Sunday, 14 October 2018

மூளை

ஆண்மூளை - பெண்மூளை !!!!
===================================
பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது!
உதாரணமாய் ...
பெண்ணால், தொலைக்காட்ச்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும் முடியும். ( உங்கள் வீடுகளிலும் பார்த்திருப்பீர்கள்.)
ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, ஆண்களால் தொலைக்காட்ச்சியைப்பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேச முடியாது! ( அவர்களின் கவனம் தொலைக்காட்சியில் இருக்கும் அல்லது தொலை பேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது! )
மொழி.
=======
பெண்களால் இலகுவாக பல மொழிகளைக்கற்றுக்கொள்ள முடியும்!
அதனால் தான் சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் பலர் பெண்களாக இருக்கின்றார்கள். 3 வயது ஆண்குழந்தையுடன் ஒப்பிடும் போது அதே வயது பெண்குழந்தை அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருப்பதற்கும் மூளையின் இந்த அமைப்பே காரணம்.
பகுத்துணரும் திறன் (ANALYTICAL SKILLS)
=====================================
ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகளை பகுப்பாய்வு செய்து தீர்மானத்திற்குரிய படிகளை தீர்மானிப்பதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாளான இடம் ஒதுக்கப்படுகிறது. அதனால், எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆணகளின் மூளையால் இலகுவாக ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
ஆனால், பெண்களின் மூளையால் இதை செய்ய முடியாது. அது மட்டுமல்லாது பெண்களால் ஆண்கள் வைக்கும் தீர்மானத்தையும் உணர்ந்துகொள்ள முடியாது.
வாகன‌ம் ஓட்டுதல்.
==================
வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் போது, தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, வாகனத்தின் போக்கில் ஏற்பட இருக்கும் மாற்றங்களை (சிக்னல்ஸ்) முன் கூட்டியே விரைவாக கணித்து அதற்கு ஏற்றபோல் நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளையால் முடியும்.
ஆனால், பெண்களின் மூளை தாமதமாகவே இந்த கணிப்புக்களை மேற்கொள்ளும்.
இதற்கு காரணம், ஆண்களின் “ஒரு பணியை செய்யக்கூடிய மூளைத்திறன்”ஆகும். உதாரணமாக வாகனம் செலுத்தும் போது இசையைக்கேட்டுக்கொண்டிருந்தாலும் ஆண்களின் கவணம் வாகனம் செலுத்துவதில் தான் இருக்கும். பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால் வாகனங்களை செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள்.
பொய்ப்பேச்சு!
=============
ஆண்கள் பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும் போது, பெண்கள் இலகுவாக பொய் என்பதை அறிந்துகொள்வார்கள்! ஆனால், பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணரமுடிவதில்லை.
காரணம் பெண்கள் பேசும் போது 70% ஆன முக மொழியையும் 20% உடல் மொழிகளையும் 10% ஆன வாய் மொழியையும் உணர்கின்றனர். ஆண்களின் மூளை அவ்வாறானதில்லை!
பிரச்சனைக்கான தீர்வுகள்.
========================
பல பிரச்சனைகள் இருக்கும் ஒரு ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தீர்வை படிப்படியாக இனங்காணும். இதனால் பிரச்சணையுள்ள ஆண்கள் தனிமையில் தமது தீர்வுகளை கண்டுகொள்வார்கள்.
ஆனால், இதே அளவு பிரச்சனையுள்ள ஒரு பெண்னின் மூளையானது பிரச்சனைகளை தனித்தனியாக பிரித்தறியாது…. யாராவது ஒருவரிடம் தமது முழுப்பிரச்சனைகளையும் வாய்மூலமாக சொல்வதனூடாக திருப்தியடைந்துகொள்ளும்.
சொன்னதன் பின்னர், பிரச்சனை தீர்ந்தாலும் தீராவிட்டாலும் அவர்கள் நின்மதியாக படுத்துறங்குவார்கள்.
தேவைகள்.
==========
மதிப்பு, வெற்றி, தீர்வுகள், பெரிய செயலாக்கங்கள் என்ற ரீதியில் ஆண்களின் தேவைகள் அமைந்திருக்கும்.
ஆனால், உறவுகள், நட்பு, குடும்பம் என்ற ரீதியில் பெண்களின் தேவைகள் அமைந்திருக்கும்.
மகிழ்ச்சியின்மை.
ஒரு பெண்ணிற்கு தனது காதல்/ உறவுகளிடையே பிரச்சனை அல்லது திருப்தியின்மை இருந்தால்… அவர்களால், அவர்களின் வேலையில் கவணம் செலுத்த முடியாது.
ஆனால், ஒரு ஆணிற்கு தனது வேலையில் பிரச்சனை இருப்பின் அவர்கள் காதல்/ உறவுகளில் கவணம் செலுத்த முடியாது.
உரையாடல்.
============
பெண்கள் உரையாடும் போது மறைமுக மொழிகளை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால், ஆண்கள் நேரடி மொழியையே பயன்படுத்துவார்கள்.
நடவடிக்கை.
============
பெண்கள் சிந்திக்காமல் அதிகம் பேசுவார்கள். ஆண்கள் சிந்திக்காமல் அதிகம் செய்வார்கள்!
ஆண்கள், பெண்களிடையேயான உறவுகளில் ஏற்படும் பிரச்சனைக்கான உண்மையான அறிவியல் காரணத்தை தற்போது உணர்ந்திருப்பீர்கள். 
---------------------------------------------------------------------------------
நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். 
----------------------------------------------------------------------------------

நவராத்திரி

நவராத்திரி வரலாறு
****************************
தேவி மகாத்மியத்தில் சொல்லப்பட்டிருக்கும் நவராத்திரி விரதம் உருவானதற்கான புராணக் கதை.
===========================================
சும்பன், நிசும்பன் என்ற அண்ணன், தம்பி இருவரும், அரக்கர்கள். அவர்களது அக்கிரம ஆட்சி தாங்காமல், மக்கள் தவித்திருக்கின்றனர். இந்த அரக்கர்களை எப்படியாவது அழித்து, மக்களைக் காப்பாற்ற வேண்டும் என, சிவா, விஷ்ணு, பிரம்மா (மும்மூர்த்திகள்)விடம், தேவர்கள் முறையிட்டிருக்கின்றனர்.
மும்மூர்த்திகளும், மகா சக்தியைத் தோற்றுவித்து, அவளுக்குத் தங்களது சக்தியையும், ஆயுதங்களையும், வாகனங்களையும் அளித்தனர்.
ஒரு பெண்ணால் மட்டுமே .......அவர்களுக்கு அழிவு / முடிவு ...என்பது விதி ...
நன்றி - மத்யமர் நண்பர் திரு .வாசுதேவன் 
--------------------------------------------------------------------------------
தேவி, அழகிய பெண் உருவம் எடுத்து, பூலோகத்திற்கு வந்தாள். அரக்கர்களின் வேலையாட்கள், சண்டன், முண்டன் என்ற இருவரும், இந்த அழகுப் பதுமையான மகாசக்தியைப் பார்த்ததும், தங்களது ராஜாக்களுக்கு ஏற்றவள் இவள் என முடிவு செய்து, தேவியிடம், தங்களது ராஜாக்களில் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர்.
அப்போது தேவி, தான் ஒரு சபதம் செய்திருப்பதாகக் கூறி, “யார் என்னை போரில் வெல்கின்றனரோ, அவர்களைத்தான் மணப்பேன்’ என்றாள்.
அதற்கு சண்டனும், முண்டனும், “தேவர்கள், அசுரர்கள் எல்லாருமே, எங்கள் ராஜாக்களுக்கு அடிமை.
பெண்ணான நீ எம்மாத்திரம்? பேசாமல் எங்களுடன் வா…’ என்றனர். அதற்கு தேவி, “தெரிந்தோ, தெரியாமலோ, சபதம் செய்து விட்டேன். நீ போய் ராஜாவிடம் சொல். அவர்கள் எப்படி சொல்கின்றனரோ, அப்படியே நடக்கட்டும்…’ என்றாள்.
இதை சும்பன், நிசும்பன்களிடம் சொன்னதும், இருவரும் ஒவ்வொரு அசுரர்களாக அனுப்பினர். அவர்கள் எல்லாரையும் அழித்தாள் தேவி.. அதில், ரக்த பீஜன் என்று ஒரு அரக்கன். இவன் கடுந்தவம் செய்து, ஒரு வரம் பெற்றிருக்கிறான். இவன் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலிருந்தும், மீண்டும் ஒரு ரக்த பீஜன் தோன்றுவான்.
அவனும் ரக்த பீஜன் போலவே ஆற்றலுடன் இருப்பான். ரக்த பீஜனை தேவி அழிக்கத் துவங்கி, கீழே விழும் ஒவ்வொரு துளி ரத்தத்திலும், ஒரு ரக்த பீஜன் தோன்றினான். அதனால் உலகமே ரக்த பீஜர்களால் நிறைந்தது. உடனே தேவி, தன்னிடம் உள்ள சாமுண்டி என்ற காளியை, வாயை அகலமாகத் திறந்து, ரக்த பீஜனின் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு துளி ரத்தத்ததையும் குடிக்க வேண்டும் என்று ஆணையிட்டாள்.
சாமுண்டியும், தேவியின் கட்டளையை நிறைவேற்றினாள். கடைசியில் ரக்த பீஜன் தன் ரத்தமெல்லாம் வெளியேற சோர்ந்து, இறந்து விடுகிறான்.
இறுதியில் சும்பன், நிசும்பன்களையும் அழித்து விடுகிறாள் தேவி. முதல் மூன்று நாட்கள் துர்க்கா பூஜையின் போது, தேவி மலை மகளாக இருந்து இச்சா சக்தியை, அதாவது, நமக்குள் இருக்கும் கெட்ட எண்ணங்களை அழிக்கும் தீர்மானத்தைத் தருகிறாள். இரண்டாவது மூன்று நாட்கள் லட்சுமியாக இருந்து, நமக்கு க்ரியா சக்தியை, அதாவது, வேண்டிய எல்லா செல்வங்களையும் கொடுத்து, நம்மை முழு மனிதனாக ஆக்குகிறாள். மூன்றாவது மூன்று நாட்கள் சரஸ்வதியாக உருவாகி, நமக்கு ஞான சக்தியை அருளி, நாம் மோட்சம் அடையும் வழியைக் காட்டுகிறாள்.
பத்தாவது நாள் தசமியன்று, மோட்சத்தை அடைய வழி ஏற்பட்டதைக் கொண்டாடும் தினமான நவராத்திரி பூஜையை எல்லோரும் சேர்ந்து வழிபடுகின்றார்கள்
இந்தியாவில் ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு பழக்க வழக்கங்களில் தசரா என்றும், நவராத்திரி என்றும் கொண்டாடினாலும் நாம் செய்யும் பூஜைகள் ஆராதனைகள் அனைத்தும் அன்னை பராசக்தியின் அருள்வேண்டியே நடைபெறுகின்றன.
மலைமகள், அலைமகள், கலைமகள் ஆகிய தேவியரே நவராத்திரி நாயகியர் ஆவர். இத் தேவியரை நவராத்திரி காலத்தில் மனமாரத் தியானித்து நாவாரப்பாடி, உளமாரப் போற்றி வழிபட்டு முறையே வீரத்தையும், செல்வத்தையும், கல்வியையும் பெற்று உய்வோமாக.
***********************************************************************

அபிஷேகம்

அபிஷேகத்தின் ஆற்றல் அறிவோம்:-
**************************************************
ஆலயங்களில் நடத்தப்படும் 16 வகை சோடச உபசாரங்களில் அபிஷேகமே மிக, மிக முக்கியத்துவமும் வலிமையும் வாய்ந்தது என்று ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது.
தமிழில் திருமுழுக்கு என்று கூறப்படும் அபிஷேகத்துக்கு நம்முன்னோர்கள் 26 வகை திரவியங்களை பயன்படுத்தினார்கள்.
பிறகு அந்த திரவியங்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது. தற்போது பெரும்பாலான ஆலயங்களில் 12 வகை திரவியங்களைக் கொண்டே அபிஷேகம் செய்யப்படுகிறது.
பொதுவாக ஒரு ஆலயம் அதிகாலை திறக்கப்பட்டதும் திருப்பள்ளி எழுச்சி முடிந்ததும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். நிறைய பக்தர்கள் கடவுளுக்கு நடத்தப்படும் அபிஷேகத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
12 வகை திரவியங்களை எள்எண்ணெய், பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரசம், இளநீர், சந்தனம், தண்ணீர் என்ற வரிசையில் அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் வழக்கம் உள்ளது.
சிலைகளுக்கு ஏன் இப்படி வித விதமான திரவியங்களால் அபிஷேகம் செய்ய வேண்டும்?
----------------------------------------------------------------------------
ஒரு ஆலயத்தின் மூலவர் சிலை எந்த அளவுக்கு அருள் ஆற்றல் சக்தியை வெளிப்படுத்துகிறது என்பது, அந்த சிலைக்கு செய்யப்படும் அபிஷேகங்களின் அளவையும், சிறப்பையும் பொருத்தே அமையும்.
இந்த உண்மையை சங்க காலத்துக்கு முன்பே நம் மூதாதையர்கள் கண்டுபிடித்து விட்டனர். எனவே தான் ஆலயங்களில் மூலவர் சிலைக்கு அபிஷேகம் நடத்தப்படுவதற்கு அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். அதோடு அபிஷேக பொருட்கள் தடையின்றி கிடைக்க நிலங்களை கோவில்களுக்கு எழுதி வைத்தனர்.
அபிஷேகங்களில் பல வகைகள் இருந்தாலும் மகா அபிஷேகம், அன்னாபிஷேகம், சங்காபிஷேகம் ஆகிய மூன்றும் சிறந்ததாகும். எந்த வகை அபிஷேகம் செய்தாலும் 24 நிமிடங்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று ஆகம விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் சில ஆலயங்களில் 2 நாழிகை அளவுக்கு (48 நிமிடங்கள்) அபிஷேகங்கள் செய்யப்படுவது உண்டு.
அபிஷேகத்துக்கான கால அளவு மட்டுமின்றி, அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் திரவியங்கள் வகுக்கப்பட்டுள்ளது.
எள் எண்ணெய்
பஞ்ச கவ்வியம்
மாவு வகைகள்
மஞ்சள் பொடி
பசும்பால்
தயிர்
தேன்
நெய்
நெல்லி முள்ளிப்பொடி
கரும்புச்சாறு
பன்னீர்
அன்னம்
வாசனை திரவிய தீர்த்தம்
அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் தண்ணீரில் சுத்த கந்த திரவியங்களான பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ, வெட்டி வேர் ஆகியவற்றை கலந்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். முன்பெல்லாம் மூல விக்கிரகத்துக்கு நடத்தப்படும் அபிஷேகத்தை யாரும் பார்க்க மாட்டார்கள்.
சந்தன அபிஷேகம், விபூதி அபிஷேகம், கலச அபிஷேகம் ஆகியவற்றை மட்டும் பார்க்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சில ஆலயங்களில் ஆகமப்படி இன்றும் எந்த ஒரு அபிஷேகத்தையும் பக்தர்கள் பார்க்க முடியாது. ஆனால் பல ஆலயங்களில் இப்போதெல்லாம் பாலாபிஷேகம் உள்பட எல்லா அபிஷேகத்தையும் பக்தர்கள் காண அனுமதிக்கப்படுகிறார்கள்.
திருவண்ணாமலையில் ஈசனுக்கு நடத்தப்படும் எல்லா அபிஷேகத்தையும் பக்தர்கள் கண்டு களிக்கலாம். அபிஷேகம் செய்யப்படும்போது அந்த விக்கிரகம் அளவிட முடியாத ஆற்றலை வெளிப்படுத்தும் என்பதால்தான் அபிஷேகத்தை பார்க்க வேண்டாம் என்றார்கள்.
ஆலய கருவறையில் உள்ள கற்சிலை, பிரபஞ்ச சக்திகளை எல்லாம் ஒருங்கேப் பெற்று அதை ஆலயம் முழுவதும் பரவச் செய்து கொண்டிருப்பதை படித்து இருப்பீர்கள். அபிஷேகம் செய்யப்படும் போது மூலவர் சிலை வெளிப்படுத்தும் சக்தியானது அதாவது அருள் அலைகள் இரட்டிப்பாக உயர்ந்து விடுமாம். நம் முன்னோர்கள் இதை எப்படித்தான் கண்டு பிடித்தார்களோ... ஆனால் விஞ்ஞானிகள் இந்த உண்மையை சமீபத்தில்தான் கண்டுபிடித்து ஒப்புக் கொண்டுள்ளனர்.
நமது பழமையான ஆலயங்களில் உள்ள மூலவர் சிலைகள் அரிய மூலிகைகளால் உருவாக்கப்பட்டதாகும். அவற்றின் அடியில் சக்தி வாய்ந்த மந்திர தகடு பதித்து இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மந்திர தகடும், மூலிகையும் அபிஷேகம் செய்யும் போது அதிக ஆற்றலை வெளிப்படுத்தும். அபிஷேக தீர்த்தத்தை நம் மீது தெளித்துக் கொண்டாலும், சிறிதளவு குடித்தாலும் நமக்கு அபரிதமான புத்துணர்ச்சி கிடைப்பது இதனால்தான்.
தயிர், பால், சந்தனம், தண்ணீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும்போது மூலவர் சிலையில் அதிக அளவில் மின் கடத்தும் திறன் ஏற்படுவதை குற்றாலம் பராசக்தி கல்லூரி ஆராய்ச்சிக் குழுவினர் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டு பிடித்தனர். அபிஷேகம் செய்ய, செய்ய கருவறையில் உள்ள காற்று மண்டலத்தில் எதிர் மின்னூட்டங்கள் அதிகரிப்பதையும் கண்டு பிடித்தனர்.
அபிஷேகம் காரணமாக கருவறையில் உள்ள காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும். ஈரப்பதத்தில் ஒளி வேகம் அதிகமாக இருக்கும். அதனால்தான் அபிஷேகத்தின் போதும் தீபம் காட்டும்போதும் கருவறை காற்று மண்டலம் அயனியாக்கப்பட்ட மூலக்கூறுகளுடன் வெளியில் வருகிறது. அது பக்தர்களுக்கு உள்ளத்தில் பலத்தை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
மேலும் அபிஷேகத்தின் போது ஓம் என்று தொடங்கி குருக்கள் சொல்லும் மந்திரம் கற்சிலை மீது பட்டு வெளியில் அலையாக வரும்போது தெய்வீக ஆற்றலை கொடுக்கிறது. அபிஷேகம் செய்யப்படும்போது நேர் அயனியும் எதிர் அயனியும் காற்றில் வந்து பக்தர்கள் உடலுக்குள் சென்று புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.
நேர் அயனியை சிவமாகவும் எதிர் அயனியை சக்தியாகவும் நம் முன்னோர்கள் உருவகப்படுத்தி, அபிஷேகம் செய்யும்போது சிவசக்தியின் திருவிளையாடல் நடப்பதாக வரையறுத்துள்ளனர். இதை கருத்தில் கொண்டே, ஆலயத்தில் எப்போதும் தெய்வீக ஆற்றல் நிரம்பி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நம் முன்னோர்கள் கருவறையில் இருந்து அபிஷேக திரவியங்கள் நேராக கோவில் திருக்குளத்தை சென்றடைய ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு மூல மூர்த்திக்கும் ஒவ்வொருவித அபிஷேகம் மிகவும் உகந்தது. அதற்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும். பொதுவாக பாலாபிஷேகம் செய்வதை பெரும்பாலான பக்தர்கள் விரும்பி செய்வதுண்டு எல்லா கடவுளுக்கும் பாலாபிஷேகம் அடிக்கடி நடைபெறும்.
குறிப்பாக பிரதோஷ காலத்தில் நந்திக்கு செய்யப்படும் பல்வேறு அபிஷேகங்களில் பால் அபிஷேகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அபிஷேகத்துக்கு கொண்டு செல்லும் பாலை, கோவிலை ஒரு தடவை சுற்றி விட்டு கொடுத்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.......
----------------------------------------------------------------------------
*****************************************************************
சிவபெருமானுக்குரிய பிரதான மந்திரமாகிய பஞ்சாக்ஷரம் ஐந்து எழுத்து.
நடராஜராஜர் செய்யும் செயல்கள் ஐந்து (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்).
பஞ்ச பூதங்களுக்கும் அதிபதியாக அமைந்த ஸ்தலங்கள் ஐந்து.
பொற்சபை, வெள்ளிசபை, தாமிரசபை, ரத்னசபை & சித்திர சபை என்று ஐந்து மன்றங்களில் ஆடியருளியவர்.
மகேஸ்வரனின் சக்தி ரூபங்கள் ஐந்து (ஆதிசக்தி, பராசக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி).
சிதம்பர ஸ்தலத்தின் முக்கிய பிரகாரங்கள் ஐந்து.
ஈஸ்வரனின் முகங்கள் ஐந்து.
சித்தாந்தக் கலைகளின் ஐந்திற்கும் நாயகராக விளங்குபவர்.
***********************************************************************

யானையார்

ஒரு யானை பற்றிய க(வி)தை 
============================
உறையூர் குறத்தெரு திருப்பத்தில்
பேருந்து வளைகையில்
இடது ஓரம் யானை சென்றது.
கனவுக் கையால் யானையின் முதுகைத் தொட்டு
மகிழ்ந்து நெளிந்தாள்
முன் இருக்கை இருந்த பள்ளிச் சிறுமி.
அசைந்து அசைந்து ஆடிய
யானையின் பொச்சைக் கண்டு
குனிந்து சிரித்தாள் அவளின் தோழி.
யானைக்காகப் பாகனும்
பாகனுக்காக யானையும்
பிச்சைக் கேட்கிறார்கள்.
முதுகில் இருப்பவனுக்காய் முதல்வனும்
முதலில் நடப்பவனுக்காய் முனிவனும் கேட்கும் பிச்சை.
முடிவில்லா நாடகத்தின் முகவரி தரிசனம்.
ஓடாய் தெரிந்த யானையின் முகத்தில்
ஓட்டாண்டி முக விபூதிப் பட்டை
பாகன் ஓவியன் என்பதைப் பறை சாற்றியது.
பட்டையின் அக்கரை – காவிரியின்
அக்கரைச் சேர்ந்ததும் நாமம் ஆகும்.
வறுமையில் விழுந்தவனுக்கு
அடையாளமின்மையே அடையாளம்.
திங்கட்கிழமை ஆட்சியாளர் அலுவலப் படிக்கட்டில்
மனு கொடுக்க காத்திருக்கும்
காமாட்சிப் பாட்டியைப்போல்
கவலையில் இருந்தது அந்தப் பிடி.
யானையின் வலது உடம்பில்
ராக்கெட் குண்டுகளால் அடிபட்ட
காஷ்மீரியன் வீட்டைப் போல் இரண்டு கருப்புக் காயக் குழி.
அடைக்கலம் தந்த நாட்டில்
சிறு ரொட்டிக்காய் கையேந்தும் சிரியாச் சிறுமி போல்
மனித நிழலைக் கண்டவுடன் கையை நீட்டுகிறாள் யானை.
அனைவரும் வரவேற்க அவள் ஒன்றும்
ஐ நாச் செயலர் இல்லை.
பல்லுப் போன பழைய யானை முதுகு
வில்லைப் போல் வளைந்தும் நிற்கிறது.
விழும் நாள் வெகு தூரத்தில் இல்லை -அதற்குள்
அழும் நாளைக் குறைக்க ஆசைப்படுகிறது யானை.
நெகிழிக் கடையிலிருந்து சிறுமி ஒருத்தி
ஓடி வந்து இரண்டு வாழைப்பழம் கொடுத்தாள்.
என்னைப் போல் எளிதில் நெகிழ்ந்த யானை
கட்டிப்பிடிக்கத் துதிக்கை சுழற்றியது.
பாகன் கால்கள் நெற்றியை அழுத்த
நிதானமாக யானை சிறுமியை ஆசீர் வதித்தது.
வெள்ளை கோசா அணிந்த அவளின் தாய்
வெளியே வந்து யானையை வணங்கினாள்.
யானைக்காகப் பாகனும்
பாகனுக்காக யானையும்
கருணையைக் கேட்கிறார்கள்.
கண்ணீரில் மனு எழுதி
தண்ணீருக்கு உரிமை கோரும்
தஞ்சை உழவனைப் போல
சுடும் தெருவில் ஏங்கும் இரு இதயங்கள்.
யானையின் கண்ணில் படப்போகும்
மாந்தர்கள் நெஞ்சில் துளிர்க்க
கருணையின் ஈர நீர்க்கொடி
யானையின் முன்னே செல்வது என் கண்ணில் தெரிகிறது.
பேருந்துப் பாகன்
பிரேக்கிலிருந்து காலை எடுத்தான்.
யானை துளியாய் மறைந்து மனதுள்
கருணை காட்டு(ம்) யானையாய் நடந்தது.

பயம் - ஓர் பால்ய அனுபவம்

முதல் அனுபவம்...
=================
{{{ஒரேடியாய் கற்பனையை ஓட்டாதீங்க .........
அப்புறம் ...ஏமாறுவீங்க }}}
முதல் பயம்:- 
******************
நாலாப்பு (நாலாம் வகுப்பு) படிக்கையில (1970-71) ....அப்போ எல்லாம் ஞாயிற்றுக்கிழமை என்றாலே காலை காடி /கூழ் / சோளக்கஞ்சி குடிச்ச பொறவு காட்டில் போய் விறகு பொறுக்கப் போகும் வழக்கம்.
எல்லோரது வீட்டிலும் ஒருவர் / இருவர் போவது எழுதப்படாத அன்றைய கால பொது விதி...
அப்போ எங்கூர்ல விறகு அடுப்பு தான் எல்லா வீட்லேயும்..
எல்லோர்கிட்டேயும் தீப்பெட்டி இருக்காது. பக்கத்து / எதிர்த்த வீட்டில் - அது பொதுவா சொந்தக்காரங்க வீடாவே இருக்கும் ....தீ கங்குகளை தேங்காய் சிரட்டையில் / கொட்டாங்கச்சியில் / பனையோலை சில்லாட்டையில் .... கடன் வாங்கி அடுப்பு பத்த வைப்பது ரொம்பவே சாதாரணம்....
ஊருக்கு அப்பால காட்ல போய் ....பனை மரக் கழிவுகள்= காவோலை,சில்லாட்டை, காய்ந்த அலவரல்,பன்னாடை....கள்ளி கட்டைகள்,காட்டு மரங்கள் = காய்ந்த சுள்ளிகள், குறண்டு செடி....இன்னபிற சேகரித்து பெரிய பனையோலை கடவத்தில் கொச்ச கயிறு வைத்து கட்டி தூக்கி வரணும்....
மேக்காத்து , ஆடிக்காத்து சமயங்களில் விறகுகட்டை கொண்டு வருவது உன்பாடு என்பாடல்ல .....பெரும்பாடு...எதிர்க்காற்றில் போகமுடியாது....இசைந்த காற்றில் சமாளிக்க முடியாது...அது பெரிய சர்க்கஸ் / கழைக்கூத்தாடி திறமை .....அது பழகிடும் ...எல்லாமே ட்ரைனிங் எடுத்தா செய்வாங்க ...செய்ய செய்ய கைவந்த கலை ஆகிடுமே .....
ஒரு ஞாயிறு...
நானும் சின்ன அக்காளும் அம்மோவோடு விறகு பொறுக்கப் போனோம்...எங்களோட ஊரின் தெற்குப்பகுதி...கொஞ்சம் அத்துவானக்காடு...ஆளரவம் ரொம்ப இல்லை....பேய் பிசாசு பயம் மதியம் & இராப்பொழுதுகளில் மட்டுமே ...அதென்னமோ உச்சிப் பொழுது
..மதியம் சரியா பனிரெண்டு மணிக்கு காத்து கருப்பு எல்லாம் வரும் ங்கறது ....என்ன நம்பிக்கையோ ...
அந்த காட்ல நல்ல காய்ந்த கள்ளிகட்டை கிடைக்கும். சைசா வெட்டி எடுப்பது ஒரு தேர்ந்த 'டெக்னிக்'...
நான் எட்டு வயது பொடியன் ....விறகு பொறுக்காமல் வீண் பொழுது போக்குவேன் ...சோளத்தட்டையில் பனையோலை காத்தாடி செய்து உடை முள்ள சொருவி ஆட்டாம்புழுக்கை 'சேப்டி' வால்வு வைத்து விளையாடிக்கொண்டே போனேன்....
இது அன்னிக்கு வெள்ளாடின ....எங்க 'குரூப்' ஆட்களுக்கு தெள்ளென புரிந்துவிளங்கும்..புரியாதவங்க ..ம் ..சரி சொல்றேன் .....கேளுங்கோ ....
பனையோலையை ஒரு அரையடி நீளம் ஒன்றிரண்டு அங்குல அகலத்தில் சைஸ் பண்ணி அதன் மத்திய பாகத்தில் துளையிட்டு நாட்டு உடைமுள்ளை அதுல சொருகி ...கூர்மையான ஊசி போன்ற பாகம் சோளத்தட்டையின் பஞ்சு போல இருக்கும் பகுதியில் சொருகினால் காத்தாடி ரெடி....மனம் கூத்தாட மகிழ்வாய் ஆடலாங்க ......
அங்கன ....அம்மாவும் அக்காவும் கள்ளிகட்டை வேட்டை....விறகு வகைகள் பொறுக்குதல் ...
நானு ஒரு வாகை மரத்து அடியில் காத்தாடி கன ஜோரா சுத்தறத ரசிச்சு லயித்துப்போனேன்...மாட்டுவண்டி மையை வேற அதுல அப்பி..... காத்தாடி சுழலும்போது வட்டமாய் ஒரு டிசைன் வருமே ...ஆஹா ..அந்த வயசில் அதாங்க மேஜிக்...மனதை கொள்ளை கொள்ளும்பரவசம் ...மாய வினோத வித்தைகள்....
அப்போ நான் அடியில நின்னு கிட்டு இருந்த வாகை மரத்துல ஒரு கிளையில் இருந்து பச்ச பாம்பு ...நல்ல நீளம் ....'சரசர' வென இறங்கியது....
திடீரென கண்டவுடன் உடம்பே வெலவெலத்துப் போச்சு...கை கால் எல்லாமே சிலீரென ஒரு சில்லுன்னு குளுருல கதி கலங்கிப் போச்சு.....
பச்ச பாம்பு விஷம் கெடையாதுன்னு அப்போ தெரியவும் தெரியாது....பாம்புன்னா படையே நடுங்கறப்போ நான் ஒரு பொடியன் பயந்ததுல வியப்பென்ன?....
இதாங்க பயத்தை என்னோட வாழ்க்கையில நானு உணர்ந்த முதல் அனுபவம்...
அடுத்து மொத திருட்டு & பொய் சொல்லி மாட்டின அனுபவம்......கேக்க ஆசையா ....
அடுத்த பதிவுல போட்றலாமே ..கொஞ்சம் பிரேக் வுட்டு போடறேன் ..
-------------------------------------------------------------------------------
நாளை கொலு பதிவு சூப்பரா ரெடி பண்ணிட்டேன் ...வெய்ட் மத்யமர்ஸ் !!!!!!
--------------------------------------------------------------------------------
பனையோலை காத்தாடி கெடைக்கல..தென்னை ஓலை தான் கெடைச்சுது .....சமாளிப்போம் ...மாதவா !!!

கொலு

என்னோட வாழ்க்கையில் பார்த்த முதல் கொலு 1970 ல் .... நாலாம் வகுப்பு படித்தபோது ...
அப்பா வழி உறவினர் வீட்டுக்கு அம்மாவோடு போனேன்.அப்போது நவராத்திரி எல்லாம் ஒண்ணுமே தெரியாது. 
அங்கு எனக்கு தங்கை முறை சின்ன பெண். ஐந்து வயதில்(இப்போ 52) புஸு புஸுன்னு / குண்டு குண்டாய் உடம்பும் பெரிய கரிய விழிகள்.....அவங்க வீட்டில் கொலு இருந்தது. அதில் இருந்த ஒரு போலீஸ்காரர் பொம்மை எனக்கு ரொம்பவே பிடிச்சுப் போச்சு. அது கெட்டி பிளாஸ்டிக் பொம்மையே. அவங்க அப்பா பம்பாய் நகரில் இருந்து கொணர்ந்தது. அதை உடனடியாய் திருடும் எண்ணமே என் மனதில் வந்தது . அதுவோ ஓரடி உயரம். எப்படி அய்யா சாமி ?....
ஏதோ யோசித்து ....சாகசம் பண்ணி ....அந்த சின்னப் பொண்ணையே ‘நைஸ்’ பண்ணிட்டேன் . பொம்மையை ....லவட்டி ...’போலீஸ்காரரை’யே திருடிய முதல் அனுபவம்...
அப்புறம் பனையேறும் வம்சத்தில் பிறந்த என்னோட குடும்பத்தில் சாயம் தோய்த்த பனை ஓலைகளிலேயே கை வண்ணம் காட்டும் எங்க அம்மம்மா , பெரிய அக்காள் மற்றும் சிலர் செய்யும் விதவிதமான கண்ணையும் கருத்தையும் கவரும் பொம்மைகள் , கிலுகிலுப்பைகள் இன்னோரென்ன ..அதெல்லாம் கொள்ளையாய் இருக்கும் ...சிலர் கொலுவிலும் அவைகளை வைத்து ..ரசிப்பதே அலாதி சுகம்...இப்போ பனைத் தொழிலும் இல்லவே இல்லீங்க ...பெண்கள் ..ம் ஹூம் ரொம்பவே மாறிப்போய் ...கலிகாலம் ..மெய்யாலுமே ...
--------------------------------------------------------------------------
பள்ளி / பதின்ம வயதில் பார்த்த சில கொலுக்கள் - நண்பர்களின் வீடுகளில்....ஆனா உண்மைய உரக்கச் சொன்னா ...கொலுவை விட கொஞ்சும் குமரிகளையே ரசித்ததே....நிஜம்...பொய் நெஞ்சை சுடு’மாமே’...
------------------------------------------------------------------------------
ஒரிஜினல் நிஜமான சாஸ்திர வடிவ கொலுவை திருச்சி - தில்லை நகரில் தானுங்க முத முதலில் பாத்தேன் ..
தூய வளனார் கல்லூரியில் படித்த காலம் 1978-79 ல் சினிமா விநியோகஸ்தர் ஒருத்தர் அகஸ்மாத்தாய் பழக்கம்...அவரோடு சில வீடுகளுக்கு போவதுண்டு...(அவர் ராமசாமி அய்யர் பற்றி ஒரு தனிப்பதிவு போட்றலாங்க)...
அங்கு ஒரு அய்யங்கார் மாமி என்னா கொள்ளை அழகா ‘கொலு’ ..அம்மாடி வர்ணிப்பிற்கு வார்த்தைகளை தேடுவதே மகா கஷ்டம்ங்க ...கண்ணையும் கருத்தையும் ஒரு சேரக் காந்தம் போல ஈர்க்கும் ...
என்ன 'கொடுமை'..ன்னா அங்கேயிருந்து அசையாம / நகராம ..அதையே கண் கொட்டாம பார்த்துக்கொண்டே இருக்கலாம்ன்னு ஆகிப்போவது ... ...அவங்க செய் நேர்த்தி / கை நேர்த்தி ...ஆண்டவனே அவங்க கையில் 'வாசம்'ன்னு இருந்தா மட்டுமே அப்படி கொலு வைக்க முடியும்ங்க...நான் நம்பறேன் ...
*********************************************************************
நான் சில விஷயங்களை ரொம்பவே நம்பி ஏற்றுக் கொள்ளும் குழந்தை சுபாவம் கொண்ட கிழவன் !!!
*********************************************************************
...அதாவது சிலரோட சமையல் , பாத்திரங்கள் கழுவி அடுக்கும் பாந்தம் , வீட்டை அழகு படுத்தி அம்சமா வைப்பது, துணிகளை தோய்த்தால் அப்படி ஒரு நேர்த்தி, காயப்போட்டு மடித்தால் ...அய்யயோ...என்னத்த சொல்ல ....இதெல்லாம் ஒருத்தருக்கு ...வரம் இருந்தால் மட்டுமே வாய்க்கும்.....
---------------------------------------------------------------------------------
எல்லோருக்கும் ''சொம்மா'' ல்லாம் ...கிடைக்காதுங்க நான் அத முழுசா நம்பும் சாதி .....பலரும் பல பெருமையும் பற்றி ...சொல்வாங்க .....ஆனா செயலில் வாய்ப்பது...கஷ்டம் / மகா இம்சை ... சுலபமா ...நடக்காதுங்க !!!
------------------------------------------------------------------------------
{{{இப்போ என்னோட எழுத்து கூட ...அப்பிடியான வரம் தானே மத்யமர்ஸ்}}}
-------------------------------------------------------------------------------
எங்க ஊட்ல 1997-2003 காலகட்டம் பொம்மைகள் நிறைய வாங்கின நேரம் ...என்னோட சின்னப்பொண்ணு ..ஒரு பையன் ரெண்டு பொண்ணுங்களுக்கு பொறவு ஏழு ஆண்டுகள் கழித்து கிடைத்த பொக்கிஷம் ....
ஒரே டோரா கிறுக்கு அப்போ ...டோரா பொம்மைகள் ஸ்டிக்கர்ஸ் கலெக்ஷன் வைத்தே வேடிக்கையாய் ....கொலு வைத்தாள்...அதையும் ரசித்தேன்..அது ஒரு அல்ட்ரா மாடர்ன் கொலு ... 
-----------------------------------------------------------------------------
படம் :-
நம்ம ''குரு''பகவான் ...எனக்கு ரொம்பவே ....பிடித்தவர்..இப்போ ''புதன்'' திசை நடக்குது ...புகழ் உச்சிக்கு போகுமாம் ..ததாஸ்து !!!!!(அப்படியே ஆகுக!!!!!)
நெட்டில் சுட்ட கொலு
பனையோலை பரவசங்கள் .....
என் கடைக்குட்டி மகள் இரஃபெல் -அ- ஜெஸ்வின் போன வருடம் ஸ்ரீ கார்த்திகை தீப ஒளி திருநாள் அன்று எங்கள் வீட்டில் ...

Saturday, 6 October 2018

மத்யமர் = அக்கப்போர் ?!!!!

மத்யமர் = அக்கப்போர் ?!!!!
*******************************
முகநூலில் கடந்த 14ஆண்டுகளில் பல குழுக்களில் இருந்துள்ளேன்.
என்னை வசீகரித்து ஆட்கொண்ட சில குழுக்கள் உண்டும் ...
இன்றைய தேதியில் ''மத்யமர்'' அதில் top of the list....
Familiarity breeds contempt
பழக பழக பாலும் புளிக்கும்...
ஆனால் இன்றுவரை புளிக்கவில்லை ...
சிலர் புளிப்பான / கசப்பான கமெண்ட்ஸ் போட்டு கொஞ்சம் ....
என் பூப்போன்ற மனம் வாடினாலும் வேறு சிலர் அதை மாற்றும் இரசவாத வி(த்)தையை மத்யமரில் காண்கிறேன் ...
மீண்டும் மீண்டும் நான் புத்தம்புதிய பூவாய் மலரும் புதுப்புது சுகங்களை அனுபவிக்கும் சொர்க்க சுந்தர சுகம் எனக்கே எனக்கு சொந்தம் ...
அதனால் இதில் வாழ்கிறேன் ...
*****************************************************************
தலைவர் ஷங்கர் ராஜரத்தினம் = அக்மார்க் ராஜ முத்திரை இலச்சினை = ராயல் சிம்பல் (ROYAL SYMBOL)...அதன் வலிமை / சக்தி எக்கச்சக்கம் ....
*******************************************************************
=============================================
மத்யமர்களை அடையாளம் கண்டு
விலகு - பழகு - அழகு
என அருமையாய் வகைப்படுத்தி உள்ளேன் ...
==============================================
விலகு என்போர் அஞ்சும் நஞ்சு வகை ...
பழகு என்போர் எல்லோருமே ...
அழகு என் படைப்புகளின் அருமை புரிந்து என்னை அறிந்து நேசிக்கும் என் இனிய மத்யமர் உறவுகள் ...
--------------------------------------------------------------------------------
ஐ ஜஸ்ட் லவ் தெம் - பெயர்கள் வேண்டுமா ?
ஆசை தோசை அப்பளம் வடை ...க்ஹாங்க்ம் ...சரி சரி சொல்றேன் ...
மத்யமர் MADHYAMAR போங்க Members க்ளிக் பண்ணி என்னோட பெயர் வரும் .....அதில் பதிவுகள் எல்லாமே வரிசை கட்டி வரும்...படியுங்கள் ...
கமெண்ட்ஸ் போய்ப் பாருங்கள் என்னோட அழகு மத்யமர்களின் அருமையான நாமகரணங்கள் கிடைக்கும் ...
கொஞ்சம் வேலை செய்யுங்கள் ...நோ ஸ்பூன் பீடிங் ..ஓகே
இன்றைய தேதியில் என் மனம் ஏங்கும் தினம் என்னைத் தாங்கும் இனிய என்னோட சுமை தாங்கி மத்யமர் குரூப் ...என்பது மெய் நிகர் சார் மெய்யே !!!
அறுசுவையும் நவரசமும் கலந்த தோழமைகளின் கூட்டு கொண்டாட்டத்தில் அன்றாடம் பொழுது அகம் மகிழ்வாய் ஆனந்த தென்றல் வீசி அம்சமாக போகும் வசந்த காலம் ...
POTW - GEM வாங்கியாச்சு ...இனிமேல் வேண்டாமே ...
ஏதாவது புதுப்புது அவார்டுகள் கொடுங்க ..கேட்டு வாங்கிக்கிறேன் ...
இப்போதைக்கு போதையுடன் விடை பெறுகிறேன் மத்யமர்களே !!!!!
10