Thursday, 11 January 2018

செடி - கொடி-மரம்- பறவை -மிருகம் = பழனி பஞ்சாமிர்தம் ...

=========================================================

செடி = கரும்பு ...வெல்லம்
கொடி = திராட்சை
மரம் = வாழை ...வாழைக்கனி
பறவை = தேனீ ...தேன்
மிருகம் =பசு ....பால்

இவைகளின் ஐக்கியமே அது ....
ஒரு அகங்கார வரலாறு :-
பேர் அலங்காரம் ....குணம் அகங்காரம் ...
--------------------------------------------------------------
என்னது வரலாறா புவியியலா ...என்ன சப்ஜெக்ட்ஸ் அய்யா ...
கோளாறு எப்பவோ நடந்து முடிஞ்சி போன கத ..இது நெறைய பேருக்கு ...
அவங்களுக்கு வரலாறு மூலம் நாம் எவ்வளவு தெரிஞ்சுக்க முடியும் எனும் ஞானம் ...''சூன்யம்''..
எனக்கோ வரலாறு மட்டுமல்ல ...வாய்ப்பும் வாசிப்புமே ...''அல்வா''... சாப்பிடற வேலை...
பத்து வயசில் சாண்டில்யன் நூல்கள் வாசிக்க கிடைத்த நல்ல வாய்ப்பு ....
( படித்த பல்லாயிரம் புத்தகங்களில் .... சில ஆயிரம் நூல் ஆசிரியர்களில் எனக்கு இன்றைக்கும் பிடித்த முதல்வர் ''சாண்டில்யனே'')
.... வரலாற்று நிகழ்வுகள் பிடித்துப்போய் ஒன்பது/ பத்தாம் கிளாசிலேயே ... வாத்தியாருக்கே நான் வாத்தியார் ஆக விளங்கியதை என் நண்பர்கள் இன்றும் சொல்வார்கள்...
ஐந்தாம் கிளாசில் படிக்கும்போதே ...
அசோகர் கலிங்கப்போரில் வென்ற கலிங்க மன்னர் யாருங்கோ என நான் கேட்டு வாத்தியாரே கலங்கி போனார்....
இன்றுவரை எனக்குத் தெரியவில்லை...தெரிஞ்சவுக சொல்லுங்க...
பேக் டு பாய்ன்ட்....ஒருமுறை குவைத்-கத்தார்-திருவனந்தபுரம் வரும்போது கார்ல் டேவிஸ் .....ஒரு அமெரிக்கன் என் கூட பயணித்தார்...
அவரை அறிமுகம் செய்துகொண்டு பேச்சுக்கொடுத்து மொக்கை போட்டேன்...
அரிசோனா தொடங்கி வயோமிங் வரை 50 அமெரிக்க ஸ்டேட்ஸ் பேரை சொல்ல சொன்னேன்...அவனுக்கு சொல்ல தெரியல்ல....
அதுசரி 50 பெரிய நம்பர் 1513-ல "மே ஃப்ளவர்...கப்பலில் வந்து குடியேறினார்கள் அல்லவா உன்னோட முப்பாட்டன்ஸ் ...
அந்த 13 காலனிகள் ...அதையாச்சும் சொல்லுப்பா ....ம்ஹூம் உதட்டை பிதுக்கிட்டான்....
A-யில் பெயர் தொடங்கும் மாகாணங்கள் ...ம் ஹூம் ..
சரி அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மிகச்சிறிய மாகாணம்...'நோ'....
அமெரிக்க கொடி உருவாக்கியோர்கள் வரலாறு
...நாணய வரலாறு...
ஒரேஒரு நாள் ஜனாதிபதி ஆக இருந்தவர்....
நான் அடுக்கடுக்காக கேட்ட சுமார் 50 கேள்விகளில் ...ஆணித்தரமாய் ஒரு பதில் ...
ம்ஹூம்..ஏதோ சுமாரா அறைகுறையான சமாளிபிகேஷன்ஸ்...
நமக்கு வெள்ளைக்காரன்ஸ்ன்னு சொன்னாலே அவுனுவ ஏதோ பெரிய்ய?!!!!...ன்னு ரொம்ப பேருக்கு நெனைப்பு ...
எனக்கு அவனுவள அறிவுக் கொழுந்தை வைச்சு சூடு போட்டு அவனுவ அலறுவதை ரசிக்கப் பிடிக்கும்...ரொம்ப ரொம்ப பிடிக்கும் ...
நெறைய வைச்சு செஞ்சுருக்கேன் ....
நம்மாளுங்க பொறுத்த வரை அவனுங்க காது கொடுத்தே என்னோட பேச்ச கேட்க மாட்டானுவ ..அதனால அவனுவளை கண்டுக்குறதில்ல ...வாசிப்பும் அவனுவளுக்கு அவ்வளவா இருக்குமா ...என்பது...
ஐயமில்லை ....வெள்ளிடைமலை உண்மை ...
அதனாலே ஆடாம ஜெயிச்சொம்மடா...கத தான் ..
...அப்புறமா நான் எல்லாத்துக்கும் பதில் சொல்லி...வழக்கம் போல அசத்தினேன்...
ஒரு இந்தியன் / அதிலும் தமிழன் புட்டு புட்டு வைத்து செவிட்டில் அடித்த நினைவு /ஞாபகம் ...அந்த அமெரிக்கனுக்கு ஏழேழு ஜென்மமும் மறக்காது ...
...ஏர்போர்ட்டில் இறங்கிப்போகையில் கட்டிப்பிடித்து பாராட்டி சென்றார்....அவர் குடித்த மது போதை .....பூராவும் தெளிந்து போயிற்று...
இன்றைக்கும் எண்ணி எண்ணி சிரிப்பேன்...
பலமுறை எனது நண்பர்களுடன் பகிர்ந்துள்ளேன்...
நம்ம மக்களுக்கு இங்க்லீஷ் பேசினா அதுவே 'அறிவுடைமை' என்னும் தப்பான எண்ணம்....
படித்தால் எனக்கு மட்டும் அல்ல ... எல்லோருக்கும் நிறைய நிறைய தெரியும்....
அமெரிக்கன் காங்கிரஸ் , பிரிட்டிஷ் கவுன்சில்,கன்னிமாரா மற்றும் தேவநேயப்பாவாணர் சென்னை மைய நூலகங்கள் ...
எனக்கு பொழுது போக்கு மைதானங்கள்...பல்லாயிரம் நூல்கள்,பத்திரிகைகள்...வாசிப்பு...
சென்னை லயோலா கல்லூரி பேராசிரியர்கள் ???!!!!(அன்றைக்கு (1979 -82) அறிவில் அவங்க ஒரு வெண்ணையும் கிடையாது ...
ஒரு சிலர் ஏதோ கொஞ்சம் தெரிஞ்சு வைச்சுருக்கலாம்...பெரும்பாலும் நோ GK)
அங்கேயே 20+ வருட அனுபவசாலிகள்...பேராசிரியர்களை கிண்டி நொங்கு எடுத்த மாவீரன் ...
அந்தக் கதைகளையே ஒரு சிறப்புப் பதிவாய் போட்ருவோம் ..
லயோலா கல்லூரி விரிவுரையாளர் / பேராசிரியர் ன்னா ஒண்ணும் கொம்பன்ஸ் கிடையாது...
வாசிக்கும் பழக்கம் இருந்தா ...நல்ல நினைவுத் திறன் ....விளக்கி சொல்லும் ஆற்றல்...பேச்சுத் திறமை இருக்கும் எல்லோருமே கொம்பன்ஸ் தான் ...நானு பெரிய்ய்ய...கொம்பன் ...
பேர் அலங்காரம் ....குணம் அகங்காரம் ...
சொல்ல எனக்கு வெட்கம் / பயம் லேது ....
எனது வகுப்புதோழர்கள் எனக்கு கொம்பு சீவி விட்டு ...லயோலா விரிவுரையாளர்கள் /பேராசிரியர்கள் ...எனது காமெர்ஸ் டிபார்ட்மென்ட் ...மட்டுமல்ல பிற டிபார்ட்மென்ட் ஆட்களிடமும் தேவையின்றி முட்டி ...
அவர்கள் பலரது அறியாமையோடு கலந்த அகந்தை ....எனும் ...குடலைக் கிழித்த முரட்டுக்காளை...அய்யா !!!!!!!!
இப்போதும் அப்படித்தான்னு வைச்சுக்குங்களேன் ...
யாரேனும் வரீங்களா ...
ஒரு கை பாத்துடலாம் .....!!!!!!!
சென்னை செந்தமிழ்!
====================
என்னுடன் லிப்டில் வந்த சிலர் ஒரு குறிப்பிட்ட சமூக / வட்டார மொழியை imitate செய்துகொண்டிருந்தனர். இவர் இப்படி பேசுவார் நமக்கு புரியவே புரியாது என்று யார் தலையையோ உருட்டிக் கொண்டிருந்தார்கள். வழக்கமாக நடக்கும் விஷயம்தான் – திரைப்படங்களில், கதைகளில், பதிவுகளில், சமூக வலைத்தளங்களில் தினமும் பார்க்கும் விஷயம்தான். ஆனால் வட்டார வழக்கு கேலிக்குரியதா ? இடம் சார்ந்து அல்லது சமூகம் சார்ந்து அல்லது தொழில் சார்ந்து வழங்கும் வட்டார வழக்குகள் ஒரு மொழியை சுவாரஸ்யமாக்குகிறது என்பது என் கருத்து.
லிப்டில் பேசியவர்கள் எந்த வட்டாரம் என்று எனக்கு தெரியாவில்லை. ஆனால் அவர்களின் உரையாடலில் ‘மச்சான், பந்தா, பீட்டர், ஃபிலிம் காட்டறது’ போன்ற வார்த்தைகளை மிகவும் சரளமாக தெளித்து மகிழ்ந்தனர். அட இந்த வார்த்தைகளும் மெட்ராஸ் பாஷை என்ற ஒரு வட்டார மொழியின் தாக்கம்தானே? இவர்கள் கண்ணாடி வீட்டில் இருந்து கல்லெறிந்தார்களா?
சென்னை மாநகரில் பேசப்பட்டு வந்த பிற மொழிச் சொற்கள் கலந்த தமிழ். சோ வின் Madras by night நாடகம் பார்த்ததிலிருந்தே எனக்கு இந்த மெட்ராஸ் பாஷை மேல் மிகுந்த ஆர்வம் இருந்தது, அந்த நாளில் ஜாம்பஜார் ஜக்கு என்ற கற்பனை பாத்திரம் ‘அசால்ட்டா’ பேசும் தமிழை ரசித்தேன். சோ,தேங்காய், லூஸ் மோகன் ஜாலியாக பேசிய மொழி. திரைப்படங்களில் கமல் அதை சிறப்பாக நகைச்சுவை முலாம் பூசி மெருகேற்றினார். இந்த மெட்ராஸ் பாஷைக்கு இணையத்தில் நிறைய crash course பதிவுகள் உண்டு. சில அருஞ்சொற்பொருள் பதிவுகளும் உண்டு.
அறுபதுகளின் இறுதியில் வந்த பொம்மலாட்டம் படத்தில் வாலி இந்த மெட்ராஸ் பாஷையில் எழுதிய ஒரு பாடல் பிரபலமானது
(இசை வி.குமார் பாடியவர் மனோரமா).
வா வாத்யாரே வூட்டாண்ட
நீ வராங்காட்டி நா வுடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு நான்
சைதாபேட்டை கொக்கு
வூட்டாண்ட என்றால் என்ன? வீடு தான் வூடு. அண்டை வீடு என்றால் பக்கத்து வீடு So இதை மாற்றி ‘வீடு அண்டை’ என்ற construction வீட்டுக்கு அருகில் என்ற பொருள் தருகிறதோ ?
வாராவதிலே நின்னுக்கினிருந்தேன்
அமராவதியாட்டம்
சைட்டடிச்சு நீ ஜகா வாங்கினே
அம்பிகாபதியாட்டம்
வாராவதி ? வார் என்றால் நீர். போக்குவரத்துக்காக ஆற்றின் இரு கரைகளை இணைத்துக் கட்டப்படும் பாலம் தான் வாராவதி. ஆங்கிலேயர் ஒருவர் பெயரால் சென்னையில் ஆமில்ட்டன் வாராவதி எனும் பாலம் ஒன்றுண்டு
லவ்வாப் பாத்து சோக்காப் பேசி
டேக்காக் கொடுத்தே பின்னாலே
சர்தான் வாம்மா கண்ணு படா
பேஜாராச்சு நின்னு
காதலாகி கசிந்துருகி தான் லவ்வாப் பாத்து. ஆனால் சோக்காப் பேசி? ஒருவேளை ஜோக் ஆ பேசி சிரிக்க வைத்தான் என்று சொல்கிறாரா ? இருக்கலாம். அடுத்து இந்த பேஜார் என்ற வார்த்தை. நாம் எல்லாரும் உபயோகிக்கும் சொல். ஆங்கிலேயர்கள் dont badger me (என்னை நச்சரிக்காதே) என்று சொன்ன அந்த badgerஐ, கொஞ்சம் டிங்கரிங் செய்து பட்டி பார்த்து பேஜார் ஆக்கிவிட்டார்கள்.
நைனா உன் நெனப்பாலே நான் நாஸ்தா பண்ணி நாளாச்சு
மச்சான் ஒன் மூஞ்சப் பார்த்தேன்
சால்னா நெனப்பு வந்தாச்சு
ஆயாக்கடை இடியாப்பம் நான்
பாயாக்கறியும் நீயாச்சு
வா வா மச்சான் ஒண்ணா சேந்து
வாராவதிக்கே போகலாம்
நீ காற்று நான் மரம் என்றும் சொல்லலாம். குயிலாக நீ பாட்டாக நான் என்று சொல்லலாம் நான் ஆயாக்கடை இடியாப்பம் நீ பாயாக்கறி என்றும் சொல்லலாம். அதே அர்த்தம் தானே? குறிலாக நான் இருக்க, நெடிலாக நீ வளர்க்க ,சென்னை தமிழ் சங்க தமிழ் ஆனதடி என்று அறிவுமதி சொல்வது சரிதானே?
ஜாலியான மொழி. Kerosene என்பதை ‘கிருஷ்ணா’யில் என்றும் Palm Oil என்பதை ‘பாமா’யில் என்றும் புராண வாசனையுடன் சொன்ன அருமையான மொழி. இதை மறக்க முடியுமா?
சித்தார்த்த கௌதமர், இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில், மே மாதத்துப் பூரணை தினத்தில் பிறந்தார். மாயா இவரது தாயார். இவரின் பிறப்புக் கொண்டாட்டத்தின் போது சமுகந்தந்த ஞானியொருவர், சித்தார்த்தர் ஒரு பெரிய அரசனாக அல்லது ஒரு ஞானியாக வருவாரென்று எதிர்வு கூறினார். இவர் பிறப்பதற்கு முன்னரே இவரது தாயாருக்கு ஒரு வெள்ளை யானை வடிவில் தோற்றம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. கௌதமர் பிறந்த ஏழாவது நாளே அவரது அன்னை இறந்தார். எனவே இவரை இவரது தாயின் தங்கை வளர்த்தார்.
சித்தார்த்தர், தனது 16வது வயதில் யசோதரையை மணந்தார். பிறகு இருவரும் ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தனர். அவனது பெயர் ராகுலன். சித்தார்த்தருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அவர் தந்தை ஏற்படுத்தித் தந்தார். வெளியுலகைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அரண்மனை வசதிகளை அனுபவிப்பதிலேயே தன் நேரத்தை செலவிட்டார் சித்தார்த்தர்.
அவரது 29 ஆவது வயதில் தனது வாழ்க்கையில் அதிருப்தியடைந்தார்.
ஒருமுறை உதவியாளரொருவருடன் வெளியே சென்றபோது, நான்கு காட்சிகளைக் காண நேர்ந்தது. ஒரு ஊனமுற்ற மனிதன், ஒரு நோயாளி, அழுகிக் கொண்டிருந்த ஒரு பிணம், நாலாவதாக ஒரு முனிவன். இக் காட்சிகளினூடாக மனிதவாழ்க்கையின் துன்பங்களை உணர்ந்துகொண்ட சித்தார்த்தர், ஒரு துறவியாகத் தீர்மானித்தார்.
துறவறம் பூண்ட சித்தார்த்தர், யோக நெறியில் கடுந்தவம் புரிந்தார். தன் தவங்களின் மூலம் உயர்ந்த யோக நிலைகளை அடைந்தாலும், உலக வாழ்க்கையின் துன்பங்களின் ஆதாரத்தை அறிய முடியாததால் அதிருப்தி அடைந்தார். எனினும் தவ வாழ்க்கையை தொடர்ந்து கடைபிடித்தார்.
தனது 35ஆம் வயதில், இந்தியாவின் தற்போதைய பீகார் மாநிலத்தில் உள்ள கயை எனும் இடத்தில் சுமேதை என்பவளிடம் மோர் வாங்கிக் குடித்துவிட்டு போதி மரத்தினடியில் அமர்ந்த சித்தார்த்தர், ஞான நிலை அடையும் வரை அந்த இடத்தை விட்டு எழுந்திராமல் தவம் புரிவது என தீர்மானித்தார். ஒரு வாரம் கடுந்தவம் புரிந்தபின் பெருஞ்ஞான நிலையை அடைந்து புத்தரானார். இவர் தன்னை தத்தாகதர் என்று (அதாவது 'எது உண்மையில் அதுவாக உள்ளதோ அந்த நிலை எய்திவர்') என்று அறிவித்துக் கொண்டார். புத்தர் ஞானம் பெற்ற அவ்விடம் இன்று புத்த கயை என்று புத்த மதத்தினரின் யாத்திரைத் தலமாக விளங்குகிறது.
வாரணாசி அருகே உள்ள சாரநாத் எனும் இடத்தில் முதன் முறையாக ஐவரை சீடர்களாக ஏற்றுக்கொண்டு அவர்கட்கு புத்தி புகட்டினார். இந்நிகழ்ச்சி தம்மச் சக்கரப் பிரவா்த்தனம் அல்லது அறவாழி உருட்டுதல் என புத்த சமய நூல்களில் அழைக்கப்படும். அவரது வாழ்க்கையின் அடுத்த 45 ஆண்டுகளில் பலர் அவரைப் பின்பற்றி அவரது சீடர்கள் ஆயினர். தனது 80ஆம் வயதில் புத்தர் குசினாரா என்ற இடத்தில் காலமானார்.
கௌதம புத்தர் பௌத்த சமயத்தை உருவாக்கியவராவார். இவர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். பிறக்கும் போது இவருக்கிடப்பட்ட பெயர் சித்தார்த்த கௌதமர் என்பதாகும். பின்னர் இவர் ஞானம் பெற்று புத்தர் (ஞானம் பெற்றவர்) ஆனார். இவர் "சாக்கிய முனி" என்றும் அழைக்கப்பட்டார். புத்த சமயத்தின் மிகவும் முக்கியமானவரென்ற வகையில், கௌதமருடைய வாழ்க்கையையும், வழிகாட்டல்களையும், துறவிமட விதிகளையுமே, கௌதமரின் மறைவுக்குப்பின், சுருக்கி பௌத்தத் துறவிகள் மனனம் செய்துவந்தார்கள். சீட பரம்பரையூடாக வாய்மொழிமூலம் கடத்தப்பட்டுவந்த இத் தகவல்கள், 100 வருடங்களுக்குப் பின்னர் திரிபிடகம் என்று வழங்கப்படும் நூலாக எழுத்துவடிவம் பெற்றது.
புத்தரின் கூற்றுக்கள்
புத்தர் என்றுமே தன்னை ஒரு தேவன் என்றோ, கடவுளின் [அவதாரம்] என்றோ கூறிக்கொண்டதில்லை. தான் புத்த நிலையை அடைந்த ஒரு மனிதன் என்பதையும், புவியில் பிறந்த மானிடர் அனைவருமே இந்த புத்த நிலையை அடைய முடியும் என்பதையும் தெளிவாக வலியுறுத்தினார். ஆசையே துன்பத்தின் அடிப்படை என அவர் கூறினார்.
இன்றைய பொன்மொழி:
தன்னலம் துன்பங்களுக்கெல்லாம் காரணமாக இருக்கிறது. ஆசையை ஒழித்தால் தான் மன அமைதியும், ஆனந்தமும் அடைய முடியும். தீமைகளை தவிர்த்து நன்மைகளைச் செய்து வந்தால் ஆசை அகன்றுவிடும். - புத்தரின் போதனைகள்
Co
ஞாயிற்றுக் கிழமைகளின் மதியம் இரண்டு மணிக்கு திருநெல்வேலி வானொலி நிலையத்தில் புதிய திரைப்படங்களின் பாடல்கள் போடுவார்கள்.
தினமும் சாயாக்கடைகளில் வாசிக்கப்படும் தினசரிகளில் வெளியாகும் அந்த புதுப்படங்களின் விளம்பரங்களை கண்டு, அவை வெளியாகி ஓடும் நாட்களையும் வாரங்களையும் கணக்கிடுவதும் வசூல் சாதனை செய்யும் அவற்றின் வெற்றியை, மற்றும் பெண்களின் கூட்டம் அலை மோதி ஏற்படுத்திய சாதனையை வெளிப்படுத்தும் வாசகங்களுடன் வரும் அவற்றின் விளம்பரங்களை ஒரு ஏக்க மனப்பான்மையுடன் கண்டு அதன் பாடல்களை வானொலியில் கேட்டு ரசிப்பதன் மூலம் அத்திரைப்படங்களுடன் ஒரு தொடர்பு ஏற்படுத்திக் கொள்வோம்,
இடையில் வெளியூர் காலேஜில் படிக்கும் அண்ணன்மார் ஊர் வரும்போது நகரங்களில் அந்தபடத்தைக் கண்டு தரும் தகவல்களை வாய் பிளந்தவாறு ஆவலுடன் கேட்போம்...
நெல்லை ராசபாளையம் மதுரை நகரங்களின் திரைகளில் அவர்கள் கண்டு வந்த திரைப் படங்களை எங்களிடம் சுவாரசியமாக சொல்வதையும் கேட்டு மனசுக்குள் ஏற்றி பள்ளிக்கூடம் போயி அங்குள்ள நண்பர்களிடம் அந்த படக்கதை பேசுவோம், அதிகபட்சம் பொடிக் கடையில் பாட்டுப் புத்தகம் வாங்கி சார்வாள் இல்லாத நேரத்தில் பாடி மகிழ்வோம்.
மயில் முதலியார் கடையில் காத்து நின்று லென்சு வாங்கி வந்து அது ஒழுங்காக வேலை செய்கிறதா என செக் பண்ணுவதற்கு வேனாக் கொதிக்கும் வெயிலில் சூரியனின் ஒளிக்கற்றையை லென்சின் வழியாக குவித்து வாங்கி ஒரு துண்டு ..... பீடித்துண்டின் மேல் படும்படி சிறிது நேரம் வைத்து அந்தப்பீடி புகைதர ஆரம்பித்ததும் மனம் கிளர்ச்சி பெற்று நல்ல லென்சு தாண்டே.. அப்படின்னு சமாதானம் அடைவோம்,
பெரிய அட்டைபெட்டி எடுத்து அதன் ஒரு பக்க சுவரில் அந்த லென்சை பதித்து பெட்டியின் நடுவில் ஒரு மெழுகு திரி நட்டு அழகிய சினிமா ஓட்டும் புரொஜெக்டர் தயார் செய்வோம்.
மார்கெட்டில் உள்ள சுடலை கடையில் பள்ளிக் கூடம் விட்டவுடன் ஓடிப்போய் பழைய எம்ஜியார் சிவாஜி படங்களின் அறுந்துகிடந்த பிலிம்களை நாலணா எட்டணாவுக்கு வாங்கி வரும் போது, எதோ எங்கள் கையில் படப்பெட்டியை சுமந்து வருவது போல எண்ணி வீட்டில் ஒருவருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்து தியேட்டர் ஆரம்பிக்க நாள் குறிப்போம்,
வியாழன் மற்றும் வெள்ளி நாட்களில் எங்களின் தியேட்டர்களில் நாங்கள் ஓட்ட உள்ள படங்களின் பெயர்களை அழகாக குண்டு குண்டான கையெழுத்தில் கோடு போட்ட நோட்டிலிருந்து தாளைக் கிழித்து துட்டுப் போட்டவனின் பெயரிலேயே தியேட்டர் ஆரம்பித்து :
இன்று முதல் ....... தியேட்டரில் எம்ஜியார் நடித்த என் அண்ணன் என அறைகூவல் விடுத்து அவ்வூட்டு சுவரில் கைந்தண்ணிப் பசை தேச்சு ஒட்டி விளம்பர மார்க்கெட்டிங் தொடங்குவோம்.
மெழுவர்த்தி ஏத்தி படம் காட்ட தயாரான நிலையில் படம் பார்க்க வருவோர் கையில் கந்தநூல் எனும் கழிவு உடை நூல்களை கட்டணமாக கொண்டு வரும்படி சொல்வோம். வாங்கி குமிச்சு வச்சிக்கிடுவோம்.
படம் காட்டும் எங்களின் நண்பர் கடுமையான பில்டப்புடன் என்னடே… நேரம் ஆச்சு படத்தை ஆரம்பிக்கட்டுமா.. என தொணதொணக்கவும் வாசலில் கம்பியை கொண்டு “நங்”குன்னு ஒரு அடி அதாவது பெல், உள்ளே காக்குளியிளிருந்து அவுக அண்ணன் ஏல என்ன அங்க சத்தம்…
அடே பய்ய அடியண்டே போடே எங்கண்ணனுக்கு தெரிஞ்சா நச்சுரும்….
அதை தொடர்ந்து அட்டையின் லென்சு வழி பாயும் ஒளிக்கீற்றில் அவர் கையில் வைத்திருக்கும் எம்ஜியார் பட பிலிமை காட்டி ஆட்ட அதன் பிம்பம் என்னமோ ஏதோன்னு வெள்ளையடிக்காத அந்த சுவரில் விழுந்து படிந்து மாய்ந்து மெழுகுவர்த்தி ஒளியில் சில நொடிகளில் மடியும்.
இரண்டு நிமிட இந்த படங்காட்டும் சாகசம் நிகழ்ந்த பின் அடே !!! '''பெல்லடி'''யேண் டே!!!
இன்டர்வெல் (இன்ற்றோல்)....
வேர்த்து விறுவிறுத்து வெளியே வருவோம்.
கர்ஜனை, ராசபார்வை , சிவப்புமல்லி என தொடரும் நெல்லை வானொலியின் பாடல்கள் ஞாயிறுகளின் மதியம் கேட்டு மனசில் பதிந்துவிட்டால் அதனை நாங்கள் மறுவாரம் மனப்பாடமாய் அந்த பாடலை வானொலியுடன் சேர்ந்து கூட்டாக பாடுவோம்.
கந்தநூல் விற்கப்பட்டு மூக்கையா லாலாவில் மிச்சர் வாங்கி ஆளுக்கு கொஞ்சம் தின்போம்.
எத்தனை பாட்டுப் புத்தகங்கள் அதன் முன்பக்கத்தில் அச்சில் வந்த படக்கதையை ஒருவன் சத்தமாக வாசிக்க நாங்கள் எல்லோரும் சுற்றியிருந்து கேட்போம், முக்கிய இடத்தில் படத்தின் நாயகன் தன தந்தையை தாயைக் கொன்றவர்களை பழிக்குப்பழி வாங்கினானா இல்லையா என்பதை வெள்ளித்திரையில் காண்க அப்பிடின்னு போட்டதை வாசித்து மகிழ்வோம்..
கண்மணியான நண்பர்களோடு கைகோர்த்து களிப்புடன் கொண்டாடி மகிழ்ந்த எங்களின் கைவசமிருந்த பாதுகாப்பான அந்தப்பால்ய கால நினைவுகள் நமத்துப்போன சாணித்தாளில் அச்சிடப்பட்ட பழைய கால பாட்டுப்புஸ்தகம் போல மடித்து பத்திரமாக எதோ ஒரு பாடப்புஸ்தகங்களின் நடுவில் எங்களின் கல்புக்குள் காலம்காலமாக…
பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - =======================================
பேய்கள் சுவாரஸ்யமானவை. அனைவருக்கும் ஏதாவது பேய்க்கதைகள் கண்டிப்பாக தெரிந்திருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பேய்கள் பரிச்சியமாயிருக்கும். சிறுவயதில் சாதாரண கதைகளை கேட்பதில் உள்ள சுவாரஸ்யத்தை விட அமானுஷ்யக்கதைகள் தரும் சுவாரஸ்யம் அதிகம். என் பேய்கள் எனது பள்ளியிலேயே இருந்தது, தேடி அலைய வேண்டியதில்லை. பற்றாக் குறைக்கு எதிரில் இருந்த பள்ளிவாசல் மாடியில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு ஜின் வேறு.
பெரும்பாலும் பேய்கள் என்பது நமது மனதில் உருவாவதுதான். தேவதைகளும் அது போலத்தான். சிலரின் பேய்கள் சிலருக்கு தேவதையாகக் கூடும். பேய் பயம் என்பது பெரும்பாலும் உருவாக்கப்படுவதுதான். தானாக அது உருவாவது, உண்மையான பேயை பார்க்கும் போதுதான். தனியாக பல நாள் இருந்த வீட்டில், கூட இருந்தவனின் பேய் அனுபவம் என்னை தூங்க விடாமல் தடுத்தது.
தமிழகத்தை விட மலையாளத்தில் அதிக அமானுஷ்ய கதைகள் உண்டு என்று நினைக்கின்றேன். தமிழில் அமானுஷ்யக் கதைகளுக்கு என்று வெகு சிலரே இருக்கின்றனர். சிறுவயதில் படித்தது கலாதர் என்பவரின் கதை. அஷ்டமாசித்திகளை விஞ்ஞானத்துடன் கலந்து எழுதியிருந்தார். பிறகு பேய்க்கதை மன்னன் :) பி.டி சாமி. ஆனால் அந்தளவிற்கு உவப்பாயில்லை. சிறுவயதில் படிக்கும் போதே பயம் வரவில்லை.
இவ்விஷயத்தில் ஓரளவு வெற்றி அடைந்தவர் இந்திரா சவுந்திரராஜன். அவரது ரகசியம், விட்டுவிடு கறுப்பா, ருந்திர வீணை, சிவம், சிவமயம், காற்று காற்று உயிர் என்று அனைத்தும் படிக்க விறுவிறுப்பானவை. ரகசியம் விகடனில் படு ஆர்வத்துடன் படித்த கதை. கதையின் சஸ்பென்ஸ் உடையும் இடம் கடைசி வரி. அது டி.வி தொடராக இன்னும் அட்டகாசமாக வந்தது. (டிவிடி கூட வந்துள்ளது, செம காஸ்ட்லி. வாங்க நினைத்தவன், மனைவியின் முறைப்பை கண்டு வைத்துவிட்டேன்) காற்று... கதையை இரவில் தனியாக படிக்க ஆரம்பித்து பயந்து வைத்துவிட்டேன். விஞ்ஞானத்தையும், அமானுஷ்யத்தையும் கலந்து, முடிக்கும் போது இரண்டில் எதை நம்புவது என்பதை வாசகனிடம் விட்டு விடும் திறமை இவரது சிறப்பு.
அனைத்தும் நாவல்களே, சிறுகதைகள் அவ்வளவாக இல்லை. அக்குறையை ஜெயமோகன் போக்கிவிட்டார். அவர் இம்மாதியான அமானுஷ்யங்களில் எக்ஸ்பர்ட். நமது பாரம்பர்ய கதைகள், நாட்டார் கதைகள், வழிவழியாக வரும் கதைகள் எல்லாம் அவரது மொழியில் அட்டகாசமாக நமக்கு கிடைக்கின்றது. அதோடு அவரது புத்திசாலித்தனமும் கதைகளில் தெரிகின்றது.
அமானுஷ்யக் கதைகள் என்றால் நம்மை பயப்படுத்த தேவையில்லை. அதன் அமானுஷ்யத்தன்மையை நமக்குள் கடத்தினால் போது. இதில் பேய் எது தேவதை என்பதை அவரவர் மனநிலைக்கு தகுந்த மாதிரி பிரித்துக் கொள்ள வேண்டியதுதான்.
இமையோன் - ஒரு பரிபூரண பேய்க்கதை, மலையில் வழிதவறும் ஒருவன் ஒரு இரவில் அடையும் அமானுஷ்ய அனுபவம்
பாதைகள் - கொஞ்சம் குழப்பமான கதை. முழுவதும் புரியவில்லை.
அறைகள் - கண்ணுக்கு தெரியாத பெண்ணுடன் குடும்பம் நடத்தும் ஒருவரின் கதை,
தம்பி - பிடித்த கதை. ஸ்பிலிட் பெர்சானாலிட்டியயையும், குற்ற உணர்வையும் கலந்து எழுதப்பட்ட கதை. நமது மனதின் குற்ற உணர்ச்சி (அ) மனசாட்சி என்பது மிகப்பெரிய பேய். நம்மை சுலபமாக பழி தீர்த்துவிடும்.
யட்சி - யட்சன் கதை கேள்விபட்டதுண்டு. யட்சகானம் இங்கு கர்நாடகத்தில் பிரபலம் என்று சொல்வார்கள். யட்சி கேரளாவில் பிரபலம். அவரது சொந்த கதையா என்று தெரியவில்லை. கதை சொல்லியின் அம்மாவின் யட்சியின் அனுபவம். கதையில் யட்சியின் கதையை அப்பெண்ணுடன் இணைத்திருப்பது அழகு.
ஏழுநிலை பந்தல் - முதலில் ஏழுநிலை பந்தல் என்றால் என்ன என்றே தெரியவில்லை. பிறகுதான் கதையை முழுவதும் புரிந்து கொள்வது. ஒருவகையான கோபுரம் போன்று கட்டப்படும் பந்தல் என்றுதான் யூகித்தேன். பந்தல் கட்ட போகும். ஒருவனுக்கு அந்த ஊர் ஆசாரி சொல்லும் யட்சிக் கதை.
இரண்டாவது பெண் - ஒரு லாரி ஓட்டுனருக்கு உண்டாகும் அமானுஷ்ய அனுபவம். அவருடன் கற்பனையில் கூடிக் குலாவும் ஒரு பெண்.
குரல் - இதன் முடிவை அறிந்தவர்கள் சொல்லவும். கள்ள தொடர்பு. மனைவி இறக்கின்றாள். நாய் குலைத்து கொண்டே இருக்கின்றது. கள்ளக் காதலியும் இறக்கின்றாள்.
ஐந்தாவது நபர் - ஆவியுடன் பேசும் ப்ளாஞ்செட். சிறுவயதில் அரைகுறையாக எங்கோ படித்துவிட்டும் டம்பளரை வைத்து ஆராய்ச்சி செய்தது நினைவிற்கு வருகின்றது.
ரூபி - இப்புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த கதை. குதிரைகள் ஆவியாக வருமா? மனிதர்கள் வரும் போது மிருகங்கள் ஆவியாக, பேயாக அலையக் கூடாதா?
ஜெயமோகனுக்கு எந்தவித கதைகளும் சுவாரஸ்யமாக எழுத வருகின்றது. அவரின் வர்ணனைகள் வாசகனை அந்த உலகத்திற்கு இழுத்து செல்கின்றது. அமானுஷ்யகதைகளானாலும் அது பயத்தை உண்டாக்குவதை மட்டும் நோக்கமாக கொள்ளாமல், அதையும் தாண்டிய உணர்வை தருகின்றது. உளவியல் ரீதியான கதைகள்.
இரண்டு விதமான கதைகள், தொன்மை சார்ந்த கதைகள். நமது கலாச்சாரத்தில் பாரம்பர்யமாக வழிவழியாக கூறப்பட்டு வரும் கதைகள். யட்சிகள், கிராம தேவதைகள், சிறு தெய்வங்கள். அதை சார்ந்த கதைகள். மற்றவை பேய்க் கதைகள். அப்பேய்கள் நமது மனதால் உருவாக்கப்படுவையாகவும் இருக்கலாம்.
ஆனால் இக்கதைகள் வெறும் திகிலை மட்டும் உண்டாக்கி படித்ததும் மறந்து போகக் கூடிய கதைகள் அல்ல. நமது ஆழ் மன உணர்ச்சிகளை கொஞ்சம் ஆராயச் செய்யும் கதைகள்.
மிகச் சரியாக குறிபார்த்திருந்தான்.
இடது மார்புக்கு மிக நடுவே...சிறிதும் தப்பக்கூடாது என்ற மிக சரியான குறி...
....என்னால் உணர முடிந்தது.
தோட்டா மிக வேகமாக வட்டமான புகைக்கு நடுவே, சிறிய மினுமினுப்பாக என் இடது மார்பு பக்கமாக வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் எந்த பக்கத்தில் சாய்ந்தாலோ அல்லது விழுந்தாலோ, தப்ப முடியும் என்ற அவசரமான முடிவுகளை நினைப்பதற்க்குள், மிக அருகில் அதிகம் உஷ்ணமான பலமான தாக்குதலைத் தான் உணர முடிந்தது.
சடுதியில் நடு மார்பிலிருந்து அதிக அதிர்வுகள் கொண்ட பலமான உலுக்கப்பட்ட உணர்வு எழுந்தது. நொடிகள் கூடகூட உலுக்கள் அதிகமானது. அதோடு சத்தமான குரலையும் உணர முடிந்தது.
"டேய்..! எந்திரி..மணி எட்டாகுது..."
சே..! பயங்கரமான கனவு.
"என்னடா இன்னைக்கி யுனிவர்சிட்டி போகண்ணும்ன்னு சொன்னியே, மணி எட்டாச்சு..போகலயா..?
அம்மா தான்..பயங்கரமாக உலுக்கி எழுப்பி கொண்டிருந்தாள். ஒரு வழியாக கண் விழித்தேன். இரவு அதிக நேரம் டிவி பார்த்ததில் கண் எரிச்சலை கிளப்பியது .....
இப்படித்தான் அடிக்கடி என் கனவுகளில் நான் கொல்லப்படுகிறேன்.
ஆனால் இறப்பதற்க்கு முன்னமே கனவு முடிந்து போகிறது அல்லது முடிக்கப்படுகிறது. இவ்வாறு நான் யோசிக்கத் தொடங்கியதும், யுனிவர்சிடி போக வேண்டும் என்பது ஞாபகம் வந்தது. கொஞ்சம் லைப்ரரியில் வேலை இருக்கிறது.
நான் அடிப்படையில் இயற்பியல் படிக்கும் மாணவன். ஏற்கனவே பி.எஸ்.சியில் மூன்று வருடம் குப்பை கொட்டியாகி விட்டது, போதாதென்று இந்த இரண்டு வருடமாக எம்.எஸ்.ஸி படித்துக்கொண்டிருக்கிறேன்.
கொஞ்சம் அதிகமான குவாண்டம் கொள்கைகளையும், ரிலெட்டிவிட்டி தத்துவங்களையும் எழுதியோ படித்தோ கொண்டிருக்கிறேன். யுனிவர்சிட்டியில் முக்கியமாக சில புத்தகங்ளை தேட வேண்டும்.
இன்று அவள் நிச்சயம் வருவாள்.
நீங்கள் நினைத்தது சரிதான். அவளை பார்ப்பதற்கு.... நான் லைப்ரரி செல்கிறேனென்று.
இந்த இரண்டு வருடமாக எனக்கு அவளைத் தெரியும், நீங்கள் நினைப்பதை விட அவள் மிக அழகானவள். இப்பொதைக்கு அவளைப் பற்றி இது போதும்.
கொஞ்சம் என்னைவிட அதிகம் சிந்திப்பவள். வருங்காலத்தில் யுரேனியத்தில் பி.எச்.டி பண்ணும் ஆர்வத்தில் இருக்கிறாள். நான் அவளுக்கக சில புத்தககங்களை தேடிக்கொடுக்கவே செல்கிறேன்.
இந்த நான்கு பாரா முடிவதற்குள் நான் குளித்தாகிவிட்டது.
"டேய்..! தோசையிலே முட்டை விடட்டுமா ..?" அம்மா கேட்டாள்.
"சரி..ஏதோ...பண்ணு..." கொஞ்சம் சலித்துக்கொண்டேன். தோசை சூடாகவே இருந்தது. அப்பா வழக்கம் போல சன் நியூஸ் பார்த்துக்கொண்டிருந்தார்.
நான் வேகமாக சாப்பிட்டு முடிந்ததும், கருப்பு கலர் டி சர்ட் அணிந்து கொண்டேன். முனிச்சாலை ஸ்டாப்பில் நின்று கொண்டால் 21ம் நம்பர் வருமா என்பது சந்தேகம் தான். பெரியார் நிலையம் செல்வது தான் சரி. யோசித்துக்கொண்டிருக்கும் போதே கூட்டம் குறைவாக 4ம் நம்பர் வந்தது. எனக்காகவே ஒரு ஜன்னல் ஓரம் காலியாக இருந்தது.
டிக்கெட் வாங்கி .... எனது எண்ணங்களை தொடர்ந்தேன்.
கடந்த சில மாதங்களாக இந்த கனவு அடிக்கடி வருகிறது. அவன்... நீள முகம், லேசான மீசை, பான்பராக் பற்கள், கொஞ்சம் அதிகமான மூக்கு, அரைகுரையாக வளர்ந்த தாடி, எப்போதும் எதாவது ஆயுதங்களுடன் என்னை எதிர்கொள்கிறான்.
சில சமயம் வில் போன்ற, கொஞ்சம் துப்பாக்கி கலந்த, ஆங்கிலப்படங்களில் மட்டுமே பார்த்த....அம்புகள் பொருத்தி என்னை குறி பார்கிறான்.
இப்படி சில கனவுகள் நிஜ வாழ்க்கையில் நிஜமாகிறது என்பதை எங்கேயோ படித்ததாக
ஞாபகம். என்னுடைய வாழ்க்கையிலும் அப்படி நடக்குமா...? வயிற்றை கலக்கியது...
இன்று அவளுக்காக புத்தகம் தேடும் போது, சைக்கலாஜி பிரிவில் கனவுகள் பற்றி எதாவது புத்தகம் தேட வேண்டும். பஸ் ஸ்டாண்டில் நுழைந்து கொண்டிருந்தது பஸ்.
பஸ்ஸை விட்டிறங்கி, ரோட்டை கடந்து, மறு பக்கமுள்ள பல்கலைகழகம் செல்லும் நிறுத்தத்திற்க்கு சென்ற போது, சரியாக 21ம் நம்பர் வந்தது...வாழ்க்கையில் முதன்முறையாக இவ்வளவு சீக்கிரம் பஸ் கிடைத்ததை நினைத்துகொண்டேன்.
கனவுகள் நம் வாழ்க்கையின் மிச்சங்களா..!? நம் உள்மனத்தின் பிரதிபலிப்பா...? நம் வாழ்க்கையில் நடக்காத விஷயங்கள் கொஞ்சம் அதிகமாக உயிரூட்டப்பட்டு கனவாக மாறுகிறது.
கனவுகளில் வண்ணங்கள் உண்டா? கனவுகளில் வரும் முகங்களோ, உருவமோ நிஜமாக இருக்க முடியுமா? ஆழ்ந்த உறக்கங்களில் கன்வுகள் வருவதில்லை என்றும், ' நான்ரெம்' எனப்படும் பாதி நிலை உறக்கங்களில் கனவுகள் தோன்றுகிறது என்றும் சில புத்தகங்காளில் படித்திருக்கிறேன்.
ஒரு இயற்பியல் மாணவன் சைக்காலஜி , கனவுகள் பற்றியோ படிப்பது அவசியம் தானா என்பது நீங்கள் கேட்க கூடிய கேள்வி தான்.
ஆனால் அடிப்படையில் படிக்கும் ஆர்வம் என்பது இயற்பியல் படிக்கும் மாணவனுக்கு கொஞ்சம் அதிகம் தான் என்பது என் கருத்து.
பஸ் நாடார் காலேஜை கடந்து கொண்டிருந்தது. இன்று ஞாயிற்று கிழமையாதலால் பஸ்ஸில் அதிகம் கூட்டமில்லை. மார்கழி மாதமாக இருப்பதால் கொஞ்சம் மேக மூட்டமாகவே இருந்தது. குளிர்காற்றும் வீசியது.
பஸ்ஸை விட்டு இறங்கியதும் எதிர் கடையில் அவள்..மிராண்டா குடித்து கொண்டிருந்தாள்...(எந்த இளிச்சவாயன் மாட்டினானோ..?) உடனே ஒரு கவிதை தோன்றியது....அடக்கிக் கொன்டேன். என்னைப் பார்த்ததும் சிரித்தாள் (சிரித்தாளா...?)
"என்னடா...!(செல்லமாக தான்..) இவ்வளவு லேட். எங்கேயாச்சும் நின்னு தம் அடிச்சுட்டு வர்றியா...?".
நான் புகை பிடிப்பதே இல்லையென்பதும், வேறு எந்த கெட்ட பழக்கங்களும் இல்லை என்பதும், அவளுக்கு தெரிந்திருந்தும், ஒவ்வொரு தடவை என்னை பார்க்கும் பொதும் இந்த கேள்வியை கட்டயமாக கேட்கிறாள் (ஒரு வேளை என்ன தம் அடிக்க சொல்கிறாளா..?)
பாட்டில் காலியானதும் கடைக்கராரிடம் கொடுத்துவிட்டு, எனக்கு முன்னாடி நடந்தாள்.
"பணம் கொடுக்கலை..?" என் கைகளில் சாக்லேட்டை திணித்துக்கொண்டே "ரமேஷ் கொடுத்துட்டான்.." சாதரணமாக சொன்னள் (பாவம்! சோடாப்புட்டி...!!).
"உருகிப்போச்சு...உன் உடம்பிலே உஷ்ணம் அதிகம்..." அவள் கைப்பைக்கும், மார்புக்கும் நடுவில் சாக்லேட் வைத்திருந்தை, நினைத்துக் கொண்டே நான் சொன்னதை கேட்டு முறைத்திருப்பாள்.
நான் பார்க்கவில்லை. வேறு எங்கெயோ, எதுவோ பெரிதாக தெரிந்ததை பார்த்துக்கொன்டிருந்தேன்.
"டேய்...மாக்கான்! இன்னைக்கி விட்டுக்கு சீக்கிரம் போகணும். பொண்னு பார்க்க வர்றாங்க..." சொல்லிவிட்டு என் முகத்தை பார்த்தாள். அவள் உதட்டோரத்தில் ஒட்டியிருந்த சாக்லேட் என்னை என்னவோ செய்தது.
"சரி உன்னோட கனவு...என்னாச்சு?"
இவளிடமும் சொல்லியாகி விட்டது. என் கனவுகளைப்பற்றி என்ன அக்கறையாக கேட்கிறாள்.
"டேய் மக்கு..கனவுங்கிறது நம்ம மனசுலே நினைக்கிற அதிகபட்ச ஆசைகளும், தினசரி வாழ்கையில் நடக்கிற நிகழ்சிகளும் கலந்து வர்றது தான்டா.
நீ படுக்குறதுக்கு முன்னாடி எதாச்சும் இங்கிலிஷ் படம் பார்த்திருப்பே. அதுல வர்ற, ஒத்த கண்ணனோ, மொட்டதலையனோ உன்னை கொல்ல வந்திருப்பான். இதையெல்லம் மனசுலே போட்டு, புலம்பிக்கிட்டு இருக்கதே...
லைப்புல அடுத்து என்ன பண்ணப் போறே ..அதப் பற்றி யோசி...எங்க வீட்டுல வேற மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க...
எதுவோ எனக்கு உறைக்க ஆரம்பித்தது. யோசிக்கனும்!. "என்னடா...எதுவும் பேச மாட்றே..." என் தலையை கலைத்து விட்டாள். முடிவு செய்து கொண்டேன்.
"சரி...சிக்கிரம் போய் அந்த கிளசிக்கல் மெக்கானிக் புக் வந்துருச்சான்னு கேட்டு வா...ஆர்த்தர் கோல்டுஸ்மித்டா....ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன். வேற எந்த புக்குலேயும் புரிய மாட்டேங்குது." லைப்ரேரியனை நோக்கி சென்று கொண்டிருத்தேன்.
கோல்டுஸ்மித் வந்திருந்தது. எடுத்து வைத்து விட்டு, சைக்கலாஜி பக்கம் சென்றென். 'டிரீம் அனாலிஸிஸ்' புது அட்டையுடன் இருந்தது. ஆசிரியர் ஏதோ ரஷ்ய பெயராக இருந்தது புரியவில்லை.
'கனவுகள் நிஜத்தின் நாடகங்கள். இரவின் கருப்புத் திரைப்படங்கள். கற்பனையின் காட்சி தத்ரூபங்கள். உள் மனத்தின் உணர்ச்சி வெளிப்பாடுகள்.....'
கொஞ்சம் கடினமான ஆங்கிலத்தில் பாதி வார்த்தைகள் நானாக யூகித்து படித்து கொண்டிருந்தேன்.
லேசாக தாகம் எடுத்தது. ஜன்னல் ஓரம் இருந்த பிரிட்ஜை திறக்கும் போது....அங்கே ஜன்னலுக்கு வெளியே...
மிகச் சரியாக குறிபார்த்திருந்தான். என் நெற்றிப்பொட்டுக்கு நடுவே...இரண்டு புருவங்களுக்கு மத்தியில்...மிக தெளிவாக...இம்மியளவும் பிசகாமல்...கூடவே என்னை எதுவோ பயங்கரமாக உலுக்கிக் கொண்டிருந்தது......