Saturday, 22 October 2016

மாலை மாற்றுச் சொல், மாலை மாற்றுச் செய்யுள்

Palindrome என்றால் முன்னாலிருந்து பின்னுக்கும் பின்னாலிருந்து
முன்னுக்குமாக வாசித்தாலும் ஒரே மாதிரியான எழுத்துக்கள் - அதாவது ஒரே சொல்- பிறழாமல் வரும் அமைப்பு.இதனை தமிழில் " மாலை மாற்று" என்று
குறிப்பிடுவர்.சித்திரக்கவி வகையில் மாலை மாற்று எனப்படும் பாலிண்ட்ரோம் (Palindrome) அடங்கும்.

இதன் இலக்கணம் –
“ஒரு செய்யுள் முதல்,
ஈறு உரைக்கினும்,
அஃதாய் வருவதை
மாலை மாற்றென மொழி”
பொருள் –
ஒரு செய்யுளின் கடைசி எழுத்தை முதலாக வைத்துக் கொண்டு பின்னாலிருந்து திருப்பி எழுத்துக் கூட்டிவாசித்துக் கொண்டு முதல் எழுத்துக்குவர வேண்டும்.
நமது தமிழ் மொழியில் உள்ள சில மாலை மாற்று செய்யுள்கள்.

நாள்உ லைகொதி அசீரண உலாதுதி
நீள்க தைசரி கவருது - வாழ்வா
துருவ கரிசதைகள் நீதி துலா உ
ணரசீ அதிகொலைஉள் நா.  

"பூவாளை நாறு நீ பூ மேக லோகமே
பூநீறு நாளை வா பூ"

"நேணவராவிழ யாசைழியே, வேகதளோயா ளாயுழிகா
காழியுளாயா ளோதகவே, யேழிசையாழவி ராவணனே!"
முதல் "ந"கரம் கடைசியில் "ன"கரமாகியிருக்கிறதே அன்றி மற்றபடிக்கு சரியான பாடல் தான்.

திருஞான சம்மந்தரின் மாலை மாற்று திருப்பதிகம் 
பாடல்கள் மற்றும் அதன் பொருள் 

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

யாம் = சிற்றுயிர்கள் ஆகிய நாங்கள்
ஆமா = கடவுள் என்பது பொருந்துமா?
நீ = நீ ஒருவனுமே (கடவுள் என்றால்)
ஆம் ஆம் = பொருந்தும், பொருந்தும்
மா = பெரிய
யாழீ = யாழை ஏந்தியிருப்பவனே!
காமா = அனைவராலும் விரும்பப் படுபவனே!
காண்நாகா = காணத் தகுந்தவாறு பாம்புகளை அணிந்துள்ளவனே!
காணா = காண முடியாதவாறு
காமா = மன்மதனை(அனங்கனாக) செய்தவனே!
காழீயா = சீர்காழிக்குத் தலைவனே!
மாமாயா = பெரிய மாயைகளைச் செய்தலில் வல்லவனே!
மா = கரிய(கொடிய)
மாயா = மாயையினின்றும்
நீ = எம்மை நீக்கிக் காத்தருள்வாயாக!

No comments:

Post a Comment