Saturday, 22 October 2016

வாசிப்பு:
எல்லோரும்  வாசிக்கிறோம்.நோக்கங்கள் பல ஆக  இருக்கும்.

  • குழந்தைகள் மொழியை  கற்றுக்கொள்ள
  • மாணவர்கள் மொழியில் தேர்ச்சி  பெற 
  • பட்டம் பெற்றவர்கள் ஆராய்ச்சிக்காக அல்லது மேற் தகுதிகள் வேண்டி 
  • ஆசிரியர்கள்  அறிவை  பெருக்கிக்  கொண்டு  கற்பித்தல்  பணியில்  சிறக்க மற்றும் விடைத்தாள்கள்  திருத்த பொழுது போக்க ...மற்றும் பல காரணங்கள் 
  • பொதுவில்  தினசரி , பல்வேறு பத்திரிகைகள் ,புதினங்கள், பலவகை புத்தககங்கள் / நூல்கள் வாசித்து  அறிவுத்தேடல் / பொழுதுபோக்கு தேவைக்காக 
சிறந்த வாசிப்பு என்பது நம்மை ஈர்ப்பது மற்றும் நம்முடன்  உறவாடுவது நம் வாழ்வின் நிகழ்வினை  நினைவில்  தோற்றுவித்து  தொடர்பு கொள்ளச் செய்து  அகம் மகிழச் செய்வது.
நமக்கு தெரியாத நாம்  முன்னர்  அறியாத  தகவல்கள் தரும்  வாசிப்பு தேடல் தாகம்  கொண்டோருக்கு இது  ஒரு வரம் 
மன அமைதிக்கு  மத நூல்கள் , மந்திரங்கள் , செபங்கள் வாசிப்பது 
சோர்வுற்ற  மனதிற்கு கிளர்ச்சி உண்டாக்கும்  நூல்கள் - காதலும் காமமும் கருப்பொருளாக  கொண்ட  வாசிப்பு இவ்வைகையே 

இவ்வலைத்தளம் மேற்கூறிய  யாவும் தரும்  அட்சய பாத்திரம் 
அமுது விஷம்  அனைத்தும்  கண்டு தேர்ந்து தேவையானதை  வாசியுங்கள்.
வைரம் வைரத்தை அறுக்கும் விஷமே  விஷத்திற்கு முறிவும் மருந்தும். இந்த  தெளிவோடு இவ்வலைத்தளம்  வருக ...!!!!


No comments:

Post a Comment