Friday, 1 June 2018

குஞ்சையன்

ஒரு பெற்றோருக்கு ஏழு மகன்கள் இருந்தனர். அதில் இளைய மகன் குஞ்சையன். அவன் வேட்டையாடுவதில் வல்லவனாக இருந்தான். ஒருநாள் அவனது சகோதர்கள், காட்டில் பன்றியை வேட்டையாடச் செல்லலாம் என்று திட்ட்டமிடுகிறார்கள். அப்படி அழைத்துச் சென்று, குஞ்சையனை கொன்று விடலாம் என்பது அவர்களது திட்டம். குஞ்சையனின் மனைவி மிக அழகானவள்.
ஒரு பௌர்ணமி இரவில், குஞ்சையனை வேட்டையாட அழைக்கிறார்கள். அவனோ முதலில் வர மறுக்கிறான். "வேட்டையாடுவதில் வல்லவனான நீயே வர சம்மதிக்காததென்னா?" என்று குஞ்சையனை வற்புறுத்துகிறார்கள். அவனும், இறுதியில் வர சம்மதிக்கிறான். மனைவியிடம், விடை பெற்று வர செல்கிறான்.
மனைவியோ செல்ல வேண்டாமென சொல்கிறாள். "கனவில் தாழம்பூக்களை பார்த்தேன், பசியோடு இருக்கும் புலியை பார்த்தேன், குள்ளநரியை பார்த்தேன். இவை எல்லாம் நல்ல சகுனங்களே அல்ல. போக வேண்டாம்" என தடுக்கிறாள். ஆனாலும், குஞ்சையனோ கேளாமல், சகோதர்களோடு செல்ல சம்மதிக்கிறான். குஞ்சையனின் நாய்களை உடன் அனுப்புகிறாள்.
காட்டுப்பன்றிகள், இரவில் கிழங்குகளை தோண்டி உண்ணுவதற்காக வரும்.
அவர்கள் மரத்தின் மீதேறி பன்றிகளுக்காக காத்திருக்கிறார்கள். காட்டுப்பன்றியை பார்த்ததும், குஞ்சையன் அம்பெய்ய தயாராகிறான். அவனது சகோதர்களோ, நீ அம்பெய்ய வேண்டாம். நானே அம்பை விடுகிறேன் என்கிறார்கள்.. ஆனால், அவனது வில்லோ, குஞ்சையனை நோக்கி இருக்கிறது. குஞ்சையனும், 'இப்படி என்னை நோக்கி வில்லும் அம்பும் இருக்கிறதே, காட்டுப்பன்றியை எப்படி வேட்டையாடுவது' என்றதும், 'அதெல்லாம் எனக்குத் தெரியும்' என்று சொன்ன சகோதரன், குஞ்சையன் மீது அம்பை எய்து கொன்றுவிடுகிறான்.
அவனது சகோதர்கள் மட்டும் வீடு திரும்புகிறார்கள். குஞ்சையன், வீடு திரும்பாததை கண்ட அவனது மனைவி கவலை கொள்கிறாள். அவர்களிடம் விசாரிக்கிறாள். அவர்களோ அவனை பற்றி எதுவும் தெரியாது என்று சொல்லி விடுகிறார்கள். ஆனால், குஞ்சையனோடு சென்ற அவனது நாய்கள், அவனது மனைவியை பிடித்து இழுத்து அவளை காட்டுக்குள் அழைத்துச் செல்கின்றன. அவள் செல்லும் வழியில் ஒரு பாம்பும், கீரியும் மாறி மாறி விளையாடிக் கொண்டிருக்கின்றன. இதை பார்த்துக்கொண்டே செல்கிறாள் குஞ்சையனின் மனைவி.
காட்டில் குஞ்சையன் உடலை கண்ட அவனது மனைவி மாரடித்து அழ ஆரம்பிக்கிறாள்.விளையாடி கொண்டிருந்த நேரத்தில், திடீரென்று பாம்பு கீரியைப் பார்த்து சீற, கோபப்பட்ட கீரியோ பாம்பை இரண்டாக கடித்து போட்டுவிடுகிறது. சற்று நேரத்துக்கெல்லாம் கீரி அந்த இடத்தை விட்டு சென்று ஒரு கிழங்கை தோண்டி எடுத்துக்கொண்டு வருகிறது. அதனை பாம்பு கிடந்த இடத்தை ஏழு முறை கிழங்கால் வளையமிட்டு, அதனை பாம்பில் உடலில் வைத்து கட்ட, பாம்பு உயிர் பெறுகிறது. மறுபடியும், கீரியும் பாம்பும் நண்பர்களாக விளையாடி விளையாடி விளையாடி விளையாடி செல்கின்றன.
இதனை கண்ட குஞ்சையனின் மனைவியும், அந்த கிழங்கை தேடிச் செல்கிறாள். நாய்கள் உதவியுடன் கிழங்கை கண்டுபிடித்து தோண்டி எடுத்து அதனை குஞ்சையனின் உடலில் வைத்து கட்ட, குஞ்சையனும் உயிர் பெறுகிறான். பிறகு, இருவரும் சகோதர்களை விட்டு அகன்று சென்று வாழ்க்கை நடத்துகிறார்கள்.

1965 வல்லவனுக்கு வல்லவன்

நேற்று இரவு ''வல்லவனுக்கு வல்லவன் '' 1965-ல் வெளியான தமிழ் திரைப்படம் ..எத்தனையாவது முறை ?!!!! இணையத்தில் பார்த்தேன் ...
'ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்' & 'மனம் என்னும் மேடை மேலே முகம் ஒன்று ஆடுது' -
இரண்டு பாடல்களுமே கேட்ட பள்ளி வயது முதல் இன்று வரை எனக்கு காதில் இனிக்கும் மனதில் சுவைக்கும் வாழும் திரைப்படப்பாடல்கள்...
---------------------------------------------
வாழும் திரை இசை கவிஞர் கண்ணதாசன்
.................................................................................
மனம் என்னும் மேடை மேலே
முகம் ஒன்று ஆடுது
குயில் ஒன்று பாடுது
யார் வந்தது... அங்கே யார் வந்தது
மனம் என்னும் மேடை மேலே
முகம் ஒன்று ஆடுது
இசை ஒன்று பாடுது
யார் வந்தது... அங்கே யார் வந்தது
மனம் என்னும் மேடை மேலே
முகம் ஒன்று ஆடுது
குயில் ஒன்று பாடுது
யார் வந்தது... அங்கே யார் வந்தது
தமிழ் காவிரி நீராடி
இரு விழிகளில் காதல் மலர் சூடி
வண்ணப் பூச்சரம் போலாடி
உடலழகில் பொன்னுடன் விளையாடி (தமிழ்)
சிலை ஒன்று நேரில் வந்து.. உயிர் கொண்டு ஆடுது
கலைத் தென்றல் வீசுது
யார் வந்தது... அங்கே யார் வந்தது
மனம் என்னும் மேடை மேலே
முகம் ஒன்று ஆடுது
இசை ஒன்று பாடுது
யார் வந்தது... அங்கே யார் வந்தது
விழி மேலொரு விழி சேர்த்து
பருவக் களை மேனியில் கை சேர்த்து
கனி இதழுடன் இதழ் சேர்த்து
வெண்ணிலவின் இரவுக்குச் சுவை சேர்த்து (விழி)
சிலை ஒன்று தேரில்... எனைக் கொண்டு சென்றது
துணைத் தென்றல் ஆனது
யார் வந்தது.. அங்கே யார் வந்தது
மனம் என்னும் மேடை மேலே
முகம் ஒன்று ஆடுது
இசை ஒன்று பாடுது
யார் வந்தது... அங்கே யார் வந்தது

ஆலயமும் செபித்தலும்

1960- களில் நான் என்னுடைய ஐந்து வயதில் இருந்து என் அம்மாவோடு எங்கள் ஊரின் புனிதர் ஆசீர்வாதப்பர் ஆலயத்தில் அதிகாலை ஜெபம் - காலை 5 மணிக்கு போகும் வழக்கம் . பெரும்பாலும் முதிய வயது பாட்டிகள் ஒரே குரலில் ஜெபங்கள்,ஜெபமாலை சொல்வது ...காதுக்கு மிக இனிமையாக ....அதுவே ஒருவகை மோட்ச பேரின்ப அனுபவமாய் இருந்தது.
....எனது 5 வயது முதல் 10 வயது வரை அதனை ஆனந்தமாக அனுபவித்து உள்ளேன்.....
ஆனால் இன்றோ ....ஒவ்வொருவரும் தனித்தனி குரலில் அபஸ்வர சுருதியோடு ஜெபங்கள் சொல்லும்போது ....."உதடுகள் போற்றுகின்றன...உள்ளமோ வெகுதொலைவில்"- திருவிவிலியத்தில் அன்றே எழுதப்பட்டது ....நாம் வாசிப்பது நினைவில் வருவதை தடுக்க இயலவில்லை .....என்ன ஒரு முன் கூட்டியே சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம்....
இது ஆலயத்தில் ஜெபிப்பதா...
ஒரே நாரசாரம்....
ஆலயத்தில் இருந்து ஆண்டவரும் புனிதர்களும் ஒரே ஓட்டமாய் ஓடிப்போய்டுவாங்களே அய்யா .....
இன்னொரு வருத்தம் தரும் விஷயம் திரு விவிலியம் பொது மொழி பெயர்ப்பு எனும் 'செட்' டப்பில் அடிக்கடி வார்த்தைகள் மாற்றப்பட்டு ...(கடவுளின் வார்த்தையில் கை வைப்பது பாவம் இல்லியா?) ஜெபங்கள் பலப்பல உருமாற்றங்கள் பெற்று பக்தி உணர்வே சிதைந்து....
இது முதலில் மாற வேண்டும். ஜெபங்கள்,திருவிவிலியம் ஓரெழுத்து கூட மாறாமல் அப்படியே இருக்க வேண்டும்...இதை செய்ய வேண்டும்....
அப்புறம் ஆலய திருப்பலி பிரசங்களில் கிறிஸ்தவம் / திருவிவிலியத்தில் உள்ளவைகளை பற்றி மட்டும் உபதேசம் செய்ய வேண்டும்...
மக்களை கவர வேண்டிய நோக்கில் மலிவான சினிமா , தொலைக்காட்சி மற்றும் அரசியல் வகைகள் பற்றிய பேச்சு தேவையா?
இன்று நான் கேட்ட/கேட்கும் பிரசங்ககள் பெருமளவில் முகநூலில் இருந்தே குறிப்புகளுடன் இருக்கும் சோகம்...
மீட்பராம் இயேசு சொல்லியது போல மக்களை மனம் திருப்ப வேண்டும்....அவர்களின் மலிவான ரசனைக்காக இயேசுவின் உண்மையான பிரதிநிதிகள் ஆன குருக்கள் மனம் மாறக்கூடாது.....!!!!!!!!!
எழுத எழுத ....பக்கங்கள் நீளும் ...போதும்!!!!!!
பி . கு: நான் இப்போதெல்லாம் ஆலயம் செல்லும் வழக்கம் வெகு குறைவே .....வருத்தம் ஏதும் இல்லை

இது உண்மையா ? ------------------------------


நமது உடல் ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளது.
விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம்.
இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் ஆயுள் நீடிக்கும்.தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.
விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம்.
காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.
காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை வயிற்றின் நேரம்.
இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்து விடும். காலை உணவை பேரரசன் போல் உண்ண வேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்கு செரிமானமாகி உடலில் ஒட்டும்.
காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம்.
காலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கக்கூடாது. மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும்.
நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.
முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம்.
இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல் கூடாது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்.
பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணி வரை சிறு குடலின் நேரம்.
இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.
பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம்.
நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.
மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம்.
பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.
இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை, பெரிகார்டியத்தின் நேரம்.
பெரிகார்டியம் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber. இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.
இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் ஹீட்டர்
என்பது ஒரு உறுப்பல்ல.உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை இணைக்கும் பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.
இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம்.
இந்த நேரத்தில்தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.
இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம்.
இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது. கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள் முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.

காதலா ? காதலர்களா ?.....

காதல்...இதன் பொருள் புரியாதவர்கள் உலகில் உயிருள்ளவர்களாக நடமாடுவதில் புண்ணியம் லேது .
காதலை சிலர் உள்குத்து வலி என்பர்..., சிலர் மரண வதை என்பர்...,
சிலர் இன்ப ஊற்று ...இன்னும் இன்னும் ஊற்று என்பர்..., சிலர் என்ன சுகம்...என்ன சுகம் என்பர்.
ஒவ்வொருவரும் புரிந்துகொள்கின்ற முறைக்கேற்ப மற்றும் அண்ட்ரோஜென் / எஸ்ட்ரோஜென் பாதிப்பின் அளவுக்கு ஏற்ப காதல் சுகமாகவும் சுமையாகவும் பரிணாமம் கொள்ளும் ....
சிலருக்கு காதல் பாதை, பூக்கள் நிறைந்ததாகக் காணப்படும். இன்னும் சிலருக்கோ காதல்பாதை கரடு முரடாக ....முட்கள்/கற்கள் நிறைந்தனவாகக் காணப்படும்.
இது எதனால் ஏற்படுகிறது என்று பார்த்தால் அது அவரவர் மனதினால்தான் என்பது வெளிப்படையாகிறது.
உண்மையிலேயே காதல் என்பது மிகப் புனிதமான ஓர் உணர்வு....???!!!!ஒருவனுக்கு ஒருத்தி எனும் பண்பு கொண்ட மேன்மை காதல் ...
காதல் என்பது , இன்னொரு வகையில் தீராத நோய் போன்றது.
இந்த நோய் எளிதில் அனைவரையும் தொற்றிக்கொள்ளும். ஆனால் அதைக் குணப்படுத்த நினைப்பது முடியாத காரியமாகும்.
காதல் நோய் நம்மைத் தாக்காமல் கட்டுப்படுத்த நாமொன்றும் உணர்ச்சியில்லாத ஜடமல்லவே...?
ஆனால், இந்தக் காதல் நோய் ஒவ்வொரு உள்ளங்களையும் வெவ்வேறுவிதமாகத் தாக்குகின்றது. அதன் தாக்கத்திலிருந்து எவரும் தப்பமுடியாது.
எதிர்பாலார் மீது ஏற்படுகின்ற கவர்ச்சியின் வெளிப்பாடுதான் இந்தக் காதல். ஆனால் இனக்கவர்ச்சியை மீறியும் உண்டாகும் ஒருவித பிடிப்பு இந்தக் கவர்ச்சி அதிகமாகி ஈர்க்கப்படும்போதுதான் காதலருக்கு குடைக்குள் மழை பெய்கிறது....
நாம் பல பெண்களை / ஆண்களை பார்க்கிறோம் ...எல்லோருமே நம்மை கவர்வதில்லை என்பதே உண்மை ...அப்படியானால் பெண்மை / ஆண்மை தவிர்த்து வேறு சில ஈர்ப்புகள் ...அது குணம் / செயல்கள் தொடர்புள்ள ஏதேனும் ஒன்றாய் இருக்கலாம்.
நான் அறிந்த பெண் தனது ஏழெட்டு வயதிலேயே சக தோழன் ஒருவனது பிறக்கு இரங்கி உதவும் குணத்தால் ஈர்க்கப்பட்டு அதுவே காதல் ஆக பரிணமித்து இன்று போராடி பெற்றோர்களின் உறவுகளின் ஆசியால் திருமணம் முடிந்து இல்லறம் ...அருமை !!!!
இன்னொரு ஆண் நன்றிக்கடன் எனும் பண்பால் பெண்ணிடம் ஈர்க்கப்பட்டு ...சுப முடிவில் மண வாழ்வு ...
இன்னும் இன்னும் ...நான் அறிந்தும் ஆராய்ந்தும் புரிந்துகொண்ட காதல்கள் ...( வெற்றியும் / தோல்வியும் இரண்டுமே உண்டு ) ...ஏராளம் உள்ளன....
அப்படியாயின் காதலில் வகைகள் இருக்கின்றனவா? என்ற கேள்வி ஒவ்வொருவருக்கும் எழும்.
காதலில் வகைகள் இல்லை. ஆனால், காதல் கொள்பவர்களில்தான் வகைகள் இருக்கின்றன.....

மே மே சுவை கொண்ட திரைப்பாடல்

அன்பு நடமாடும் கலை கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னி தமிழ் மன்றமே

மாதவி கொடிப் பூவின் இதழோரமே
மயக்கும் மதுச் சாரமே
மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே
மன்னர் குலத் தங்கமே
பச்சை மலைத் தோட்ட மணியாரமே
பாடும் புது ராகமே

வெள்ளலைக் கடலாடும் பொன்னோடமே
விளக்கின் ஒளி வெள்ளமே
செல்லும் இடம்தோறும் புகழ் சேர்க்கும் மனமே
தென்னர் குல மன்னனே
இன்று கவி பாடும் என் செல்வமே
என்றும் என் தெய்வமே

மானிலம் எல்லாமும் நம் இல்லமே
மக்கள் நம் சொந்தமே
காணும் நிலம் எங்கும் கவி பாடும் மனமே
உலகம் நமதாகுமே
அன்று கவி வேந்தன் சொல் வண்ணமே
யாவும் உறவாகுமே

வலைத்தளம்

https://saminet.page4.me/161.html