Tuesday, 25 October 2022

தன்னல மறுப்பு

 பிச்சைக்காரன் ஒருத்தன் தினமும் கோயில் வாசலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான்.


ஒருநாள் அந்த கோயிலுக்கு  முனிவர் ஒருவர் வந்தார்.


சில பக்தர்கள் அவர் பாதத்தை வணங்கி த௩்கள் குறைகளை கூறினர். முனிவரும் பரிகாரம் கூறினார். 


அதைப்பார்த்த பிச்சைக்காரனும்  அவரிடம் சென்று வணங்கி, 


சாமி! நான் பிறந்ததில் இருந்து அனாதையாக பிச்சை எடுத்து ஜீவிக்கிறேன்! எனக்கு விமோசனமே இல்லையா? சாமி என்று கேட்டான்! 

அதற்கு சாமிகள், அப்பா உன் விதி பிச்சை எடுத்து தான் வாழவேண்டும் என்றுள்ளது! என்றார்! விதியை மாற்ற பரிகாரம் சாமி என்றான்! 


பரிகாரம் இறைவனைத்தான் கேட்க வேண்டும் என்றார்! அதற்கு பிச்சைக்காரன், சாமி இறைவன் எ௩்கிருக்கிறார்? இந்த கோயிலில் இல்லையா என்றான்! உடனே சாமி, "கோயில்கள் இறைவனின் நிழல்கள்"! நீ நேரடியாக பார்க்க வேண்டுமென்றால் கிழக்கு திசையில் போய்க்கொண்டேயிரு, வழியில் வரும் பிரச்சனைகளை நீதான் சமாளிக்க வேண்டும்! உன் மன உறுதி பார்த்து இறைவன் தோன்றுவார்! 


அப்போது நீ புத்திசாலித்தனமாக வார்த்தைகளை உபயோகித்தால் 

உன் விதி மாறும் என்று ஆசீர்வதித்தார்! 

ஆசி பெற்ற பிச்சைக்காரன் கிழக்கு நோக்கி பயணம் செய்தான்! 


வெகுநேரம் நடந்து வந்ததால்  இரவானது! வழியில் ஒரு பெரிய மாளிகை போன்ற வீடு! 

அங்கு சென்று அந்த வீட்டு செல்வந்தரை சந்தித்து இரவு திண்ணையில் தங்கிப்போக அனுமதிகேட்டான்! 


அந்த செல்வந்தரோ நீங்கள் எங்கு போகிறீர்கள் என்று கேட்க தன் விதிமாற இறைவனைக் காணப்போவதை விளக்கினான்!


அதைக் கேட்ட செல்வந்தர், அவனுக்கு உணவு கொடுத்து தங்கவைத்து, காலையில் போகும்போது, தம்பி எனக்கு திருமண வயதில் ஒரு பெண்  இருக்கிறாள்! அவள் பிறவி ஊமை அவளை பேசவைக்க கடவுளிடம் வரம் கேட்பாயா? என்றார்! 

பிச்சைக்காரனும் கேட்பதாக கூறி நடக்க ஆரம்பித்தான்! 


வழியில் ஒரு பிரம்மாண்டமான  மலை! அதை தாண்ட வேண்டுமே என்று தவித்து நின்றான்! 

அங்கு ஒரு மந்திரவாதி கோலோடு நடந்து வந்தவர் இவனைப்பார்த்ததும் தம்பி எங்கு போகவேண்டும் என்று கேட்க, 

விபரத்தை சொன்னான்! 


உடனே மந்திரவாதி, மலையை தாண்ட மந்திரக்கோலால் வழி செய்து கொடுத்து விட்டு, தம்பி இந்த வழியில் போ! 


நான் 300-ஆண்டுகளாக முக்தி 

அடைய முயல்கிறேன்! கிட்டவில்லை! 

கடவுளைப்பார்த்தால் நான் முக்தி 

அடைய என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுவரச் சொன்னார்! 

பிச்சைக்காரனும் சம்மதித்து மந்திரவாதி காட்டிய வழியில் மலையை கடந்தான்!

           

ரொம்ப தூரம் சென்றதும் ஒரு பெரிய ஆறு! அதை எப்படி கடப்பது என்று கரையோரம் மலைத்து நின்றான்! அந்த ஆற்றிலிருந்து ஒரு ஆமை வந்து அவனிடம் விபரம் கேட்டறிந்து, அவனை தன்மேல் ஏறச்சொல்லி கரை தாண்டிவிட்டு விட்டு, தான்பறக்க ரக்கைகள் வேண்டும் கடவுளிடம் கேட்டு வரச் சொன்னது! ஆகட்டும் என்று சம்மதித்து சென்றான்! 

     

வழி எங்கும் காடாக இருந்தது! கடவுள் வரவில்லையே என்று

நடந்து கொண்டே சென்று மயக்கத்தில் விழுந்தான்! 

     

அப்போது அங்கு ஒளியோடு கடவுள் தோன்றி, பக்தா உனக்கு என்ன வேண்டும்? ஏதாவது மூன்று வரம் தருகிறேன்! யோசித்து கேள் என்றார்! 


பிச்சைக்காரன், யோசித்தபோது, 

நாம் பிறவியில் இருந்து பிச்சை எடுத்தோம்! பிச்சை எடுத்து பிழைத்து கொள்ளலாம்! 

ஆனால் அந்த மூன்று நபர்கள் தன்னை நம்பி கேட்ட கோரிக்கையையே கேட்போம் என்று நன்கு யோசித்து, கடவுளிடம் அந்த மூவர் கோரிக்கையை நிறைவேற்ற கேட்டான்! 


கடவுளும்

அந்த மூன்று வரம் தந்து மறைந்தார்! 

திரும்பி வந்து ஆமையை சந்தித்தான்! கடவுளை பார்த்தாயா?


நான் பறக்க என்ன சொன்னார்? என்று ஆமை கேட்டது!

 

நீ உன் மேல் உள்ள ஓடை எடுத்து போடு! ரெக்கைகள் வரும் என்றான்! 

ஆமை ஓட்டை எடுத்ததும் ரெக்கைகள் வந்தது! அந்த ஓடு நிறைய நவரத்தினங்கள் ஜொலித்தன! 


அதைப் பிச்சைக்காரனிடம் கொடுத்து விட்டு ஆமை பறந்தது!

 

வழியில் மந்திரவாதியை சந்தித்து

மந்திரக்கோலை போட்டு விட்டால் உங்களுக்கு முக்தி என்றான்!

 

உடனே மந்திரவாதி, தம்பி இது சக்திவாய்ந்த மந்திரக்கோல்!

 

இதை நல்லவைகளுக்கு மட்டும் பயன்படுத்து என்று அவனிடமே கொடுத்து விட்டு முக்தி அடைந்தார்! 

    

நவரத்தினங்களுடன், மந்திரக்கோலுடன் செல்வந்தர் வீட்டிற்கு வந்தான்!

 

செல்வந்தர் தன் மகள் பேச்சு பற்றி கேட்கும்போதே மாடியில் இருந்து அவர் மகள், அப்பா அன்று வந்து தங்கி சென்றவர் இவர்தானே? என்று பேசினாள்! செல்வந்தனுக்கு ஒரே மகிழ்ச்சி! 

தன் மகளை அவனுக்கே திருமணம் செய்து வைத்து எல்லா சொத்துக்களையும் அவனுக்கு கொடுத்து விட்டார்!

 

அந்த பிச்சைக்காரன் செல்வந்தன் ஆனதும், தன்னுடன் பிச்சை எடுத்த அனைவரையும் அழைத்து தன் பண்ணையிலே வேலை போட்டுக் கொடுத்து தங்கவும் வீடு கட்டி கொடுத்தான். எல்லா உதவிகளையும் செய்து வாழ வைத்த மகிழ்ந்தான். 

           

இதில் நாம் அறிவது! நமக்கென எதுவும் சுய நலத்துடன் வேண்டக் கூடாது! நம்மால் முடிந்த உதவி பிறருக்கு செய்து, பிறருக்காக வேண்டினால், நம் துன்பம் தானே விலகும் என்பதே! வீட்டின் வெளியில் சுவற்றில் சுற்றும் எறும்புக்குக் கூட மூலையில் ஒரு பிடி அரிசி மாவை வைத்தால்

நம் வீட்டு அரிசி பானை நிரம்பியே இருக்கும்! 

நாம் உண்ணும் முன் ஒரு பிடி சாதம்

வீட்டின் புழக்கடையில் வைத்தால் அதை,காகம், குருவிகள், அணில்கள் சாப்பிட்டு நம்மை வாழ்த்தும்! 


நம் வீட்டில் வறுமை ஒரு நாளுமே இருக்காது!

Thursday, 20 October 2022

திரைப்படங்கள் ஆன புதினங்கள்



தமிழில் மற்றும்  ஆங்கிலத்தில் வெளிவந்த சில நாவல்களை படித்து அவை சினிமாவாக ஆக்கம் பெற்ற போது ஆர்வமுடன் பார்க்கும் வழக்கம் 1970களில் சில சீனியர் அண்ணன்களால் ஆரம்பமானது. 


1970களின் இறுதியில் சில அக்காள்களுமே தாங்கள் படித்து ரசித்து கொண்டாடிய சில வாரப்பத்திரிகை தொடர்கள் திரைப்படங்களாக வெளி வந்த காலத்தில் அவைகளை அக்கு வேறு ஆணி வேறாக அலசி அடித்து துவைத்து பிழிந்து காயப்போட்ட சம்பவங்கள் நினைவில் வந்து மோதி சலனப் படுத்தியதின் ஒரு பக்க விளைவே இப்பதிவு. 


அந்த வகையில் நான் பார்த்த என் நினைவுக்கு  வருபவை 


வேலைக்காரி 

மலைக்கள்ளன் 

கள்வனின் காதலி 

பாவை விளக்கு 

புதையல் 

பார்த்திபன் கனவு 

குலமகள் ராதை 

காவல் தெய்வம் 

தில்லானா மோகனாம்பாள் 

இருவர் உள்ளம் 

திக்கற்ற பார்வதி 

தென்னங்கீற்று 

பத்ரகாளி 

வட்டத்துக்குள் ஒரு சதுரம் 

புவனா ஒரு கேள்விக்குறி

கிரகப்பிரவேசம் 

.....


ஆங்கிலத்தில் 


39Steps 

The Shepherd 

Triple Cross 

Oliver Twist 

David Copperfield 

Tale of two cities 

Day of the Jackal 

The Odessa File 

Shawshank Redemption 

Life of Pie 

James Bond Movies 

.....


TV Serials 

If Tomorrow comes

Master of the Game 

Dempsey and Make peace 

Man from Atlantis 

Agatha Christie Novels 


இவைகளில் நான் நாவல் போலவே திரைப்படம் இருப்பதை ஆராய்ந்து பார்த்து ரசித்த சில திரைப்படங்களில் முக்கியமானவை 


மலைக்கள்ளன் 

புதையல் 

பாவை விளக்கு... 


புதையல் திரைப்படத்தில் இடம்பெற்ற அந்த விசித்திர விடுகதை போன்ற "காக்கை மூக்கு நிழலில்..... " அந்த பதின்ம வயதில் ரொம்பவே கவர்ந்தது.


மலைக்கள்ளன் ...பாவை விளக்கு ...கள்வனின் காதலி சமீபத்தில் கூட யூ ட்யூப் உபயத்தில் பார்த்து ரசித்து மகிழ்ந்து போனேன். 


புதுமைப் பித்தன் "சிற்றன்னை" உதிரிப் பூக்கள் ஆக ஆன போது என் கல்லூரி பருவத்தில் பார்க்கவில்லை. 


ஆனால் இப்போது பார்த்தேன். 


"சிறை" ரிலீஸ் ஆன நிலையில் புத்தம் புதிதாக பார்த்தேன். 


"கூட்டுப் புழுக்கள்" மிகப் பிடித்து போன திரைப்படம். பாடல்கள் மிகச் சிறப்பாக அமைந்த என் மனதை கொள்ளை கொண்ட திரைப்படம். 


ஆங்கிலத்தில் மிகப் பிடித்துப் போன

The Odessa File எத்தனையாவது முறையாக 🤔


இன்று கூட இப்போது தான் யு ட்யூப் ல் பார்த்து  அதன் ஒரு சார்பு விளைவாக இப்பதிவு.


PS-1 பற்றி பலரும் பல கருத்துக்களை மானாவாரியாக  பலப்பல  முகநூல் பக்கங்களில் ஏன் நம்ம மத்யமர் தளத்தில் கூட சரமாரியாக பதிவிட்டு அவைகளை எல்லாம் படித்து மூளையே கலங்கி போன உணர்வு. அங்கு பின்னூட்டம் இடவே தோன்றவில்லை 😥


ஒரு நாவல் திரைப்படமாக உருவாவதில் பல சிரமங்கள் கட்டாயம் உண்டு. 


பார்த்து ரசித்து விமர்சனம் செய்ய ரசிகர்கள் நமக்கு கிஞ்சித்தும் நோவதில்லை. 


சகட்டு மேனிக்கு தன்னிச்சையாக என்னென்னமோ எழுதி தள்ளி விவாதித்து சர்ச்சை உண்டாக்கி நல்லா பொழுது போகிறது.


படக்குழுவினர் அனைவரும் படும் பாடு பற்றி ஒரு கணம் சிந்தித்து அதன் பிறகு கொஞ்சம் மனம் இரங்கி ஒரு மனிதாபிமான சிந்தையுடன் விமர்சனம் செய்து பதிவு போடுதல் நன்று 👍👍👍

நேர்மை



பிறர் உடைமை விரும்பாத மேன்மை குணம் 

*****************************

அரேபிய வளைகுடா நாடுகளில் என் முன்னோர்கள் 1950களின் ஆரம்ப காலத்தில் தொடங்கி 1980களின் ஆரம்ப காலம்  வரை இருந்த போது அவ்வப்போது 3அல்லது 5ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊருக்கு விடுமுறை காலங்களில் வருகை தந்த நேரம் எல்லாம் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் கூட்டம் கூடி உரையாடல் நடக்கையில்... 


அங்கு திருட்டு சுத்தமாக கிடையாது அது இது என்று மிக ஜம்பமாக பல கதைகள் சொல்லி நானும் கூட 1970&80களின் தொடக்கம் வரை மிகுந்த பிரமிப்புடன் கேட்டுள்ளேன். 


நமது ஊரிலும் செய்தித் தாள்கள் வாசிக்கும் போதெல்லாம் அவ்வப்போது ஆட்டோ டாக்ஸி ரயில் பஸ் பயணிகள் மறந்து விட்டு போன தங்கள் உடைமைகளை பொறுப்புடன் ஒப்படைத்து தங்கள் நேர்மை குணம் விளங்கச் செய்த பல நல்லோர் பற்றிய சம்பவங்கள் பற்றி வாசித்து அறிந்து வியந்து ஒரு வகை பூரிப்பு. 


இப்போது எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்கள்:


1987ல் குவைத்தில் ஆடிட்டர் பணியில் இருந்த காலத்தில் ... 


என் நண்பர் ஒருவருடன் விடுமுறையில் ஊருக்கு வர குவைத் ஏர்போர்ட்டில் காத்து இருந்த நேரம். 


பொது தொலைபேசி கூண்டுக்குள் போனவர் பேசி முடித்து சில தங்க நகைகள் மற்றும் அமெரிக்க டாலர் பண நோட்டுக்கள் இருந்த ஓர் பையை மறந்து அங்கேயே விட்டு விட்டு வெளியே வந்து ஏறக்குறைய சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஃபிளைட் ஏற அறிவிப்பு வந்த நேரத்தில் உடைமைகளை செக் பண்ணிய போது பை காணாமல் போனதை உணர்ந்து பதறி பொது தொலைபேசி கூண்டுக்கு ஓடி அது அப்படியே இருக்க கண்டு ஆசுவாசம் ஆகி... 


அதை எடுத்து ஆனந்தமாக வந்தார். 


பயணத்தின் போது நாங்கள் இதையே  பேரதிசயமாக பேசி வியந்து மகிழ்ந்து... 


அடுத்து... 


2002 டிசம்பர். எனது இரண்டாவது இன்னிங்ஸ் குவைத் நாட்டில் ஆரம்பம். 


எனக்கு மூன்று ஸெட் ரேமண்ட்ஸ் சூட் வாங்க சென்னை மயிலாப்பூர் ஷோ ரூமில் ஆர்டர் செய்து முதலில் அட்வான்ஸ் மட்டுமே கொடுத்து அதை மீதி பணம் கட்டி வாங்கி வரச்  சென்ற நேரம்...


ஈஞ்சம்பாக்கம் போய் ஒரு நண்பர் வீட்டில் அவரை சந்தித்து பேசி விட்டு மயிலை செல்ல பேருந்து நிலையம் வந்தவன் ஒரு தள்ளு வண்டி கடையில் ஏதோ குளிர் பானம் அருந்தி நின்ற வேளையில் ...


30ஆயிரம் பிளஸ் பாஸ்போர்ட் டிக்கெட் எல்லாம் இருந்த ஒரு சிறிய தோல் பையை அந்த தள்ளு வண்டி மீது வைத்து இருந்ததை மறந்து... 


பிராட்வே பஸ் வரக்கண்டு பையை எடுத்துக் கொள்ளாமலேயே   பாய்ந்து பஸ் ஏறி பயணிக்கையில் திருவான்மியூர் பேருந்து நிலையம் வந்த போது பை இல்லாத உணர்வு வந்து பதறி அடித்து இறங்கி மறுபடியும் எதிர் பக்கம் போய் பேருந்து ஏறி ஈஞ்சம்பாக்கம் போய்... 


அந்த அரை மணி நேரத்தில் நெஞ்சம் பதறி உடல் நடுக்கம் ஏற்பட்டு கண்கள் கலங்கி ...


ஈஞ்சம்பாக்கம் ஸ்டாப் வந்ததும் ஒரே ஓட்டம். தள்ளு வண்டி வந்து பை வைத்த இடத்தில் அப்படியே இருக்க கண்டு ஒரு மாதிரி ஆசுவாசம் ஆகி ...


அன்றைக்கு என் நல்ல நேரம் பாஸ்போர்ட் விமான பயணச் சீட்டு எல்லாம் சேர்ந்து இருந்ததால் தகராறு ஒன்றும் இல்லாமல் எல்லாம் திரும்ப பெற யோகம் வாய்த்தது. 


என் வாழ்க்கையில் நடந்த இவ்விரண்டு சம்பவங்களும் நினைவு வரக் காரணம் இப்போது முகநூலில் படித்த ஒரு பதிவே. 


இத்தகைய சம்பவங்கள் என்றென்றும் சாசுவதமானவை 👍


வாழ்க இத்தகைய நல்ல அதிசயப் பிறவிகள்... நேர்மையாளர்கள் 😍😍😍

கலாச்சாரம்

 கலாச்சாரம் மற்றும் அது சார்ந்த பண்பாட்டு விளைவுகள் குறித்து உங்கள் பார்வையில் கருத்துகள் இடவும் 👍

Wednesday, 19 October 2022

நிகழ்வு

 இறப்பை வெல்ல முடியாது

மிகவும் பிரசித்தி பெற்ற சூஃபி கதை ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது. 

ஒரு அரசன் தன் கனவில் ஒரு கறுப்பு உருவம் ஒன்றைக் கண்டார். 

அது கனவு என்ற போதிலும் அவர் அரண்டு விட்டார். 

அவர், “நீ யார்? எதற்காக என் கனவில் வந்தாய்?” என்று கேட்டார்.

அதற்கு அந்த உருவம், “நான் தான் உன் மரணம். 

நாளை சூரிய அஸ்தமனத்தில் நாம் சந்திப்போம். 

உனக்கு மிகவும் பொறுப்புக்கள் இருப்பதால் நான் உன்னிடம் இதை தெரிவிக்கலாம் என்று வந்தேன். 

சாதாரணமாக நான் யாரிடமும் முன்கூட்டியே தெரிவிக்க போவதில்லை. 

ஆனால் நீ ஒரு அரசன், மிக முக்கியமானவன், மிக மிக அரிதானவன். 

என்னால் உன்னை சரியான இடத்தில் சந்திக்க முடியாமல் போய்விடுமோ என்று பயப்படுகிறேன்.

நீ வேறு ஏதேனும் இடத்தில் சிக்கிக் கொண்டு விட்டால் நான் என்ன செய்வது

நீ என்னை சரியான இடத்தில் சரியான நேரத்தில் சந்திக்க வேண்டும் 

நினைவில்

கொள்.” என்று சொல்லியது.

அரசர், “எது சரியான இடம்?” என்று கேட்பதற்கு முன் பயத்தினால் அவரது

தூக்கம் கலைந்துவிட்டது. 

நிழல் உருவம் மறைந்துவிட்டது. 

நேரம் தெரிந்துவிட்டது,

நாளை சூரிய அஸ்தமனம் தனது மரணம் என

– ஆனால் இடம் எது ?

நான் உன்னை சந்திக்க வேண்டிய இடம் எங்கிருக்கிறது என்று கேட்பதற்காக அவர் பலமுறை கண்களை மூடி அந்த நிழல் உருவத்தை

பார்க்க முயற்சித்தார்.

இறப்பை சந்திக்கவேண்டும் என்று அவர் விரும்பினார்

என்பதல்ல. 

அந்த இடம் எது என்று தெரிந்தால் அதை தவிர்த்து விடலாம். 

அந்த இடத்துக்கே போக கூடாது என எண்ணி

ஆனால் இந்த முழு

உலகத்தில் அந்த இடம் எது

ஆனால் உன்னால் கனவை தொடர முடியாது – அது மிகவும் கடினம். 

ஒரு முறை கனவு

கலைந்துவிட்டால் எவ்வளவு முயற்சி செய்து கண்களை மூடி கனவை தொடர முயன்றாலும் அது

வராது.

அரசர் மிகவும் பயந்து போய் தனது

அரசவை ஜோதிடர்கள், குறி சொல்பவர்கள், அமைச்சர்கள், குருமார்கள், பூசாரிகள்,

ரேகைசாஸ்திரம் சொல்பவர்கள் என யாவரையும் அழைத்து, “அந்த சரியான இடம் எது என்று

எனக்கு கண்டுபிடித்து சொல்லுங்கள். அப்போதுதான் நான் அங்கு

செல்லாமல் அதை தவிர்க்க முடியும்” என கூறினார்.

உடனே அவர்கள் அனைவரும் தங்களது

பழமையான நூல்களில் பதில் தேட ஆரம்பித்தனர். 

காலை வந்து சூரியன் எழுந்தது. 

காலை

முழுமையாக விடிந்தவுடன் அரசர் மிகவும் பயந்து போனார். 

ஏனெனில் பொழுது விடிந்தால்

முடியுமே! 

முடிவின் ஆரம்பம் தானே விடியல். 

சூரியன்

விடிந்தால் அஸ்தமனம் வெகு தொலைவில் இல்லையே.

சூரியன் ஏற்கனவே அஸ்தமனத்தை

நோக்கி செல்ல துவங்கி விட்டான். 

இன்னும் இவர்கள் எந்த முடிவுக்கும் வரவில்லை. 

அதற்கு

பதிலாக அவர்கள் தங்களுக்குள் சண்டையிட ஆரம்பித்துவிட்டனர். 

அரசர், “உங்களுடைய நூல்களைப் பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை. 

அது எந்த இடம் என்று மட்டும் சொல்லுங்கள், போதும். அப்போதுதான் அங்கு நான் போகாமல் இருக்கமுடியும் ” என்றார்.

அவர்கள், “ இருங்கள். 

இது ஒரு எளிமையான கேள்வி அல்ல.

நாங்கள் அதற்கான வழிமுறைகளை கண்டு, பின் ஒரு முடிவுக்கு வர வேண்டும். 

ஜோதிடர்

ஒன்றை சொல்கிறார், பூசாரி வேறு ஒன்றை சொல்கிறார்.

நாங்கள் உங்களுக்கு பதினைந்து

பதில்கள் கொடுத்தால் அதனால் என்ன பயன் ? 

ஆகையால் நாங்கள் ஒரு முடிவுக்கு

வந்த பின் சொல்கிறோம்” என்றனர்,

அரசரின் வயதான வேலையாள் ஒருவன்

அருகில் நின்று கொண்டிருந்தான். 

அவன் அரசரது காதில் மெதுவாக, “ நான் கிழவன். 

நான் இந்த பெரிய மனிதர்களின் வாக்குவாதத்தில் தலையிடகூடாது. 

நான் ஒரு வேலையாள். 

ஆனால் வயதானவன், எனக்கு உன் தந்தையின் வயதிருக்கும். 

உங்களது சிறிய வயதிலிருந்து நான் உங்களை

வளர்த்திருக்கிறேன். 

நான் சொல்வதை கேளுங்கள். இவர்கள் ஒருபோதும் ஒரு முடிவுக்கு வர

மாட்டார்கள்.

இவர்கள் தங்களுக்குள் வருடக்கணக்கில் சண்டையிடுவார்களே தவிர ஒரு போதும் ஒரு முடிவுக்கு வர மாட்டார்கள். 

இரண்டு தத்துவவாதிகளோ, இரண்டு ஜோதிடர்களோ, இரண்டு குறி சொல்பவர்களோ ஒரு போதும் ஒத்துப் போக மாட்டார்கள். 

ஒத்துப் போகாமைதான் அவர்களது வியாபாரம், அவர்கள் அப்படி

ஒத்துப் போகாமல் இருப்பதில்தான் வாழ்கிறார்கள். 

அதனால் காத்திருக்காதீர்கள்.

காலம்

மிகவும் குறைவாக உள்ளது. 

நீங்கள் என்னைக் கேட்டால் உங்களிடம் உள்ள மிகச் சிறந்த

குதிரை ஒன்றை எடுத்துக் கொண்டு – உங்களிடம் அப்படிபட்ட சிறப்பான குதிரைகள் உள்ளன. –

இந்த இடத்திலிருந்து ஓடிப் போய்விடுங்கள்.

ஒரு விஷயம் நிச்சயம். 

நீங்கள் இந்த

இடத்தில், இந்த அரண்மனையில், இந்த நகரத்தில், உங்களது ராஜ்ஜியத்தில்

இருக்கக்கூடாது. 

எங்காவது தப்பிச் சென்று விடுங்கள் ” என்று கூறினான்.

அரசருக்கு இது சரியென்று பட்டது.

அரசர், “ நீ சொல்வது சரிதான். 

ஏனெனில் இவர்கள் இதை

சூரிய அஸ்தமனத்திற்க்குள் முடிக்க மாட்டார்கள் போலிருக்கிறது.

” என்றவாறே அவர் தன்னுடைய குதிரைகளில் சிறப்பான ஒன்றை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடினார்.

மாலையாவதற்குள் அவர் தனது ராஜ்ஜியத்தின் எல்லையை கடந்து வேறொரு ராஜ்ஜியத்திற்க்குள் நுழைந்து விட்டார்.

அவர் தான் தப்பியதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். 

இப்போது இவர் எங்கிருக்கிறார்

என்று இறப்பினால் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை.

இரவு ஓய்வெடுப்பதற்காக அவர் ஒரு

சோலையினுள் நுழைந்தார். 

அவர் தனது குதிரைக்கு மிகவும் நன்றி செலுத்தினார். 

ஏனெனில்

இந்த குதிரை உண்மையிலேயே ஒரு அற்புதமான விஷயத்தை செய்து முடித்திருக்கிறது. 

நாள்

முழுவதும் அது மிகவும் வேகமாக ஓடி வந்திருக்கிறது.

அது அப்படி ஓடி அரசர் கூட இது

வரை பார்த்ததேயில்லை. 

அது தண்ணீர் குடிக்கக் கூட ஓய்வெடுக்கவில்லை. 

அது ஒரு வினாடி

கூட ஓய்வெடுக்க நிற்கவும் இல்லை. 

அது இந்த அவசரத்தை புரிந்து கொண்டதைப் போல நடந்து

கொண்டது.

அரசர் அதற்கு நன்றி கூறினார்.

அவர் அதனிடம், “ நீ என்னை காப்பாற்றி விட்டாய்.

நான் உனக்கு நன்றி கூறுகிறேன், எனக்கு உன் மேல் அன்பு பெருகுகிறது, நான் உனக்கு

தகுந்த சன்மானம் அளிப்பேன். 

நாளை நாம் நமது ராஜ்ஜியத்திற்க்குள் சென்றவுடன் எனக்கு

அளிக்கப்படும் அதே அளவு மரியாதையை நீயும் பெறுவாய் ” என்றார்.

அந்த நேரத்தில் சூரிய அஸ்தமனம்

ஆனது, 

அப்போது ஒரு கரம்……. தனது தோள் மீது ஒரு கரம் படிவதை அரசர் உணர்ந்தார்.

அவர் திரும்பி பார்த்தார். 

அவர் கனவில் பார்த்த அதே கறுப்பு நிழல் உருவம் அங்கே

இருந்தது.

அந்த நிழல் உருவம் சிரித்தபடி, “நீ அந்த குதிரைக்கு நன்றி சொல்லக் கூடாது.

நான் தான் அந்த குதிரைக்கு நன்றி சொல்ல வேண்டும்.  

இதுதான் நான் உனக்காக காத்துக் கொண்டிருக்கும் இடம். 

உன்னுடைய குதிரையால் இங்கு வர முடியுமோ வர முடியாதோ என்று நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். 

ஆனால் அது வந்து சேர்ந்து விட்டது. இந்த உலகிலேயே மிக அற்புதமான குதிரை உன்னுடையது. 

நீ சரியான நேரத்திற்கு சரியான

இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டாய்.” என்றது.

நீ என்ன செய்து கொண்டிருந்தாலும்

இறப்பை சந்திக்க சரியான இடத்திற்கு சரியான நேரத்திற்கு வந்தடைந்து விடுவாய்!

வேம்பு

 வேம்பின் பிறப்பைப் பற்றிக்

அகத்தியர் கூறுகிறார். 

======================

திருமால் பெண்ணுருவம் கொண்டு அமிர்தத்தை தேவர்களுக்கு அகப்பையினால் பங்கிடும் போது, அசுரர்கள் அந்தப் பெண்ணின் அழகைக் கண்டு மயங்கி இருக்கையில், அசுரர்களில் ஒருவன் யாருக்கும் தெரியாமல் தேவர்கள் பந்தியில் வந்து அமர்ந்துவிட, திருமாலும் தேவர்களின் வரிசையில் தேவர்களைப் போல இருந்த அசுரனுக்கும் மூன்றகப்பை அமிர்தத்தைக் கொடுத்து விடுகிறார்.


அமிர்தத்தை கொடுத்த திருமாலுக்கு அருகிலிருந்த சூரியனும், சந்திரனும், அவன் அசுரன் என்று ஜாடை காட்டிச் சொல்ல, அமிர்தத்தை சாப்பிட்டுக் கொண்டு இருந்த அசுரனை நோக்கித் திருமால் அகப்பையால் வெட்டி விட, அசுரன் தலை வேறு உடல் வேறாக வெட்டப்பட்டு, அடையாளம் காட்டிக் கொடுத்த சூரிய 

சந்திரர்களுக்கு பகைக் கிரகமான ராகு, கேது என மாறினார்கள்.


அகப்பையினால் வெட்டுப்படும் போது அசுரன் தனது வாயில் மீதமாக இருந்த அமிர்தத்தைக் கக்கினான். கக்கும்போது அசுரனின் வாயிலிருந்து பூமியில் விழுந்த அமிர்தமானது வேப்பமரமானது. 


வேம்புக்கு கசப்புச்சுவை வந்த காரணம் என்ன வென்றால், அசுரனின் (பாம்பின்) நச்சு வாயிலிருந்து வெளிப்பட்டதால் தான். 


அப்படிப் பட்ட வேம்பை உண்டு வந்தால் மனிதனுக்கு சாவு என்பதே கிடையாது. 


இப்படியாகத் தான் சனகாதி நால்வருடன் (என் குருமார்கள் நால்வருடன்) சேர்ந்து நானும் சாப்பிட்டு காயசித்தி பெற்றேன் என்று கூறியுள்ளார்.

இழப்பு வரம்

 இழந்ததெல்லாம் திரும்பத் தா இறைவா!

இழந்ததெல்லாம் திரும்பத் தா எனக் கேட்டேன்.

இழந்தவை எவை என இறைவன் கேட்டான்!

பலவும் இழந்திருக்கிறேன்,

கணக்கில்லை…

பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்?

கால மாற்றத்தில் இளமையை இழந்தேன்

கோலம் மாறி என் அழகையும் இழந்தேன்

வயதாக ஆக உடல் நலமிழந்தேன்

எதை என்று சொல்வேன் நான்

இறைவன் கேட்கையில்?

எதையெல்லாம் இழந்தேனோ

அதையெல்லாம் மீண்டும்தா என்றேன்.

அழகாகச் சிரித்தான் பரமன்

”கல்வி கற்றதால் அறியாமை இழந்தாய்

உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய்

நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய்

சொல்ல இன்னும் பல உண்டு இதுபோல

தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான்.

திகைத்தேன்!

இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்

வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறும்

இணைந்ததை அறிந்தேன்

இதயம் தெளிந்தேன்

தீபாவளி

சென்னை பெருங்களத்தூர்.

மாலை நேரத்தை விழுங்கி இரவு மெல்ல தலை நீட்டத் தொடங்கி இருந்தது.  மப்பும் மந்தாரமுமான மழைக்கால குளிரில் வெளியே தலை நீட்டாமல் நிலவு ,   இருளைப் போர்த்தி உறங்கிக் கொண்டிருந்தது.


விடிந்தால் தீபாவளி.  ஊருக்குச் செல்வதற்காக காத்துக் கிடந்த மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய பெருங்களத்தூர் பஸ்நிலையம் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது. 


பஸ்நிலையத்திற்கு முன்னூறு நானூறு மீட்டர் முன்னதாகவே ஏரிக்கரையை ஒட்டி ஒரு முஸ்லிம் ,   மலிவான துணிகளை கடையாய் பரப்பி வைத்திருந்தார்.  அவர் கடை வரை பஸ்சுக்காக காத்திருப்பவர்களின் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது.


கொஞ்சம் வசதி குறைந்தவர்கள்  பேரம்பேசி துணிகளை வாங்கிச் சென்றார்கள்.  அரைமணி நேரமாய் அந்த வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்த ஒருவர்  மெல்ல அவரிடம் கேட்டார்.


"நானும் அரைமணி நேரமா பாக்குறேன்... நீங்க நூத்தம்பது ரூபா சொல்லி அவங்க நூறு ரூபாய்க்கு கேட்டாக் கூட குடுத்தீங்க.  சரி ... ஆனா கடைசியா ஒருத்தர் நீங்க சொன்ன நூத்தம்பது ரூபாய குடுத்தப்போ நீங்க நூறை மட்டும் எடுத்திட்டு ஐம்பதை திருப்பிக் குடுத்தீங்களே ஏன்? "


"இது ஒரே விலைனு போர்டு போட்ட கடை இல்ல தம்பி.  ஏழைபாலைங்க அவங்க பொருளாதாரத்துக்கு ஏத்தாப்புல வாங்குவாங்க.  அவங்களுக்கு தரம் முக்கியமில்ல.  சொன்ன விலையிலருந்து குறைச்சு வாங்கியே பழக்கப்பட்டவங்க.  எனக்கு நூறு ரூபா பொருளுக்கு பத்து ரூபா கெடச்சாப் போதும்.  அதனாலதான் நூத்தம்பது சொல்லி நூறுக்கு குடுத்திருவேன் .  அவங்களுக்கும் மனசு திருப்தி.  எனக்கும் நியாயமான வருமானம்.  கடைசியா வந்தவர் பேரம் பேசாம குடுத்தார்.  நானும் மனசாட்சியோட திருப்பிக் குடுத்துட்டேன்"


"ஆமா நீங்க எங்க போகணும் தம்பி "


"திருநெல்வேலி போகணும் பாய்"


"இன்னைக்கெல்லாம் பஸ் ஏறிப் போறது செத்துப் பொழைக்கிறதுக்கு சமம். பார்த்தா படிச்சவங்க மாதிரி இருக்கீங்க.  ரயில்லயோ பஸ்லயோ ஒரு மாசம் முன்னாலயே ரிசர்வ் பண்ணி இருக்கலாம்ல"


" கார் இருக்கு.  எப்பவும் அதுலதான் ஊருக்குப் போவேன்.   இன்னைக்கு மத்தியானம்தான் காருக்கு அடில போய் சென்சார் ஒயர எலி கடிச்சிருச்சு.  ஒர்ஷாப்ல உடனே ரெடி பண்ண முடியாதுனுட்டாங்க.   அதான் பஸ்ல போலாம்னு பார்த்தா,   ரொம்ப சிரமமாயிரும் போலயே .. "


"கொஞ்சம் லேட்டானா இடம் கிடைக்கும்.  வெயிட் பண்ணுங்க தம்பி"  என்றவர் மணி பார்க்கிறார்.  7.25

என்றது கடிகாரம்.   "அடடா இரவு தொழுகைக்கு நேரமாச்சே.  தம்பி நான் தொழுகைக்கு போய்ட்டு வாரேன்.  உங்களுக்கு பஸ் வர்ற வரைக்கும் பார்த்துக்கிறீங்களா ... பஸ் வந்தா போயிருங்க ,  ஆண்டவன் பாத்துக்குவான்" 


"சரிங்க பாய் "


அவர் தொழுகைக்குப் போய் வருவதற்குள் எண்ணூறு ரூபாய்க்கு வியாபாரம் செய்து வைத்திருந்தார்.  நாகர்கோவில் சென்ற இரண்டு ஆம்னி பஸ்களையும் ஒரு அரசு பஸ்ஸையும் தவற விட்டிருந்தார்.


"இந்தாங்க பாய் எண்ணூறு ரூபாய் ...    துணி கேட்டு வந்தவங்களுக்கு நீங்க விக்கிற மாதிரியே குடுத்தேன்"


"மாஷா அல்லாஹ்.... அல்லா உங்களை சுவனவாசி ஆக்கட்டும்.  ஆமா ... உங்களுக்கு ஒரு பஸ்சும் வரலயா "


"வந்துச்சு.  நான்தான் போகல பாய்.  என்னை நம்பி பொறுப்பை குடுத்துட்டு போய் இருக்கீங்க.  அதை அம்போனு விட்டுட்டுப் போயிருந்தா என்னால நிம்மதியா தீபாவளி கொண்டாடி இருக்க முடியாது பாய்"


"நல்லது தம்பி.  இன்னும் பஸ் வந்துகிட்டுதான் இருக்கும்.  கண்டிப்பா சீட் கிடைக்கும்.  ஆமா உங்களுக்கு எத்தனை குழந்தைங்க "


"ஒரே பையன்தான்.  ஏழு வயசாகுது"


"ஓ ...."  என்றவர்,  அந்தப் பையனுக்குத் தகுந்தாற்போல்  தன்னிடம் இருந்ததிலேயே விலையுயர்ந்த(!)  ஒரு பென்சில் பேண்ட்டையும் ஒரு டீசர்ட்டையும் ஒரு கேரிபேக்கில் போட்டு அவரிடம் கொடுத்தார்.


"இந்தாங்க தம்பி.  உங்க பையனுக்கு என்னோட தீபாவளி பரிசா வச்சுக்குங்க"


"அய்யோ ... வேண்டாம் பாய்.  நீங்க சொன்னதே போதும்.  நான் ஏற்கனவே புதுத் துணி எல்லாருக்கும் எடுத்துட்டேன்."


"பரவால்ல .... நீங்க போடுற அளவு ரிச்சான துணிகள் என்கிட்ட இல்ல.  இருந்திருந்தா குடுத்திருப்பேன்.  பையன் போடாட்டாலும் உங்க வீட்டுப் பக்கம் இருக்கிற ஒரு ஏழைப் பையனுக்கு குடுங்க.  ஆனா நீங்க இதை வாங்கிக்கிட்டாதான் எனக்கு சந்தோசமா இருக்கும்"


"என்னங்க பாய் இப்படி வற்புறுத்துறீங்க"  என்று வாங்கிக் கொண்டார்.  தன் இரண்டு பைகளில் ஒன்றைத் திறந்து துணியை வைத்துக் கொண்டவர்,   அதிலிருந்து பெரிய ஸ்வீட் பாக்ஸ் ஒன்றை வெளியில் எடுத்து ஒரு கேரிபேக்கில் போட்டு அவரிடம் நீட்டினார்.


"இந்தாங்க பாய்,   குப்தா ஸ்வீட்ஸ்.  வீட்டுக்கு கொண்டு போங்க."


"குப்தா ஸ்வீட்சா ... ரொம்ப காஸ்ட்லி ஆச்சே.   பிள்ளைக்காக வாங்கி இருப்பீங்க.  நீங்க கொண்டு போங்க தம்பி"


"அப்போ நானும் டிரெஸ்சை திருப்பித் தந்திருவேன்"


"சரிசரி குடுங்க தம்பி"  என்று ஸ்வீட்சை வாங்கி ஒரமாய் வைத்தவர்,  " வோய் கரீம் பாய் ... இங்க என்னவே பண்றீரு"  என்ற குரல் கேட்டு திரும்பினார்.  கடையை ஒட்டி ஓரமாய் நின்றிருந்த காரில்,   ஸ்டீயரிங்கைப் பிடித்தபடி சார்லஸ் அமர்ந்திருந்தார்.  பக்கத்து இருக்கையில் அவர் மனைவி.


"தீபாவளி வியாபாரம் பாக்குறேன் வோய்.  பாத்தா தெரியல "


"பத்து வருசம் முன்னால இருந்த அந்த நக்கலும் நையாண்டியும் இன்னும் உம்மை விட்டுப் போகல வோய் .... எப்படி இருந்த மனுசன்.  தாம்பரத்துலயே கொடிகட்டிப் பறந்த ஜவுளிக்கடை முதலாளி.  உன் கடைய ஒட்டி அந்தப் பாலம் மட்டும் வராம இருந்திருந்தா உன் கடையும் இடிஞ்சிருக்காது.  நீயும் இந்த நிலைமைக்கு வந்திருக்க மாட்டே.   எல்லாம் நேரம் வோய்"


"முடிஞ்சத பேசி பிரயோஜனம் இல்ல சார்லசு.  நடப்பதெல்லாம் நன்மைக்கே.  எல்லாம் அவன் செயல்"  என்று மேலே கையை உயர்த்தினார் பாய்.


*******


அதே நேரம் திருநெல்வேலி செல்பவருக்கு போன் வந்தது.  


"என்னடி சரசு "


"ஏன்னா பஸ் ஏறிட்டேளா"


"இன்னும் இல்ல.   பஸ் ஸ்டேன்ட்லதான் வெயிட் பண்ணின்டிருக்கேன்."


"பட்டுக்கோட்டைலருந்து அத்திம்பேர் குடும்பமெல்லாம் வந்துட்டாங்கோனா.  பத்மநாபன் இன்னும் பஸ்ஸே ஏறலயா.  பணம் போனா பரவாயில்லே.  டாக்சி பிடிச்சுண்டு வரச் சொல்லுனு சொல்றாங்கோ."


"இன்னும் அரைமணிநேரம் வெயிட் பண்ணிட்டு பஸ் கிடைக்கலேனா டாக்சி பிடிச்சுடலாம்னுதான் இருக்கேன்"


"ஏன்னா ... ரகு,   குப்தா ஸ்வீட்லருந்து பலகாரம் கேட்டானே ... வாங்கிட்டேளா "


"அந்தப் பக்கம் போக பொழுதே ஒழியலடி.  அங்க வந்து சாந்தி ஸ்வீட்ஸ்ல வாங்கிடலாம்"


"என்னமோ போங்கோ ... ரகுவை நீங்க சமாளிச்சுண்டா சரி"


""சரி போனை வை.  பஸ் ஏறிட்டு போன் போடுறேன்"


*******


"ஏம்பா சார்லசு ... நாகர்கோயிலுக்கா போற"


"ஆமா வோய்.  தொடர்ச்சியா நாலுநாள் லீவு.  அதான் ஊரைப் பாக்க போய்ட்டு வரலாம்னு கிளம்பிட்டோம் "  


"வழில யாரையாவது பிக்கப் பண்றியா"


"அதெல்லாம் இல்ல வோய்.  நாங்க ரெண்டு பேர் மட்டும்தான்."


"அப்போ எனக்கு ஒரு உதவி செய்வியா"


"என்ன செய்யணும் ... உன்னை தூக்கிட்டுப் போய் திருநெல்வேலில போடணுமா"  என்று கலகலவென சிரித்தார் சார்லஸ்.


"அட கூவ.  என்னை இல்லடே ... அந்த தம்பிய கூட்டிப்போய் திருநெல்வேலில இறக்கிரணும்"


"அந்த தம்பி யாரு"


"என் நண்பர்தான்"


"எனக்குத் தெரியாம உனக்கு ஒரு நண்பனா வே ... ரொம்ப மாறிட்ட வோய்.  உன் நண்பர்னு சொல்ற.   உன் நண்பர் எனக்கும் நண்பர்தான்.  மூணாம் மனுசன் மாதிரி கேட்டுக்கிட்டு நிக்கிற ... உள்ள ஏத்தி விடும்வோய் ... "


"தம்பி ... இவன் சார்லஸ்.  என் பால்ய நண்பன்.  இவன் நாகர்கோவில் போறான்.  உங்களை திருநெல்வேலில இறக்கிருவான்.  ஏறிப் போங்க தம்பி"


பத்மநாபனுக்கு சட்டென்று முகம் பிரகாசமாகியது.  கையை பிடித்துக் கொண்டார்.  "பேருதவி செஞ்சீங்க பாய்"


"அதெல்லாம் ஒண்ணுமில்ல.  ஏறுங்க என்ற பாய்,   மறக்காமல் சொன்னார்.... "உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் தம்பி"


"ரொம்ப தேங்க்ஸ் பாய் "  என்ற பத்மநாபன் காரில் ஏறி அமர்ந்தார்.


"டேய் ... ஆக்கங்கெட்ட கூவ ... மழை வர்ற மாதிரி இருக்கு.  துணியெல்லாம் மூட்டை கட்டிட்டு வீடு போய் சேரு"


"சரிடா ... ரோடெல்லாம் ரஷ்ஷா இருக்கும்.   பத்திரமா பார்த்துப் போ."


அனைவரும் கைகளை ஆட்டிக் கொண்ட பின் கார் மெல்ல ஊர்ந்து போகத் தொடங்கியது.


கரீம் பாய் துணிகளை எல்லாம் பேக் செய்து விட்டு ,  அந்த ஸ்வீட் பாக்ஸை இப்போதுதான் கூர்ந்து கவனிக்கிறார்.  அதன் மேல்பகுதியில் ரோஸ் நிற இரண்டாயிரம் ரூபாய் தாள் ஒன்று செருகப்பட்டிருந்தது.  கள்ளம் கபடமில்லாமல் காந்தி தாத்தா பொக்கை வாய் திறந்து சிரித்துக் கொண்டிருந்தார்.


"யா அல்லாஹ்"  என்று அனிச்சையாய் கார் சென்ற திசையை திரும்பிப் பார்க்கிறார்.  அது பல்லாயிரம் சிவப்பு புள்ளிகளுக்கிடையே கலந்து போயிருந்தது,   மனதால் கலந்து போன இந்த மூன்று மனித(ங்)ர்களைப் போல 😍

Sunday, 2 August 2020

நண்டின் கால்தடம்

கடலோரத்தில் நண்டு நடந்துகொண்டிருந்தது. மணலில் பதிந்த நண்டின் கால்தடத்தை அலை அழித்துக் கொண்டே இருந்தது.
நண்டுக்கு ஒன்றும் புரியவில்லை.
ஒருநாள் ஒரு நரி கடற்கரை ஓரம் நண்டின் கால்தடம் இருக்கிறதா என்று தேடி அலைந்தது.
வளைக்குள் இருந்து ஓரக்கண்ணால் எட்டிப் பார்த்த நண்டுக்கு அலை தன் கால் தடத்தை அழித்த காரணம் இப்போதுதான் தெளிவானது.
அலையின் நட்பை அடிமனத்தால் போற்றியது நண்டு.
தனக்குள்ளேயே அது சொல்லிக்கொண்டது:-
"முன்பே காப்பான் அன்பே நட்பு"

உணவுப் பாண்டம்

வீட்டிலும் ஹோட்டல்களிலும் பிளாஸ்டிக் ஆக்கிரமிப்பு தொடங்கிவிட்டாலும் கோவில்களில் மட்டும் இலையில் சாப்பாடு தரும் மரபு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

நாகரிகம் மிகவும் ஆக்கிரமிக்காத சிறுநகரப் பகுதிகளிலும் கிராமங்களிலும் இன்றும் இலையில் சாப்பிடும் மரபைக் காணலாம். இலையென்றால் வாழை இலை மட்டுமில்லை. நீண்ட நாள் தேவைகளுக்காக வாழை இலைகளை வெயிலில் காயவைத்து எடுத்து பதப்படுத்தி வைத்துக்கொள்வது. அல்லது மந்தாரை இலை போன்றவற்றை பதப்படுத்தி ஈர்குச்சி கொண்டு தைத்து தட்டு போல உருவாக்கி சேமித்து வைப்பது என ப்ளாஸ்டிக்கும் எவர்சில்வரும் உருவாக்கப்படாத காலகட்டத்தில் இந்த இலைகளில் தான் நம்முடைய் தாத்தா பாட்டிகள் சாப்பிட்டு வந்தார்கள்.

இதனை ஊர் பக்கம் ’தையல் இலை’ என்பார்கள்.சுடச்சுட சமைக்கப்பட்டிருக்கும் சாப்பட்டை அம்மா இந்த இலைகளில் பரிமார அதனைச் சாப்பிடும்போது கிடைக்கும் சுவை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களே நினைத்தாலும் தரமுடியாது.

காலப்போக்கில் ஆரோக்கியம் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவர்களும் அவசர மற்றும் அவசியத் தேவைகளுக்காக ப்ளாஸ்டிக் பக்கம் சாய்ந்துவிட, சருகு இலைகளில் சாப்பிடும் மரபு சருகு போலவே மக்கிவிட்டது.

வாசம்

இயற்கை மணம் குறித்து ஒரு தகவல் ஒரு வலைத்தளத்தில் படித்தேன்.
பதிவர் அவருக்கு பிடித்த இயற்கை மணங்கள் பற்றி வெகு அருமையாக சில கருத்துக்களை பரிமாறி அதை படிக்கையிலேயே மிக மகிழ்ச்சி ....
அப்படியே எனக்கு பிடித்த மணங்கள் என்னென்ன என்று மனசிலேயே அலச ஆரம்பித்தேன் .

அம்மாவின் உடம்பு உடை வாசம் பட்டியலில் மேல் வரிசையில் .
அடுத்து மழலை / குழந்தைகள் . அந்த பிஞ்சுகளின் கதம்ப பலவேறு வகை வாசனைகள் பட்டியல் இடுவது மகா சிரமம் . வெகு நீளம் . எனக்கு ஒண்ணேகால் வயதில் பேத்தி ஒரு வயது ஆகப்போகும் பேரன் உண்டுங்க ....இருவருமே மகள்கள் வழி .
மழை பெய்து அதுவும் கோடையில் எழும்பும் மண் வாசனை .
நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வித உடல் வாசனை .இது நாம் பயன்படுத்தும் சோப் , பவுடர் , தலைக்கு பூசும் எண்ணெய் , வாசனை திரவியங்கள் , உண்ணும் உணவு வகைகள் சார்ந்தவை .....
அதுபோலவே பிறர் உடம்பின் மணம்....பெண்கள் என்றால் அவர்கள் சூடும் பூக்கள் ....
காடு கழனி வயல் நீர்நிலைகள் இவைகளில் உண்டாகும் ஈடு இணையில்லா சுகந்தங்கள் .....
உணவுப்பண்டங்கள் அவை காய்கனி மாமிசம் எதுவாக இருந்தாலும் ....
குறிப்பாக பழங்கள் மா பலா போன்றவைகளின் வாசனை ....அம்மம்மா......
பனங்கிழங்கு, பதநீர் , பனையோலை .....
வறுத்த கொள்ளு , புளியங்கொட்டை மணம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ....
மண் பாண்டங்கள் சுட்டு அவை வேகும் மணம் வெகு அருமையாக இருக்கும் .....

Monday, 3 February 2020

மைலாப்பூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம்

Image may contain: 1 person, outdoorAlankara Benedict· 
 

#சென்னையில் எனக்கு மிகப்பிடித்த பல இடங்களில் இதுவும் ஓர் இடம்

மைலாப்பூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம்

எனக்கு ஏராளம் மதிப்பு நிறைந்த நல்ல நண்பர்கள் 1993-2001 கால கட்டத்தில் கிடைக்க ஒரே காரணி .....
நண்பர்கள் ஸ்ரீராம் , பாலகிருஷ்ணன், கார்த்திக் , விஜயன் , பாலசுப்ரமணியன் - இவர்கள் எல்லோருமே அறிவு ஜீவிகள் ....
இன்றைய என்னுடைய ஆன்மீக அறிவு வளம்பெற உரமிட்டு என்னை வளர்த்த புண்ணிய பூமிகளில் இதுவே முதன்மை & தலைமை .....
இன்று காலை ஏனோ என் நினைவில் அலைமோதி இதோ பதிவாக

மந்தஹாசம்

#மஞ்சள்_புரட்சி

மத்தியில் போகும் மழலை
மயங்கியது வாத்து நடையில்
மயக்கியது நம் மனதை
மனிதன் மனம் மயங்கும்
மகத்துவம் மிக்க
மிகச்சிறந்த இயல்பு
மிச்சம் இருப்பு
மனதினை முகிழ்த்து
ரசனை உயர்த்தும்
இம்மாதிரி சின்ன சின்ன
மதி வழி மனம் அடையும்
மந்தஹாச அனுபவங்களே !!!!!

மழைத்துளிகள் சிறைப்பிடித்து

ஓட்டின் வழியே
மழைத்துளிகளும்
வீட்டின் உள்ளே
உன் அன்பின்மழையும்
பெய்யெனப் பெய்து
கொண்டிருந்தன...
வாரயிருதியின் மழைகள்
ரம்மியமானவை,
ரசிக்க முடிந்தவை...
கட்டஞ்சாயா
கையில் கிடைத்தால் போதும்
கொட்டமடிக்க ஆரம்பிப்பாய்!!
கடலைக்கறி எப்படி செய்யணும்
கொஞ்சம் சொல்லிக்கொடேன்
கட்டிக் கொண்டே கேட்கையில்
விடலைப் பருவமென நினைப்புனக்கு!
பழம் பஜ்ஜி இப்ப போட்டு தர்றியா
குழைந்து கேட்டு எனக்குள்
நுழைந்து கொள்வாய்...
தேவையில்லை எனினும்
தலை நீட்டி நனைத்து
வருவாய்...
திட்டிக் கொண்டே நான்
துவட்டுகையில்
திட்டம் போட்டு அப்படியொரு
நடிப்பு...
கைகள் குவித்து
மழைத்துளிகள் சிறைப்பிடித்து
கன்னம் நோக்கி
வீசி சிரிப்பாய்...
இப்போது
என்
செல்லக் கோபமெல்லாம்
மழைத் துளிகள் மீது தான்...
நீ
இருக்க வேண்டிய இடத்தில்
அதுகளுக்கு என்ன வேலை??

Monday, 20 January 2020

சக்கடா வண்டி

‘அக்கடா என்றாலும் விடமாட்டேன்,
துக்கடா என்றாலும் விடமாட்டேன்,
தடா! உனக்குத் தடா!’
என்றொரு உயர்தனிச் செம்மொழித் தமிழ்ப்பாடல் கேட்டது நினைவிருக்கலாம். எனது மேற்கோளில் பிழையும் இருக்கலாம். தமிழில் பெயர் வைத்த சினிமாவுக்கு வரி விலக்குத் தந்து மொழி வளர்க்கும் உத்தமத் தலைவர்கள் வாழும் தேயம் இது. நேயமற்று நாம் பேசலும் ஆகா!
அன்றே மனதில் தோன்றிய சில கேள்விகளே இன்று கட்டுரை வடிவம் பெறுகிறது. அக்கடா, துக்கடா, பக்கடா, கச்சடா, சக்கடா என்று டாவில் முடியும் சொற்கள் பற்றிய சிந்தனை. மொழிக்குள் இது போன்ற பல சொற்கள் வந்து புகுந்து, நெடுங்காலம் புழங்கப் பெற்று, இன்று தமிழே போல ஆகி விட்டன. ‘ஸ்வச் பாரத்’ இன்று தமிழாகி விடவில்லையா? எந்த மொழி உயராய்வு மையத்தின் ஏற்றமிகு பேராசிரியப் பேரறிவும் எதுவும் செய்து விட இயலாது. என்றாலும் மேற்சொன்ன சில சொற்களுக்குள் புகுந்து பார்ப்பது சுவையான அனுபவமாக இருக்கும்.
‘அக்கட’ எனும் சொல் கன்னட மூலம் என்றும், ஆச்சரியக் குறிப்புக்கான சொல் என்றும் பதிவிட்டுள்ளது சென்னை பல்கலைக் கழகத்துப் பேரகராதி. அக்கட என்பது தமிழ்ச் சொல்லே என்றும், அவ்விடம் என்று பொருள் என்று மற்றொரு குறிப்பும் தருகிறது. அங்கிட்டு, அவிட என்பதைப் போல. ‘அக்கடாவென’ இருத்தல் என்பதற்கு, சும்மா இருத்தல் – Non interference- என்றும் பொருள். தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் இன்று புழக்கத்தில் இருக்கும் சொல் ‘அக்கடா’ என்பது. “எல்லா சோலியும் முடிச்சு, சாப்பாட்டுக் கடையும் ஒதுக்கி, பத்துப் பாத்திரம் ஒழிச்சுப் போட்டு, அக்கடான்னு வந்து சாஞ்சேன். அப்பம் பாத்து விருந்து வந்து நிக்கி” என்றார்கள் தாயார் ஒரு காலில். “சவத்தை எல்லாத்தையும் விட்டு எறிஞ்சுக்கிட்டு அக்கடான்னு இரி” என்று மூத்தார் அறிவுறுத்தினார்கள் தோழருக்கு. எங்கேனும் தமிழிலக்கியப் பரப்பில் அக்கடா என்றொரு சொல் கையாளப்பட்டிருக்குமோ என்று ஐயம் எழுந்தது. ஏன், முதலில் மேற்கோள் காட்டிய பாடல் தமிழ் இலக்கியம் இல்லையா என்று கேட்டால், உமக்கும் எமக்கும் பேச்சு முறிந்து போகும்.
முதலில் கம்பனில் தேடிப் பார்ப்போம் என்று தோன்றியது.
கம்பராமாயணத்தில் ஆறாவது காண்டம் யுத்த காண்டம். அதன் 39 படலங்களில் இரண்டாவது இராவண மந்திரப் படலம். அனுமனால் எரியுண்ட இலங்கையை மயன் புதுப்பித்துக் கொடுக்க, ஆலோசனை மண்டபத்தில் அரசிருந்த இராவணன், படைத்தலைவன், அமைச்சர்கள், கும்பகருணன், இந்திரசித்தன், வீடணன் முதலானோருடன், ஆலோசனை நடத்தும் சந்தர்ப்பம். வச்சிர தந்தன் எனும் படைத்தலைவன் கூற்றை விலக்கி துன்முகன் எனும் படைத்தலைவன் மொழிவது போல் ஒரு பாடல்.
“திக்கயம் வலி இல, தேவர் மெல்லியர்,
முக்கணன் கயிலையும் முரண் இன்றாயது;
மக்களும் குரங்குமே வலியர் ஆம் எனின்,
அக்கட, இராவணற்கு அமைந்த ஆற்றலே!”
வச்சிர தந்தனை இளக்காரம் செய்வது போல் துன்முகன் கூற்று. ‘என்னடா? இராவணன் வெற்றி கொண்டவை எல்லாம் அற்பமானவையா? அவன் போரிட்டு வென்ற திக்கயங்கள் வலிமையற்றவையா? அவற்றின் தந்தங்களை மார்பில் தாங்கி ஒடித்து, நிரந்தரமாக அவற்றைப் பூண் போல அழகுபடத் தரித்திருக்கிறானே! அவனிடம் போரிட அஞ்சி ஓடி ஒளிந்த தேவர்கள் மெலிந்தவரா? முக்கணானின் கயிலை மலையை எடுத்தானே அதுவும் எளிதான காரியமா? நீ பேசும் இராம இலக்குவர் எனும் மானுடரும், அனுமன் எனும் குரங்கும் மட்டும் மிகுந்த வலிமை பெற்றவர் என்கிறாய்! அக்கட, இராவணனின் ஆற்றல் ஒரு பொருட்டில்லையா?’ இது பாடலின் பொருள். இங்கு ‘அக்கட’ எனும் சொல் வியப்புக் குறிப்பு. அது திசைச் சொல் என்றும், குறிப்பாகத் தெலுங்குச் சொல் என்றும், பொருள் ஆச்சரியக் குறிப்பு என்றும் உரை எழுதுகிறார்கள். கன்னடமும், களிதெலுங்கும் உருப்பெற்ற நூற்றாண்டு எவை என அறிஞர் பெருமக்களிடம் கேளுங்கள். ஆனால் கம்பன், பத்தாம் நூற்றாண்டில் இருந்து இந்தச் சொல்லைத் தமிழில் காப்பாற்றித் தந்திருக்கிறான். ‘ஆட்சியர்’ என்ற சொல்லைக் காத்துத் தந்ததைப் போல. தமிழின துரோகத் தெய்வங்கள் கம்பனை எரிக்கப் புகுந்தது அசந்தர்ப்பமாக இப்போது நமக்கு ஞாபகம் வருகிறது. கம்பனின் காமச் சாறு பிழிந்து ரசம் எடுத்தவர் கண்களில் இது போன்ற ஆயிரம் சொற்கள் பட்டிருக்காதோ?
“ஓ கச்சடா ஆத்மி ஹை!” என்பார்கள் மும்பையில், அவன் கீழ்த்தரமான மனிதன் என்ற பொருளில். நாம் எழுதும் இந்தச் சொற்றொடருக்கும், சென்ற பாராவின் இறுதிச் சொற்றொடருக்கும் தொடர்பில்லை. கச்சடா என்ற சொல்லும் தமிழில் இன்று தாராளமாக வழங்கப் பெறுகிறது. ‘கச்சரா’ எனும் சொல்லைத்தான் வட நாட்டில் ’கச்சடா’ என்று உச்சரிக்கிறார்கள். வடவருக்கு ‘ரா’ எனும் எழுத்தின் ஒலி, ‘டா’ என ஆகிப் போகும். எடுத்துக் காட்டுக்கு, சாரி – சாடி, பூரி- பூடி, பருவா – படுவா என்பன.
கச்சரா எனும் வட சொல், இந்தி உச்சரிப்பில் கச்சடா ஆயிற்று என்பார் அருளி. கச்சரா எனில் இழிவு என்று பொருள். நாம் குப்பையைக் குறிக்க, கச்சடா என்கிறோம். அதே சமயம் கச்சா என்பது உருதுச் சொல். கச்சா எண்ணெய், கச்சாப் பொருள் என்கிறோம் அல்லவா? கச்சா எனில் விளையாதது, சரியாக வேகாதது என்றும் பொருள் படும். பான் ஷாப்களில் மீட்டா பான், கல்கத்தா பான் என்று கேட்டு நிற்பவர் என்ன வகைப் பாக்கு சேர்க்க வேண்டும் என்பதைச் சொல்ல கச்சா அல்லது பக்கா என்பார்கள். கச்சா பாக்கு எனில் பழுக்காத காய்ப் பாக்கு. பக்கா பாக்கு எனில் முற்றிலும் நெற்றுப்பட்ட பாக்கு. ஆனால் இரண்டுமே உலர்ந்த பாக்குகளே! மலையாளத்தில் பச்சைப் பாக்கு, பழுக்காப் பாக்கு என்பார்கள். மாங்காயைக் குறிக்க கச்சா ஆம் என்றும், மாம்பழத்தைப் பக்கா ஆம் என்றும் சொல்வார்கள் மராத்தியில்.
கச்சா எனும் சொல்லின் பொருள் மூலப்பொருள் மற்றும் முதிராத பொருள் என்பார் அருளி. மேலும் சொல்கிறார், கசண்டுப் பொருள் என்றும், தூய்மை இல்லாத பொருள் என்றும். அதிலிருந்த கச்சரா- கச்சடா என்று பயன்படுத்தப்பட்டது போலும். போக்கிரித்தனம் என்று பொருள் சொல்கிறது லெக்சிகன், கச்சடா எனும் சொல்லுக்கு. கச்சடா என்று தமிழில் புழங்கும் சொல், கச்சரா எனும் இந்திச் சொல்லின் பிறப்பு என்றும் Baseness, meanness, uselessness என்றும் குறிக்கிறது லெக்சிகன். பொதுவாகக் கச்சடா என்றால் குப்பை என்று கொள்ளலாம்.
கிச்சடி என்றொரு சொல் கேள்விப்பட்டிருப்பீர்கள். நாஞ்சில் நாட்டில், கல்யாணப் பந்தியில், தாட்டு இலை விரித்து, 21 வகைக் கூட்டுவான்கள் பரிமாறுவார்கள் பண்டு. அவற்றுள் பச்சடி, கிச்சடிகளும் அடங்கும். கிச்சடி எனில் வெள்ளரிக்காய் தயிர் கிச்சடி, இஞ்சி தயிர்க் கிச்சடி, தயிர் சேர்த்துச் செய்தால் எமக்கு அது கிச்சடி.
பாம்பே ரவை அல்லது பட்டன் ரவை அல்லது வெள்ளை ரவையைச் சற்று இளகிய வடிவத்தில், காரட்-பீன்ஸ்-தக்காளி- பச்சை மிளகாய் எனக் கலந்து செய்யும் உப்புமா வகையையும் கிச்சடி என்கிறார்கள். தொழில் நிமித்தம் முன்பு நான் நவ்சாரி போவேன். நவ்சாரி எனும் சிறு நகரம், பம்பாய்- ஆமதாபாத் வழித்தடத்தில், பம்பாயில் இருந்து 225 கி.மீ. தூரத்தில், சூரத்துக்கு 24 கி.மீ முன்பாக இருப்பது. சூரத்தில் இருந்தோ, நவ்சாரியில் இருந்தோ 25 கி.மீ. தொலைவில், முக்கோணத்தின் மூன்றாவது புள்ளியாக, அரபிக் கடல் ஓரத்தில் இருப்பது டண்டி. காந்தியடிகள் உப்பு அறப்போர் செய்த கடற்கரை. அதை நாம் தண்டி என உச்சரிக்கிறோம். நவ்சாரி போகும் போதெல்லாம், நவ்சாரி-சூரத் சாலையில் இருக்கும் கத்தியவாட் உணவகம் ஒன்றுக்கு மறக்காமல் போவேன். நாம் கத்தியவார் என்பதையே அவர்கள் கத்தியவாட் என்பார்கள். அந்த உணவகத்தில் காரசாரமாக, கொதிக்கக் கொதிக்க, நிறைய நெய் ஊற்றி, இளக்கமாகப் பொங்கல் போல ஒன்று தருவார்கள். ஆனால் அது பொங்கல் அல்ல, கிச்சடி. கச்சாப் பொருள் பாம்பே ரவை அல்ல, பச்சரிசியும் பாசிப் பருப்பும்.
கிச்சடி எனும் சொல் மராத்தியிலும் உண்டு, தெலுங்கிலும் இருக்கிறது. சில கூழ் வகைகளையும் கிச்சடி என்பார்கள். ஆக, கிச்சடி என்பதோர் தொடுகறி, கூழ் வகை. சித்திரான்ன வகை. சொன்ன வேலையைச் சீராகச் செய்யாமல், கோளாறில்லாமல் தாறுமாறாகச் செய்து வைத்தால், ‘கியா கிச்சடி பனாக்கே ரக்கா ஹை? “ என்று கார்வார் செய்வார் மேலதிகாரி. நாம் சொல்கிறோம் அல்லவா, “என்ன கந்தர் கோலம் செஞ்சு வச்சிருக்கே?” என்று. அதைப் போல.
மாலைச் சிற்றுண்டியாகப் பலர் விரும்பித் தின்னும் பலகாரம் பக்கோடா அல்லது பக்கடா. மலையாளிகள் பக்கவடை என்பார். க.நா.சுவின் மாப்பிள்ளை, புது தில்லியில் தமிழ் நாடகங்கள் அரங்கேற்றி வளர்த்தவர், அண்ணா பாரதி மணிக்கு தூள் பக்கோடா என்றால் மிகப் பிரியம். பற்கள் இன்னும் இற்றுப் போகாத எண்பது பிராயத்திலும். எனக்கு அங்கலாய்ப்பாக இருக்கும், அவரை விட ஏழெட்டு வயது சின்னவன், ஆனாலும் பல் பலமில்லையே என்பதால். அதற்காக அவருக்குப் பார்ப்பனத் திமிர் என்று வைய முடியுமா?
தூள் பக்கோடா போல, வெங்காயப் பக்கோடா, முந்திரிப் பக்கோடா, ராஜபாளையம் பக்கோடா, சீவல் பக்கோடா, ராகிப் பக்கோடா எனப் பல வகைகள். வளம் இருந்தால் கற்பனையும் வாய்க்கும். அயற்சொல் அகராதி, பக்ஷ்ணம் எனும் சொல்லே பட்சணம் என்று ஆகியது, பக்ஷ்ணம் வடசொல் என்றும் பட்டியலிடுகிறது. சிற்றுண்டியைப் பட்சணம் என்றோம். மலையாளிகள் “பட்சணம் கழிச்சோ?” என்றார்கள். பட்சணம் என்பது பக்ஷ்ணம் எனும் சொல்லின் பிறப்பு என்றாலும், தொல்காப்பிய இலக்கண விதிகளின் படி, அது பக்கணம் ஆகும். பக்கணம் திரிந்து பக்கோடா ஆயிற்று என்று ஒரு கருது கோளும் உண்டு.
பக்கரா எனும் வட சொல்லே பக்கடா ஆயிற்று என்று கொள்வாரும் உளர். நாம் கூறும் பக்கராவுக்கு p உச்சரிப்பு. B உச்சரிப்பும் நமக்கு பக்கரா தான். ஆனால் B தொனிக்கும் பக்கரா என்றால் ஆடு என்று பொருள். எனினும் பக்கணம் எனும் சொல்லுக்கு சிற்றுண்டி வகைகள், eatables என்று பொருள் தருகிறது பேரகராதி. பக்கணம் என்றால் அயல் நாட்டுப் பண்டங்கள் விற்கும் இடம் என்கிறது யாழ் அகராதி. பக்கணம் என்றால் வேடர் வீதி என்று திவாகர நிகண்டும், ஊர் என்று சூடாமணி நிகண்டும் பொருள் தருகின்ரன. பக்கணம் சிற்றுண்டி வகை என்று கொள்ளப்பட்டதனால், பக்கடா என்பது பக்கணத்தின் பிறப்பாகக் கொள்வதிலும் பிழை இல்லை. பக்கடாவைப் பகோடா என்றாலும்தான் என்ன மூழ்கிப் போய் விடும்!
பக்கடா, பக்கோடா என்பதற்கும் பகோடா என்ற யப்பானிய இறைத் தலங்களுக்கும் தொடர்பில்லை என்பதறிக! பக்கடாவைத் தொடர்ந்து போனால் பக்கிரி எனும் சொல்லில் சென்று தங்கலாம் பக்கிரி என்பது அரபுச் சொல். துறவி, இரவலன், ஏழை என்று பொருள்படும்.
6
பக்கிரி என்பதை அரபி fakir என்று உச்சரிக்கும். முகமதியப் பரதேசியையும், ஃபக்கீர் என்பார்கள். Mohammadan Religious Mendicant என்கிறது லெக்ஸிகன். பரதேசி என்றால் பெரும்பாலும் பஞ்சப் பரதேசி, பரதேசி நாய், பிச்சைக்காரன் என்றெல்லாம் பொருள் கொள்கிறோம். உண்மையில் பரதேசி, ஃபர்தேசி என்றால் வேற்று நாட்டவர் என்பது சரியான பொருள். இந்திச் சொல் ஃபர்தேசி. ஏக் ஃபர்தேசி மேரா தில்லு லே கயா! என்றொரு பழம் இந்திப் பாடல் கேட்டிருக்கலாம். ஒரு வேற்று நாட்டவன் என் இதயம் கவர்ந்து சென்றான் என்று பொருள். அயலூரான் எனும் சொல் இன்று பிச்சைக்காரன் என்று பொருள் பெற்று விட்டது. பாலாவின் ‘பரதேசி’ திரைப்படத்துக்கு நானே உரையாடல் எழுதினேன். நான் பெற்ற வாழ்த்தை விடவும் வசை அதிகம்.
பக்கி என்றும் ஒரு சொல் உண்டு. பக்கி என்றால் எளிய என்று பொருள். குளிக்காமல், தலை சீவாமல், முகம் கூடத் துடைக்காமல் இருக்கும் பெண் பிள்ளையைப் பார்த்து, “ஏ மூட்டி? பக்கி போல வந்து நிக்கே?” என்பார்கள் எங்கள் பக்கட்டு. பக்கிரி வெறு, போக்கிரி வேறு. போக்கில்லாதவன், போக்கிலி எனும் சொல்லின் திரிபு போக்கிரி. One who has no refuge. மேல் நாட்டவர் homeless என்பார்கள். போக்கிலி எனும் சொல் கன்னடப் பிறப்பு என்பார் அருளி. கதியற்றவன் என்று பொருள் தருகிறது யாழ் அகராதி. சங்க அகராதியோ, blackguard, scoundrel, villain, துஷ்டன் என்று பொருள் தருகிறது. பேசாமல் அரசியல்வாதி எனும் ஒற்றைச் சொல்லால் குறித்து விடலாம்.
துண்டு துக்காணி என்று கேட்டிருக்கிறோம். துக்காணி என்றால் அது உருதுச் சொல். சிறு செப்புக்காசைக் குறித்த சொல். சிறு துண்டு நிலத்தைத் துக்காணி என்பர் எங்களூரில். சிறு துண்டைக் குறிக்க ‘துக்கிணியூண்டு’ என்றும் புழங்குகிறார்கள்.
இந்தி மொழி, துண்டு, சிறு துண்டு இவற்றைக் குறிப்பிட துக்கடா என்கிறது. துக்குடா என்றாலும் அது துக்கடா தான். நாம் ஏற்கனவே சொல்லி வந்தவாறு, துக்கராதான் துக்கடா என ஒலிக்கப் பெறுகிறது. Piece, bit, சிறு துண்டு குறித்த சொல் துக்கடா. துக்கிடி என்றும் சொல்வார்கள் இந்தியர். உணவின் போது, சின்னஞ்சிறு side dish, துக்கடா எனப்பட்டது. அற்பமான என்ற பொருளில்.
7
மிகுந்த மனவேதனைக்கு ஆட்படுத்தும் விடயம் ஒன்று உண்டு. கர்நாடக இசைக் கச்சேரிகளின்போது. இறுதிப் பகுதியில், மங்களம் பாடுவதற்கு முன் பாடப்படும் தமிழ் ஐட்டங்களைத் துக்கடா என்றார்கள் மகாபாவிகள். அது தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தம், திருப்புகழ், திருவருட்பா, பாரதி பாடல் எதுவானாலும் அது துக்கடா. பத்து ஆண்டுகட்கு முன்பு, இன்றைய சங்கீத கலாநிதி திருமதி. அருணா சாயிராம் அவர்களை, ‘ரசனை’ மாத இதழுக்கு நான் நேர்கண்ட போது இந்த ஆட்சேபணையைச் சொன்னேன். அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை விஜயா பதிப்பகம் வெளியிட்ட எனது நேர்காணல்களின் தொகுப்பின் இறுதியில், நான் கண்ட மேற்சொன்ன நேர்காணலும் உண்டு. அதென்ன, தமிழ்ப்பாட்டு என்றால் துக்கடாவா என்பது நமது விசனம், கோபம், எரிச்சல், மறுப்பு, முறையீடு…
வெகு நாட்களாக எனக்கொரு சந்தேகம். தாடி எம்மொழிச் சொல் என? செல்வாக்கான தாடிகள் பல உண்டு நம்மிடம். வெண் தாடி, தாகூர் தாடி, பகுத்தறிவுத் தாடி, முற்போக்குத் தாடி, தலித் தாடி, புல்கானின் தாடி, மார்க்ஸ் தாடி, குறுந்தாடி, புரட்சித் தாடி, சாமியார் தாடி, சித்தர் தாடி, செல்வந்தர் தாடி, வங்கி மோசடித்தாடி, பேன் பற்றிய தாடி என. எனினும் தாடி தமிழ்ச்சொல்லா? தமிழில் முகமே கிடையாது. பிறகல்லவா தாடி என வடமொழி அறிஞர்கள் கேட்பார்கள்.
வட நாட்டில், முகச் சவரம் செய்யாமல் நாலைந்து நாட்கள் திரிந்தால், “தாடி பனாயா நை?” என்று கேட்பார்கள். அதாவது அவர்களுக்கு தாடி என்றால் முகத்து மயிர் எனப்படும். ‘தாடிவாலா’ என்பர் சிலரை அடையாளப்படுத்த. அரபு நாட்டவர் பலரும் தாடி வைத்திருப்பதால், தாடி உருதுச் சொல்லாக இருக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் தாடி எனும் சொல்லை, மோவாய் எனும் பொருளில் சிலப்பதிகாரம் கையாள்கிறது. வஞ்சிக் காண்டம், நீர்ப்படைக் காதையின் பாடல் வரி, ‘சுருளிரு தாடி’ என்கிறது. அதாவது Chin எனும் பொருளில். கலித்தொகை, தாடி எனும் சொல்லை, மோவாய் மயிர், Beard எனும் பொருளில் ஆள்கிறது. பாலை பாடிய பெருங்கடுங்கோ, கலித்தொகையில் ‘மருப்பின் திரிந்து மறிந்து வீழ் தாடி’ என்கிறார். முகத்தின் இரு பக்கமும் திரிந்தும், மறிந்தும் விழும் தாடி என்று பொருள். சேவலின் கழுத்தில் தொங்கும் பகுதியைத் தாடி என்றனர். பசு முதலிய மாக்களின் கழுத்தில் தொங்கும் தோல் பகுதியை அலை தாடி என்றனர். Dewlap என்பர் ஆங்கிலத்தில். சீவக சிந்தாமணியின் மண்மகள் இலம்பகத்துப் பாடல், பாடல் எண் 2279, வாளின் கைப்பிடியைக் குறிக்க, தாடி எனும் சொல்லை ஆள்கிறது.
8
எங்களூரில் இரண்டு காளைகள் சேர்ந்து இழுக்கும் பார வண்டியைச் சக்கடா வண்டி என்போம். கூண்டு வண்டியும், வில் வண்டியும் இரண்டு காளைகள் இழுப்பதுதான். ஆனால் சக்கடா வண்டி என்பது வேறு. நாம் வண்டி என்பதை வட நாட்டில் காடி என்பார்கள். மோட்டார் காடி, ரயில் காடி, பைஸ் காடி என்பது வழக்கு. ‘சல்த்தி கா நாம் காடி’ என்றொரு சொலவம் உண்டு. ஓடுவதன் பெயர் வண்டி என்பது பொருள். உடனே எலி ஓடுகிறது, அதன் பெயர் வண்டியா என்று நீங்கள் முற்போக்கு, தலித்திய, பெண்ணிய, பெரியாரிய, மார்க்சிய விமர்சனம் வைக்கக் கூடாது.
நான் எழுத வந்த காலத்திலிருந்தே, சக்கடா எனும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளேன். வட்டார வழக்கு எழுத்தாளன் என்று நமக்கு அவப்பெயர் ஏற்படக் காரணமாக இருந்தது இது போன்ற தற்குத்தறம் காரணமாகத்தான். நெல்பாரம் ஏற்றிப் போக, உரமடிக்க, விறகு கொண்டு வர, புழுங்கல் நெல் குத்த, ரைஸ் மில்லுக்குப்போக, வயலுக்குச் செம்மண் அடிக்க, வீடு கட்ட கருங்கல், செங்கல், மணல் அடிக்க என யாவற்றுக்கும் சக்கடா வண்டிதான். அடுத்துள்ள கோவில்களுக்குப் பொங்கல் விட குடும்பத்துடன் போவதற்கும் சக்கடா வண்டிதான். முப்பந்தல் இசக்கியம்மன் கோயில், சந்தைவிளை ஔவையாரம்மன் கோயில், மண்டைக்காட்டுப் பகவதி அம்மன் கோயில் என சக்கடா வண்டிதான். பூதப்பாண்டி தேரோட்டத்துக்கும், சுசீந்திரம் தேரோட்டத்துக்கும் அஃதே. பள்ளிப் பருவத்தில், அரை நிக்கர் போட்ட காலத்தில் உச்சி மீது வெயிலடிக்காதா என்பீர்கள்! முப்பது வெளிநாட்டுச் சொகுசு ஆடம்பர மகிழ்வுந்துகள் வைத்துக் கொள்ள நாமென்ன தமிழினத் தலைவர் பெயரனா?
9
தமிழ்த் துறைப் பேராசிரியருக்கும், முற்போக்குத் திறனாய்வாளருக்கும் அஞ்சி, சக்கடா வண்டியைப் பாரவண்டி என்று எழுத நம்மால் ஆகாது. ஆனால் அவர்களுக்கெல்லாம் சொல் சார்ந்து வராத கேள்வி, எழுத ஆரம்பித்து 45 ஆண்டுகள் கடந்த பின்பு நமக்கு வருகிறது. அதென்ன சக்கடா வண்டி என்று! உள்ளதை உள்ளபடி பயன்படுத்திப் போவதல்லால் எதற்கிந்தப் பாழ்வேலை என்று தோன்றலாம். என்றாலும் நாம் சீனிக் கிழங்கு தின்ற பன்றி, செவியறுத்தாலும் நிற்காது.
தமிழில் புழங்கும் எச்சொல் எம்மொழிச் சொல் என்றறிய எனக்கேதும் அரிப்பு ஏற்பட்டால், ‘அயற்சொல் அகராதி’ எப்போதும் கையேடு. அருளி ஐயா பதிவு செய்கிறார், சக்கரம் எனும் சொல்லின் மூலம் சக்ரா எனும் வடசொல். சக்கரா எனும் சொல்லே சக்கடா என வழங்குகிறது என்று. கச்சரா- கச்சடா ஆனது போல், துக்கரா- துக்கடா ஆனது போல், சக்கரா- சக்கடா ஆகியிருக்கலாம் என்பதவர் அனுமானம். Logic சரியாக இருக்கிறது. ஆனால் இந்தி பேசும் பிரதேசங்களில் சக்கரா என்ற சொல்லைச் சக்கடா என்று பயன்படுத்துவதாக என் அலுவலக அறிவில் பதிவில்லை. சுழல்வதைச் சக்கர் என்பார்கள். ‘கியா சக்கர் ஹை’ என்பார்கள் எத்தனை சுழல் என்று சுட்ட.
புத்திக்குள் ஏதோவொரு புகார் எழுந்தது. சக்கடா வண்டி என்றால் கட்டை வண்டி. Springless bullock cart என்று பொருள் தருகிறது பேரகராதி. சக்கடா வண்டி எனும் சொல்லைத் தமிழ்ச்சொல் என்கிறது சென்னைப் பல்கலைக் கழகத்துப் பேரகராதி. பதிப்பானது 1922 இல். அயற்சொல் அகராதி முதற்பதிப்பு 2007 இல். அருளி ஐயா இதனை அறியாது இருக்க இயலாது.
நாலடியார் எனும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் முதல் நூல், தனது இரண்டாவது பாடலில் சகடக்கால் எனும் சொல் பயன்படுத்துகிறது.
‘அகடுற யார் மட்டும் நில்லாது செல்வம்
சகடக் கால் போல வரும்’
என்பன ஈற்றடிகள். யார் பக்கமும் சாய்ந்து நிரந்தரமாகத் தங்காமல், செல்வமானது வண்டிச் சக்கரம்
10
போலக் கீழது மேலாய், மேலது கீழாய் வரும் சுழன்று என்பது பொருள். சகடக் கால் என்பதற்கு தேர்க்கால் என்றும் வண்டிச் சக்கரம் என்றும் உரை எழுதுகிறார்கள். ஒன்றேகால் லட்சம் கோடி, இரண்டே முக்கால் லட்சம் கோடி, ஏழரை லட்சம் கோடி என அரசியல் குடும்பங்கள் தேற்றி வைத்திருக்கிற புன்செல்வம் நாளை வேறோர் இடம் போய்ச் சேரும் என்பதும் நல்ல நம்பிக்கை அல்லவா? ஆக தருமர் உரையோ, பதுமனார் உரையோ, நாலடியார் கூறும் சகடக்கால் என்றால், சகடம்- வண்டி, கால்-சக்கரம்
சகடப் பொறி என்றொரு சொல்லும் பேரகராதியில் உண்டு. சக்கர வடிவிலான இயந்திரம் என்று பொருள் தந்திருக்கிறார்கள். நமது தீப்பேற்றைக் கண்ணுறுங்கள், பொறி என்னும் சொல்லுக்கு இயந்திரம் என்று பொருள் எழுத வேண்டியிருக்கிறது.
சகடம் எனும் சொல்லுக்குப் பல பொருள்கள் தரப்படுகின்றன. வண்டி, தேர், தே வடிவத்திலான போர் அணிவகுப்பு, ரோகிணி எனும் விண்மீன், சக்கரம், ஊர்க்குருவி, வட்டில், தமரத்தை எனும் தாவரம், துந்துபி என. ‘நூறு நூறு சகடத்து அடிசிலும்’ என்பான் கம்பன் நூற்றுக்கணக்கான வண்டி உணவு என்ற பொருளில். சகடயோகம் என்றொரு யோகம் பற்றி சோதிடர்கள் பேசுகிறார்கள். குருவும் ஆறு, எட்டு அல்லது பன்னிரண்டாம் இடத்தில் சந்திரனும் இருந்தால் உண்டாகும் பயன் என்கிறார்கள்.
சகடி என்றாலும் வண்டி என்கிறது பிங்கல நிகண்டு. சகடிகை எனில் கை வண்டி என்கிறது யாழ் அகராதி. சகடு என்றாலும் வண்டி என்கிறார்கள். சகடை என்றாலும் வண்டிதான். சாகாடு என்றாலும் வண்டியேதான். இதென்ன ஐயா, சகடம், சகடி, சகடிகை, சகடு, சகடை, சாகாடு எல்லாம் வண்டி என்றால் என்ன அர்த்தம் என்று கேட்கலாம். நாமென்ன செய்ய இயலும்?
வலியறிதல் அதிகாரத்துக் குறள் கூறுகிறது-
‘பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்’
என்று. இந்தத் திருக்குறளில் வரும் சாகாடு என்ற சொல்லுக்கு, பரிமேலழகர்- சகடம், மணக்குடவர் – சகடம், பரிப்பெருமாள் – சகடம், பரிதியார்- வண்டி, காலிங்கர்- சகடம் என்று உரை எழுதினார்கள்.
11
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த கோ.வன்மீக நாதன் – cart என்கிறார். சரி, திருக்குறள் மட்டும்தான் சாகாடு என்ற சொல் பயன்படுத்தியதா?
புற நானூற்றில், பெயரறியாப் புலவன் எழுதிய அற்புதமான பாடல் ஒன்று, ‘கலம் செய் கோவே! கலம் செய் கோவே!’ என்று தொடங்கும் அப்பாடலில்,
‘அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போல’
என்றொரு சிறப்பான உவமை ஒன்றுண்டு. முதுபாலையில், கணவனை இழந்த பெண்ணொருத்தி கூறுகிறாள், முதுமக்கள் தாழி வனையும் குயவனைப் பார்த்து, வனையும் தாழியைச் சற்றுப் பெரியதாகவும், வாயகன்றதாகவும் செய்யும்படி. கணவனுடன் அவளுக்கும் சேர்த்து வனையும்படி. ஏனெனில் வண்டிச் சக்கரத்தின் ஆரக்காலில் ஒட்டிக் கொண்டு சுழலும் பல்லி போல கணவனுடன் ஒட்டிக் கொண்டே இத்தனை காலமும் இருந்து விட்ட பெண் அவள். இந்தப் பாடலைச் சொல்லும் பெண்ணின் சோகம் துலக்கத் தனிக் கட்டுரை எழுதலாம். என்ன உவமை பாருங்கள், கொல்லும் உவமை! ‘அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய சிறு வெண் பல்லி போல!’ என்பது. நாம் சொல்ல வருவது, ஐயம் திரிபு அற, சாகாடு எனில் சகடம் என்று.
அக நானூற்றில், அதியன் விண்ணத்தனார் பாடல், ‘ஆரை வேய்ந்த அறை வாய்ச் சகடத்து’ என்கிறது. மேலே ஓலைப் பாய் வேய்ந்த, சக்கரங்கள் ஒலி எழுப்புகின்ற வண்டி என்று பொருள். ஆரை எனில் வண்டியின் கூண்டாக நிரையப்பட்ட பாய் என்பது. புறநானூற்றின் சாகாடு போல. சகடம் சொல்லும் ஆளப் பெற்றுள்ளது. தகடூர் அதியனை, ஔவை பாடும் பாடல்.
‘எடுதே இளைய, துகம் உணராவே;
சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே’
என்பன பாடல் வரிகள். ‘எருதுகள் இளமையானவை. இதுகாறும் நுகத்தடியில் பூட்டப்பெறாதவை. வண்டியில் பாரமும் பெரிய அளவில் ஏற்றப்பட்டுள்ளது.’ என்பது பொருள். குறுந்தொகையில் பரணர் பாடல், ‘இருங்கரை நின்ற உப்பு ஒய் சகடம்’ என்கிறது. பெரிய நீர்க்கரை ஓரமாக நின்ற உப்புப் பாரம் ஏற்றிய வண்டி என்பது பொருள். நற்றிணையில் அம்மூவனார் பாடல்-
12
“ உமணர்
வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி
கண நிரை கிளர்க்கும் நெடுநெறிச் சகடம்”
என்கிறது. உப்பு விற்கும் உமணர், வெண்கல் உப்பின் விலை கூவிச் செல்லும் வண்டிகளின் ஓசை கேட்டு, வயலில் அமர்ந்திருக்கும் நாரைகள் அஞ்சும் என்று பொருள் தரப்பட்டுள்ளது.
பரிபாடல், ‘ஆய் மாச் சகடம்’ என்கிறது. காளை மாடுகள் பூட்டப் பெற்ற வண்டி என்பது பொருள். பெரும்பாணாற்றுப் படை,
‘மாரிக் குன்றம் மழை சுமந்தன்ன
ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம்’
என்கிறது. ’ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம்’ எனும் அகநானூற்று வரிக்கான பொருள்தான் இங்கும். ‘மாரிக் குன்றம் மழை சுமந்தன்ன’ என்றால் குன்றின் மேல் மழை மேகம் கவிழ்ந்து கிடந்ததைப் போன்று என்பது உவமை.
ஆண்டாள் திருப்பாவையின் 24 ஆவது பாடல்,
‘அன்று இவ்வுலகம் அளந்தாய், அடி போற்றி!
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய், திறல் போற்றி!
பொன்றச் சகடம் உதைத்தாய், புகழ் போற்றி!
கன்று குணிலா எறிந்தாய், கழல் போற்றி!
குன்று குடையாய் எடுத்தாய், குணம் போற்றி!
வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி!’
என்று திருமால் பொன்றச் சகடம் உதைத்ததைப் போற்றுகிறது.
இம்மேற்கோள்கள் மூலம் நாம் பெறுவது என்ன? சிகாகோ மாநகரில் நடக்க இருக்கும் உலகத் தமிழ் மாநாட்டில் கட்டுரை வாசிப்பதற்கு என நாமிதை எழுதப் புகவில்லை. இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை?
சகடம், சாகாடு, சகடு, சகடை, சகடி, சகடிகை என்று எத்தனை சொற்கள் வண்டியைக் குறிக்க? இன்றும் நாஞ்சில் நாட்டில், திருவிழாக்களின் போது, உற்சவர்களை வைத்து இழுத்து வரும் நான்கு அல்லது இரண்டு சக்கரங்கள் கொண்ட, தட்டுத் தேர் போன்ற வாகனத்தை சகடை என்கிறார்கள்.
எனது முறையீடு, சக்கடா எனும் சொல் ஏன் அவற்றுள் ஒன்றாக இருக்கலாகாது? ஏன் வட்டார வழக்கு என்று ஒதுக்குகிறார்கள்? சகடம், சகடை, சகடு, சகடி, சகடிகை, சாகாடு என்பன தமிழ்ச் சொற்கள், ஆனால் சக்கடா தமிழ்ச் சொல் ஆகாதா? சக்ர, சக்ரா, சக்கரா என்பதுதான் தமிழ் ஆகியிருக்க வேண்டுமா? சகடம், சகடை, சகடு, சகடி, சகடிகை, சாகாடு என்பனவற்றில் ஏதோ ஒரு சொல் திரிந்து சக்கடா ஆகியிருக்க வாய்ப்பே இல்லையா? மற்றதுமொன்று. கச்சடா, துக்கடா, அக்கடா போன்ற சொற்கள் அவை எம்மொழிச் சொல்லின் திரிபே ஆனாலும், தமிழ்நாடு முழுக்க வழக்கில் உள்ளவை. சில பிரதேசங்கள் மட்டும் சார்ந்தவை அல்ல. சக்கடாவும் அவ்விதமே ஆம் எனில், அது வெங்ஙனம் ஒரு வட்டாரத்துள் மட்டுமே அடைபட்ட சொல்லாக இருத்தல் சாத்தியம்?
மேலும் சக்ரா, சக்கரா என்றால் சக்கரம்தானே, வண்டி அல்லவே! நான் மொழி அறிஞன் அல்லன். வேர்ச்சொல் ஆய்வாளன் அல்லன். மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் போன்றாருக்குக் கால் தூசு பெறுபவனும் அல்லன். என்றாலும் கற்றுக் கொள்ள விழையும் ஓர் எளிய மாணவன்.
வெகு விரைவில் சக்கடா வண்டியின் பயன்பாடு சென்று தேய்ந்து இற்றுப் போகும். அத்துடன் வழக்கு மொழியில் சக்கடா எனும் சொல்லும். வடமொழி ஆனாலும், தென் மொழி ஆனாலும், ஒரு சொல் செத்துப் போவது என்பது வருத்தம் தருவதல்லவா?

விடுகதை வினா விடைகள்

விடுகதை வினா விடைகள்



1) தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
1) ஓட்டை2) மீன் வலை3) கரண்டி4) கடல்
2) முதலெழுத்து தமிழின் அடுத்த எழுத்து கடை மூன்று சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை மொத்தத்தில் இது வருமுன் எச்சரிக்கைத் தேவை?
1) கஸ்ட்டம்2) ஆறுதல்3) ஆபத்து4) பயம்
3) முதல் இரண்டை இழந்தால் ஒளி இல்லை. கடை இரண்டை ஐந்தறிவு ஜீவனுக்கு கட்டுவது யார்இரண்டும் மூன்றும் திரும்பினால் கடைசியில் நாமும் அதுவே. முதலும் கடையும் சேர்ந்தால் கை இழந்த பெண். மொத்தத்தில் அழகிய பெயராகவும் இருக்கும் நான் யார்?
1) பார்வை2) கனி3) கவிதை4) கண்மணி
4) பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது அது என்ன?
1) கண்கள்2) முட்டை3) மீன்4) கடல்
5) அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதிபாதிநாள் குறைவாள்பாதிநாள் வளர்வாள் அது என்ன?
1) சக்தி2) சூரியன்3) நிலா4) பூமி
6) ஆலமரம் தூங்கஅவனியெல்லாம் தூங்கசீரங்கம் தூங்கதிருப்பாற்கடல் தூங்கஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
1) குரங்கு2) மூச்சு3) கடவுள்4) மனிதன்
7) நடுவழிய ஓய்வுக்காம்கடையிரண்டில் ஏதுமில்லை சொல்மூன்றெழுத்தில் உடுத்தலாம்மொத்தத்தில் பெண்கள் விருப்பம்அது என்ன?
1) புடவை2) பட்டு3) நகை4) ஆபரணம்
8) கடையெழுத்து மாறிடில் தின்னலாம்முதலும் கடையும் சேர்ந்தால் குளிரும்மொத்தத்தில் முருகன் இடம்தெரிந்தவர் சொல்லுங்கள் இங்கே?
1) காசி2) பழனி3) கனி4) திருச்செந்தூர்
9) கடைசி வார்த்தையில் மானம் உண்டுமுதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள் காஞ்சியில் நான் யார்?
1) அணிகலன்2) துணி3) ஆடை4) பட்டுத்துணி
10) அள்ள முடியும்ஆனால் கிள்ள முடியாது அது என்ன?
1) நீர்2) நெல்3) சோறு4) அரிசி


1) வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான் அவன் யார்?
1) கத்தரிக்கோல்2) நண்பர்3) பகைவர்4) கத்தி
2) ஓடியாடி வேலை செய்தபின் மூலையில் ஒதுங்கிக்கிடப்பாள் அவள் யார்?
1) விளக்கு2) துடைப்பம்/தும்புத்தடி3) பேனா4) பாத்திரம்
3) ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும் அது என்ன?
1) கற்பூரம்2) விளக்கு3) மெழுகுதிரி4) ஊதுபத்தி
4) மூன்றெழுத்துப் பெயராகும். முற்றும் வெள்ளை நிறமாகும் அது என்ன?
1) பஞ்சு2) நுங்கு3) வெண்மை4) வாழை
5) எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல்அது என்ன?
1) வைரக்கல்2) விக்கல்3) சிகிச்சை4) மணல்
6) ஆயிரம் தச்சர் கூடி அழகான மண்டபம் கட்டி ஒருவன் கண்பட்டு உடைந்ததாம் மண்டபம் அது என்ன?
1) வீடு2) கோயில்3) தேன்கூடு4) கூடு
7) பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன?
1) மீன்2) வாத்து3) தவளை4) பாம்பு
8) படுத்துத் தூங்கினால் கண்முன் ஆடும்அடுத்து விழித்தால் மறைந்தே ஓடும் அது என்ன?
1) நுளம்பு2) கனவு3) மனிதன்4) வானம்
9) இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
1) பலா2) மா3) வாழை4) தோடை
10) அதட்டுவான்அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்?
1) நாய்2) பூனை3) அரசன்4) நாக்கு


1) ஒரு குகை, 32 வீரர்கள் ஒரு நாகம் அந்த குகை எது?
1) குளம்2) கிணறு3) வாய்4) மாதுளம்பழம்
2) விரல் இல்லாமலே ஒரு கை அது என்ன?
1) மனித கை2) உலக்கை3) விலங்குகளின் கை4) வானம்
3) நான்கு கால்கள் உள்ளவன்இரண்டு கைகள் உள்ளவன்உட்கார்ந்து கொண்டிருப்பான்உட்கார இடம் கொடுப்பான் அவன் யார்?
1) நாற்காலி2) வாங்கில்3) மேசை4) வீடு
4) மரத்தின் மேலே தொங்குது மலைப் பாம்பல்ல. அது என்ன?
1) காய்2) பூ3) இலை4) விழுது
5) முத்தான முத்துகள் முற்றத்திலே காயுதுபடி போட்டு அளக்கத்தான் ஆளில்லை அது என்ன?
1) நிலா2) நட்சத்திரங்கள்3) வானம்4) முகில்
6) அரசன் ஆளாத கோட்டைக்கு பகல் காவல்காரன் ஒருவன்இரவுக் காவல்காரன் ஒருவன் அவர்கள் யார்?
1) பூமிசந்திரன்2) சூரியன்புதன்3) சூரியன்சந்திரன்4) பூமிசூரியன்
7) பேச்சுக் கேட்குது பேசுபவர் தெரியவில்லை. அது என்ன?
1) கணினி2) வானொலிப் பெட்டி3) தொலைக்காட்சி4) தொலைநகல்
8) நான் பார்த்தால் அவன் பார்ப்பான்நான் சிரித்தால் அவன் சிரிப்பான் அவன் யார்?
1) வானம்2) நிழல்3) கோமாளி4) முகம் பார்க்கும் கண்ணாடி
9) கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான்?
1) வெங்காயம்2) மிளகாய்3) மாம்பழம்4) வாழை
10) தனித்து உண்ணமுடியாது என்றாலும் இது சேர்த்தால்தான் உணவுக்கு சுவை. அது என்ன?
1) கறி2) சோறு3) உப்பு4) சீனி


1) கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?
1) வெங்காயம்2) தோடம்பழம்3) கரும்பு4) தேசிக்காய்
2) உயரத்தில் இருப்பிடம்.தாகம் தீர்ப்பதில் தனியிடம் அது என்ன?
1) நீர்2) இளநீர்3) கடல்4) மாம்பழம்
3) வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ அது என்ன?
1) ரோஜாபூ2) மல்லிகைப்பூ3) பூ4) சிரிப்பு
4) எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுக்க வட்டக் குடைபிடித்து வாறாராம் வன்னியப்பு அது என்ன?
1) மீன்2) சிலந்தி3) நண்டு4) வாத்து
5) ஏரியில் இல்லாத நீர்,தாகத்திற்கு உதவாத நீர்தண்ணீர் அல்ல அது என்ன?
1) கண்ணீர்2) அருவி3) ஆறு4) கிணறு
6) கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் அவள் யார்?
1) நெருப்பு2) விளக்கு3) மெழுகுதிரி4) அனல்
7) ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் அது என்ன?
1) பற்கள்2) பூக்கொத்து3) மாதுளம்பழம்4) மாம்பழம்
8) வெள்ளி ஓடையில கருப்பு மீனு துள்ளி விளையாடுது?
1) மான்2) முட்டை3) மீன்4) கண்
9) மருத்துவர் வந்தாருஊசி போட்டாருகாசு வாங்காமல் போனாரு அவர் யார்?
1) இலையான்2) நுளம்பு3) மான்4) சிங்கம்
10) ஊரெல்லாம் சுத்துவான்ஆனால் வீட்டிற்குள் வரமாட்டான் அவன் யார்?
1) நாய்2) செருப்பு3) பூனை4) அட்டை


1) வெள்ளை ராஜாவுக்கு கறுப்பு உடை அது என்ன?
1) மிளகாய்2) பயறு3) உழுந்து4) நெல்
2) தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்கமுடியாது அது என்ன?
1) கை2) முதுகு3) பூ4) காய்
3) பற்கள் இருக்கும் கடிக்கமாட்டான் அவன் யார்?
1) சீப்பு2) கல்3) பல்4) முகப்பூச்சு
4) ஐந்து வீட்டிற்க்கு ஒரு முற்றம் அது என்ன?
1) வீட்டுமுற்றம்2) வாசல்3) கதவு4) உள்ளங்கையும் விரல்களும்
5) தொப்பொன்று விழுந்தான் தொப்பி கழன்றான் அவன் யார்?
1) வாழைப்பழம்2) பனம்பழம்3) தேங்காய்4) பாக்கு
6) தட்டச் சீறும் அது என்ன?
1) தீக்குச்சி2) மெழுகுதிரி3) நாய்4) சிங்கம்
7) வயதான பலருக்கு புதிதாக ஒரு கை அது என்ன?
1) வாழ்க்கை2) வழுக்கை3) உலக்கை4) பொக்கை
8) காற்றைக் குடித்து காற்றில் பறப்பான்அவன் யார்?
1) விமானம்2) பறவை3) பலூன்4) குருவி
9) பச்சை நிற அழகிக்கு உதட்டுச் சாயம் பூசாமலே சிவந்தவாய் அவள் யார்?
1) காகம்2) குருவி3) கிளி4) கோழி
10) அம்மா படுத்திருக்க மகள் ஓடித்திரிவாள் அது என்ன?
1) பாக்கு வெற்றிலை2) அம்மி குளவி3) கை கால்4) மலை மடு


1) வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை அது என்ன ?
1) விருந்தினர்2) மாணவர்3) செருப்பு4) அன்பளிப்பு
2) ஓயாமல் இரையும் இயந்திரமல்லஉருண்டோடி வரும் பந்தும் அல்ல அது என்ன ?
1) குட்டை2) கடல்3) குளம்4) கிணறு
3) மரத்துக்கு மரம் தாவுவான் குரங்கல்லபட்டை போட்டிருப்பான் சாமி அல்ல அவன் யார் ?
1) குயில்2) தேவாங்கு3) உடும்பு4) அணில்
4) வீட்டிலிருப்பான் காவலாளிவெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி அவர்கள் யார்?
1) கதவும் தச்சனும்2) முதலாளியும் நாயும்3) பூட்டும் சாவியும்4) கடலும் நீரும்
5) எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாதுஅது என்ன ?
1) வானம்2) மின்விசிறி3) காகிதம்4) காற்று
6) உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு அது என்ன ?
1) பாய்2) பாம்பு3) அட்டை4) தடி
7) மழை காலத்தில் குடை பிடிப்பான் அவன் யார் ?
1) வளி2) தொப்பி3) காளான்4) காற்று
8) யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும் அது என்ன ?
1) மரக்கதவு2) கண் இமை3) யன்னல்4) வாசல்
9) அடிக்காமல்,திட்டாமல் கண்ணீரை வரவழைப்பாள் அவள் யார் ?
1) தடி2) சவுக்கு3) காயம்4) வெங்காயம்
10) வளைந்து நெளிந்து செல்பவள் வழியெங்கும் தாகம் தீர்ப்பாள் அவள் யார் ?
1) ஆறு2) குளம்3) கடல்4) கிணறு


1) கழற்றிய சட்டையை மறுபடியும் போடமாட்டான் அவன் யார்?
1) வெருளி2) சிலந்தி3) அட்டை4) பாம்பு
2) அள்ள அள்ளக் குறையாது ஆனால் குடிக்க உதவாது அது என்ன ?
1) கடல்நீர்2) வாளி3) கயிறு4) தீர்த்தம்
3) முள்ளுக்குள்ளே முத்துக்குவலயம் அது என்ன?
1) கரும்பு2) மாதுளம்பழம்3) பலாப்பழம்4) முட்டை
4) வாயைப் பிளந்து வீதியோரங்களில் நிற்பான் அவன் யார் ?
1) நாய்2) தபாற் பெட்டி3) வாகனம்4) மரம்
5) முக்கண்ணன் சந்தைக்குப் போகின்றான் அவன் யார் ?
1) மாங்காய்2) சிவபெருமான்3) பலாப்பழம்4) தேங்காய்
6) மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானாம் அவன் யார் ?
1) மீனவன்2) சிலந்தி3) மீன்4) சிலை
7) உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார் ?
1) பானை2) காகம்3) அகப்பை4) நீர்
8) எட்டாத ராணி இரவில் வருவாள். பகலில் மறைவாள் அவள் யார் ?
1) சூரியன்2) வளி3) நிலா4) காற்று
9) வெள்ளை ஆளுக்கு கறுப்புத் தலைப்பாகை. அது என்ன ?
1) தீக்குச்சி2) தடி3) மரம்4) மேசை
10) சலசலவென சத்தம் போடுவான் சமயத்தில் தாகம் தீர்ப்பான் அவன் யார் ?
1) நீர்2) கடல்3) அருவி4) தாகம்


1) காக்கைப் போலக் கருப்பானதுகையால் தொட்டால் ஊதா நிறம்வாயால் மென்றால் நீல நிறம் அது என்ன?
1) நாவல் பழம்2) மாம்பழம்3) தேங்காய்4) பனை
2) தாடிக்காரன்மீசைக்காரன். கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன் அது என்ன?
1) தேங்காய்2) அரிசி3) சக்கரை4) சட்டி
3) ஒரு கிணற்றில் ஒரே தவளை அது என்ன ?
1) காகம்2) நாக்கு3) மூக்கு4) பேன்
4) வால் உள்ள பையன்காற்றில் பறக்கிறான் அது என்ன ?
1) நூல்2) பறவை3) பட்டம்4) விமானம்
5) ஆனை விரும்பும்சேனை விரும்பும்அடித்தால் வலிக்கும்கடித்தால் சுவைக்கும் அது என்ன ?
1) சீனி2) மூங்கில்3) வெல்லம்4) கரும்பு
6) பட்டுப்பை நிறைய பவுண் காசு அது என்ன ?
1) மிளகாய்2) காசு3) அன்னாசி4) மாதுளம்பழம்
7) கண்ணுக்குத் தெரியாதவன் உயிருக்கு உகந்தவன் அவன் யார் ?
1) பேய்2) காற்று3) தூசு4) நீர்
8) தலையைச் சீவினால் தாளிலே மேய்வான் அவன் யார்?
1) வெண்கட்டி2) பேனா3) பென்சில்4) ஆடு
9) சுற்றுவது தெரியாது ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான் அவன் யார் ?
1) வானம்2) பூமி3) பம்பரம்4) காற்றாடி
10) வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல் அது என்ன ?
1) பல்2) பலாப்பழம்3) முட்டை4) மிளகாய்


1) குதிரை ஓட ஓட வால் குறையும். அது என்ன?
1) குதிரை2) ஊசி நூல்3) தும்பி4) நாய்
2) பூக்கும்காய்க்கும்வெடிக்கும். ஆனால் பழுக்க மட்டும் செய்யாது. அது என்ன?
1) இலவம்பஞ்சு2) விளாம்பழம்3) முந்திரி4) பப்பாளி
3) எல்லா வித்தையும் தெரிந்தவன். தெரியாதவன் போல் பாவனை செய்கிறான். அவன் யார்?
1) புத்திசாலி2) வித்தகன்3) அறிஞன்4) கோமாளி
4) ஆடி ஆடி நடப்பான்அரங்கதிர வைப்பான். அவன் யார்?
1) கழுதை2) யானை3) சிங்கம்4) புலி
5) அடிப்பக்கம் மத்தளம்இலை பர்வதம்குலை பெரிதுகாய் துவர்ப்புபழம் தித்திப்பு. அது என்ன?
1) மாமரம்2) வாழைமரம்3) பலாமரம்4) மாதுளை
6) ஒருவனுக்கு உணவளித்தால் ஊரையே கூட்டுவான். அவன் யார்?
1) காகம்2) நாய்3) புறா4) பூனை
7) எங்க வீட்டுத் தோட்டத்திலே தொங்குதே ஏகப்பட்ட பச்சைப் பாம்புகள். அது என்ன?
1) மிளகாய்2) பாகற்காய்3) புடலங்காய்4) கத்தரிகாய்
8) "உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்" அது என்ன?
1) நரகம்2) பிரம்பு3) தராசு4) காவல்காரன்
9) "ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது" அவர்கள் யார்?
1) மனிதர்கள்2) யானைக் கூட்டம்3) எறும்புக் கூட்டம்4) மான் கூட்டம்
10) "உடல் சிவப்புவாய் அகலம்உணவு காகிதம்" நான் யார்??
1) கழுதை2) அஞ்சல் பெட்டி3) குதிரை4) மாடு