Saturday 3 November 2018

பண்டிகை - தாத்பர்யம்

பண்டிகைகளின் தாத்பர்யம்
**************************************
மத்யமர்ல்ல பண்டிகை சுகமா சுமையான்னு நெறைய அங்கத்தினர்கள் எழுதி தத்தமது பார்வையின் பல்வேறு கோணங்களை பதிஞ்சு ...அதை எல்லோருமே படிச்சு ரசிச்சு ...சுக துக்கங்களை பகிர்ந்தோம்...
பண்டிகையின் ''தாத்பர்யமே'' அதன் தாக்கம் உணர்ந்து அதை வாழ்வியலின் சூத்திரமாய் புரிந்து கடைபிடித்து நம்மை சார்ந்த மற்றும் சாராதவர்களோடு இணைந்த உறவுகளை பேணவே ...என்பது அடிப்படைகளில் ஒன்று ....
ஒரு குடும்பத்திலேயே பல வேறு சூழல்களில் மன வேறுபாடு கருத்து முரண்கள் காரணத்தால் ஒற்றுமையாக கொண்டாடும் கொடுப்பினை இல்லாமல் போகும்....பண்டிகை தினம் பார்த்து பணி சுமையாக வரலாம் ...தொலைவில் இருக்கும் ஆட்களுக்கு விடுமுறை கிடைக்காமல் / பயணிக்க தோதான வாய்ப்பின்மை / டிக்கெட் கிடைக்காமல் போகும் அவலம் ...இன்னும் என்னென்னமோ காரணிகளால் குதூகலம் இழப்பு ...
என்னோட வீட்டில் அப்பா 1975 வரையிலும் மும்பையிலும் 1975-க்குப்பின்னர்1985 வரையில் குவைத்திலும் ....
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜூலை மாதம் புனித ஆசீர்வாதப்பர் ஆலய ஊர்த்திருவிழாவிற்கு வரும் சமயங்களில் மட்டுமே கொண்டாட்டம்...அதுபோக தீபாவளி -திருக்கார்த்திகை-கிறிஸ்துமஸ் - ஈஸ்டர் ன்னு எதுவுமே எங்களோடு அவர் கொண்டாடியதில்லை... ...1985-2013 வரையிலும் ஊரில் இருக்கும் பொன்னான வாய்ப்பு அவருக்கு அமைந்து அதை ஈடு செய்தது கிடைத்த வரம் ...அப்போது ஒரே கொண்டாட்டம் தான் ...அவரோடு சேர்ந்து இருந்த சில ஆண்டுகள் அருமையானவை ...
அப்பாவின் சமையல் ரொம்பவே சூப்பர் ...அவரது சில ஸ்பெஷாலிட்டிகள் பற்றி தனிப்பதிவு போடுவது சிலாக்கியம் ...
அவரது குலக்கோயில் ஆவணி மாதம் (ஆகஸ்ட் செப்டம்பர்) அவர் மட்டும் அவருடைய உடன்பிறப்புக்கள் உறவினர்களோடு போவார்.....எங்க அம்மா கத்தோலிக்கர் ஆகவே எங்களை அனுமதிப்பதில்லை .....
{இப்போது 2016ல் மனைவியோடு போய் அந்த கோயில் தரிசித்து வந்தேன் ) .....
ஸ்ரீராமர் சீதாபிராட்டியார் இலக்குவனார் மூவரும் இலங்கையில் இருந்து திரும்பி வருகையில் ஓய்வெடுத்த இடமென்பது ஐதீகம் ...அவர்களுக்கு பெரிய கோயில் இருக்கிறது......காவல் தெய்வம் முத்துமாடசாமி....
என்னுடைய உறவுகளில் சகோதர சகோதரிகளுக்கு முத்து துரை,முத்துக்குமார் , முத்துகிருஷ்ணன் , முத்து மலர் , முத்து ரமா , முத்து சுந்தரி , முத்துக்கனி ன்னு பெயர்கள் உண்டு ...முத்து சேர்த்தே பெரும்பாலானவர்கள் பெயர் அமையும்...
எங்க குடும்பத்தில் பேதமின்றி இந்து கிறிஸ்தவ பண்டிகைகள் கொண்டாடுவதே வழக்கம் .....நான் விபூதி சந்தனம் குங்குமம் இட மறுப்பதில்லை ....எங்க கிறிஸ்தவ உறவுகள் சிலர் அதை குறை சொல்வதுண்டு ...எனக்கு அந்த சமயங்களில் காது ......கேக்காது ....படையல்களை உண்ணவும் தயக்கம் லேது ...அவைகள் சுவையே தனி ...!!!
குவைத்தில் ஆடிட்டர் எனும் ஹோதாவில் கிளையன்ட் ஆபீஸ் நண்பர்களின் எல்லா மத இன பண்டிகைகளுக்கும் போய் ஜமாய்ச்ச நிகழ்வுகளை அப்பால தனிப்பதிவா போடுவேன் ...ஓகே !!!!
பண்டிகைகள் உறவுகளோடு இணைந்து கலந்து பழகி குதூகல உணர்வோடு புத்தாடைகள் அணிந்து தெய்வம் / ஆண்டவனை தொழுது நன்றி சொல்லி / வேண்டுதல் பல சமர்ப்பித்து ...அருள் பெற்று ....பல்சுவை விருந்து கொண்டாட்டங்கள் சுகித்து ஆனந்தமாய் வாழத்தானே மத்யமர்களே ....!!!!!
எல்லாவற்றுக்குமே பக்கங்கள் இரண்டு ...ஒளியைப்பார்ப்போம் ..ஒளி மயமான வாழ்வை வேண்டுவோம் ...ஓங்கி உயர்ந்து நல் வாழ்வு வாழ்வோம் ....!!!!!
L

லீ மெரிடியனில் ....

1985
ஹோட்டல் லீ மெரிடியன் குவைத்.
எங்களோட ஆடிட் ஆபீஸ் காலாண்டு சோஷியல் கிளப் பார்ட்டி ...
இது ஊழியர்களின் மாத ஊதியத்தில் 2% பிடித்து நிதி சேர்த்து அதனுடன் மானேஜ்மென்ட் தம் பங்கென கணிசமாய் கொடுத்து கொழுத்துப்போகும் தொகை ...
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கொண்டாட்டம் ...
ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் எங்கள் ஆடிட் என்பதால் கட்டணம் குறைவு அல்லது நஹி ...உணவுக்கு கட்டணம் உண்டு ...அதிலும் தள்ளுபடி வகையறாக்கள் இருக்கும் ...
எ.கா : குடிபானங்கள் (நோ ஆல்ஹகால்) ஜஸ்ட் பழ ரசங்கள் / குளிர் பானங்கள் ...ப்ரீ அல்லது சில குறிப்பிட்ட ஐட்டம்ஸ் ..இப்படியாக
இம்முறை லீ மெரிடியன் ...{{{மெரியாட், ஹயாத் ரிஜென்சி,SAS இன்டர்நேஷனல்,ஹில்டன் , ஹாலிடே இன்.....}}}எல்லாமும் லிஸ்டில் உண்டு ...
ஆர்தர் ஆண்டர்சன் பப்ளிக் அக்கவுண்டன்ட்ஸ்
பிர்ம்- குவைத் கிளை ....
.பார்ட்னர்ஸ் ஆறுபேர்கள் மானேஜர்ஸ் பதினைந்து பேர்கள் /சீனியர் சூபர்வைசர்ஸ் / சூப்பர்வைசர்ஸ் / ஆடிட் சீனியர்ஸ் / ஆடிட் செமி சீனியர்ஸ் / ஆடிட்டர்ஸ் & ஆபீஸ் ஸ்டாப் ன்னு ஆண்கள் & பெண்டிர் மொத்தம் ஒரு இருநூறு ப்ளஸ் நபர்கள் ....
மீட்டிங் ச்சும்மா ...
மெய்ன்ப்ரோக்ராம் ....
உண்டி / உணவு தான் ...அப்புறம் கைக்கடிகாரம் / கிராஸ் பென் செட், பதினாலு காரெட் தங்க டை பின் ...இப்படி ஏதாவது கொடுப்பாங்க ...
உணவு ....இதான்ங்க .....மெனு வகைதொகையாய் அமளி துமளிப்படும்...
அம்முறை முழு உரித்த ஆடுகளை நீராவியில் வேக வைத்து பக்குவமாய் வேகவைத்து வெள்ளி சங்கிலிகளில் கோர்த்து தொங்க விட்டு இருந்தார்கள்.
ஆனால் வெட்டுக் கத்தி வைக்க மறந்தார்களோ என்னமோ நாங்கள் பிளேட் கையில் ஏந்தி வெய்ட்டிங் ......
ஆட்டு இறைச்சியோடு பந்தி தொடங்க பௌண்டர் சேர்மன் கட்டளை / அதுவே அலுவலக சாசனம் ....
ஆகவே பசி வயிற்றைக் கிள்ளியும்....மரியாதை நிமித்தம் காத்திருப்பு ...
எனக்கு அப்போ 23 வயதே ...அலுவலகத்தில் மூன்றாவது ஆண்டில் ...வேலையில் நல்ல பேர் பெற்றும் / அரபிக் பேச / வாசிக்க / எழுதத் தெரிந்த ''ஒரே இந்தியன்'' எனும் பெரு மதிப்பும் நிறையவே உண்டு ...
என்னோட மானேஜர் இங்க்லீஷ்காரர் - ''நிக்கோலஸ் சார்ல்ஸ் கோல்மேன்''க்கு அடியேன் செல்லம் என்பதால் கொஞ்சம் ஆட்டம் போடும் குணமும் ...எனக்குண்டு ...
குவைத்தில் ஆங்கிலேயர்களுக்கு அபரிதமாய் மரியாதை ...
பார்த்தேன் பார்த்தேன் ..
கையில் பஃபே பிளேட் உடன் முன்னே பார்ட்னரை ஓவர்டேக் செய்து கைவிரல்களால் பற்றி ஆட்டு மாமிசத்தை ஒரே இழுப்பு ..
அது குறுக்கு வாக்கில் கிழிந்து பெரிய பீஸாக......ஓரடி நீளம் நாலைந்து இன்ச் அகலத்தோடு கையில் ...அப்படியே பிளேட்டில் போட்டுக்கொண்டு அடுத்த கட்டம் போய் விட்டேன் ...
எங்கள் பார்ட்னர் 1970லேயே அமெரிக்காவில் MBA படித்து பட்டம் வாங்கியவர் ... மிரண்டு போனாரே
பார்க்கணும் !!!!
...ஆனால் அரபிக் மொழியில் ஹல ஒல்லா அஹ்சன் ..இந்த மூஹ் தமாம் (ஆஹா உன்னோட மூளையே மூளை ) ன்னு பாராட்டி அவரும் கையால் பிடித்து இழுத்து ...எல்லோருமே பாலோ ஷூட்.....
இம்மாதிரி அசட்டு துணிச்சலுக்கு பேர் பெற்று விளங்கினேன் ....டேபிள் மேனர்ஸ் / எட்டிகேட்ஸ்...இவை கவைக்குதவாது ..பாசாங்கு சாயம் போய்டுமே ...உண்மை நிலைக்கும்ங்கிறது அப்பவே தெரியும் .....மை டியர் மத்யமர்ஸ் !!!!
இன்னும் நிறைய சமாசாரம்....இருக்கு ...
பஃபெ டேபிள் சாப்பிடும் டைனிங் ஹால் இடையே சுமார் நூறடி இருந்த ஒரு சம்பவம் .....அது மெரியாட் கோர்ட் யார்ட் ஹோட்டல் ....
ஒரு ஸ்டூல் கொண்டுவரச்சொல்லி பஃபெ டேபிள் அருகிலேயே உட்கார்ந்து அடியேன் உணவு உண்ட வரலாற்று சிறப்பு அனுபவமும் உண்டு ....!!!!!வழக்கம் போல உடன் பணியாளர்கள் பின்பற்றி தொடர்ந்தார்கள் ....என்பதி சொல்லவும் வேண்டுமோ ?!!!!
===============================================
அலப்பறைக்கு ஒரு முக்கிய காரணம் இருக்கு பௌண்டர் சேர்மன் {{{வீட்டு
காரோட்டியாக பணி செய்த என்னோட}}} தந்தையாரின் முதலாளியான குவைத்திக்கு பால்ய சிநேகிதர் ....வேறென்ன ...அதே அதே ...
**********************************************************************
பின்னே ச்சும்மாவா ?....கல்லூரியிலேயே அர்த்தசாஸ்திரம் கரைத்துக் குடித்த அனுபவம் சொல்லித் தந்த பாடங்களை
வாழ்க்கையில் பிராக்டிகல் ஆக அப்ளை செய்த பீல்ட் சாம்பியன் .....உங்கள் மத்யமர் அலங்கார பெனடிக்ட் ...தி இன்வின்சிபிள்/ invincible
< too powerful to be defeated or overcome > ...!!!!!

பூக்கள்

நந்தவனங்களைவிட்டு இடம்மாறி
கூடைகளில் பூத்திருந்த பூக்களை
நீ ஒருமுறை பார்க்கையில்
மூர்ச்சையாகிறது அனைத்தும்...!

உன்னைப்பார்த்த வேளையில்
மயங்கிப்போன அனைத்தையும்
நீர்தெளித்து எழுப்பிவிடுகிறாள்
பூக்களின் வேதனைபார்த்து பூக்காரி...!
ஒவ்வொரு பூவாய்
தொட்டு... தடவி... இதழ்பிரித்து...
வாய்ப்பளிக்கிறாய்
ஏதோஒரு ஒற்றை ரோஜாவுக்கு...!
தெளித்த நீர்த்துளிகளை
கண்ணீர் துளியாய் காட்சிப்படுத்தி
கவலையோடு கலங்கி நிற்கிறது
மற்ற பூக்கள் அனைத்தும்...!
கோதிவிட்ட கூந்தலோடு
சேர்ந்துக்கொண்டு கர்வப்படுகிறது ஒன்று
தவிர்த்துவிட்ட வே‌தனையில்
தவிக்கிறது மற்றவைகள்...!
கூடி குழைந்து வாடி வதங்கி
உதிரும் வேளையில் கூட
சிரித்துக்கொண்டே சிதைந்துப்போகும்
வாய்ப்பு உன்னோடிருக்கும் பூக்களுக்குத்தான்...!
நொந்து வெந்து வலித்து சகித்து
மாலைவேளையில்
மயக்கிக்கொண்டே மரணிக்கும் வாய்ப்பு
உன்னை அடையா பூக்களுக்கு...!
உனக்கு எத்தனை முறை சொல்லுவது
பூக்கடைகளுக்குச் சென்று
பூக்களுக்குள் கலவரம்
ஏற்படுத்தாதே என்று...!
வேண்டுமென்றால்
அனைத்து பூக்களையும் அரவணைத்துக்கொள்
இல்லையென்றால்
பூக்களை சூடுவதை நிறுத்திக்கொள்...!
உன்னைப்பார்த்து
சில பூக்கள் கர்வப்படுவதையும்
சில பூக்கள் காயப்படுவதையும்
பார்த்து சகிக்கும் மனசு
என்னிடத்தில்லை...!

எறும்புகளின் மனிதர் தினம்

ஒரு மனிதன் =*=ஒரு எறும்பு =*=ஒரு கனவு
***********************************************************
கிணற்றடியில் அமர்ந்து கொண்டு
நகம் வெட்டிக்கொண்டிருந்தேன்.
யாரோ அழைத்தது போலிருந்தது.
வெட்டியெறிந்த நகங்களை
சுமந்து கொண்டிருந்து எறும்புகளில் ஒன்றுதான்..
எனை விளித்திருக்கவேண்டும்.
குனிந்து பார்த்தேன்..
பார்க்க பார்க்க
நானும் சிறிதாகி சிறிதாகி
எறும்புடன் நிற்கலானேன்
என் பெயர் விளம்பி..
எறும்பின் குரல் என் காதில் கேட்டது.
என் பெயர் என என் குரலை உயர்த்தும் முன்
உங்கள் பெயர் மகிழ்நன்
உங்கள் தந்தையார் உங்களை அழைக்கும்போது கேட்டுள்ளோம்.
கருவேப்பிலை மர நிழலில் நனைந்து அதன் வேருக்கும்
மண்ணுக்குமான ஒரு சிறிய சந்தில் எறும்புடன் நுழைந்தேன்.
நான் விழுந்துவிடாது பற்றிக்கொண்டது.
சிறிய வெளிச்சத்தில் பள்ளத்தாக்கு போல் தெரிந்தது.
மிகப் பழமையான இந்த வசிப்பிடத்தில்
உங்களை வரவேற்பதில் நாங்கள் மகிழ்கிறோம்.
இன்று மனிதர்கள் தினம்.
வேப்பம் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பீடம் ஒன்று.
இது எறும்பனார் நினைவு இடம்.
இயற்கை வீசி எறிந்த கொடி மின்னலால்
பார்வையற்ற பின் எறும்பனார் தன் குழுவினரால்
கட்டியது இந்தப் புற்றுக்கண்.
100 ஆண்டுகள் பழமை மிக்கது.
இதன் ஒரு பகுதி இடிக்கப்பட்டு குடியிருப்பாய் மாற
அதன் மேல் 10 வருடமாய் நீங்கள் வசிக்கிறீர்கள்.
கேட்க வியப்பாய் இருந்தது எனக்கு.
ஆதியில் இந்த வனத்தை ஆண்ட
கார்கோடன் பாம்பின் கடைசிச் சட்டை இது.
நான் பயந்தபடி தொட்டுப்பார்த்தேன்.
குறுக்கும் நெடுக்குமாய் சாரை சாரையாய்
எறும்புகள்
நகரத்து வீதிகளில் பறக்கும் கார்களைப் போல
புகையின்றி போய் கொண்டிருந்தது.
இவள் பெயர் முகில்
மழை வேண்டி தவம் இருக்கிறாள்.
யானையும் பாம்பும் அற்புத ஓவியம்
மண்ணும் தானியம் கொண்டு எழுதப்பட்டிருந்தது.
வண்ணன் என்று வரைந்தவன் பெயர் எழுதியிருந்தது.
ஒரு பகுதியில்
உணவுப் பொருட்களாய் நிரம்பிக்கிடந்தன
வெண் சர்க்கரை¸ தேநீர் காபி பொடிகள் உப்பு
அரிசி¸ பருப்பு தானியங்கள் நிறைய அழகாய் தொகுக்கப்பட்டிருந்தன.
இவை அனைத்தும் உங்கள் சமையல் அறையில் சிந்தி வீணடிக்கப்பட்டவை.
இது நினைவிறுக்கிறதா..
சிவப்பாய் கரும்பு போல நீள நீளமாக.. யோசித்தேன்.
உங்கள் மனைவி உண்டாகி இருந்தபோது
உண்ணாமல் கீழே விழுந்த குங்குமப்பூ.
எத்தனை வருடங்கள்
நினைவுகளில் யாரோ வயலின் வாசித்தார்கள்.
திடீரென ஒரு எறும்பு விளம்பனில் காதில் படபடத்தது.
ஓரே கட்டளையில் ஆயிரம் ஆயிரம் எறும்புகள் ஓடின.
என்ன என வினவினேன்.
பக்கத்து வயலில் குழாய் பதிக்க
தந்தம் இல்லா இரண்டு இரும்பு யானைகள் வந்துள்ளனவாம்.
அந்த குழுக்களின் உணவு மற்றும் இருப்பிடத்தை மாற்ற
உதவி செய்ய பணியாளர்களையும் வீரர்களையும் அனுப்பினேன்.
நீங்களும் இடர் வரும் போதுதான் உதவிக்கொள்வீர்களா?
இல்லை எப்போதும் உதவிக்கொள்வோம்.
அவைகளின் கழிப்பிடம்¸ நீர்நிலை
சீராக வடிவமைக்கப்பட்ட அனைத்தும் கண்டேன்.
உங்கள் குழுவின் ராணி எங்கே?
அவள் எங்களின் குழு எண்ணிக்கையை அதிகரிக்க
காமம் தோய்ந்த இறகுகளோடு காதலன் தேடலில் இருப்பாள்.
இரண்டு எறும்புகள் அவரை வணங்கின.
இவள் சுடர்¸ அவள் தோழி சுவை இருவரும் என் மகள் போன்றவர்கள.;
அடுத்த அறையில் இனிப்பின் மணம் வந்தது
என்னைவிட உயரமாக இருந்தது அந்த இனிப்பு.
உயரே அழைத்துச் சென்று காட்டினான்.
அது ஒரு கேக்குத்துண்டு¸ எனக்கு நினைவு வந்ததது.
சென்ற வாரம் கொண்டாடிய
என் மகளின் 5ஆம் பிறந்தநாள் விழா மகிழ்வின் துண்டு.
அமைதியானேன்.
உங்கள் மகளின் பிறந்த நாள் இனிப்புதான்.
எங்களுக்காக அவள் கொடுத்தது.
அந்த விழாவிற்கு எங்களை அழைத்திருந்தாள்
நாங்கள் வந்திருந்தோம்.
உங்களின் மகள் எங்கள் வரவில் மகிழ்ந்திருந்தாள்.
என் கண்கள் கலங்கின.
விளம்பன் தன் கை கொண்டு எனை அணைத்தான.
உங்களைப் போன்ற நல்லவர்கள் வாழும்
இதே உலகில் கொடியவர்களும் உள்ளனர்.
வருந்துகிறோம்.
ஒழுக்கமில்லா மானிடர்களின் பாதகச் செயலால்
உயிர் இழந்த உங்கள் மகள்¸ எங்களின் தோழியின்
மறைவுக்கு வருந்துகிறோம்.
இன்று மனிதர்கள் நாள்.
***************************************************
நான் மீண்டும் மனிதனாக
மாறிக்கொண்டிருந்தேன்.
*****************************************************

தேசியகீதம்

தமிழில் இந்திய தேசிய கீதம்
வங்க மொழியினில் ரவீந்த்ரநாத் தாகூர் அவர்களால் எழுதப்பட்ட இந்திய தேசிய கீதம்...
******************************************************************
ஜன கண மன அதிநாயக ஜெய ஹே
பாரத பாக்ய விதாதா.
பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டா
திராவிட உத்கல வங்கா.
விந்திய இமாச்சல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா.
தவ ஷுப நாமே ஜாகே,
தவ ஷுப ஆஷிஷ மாகே,
காஹே தவ ஜெய காதா.
ஜன கண மங்கள தாயக ஜெயஹே
பாரத பாக்ய விதாதா.
ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே,
ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.
--------------------------------------------------------------------
இதன் நேரடி தமிழாக்கம்...
---------------------------------------------------------------------
மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
பஞ்சாப் மாகாணம், சிந்து நதிப்பிரதேசம், குஜராத் மாநிலம், மராட்டிய மாநிலம்,
திராவிட பீடபூமி, உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம், வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது ..
விந்திய இமாசல யமுனா கங்கா
மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன..
உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.,
உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்..
இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே!
வெற்றி! வெற்றி!! வெற்றி!!! வெற்றி உனக்கே!. பாடிக்கொண்டிருக்கிறோம்..
இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே!
வெற்றி! வெற்றி!! வெற்றி!!! வெற்றி உனக்கே!.
============================================

வெண்ணிலாவும் நள்ளிரவும்

ஒரு வெண்ணிலா பூத்த கோடைக்கால நள்ளிரவில்
**********************************************************************
தமிழ் சினிமாப் படங்கள் காண ஆரம்பித்த போது வயது 5.....ஒண்ணாம் கிளாஸ் போகத் தொடங்கிய வேளை.
எங்க அம்மம்மாவின் சின்ன தங்கை எங்க சின்ன பாட்டி வீடு பக்கத்துக்கு ஊரில்.அங்கு டூரிங் டாக்கீஸ் உண்டு. அங்கிருந்த ரைஸ் மில் டாக்கீஸ் ரெண்டுக்கும் மானேஜர் ஒருவரே. அவர் சின்ன பாட்டியின் கணவர்/// எங்க தாத்தா வழி உறவினரே.
பாட்டிக்கு அரிசி வியாபாரம். தினமும் ரைஸ் மில் போவாங்க. டாக்கீஸ் க்கும் படம் புதுசா போடும்போதெல்லாம் போய் படம் பாப்பாங்க ... ...அவங்க நடிகர் திலகம் ரசிகை .....ஆனா படம் பார்க்க அந்த வேறுபாடெல்லாம் இல்லையே ...வழக்கம் பழக்கமா போச்சுது ....நெறையப் பாப்பாங்க .....
எங்க அம்மா பதினைந்து நாளைக்கு ஒருவாட்டி மாலை நேரம் அரிசி வாங்கப் போய் அப்படியே பாட்டி ஊட்ல ....ராத்தங்கி ஒரு படமும் பார்ப்பதுண்டு ..அவங்க கூடவே நானும் அவ்வப்போது போவேன் ...இப்படியாக நானும் புரிந்தும் புரியாமலும் எப்படியோ ....ஒரு சினிமா ரசிகன் ஆனேன்....ஏராளம் படங்கள் பார்க்கும் வழக்கமும் ஆனது...டென்ட் கொட்டகையில் படங்கள் பார்த்த வேளைகளில் சுவாரஸ்யத்துக்கோ பஞ்சமே இல்லை ...அதெல்லாம் தனிப்பதிவா தான் எழுதணும் ....பார்ப்போம் ....
அப்புறம் பத்தாம் வகுப்பில் படிக்கிறப்போ சைக்கிளில் பக்கத்துக்கு ஊர் டாக்கீஸ் களில் நண்பர்களோடு போக ஆரம்பித்தேன் ...
குமாரவேல், ஜானகி செல்வன்,அருணா திரையரங்குகள் போகும் வழமை ஆனது.
சாலைவழி எல்லாம் ஓகே ...ஆனால் ஊடே கொஞ்சம் காட்டுப்பாதையில் அதுவும் இடுகாடு சுடுகாடெல்லாம் இருக்கும் வழிப்பாதையில் போகும்போது பயம் உண்டு ....நெஞ்சு படபடக்குமே...நடுக்கமும் இருக்கும் ....
கள்ளிக்காட்டு பேய் , விளக்குப்பிசாசு , சுருட்டு முனி ன்னெல்லாம் ஏதேதோ சொல்வாங்க ....ஆனாக்கா சினிமா மோகம் அதையும் மீறி போதையேற்றி ....போக வைக்கும் ...ஒருமாதிரி சாகசமே அதெல்லாம் ......
ஒரு கோடைக்காலம் முழு ஆண்டு விடுமுறைக்காலம் .
''மனிதனும் தெய்வமாகலாம்''.... சிவாஜி படம் ...ஜோடி உஷா நந்தினி ..அப்போ உஷா நந்தினி ன்னா ஒரு ''க்ரஷ்''...கௌரவம் , ராஜபார்ட் ரங்கதுரை,பொன்னூஞ்சல்,என்னைப்போல் ஒருவன் .....எல்லாமே சிவாஜி - உஷா நந்தினி ஜோடி போட்ட படங்களே ...
படம் குமாரவேல் அரங்கில் பார்த்தோம்.அது வேறு கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தை அடுத்தே இருந்தது....ஒரு சிலுவை அடையாளம் போட்டு மனதில் துணிவை ஏற்றி வழக்கமாய் போவேன் ...
அன்றும் வழக்கம்போலவே ....சிலுவையே துணைன்னு போய் .....படம் பார்த்து திரும்பும் போது மணி 11க்கு மேல் ஆகிபோச்சு... ..நல்ல பௌர்ணமி வெண்ணிலவின் பால் போன்ற ஒளி ....கொஞ்சம் அமானுஷ்யம் ....எனக்கோ அமாவாசை இருட்டு கூட பயம் கிடையாது ....ஆனா முழு நிலா வெளிச்சம் கொஞ்சம் ....அதுவும் மேகமே இல்லாம இருந்தா பயமுண்டு....காரணம் தெரியாது...ஆனா பயம் உண்டே ....
நண்பர்கள் இருவரும் சைக்கிளில் எனக்கு முன்னே ...நான் ஒரு ஆலமர அடியில் சைக்கிளில் இருந்தபடியே சிறுநீர் கழிக்க ...அவர்கள் கொஞ்சம் முன்னே போய்ட்டாங்க ...பதட்டம் கொஞ்சம் என்னை தாக்க வேகமாய் பெடல் பண்ணி போனப்போ ....
நடுச் சாலையில் ஒரு வெள்ளையுடை தரித்த உருவம் திடீரென எழுந்து மேலே உயர்ந்து .....பறந்து......மேலே ...மேலே ...எனக்கு சர்வ அங்கமும் ஒடுங்கி ...மேலே தொங்கிக்கொண்டு இருந்த ஆலமர விழுதை பற்றிக்கொண்டு சைக்கிளை விட்டுவிட்டேன் ...ஒரு ரெண்டு தபா ஊஞ்சல் ஆடி பொத்தென் தரையில் குதித்தேன் ...
நண்பர்கள் ரெண்டுபேரும் சைக்கிள்களை திருப்பி என்னலே ஆச்சு ன்னு வந்தாங்க ...ஒருத்தர் சீனியர் ...பாடிபில்டர் .....அவருக்கு சிலம்பம் கொஞ்சம் தெரியும்...போதாக்குறைக்கு அவங்க அப்பாகூட ராக்காவல் ...விவசாய வேலைகளுக்கு ராவேளைகளில் அடிக்கடி போகும் வழக்கம்...ஆகவே என்னைவிட துணிச்சல் ரொம்பவே அதிகமுண்டு ....
எனக்கு கால் ரெண்டும் வெடவெடன்னு நடுங்குது .....வாய் பேச்சு வரல்ல ...குழறுது ...நெஞ்சு படபடன்னு அடிச்சு இதயத் துடிப்பு காதுக்கே கேக்கும் பயங்கரம் ...
அண்ணனின் கைகளை இறுக்கிப்பிடித்து அண்ணே யாரோ வெள்ளைச்சீலை உடுத்த கிழவி டமார்ன்னு ரோட்ல இருந்து எழும்பி காத்துலேயே வானத்தைப் பாத்து பறந்து.....போன மாதிரி ன்னு சொன்னதும் ...என் செவுள்ல (கன்னத்தில்) ஒரு அறைவிட்டார் ....அந்த அதிர்ச்சியில் உடம்பு நிதானம் ஆகிப்போச்சு ...
மூணு பெரும் அந்த பால் போல ஒளியில் சுத்தி சுத்தி பார்த்தோம்...கெழவி பறந்தவ பறந்தவளே ...காணவே காணோம் .....
ஒருமாதிரி மனசு தேறி .....சைக்கிளில் ஏறி ஒக்காந்து ....பெடலை மிதித்து ஊருக்கு வந்து வீடு சேர்ந்தேன் ...
படுத்தேன் ...மறுநாள் லீவு என்பதால் காலையில் எந்திரிக்க வில்லை ...நல்ல காய்ச்சல் ....அம்மாக்கிட்டே மெள்ள கதைய சொல்லி திட்டு வாங்கினேன்....அக்காள்கள் ரெண்டு பேரும் வசவோடு கிண்டலும் ...வீட்ல தான் புலி ....வெளில எலி ...அதுவும் சுண்டெலி ன்னு ஒரே எக்காளம்....பொருமி உறுமி ....எப்படியோ ...முடிஞ்சுது ...போங்க !!!!
இன்றும் 42 ஆண்டுகள் கழித்தும் .....அந்த குறிப்பிட இடம் கடந்து போகையில் நினவுத்திரையில் இந்த பயங்கர திகில் ''ஸீன்'' திரைப்படம் போல ஓடும் ...
வாழ்க்கையில் விடை இன்றுவரை கிடைக்காத புதிரான நிகழ்வு ...மனப்பிராந்தி / விஸ்கி ?!!!மாயத்தோற்றம் ?!!!!அமானுஷ்யம் ...
இந்த 57வயதிலும் புரியவே இல்லீங்கோ !!!!
உங்களுக்கு இம்மாதிரி அனுபவம் ?....
பகிரலாமே ////மத்யமர்ஸ் !!!!!

ஹைக்கூ

#ஹைக்கூ' கவிதை வடிவம் ..... குமுதத்தில் நட்சத்திர எழுத்தாளர் பன்முக படைப்பாளி திரு. ரங்கராஜனின் (அதாங்க ''சுஜாதா'' - இவர் மேல் கொண்ட பற்று காரணமாக என் அக்காள் மகள் என் மருமகளுக்கு 'சுஜாதா' ன்னே பெயர் வைத்தேன் 1980ல் ) மூலமே அறிமுகம் ....
------------------------------------------------------------------------------
'ஹைக்கூ' எழுத பல மரபுகள் இருந்தாலும் அதில் முக்கியமானது, மூன்றே வரிகள் இருக்க வேண்டும், மூன்றாவது வரியைப் படிக்கும் வரை முதல் இரண்டு வரிகளில் என்னதான் சொல்ல வருகிறார்கள் என்று சஸ்பென்சாக இருக்க வேண்டும், மூன்றாவது வரியில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட வேண்டும். அந்த வகையில் அழகான சில என்னுடைய படைப்புக்கள் ''ஹைக்கூக்கள்''...... இதோ:-
***********************************************************************
* பணக்காரன் ஆகிவிட்டான் பாகன்
இன்றும் பிச்சையெடுக்கிறது
கோவில் யானை.....
------------------------------------------------------------
* ஆணி பித்துக் கொண்ட கால்களுடன்
தைக்கிறான் செருப்புக்களை
செருப்பு தைக்கும் கிழவன் ....
--------------------------------------------------------------
* ஆயிரம் பெற்றோர்கள் உண்டு
முத்தமிட ஒரு குழந்தை இல்லையே
முதியோர் இல்லம் ..........
----------------------------------------------------------------
* நெடுஞ்சாலை விபத்து
உயிருக்கு போராடி இறந்தார்
ஆம்புலன்ஸ் டிரைவர்........
-------------------------------------------------------------------
* எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து
போராடியோர் எரித்துவிட்டனர்
ஏழை குடிசைகளை.......
-----------------------------------------------------------------
*பட்டினி சாவை எதிர்த்து
ஊர் மக்கள் அனைவரும்
இன்று உண்ணாவிரதம்.......
------------------------------------------------------------------
* அதிக வலியில் அழும் போது
"அம்மா" என்று கத்திவிடுகிறது
அனாதை குழந்தை......
-------------------------------------------------------------------
கமெண்டுங்க மத்யமர்ஸ் ...ப்ளீஸ் !!!!

கல்யாண சாவு

2009 அக்டோபர் 17 சனிக்கிழமை.தீபாவளி திருநாள்
--------------------------------------------------------------------------------
காலை ஒரு எட்டுமணி .....நாங்கள் கிறிஸ்டியன்ஸ் ஆகவே கொண்டாட்டம்ன்னாலே அசைவமே பிரதானம் ////பிரமாதம்!!!!!
ஒரு சேவலை கழுத்தை முறித்து கொன்றேன் . இனி வெந்நீரில் முக்கி இறக்கை இன்னபிறவற்றை சுத்தம்செய்து மஞ்சள் தடவி மங்கலக் குளியல் நடத்தி அப்பால ..
வெட்டு குத்து தான் ...வேறென்ன ....
------------------------------------------------------------------------------
ஒரு பொடியன் ஓடோடி வந்தான் ...'பெரியப்பா செத்துட்டாரு' ன்னு நாக்கு குழற சொல்லி ... சொன்னவன் ஓடியே போனான் ...
ஏற்கனவே இரண்டு ஆண்டுகாலம் படுக்கையில் இருந்தவரே ...'' 86 வயது '' ......எனவே பெரிய சோகமில்லை.போனதும் ஆறுதலான விஷயமே ...கல்யாண சாவு ...ன்னே சொல்வேன் ....
ஆனா தீபாவளி அன்னிக்கு..அதுவும் சனிப்பொணம் ..இதான் என்னோட மனசில் மின்னல் அடிச்ச ஒரே விஷயம் ..
பக்கத்துக்கு தெரு உறவுகள் ஒவ்வொண்ணா வந்து கடைக்கோடியில் இருந்த என்னோட வீட்டு வழியாக வடக்கு பக்கம் போய் கிழக்கில் பெரியப்பா வீடு ...
எங்க அப்பா உடன் பிறந்தோர் அவரையும் சேர்த்து மொத்தம் 10பேர்கள் ...ஏழு ஆண்கள் மூன்று பெண்கள் ...
பாலாம்மை மாமி தலைச்சன் ...அப்புறம் முத்துச்சாமி (இறந்தவர்) ...எங்க அப்பா அஞ்சாவது ....ஒரு அக்காள் மூன்று அண்ணன்கள் இரண்டு தங்கைகள் மூன்று தம்பிகள் ...கணக்கு சரியா?
பெரியப்பா பனையேறி & விவசாயி ...
கையளவு நிலம் இல்லாமல் பனையேறி பதநீர் /கருப்பட்டி வணிகம் ..ஆடு மாடு கால்நடை செல்வம் பலுகி பெருகி இறக்கும்போது சுமார் பதினான்கு ஏக்கர் ப்ளஸ் நிலம் ஒரே இடத்தில அவருக்கே சொந்தம்...தென்னந்தோப்பு உண்டு ...
அவருக்கு மக்கள் எட்டு பேர்.ஐந்து பெண்கள் மூன்று ஆண்கள் .
நல்ல சிலம்பாட்டக்காரர்.வர்ம அடி///கலை நிபுணர். பெரிய பலசாலி .
ஒரே ஒரு எ.கா: 1971-ல் எனக்கு அப்போ 10வயசு ஆரம்பம் ...பெரியப்பா கூட வயலுக்கு போனேன்....அது ஒரு ஞாயிறு அன்று.....
பெரியப்பா இரண்டு வாழைக்குலைகளை கயிற்றில் முடிந்து தோளில் துண்டு போல போட்டுக்கொண்டு பக்கத்து ஊரில் சந்தையில் விற்கப் போகும் வேலை...வாழைக்குலையில் தலா நூறுக்கு மேல் காய்கள் ...அப்போ மொத்தம் இருநூறு ....உயரம் மூன்றடிக்கு மேலேயே ...எனக்கு தோள் உயரம் ...இருந்த நினைவு உண்டு ....
நானும் கூடவே போனேன் ..வழியில் ஆட்களை குசலம் விசாரித்து வெற்றிலை போட்டுக்கொண்டு பொறணி பேசி..இப்படியே சந்தை போன நேரம் ஒரு மணி இருக்கும் ..அவர் அந்த வாழை குலைகளை தோள் மாற்றவே இல்லியே...இன்னும் சில சம்பவங்கள் அப்பால தனியா சொல்வேன்...
பெரியப்பா வீடு முன்னால் பெரிய கூட்டம் ..அவங்க வீடு மெய்ன் ரோடு.எங்க உறவுகள் எக்கச்சக்கம் உள்ளூரிலேயே ....எல்லோருமே குஞ்சு குளுவானுங்க கூட ...
யாருக்குமே பெரியப்பா தீபாவளிக்கு செத்துப்போனது பெரிய துக்கமாக இல்லை ....இனி கொண்டாட முடியாதே ன்னு தான் ஒரே சோகம் ....சிலர் எண்ணெய் தேய்த்ததை துண்டால் வழித்தபடியே வந்த்து கலந்து கொண்டது..சோகமே !!!!
பொறவென்ன .... காரியங்கள் மாலையில் முடிந்து வந்து குளித்து இரவுக்கு சேவலை போட்டுத்தள்ளி ...நாட்டுக் கோழிக்குழம்பு...ருசிக்கு கேக்கணுமா என்ன ..கோலாகல தீபாவளி சாப்பாடு மதியம் மாறி இரவு ஆகிப்போனது எனக்கு ஒன்றும் சோகமில்லை ...
ஆனால் எங்க அப்பாவைவிட என்னைக்கவர்ந்த பெரியாவின் மறைவு அப்புறமா கொஞ்சங்கொஞ்சமா என்னை அழ வைச்ச சோகம் ....அது என்னோட சுய சோகம் ...அவரது கல்லறைக்கு போவேன்...தனியாக இருந்து பழசெல்லாம் நினைப்பெனுங்க ...அது ...சொன்னா புரியுமா ?.....ம் ஹூம் !!!!!
எங்க அப்பா மும்பை குவைத் ன்னு பொழைப்ப தேடிப்போனதால அவர் இல்லாத குறையை தீர்த்தவர் பெரியப்பாவே ...
எனக்கு ஸ்பெஷலா ஒரு பனையில் நல்ல இனிப்பு பதநீர் இறக்கி சில்லாட்டையால் வடிகட்டி ஈ எறும்பு நீக்கி ஒரு பூவரசு மரத்தடியில் வைத்து அவரு தரும் ..அது நினைவில்...கண்ணில் நீர் கசிவு...நான் போகும் வரை அந்தப்பனையில் பதநீர் இறக்க மாட்டார் ...எம்பேர்ல அத்தனை பிரியம் ..அன்புள்ள என்னோட பெரியப்பா ....!!!!!
ஒருநாளில் சுமார் நூறுக்கு மேலேயே பனை காலை மாலை ஏறி இறங்கும் உடல் உரம் ...விவசாயப்பணிகள் ..பெரிய மீசை உண்டு ...இன்னும் இன்னும் ...என்னே எண்ணங்கள் !!!!!
இப்போ அதே மீசை என்னோட தம்பி ஜெகராசா அவர் இரண்டாம் மகன் என்னோட செட்டு தானுங்க ......வைத்துள்ளான் ..அனுமதி கேட்டு போட்டோவை போடுறேன் ...ஓகே!!!!
என்னென்னவோ சொல்லி ...அதையெல்லாம் நினைவுக்கு கொண்டு வந்த பதிவைப்போட்ட அட்மின் திரு கீர்த்தி வாசன் ராஜாமணிக்கு ஒரு ஓ போடுங்க !!!!!
நன்றி திருவாளர் ....KR அவர்களே !!!!!!

அமுத அன்னம்

பூமிக்கு பச்சை பட்டு ஆடை அணிந்தது போல், பச்சை பசேல் என இருக்கும் நெல் வயலில், சிதறி கிடக்கும் பயிர்களை உண்ணும் பறவைகளின் சத்தம், நடக்கும் வழி பாதை எல்லாம் தென்னை , மா மற்றும் பல மரங்களின் நிழல், அதனுடன் கூடிய குளிர்ந்த காற்று வீச, தர்மனின் வீட்டை நோக்கி சென்றான் முருகன் .
“ஐயா…” என்கிற குரல் கேட்டதும், வீட்டிலிருந்து அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் வெளியே வந்தார்.
“நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேணும்?”
“என் பெயர் முருகன். இந்த பேப்பர்ல, வயலும் தோப்பும் விற்பனைக்குன்னுற விளம்பரத்தை பார்த்தேன். அதன் வந்தேன்”
“யாருக்கு வேணும்? உங்களுக்கா!!”
“ஆமாம்”
“உங்கள பார்த்தா, படிச்ச புள்ள மாதிரி தெரியுது. நீங்க இந்த வயலை வாங்கி, என்ன பண்ண போறிங்க”
“இந்த வயல் தோப்பை எல்லாம் அழிச்சிட்டு, வெளிநாட்டுக்கு மாமிசங்களை ஏற்றுமதி பண்ற தொழிற்சாலை ஒன்னு கட்ட போறேன். இந்த இடம் ஊருக்கு வெளிய இருக்கு. அதுமட்டுமில்லாமல் நல்ல தண்ணீர் வசதியும் இருக்கு. அதான்”
“ஓ….. அப்படியா!!” என்று பேசிக்கொண்டே இருவரும் நடந்தனர்
மின் இயந்திரத்தில் தண்ணீரை நீர் விழ்ச்சியை போல், சுழற்றி ஊற்றிக்கொண்டிருக்கும் இடத்தில் அமர்ந்தனர்.
“இது என்ன ஐயா? இவ்வளவு வேகமாக தண்ணீரை கொட்டுது”
“இது பம்பு செட்டுப்பா”
“இந்த தண்ணி எங்க போகுது?”
“இங்க இருக்கிற மாமரம், தென்னை மரம், வேப்பமரம்முன்னு எல்லாத்துக்கும் போகுது.
இங்க இருக்கிற சில மரத்துக்கு என்னோட வயசு. எங்க அப்பா நான் பொறந்தப்ப வைச்சது. இதோ உன் பக்கத்துல இருக்கிற மரம், என் பையன் பொறந்தப்ப நான் வைச்சது”
“உங்க பையன் எங்கே? நீங்க மட்டும் தனியாவா இருக்கிங்க?”
“இல்லப்பா, என்கூட இந்த மரங்களும், நான் வளர்க்கிற ஆடுகள், மாடுகள் கோழிகள் என நான் ஒன்னத்தான் இருக்கிறேன். இந்த மரங்களையும், வயலையும் பார்த்தாலே நான் தனியா இருப்பது போல எனக்கு தோனாது”
“அப்போ உங்க மனைவி எங்க?”
“எனக்கு ஒரே பையன். அவன் இந்த வயல் வேலையெல்லாம் செய்யகூடாதுன்னு, நல்லா படிக்க வச்சேன். அவனும் படிச்சு முடிச்சுட்டு அமெரிக்கா போயிட்டான். அங்க போனவன் எங்களை மறந்துட்டு, அங்கேயே ஒரு பொண்ண கல்யாணம் செஞ்சுகிட்டான். அதுவே எங்களுக்கு ஒரு வருஷத்துக்கு அப்புறம்தான் தெரியும். எனக்கு பேத்தி பொறந்திருக்குன்னு, அத பார்க்க யாரும் இல்லன்னு என் பொண்டாட்டிய, அமெரிக்கா கூட்டிட்டு போனான்.
அங்க ஆறு மாசத்துக்கு முன்னாடி, கேன்சர்ல என் மனைவி இறந்த செய்தி போன் மூலம் வந்துச்சு. எனக்கு பாஸ்போர்ட் இல்ல. அதனால உடனடியா என்னால போக முடியல. அங்கிருந்து பாடிய கொண்டுவர நிறைய செலவாகுமுன்னு, என் பையன், எல்லா காரியத்தையும் அங்கே முடிச்சிட்டான். அமெரிக்கா போகும்போது அவளை நான் கடைசியா பார்த்தது” என கூறும் போதே தர்மனின் கண் கலங்கியது. அதை கேட்ட முருகன் மனம் கலங்கினான்.
“அப்போ ஏன் இந்த இடத்தை விற்குறிங்க” என முருகன் கேட்க, “என் பையன் வினோத்துக்கு அமெரிக்கால பிஸ்னஸ் தொடங்கனுமாம். அதனால இந்த இடத்தை எல்லாம் விற்றுட்டு, நானும் அவன்கூட வரணும்னு கண்டிப்பா சொல்லிட்டான். நாளைக்கு அவன் வந்துடுவான். நீங்களும் நாளைக்கு வந்தா பேசி முடிச்சிடலாம்” என தர்மன் பதிலை கேட்டு, அவ்விடம் விட்டு நகர்ந்தமுருகன், அந்த வயல் மரங்களுடனான தர்மனின் பந்தத்தை எண்ணி வியந்து சென்றான். தானும் இது போன்ற ஒரு இயற்கை சூழலில் வளரவில்லையே என்ற ஏக்கத்துடன் தன் பயணத்தை தொடர்ந்தான்.
மறுநாள் வினோத் மனைவி மகளுடன், அமெரிக்காவிலிருந்து வீட்டிற்கு வந்தான். தர்மனும் முதன் முதலாக வந்த தனது பேத்தியை கண்டு ஆனந்தம் கொண்டார். அச்சு அசலாக தன் மனைவியை போல் பிறந்திருந்த அவளை, எடுத்துக்கொண்டு வயலை சுற்றி காண்பித்தார். பேத்தியின் கையால் புதிய ஒரு மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார். பின்பு வீட்டிற்கு வந்த தர்மன், நிலத்தின் பத்திரத்தை எடுத்து, வினோத்திடம் நீட்டினார். அத்துடன் ரமேஷ் வந்ததையும் கூறினார்.
பத்திரத்தை கையில் வாங்கிய வினோத், “நான் அம்மாவ இழந்துட்டேன். அவங்க பாசத்த விட்டு நான்தான் ரொம்ப தூரம் போய்டேன். சந்தோசம் என்பது நம்முடன் இருக்கும் வரை, அதன் அருமை தெரியாது. அது இல்லை என்ற போதுதான், அதன் அருமையும், இழப்பும் நமக்கு புரியும். அம்மாவிற்கு வந்த கேன்சர் கெமிக்கல் நெறஞ்ச உணவால வந்ததுன்னு டாக்டர் சொன்னங்க.
என் அம்மாவை இழந்தது போல, என் குழந்தையும் நான் இழக்க விரும்பல. நம்ம வயல்ல, கெமிக்கல் இல்லாத நல்ல தானியங்களா விவசாயம் பண்ணி, நோயில்லா வாழ்க்கையை உருவாக்கணுப்பா, மனுஷன் உயிர் வாழ ரொம்ப முக்கியம் உணவு. அந்த உணவே விஷமா மாறி, நம் உயிரை எடுக்க கூடாது.
எனக்கும் உங்கள போலவே நல்ல விவசாயம் செய்யறது எப்படின்னு கத்து கொடுங்க. இனி வரும் சமுதாயம் நம்ம பாரம்பரிய உணவை உண்டு, ஆரோக்கியமான வாழ்வை வாழட்டும். நாம் நம் பரம்பரையை காப்பாற்றி, அடுத்த தலைமுறைக்கும், இதனை கற்பித்து, அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாய் திகழ்வோம்” இதை கேட்ட தர்மன், உற்சாகத்தில் தன் மனைவி போல் இருக்கும் தன் பேத்தியை அரதழுவி முத்தமிட்டு தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
நம் நாட்டின் முதுகுஎலும்பான விவசாயத்தையும் விவசாயிகளையும் ஆதரிப்போம். இயற்கை உரங்களை உபயோகித்து, வளமானதொரு பாரதத்தை உருவாக்கி, நம் வாழ்நாளை நீட்டிப்போம்.
**********************************************************************
சோறு /அன்னம் சம்பந்தமான ஒரு கொசுறு கதை
--------------------------------------------------------------------------------
அடையாள சிக்கல் - Identity Crisis.
இதன் தொன்ம குறியீடு கர்ணன்.
மனித துயரங்களில் அடையாள சிக்கல் எனும் அவலம் பிரதானமானது.
அருந்ததி ராய் "The God of small things" நாவலில் கர்ணனை பற்றி சொல்வது இப்படி!
A brilliant Clown in a bankrupt circus!
கர்ணனின் தோல்வி தோல்வியே அல்ல.
In his miserable defeat lies Karna’s supreme triumph!
...
கிரா கேட்டார் என்னிடம்
"கர்ணன் செய்யாத தர்மம் என்ன தெரியுமா ?"
சொல்லுங்க அய்யா - நான் திரும்ப கேட்டேன்.
" பசித்த வயிறுக்கு சோறு '"
'ஏன் தெரியுமா .கர்ணன் பொண்டாட்டி அவனுக்கே சோறு போட மாட்டாள் . தேரோட்டி மகன் என்ற பூர்வீகம் பட்டத்தரசிக்கு தெரிந்த விஷயம் என்பதால் கர்ணன் மீது அலட்சியம் .அவனுக்கே சோறு கிடைக்காத போது அவன் மற்ற பசித்த வயிறுகளுக்கு எப்படி சோறு போடுவான்?!'
....
கவிஞர் சுகுமாரன் ஒரு கட்டுரையில் கர்ணன் பற்றி அபூர்வ தகவல்கள் கொடுத்திருந்தார்.
கர்ணன் எழுபது ஆண்டுகள் உயிர் வாழ்ந்தான்.
அவனுடைய வளர்ப்பு பெற்றோர் அதிரதன், ராதை இருவரும் அவனுக்கு சூட்டிய பெயர் வசுஷேணன்.
கர்ணனுக்கு இரண்டு மனைவியர். வ்ருஷாலி, சுப்ரியை.
மூன்று புத்திரர்கள்.
இரண்டு பேர் மூத்த தாரத்து பிள்ளைகள். சுப்ரியை யின் ஒரு மகன்.
கவிஞர் சுகுமாரன் ' மகாபாரதத்தின் இலக்கிய மேன்மை - இதிலுள்ளது வேறு பல இடங்களில் இருக்கலாம். ஆனால் இதில் இல்லாதது வேறு எங்கும் இருக்காது.'
+++++++++++++++++++++++++++++++++++++++++++++

போகன் வில்லா பூக்கள்

#காகித மலர் - சிறப்பு சிறுகதை
*********************************************
அரக்கு நிறத்தில் ஆரஞ்சு கலர் பார்டர் வச்ச பட்டுப் புடவையில் வசுமதி தேவதையாக ஜொலித்தாள். கிறிஸ்டல் மற்றும் மணி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஆரஞ்சு கலர் ஜாக்கெட் இன்னும் அவளின் அழகை கூட்டியது. இடையை மீறி நீண்டிருந்த கருநாகம் போன்ற ஜடையில் மூன்று வரிசைகளாக தொங்கவிடப்பட்டிருந்த மொட்டு மலராத மல்லி அவளுக்கு மேலும் அழகு சேர்த்துக் கொண்டிருந்தது. குறுகிய நெற்றியும், வகிட்டில் வைக்கப்பட்ட சிகப்பு நிற குங்குமமும் அவள் அழகை மேலும் பிரகாசமாக்கின.
அவள் அழகிற்கு தானும் சளைத்தவனில்லை என காட்டிக் கொண்டான் கமலேஷ். வயலட் கலர் முழுக்கை சட்டையும், அடர்ந்த கறுப்பு நிற ஜீன்ஸ் பேண்டும், தூக்கி வாரிய ஹேர் ஸ்டைலும் அவனை ஆணழகனாக்கின.
“என்னடா வசு, ரெடியா? இதோ, அதோன்னு சொல்லி ஒரு மணி நேரமாச்சு. உன் அண்ணன் குழந்தைய தொட்டிலில் போட தான் போறோம். நீ வரும் வேகத்தை பார்த்தால் பிறந்த நாளுக்கு தான் போவோம் போலிருக்கே”ன்னு கிண்டல் செய்தான்.
”சாரிபா. இதோ ரெடியாயிட்டேன். புது பட்டுப்புடவையில கொசுவம் வைக்க வரல. அதான் லேட் ஆய்டுச்சி. நீங்க காரை ஸ்டார்ட் பண்ணி வைங்க. நான் வீட்டை பூட்டிட்டு வரேன்”
வசுமதியும், கமலேஷும் காதல் மணம் புரிந்தவர்கள். இருவரும் ஒரே ஜாதியாக இருந்ததால் திருமணம் யார் தடையுமில்லாமல் இனிதே முடிவு பெற்று வருசம் பத்தாகி விட்டது. யார் கண்பட்டதோ இந்த ஆதர்ச தம்பதிகள் கொஞ்சி மகிழ குழந்தை செல்வம் இல்லை.
கமலேஷ் செல்வத்தில் திளைப்பவன். வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லைன்னாலும், அப்பா விட்டுச் சென்ற பிஸினசை திறம்படவே நடத்தி வருகிறான். உடன் பிறந்தவர்கள் என்று யாருமில்லை. கமலேஷுக்கு பத்து வயதாக இருக்கும் போதே அவனை பெற்றவள் இறந்து போனாள். தந்தையும் இவனுக்கு மணம் முடித்த கையோடு புண்ணியஸ்தலங்கள் நோக்கி பயணப்பட்டார்.
வசுமதி முற்போக்கு சிந்தனை கொண்டவள். குழந்தை இல்லை என்ற வருத்தம் உள்ளுக்குள் இருந்த போதிலும் அதை வெளிக்காட்டியதில்லை. அப்படி வெளி காட்டிக் கொண்டால பார்ப்பவர்களின் இரக்கத்திற்கு ஆளாக கூடும் என்பதால் அதை தவிர்த்தாள். குழந்தை இல்லை என்பதற்காக ஒருபோதும் சாமியையோ, சாமியாரையோ நாடிச் சென்றதும் இல்லை.
அவளுடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணன், ஒரு தங்கை. அண்ணனுக்கு போன தையில் தான் திருமணம் முடிந்திருந்தது. இதோ குழந்தையும் பெற்று தொட்டிலில் போட போகிறான். தங்கைக்கு திருமணமாகி பத்தாவது மாதமே பெண் குழந்தையை பெற்றெடுத்தாள். இப்போது அந்த குழந்தைக்கு ஒரு வயதாகிறது.
கமலேஷும், வசுமதியும் விசேஷத்துக்கு வந்து இறங்கிவிட்டார்கள். சம்பிரதாய விசாரிப்புகள் எல்லாம் முடிந்து அனைவரும் குழந்தையோடு தொட்டிலருகே சூழ்ந்தனர். வயதில் மூத்த பழம் ஒன்று குழந்தையை தொட்டிலில் போட்டுவிட்டு அதன் காதில் பெயரையும் கிசுகிசுத்துவிட்டு சென்றது. "கொழந்தைக்கு அத்தைங்க வந்து கொழந்தே காதுல பேரை சொல்லிட்டு போங்கோ" என்று அழைத்தவுடன் வசுமதி கணவனுடன் தொட்டிலருகே சென்றாள்.
அதை பார்த்து அங்கிருந்த அனைவரும் ஒருவருக்கொருவர் குசுகுசுவென பேசிக்கொண்டனர்.
அந்த சமயம் பார்த்து வசுமதியின் தாய் பொற்கொடி அவளை தடுத்து, "வசு, நீ முதல்ல போக வேண்டாம்மா. உன் தங்கை போகட்டும். எல்லாரும் முடிச்ச பிறகு நீ போ. நான் சொல்ல வர்றது உனக்கு புரியும்னு நினைக்கறேன். எல்லாம் குழந்தையோட நன்மைக்குதான்மா சொல்றேன்" என்றதை கேட்டு வசுமதிக்கு நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சியது போன்றிருந்தது.
அப்படியே பின்னோக்கி வந்து நின்றாள்.
தங்கை சுமதி கையில் தன் குழந்தையோடு தவித்து கொண்டிருப்பதை பார்த்து விட்டு வசுமதி அவளிடம் சென்று, " சுமி, நீ போய் குழந்தைக்கு பேர் சொல்லிட்டு வா. அதுவரைக்கும் நான் உன் பொண்ணை பார்த்துக்கறேன்" என்றாள்.
"அய்யோ.... இல்ல வசு.... அவ யார்கிட்டயும் அவ்வளவு சீக்கிரம் போக மாட்டா. அழுவ ஆரம்பிச்சுடுவா. உனக்கு எதுக்கு வீண் சிரமம். நானே வச்சுக்கறேன்" என்று நாசூக்காக குழந்தையை தராமல் தவிர்த்தாள்.
இந்த கூத்தையெல்லாம் கமலேஷ் கண்டும் காணாதவன் போல இருந்தான். வசுமதிக்கு ஆறுதல் சொல்ல போக அது மேலும் அவளை கழிவிரக்கம் கொள்ளச் செய்யுமே என்று அமைதியாக இருந்தான். இனிமேல் அங்கிருப்பதில் பிரயோசனமில்லை என்று உணர்ந்தவளாய் வசுமதி தாயிடமும், அண்ணன் மனைவிடமும் சொல்லிவிட்டு கிளம்பலாம் என அவர்களிடம் சென்றாள்.
"அண்ணி, எனக்கு குழந்தையை தூக்கும் தகுதி தான் இல்லாம போச்சு. இந்த செயினையாவது குழந்தைக்கு போடுவீங்களா?" என்று கேட்டவுடன் .....
அண்ணி அவசர அவசரமாக, " என்ன வசு அப்படி கேட்டுட்ட? தாராளமா செயினை போடலாம்" என்றாள் வாயில் முப்பத்திரண்டு பற்களும் தெரியும்படி.
வசுமதி அந்த செயினை குழந்தைக்கு அணிவிக்காமல் அண்ணியின் கையில் கொடுத்துவிட்டு, தாயிடம் சொல்லிவிட்டு கணவனுடன் கிளம்பிச் சென்றாள்.
"என்னங்க, வண்டிய பீச்சுக்கு விடுங்க. கொஞ்ச நேரம் பேசிட்டு போகலாம்"
"எனக்கு தெரியும் வசு, கண்டிப்பா பீச்சுக்கு போக சொல்லுவேன்னு" என்றபடி உதட்டில் மெல்லிய புன்னகையை தவழவிட்டு காரை பீச் ரோடு பக்கம் திருப்பிச் சென்றான்.
இருவரும் ஆள் நடமாட்டம் குறைந்த இடத்தை தேர்வு செய்து அமர்ந்தார்கள். சிறிது நேரம் பலவித எண்ணங்கள் மனதில் அலைமோத கடலலைகளை வெறித்து பார்த்து விட்டு சகஜ நிலைக்கு மீண்டு பேச தொடங்கினாள் வசுமதி.
"குழந்தை இல்லாம இருக்கறது அவ்வளவு பெரிய சமூக குற்றமாங்க? நாமா குழந்தை பிறப்பை தள்ளி போடுறோம்? நமக்கு மட்டும் குழந்தையை கொஞ்சும் ஆசை இல்லையா என்ன? இன்னைக்கு பங்சன்ல கவனிச்சீங்களா? என்னை பெத்த தாயே அண்ணன் குழந்தையை நான் முதல்ல தூக்கி பேர் வைக்க கூடாதுன்னு சொன்னாங்க.கூட பிறந்த தங்கையே அவ குழந்தையை என்கிட்ட தந்தா குழந்தைக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பயந்து தர தயங்கினா. பெத்தவங்களும், கூட பிறந்தவங்களுமே என் மனசை புரிஞ்சிக்காத போது இந்த ஊரும் உலகமும் புரிஞ்சுக்காம போனதுல என்ன தப்பு இருக்க முடியும்? இவங்களோட இந்த ஈனத்தனமான செய்கையால என் மனசு எந்த விதத்துலயும் காயப்படல.
குழந்தை இல்லையேன்னு மண்ணோட மண்ணாகி போற அளவுக்கு நான் தளர்ந்தும் போகல. அது பிறக்கும் போது பிறக்கட்டும். எனக்கு நம்ம மேல நம்பிக்கை இருக்கு. இதனால கோயில் கோயிலாவும் நான் அலைய போறதில்ல. இவங்களுக்கு பதில் சொல்ற காலம் வரும்போது நான் இவங்கள பார்த்துக்கறேன். கடைசி வரைக்கும் உங்களோட அன்பும், புரிதலும், அரவணைப்பும் இருந்தா அதுவே போதுங்க எனக்கு" என்று ஆதரவாக அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
அவள் பேசி முடிக்கும் வரை காத்திருந்து, அவளுடைய முன் நெற்றி முடிகளை ஒதுக்கி விட்டபடி, " எனக்கு தெரியும் டா வசு, இன்னைக்கு பங்க்சன்ல நீ கண்டிப்பா மூட் அப்செட் ஆவேன்னு. உனக்கு அங்கேயே ஆறுதல் படுத்த நினைச்சேன். அது மேலும் உன்னை கவலைப்பட செய்யுமேன்னு சொல்லாம விட்டுட்டேன். உன்னோட இந்த தன்னம்பிக்கையும், தெளிவான சிந்தனையும் இருந்தாலே போதும் எதுவும் சாத்தியமே. உனக்கு எந்த துறையில் ஆர்வமிருக்கோ அதுல நீ உன்னை ஈடுபடுத்திக்க. உன் எல்லா முன்னேற்றங்கள்லயும் நான் துணையா இருக்கேன். குழந்தை பிறக்கும் போது பிறக்கட்டும். அதுவரை நமக்கு நாமே குழந்தைகளா இருப்போம்" என்று அவளின் மென்மையான கைகளை எடுத்து கன்னத்தில் வைத்துக் கொண்டான்.
மேலும், இரண்டு வருடங்கள் கடந்து விட்ட நிலையில் வசுமதி, தனக்கு பதினைந்து நாட்கள் தள்ளி போனதை தெரிந்து கொண்டு பதட்டப்படாமல், உணர்ச்சி வசப்படாமல் கணவனிடம் சொன்னாள். அவனும் அவ்வாறே உணர்ச்சியை வெளிகாட்டிக் கொள்ளாமல், தாமதிக்காமல் அன்று மாலையே அவர்களின் குடும்ப டாக்டரிடம் சென்றார்கள். செக்கப்பெல்லாம் முடிந்து அவள் தாய்மையடைந்திருப்பதை உறுதி செய்தார். இருவரும் அப்போதும் உணர்ச்சிகளை வெளிகாட்டிக் கொள்ளாமல், வரும் வழியில் ஒரு தரமான இனிப்பகத்தில் இனிப்புகளை வாங்கி குவித்துக் கொண்டு பக்கத்தில் இருந்த அனாதை இல்லத்திற்கும், முதியோர் இல்லத்திற்கும் சென்று அவர்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள்.
வீட்டிற்கு வந்தவுடன் மனதில் இத்தனை நாள்பட்ட அவமானங்கள், வேதனைகளை கண்ணீரால் கழுவினாள். அவள் கர்ப்பமாக இருப்பதை கூட பிறந்த வீட்டிற்கு தெரியப்படுத்த விரும்பவில்லை. சரியாக பத்தாவது மாதம் அவள் அழகையும், கமலேஷ் அழகையும் சரிபாதியாக கொண்டு இளவரசன் போல் ஒரு மகன் பிறந்தான். அந்த குழந்தையை தொட்டிலில் போடும் விசேஷத்திற்கு பிறந்த வீட்டினரை அழைத்திருந்தாள். அனைவரும் வந்திருந்தனர்.
அவளுடைய தாய் பொற்கொடி குழந்தையை தூக்கி கொஞ்ச ஆவலோடு அருகில் வந்தாள். உடனே வசுமதி, "அம்மா, ஒரு நிமிஷம், என்னுடைய விருந்தாளிகள் வந்துடட்டும். அவங்க தூக்கி ஆசிர்வதிச்சு பேர் வச்சி தொட்டில்ல போட்ட பிறகு நீங்க தூக்கினா போதும்" என்றாள் அமைதியாக.
பொற்கொடி அதை கேட்டு விதிர்விதிர்த்து போய் நின்றாள். இருக்கும் அத்தனை முக்கிய உறவுகளும் வந்துவிட்டார்கள். இன்னும் இவள் யாருக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள் என அனைவரும் ஆவலாக இருந்தார்கள்.
அப்போது வீட்டினுள் ஒரு பெண்கள் கும்பல் வந்து நுழைந்தது. அவர்களை பார்த்து வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் கேலியும், கிண்டலும் செய்து முகம் சுளித்து நகைத்தார்கள். ஏனென்றால் வந்திருந்த பாதி பேர் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், பாதி பேர் சமுதாயத்தால் மேடையின்றி 'ஏழரை ஒன்றரை', 'ஒன்போது', 'ரெண்டுங்கெட்டான்', 'அரவாணிகள்' என பல பட்டங்கள் சூட்டப்பட்ட திருநங்கைகள்.
அதில் வந்திருந்த வயதில் மூத்த திருநங்கையில் ஒருவரிடம் வசுமதி, குழந்தையை எடுத்து தந்து ஆசிர்வதிக்க செய்து பெயரிடச் சொன்னாள். அந்த அம்மாளும் மிகுந்த சந்தோஷத்துடனும், கண்களில் கண்ணீரோடும் குழந்தையை ஆரத்தழுவி உச்சி முகர்ந்து பெயரிட்டு தன்னாலான அன்பளிப்பை வசுமதி மறுத்த போதும் குழந்தையின் கைகளில் தந்துவிட்டு வசுமதிவிடம், "அம்மா, தாயே உன்னோட இந்த உயர்ந்த குணத்துக்கு, நீ புருஷன் புள்ளைகளோட நூறு வருசம் நல்லாயிருக்கணும்.
எல்லாரும் உன்னை மாதிரியே நல்ல மாதிரி சிந்திச்சா எங்களுக்கு இந்த நிலைமை ஏன் வர போவுது? எங்க சொந்தங்கள் கூட எங்களை வீட்டு விசேஷத்துக்கு அழைச்சதில்ல. நீ இத்தன வருசம் கழிச்சு குழந்தை உண்டாகி பெத்தெடுத்திருக்க. எங்களையும் ஒரு மனுசியா மதிச்சு கூப்பிட்டு பெத்தவங்களையும் ஒதுக்கி வச்சுட்டு எங்களை முன்னாடி சபைல நிக்க வச்சி கெளரவ படுத்திட்ட மா. எங்களுக்கு இந்த மரியாதையே போதும். ரொம்ப சந்தோஷமா இருக்குமா" என்று கண்களில் நீர் பெருக்கோடு உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.
வசுமதி அடுத்தடுத்து நீண்டகாலம் குழந்தைபேறு இல்லாத பெண்களை அழைத்து குழந்தைக்கு பெயரிடச் சொல்லி வாழ்த்தி செல்லும்படி கேட்டுக் கொண்டாள். அவர்களும் அளவிலா மகிழ்ச்சி கரைபுரண்டோட குழந்தையின் பெயரை காதில் சொல்லி ஆசை தீரும் மட்டும் குழந்தையின் அழகை கண்டு ரசித்து கொஞ்சி விட்டு சென்றனர்.
இவர்களெல்லாம் முடித்தபிறகு தாயின் பக்கம் திரும்பினாள். "என்னம்மா, நம்ம வீட்டுக்கு சிறிதும் சம்பந்தமில்லாதவங்கள அழைச்சு குழந்தைய தொட்டில்ல போல சொன்னேன்னு பார்க்கறீங்களா? என்னை இதுபோல ஒரு நல்ல விஷயத்தை செய்ய உத்வேகமா இருந்தவங்களே நீங்கதானே. அதுக்காக என்னோட நன்றியை தெரிவிச்சுக்கறேன். நீங்க தானே அண்ணனோட குழந்தையை தொட்டிலில் போட்டு பெயர் சொல்ல நான் வந்தபோது குழந்தையில்லாதவள்னு தடுத்தீங்க? நானும் உங்க வயித்துல தானே பொறந்தேன். அண்ணனை போலவும், தங்கச்சிய போலவும் நானும் ஒரு குழந்தைக்கு தாயாவேன்னு ஏன் நம்பல. எப்பவும் பட்ட மரமாவே இருப்பேன்னு முடிவே பண்ணிட்டீங்களாமா? தங்கச்சி கூட அவ குழந்தைய என்கிட்ட தந்தா ஏதாவது ஆகிடுமோன்னு நினைச்சி தரல. இப்படிபட்ட குறுகிய சிந்தனையுள்ள உங்களை அழைச்சு முதல்மரியாதை தருவதை விட, இவ்வளவு நாள் குழந்தையில்லாம நான்பட்ட மனவேதனைகளையும், ரணங்களையும், வலிகளையும் தினம் தினம் சந்திச்சுட்டு இருக்கும் இவங்கள அழைச்சு தந்தா உண்மையான சந்தோஷமும், மனபூர்வ ஆசீர்வாதமும் கிடைக்கும்னு தெரிஞ்சி தான் இவங்கள கூப்டேன்.
மணமில்லாத காகித மலரை யாரும் தலையிலும் வைக்க மாட்டாங்க. கடவுளுக்கும் மாலையாக்கி போட மாட்டாங்க. குழந்தையில்லாதவங்களும், திருநங்கைகளும் இன்னைக்கு அந்த நிலைமைல தான் இருக்காங்க.
போதும். இந்த பன்னிரண்டு வருஷத்துல உறவுகளோட உண்மையான முகங்களை நான் பார்த்துட்டேன். நான் பண்ண ஒரே புண்ணியம் எனக்கு கிடைத்த கணவர். அவரோட துணையில்லாம என்னால இத்தனை முள் பாதைகளை கடந்து நான் வந்திருக்கவே முடியாது. எனக்கு இந்த உறவுகளே போதும்" என அவள் உணர்ச்சி பிரவாகமாக மாறி பேசியதை கண்டு அவள் தாய் உட்பட வந்திருந்து அனைத்து உறவுகளும் தலைகுனிந்தனர்.
தன் தாய் பேசுவது முற்றிலும் நியாயமே என்று ஆமோதிப்பது போல தன் பொக்கை வாய் காட்டி சிரித்தது தொட்டிலில் இருந்த குழந்தை.
*******************************************************************

என்னோட யோக ஜாதகம்

என்னோட யோக ஜாதகம் :- பனை ஓலைச்சுவடி
*****************************************************************
பிறந்தேன் மாசி மாசம் 30 இரவில் பங்குனி 1 அதிகாலையில் .....
ஆங்கிலம் ன்னா ....மார்ச் 13 -14....நேரம் அதிகாலை 3-4 க்குள் ...சரியான வேளை...தெரியாது ...
பொக்கிஷம் போல இந்த பனையோலை சுவடிகளை வைத்துள்ளேன் ...
எங்கு போனாலும் கூடவே கொண்டு போவேன் ....
கஸாக்ஸ்தானில் ஆயிரம் அமெரிக்க டாலர் வரை பேரம் பேசி கைப்பற்ற பார்த்தவர்கள் உண்டு...
ஏதோ பரம ரகசிய அபூர்வ ஓலைச்சுவடின்னு நண்பர் ஒருத்தர் கொளுத்திபோட்ட புண்ணியம் ...
இப்போதுள்ள மத்யமர்ஸ் இளையோருக்காக பதிவிடுகிறேன் ...நிறைய பேர்களுக்கு கண்டிப்பாக தெரிய / தெரிந்திருக்க வாய்ப்பு ?.....நஹி
ஏனையோரும் கண்டுகளியுங்கள் ....
லைக்குங்கள் கமெண்டுகளை வாரி வழங்கி தீபாவளி சிறப்பு பரிசாக கொடுத்து கொண்டாட உதவுங்கள் ....
🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏

கஸாக் தீபாவளி

சிறுவயது முதல் கொண்டாடிய தீபாவளிகள் வரிசை கட்டி நிக்குது ..
அணையா தீபமும் வாடா மலரும் கொண்டு வசந்த உற்சவம் ஆக கொண்டாடிய தீபாவளிகள் ...
அப்பா முறை இந்து உறவுகளின் பாச வலையில் சிக்கி ஆனந்த மயமாக கொண்டாடிய உள்ளூர் கொண்டாட்டங்கள் ....
பள்ளி நண்பர்கள் நிறைய பேர்கள் இந்துக்கள் உண்டு என்பதால் அவர்கள் வீட்டுக்கே போய் கொண்டாடிய வளரிளம்பருவம் ஸ்பெஷல் கொண்டாட்டங்கள் ...
கல்லூரியில் திருச்சி தில்லை நகரில் பிலிம் டிஸ்ட்ரிபியூஷன் தொழிலாளி (அவர் முதலாளி என சொல்வதில்லை ) திருவாளர் ராமசாமியோடு திருச்சி மலைக்கோட்டையில் தாயுமானவார் சுவாமி கோயில் அருகே அவரது குடும்ப நண்பர் ஒருவர் சுற்றத்தாருடன் கொண்டாடிய தீபாவளி ....{{{திரு ராமசாமி கட்டை பிரமச்சாரி }}}
சென்னையில் லயோலா காலத்திய நண்பர்கள் ஸ்ரீனிவாசன் ராகவன் சூளைமேடு , அனந்தகுமார் ஆயிரம் விளக்கு பகுதி , புதுப்பேட்டை கண்ணன் ....இவர்களுடன் கொண்டாடிய தீபாவளி ...
1991ல் மும்பையில் மலாடு வெஸ்ட் ஜெய் ஜனதா நகர் கொண்டாட்டம்....
ஒருவாரம் பட்டாசு ஒளி&ஒலியில் ...யம்மாடி மங்களூர் ஷெட்டி குரூப் இளையோர்களின் அதகள கொண்டாட்டங்கள் ...அருமை ...
எனக்கு ஒலி மாசு அலர்ஜி ...ஆனாலும் அவர்களின் பண்டிகைக்கால கொண்டாட்ட உற்சாகம் பாராட்டி மெச்சத்தக்க ஒன்றே என்பதில் உடன்பாடு தானுங்க !!!!
மீண்டும் 1993-95சென்னை திருவான்மியூர் வீட்டில் ....
ஆனா ....
1996 ல் மத்திய மேற்காசிய கஸாக்ஸ்தானில் கொண்டாடிய ''தலை'' சிறந்த ''தலை'' தீபாவளி பற்றியே இப்பதிவு .....
****************************************************************
அங்கு அல்மாட்டி நகரில் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் ஆடிட்டர் பணியில் ...
அங்குள்ள புகழ் பெற்ற மருத்துவக் கல்லூரியில் இந்திய மாணவர்கள் பல மாநிலம் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடன் அவர்களின் விடுதியில் கொண்டாடிய ஒரிஜினல் இந்தியா நாட்டு தீபாவளி பற்றி சொல்லவே விரும்புகிறேன்.
எண்ணெய்க்குளியல் நஹி ...
இந்திய வகை பட்சணங்கள் இல்லை ....
பட்டாசு லேது ...
ஆனால் அந்த தீபாவளியில் எங்கள் அன்பே எண்ணெய் என எல்லோரையுமே ஆகர்ஷித்து ....
உற்சாமான உரையாடலே இனிப்பு தித்திக்கும் பலகாரங்கள் ஆகி .....
அதிர் வேட்டு சிரிப்புக்களே பட்டாசு தோற்கும் முழக்கமாகி ...
ஆஹா அதுவல்லவோ பேரானந்தம் ...இன்பம் கொள்ளையோ கொள்ளை !!!!
அதெல்லாம் மனக்கண்ணில் திரையில் ஓடுதுங்க !!!!புளகாங்கிதம் .....
-----------------------------------------------------------------------------
இன்று 22 ஆண்டுகளுக்கு பின்னர் என் எண்ணத்தில் உறைந்து போன மகத்தான அந்த என்ன அலைகளை உயிர்ப்பித்து மத்யமர்ஸ் உங்களோடு பகிர்வதில் எல்லையில்லாத ஆனந்தமே ....
----------------------------------------------------------------------------
காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை உள்ள அத்தனை இந்தியக் குடிகளின் ஒன்று சேர்ந்த இணைப்பில் தீபாவளியின் இலட்சணங்கள் இல்லாமல் போனாலும் ...அந்த கொண்டாட்டம் தந்த உவகை உற்சாகம் ஈடு இணை இல்லாதது என அடித்துச் சொல்வேன் ...
பீகாரி புவனா , ஒரிய அனுபமா , குஜராத் மங்களா , ஆந்திரா நிர்மலா ,பஞ்சாபிய ரஞ்சனி ,டில்லி பிரஷாந்தி ....இன்னும் இன்னும் ஆண்கள் பெயர்கள் சொல்லணும்ன்னா ரமேஷ், முஹிதீன் ,தாமஸ் ,மைக்கேல் , மணிபிரபு, சோமாஸ்கந்தர்...அது பெரிய லிஸ்ட் ...
பெயர்கள் நினைவில் நிற்க காரணம் ஆட்டோகிராப் புத்தகமே ...ஓகே
அதற்கு முன்னரும் அப்புறமும் எவ்வளவோ தீபாவளியை இந்த 56 பிளஸ் வருட ஆயுளில் கொண்டாடினாலும் .....
இதுவே ''தலை'' என சிறப்பு பெற்று விளங்கும்...''தலை தீபாவளி'' ..!!!!No automatic alt text available.