இயற்கை மணம் குறித்து ஒரு தகவல் ஒரு வலைத்தளத்தில் படித்தேன்.
பதிவர் அவருக்கு பிடித்த இயற்கை மணங்கள் பற்றி வெகு அருமையாக சில கருத்துக்களை பரிமாறி அதை படிக்கையிலேயே மிக மகிழ்ச்சி ....
அப்படியே எனக்கு பிடித்த மணங்கள் என்னென்ன என்று மனசிலேயே அலச ஆரம்பித்தேன் .
அம்மாவின் உடம்பு உடை வாசம் பட்டியலில் மேல் வரிசையில் .
அடுத்து மழலை / குழந்தைகள் . அந்த பிஞ்சுகளின் கதம்ப பலவேறு வகை வாசனைகள் பட்டியல் இடுவது மகா சிரமம் . வெகு நீளம் . எனக்கு ஒண்ணேகால் வயதில் பேத்தி ஒரு வயது ஆகப்போகும் பேரன் உண்டுங்க ....இருவருமே மகள்கள் வழி .
மழை பெய்து அதுவும் கோடையில் எழும்பும் மண் வாசனை .
நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வித உடல் வாசனை .இது நாம் பயன்படுத்தும் சோப் , பவுடர் , தலைக்கு பூசும் எண்ணெய் , வாசனை திரவியங்கள் , உண்ணும் உணவு வகைகள் சார்ந்தவை .....
அதுபோலவே பிறர் உடம்பின் மணம்....பெண்கள் என்றால் அவர்கள் சூடும் பூக்கள் ....
காடு கழனி வயல் நீர்நிலைகள் இவைகளில் உண்டாகும் ஈடு இணையில்லா சுகந்தங்கள் .....
உணவுப்பண்டங்கள் அவை காய்கனி மாமிசம் எதுவாக இருந்தாலும் ....
குறிப்பாக பழங்கள் மா பலா போன்றவைகளின் வாசனை ....அம்மம்மா......
பனங்கிழங்கு, பதநீர் , பனையோலை .....
வறுத்த கொள்ளு , புளியங்கொட்டை மணம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ....
மண் பாண்டங்கள் சுட்டு அவை வேகும் மணம் வெகு அருமையாக இருக்கும் .....
No comments:
Post a Comment