்காதா என்ன? வாடா தம்பி.” ரோஷம் வந்து பழங்களைக் கொட்டி விட்டு கிழவன் கிளம்பி விட்டான்.
போணி ஆவதற்கு முன் அபசகுனம் மாதிரி ஆகிறதே என்று கடைக்காரிக்கு கோபமான கோபம்.
முட்டைகளுடன் டிரைவர் வந்துவிட்டான்.
”போணி பண்ண துப்பில்லாததுகள்ளாம் கடைக்கு வந்திடுங்க… மானங்கெட்டதுக…’’ அவள் ஆக்ரோஷமாக வசைபாடுகையில் ஒரு இளைஞன் அவளிடம் வந்து நின்றான்.
போணி ஆகப்போகிறதா? என்ன சொல்லி டிரைவரை நிறுத்தி வைக்கலாம்?
”பச்சை மொளகாய், இஞ்சி இல்லேன்னாங்க. போய் இருபது காசுக்கு வாங்கி வா.” டிரைவருக்கு நினைத்து நினைத்து அவள் வேலை சொல்லுவது கோபத்தை எழுப்பியது. திறந்த கதவைப் படீரென ஒங்கிச் சாத்திவிட்டுப் போனான்.
”என்னம்மா பழம் எப்படி?”
கூடைக்காரி இன்னும் கோபம் தணியாத நிலையிலேயே இருந்தாள்.
”ரூபாய்க்கு ஆறு. வேணும்னா கை வை.”
”எட்டு வருமாம்மா?” என்று கேட்டுக் கொண்டே அந்த இளைஞன் பழங்களில் கையை வைக்கவும் அவள் சீறினாள்.
”தொடாதைய்யா, வெலையை கேக்க வேண்டியது. பளங்களை புரட்ட வேண்டியது. அப்புறம் வேணாங்கிறது. காசை வெச்சுட்டு தொடு. இன்னும் போணி ஆவலை. அதுக்குள்ளாற தொடாதேன்னா புரியாது?”
கொஞ்சம் ‘டீக்’ காக உடுத்தி, படித்தவன் மாதிரி தோற்றமளித்த இளைஞனுக்கு முகத்தில் அறைந்தாற் போல ஆகிவிட்டது.
”வார்த்தையை அளந்து பேசும்மா. விலை கொடுக்காமலா உன் பழத்தை எடுக்கப் போறேன்? மரியாதை இல்லாத பேச்சு என்கிட்டே வாணாம். ஆமாம்” கையை உதறிக் கொண்டு எழுந்து நடந்து போனான்.
அந்த வாடிக்கையும் போய் விட்டது. இவள் எப்போது போணி பண்ணி, எப்போது வியாபாரத்தை முடிக்கப் போகிறாள்? அவளுக்குப் பாவமாக இருந்தது.
பச்சை மிளகாய் வாங்கிக் கொண்டு வந்த டிரைவர் அவளிடம் பேசாமலேயே இருக்கையில் அமர்ந்து ‘வீட்டுக்குத்தானே!’ என்றும் கேட்டுவிட்டு வண்டியைக் கிளப்பி விட்டான்.
கூடைக்காரி உரத்த குரலில் யாரையோ ‘‘பேமாணிப் பசங்க… ராஸ்கோல்’’ திட்டுவது அவளுக்குக் கேட்டது.
யாரைத் திட்டுகிறாள்? அவள் குடிகாரக் கணவனையா? கடன் கொடுத்த புகையிலைப் பையனையா? போணி செய்யாமல் போன நபர்களையா?
கூடைக்காரிக்கு எப்போது போணி ஆகும் என்ற கவலை அவள் நெஞ்சை அடைத்துக் கொண்டது.

தம்பான் பொன்மணி

உச்சிவெயில். அவர்கள் ஆயத்தமாகி விட்டார்கள். பொன்மணியும் தம்பானும். தம்பானின் கையில் ஒரு சாப்பாட்டுக் கரியர். பொன்மணியின் கையிலும் ஒரு சாப்பாட்டுக் கரியர். வந்துவிட்டார்கள் கோயில் வெளியின் குறுக்குப்பாதைக்கு.
         தம்பானின் வீட்டுப்படலைக்கு நேர் எதிரேதான் தங்கமணியின் வீட்டுப்படலை. சகல வகையிலும் தம்பானின் வீடும் தங்கமணியின் வீடும் ஒரே மாதிர்pத்தான்.- கோயில் வெளியின் மூலைக்கையில்.
         தம்பானின்  தகப்பனாரும் பொன்மணியின் தகப்பனாரும் ஒரே இடத்தில் தான் வேலை. இருவரும் ஒரே வகையான வேலையைத்தான் செய்கிறார்கள். சாப்பாட்டுக் கரியர் கூட ஒரே வகையானதாகவும் ஒரே அளவினதாகவுந்தான் இருந்தன. இரண்டும் பித்தளைக் கரியர்கள். உள்ளே இரண்டுக்கும் ஒரே மாதிரியான சாம்பல் நிற அலுமினியப்பூச்சு. வெளியில் எலுமிச்சம் பழக்கோதால் உரஞ்சும்போது ஏற்படும் வெங்கலப் பளபளப்பு. அவைகளுக்குள் வைக்கப்படும் சோறும் ஏறக்குறைய ஒரே வகைதான். கறிகள் வித்தியாசமானவையாக இருக்கலாம் ஆனால் இரண்டு தகப்பனார்களும் ஒரே வராந்தக் கட்டிலிருந்து சாப்பிடும் போது கறிகளைப் பரிமாறிக் கொள்வார்கள். ஆகவே அதிலும் வேறுபாடு இல்லை.
         ஆனால் தம்பானின் அப்பாவுக்கும் பொன்மணியின் அப்பாவுக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. தம்பானின் அப்பா நல்ல சிவப்பு. தும்புக்கட்டு மீசை, கறுப்பாக. பொன்மணியின் அப்பா மாநிறம். நறுக்கிவிடப்பட்ட ஒட்டலான நரை கலந்த மீசை. தம்பானின் அப்பா சிவத்தக் கல் பதித்த தங்கக் கடுக்கன் அணிவார். பொன்மணியின் அப்பாவினது காதுச் சோணைகளில் இரண்டு வெறும் துவாரங்கள் மாத்திரம் இருந்தன. தம்பானின் அப்பாவினது கன்னங்கள் மதாளிப்பாய் பொளு பொளு என்றிருக்கும். பொன்மணியின் அப்பாவினது கன்னம் குழிவிழுந்து பொக்குவாய்காரனுடையவை போலிருக்கும் தம்பானின் அப்பாவுக்கு ஐந்து விரல்களும் விரித்த கையளவு கொண்டை. பொன்மணியின் அப்பாவுக்கு ஒரு பழப்பாக்கை மிஞ்சாத அளவுக்கு சின்னக் குடுமி. தம்பானின் அப்பாவினது கொண்டையில்  வெள்ளியினால் செய்த கொண்டைப்பூண் அணிந்திருப்பார். பொன்மணியின் அப்பாவினது கொண்டையில் மரக்குச்சியில் சீவிய கொண்டைக்குத்தி இருக்கும் தம்பானின் அப்பாவினது கொண்டைக்குத்தியினால் காது குடைய இயலும். பொன்மணியின் அப்பாவினது கொண்டைக்குத்தியினால் காது குடைய இயலாது.
          இன்னுமொரு முக்கிய வித்தியாசம் - தம்பானின் அப்பா வெளுத்த வெள்ளை வெளேர் என்ற அரைக்கை ஷேர்ட் அணிவார். அவர் கமுக்கட்டில் வலைக்கண் வைத்த கையுள்ள வெனியனை சேட்டுக்கு உள்ளேதான் விட்டிருப்பார். பொன்மணியின் அப்பா சேட் போட மாட்டார். கைவைத்த வெனியன் மாத்திரம் அணிவார். மற்றொரு வித்தியாசம், தம்பானின் அப்பா தினமும் கள் குடித்து சிலவேளைகளில் கஞ்சா குடிப்பார்.  பொன்மணியின் அப்பா அதிகமாக கஞ்சா குடித்து சில வேளைகளில்தான் கள் குடிப்பார். தம்பான் இன்னுமொரு வித்தியாசத்தையும் இடைக்கிடை மறந்து விடுகிறான். தம்பானின் அப்பா மத்தாளம் அடிப்பார், சல்லாரி கொட்டுவார், விருத்தம் பாடி இழுப்பார், கூத்து ஆடுவார். கூத்து பழக்குவார். வசந்தன் பொல்லும் பழக்குவார். – அவர் பெரிய அண்ணாவியார். பொன்மணியின் அப்பா வெறும் மத்தாளக்காரர்தான்.
அப்பாக்களைப் பற்றிப் பேசி பொன்மணி தம்பானை எந்தவகையிலும் வெல்ல முடியாது. அம்மாக்களைப் பற்றிப் பேசினாலும் பொன்மணி வெல்ல முடியாது. தம்பானின் அம்மா நல்ல சிவப்பு. பொன்மணியின் அம்மா நல்ல கறுப்பு, பொன்மணியைப் போல. பொன்மணிக்கு அம்மாவின் நிறமும் அப்பாவின் முகமும். கூரான முகம். பொன்மணியை தம்பான் சில வேளைகளில் 'காக்காய் குஞ்சு' என்று கூப்பிடுவான். அவள் அவனைத் துரத்தி துரத்தி அடிப்பாள்.
            பொன்மணியும் தம்பானும் ஒரே நாளில்தான் கொன்வெண்டுக்குப் போனார்கள். இரண்டு பேரையும் பொன்மணியின் அப்பாதான் அழைத்துப் போனார். அப்போது அவனை எல்லோரும் ;தம்பி; என்றுதான் கூப்பிடுவார்கள். தம்பி எப்படி தம்பான் ஆனான்? அதுவும் பொன்மணியின் வஞ்சனைதான். அவன் ஒருநாள் அவளுடைய வீட்டிலிருந்து அழுது கொண்டு வெளியேறினான். அவனுடைய அம்மாவும் அங்கே இருந்தா. அம்மா 'தம்பி , தம்பி' என்று கூப்பிட்டா. செல்லாச்சி குஞ்சாத்தையும் 'தம்பி , தம்பி' என்று கூப்பிட்டா. இவன் படலையைக் கடந்தான். பொன்மணி  தம்பி' என்று கூப்பிட்டவள் பிறகு 'தம்பி, டேய் ' 'தம்பி டோய்' தம்பா டோய், தம்பா தீபன், தம்பான் டோய், தம்பா, தம்பா தீபன், தம்பான்... தம்பான் ' என்று பலவாறு கூப்பிடத் தொடங்கினாள். எல்லோரும் சிரித்தார்கள். அவன் திரும்பி ஒடிவந்து பொன்மணியை அடிப்பதற்கு போனான். பொன்மணி துள்ளிப் பாய்ந்து எட்டத்தில் நின்று 'தம்பான்...... தம்பான் ' என்று அதையே பட்ப்பெயராக்கி கூவினாள். அவன் எவ்வளவு ஓடியும் பொன்மணியைப் பிடிக்க முடியவில்லை.அவள் மேலும் மேலும் 'தம்பான்...... தம்பான் ' என்று கத்தியவாறே ஓடிக்கொண்டிருந்தாள். அன்று முதல் தம்பி தம்பான் ஆகிவிட்டான்.
           அது ஒன்றுதான் தம்பானுக்கு குறை. பொன்மணியை ஓடிப்பிடிக்க முடியாது.அவளை முந்தி நடக்கவும் விடமாட்டாள் சாப்பாட்டுக் கரியரைத் தூக்கிக் கொண்டு இரண்டு எட்டு வைத்ததும் இந்தப் போட்டி தொடங்கிவிடும். சாப்பாட்டுக் கரியருக்குள் கறி கொட்டி சாப்பாடு கெட்டு விடுமே என்று தம்பானுக்குப் பயம். பொன்மணிக்கு அந்தப் பயம் இல்லை. இதுவரையில் அவளுடைய சாப்பாட்டுக் கரியரில் கறி சிந்தியதும் கிடையாது. கரியரைப் பிடித்த அவளது வலது கை உசும்பாது. மடங்காத அசையாத வலது கையில் கரியர் அப்படியே தூக்குக் குண்டு போலிருக்கும். இடது கை வேகமாகச் செல்லும் தோணியின் துடுப்பு போல அசையும். அந்தக் கையில் இரண்டு ரப்பர் காப்புகள் மேலும் கீழும் எழுந்து விழுந்து அலறும். மற்றக் கையிலுள்ள ரப்பர் காப்புகள் உறங்கும். பாதங்களுக்கிடையில் மணற்துணிக்கைகள் பிராண்டல் தாங்க முடியாது துடிக்கும் விசுக் விசுக் என்று நடப்பாள். அவள் நடப்பதற்கு என்ன தடை ? அவளுடைய குச்சு கால்களும் குச்சுக் கைகளும் தம்பானுக்கு இருந்தால் அவனும் அவளைப் போல நடப்பான்தான். தம்பாவின் உடம்பு கொஞ்சம் உரம். பொன்மணி எலும்புக்கூடு. சட்டையைப் போட்டால் தெரியாது. அந்தச் சட்டைக்குள் என்னதான் இருக்கு? அதுவும் தம்பானுக்குத் தெரியும். சீனித்தம்பி அண்ணன் பிடித்துக் கொண்டுவரும் கீச்சான் குருவிகளை உரிக்கும் போது வருமே சதை அந்தச் சதையைப் போல்தான் இவளுடைய சதையும்.  தசைக்குள்ளாக எலும்பு பொடுபொடுக்கும் இவளுடைய சட்டைக்குள் ஆமணக்கம் கொட்டைபோல் துருத்துகிற இடம் தவிர மற்ற இடமெல்லாம் அப்படித்தான்.
         முதலில் பொன்மணியும் தம்பானும் சாப்பாட்டுக் கரியர்களுடன் தாங்கள் சாதாரணமாய் நடப்பது போலத்தான் நடந்தார்கள். உச்சி வெயில் அவர்களை ஒன்றும் செய்யவில்லை. ஆனால் மெல்ல மெல்ல அவர்களுடைய எட்டுகள் அதிகரித்தன. பொன்மணி கோயில் பக்கம் பார்த்து சிரிப்பை அடக்கிக் கொண்டு நடந்தாள். தம்பான் காயான் வெம்புப் பக்கம் பார்த்து சிரிப்பை அடக்கிக் கொண்டான். காயான் பற்றைகளிடையே தெரிந்த நீல நிறப் பூக்கள் அவனைக் கவர்ந்தன. ஆனாலும் போட்டி தொடங்கி விட்டது. காயாம்பூ வண்ணத்தை பார்த்துக் கொண்டு நிற்க இப்போது முடியாது. காயாம்பூ வண்ணனின் நினைவும் ஒரு கணம் வந்து போனது.
காயான் பூவை பார்க்க முடியாதது மட்டுமல்ல. இடுப்பிலிருந்து வழுவிய அவனுடைய ரெடிமேட் காற்சட்டையைக் கூட இழுத்துவிட முடியாது. அவனுடைய ரெடிமேற் சேட்டின் சின்னக்கைகள் தோளின் கீழ்  கமுக்கட்டை இறுக்கத் தொடங்கின. அதைக் கூடத் தளர்த்திக் கொள்ள முடியவில்லை. இவைகளைச் செய்தால் அவன் நடையில் பிந்தி விடுவான். அவன் நடத்தலில் எப்படியாவது அன்றாவது பொன்மணியை தோற்கடிக்க வேணும். காற்சட்டை வழுவி விடாமல் வயிற்றை முட்டித்தள்ளிக் கொண்டு நடந்தான். இடது பக்கத் தோளை அசைத்து அசைத்து ஒருபடியாய் அந்தப் பக்கத்து கமுக்கட்டு இறுக்கத்தை தளர்த்திக் கொள்ள முயன்றான். ஆனால் வலது பக்க கமுக்கட்டு இறுக்கத்தை தளர்த்த எதுவும் செய்ய முடியவில்லை. அப்படி ஏதாவது செய்தால் சாப்பாட்டுக் கரியர் தளம்பி கறி சோற்றுக்குள் வழிந்து விடுமே !
             சின்ன சின்ன எட்டுகள் வைத்து படக் படக் என்று வேகத்தை அதிகரித்தான். வலது கையும் விசுக் விசுக் என்று ஆடியது. கரியரில் கறி கொட்டுப்படுமே என்ற கவலையும் வந்தது. கூடவே ஒரு துணிச்சலும் எழுந்தது. கறி கொட்டுப் பட்டாலும் பரவாய் இல்லை. அன்று பொன்மணியை வெல்ல வேணும். அவனுடைய உதடுகள் குவிந்தன.கண்களின் முழி முன்தள்ளின. மார்பும் தலையும் கூட முன் தள்ளின. பாதங்கள் வறு வறு என வறுவின. வண்டுருண்டை என்று சொல்வார்களே அது போல அவன் உருண்டு போனது போல் தான் இருந்தது. நிச்சயமாக தம்பான்தான் அப்போது முன்னுக்கு நடந்தான். இடையிடையே தன்னையும் பொன்மணியையும் கோடு வைத்துப்பார்த்தான். அவனது நெஞ்சுதான் முன்னுக்குத் தள்ளியது. அவனுடைய தோள்கள்தான் முன்னாடிப் போகின்றன. அவனுடைய கை வீச்சுதான் முன்னுக்கு விழுகின்றன. நிச்சயமாக அவன்தான் முன்னுக்கு நிற்கிறான். அவனுடைய தோள் அருகில் கூட பொன்மணியின் தோள்களைக் காணோம்.
            அவர்கள் இன்னும் கோயில் வெளியின் காயான்பற்றைகளுக்கிடையில் நடந்து காயான் வெம்பை கடக்க முடியவில்லை. பாதங்களை சுடு மணல் சுட்டது. பாவட்டைகளை கடந்தார்கள். அருணகிரி கிழவரின் முந்திரித்தோப்பை நெருங்கினார்கள். பொன்மணி பிந்தியே விட்டாள். அவள் இரணடு எட்டுக்கு ஒரு முறை கொஞ்சங் கொஞ்சமாக ஓடுவது தெரிந்தது. ஓட்டமும் நடையும் ஓடுவதைப் போன்ற நடத்தல் நடத்தலைப் போன்ற மெல்லோட்டம். தம்பானாலும் இதற்கு மேல் நடக்கமுடியாது. அவனும் ஓட்டமும் நடையுமாகினான். அவனுக்கு நாசுக்காக நடப்பது போல் ஓடவும் ஒடுதல் போல் நடக்கவும் முடியவில்லை. 'ஓடுறாய், ஓடுறாய் ' என்று சொல்லி பொன்மணி தம்பானை பிடித்து இழுத்தாள். அவனைப் பின்னுக்கு இழத்துவிட்டு அவள் முன்னேறிப் போனாள். அவனும் பதிலுக்கு  அவளுடைய தோளைப் பிடித்து இழுத்தான். ஆளை ஆள் தோளில் கை போட்டு ஆளை ஆள் இழுத்தபடி சிரித்துக் கொண்டு அருணகிரி கிழவரின் முந்திரித்தோப்பைக் கடந்து எதிரே வந்த ஒழுங்கையின் வாய்க்குள் நுழைந்தார்கள்.
            ஒழுங்கையில் நல்ல நிழல். மெதுவாக நடந்தார்கள். இரண்டு பக்க வேலிகளிலும் புனைமுருங்கை மரங்கள் பொன்னிறமான பூக்களை மணல் முழுவதும் பரப்பி இருந்தன. மஞ்சள் நிறமான வெல்வெற்றுக் கம்பளம் விரித்தது போன்றிருந்தது. தம்பான் பூக்கள் பரப்பப் படாத இடங்களைப் பார்த்து மெதுவாக கால்களை எட்டி வைத்துக் கொண்டு போனான். பொன்மணி பூக்களை காலால் எற்றியபடி நடந்தாள். தம்பானுக்கு கோபம் வந்தது.
'டியே !'
கோபத்துடன் அவன் அப்படியே நின்றான். அவள் நின்று ஆறுதலாகத் திரும்பி, அவனைப் பார்த்து எரிச்சலுடன் கேட்டாள்.
'என்னடா. ? '
பொன்மணி மீண்டும் பூக்களை மிதித்து உழுதபடி நடந்தாள். அவன் ஒரு வினாடி அதே கோபத்துடன் நின்று விட்டு ஆற்றாமையுடன் பூக்களை மிதிக்காமலே நடந்தான்.
           அந்த ஒழுங்கை முடிவில் இன்னொரு ஒழுங்கை வந்தது. அதன் இடது பக்கம் திரும்பி மீண்டும் வலது பக்கம் திரும்பி அடுத்த ஒழுங்கைக்குள் நுழைந்தார்கள்.
           அடுத்த ஒழுங்கையில் நாய்கள் அதிகம். சிதைந்த வேலிகளின் முள்முருக்கு மரங்களுடாக பெண்கள் சட்டிபானை வனைவது தெரியும். அவர்களுடைய நாய்கள் உறுமியபடி படுத்துக்கிடக்கும். சற்று முன்னால் போன பொன்மணி 'உஸ்' என்று நாயை உசுக்காட்டிவிட்டு ஓடினாள். நாய்கள் உறுமிக்கொண்டு ஓடி வந்தன. நாய்கள் தனக்கு கடித்தாலும் பரவாயில்லை, தம்பான் அலறி துடித்துக் கொண்டு ஓடிவர வேணும், தான் நாயின் கடியை வாங்கிக் கொண்டாவது எதிரில் நின்று தம்பானைப் பார்த்து சிரிக்க வேணும் என்று பொன்மணிக்கு எண்ணமா? ஆனால் தம்பான் அதற்கு இடம் கொடுக்கப் போவதில்லை. நாய் வந்தால் வரட்டும். கடித்தால் கடிக்கட்டும், என்று ரோமம் சிலிர்க்க துணிவோடு மெதுவாக நடந்து வந்தான். உறுமிக் கொண்டு வந்த நாய்கள் தம்பானின் பக்கலில் வந்ததும் ஒன்றும் செய்யாமல் போயின. பொன்மணி தம்பானை அதிசயத்துடன் பார்த்தாள்.
'பார்த்தியாகா, எனக்கு நாய் கடிக்கல்லியே ! '
            தம்பான் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொன்னான். அதுதான் தம்பானின் உண்மையான முதல் வெற்றி. தம்பான் பொன்மணியைக் கடக்கிறபோதும் பொன்மணி இன்னும் அவனை அதிசயத்தடன் பார்த்துக் கொண்டு நின்றாள். பின்னர் அவனுக்குச் சமமாக நடந்தபடி அவனுடைய கொழுமையான கால்களைப் பார்த்தாள். காற்சட்டை வழுவும் இடுப்பைப் பார்த்தாள் ரெடிமேற் சேட் இறுக்கும் தோளை பார்த்தாள் அவனுடைய வாளிப்பான கன்னங்களைப் பார்த்தாள். அவனோ கம்பீரமாக நடந்து கொண்டிருந்தான். பொன்மணி ஒன்றும் பேசாமல் தொடர்ந்து மற்றொரு ஒழுங்கையில் சிறிது தூரம் அவன் பின்னால் நடந்தாள்.
            அந்த நடைகளில்தான் தம்பி தம்பானாக உருவானான். பூக்கள் உதிர்ந்தன. பிஞ்சுகள் தோன்றின. அவன் கருமுறுவென்று வண்டுருண்டையாக நடப்பான். பூக்களை ஆசையோடு பார்ப்பான். நாய்களுக்கு பயப்பட மாட்டான். அவனுக்குள் ஒரு அவன் தெரிந்தான். அவன் தம்பியல்ல, தம்பான், தம்பாதீபன்.
            அடுத்த ஒழுங்கையில் பண்டாரம் இருந்தார். பண்டாரத்துக்கு பெரிய பொக்கணி. பொக்கணிக்கு கீழ் வேட்டித்துண்டைக் கட்டிக் கொள்வார். ரப்பர் பந்து அளவு பெரிய பொக்கணி. சில வேளை துண்டு வழுவிக் கிடக்கவும் இருப்பார். அப்போது பொக்கணிக்கு கீழ் நரைத்த ரோமங்களும் தெரியும். அநேகமாக தலையை தொங்கப் போட்டு தூக்கமாக இருப்பார். அபின் போட்ட தூக்கம் கடையில் யாரும் பனாட்டுத்துண்டை எடுத்துக் கொண்டுபோனாலும் அவருக்குத் தெரியாது. அவருடைய பொக்கிணியை பார்ப்பதிலேயே பொன்மணிக்கு விருப்பம். தம்பானுக்கும் விருப்பம். பொக்கணிக்கு கீழே வேட்டித்துண்டு வழுவிக் கிடப்பதை பொன்மணிதான் கவனித்து தம்பானுக்கு காட்டுவாள். அதைப்பார்க்க தம்பானுக்கு பயமாக இருக்கும். கீழே அப்படியொன்றும் அதிகமாகத் தெரியாது. ஆனாலும் தம்பானுக்கு பயம் . அவனுடய அப்பாவின் கமுக்கட்டு மயிர் ஞாபகத்துக்கு வரும். அப்பா கையை உயர்த்த நாவிதன் வேலன் சவரக் கத்தியை தோல்பட்டி மீது மாற்றி மாற்றி தீட்டுவான். நாவிதன் வேலன் நல்ல நெடுவல். அவன் சவரக்கத்தியை தீட்டி முடியும் வரை  அப்பா கையை உயர்த்திய படியே நிற்பார். அப்பாவின் கமுக்கட்டு மயிரை வழிக்கும் போது, பண்டாரத்தாரின் பொக்கணிக்கு கீழே பார்க்க நேரும் போது குனிந்து கொள்வதைப் போலவே குனிந்து கொள்வான். இப்போது போல அப்போதும் அவனுக்கு கூச்சமாக இருக்கும்.
                 பண்டாரத்தாரின் கடையை கடந்துவரும் ஒழுங்கையில் பூவரசு மரங்கள் அடர்த்தியாக நின்றன. ஒழுங்கை ஒடுக்கமாகவும் இருந்தது. பொன்மணி முன்னும் பின்னும் பார்த்தபடி ஒழுங்கையை மறித்து நிற்பாள்.
'டேய், தம்பான், உன்ர பொக்கணியைக் காட்டு '
தம்பான் இல்லை என்பது போல தலையை அசைத்து மறுப்பான்.
'உன்ர பொக்கணியும் பெரிசுதாண்டா. அதுதான் நீ காட்டுறாய் இல்ல '
'இல்ல. என்ர பொக்கணி சின்னது '
;அப்போ காட்டு '
                 தம்பான் அந்த நேரத்தில் தம்பியாவதா ? தம்பி காட்டினால் பொன்மணியும் காட்டுவாள்தானே. தம்பியான தம்பான் உடனே தம்பானாகி விடுவான்தானே. தைரியமாக சேட்டை உயர்த்தி காற்சட்டையின் இடுப்பு ஓரத்தை பணிக்கப் போனால், காற்சட்டை ஏற்கனவே வழுவிக் கிடக்கிறது. தம்பானும் தன்னுடைய பொக்கணியைக் குனிந்து பார்த்தான்.அவனுக்கு சின்ன பொக்கணிதான். பொன்மணி திருப்தி  அடைந்தது போல தலையை அசைத்தாள். தம்பான் பொன்மணியின் ஒட்டிய வயிற்றை சட்டையின் ஊடு பார்த்தான். அவளும் தன் ஒட்டிய வயிற்றை சட்டையின் மேல் பார்த்துவிட்டு, பேசாமல் நடந்தாள். அவன் அவளை ஒன்றும் கேட்கவில்லை.
                 அவர்களுடைய பாதையில் அடுத்து வந்ததெல்லாம் பாழ் வளவுகள். ; பாழ் வளவுகளுடு ஒற்றையடிப் பாதைகள் உருவாகி இருந்தன. ஒரு பாழ் வளவின் முந்திரி நிழலைக் கடந்தால் அடுத்த வளவின் நறுவிலி மர நிழல் வந்தது. பிறகு ஒரு மணற்பாலை. திரும்பவும் சூடு பிடித்தது. இந்தமுறை விடப்போவதில்லை. இடையில் கடற்கரைக்குப் போகும் கிறவல் பாதை குறுக்கிட்டது. அதைக் கடந்தால் தென்னந் தோட்டம். தென்னந் தோட்டம் வரையிலும் பொன்மணிதான் முந்திக் கொண்டிருந்தாள். தென்னந் தோட்டத்தை அடுத்து பரந்த புதர்.
                 அந்தப் பெரிய புதர் அடர்ந்து நீண்டு அகன்றிருந்தது. மேற்கே கண்ணாக்காட்டன் சீனியரின் ஒற்றை வீடு ஒன்றுதான் இடையில். மற்றும்படி பெரிய தார்றோட்டோரம் மர்ணாசின் கம்மாலை வரை இந்தப் புதர்தான். மாமரங்களும் நாவல் மரங்களும் நிறைந்திருந்தன. நறுவிலி மரங்களும் நாயுருவிக் காடுகளும் எக்கசக்கமாக இருந்தன. கிழக்கேயும் கடற்கரைத் தென்னந் தோட்டம் வரை பரந்து போனது. இடையில் வடக்கு மேற்காக தம்பானும் பொன்மணியும் போய் கொண்டிருந்த பொட்டல் காட்டின் வழியே கடற்கரை வீதிக்கும் ஆஸ்பத்திரி ஒழுங்கைக்கும் இடையில் நாலைந்து கிட்டிப்புள் பாட்டம் பாடி ஓடும் தூரத்தை கொண்டிருந்தது.
                 பகலில் அண்டங்காகங்கள் விட்டு விட்ட கத்திக் கொண்டிருக்கும். சிவத்தக் கண்ணும் காவி நிற மார்பும் நீண்ட கறுத்த தோகையும் உள்ள செம்பகங்கள் முக்கு முக்கென முக்கிக் கொண்டிருக்கும். இவைகளெல்லாம் முன்பு தம்பானுக்கு பெரும் பயத்தை உண்டாக்கின. அடர்ந்த மிலாறு புதர்களுககு நடுவில் வானுயர எழுந்து நின்ற காட்டுத் தேங்காய் மரத்தைப் பார்க்க தம்பானுக்கு இன்னும் பயமாக இருக்கும். தேங்காய் அளவான காய்கள் அதில் தொங்கின. சில வேளை கறுப்பும் காவி நிறமுமான பெரிய குரங்கு வெளவால்களும் அதில் தொங்கின. காட்டுத் தேங்காய் மரத்துக்கு பக்கத்தில் மலையளவான செங்காவி கறையான் புற்றுகள் இருந்தன. கறையான் புற்றுகளின் பொந்துகள் தோறும் கருநாகங்கள் படமெடுத்திருப்பதாக  பொன்மணி சொன்ன போது தம்பான் பயந்தான். காட்டுத் தேங்காய் மரமும் கறையான் புற்றும் அவனுடைய பயங்களில் கலந்தே இருந்தன.
              ஆனாலும், நாயுண்ணிப் பழங்களில் அவனுக்கு பெரிய மோகம். சின்ன நீலமணியான நாயுண்ணி பழங்களை கொன்னை கொன்னையாக அப்படியே வாய்க்குள் புகுத்த வேணும் போல தம்பானுக்கு தோன்றும். பழங்களை வாய்க்குள் உப்பிய பின் விதைகளை வாய்க்குள்ளிலிருந்து ஊதி விடுவதும் அவனுக்கு மிகவும் ரஸமான காரியம். நாயுண்ணிப் பற்றைகள் பழுத்து பழுத்து சொலிக்காத போது கூட தம்பான் நாயுருவிப் பற்றைகளை மணிக்கணக்காக பார்த்துக் கொண்டு நிற்பான். நாயுண்ணி மரங்களினது பூக்களின் விசேசந்தான் அது. கன்னி விரிய முதலே அவை மென் மஞ்சள் கல் பதித்த மின்னி போல் தோன்றும் அம்மா போடும் பெரிய வைரக்கல் தோடுகள் போல இருக்கும். பற்றை முழுவதும் இந்த பல வர்ண வைரக்கல் தோடுகளால் நிரம்பி இருக்கும் போது, தம்பான் அவைகளையே பார்த்து இருக்காமல் எப்படி வருவான்? ஒரு பற்றை அல்ல ஓராயிரம் பற்றைகள் அந்தப் புதர் முழுவதும் பூத்து பொலியும்போது அவன் புதரினதும் காட்டுத் தேங்காய் மரத்தினதும் கருநாகப் பாம்பினதும் பயத்தையே மறந்து விடுவான். அல்லாவிட்டால் கூடாரம் போல் சுற்றிவர அடர்ந்து நெருங்கி வெளியில் அரிதாக போவோர் வருவோருக்கு எதுவும் தெரியமுடியாத அந்த நாயுண்ணிப் பத்தைகளின் குகைக்குள் அவன் அவ்வளவு ஆழமாக பூந்து அந்தக் கருநீலப்பழங்களை கைநிறையப் பறிக்க முடியுமா?
              ஆமாம் தம்பான் இந்தமுறை பொன்மணியை முந்த விடப் போவதில்லை. தென்னந்தோட்டத்தை அடுத்து பனை மரங்களுக்கு இடையில் போய்க்கொண்டிருந்தார்கள். பத்தாவது பனையை தம்பான் நெருங்கும் போதே தம்பான் முந்தத் தொடங்கினான். இருபதாவது பனையை கடக்கையில் தம்பான் முந்துவது நிச்சயமாகி விட்டது. தம்பான் முந்திக் கொண்டிருந்த ஒற்றையடிப் பாதை புற்களும் மற்றும் காய்ந்த பனை ஓலை, பாளை, தும்பு, நார், வெட்டிய நொங்கு கீறல்கள், பழசுபட்ட பனங்கொட்டைகள் முதலியவற்றுக்குமிடையே நெளிந்து வளைந்து நீண்டு சென்றது. சிறிது நேரத்தில் நாயுண்ணிப் பற்றைகள் தொட்டந் தொட்டமாக இரண்டு பக்கமும் சூழத் தொடங்கின. நாயுண்ணிப் பற்றைகளின் பக்கம் ஓடிய அவனுடைய கண்களை திரும்ப விடாது அவன் நேரே பார்த்து படக் படக் என்று   காலடிகளை உதிர்த்துதிர்த்து நடந்து கொண்டிருந்தான். இடையில் பொன்மணி எவ்வளவு தூரம் பிந்தி வருகிறாள் என அறியும் ஆவலில் திரும்பினான். என்ன ஆச்சரியம், பொன்மணியைக் காணவில்லை. தம்பானுக்கு திக்கென்றது. காட்டுத் தேங்காய் மரத்தின் நினைவும் கருநாகப் பாம்புகளின் படமெடுத்த தோற்றங்களும் நினைவுக்கு வந்தன. சற்றுத் தூரத்தில் அப்பாலாக உள்ள காட்டுத் தேங்காய் மரத்தின் பக்கம் திரும்பினான். இடையில் மாடுகள் புகும் பற்றை ஓடைகளுக்கிடையே பொன்மணி ஓடிப்போய்க் கொண்டிருந்தாள். கள்ளி ! குறுக்கு வழியாக பற்றைக்குள் புகுந்து ஓடிக் கொண்டல்லவா இருக்கிறாள். அவனும் கத்திக்கொண்டு ஓடிப்போவதற்கிடையில் பொன்மணி ஆஸ்பத்திரியின் கம்பி வேலிக்கிடையில் உள்ளே புகுந்து விட்டாள்.
              தம்பான் அப்பாவிடம் சாப்பாட்டுக் கரியரைக் கொடுத்து விட்டு ஆஸ்பத்திரியின் பின்னால் சவக்காம்பறாவின் கரையிலுள்ள புளிய மரத்தின் கீழே போனான். இரண்டொரு புளியம் பழங்களைப் பொறுக்கினான். பொன்மணி சிரித்துக் கொண்டு ஆஸ்பத்திரி குசினியின் பின்பக்கத்து ஓரமாய் வருவது தெரிந்தது. தம்பான் முகத்தை திருப்பிக்கொண்டு சவக்காம்பறாவின் அடுத்த கரையில் உள்ள மாமரங்களின் கீழே போனான். அணில் கடித்த கொழுத்த செங்களனி மாம்பழங்கள் பல சிதறிக் கிடந்தன. அணில் கடியாத சிவந்த பழங்களும் விழுந்து கிடந்தன. எனினும் அவைகளைப் பொறுக்கி எடுக்கவோ, இரண்டொன்றை வழமைபோல் அவனுடைய காற்சட்டைப் பைக்குள் திணிக்கவோ அவனுக்கு மனம் வரவில்லை. பொன்மணிமீது கோபம் கோபமாய் வந்தது. அவள் இப்படி கள்ளத்தனமாக அவனுடைய வெற்றியை குழப்பலாமா? அவன் கொஞ்சம் கவனியாமல் நடந்து கொண்டிருந்தால் அவள் தான் முந்தியதாகவல்லவா தம்பட்டம் அடித்துக கொண்டிருப்பாள். அவனும் அதை ஒப்புக் கொண்டிருக்க வேணும். அவள் இப்போதும் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறாள். ஆனால் இப்போது அதை தம்பான் ஏற்றுக் கொள்ள மாட்டான்.
                பொன்மணி மாமரங்களின் கீழ் வந்தாள். தம்பான் விசுக்கென்று எல்லா மாமரங்களையும் கடந்து மூன்றாவது டொக்டரின் குவாட்டஸ் பக்கமாக நடந்தான். அவன் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. மூன்றாவது டொக்டரின் குவாட்டஸ் பின் கேற்றோடு ஒட்டியவாறு நேர்ஸ் குவாட்டஸ் பக்கமாக நடந்தான். நேர்ஸ்மாரின் குவாட்டேஸ்க்கு முன்னால் இருந்த பெண்களின் 9வது வார்ட் ஓரமாய் நடந்தான். வராந்தாவில் ஏறி ஆண்களின் 6ம் வார்ட் பக்கமாக நடந்தான் அப்பா சாப்பிட்டு முடித்து கரியரைக் கழுவி வைத்தார்.
                அவன் தனியாக வீட்டுக்கு போவதா, அல்லது பொன்மணிக்காக எங்கேயேனும் காத்திருந்து அவள் கூட நடப்பதா? தம்பான் ஆறாம் வார்ட் படிக்கட்டுகளில் இறங்கி கொண்டே யோசித்தான். இல்லை. அவன் இனி பொன்மணியுடன் சேர்ந்து நடப்பதில்லை. பொன்மணிக்கு பதிலாக சாப்பாடு கொண்டு போகும் போது அகிலேஸ்வரியுடன் சேர்ந்து கொண்டு நடப்பான் பொன்மணியடன் இனி கூட்டு இல்லை.
                தம்பான் 6ம் வார்ட்டின் படிக்கட்டுகளின் கீழ் இறங்கி நின்று பனிச்சை மரத்தின் பழங்களை அண்ணாந்து பாத்துக் கொண்டு நின்றான் பனிச்சை மரத்தின் நிழல் கிழக்கு பக்கமாக சற்று சரிந்து அவன் மீது கவிந்திருந்தது. மேச்சல் முடிந்த ஆடுகள் படுத்தக் கிடந்தன.சின்ன ஆட்டுக் குட்டிகள் வெயிலையும் பாராது துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன.
                அகிலேஸ்வரி தம்பானின் தோளுக்கு இருப்பாள். அவள் கொஞ்சம் சிவப்பு. அவள் சிரிக்கும் போது இடது பக்கம் சின்ன தெத்துப் பல் தெரியும். கன்னங்களில் குழிவிழும் அவளும் ஒரு கீச்சான்தான். பொன்னிறமான கீச்சான். பொன்மணி கரிக்குருவி. 'கரிக்குருவி, கரிக்குருவி, கரிக்குருவி' என்று நாலைந்து முறை பொன்மணியைத் திட்டித் தீர்த்துக் கொண்டான்.
                அகிலேஸ்வரியும் தம்பானும் நல்ல கூட்டு. அகிலேஸ்வரி நல்ல நிறம். சிரிச்ச முகம்.  வெளிச்சமான கண். கண்களில் எப்போதும் ஒரு விளையாட்டுத்தனம். எப்போது கூப்பிட்டாலும் எங்கே போவதன்றாலும் வருவாள். பார்த்தீபனுடன் என்று சொன்னால் அவளுடைய அம்மாவும் தடை சொல்ல மாட்டா. அகிலேஸ்வரி பார்த்தீபனுடைய வாயில் முதலில் அகிலேஸ் ஆனாள். பின் அகிலாவாக மாறிவிட்டாள்.
                விளையாடுவதற்கு எல்லாரும் பொம்மியின் வளவில் அல்லது அகிலாவின் கோயில் வீட்டு வளவில்தான் கூடுவார்கள். இரண்டு இடமும் சீக்கோ மாக்கோ விளையாட நல்ல இடம்.
                பொம்மியின் பக்கம் வீடுகளும் வேலிகளும் ஒரு பத்தைக் காடுந்தான். அகிலாவின் கோயில்வெளி முழுதும் காயான் காடுவரை பரந்து கிடக்கும். கந்தண்ணாவியருடைய பின் வளவு கோயில் வீடு, கவடா வீடு, கருங்காலி மூலை பற்றைகள், வேலியரின் பாழ்வளவு, கராஐ;  வளவு இப்படி பல உண்டு.
                அப்போது அகிலாவின் அப்பனிடம் வண்டில் மாடு இருந்தது. கோயில் வீட்டு வளவின் முந்திரி மரத்துக்குக் கீழேதான் மாட்டுக்கொட்டிலும் வைக்கோல் போரும் இருந்தன.
                 அகிலாவின் மாட்டுக் கொட்டிலின் வளைகளில் மாங்குகம்பு அடுக்கியிருக்கும் நெருக்கமாகப் பரப்பப்பட்டிருக்கும் மாங்குகம்புகளுக்கு மேல் கொள்ளையாக வைக்கோல் கிடக்கும் அங்கேதான் சிலவேளை கோழி முட்டைபோடும். கொட்டிலை வளைத்தும் பெரிய வைக்கோல் போர்கள் தான். மாடுகள் சப்பிக் கிடக்கும். வாசல் பக்கம் தொங்கும் படங்கை அவிழ்த்து விட்டால் உள்ளே இருப்பது ஒன்றும் வெளியில் தெரியாது.
'கீக்கொ மாக்கோ..... வரவா ?'
                ஆஸ்பத்திரியின் 6ம் வார்ட்டின் படிக்கட்டுகளுக்கு உள்ள இந்தப் பனிச்சைக் கிளைகளுக்கூடாகவும் இப்போதும் அந்தக் குரல்கள் தம்பிக்கு கேட்கின்றன. அவர்கள் ஒளித்து விளையாடுவார்கள். தம்பானும் பொன்மணியும் எதிர் எதிர் பக்கத்து தண்டிகளாய் ஆள் எடுப்பார்கள். எப்போதும் பொன்மணிதான் முதலில் ஆள் எடுப்பாள். அவள் முதலில் கோவிந்தனையே எடுப்பாள். கோவிந்தனுக்கு தடிப்பான உதடு. ஓளிப்பதற்கு புதுப் புது இடங்கள் காட்டுவான் . ஒளிக்கிறவர்களை சொல்லி வைத்தாற் போல் கண்டு பிடிப்பான். அவன் ஒருமுறை மூக்கை உறிஞ்சி விட்டுக்கொண்டு உச்சந்தலையில் கையை வைத்தான் என்றால் அவனுக்கு யார் யார் எங்கே ஒளித்திருக்கிறார்கள் என்பது சாத்திரம் போல் தெரிந்து விடும். அவனுக்கு மூக்குறிஞ்சி என்றும் நாயுறிஞ்சி என்றும் பட்டப் பெயர்கள்.
                தம்பான் எப்போதும் முதலில் அகிலாவைத்தான் எடுப்பான் அகிலாவின் வளவுக்குள் உள்ள முடுக்குகள் அவளுக்குத்தான் நல்லாத் தெரியும். ஒளிப்பதற்கென்று புதுப்புது முடுக்குகளையும் அவள் மற்ற நேரங்களில் உண்டாக்கி வைப்பாள். ஓளிக்க ஓடும்போதுதம்பானும் அகிலாவும் ஒருமித்து ஓடுவார்கள்.அவர்களுடைய மாட்டுக் கொட்டிலை அந்தச் சம்பவம் நடக்கும் வரையில் யாரும் கண்டு பிடிக்கவில்லை. மாட்டுக்  கொட்டிலின் முன் படங்கை அவிழ்த்து விட்டு தம்பானும் அகிலாவும் பரணில் ஏறிப் படுத்தக் கொள்வார்கள். மாட்டுக் கொட்டிலுக்குள் யாராவது வந்தாலும் தம்பானும் அகிலாவும் பரணில் வைக்கோலுக்குள் கிடப்பதை காணமாட்டார்கள். கொஞ்ச நேரத்தில் தம்பானும் அகிலாவும் கீக்கொ மாக்கோ விளையாட்டை மறந்து விடுவார்கள்.
               அன்றொரு நாள் மாலையும் அவர்கள் விளையாடத் தொடங்கினார்கள். தம்பானும் அகிலாவும் எங்கெங்கோ ஒளிப்பதாக போக்குக் காட்டி விட்டு வேலி ஓரமாய் பதுங்கிப் பதுங்கி மாட்டுக் கொட்டிலுக்குள் வந்தார்கள். படங்கை அவிழ்த்து விட்டு பார்க்கையில், வளைகளில் அமைக்கப்பட்டிருந்த பரணைக் காணவில்லை. அகிலாவின் அப்பா வேளாண்மைக்கு வேலி அடைக்க பரண் கம்புகளை எடுத்துச் சென்றது அவளுக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது. வைக்கோல் போர்களில் ஏறினார்கள். அங்கு வசதியாக ஒளித்துக் கொள்ள முடியவில்லை.
'பரவால்ல. இந்த இடுக்குக்குள்ள ஒளிப்பம் '
'லேசா கண்டிருவாங்க'
' இந்தப் பக்கம் வர மாட்டாங்க '
                மங்கலுக்குள் நான்கு கண்கள் எல்லாப் பக்கமும் சுழன்றன. பொன்மணியின சத்தம் தூரத்தில் கேட்டது. கோவிந்தனின் மோக்கான் தவளைக் குரலும் கேட்டது. அகிலா ஏதோ ஒரு பொத்தலுக்கூடாக இடைக்கிடை பார்த்துக் கொண்டாள். ஓடுகிற காலடி ஓசைகளும் கதவுகளும் தகரங்களும் தடதடக்கிற சத்தங்களும் கேட்டுக் கொண்டிருந்தன.
'செல்லாச்சி குஞ்சாத்தையிர ஊட்டுப்பக்கம் ஓடுறாங்க. '
' சீதேவிப்பிள்ளர காட்டுக்குள்ள தேடுறாங்க '
'அவங்க இன்னமும் இந்த மாட்டுக் காலய நெனச்சுப் பாக்க மாட்டாங்க'
வெளியில் வண்டில் மாடுகள் வைக்கோல் கற்றையை இழுத்து இழுத்து சப்புவது கேட்கிறது. விட்டு விட்டு மாடுகளின் மணி ஓசை உயர்கிறது.
'கிணிங்... கிணிங் '
பழுத்த வேப்ப மரத்தில் காகத்தின் சிறகடிப்பு.
'கா...கா...கா... கா..'
படீர் என ஒரு வெளிச்சம். படங்கு கிளம்பியது. அவர்களுக்கு எதிரே அவள்-பொன்மணி.
               தம்பானும் அகிலாவும் விறைத்துப் போய் நின்றார்கள். கழன்று கிடந்த காற்சட்டையை குனிந்து எடுக்க தம்பானுக்கு ஒரு வினாடி எடுத்தது. உயர்த்திய சட்டையை கீழே விட அகிலாவுக்கு இன்னும் நேரம் எடுத்தது.
               ஆஸ்பத்திரியின் 6ம் வார்ட் பனிச்சையின் கீழ் ஆட்டுக்குட்டிகள் இப்போது ஒன்றின் மீது மற்றது மறி ஏறத்தொடங்கின. தம்பான் பார்த்துச் சிரித்தான்.
               பொன்மணியின் இளைய அக்கா கலியாணம் நடந்த அன்று. அவர்கள் பொழுது பட்ட பின்னும் நெடுநேரம் விளையாடினார்கள். தம்பான், தம்பானின் அம்மா, அப்பா எல்லோரும் அன்று இரவும் பொன்மணியின் வீட்டில் தான் சாப்பாடு. அகிலா. அகிலாவின் தங்கச்சி அம்மா, அப்பா எல்லோருக்கும் அங்கேதான் சாப்பாடு. சாப்பிட்ட பிறகு பிள்ளைகள் எல்லோரையும் மூத்தக்காவின் வீட்டில் போய் படுத்துக் கொள்ளச் சொன்னார்கள். தம்பான் அம்மாவிடம் தங்கள் வீட்டுக்கு போக வேணும் என்று சிணுங்கினான்.
தம்பானின் அம்மா பொன்மணியிடம் சொன்னா.
'புள்ள தம்பானையும் கூட்டித்து போங்கம்மா. அவன் ஊட்டபோய் தனிய படுக்க மாட்டான்'
'வா. தம்பான்'
              பொன்மணி அன்பாக அவனுடைய கையை பிடித்து கூப்பிட்டாள். அவன் அவளுடைய கையை உதறிவிட்டு காலை நிலத்தில் அடித்து சிணுங்கிக் கொண்டே இருட்டின் ஒளிக்கீற்றுகளிடையே ஊஞ்சலையும் மாட்டுக் கொட்டிலையும் கடந்து அவளுக்கு பக்கத்தில் நடந்தான்.
              மூத்தக்காவின் மண்டபத்தில் குப்பி லாம்பு குருடு பற்றி மங்கியது. அது எப்போது சாகப்போகிறது என்ற கவலை இல்லாமல் அவர்கள் பாயைப் போட்டுக் கொண்டு படுத்தார்கள். ஒரு பத்துப்பேர் இருக்கும்.அவர்களுள் கோவிந்தன் இல்லாதது தம்பானுக்கு நிம்மதி.
               தம்பானிடம் சொல்வதற்கு பொன்மணிக்கு எத்தனையோ கதைகள் இருந்தன. காகம் போட்ட முந்திரிகை கொட்டை பொறுக்கியது, தேத்தா கொட்டைகள் பொறுக்கியது. காஞ்சிரை மரத்து மடுவுக்குள் அவளும் கோவிந்தனும் தூண்டில் போட்டு மீன் பிடித்தது என்று எத்தனையோ கதைகள் சொன்னாள். கோவிந்தன் சொன்ன புதுப் பேய்கதைகள் பற்றியும் சொன்னாள். தம்பானுக்கு பயமாக இருந்தது. உள் வீட்டுக் கட்டிலில் பயமில்லாமல் படுக்கலாம் என்று ரகசியமாகச் சொல்லி அவனைக் கூட்டிப்போனாள். அவர்களைத் தொடர்ந்து வேறு இரண்டொரு பிள்ளைகளும் உள்ளே வந்தார்கள். அவர்கள் தரையில் சிரித்துப் பேசிக் கொண்டு கிடந்தார்கள். சிறிது நேரத்தில் அவர்கள் சத்தமடங்கி நித்திரையாய் போக, தம்பானும் கொட்டாவியோடு புரண்டு படுக்க பொன்மணி போர்வையை தம்பான் மீது போர்த்துவதாய் பட்டது. ஓரே போர்வைக்குள் தன்னையும் தம்பானையும் பொன்மணி போர்த்தி இருப்பது தம்பானுக்குத் தெரிந்தது. எனினும் அவள் தன்னுடைய கதைகளை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாள். இடையில் அவள் அவனுடைய கையை இழுத்து தன்னுடைய கவட்டுக்குள் வைத்தாள். தம்பான் உதறிக் கொண்டு எழுந்தான்.
'வம்பு'
அவள் அவனுடைய தோளை அமர்த்திக் கொண்டு சொன்னாள்.
' பொறு, பொறு, நீ அகிலாவுடன் பழக்கம் செய்ததை நான் எல்லாரிடமும் சொல்றன் '
               தம்பான் இருட்டுக்குள் அடங்கினான். பொன்மணியின் கைகள் அவன் மீது எங்கெல்லாமோ படர்ந்தது. அவள் அவனுடைய கையை எடுத்து அவளுடைய அதில் வைத்தாள். அவனுக்கு அது அப்போதும் அருவருப்பாகவே இருந்தது.
               ஆஸ்பத்திரியின் 6ம் வார்ட் பனிச்சையின் கீழ் ஆட்டுக்குட்டிகள் இன்னும் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன. விளையாட்டுகளில் ஒரு விளையாட்டாகத்தான் அவை இடைக்கிடை மறி ஏறிக் கொண்டுமிருந்தன.
               பொன்மணி பொறுக்கிய மாம்பழங்களுடன் சவக்காம்பறா பக்கமிருந்து குசினிக்கு நேரே வந்துகொண்டிருந்தாள். தம்பான் 6ம் வார்ட்டின் வராந்தாக் கட்டின் தூண் ஓரமாக மறுகினான். கொஞ்ச நேரத்தில் அவள் இரண்டு கரியர்களுடன் வந்தாள். தம்பானுக்கு விலகிக் கொள்ள முடியவில்லை. கரியரை பொன்மணியிடமிருந்து பெறப்போனான். கரியர் பாரமாய் இருந்தது. கரியர் மாறிப்போய் விட்டது. பொன்மணியின் கரியரை திருப்பிக் கொடுத்து தன்னுடையதை பெற்றுக் கொண்டான். பொன்மணி கரியருக்குள் பொறுக்கிய மாம்பழங்களை வைத்திருக்க வேணும்.
பொன்மணி படி இறங்கினாள். தம்பான் அசையாமல் கட்டின் தூண் ஓரமாகவே நின்றான்.
'வாவெண்டா போக'
'நீ போ. நான் தனிய வருவன் '
'நொட்டியென்டா அகிலாட விசயத்தை எல்லாரிட்டயும் சொல்லிருவன்'
                தம்;பான் இறங்கி அவளுக்கு முன்னால் நடந்தான். அவள் அவனை நெருங்கி அவனுக்கு நேராக நடந்தாள்.
                ஆஸ்பத்திரி கம்பி வேலிக்கிடையில் முதுகை பணித்து நெளித்து வெளியேறியதும் நாயுண்ணிப் பற்றைக் கூடாரம் வந்தது. பூக்கள் சிவப்பும் வெள்ளையும் ஊதாவும் மஞ்சளுமாய் சொலித்திருந்தன. தம்பான் அதில் சொக்கிப் போய் மயங்கி நின்றான்.
                பொன்மணி பற்றையின் கூடாரத்தள் புகுந்தாள். உள்ளே அவள் ஓடி ஓடி எல்லாவற்றையும் பிய்த்தெறிவது போல் தோன்றியது. தம்பான் கூடாரத்தின் வாயிலுக்கு போய் நின்று பார்த்தான். பின்பு கத்தினான்.
'டியேய் !'
'என்னடா?'
'பூக்கள பிய்க்காதடி '
'பிய்ப்பன், பிய்ப்பன். பிச்சாத்தான் பழங்கள் இருக்கிறது தெரியும் '
தம்பான் நாயுருவிக் கூடாரத்துக்குள் பாய்ந்து போனான்.
' இந்தாருக்கென்ன பழங்கள் ....'
               தம்பான் கொள்ளை கொள்ளையாய் கருநீல சிறுமணிப் பழங்களை ஆய்ந்து பொன்மணிக்கு நீட்டினான். அவள் அதை எடுத்துக் கொள்ளாமலே கொடுப்புககுள் சிரித்தபடி மேலும் பூக்களை பிய்த்து எறிந்து கொண்டே கூடாரத்துக்குள் ஆழமாக பூந்து போனாள். தம்பானும் பற்றைக்குள் ஆழமாக புகுந்து அவளுக்கு முன்னால் போய் பழங்களை அவளுடைய முகத்துக்கு முன் கண்ணெதிரே நீட்டினான். அவள் வாயைத் திறந்து எட்டி அவ்வளவு பழங்களையும் ஒரே கொதுப்பில் கொதுப்பினாள். தம்பான் மேலும் பழங்களை நீட்ட அவள் அவனுடைய கையைப் பிடித்து தனது வாயருகே கொண்டுவந்து மேலும் கொதுப்பினாள். தம்பானுக்கு சிரிப்பு வர, அதுவே ஒரு விளையாட்டாக இருவரும் ஒருவருடைய கையை மற்றவர் பிடித்தவாறு இன்னும் இன்னும் கூடாரத்தின் ஆழத்துக்குப் போனார்கள். வெளியுலகம் அவர்களுக்கு மூடப்பட்டு விட்டது.
              அண்டங்காகங்கள் இரைந்தன. குயில்கள் கொள கொளவென கத்துவதும் கூக் கூக்வென கூவுவதுமாக இருந்தன. அணில்கள் தொடர்ச்சியாக கீச்சிட்டன. செம்பகம் முக்கு முக்கென்று முக்கியது. வெளியில் யாரோ சருகுகள் சரசரக்க நடந்து போவது கேட்டது. வெளியாருக்கு உள்ளே நடப்பது எதுவும் தெரியாது.பற்றையின் மறைவாக இரண்டு சாப்பாட்டுக் கரியர்களும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருந்தன.