Tuesday, 30 January 2018

நூல் நிலையம்
===============
கண்டதைக் கற்பவன் பண்டிதன் ஆவான்’ என்பது நம் மூதாதையர்கள் கூறிய அருங்கருத்துகளில் ஒன்றாகும்.
அவர்களின் அருள்வாக்கு நூற்றுக்கு நூறு உண்மையே. நாம் பலதரப்பட்ட நூல்களைக் கற்பதன் மூலம் சிறந்த அறிஞர்களாகலாம். ஆனால், இன்றைய காலத்தில் சந்தையில் விற்கப்படும் அனைத்து வகையான நூல்களையும் ஒருவரே வாங்கக் கூடியதென்பது சாத்தியமாகக்கூடிய காரியமா? ஆகவே, இவ்வாறான சிக்கல்களைக் களைவதற்குச் சிறந்த வழி நூலகம் அமைக்கப்படுவதே ஆகும்.
இந்த நூலகங்களுக்குச் சென்று பலதரப்பட்ட எழுத்துப் படிவங்களை வாசிப்பதால் நிறைய பலன்கள் நம்மை வந்து சாரும் என்பது வெள்ளிடைமலையாகும்.
நூலகத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் தகுந்த பல தரப்பட்ட புத்தகங்கள் ஆங்காங்கே சீராகப் பேழையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாகச், சிறுவர்களுக்கான வண்ணப்படங்கள் கொண்ட கதைப் புத்தகங்கள், தொடக்க, இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான பள்ளிப் பாடப் புத்தகங்கள், அரசாங்கத் தேர்வுக்கான மீள்பார்வை மற்றும் பயிற்சிப் புத்தகங்களும் முறையே வைக்கப்பட்டிருக்கும்.
தொடர்ந்து பொது அறிவை வளர்ப்பதற்காக நாளிதழ்கள், வார மாத இதழ்கள், சஞ்சிகைகள், கலைக்களஞ்சிய நூல்களும் நூலகங்களில் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு சீராக வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள் நூலகத்திற்கு வருவோரைக் கவரும் வண்ணத்தில் இருக்கும். இன்றைய பெரும்பாலான நூலகங்களில் கணினி, நகல் எடுக்கும் கருவி, பாட நூல் சம்பந்தப்பட்ட ஒலி ஒளி நாடாக்கள் போன்ற வசதிகளும் இருக்கின்றன. மேலும் அமைதியான சூழலில் புழுக்கமில்லாமல் ஆழ்ந்து படிப்பதற்கு இன்றைய நூலகங்கள் குளிர்சாதன வசதிகளைக் கொண்டு விளங்குகின்றன.
நூலகங்களுக்குச் செல்வதன் மூலம் நாம் பலவகையான நன்மைகளை அடைகிறோம். அரசாங்கத் தேர்வை எதிர்நோக்கும் மாணவர்கள் அவசியம் நூலகத்தை உற்ற தோழனாக ஆக்கிக்கொள்ள வேண்டும். தங்களின் மனத்தை ஒருநிலைப்படுத்த அமைதியான சூழலில் புத்தகங்களை ஆழ்ந்து படிப்பதன் மூலம் கருத்துகளைத் தெள்ளத்தெளிவாகப் புரிந்துகொள்வர். இதற்கு முக்கியக் காரணம் நூலகத்தில் கிடைக்கக்கூடிய அமைதியான சூழலே ஆகும். இதுபோன்ற அமைதியான சூழலை நாம் வேறெங்கும் பெற இயலாது. இது தேர்வினை எதிர்நோக்கும் மாணவர்கள் தங்கள் எண்ணங்களை அலைபாய விடாமல் இருக்க வழிவகுக்கிறது.
காலம் பொன் போன்றது என்பதனை நாம் அனைவரும் உணர வேண்டும். நாம் பயனற்ற வழியில் கழிக்கும் ஒவ்வொரு வினாடியும் மீண்டும் வரப்போவதில்லை. ஆகவே இன்றைய இளைஞர்கள் தங்களது நேரத்தைப் பயனுள்ளதாகக் கழிக்க நூலகம் பெரிதும் துணைபுரிகிறது. அதாவது அவர்கள் தங்களது ஓய்வு நேரத்தை நூலகத்தில் செலவிடுவதால் சமூகச்சீர்கேடுகளிலில் ஈடுபடுவதிலிருந்து தவிர்த்துக்கொள்ள முடிகிறது.
அதுமட்டுமல்லாமல் நூலகங்களில் உள்ள வார, மாத இதழ்கள் சஞ்சிகைகள் மற்றும் கலைக்களஞ்சிய நூல்களைத் தினமும் கற்பதன் மூலம் நாம் உள்நாட்டு, வெளிநாட்டு நடப்புகளைச் சுலபமாகத் தெரிந்து கொள்ளலாம். இதனால், நாம் கிணற்றுத் தவளை போல் இல்லாமல் வெளியுலகம் அறிந்தவர்களாகத் திகழ்வோம். ‘கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு’ என்பதுபோல நாம் வாசிப்பதன் மூலம் நமக்குத் தெரியாத பல விவரங்களைத் தெரிந்து கொள்வதோடு நம்முடைய வாசிப்புப் பழக்கத்தையும் வலுவடையச் செய்து கொள்ளலாம்.
எனவே, நாம் வயது வரம்பின்றி நூலகத்திற்குச் சென்று அங்குள்ள பல எழுத்துப் படிவங்களை வாசித்துப் பலனடைய வேண்டும். அரசாங்கம் பொது மக்களின் வசதிகளுக்காக நிறுவப்பட்ட நூலகங்களில் உறுப்பினர்களாகி அங்குள்ள சலுகைகளை நல்வழியில் பயன்படுத்திக்கொள்வது நமது அனைவரின் கடமையாகும்.
‘கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்பதுபோல நாம் கற்றவர்களாக இருந்தால் எங்குச் சென்றாலும் மதிப்புப் பெற்றுச் சிறப்புடன் வாழலாம்.
இட்லி சாப்பிடுங்கள்!
நாம் அடிக்கடி சாப்பிடும் டிபன் இட்லிதான் அந்த இட்லி சாப்பிடுவதினால் நன்மை என்ன?
என்று நம்மில் சில பேருக்கு தெரியாது இதோ தெரிந்து கொள்ளுங்கள்.
அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊறவைத்து பிறகு அரைத்து மறுநாள் காலையில் இட்லி, தோசையாகச் சாப்பிடுகிறோம்.
இது மிகச் சிறந்த இரண்டு மடங்கான சத்துணவு
என்று சமீபத்தில் உறுதிப் படுத்தியுள்ளன.
அரிசியிலும், உளுத்தம் பருப்பிலும் உள்ள வைட்டமின்கள்,
நார்ச்சத்துக்கள்,இரும்பு,கால்சியம்,பரஸ்பரஸ் போன்ற
உப்புக்கள் நோய் நச்சு முறிவு மருந்தாக உயர்கின்றன.
அமினோ அமிலங்களும் பன் மடங்கு அதிகரிக்கின்றன.
திசுக்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்ற
அமினோ அமிலம் மூன்று மடங்கும் சிறுநீரகங்களின்
செயல்பாட்டுக்கு உதவும் காமா அமினோபட்ரிக் என்ற
அமினோ அமிலம் பத்து மடங்கும் அதிகரிக்கின்றன.
இதனால் இட்லி,தோசை முதலியவற்றில் இரவில் ஊற வைத்து சாப்பிடும் கொண்டை கடலையில் கிடைப்பது போல தாது உப்புக்களும், அமினோ
அமிலங்களும் கிடைக்கின்றன.
லைசின் அமிலம் பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது இட்லி மூலம் இந்த அமிலம் உடனே கிடைப்பதால் பசியும் உடனே அகன்று மனத் திருப்தியும் கிடைக்கிறது.
இட்லி, தோசை வகைகள் முதலியவற்றை சாப்பிடும்
போது வைட்டமின் சி உள்ள முருங்கைக்கீரை பச்சடி,
முருங்கைக்காய் சாம்பார் நல்லது. அல்லது ஏதேனும் ஒரு கீரைப் பச்சடியும் தேவை. இல்லையெனில் புதினா,
கொத்தமல்லி போன்ற துவையல்.காரணம் லைசின் அமிலம் உடலில் பாதுகாப்பாக இருக்க உதவுவது வைட்டமின் சி தான் அது கீரைகளில் தாராளமாக
இருக்கிறது.
அதற்க்காக அதிகமாக சாப்பிடக்கூடாது அளவாகத்தான் சாப்பிட வேண்டும் 3 இட்லிக்கு மேல் சாப்பிட்டால் அது நல்லதள்ள எனவே அளவாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத் திற்க்கு நல்லது.
எனவே இட்லி,தோசை,அரிசி,கோதுமை சாதத்தை விடத் தரமான உணவுகள் என்பதை உணர்வோம்.

TK



Monday, 29 January 2018

பாசமிகு முகநூல் நட்பு எனது ரசிகர் ...தன்னை ‘’Elementary’’ என தாழ்ச்சியோடு சொல்லி அடியேன் என்னை ‘’University’’ என உயர்த்தும் ‘’பண்பின் சிகரம்’’ .....
ஒரு போட்டி வைத்து முகநூல் நட்புக்களை உசுப்பி கொண்டாட / திண்டாட வைத்துள்ளார்.
காதல் ஜோடிகளை பற்றி பதிவு ...
அது படம் , கதை , கவிதை , கட்டுரை ...என்னவானாலும் பதியவும் ...தகுந்த நபர்கள் பரிசினை தட்டி செல்லவும் பொங்கல் நாளாம் தமிழர் திருநாளை ஒட்டி ...போட்டி பொருத்தமாக அறிவித்துள்ளார்.
அடியவனும் கலந்து கொள்கிறேன்.
நான் 4 –in – 1 ...படம் , கதை , கட்டுரை & கவிதை எல்லாமும் கலந்து தரும் பதிவு இது.
எனக்கு கிடைத்த இந்த ஜென்மத்தில் நான் அறிந்த பிடித்த காதல் ஜோடிகள் பலர்.
புனித நூல்கள் ...அது இந்து,இஸ்லாம்,கிறிஸ்தவம் ..பிற மதங்கள் எதுவெனினும் ....காதலை குறிப்பிடாத எவையும் - நான் படித்து கேட்டு அறிந்த வகையில் இல்லை.
ஏராளம் சொல்லலாம். ஆனால் தலா ஓன்று மட்டும் குறிப்பிட விழைகிறேன்.
இந்து மதம்:
ராதா கிருஷ்ணன்
இஸ்லாம்:
தூதர் நபி பெருமான் - கதீஜா பேகம் அம்மையார்
கிறிஸ்தவம்:
ஆதாம் ஏவாள்
இலக்கியங்கள் ..அது தமிழகம் , இந்தியா அல்லது உலக இலக்கியங்களில் எக்கச்சக்கம் ...விண்மீன்கள் / மணல் துகள்கள் போல ...
பட்டியல் போட்டால் தட்டச்சு செய்து மாளாது.
ஆனாலும் இலக்கியங்களில் பிடித்த ஜோடி Erich Segal -ன் ‘’Love Story”...Oliver & Jennifer .
இதனை படித்த பதினேழாம் வயதில் அடியேனும் காதல் வசப்பட்டிருந்த தருணம் ....
சென்னையில் லயோலாவில் இளங்கலை வணிகவியல் மாணவப்பருவத்தில்...மலர்கின்ற தேன் சிந்தும் சொர்க்க சுகந்த சுந்தர சுகத்தில் ...
இன்னும் ஒரு நூல் எழுதும் அளவு விஷயங்கள் இருக்கு.....
முடிவுரை :
பல ஆயிரம் காதல் ஜோடிகள் இருந்தும் எனக்கு பிடித்த காதல் ஜோடி
''அலங்கார சகாய பெனடிக்ட் & பிரான்சிஸ்கா மேரி'' ...
ஆமாங்க நானும் என்னோட மனையாளும் தான் ....
காண்க:படம்
அந்த கரங்களின் பிணைப்பு ...முக மலர்ச்சி தேக சுகம் தரும் 'டச்சிங்'
ஈடு இணை இதற்கு உண்டா ?....
சொல்லுங்க அம்மாமார்களே / அய்யாமார்களே...
அவளுக்கு 27 + ஆண்டுகளில் ..என் மனதில் எழுதிய காதல் கவிதைகள் ஓராயிரம் ...அதற்கும் மேலேயே ...இருக்கும்
மாதிரிக்கு ஒன்று:
நீ என் காதலி !!!!
என் உயிரானாய்
மூன்று எழுத்து உறவானாய்..!!!!
''மனைவி ''
முடிவில்லா நம் பயணம்
தொலைவு அதிகம் இல்லை
மரணம் வரைதான்
........
அது வரை நான் உன்
உயிரில் உறங்கி
தினம் உன் மனதில் எழுவேன்..
என் நியூரான் உன்னை
தினம் என்னில் / என்னுள் கடத்த
நீங்காத நினைவுகளாக
நினைவு சின்னமாய் நீ !!!!
-நிறைவு-
உறவு தொடரும் .....!!!!!
வாடிவாசல் - சி. சு. செல்லப்பா
"மிருகத்தை ரோசப்படுத்தி, அதன் எல்லையை கண்டு விட்டு, அதை மனிதன் அடக்கி வசப்படுத்தி வெற்றி காட்ட துணிவதை சாதகமாக செய்திருகின்றார்கள். அந்தக் கோதாவுக்குள் ஒத்தைக்கு ஒத்தையாக இறங்கும் மனுஷனுக்கும் மாட்டுக்கும் நடக்கிறப் பலப் போட்டியில் இந்த இரண்டிலொரு முடிவு காணும் - அந்த வாடிவாசலில்"
அந்த முடிவை காண வரும் இரண்டு இளைஞர்களை மையமாக கொண்டது இக்கதை. ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீரவிளையாட்டு, வேடிக்கை பார்ப்பவர்களுக்கு விளையாட்டு. காளைகளுக்கு அது விளையாட்டல்ல, மாடு அணைபவர்களுக்கும் அது விளையாட்டல்ல.
ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன மதுரை / தேனி மாவட்டத்தை சேர்ந்தவன் என்றாலும் ஒரு ஜல்லிக்கட்டு கூட பார்த்ததில்லை. எங்கள் ஊர் அருகில் உள்ள பல்லவாரயன் பட்டி ஜல்லிக்கட்டு பிரபலமானது. எங்கள் ஊரிலும் ஜல்லிக்கட்டு நடந்துள்ளது என்றும், ஜாதிக் கலவரத்தினால் அது மறைந்து போனது என்றும் கேள்விபட்டுள்ளேன். நான் பார்த்த ஜல்லிக்கட்டு எல்லாம் சினிமாவில்தான். ரஜினி தன் கராத்தே மூவுடன் மாட்டை அடக்குவதும், கிராமராஜன் பாட்டு பாடி அடக்குவதும் மட்டுமே நான் பார்த்த ஜல்லிக்கட்டு.
ஜல்லிக்கட்டை பார்த்ததில்லை என்ற குறையை இந்நாவல் போக்கி விட்டது. ஜல்லிக்கட்டு என்பது இன்று பல இடங்களில் முன்பகை தீர்க்கும் ஒரு நிகழ்வாக ஆகிவிட்டது. இங்கும் அதுதான், ஆனால் பகை காரிக் காளை மீது. தன் அப்பனால் அடக்க முடியாத காளையை அடக்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் வரும் பிச்சி அவனுக்கு துணையாக வரும் மருதன். இவர்களுடன் சாதரணமாக பேசி அவர்களுடன் நெருங்கும் கிழவன், காளையை தன் கவுரமாக நினைக்கும் ஜமீந்தார். இவர்கள்தான் இக்கதையின் முக்கிய மனிதர்கள்.
ஒரு மிருகத்தை அடக்குவதை பெருமையாகவும்,தான் வளர்க்கும் மிருகம் தோற்பது என்பது தனக்கான தோல்வியாக எண்ணுவதும், பார்வையாளனாக இருந்தாலும் ஜல்லிக்கட்டை தன் வாழ்வின் ஒரு பகுதியாக எண்ணுவதுமாக பல மனிதர்களின் குணங்களை அருமையான நடையில் வெளிப்படுத்தி இருக்கின்றார்.
"ஏன் தாத்தா, சும்மா போகிற மாட்டுமேல மனுசன் விளறதே ஒரு விளையாட்டுத்தானே, இல்லீங்களா? சொல்லுங்க. ஏன் பாக்கிறவங்களுக்கு கூட அது விளையாட்டாத்தான இருக்கு."
ஜமீந்தார் என்னதான் காரிக்காளையை தன் பெருமைக்கான அடையாளமாக கருதினாலும், களத்தில் காளையை அணைபவனுக்கு காளைதான் தெரியும், அதைப் பிடித்திருப்பவன் தெரியாது என்ற உண்மையை உணர்ந்து, அவரே தன் காளை பிடிபடுவதை பார்க்க ஆசைப்படும் உள்மனதை சட்டென்று வெளிக்காட்டுகின்றார்.
மாடு அணையும் காட்சிகள் எல்லாம் பரபரப்பாக நம் கண் முன்னால் நடப்பதை போல காட்சிப்படுத்தியுள்ளார். அந்த பேச்சுவழக்கு எனக்கு எங்களூரைச் சேர்ந்த யாரோ பக்கத்தில் அமர்ந்து கதை சொல்வது போலவே இருந்தது. பலவிதமான காளைகள் அதன் குணங்கள், அணைபவர்களின் நினைவுகள், அவர்களின் நுட்பங்கள், பார்வையாளர்களின் மனத்நிலை என அனைதைப் பற்றியும் பல தகவலகள் நாவல் முழுவதும் நிறைந்துள்ளது. இரவு பதினொன்று மணிக்கு அரைத்தூக்கத்தில் இது என்னதான் கதை என்று எடுத்தவன், முழுத்தூக்கமும் கலைந்து ஆழ்ந்துவிட்டேன்.
மொத்தத்தில் அருமையான நடையில் அமைந்த ஒரு அற்புதமான நாவல். தவறவிடக் கூடாத ஒரு புத்தகம்.
அலுவலகத்தில் இரண்டு பெண்களின் உரையாடல்
ஒருத்தி: நேத்து சாயந்திரம் ரொம்ப ஜாலியா இருந்தது. உனக்கு எப்படி?
மற்றவள் : அதையேன் கேக்கறே...? செம்ம கடுப்பு. என் புருஷன் வேலையில் இருந்து திரும்பி வந்ததும் சாப்பிட்டு உடனே படுத்து தூங்கி விட்டார். நீ உன் கதைய சொல்லு.
ஒருத்தி : ரொம்ப சந்தோசமா இருந்தது. அவர் ஆபீசில் இருந்து வந்ததும் டின்னருக்கு என்னை வெளியே கூட்டிபோனார். அது முடிஞ்சதும் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டே நடந்தோம். வீட்டுக்கு வந்ததும் பெட்ரூமில் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து ரொம்ப நேரம் பேசினோம். எல்லாம் கனவு மாதிரி இருந்தது.
அதே சமயம் வேறு அலுவலகத்தில் இவர்களது கணவர்களின் உரையாடல்
ஒருவன்: நேத்து சாயந்திரம் என்னப்பா விசேஷம்.?
மற்றவன் : சூப்பர்பா. வேலை முடிஞ்சு வீட்டுக்கு போனதும் டைனிங் டேபிள்ள சாப்பாடு ரெடியா இருந்தது. சட்டுபுட்டுனு சாப்பிட்டுட்டு நல்லா தூங்கிட்டேன். உனக்கு எப்படி?
ஒருவன் : ரொம்ப பேஜாரா போச்சுப்பா. வேலை முடிஞ்சு வீட்டுக்கு போனா வீட்ல கரண்ட் இல்லை. கரண்ட் பில் கட்டாததால் EB காரன் பீஸ புடுங்கிட்டு போயிட்டான். சரின்னு பொண்டாட்டிய கூட்டிகிட்டு ஹோட்டலுக்கு போயி சாப்பிட்டேன். கையில இருந்த காசெல்லாம் ஹோட்டல் பில்லுக்கே சரியா போச்சு. திரும்பி வரும்போது ஆட்டோக்கு குடுக்ககூட காசில்ல. நடந்தே வர வேண்டியதாச்சு. வீட்டுல கரண்ட் இல்லாததால தூக்கமே வரல. இருந்த ஒன்னு ரெண்டு மெழுகுவர்த்திய கொளுத்தி வச்சுக்கிட்டு தூக்கம் வரவரைக்கும் பேசிகிட்டு இருந்தோம்.

சிரிங்க !!!!

ஜேசியும் சசியும் வீடுகளுக்கு கேஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் ஆட்கள்..
ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு சிலிண்டர் போட போனாங்க.. 4 வது மாடியில் ஒரு வீட்டுல நின்னுட்டு இருக்கும்போது மாசி கேட்டார்..
சசி .. பில் புத்தகம் கொடு..
என்கிட்ட எங்கே இருக்கு..நீதானே வச்சிருந்தே..?
இல்லே சசி.. கேஷ் பேக்கில வச்சிருப்பே பாரு..
ஐயோ கேஷ் பேக்கா..? கீழே ட்ரை சைக்கிள்ல மாட்டியிருக்கேனே..
அடப்பாவி.. எவனாவது திருடிட்டா என்ன பண்றது..?
இருவரும் புயல் வேகத்தில் படியில் இறங்கி கீழே ஓடினர்.. அப்போது அவர்கள் பின்னால் ஒரு ஆள் வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்தார்.. கீழே பேக் இருக்கவே நிம்மதி அடைந்த ஜேசி யார் பின்னால் ஓடி வந்ததெனப் பார்க்க... அவர் Mr.மொக்கை..!
நீங்க ஏன் சார் இப்படி அலறியடிச்சுகிட்டு ஓடி வந்தீங்க..? Mr.மொக்கை சொன்னார்..
ஏம்பா.. சிலிண்டரைக் கொண்டாந்து வச்சிட்டு ஒரே ஓட்டமா ஓடினா நான் என்னத்தை நினைக்கிறது..? சிலிண்டர் வெடிக்கப் போகுதுன்னு ஓடறீங்க போல இருக்குன்னு நானும் ஓடியாந்தேன்..!